Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாள்களாக நடைமுறையில் இருந்த ஊரடங்கு தளர்த்தப்பட உள்ளதால் பெருமளவானோர் சிகை அலங்கரிப்பு நிலையங்களை (சலூன்களை) அணுகவுள்ளனர்.

இது ஒரு ஆபத்தான நிலையாகும் என்று வடக்கு மாகணா சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வழங்கியுள்ள அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

கோரோனா தொற்று ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக பின்வரும் நடைமுறைகளை நடைமுறைப்படுத்துமாறு தங்களது பிரதேச செயலர்களுடாக சிகை அலங்கரிப்பு நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அறிவுறுத்தல்கள்:

  1. சலூன்களுக்குள் இருவருக்கிடையில் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணவும்.
  2. முடி திருத்துநர்கள் கட்டாயமாக முகக் கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.
  3. முடி திருத்துநர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்குமிடையில் கைகளை சரியான முறையில் ஓடும் நீரில் சவர்க்காரம் கொண்டு கழுவ வேண்டும்.
  4. மொத்தமாக பணியில் உள்ள முடி திருத்துநர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாடிக்கையாளரை உள்ளே அனுமதிக்கவும். உதாரணமாக முடி திருத்துநர்கள் இருவர் பணியில் இருந்தால் முடி வெட்டிக் கொண்டிருப்பவர்கள் இருவரும் காத்திருப்பவர் இருவரும் என நான்கு வாடிக்கையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்கவும். கடையின் அளவு சிறிதாயின் காத்திருக்கும் வாடிக்கையாளரின் எண்ணிக்கையை மேலும் குறையுங்கள்.
  5. ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பாவிக்கும் உபகரணங்கள் அனைத்தையும் ஸ்பிறிற் மூலம் அல்லது கொதிக்கும் நீரில் அமிழ்த்தி தொற்று நீக்கம் செய்யவும். தொற்று நீக்கம் செய்ய முடியாத உபகரணங்களைப் பாவிப்பதை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  6. போர்வை, துவாய், பிளேட் போன்றவற்றை வழமைபோல் ஒருவருக்கு ஒன்று எனப் பாவிக்கவும். பிளேட்டை ஒருவருக்குப் பாவித்தபின் எறியவும். துவாய்கள், போர்வைகளை தோய்த்து உலர்ந்த பின்பே பாவிக்கவும்.

இந்த அறிவுறுத்தல்களை தங்கள் மாவட்டத்தின் பிரதேச செயலர்கள் ஊடாக சகல சிகை அலங்கரிப்பு நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்களையும் சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேட்டுள்ளார்.

http://www.newjaffna.com/2020/04/19/13871/

இவை அறிவுறுத்தல்களா அல்லது கட்டாயம்  பின் பற்ற வேண்டிய விதிமுறைகளா? 

இலக்கம் 3. 5. 6 ஆகிய விதிமுறைகள் கொரோனா தவிர்ந்த காலங்களிலும் வழமையாக  பின்பற்ற வேண்டிய விதிமுறைகள். ஐரோப்பாவில் உள்ள தமிழ் சலுன்கள்  பல இதை பின்பற்றுவதில்லை. வாடிக்கையாளருக்கும் அது பழகிவிட்டதால்  அது பற்றி கேட்பதில்லை. இனிவரும் காலங்களிலாவது பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்போம். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, tulpen said:

ஜேர்மனியர்கள்,பிரான்ஸ்காரர்,சுவீஸ் நாட்டவர்,துருக்கியர்கள் போன்ற ஏனையவர்கள் 3. 5. 6  விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றாகளா சார்?

எங்குபார்த்தாலும் தமிழர்களை இழுத்துவைத்து நாக்கு ஊத்தை வழிப்பதை இனியாவது நிறுத்துங்க சார்....!!

9 minutes ago, குமாரசாமி said:

உண்மைகள் கசக்கும் தான். ஆனால் உங்களுக்கோ உண்மைகள் சற்று அதிகமாகவே கசக்கும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, tulpen said:

உண்மைகள் கசக்கும் தான். ஆனால் உங்களுக்கோ உண்மைகள் சற்று அதிகமாகவே கசக்கும். 

நீங்கள் கூறியதை பொய்யென்று நான் குறிப்பிடவில்லையே!!!!
ஏன் எதற்கெடுத்தாலும் தமிழர்களை மட்டும் குறிப்பிட்டு இழிவுபடுத்துகின்றீர்கள்?தமிழர்களை விட ஆயிரம் மடங்கு குறைபாடுகள் ஐரோப்பிய நாடுகளிலுள்ள சலூன்களில் நடை பெறுகின்றது. அத அந்தந்த நாட்டு சுகதார அமைப்புகளும் கண்டுகொள்வதில்லை.மக்களும் கணக்கெடுப்பதில்லை.

தாங்கள் மட்டும் அனைத்து தமிழினத்திற்கும் கிடைத்த குண்டுமணியாக்கும்.

8 minutes ago, குமாரசாமி said:

யாழ் இணையம் தமிழர்கள் வாசிக்கும் ஊடகம். இதில் தமிழரகளின்  குறைபாடுகளை தான் எழுத முடியும். சுவிஸ் சலூன் ஒன்றில் இவ்வாறு நடந்து அது சுவிஸ் ஊடகத்தில் வெளிவந்தாலோ அல்லது  யாரேனும் சுவிஸ் நாட்டவர்  அதைச் சுட்டிக்காட்டினாலோ வேறு இன மக்கள் இதை மோசமாக செய்கிறார்களே  தானே இதை ஏன் பெரிதுபடுத்துகின்றீர்கள் என்று எந்த சுவிஸ் நாட்டவரும் கேட்பதில்லை.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, tulpen said:

சுவீசிலை தமிழர் எப்ப ஆடு களவெடுக்க வெளிக்கிட்டினமோ அப்ப தொடக்கம் ஒரே குறைதான்

9 minutes ago, குமாரசாமி said:

சுவீசிலை தமிழர் எப்ப ஆடு களவெடுக்க வெளிக்கிட்டினமோ அப்ப தொடக்கம் ஒரே குறைதான்

இவ்வாறான விடயங்கள் ஊடகங்களில் வெளிப்படுத்தப்படும் போது எதிர்காலத்தில்  அவை திருத்தப்படும் வாய்ப்பு உள்ளது. இப்ப உங்கள் பிரச்சனை என்ன? இவை எல்லாம் பேச கூடாத விடயங்கள்  என்று தாங்கள் கருதுவதற்கு காரணம் என்ன? வெட்டிப் பெருமை  பேசுவது தமிழருக்கு உயர்வை தராது. ஆடு களவெடுத்தது உங்களுக்கு பெருமை தரும் விடயமாக இருக்கலாம். ஆனால் தமிழருக்கு பெருமை தரும் விடயம் அல்ல. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இவை அறிவுறுத்தல்களா அல்லது கட்டாயம்  பின் பற்ற வேண்டிய விதிமுறைகளா? 

இலக்கம் 3. 5. 6 ஆகிய விதிமுறைகள் கொரோனா தவிர்ந்த காலங்களிலும் வழமையாக  பின்பற்ற வேண்டிய விதிமுறைகள். ஐரோப்பாவில் உள்ள தமிழ் சலுன்கள்  பல இதை பின்பற்றுவதில்லை. வாடிக்கையாளருக்கும் அது பழகிவிட்டதால்  அது பற்றி கேட்பதில்லை. இனிவரும் காலங்களிலாவது பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்போம். 

ஐரோப்பாவிலேயே இந்த நி லை நீடிக்கும்போது, வட மாகாணத்தில் இந்த கட்டுப்படுகளெல்லாம் குதிரைக் கொம்புதான். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஜேர்மனியர்கள்,பிரான்ஸ்காரர்,சுவீஸ் நாட்டவர்,துருக்கியர்கள் போன்ற ஏனையவர்கள் 3. 5. 6  விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றாகளா சார்?

எங்குபார்த்தாலும் தமிழர்களை இழுத்துவைத்து நாக்கு ஊத்தை வழிப்பதை இனியாவது நிறுத்துங்க சார்....!!

தனி நபர் சுகாதாரம் என்கின்ற வகையில் இந்த வரைமுறைகளை யாவரும் பின்பற்றலாம். அதுதவிர எங்கள் சலூன்கள் சுகாதார அறிவுறுத்துதல்களைக் கடைப் பிடைப்பதில் விண்ணர்கள்தானே. 😀

இலங்கையின் மிகப் பெரும்பாலான சிகை அலங்கரிப்பு நிலையங்கள் கால மாற்றத்திற்கேற்ப எந்தவித மாற்றங்களுக்கும் உட்படாதவை. ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, Kapithan said:

தனி நபர் சுகாதாரம் என்கின்ற வகையில் இந்த வரைமுறைகளை யாவரும் பின்பற்றலாம். அதுதவிர எங்கள் சலூன்கள் சுகாதார அறிவுறுத்துதல்களைக் கடைப் பிடைப்பதில் விண்ணர்கள்தானே. 😀

இலங்கையின் மிகப் பெரும்பாலான சிகை அலங்கரிப்பு நிலையங்கள் கால மாற்றத்திற்கேற்ப எந்தவித மாற்றங்களுக்கும் உட்படாதவை. ☹️

 சுத்தம் சுகாதார விடயத்தில் நீங்கள் பெருமையாக மதிக்கும் வெள்ளைக்காரர்கள் இதை விட மோசமானவர்கள். எனவே எம்மவர்களை எதற்கெடுத்தாலும் தூக்கிப்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.

இலங்கையில் காலத்திற்கேற்ப மாறுவதற்கு பொருளாதார வசதிகளும் வேண்டுமல்லவா?
 
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

சுகாதார பழக்கவழக்கங்களைப் பேணுவதிலும் புதிய முறைகளைக் கைக் கொள்வதற்கும் வேற்று இனங்களைத்தான் பின்பற்ற வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. 🙂

மாற்றத்தை கொண்டுவருவதற்கு பொருளாதார வசதி வேண்டும் என்பது ஓரவுதான் உண்மை. அதிலும் குறிப்பாக  எமது சலூன்களில் சுகாதாரம் தொடர்பிலான மாற்றங்களை கொண்டுவருவதற்கு பொருளாதார பலம் தேவை இல்லை. 😉

தன்னுடைய வாடிக்கையாளரின் நலனில் அக்கறை கொள்வது என்பது  அடிப்படை வியாபார தர்மம்( Business  ethics ) மட்டுமல்ல உரிமையாளர், ஊழியர் நலன் (Body and mind) தொடர்பானது. 👍

அடிப்படை மாற்றம் நிகழ வேண்டியது எமது சிந்தனை முறையில்தான். 🙂

2 minutes ago, Kapithan said:

நாம் திருந்துவதை விட என்னை விட அடுத்தவன் மோசமானவன் என்று மட்டம் தட்டி வெட்டி பெருமை பேசுவது சுலபமல்லவா?  எமது பெருமைகள் என்று வெட்டி பெருமைகளை நான் எழுத  அதை பத்து தமிழர்  வாசித்து கொலரை உயர்த்திவிட்டு போவது தான் தமிழர் பெருமை என்று சிலர் நினைக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

நாம் திருந்துவதை விட என்னை விட அடுத்தவன் மோசமானவன் என்று மட்டம் தட்டி வெட்டி பெருமை பேசுவது சுலபமல்லவா?  எமது பெருமைகள் என்று வெட்டி பெருமைகளை நான் எழுத  அதை பத்து தமிழர்  வாசித்து கொலரை உயர்த்திவிட்டு போவது தான் தமிழர் பெருமை என்று சிலர் நினைக்கிறார்கள்.

"உயர்ச்சி"க்கும்  "வளர்ச்சி"க்கும் இடையே மிகப்பெரும் வேறுபாடு உள்ளது. 

உதாரணமாக, 

சமமான நிலையில் இருவர் உள்ளனர். ஒருவனை வீழ்த்தி (Ex ; Petition போடுதல்) அவனை அழித்தபின் எஞ்சியிருப்பவர் தான் மட்டும் உயர்ந்தவராகக் / வளர்ந்தவராகக் கருதிக் கொள்கிறார்.☹️

ஆனால், இருவரில் எவர் மற்றவனுடன் போட்டியிட்டு தனது நிலையை மேலும்   உயர்த்திக் கொள்கிறாரோ அங்கேதான் வளர்ச்சி இருக்கிறது. உயர்ச்சியும் இதுதான். 👍

(தரத்தை (Quality ) அதிகரிக்கும்போது உயர்ச்சியும் வளர்ச்சியும் கூடவே வரும். இதனை எங்கள் வியாபாரிகளும், வியாபார உரிமையாளர்களும் புரிந்துகொள்வதில்லை)

☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
23 minutes ago, tulpen said:

நாம் திருந்துவதை விட என்னை விட அடுத்தவன் மோசமானவன் என்று மட்டம் தட்டி வெட்டி பெருமை பேசுவது சுலபமல்லவா?  எமது பெருமைகள் என்று வெட்டி பெருமைகளை நான் எழுத  அதை பத்து தமிழர்  வாசித்து கொலரை உயர்த்திவிட்டு போவது தான் தமிழர் பெருமை என்று சிலர் நினைக்கிறார்கள்.

எனது இனத்தின் பெருமையை நான் பேசாமல் வேறு யார் பேசவேண்டும்?
தமிழினத்தின் பெருமையை ஒவ்வொரு தமிழனும் பேசவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

எனது இனத்தின் பெருமையை நான் பேசாமல் வேறு யார் பேசவேண்டும்?
தமிழினத்தின் பெருமையை ஒவ்வொரு தமிழனும் பேசவேண்டும்.

தமிழனின் மேன்மையான விடயங்களை மட்டும் பேசுவது போதுமானதல்ல. மேன்மையற்ற விடயங்களையும் பேசி தவறு கழைந்து புடமிடப்பட வேண்டும். இல்லையேல் பிற இனங்களின் கேலிக்காளாக வேண்டும். நாகரீக வளர்ச்சியிலும்  பின்தங்கி விடுவோம். 🙂

20 minutes ago, குமாரசாமி said:

எனது இனத்தின் பெருமையை நான் பேசாமல் வேறு யார் பேசவேண்டும்?
தமிழினத்தின் பெருமையை ஒவ்வொரு தமிழனும் பேசவேண்டும்.

தற்பெருமை என்பது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு தான். தன் திறமை காரணமாக, தன் ஆற்றல்கள் காரணமாக, பிறர் தன்னைப் பற்றி மதிக்கிறார்கள் என்ற திட சித்தம் உடைய ஒருவன் உண்மையைச் சொல்லப் போனால் போராற்றல் படைத்த ஒருவன் தற்பெருமை பேசமாட்டான். அவன் செய்த வேலையின்  நேர்த்தியும் ஒழுங்கும் கச்சிதமும் அவன் பெருமையைப் பேசாமல் பேசிக் கொண்டிருக்கும்.  அவன் வெட்டிப்பெருமை முன்னோர் புராணம் பாடி நேரத்தை வீணாக்காமல் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப்ப தனது அறிவை விருத்தி செய்து  வெற்றி நடை போடுவான்.  அது இனத்திற்கும் பொருந்தும். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, Kapithan said:

தமிழனின் மேன்மையான விடயங்களை மட்டும் பேசுவது போதுமானதல்ல. மேன்மையற்ற விடயங்களையும் பேசி தவறு கழைந்து புடமிடப்பட வேண்டும். இல்லையேல் பிற இனங்களின் கேலிக்காளாக வேண்டும். நாகரீக வளர்ச்சியிலும்  பின்தங்கி விடுவோம். 🙂

நிச்சயமாக பேச வேண்டும். அதற்காக தமிழனின் குறைகளை மட்டும் எல்லா இடங்களிற்கும் தூக்கிக்கொண்டு திரிவது அழகல்ல.

2 minutes ago, tulpen said:

தற்பெருமை என்பது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு தான். தன் திறமை காரணமாக, தன் ஆற்றல்கள் காரணமாக, பிறர் தன்னைப் பற்றி மதிக்கிறார்கள் என்ற திட சித்தம் உடைய ஒருவன் உண்மையைச் சொல்லப் போனால் போராற்றல் படைத்த ஒருவன் தற்பெருமை பேசமாட்டான். அவன் செய்த வேலையின்  நேர்த்தியும் ஒழுங்கும் கச்சிதமும் அவன் பெருமையைப் பேசாமல் பேசிக் கொண்டிருக்கும்.  அவன் வெட்டிப்பெருமை முன்னோர் புராணம் பாடி நேரத்தை வீணாக்காமல் காலத்தின் வளர்ச்சிக்கேற்ப்ப தனது அறிவை விருத்தி செய்து  வெற்றி நடை போடுவான்.  அது இனத்திற்கும் பொருந்தும். 

ஒவ்வொரு மனித இனங்களுக்கும் பெருமை கொள்ள ஏதாவது ஒரு அடையாளம் இருக்கும். அதை வெளிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. அதே போல் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் ஊத்தைகளை மட்டும் தூக்கிப்பிடிப்பவர்களும் இருக்கின்றார்கள். இதில் நீங்கள் இரண்டாம் ரகம்.

15 minutes ago, குமாரசாமி said:

நிச்சயமாக பேச வேண்டும். அதற்காக தமிழனின் குறைகளை மட்டும் எல்லா இடங்களிற்கும் தூக்கிக்கொண்டு திரிவது அழகல்ல.

ஒவ்வொரு மனித இனங்களுக்கும் பெருமை கொள்ள ஏதாவது ஒரு அடையாளம் இருக்கும். அதை வெளிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. அதே போல் ஒவ்வொரு இனத்துக்குள்ளும் ஊத்தைகளை மட்டும் தூக்கிப்பிடிப்பவர்களும் இருக்கின்றார்கள். இதில் நீங்கள் இரண்டாம் ரகம்.

இவ்வளவு விபரமாக எழுதியும் விளங்காத ஜென்மங்களுக்காக இதை எழுதவில்லை . வாசிக்கும் வாசகர்களுக்காகவே எழுதினேன்.   நாம் வெட்டி பெருமை பேசுவதை விட எமது உண்மையான பெருமைகளை மாற்று இனத்தவர் பேசி அதை நாம் கேட்பதே உண்மையான பெருமை. 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

இவை அறிவுறுத்தல்களா அல்லது கட்டாயம்  பின் பற்ற வேண்டிய விதிமுறைகளா? 

இலக்கம் 3. 5. 6 ஆகிய விதிமுறைகள் கொரோனா தவிர்ந்த காலங்களிலும் வழமையாக  பின்பற்ற வேண்டிய விதிமுறைகள். ஐரோப்பாவில் உள்ள தமிழ் சலுன்கள்  பல இதை பின்பற்றுவதில்லை. வாடிக்கையாளருக்கும் அது பழகிவிட்டதால்  அது பற்றி கேட்பதில்லை. இனிவரும் காலங்களிலாவது பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்போம். 

நீங்கள் மேற் சொன்ன 3,5,6 போன்றவற்றை இங்கு கடைப்பிடிக்கிறார்களா?...நான் என்றால் இங்கு காணவில்லை:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, tulpen said:

இவ்வளவு விபரமாக எழுதியும் விளங்காத ஜென்மங்களுக்காக இதை எழுதவில்லை . வாசிக்கும் வாசகர்களுக்காகவே எழுதினேன்.   நாம் வெட்டி பெருமை பேசுவதை விட எமது உண்மையான பெருமைகளை மாற்று இனத்தவர் பேசி அதை நாம் கேட்பதே உண்மையான பெருமை. 

விளங்காத ஜென்மங்களுக்காக எழுதவில்லை என்றால் ஏன் என்னுடைய கருத்தை மேற்கோள் காட்டி எழுதினீர்கள்?

விளங்கும் ஜென்மங்களுக்கு எழுதுவதென்றால் ஆயிரம் வழிகள் இருக்கின்றதல்லவா?

இன்னுமொன்றை உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன். என்னைப்போன்ற ஆட்கள் இல்லையென்றால் உங்கள் போன்ற வீர தீர அறிவார்ந்த பகுத்தறிவுவாதிகள் எங்கே போய் கொட்டுவீர்கள்?
எனவே என்னைப் போன்றவர்களை ஒதுக்காதீர்கள்.நகைக்காதீர்கள். உங்கள் அறிவுக்களஞ்சியங்களையும் அள்ளிக்கொட்ட ஆட்கள் தேவையல்லவா?
சரி அப்ப நான் வரட்டே!!!!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உண்மை.

இதை நான் எல்லோருக்கும் பொதுவானதாக, நான் உட்பட, கூறப்பட்டதாகவே பார்க்கிறேன். ☹️

ஆகவே, பொது வெளியில் எழுதும்போது நாம்  எல்லோருமே நாகரீகமாக எழுதுவோம். 🙏

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, tulpen said:

இவை அறிவுறுத்தல்களா அல்லது கட்டாயம்  பின் பற்ற வேண்டிய விதிமுறைகளா? 

இலக்கம் 3. 5. 6 ஆகிய விதிமுறைகள் கொரோனா தவிர்ந்த காலங்களிலும் வழமையாக  பின்பற்ற வேண்டிய விதிமுறைகள். ஐரோப்பாவில் உள்ள தமிழ் சலுன்கள்  பல இதை பின்பற்றுவதில்லை. வாடிக்கையாளருக்கும் அது பழகிவிட்டதால்  அது பற்றி கேட்பதில்லை. இனிவரும் காலங்களிலாவது பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்போம். 

ஐரோப்பாவில பின்பற்றவில்லை என்றால் இங்க பின்பற்றுவார்களா இல்லை நான் சேவிங் கடைகளில் எடுப்பதில்லை முடி வெட்டுதல் மட்டும் தான் ஆனால் ஒரு மாதமாக வெட்டவில்லை இனி மொட்டைதான் அடிக்கலாம் என நினச்சன் காரணம் அகோரவெயில் தலை வேருத்து தலையிடி ஒருபக்கம் முடி அதிகமானதால் இந்த நேரத்தில் கூட முடி மட்டும் வெட்ட 400 ரூபாய் எடுத்துவிட்டார்கள்.

கொடுத்துவிட்டு வந்தாச்சு  நேரத்துக்கு ஏற்ற தொழில் செய்கிறார்கள்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.