Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் 'வரனே அவஷ்யமுண்டு' சர்ச்சை: தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் 'வரனே அவஷ்யமுண்டு' சர்ச்சை: தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்ட துல்கர் சல்மான்

dulquer-salman-asks-sorry

 

வரனே அவஷ்யமுண்டு' படத்தில் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்தது சர்ச்சையானதால், தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் துல்கர் சல்மான்.

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. இந்த ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

 
 

இந்தப் படம் சில நாட்களுக்கு முன்புதான் டிஜிட்டலில் வெளியிடப்பட்டது. அப்போது பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படம் தவறுதலாக இடம் பெற்றிருப்பது சர்ச்சையானதால் அவரிடம் மன்னிப்பு கோரினார் துல்கர் சல்மான். தற்போது, மீண்டும் 'வரனே அவஷ்யமுண்டு' படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அந்தப் படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டிக் காட்சிப்படுத்தியது படக்குழு. இந்த காமெடிக் காட்சிகளை வைத்து இணையத்தில் தமிழ்ப் பயனர்கள் பலரும் 'வரனே அவஷ்யமுண்டு' படக்குழுவினரைக் கடுமையாகத் திட்டத் தொடங்கினார்கள். துல்கர் சல்மான் இதற்கு மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இறுதியாக இந்தச் சர்ச்சை தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் துல்கர் சல்மான்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

" 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் வரும் பிரபாகரன் ஜோக் தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாகச் சிலர் என் கவனத்துக்கு கொண்டு வந்தனர். அது உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டதல்ல. பழைய மலையாளப் படமான 'பட்டண பிரவேஷம்' படத்தில் வரும் நகைச்சுவை அது. கேரளாவில் அது பொதுவான ஒரு பெயர். எனவே, படத்தின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் யாரையும் குறிப்பிடுவது அல்ல.

இதற்கு எதிர்வினையாற்றும் பலரும் படத்தைப் பார்க்காமலேயே வெறுப்பைப் பரப்ப முயல்கின்றனர். என்னையே என்னுடைய இயக்குநர் அனூப்பையோ வெறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இதை எங்கள் அளவில் வைத்துக் கொள்ளலாம். எங்கள் தந்தைகளையோ அல்லது மூத்த நடிகர்களையோ இதில் இழுக்க வேண்டாம்.

இதனால் காயப்பட்டதாக உணரும் அன்பான அனைத்துத் தமிழ் மக்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய வார்த்தைகள் மூலமாகவோ படங்கள் மூலமாக யாரையும் காயப்படுத்த நினைத்ததில்லை. இது உண்மையில் ஒரு தவறான புரிதல்.

பின் குறிப்பு : உங்களில் சிலர் எங்களோடு சேர்த்து எங்கள் குடும்பத்தையும் வன்மத்துடன் திட்டி, மிரட்டி, அவமானப்படுத்தி வருகிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என்று விரும்புகிறேன்".

இவ்வாறு துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

மேலும், 'பட்டண பிரவேஷம்' காமெடிக் காட்சியையும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

 

To all those who were offended. I apologise. And I also apologise on behalf of #VaraneAvashyamund and @DQsWayfarerFilm !

View image on Twitter
 
 
 
 

 

 

To all those who were offended. I apologise. And I also apologise on behalf of #VaraneAvashyamund and @DQsWayfarerFilm ! This is the reference to the joke in question. The 1988 film “Pattana Pravesham”.

 
Embedded video
 
 
 
 

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

`காயம்பட்ட அன்பான தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்!'-சர்ச்சை காட்சிக்கு துல்கர் சல்மான் விளக்கம்

துல்கர் சல்மான்

 

அப்போதே ஒரு சர்ச்சையில் சிக்கியது படம். பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படம் தவறுதலாக படத்தில் இடம் பெற்றிருப்பது தெரியவர உடனே அவரிடம் மன்னிப்பு கோரினார் துல்கர் சல்மான்.

அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த மலையாள படம் 'வரனே அவஷ்யமுண்டு'. நீண்ட நாட்களுக்கு இந்தப் படத்தில்தான் மலையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களான சுரேஷ் கோபி, ஷோபனா ஆகியோர் நீண்ட காலங்களுக்குப் பிறகு சேர்ந்து நடித்திருந்தனர். அவர்களுடன் துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. OTTP பிளாட்பார்மில் சில நாட்களுக்கு முன்தான் இந்தப் படம் வெளியானது. அப்போதே ஒரு சர்ச்சையில் சிக்கியது படம். பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படம் தவறுதலாக படத்தில் இடம் பெற்றிருப்பது தெரியவர உடனே அவரிடம் மன்னிப்பு கோரினார் துல்கர் சல்மான்.

துல்கர் சல்மான்
 
துல்கர் சல்மான்

தற்போது, மீண்டும் இந்தப் படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. காமெடி காட்சிகளாக இந்தப் படத்தில் நாய் ஒன்றின் காட்சிகள் இருக்கும். சுரேஷ் கோபி வளர்க்கும் அந்த நாயை பிரபாகரன் என்று அழைக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை இழிவுபடுத்துவது போல இந்தக் காட்சி அமைந்திருப்பதாக இந்தக் காட்சிகளை பார்த்த தமிழ் ரசிகர்கள் படக்குழு மீது கடுமையான விமர்சனங்கள் வைத்தனர். இதுதொடர்பாக துல்கர் சல்மான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்

இந்நிலையில்தான் இந்தச் சர்ச்சை தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார் துல்கர் சல்மான். `` 'வரனே அவஷ்யமுண்டு' படத்தில் வரும் பிரபாகரன் ஜோக் தமிழ் மக்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக என் கவனத்துக்கு வந்தது. எந்தவித உள்நோக்கத்துடனும் அந்தக் காட்சி எடுக்கப்பட்டது அல்ல. 'பட்டண பிரவேஷம்' என்ற பழைய மலையாளப் படத்தில் வரும் நகைச்சுவையே அது. கேரளாவில் அது பொதுவான ஒரு பெயர். இது கேரளாவில் மிகவும் பிரபலமான மீம். எனவே, ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல் யாரையும் குறிப்பிடுவது அல்ல.

விளக்கம்
 
விளக்கம்

இந்தப் படத்தைப் பார்க்காமல் பலர் இதற்கு எதிர்வினையாற்றுகிறார்கள். வெறுப்பை பரப்ப முயற்சிக்கிறார்கள். என்னை வெறுப்பதோ அல்லது என்னுடைய இயக்குநர் அனுப்பை வெறுப்பதையோ நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதை எங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். எங்களுடைய தந்தைகளை திட்டுவதோ அல்லது படத்தில் நடித்த மூத்த நடிகர்களைத் திட்டுவதோ வேண்டாம். அந்தக் காட்சியால் காயம்பட்ட நல்ல மற்றும் அன்பான தமிழ் மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய படத்தின் மூலமோ என்னுடைய வார்த்தைகளின் மூலமோ யார் குறித்தும் அவதூறு பரப்ப வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை. இது தவறான புரிதலின் விளைவு'' எனக் கூறி 'பட்டண பிரவேஷம்' காமெடிக் காட்சியையும் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

https://cinema.vikatan.com/tamil-cinema/dulquer-salmaan-apologises-once-again-varane-avashyamund-controversy

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

பிப்ரவரி 7-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. OTTP பிளாட்பார்மில் சில நாட்களுக்கு முன்தான் இந்தப் படம் வெளியானது

எனக்கென்னவோ  ஏதோ ஒரு ஐ.ரி விங் ரூம் போட்டு கோரோனோ சீசனுக்கு ஓவர் ரூற்றி செய்வது போல் தோன்றுகிறது.. 👌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எனக்கென்னவோ  ஏதோ ஒரு ஐ.ரி விங் ரூம் போட்டு கோரோனோ சீசனுக்கு ஓவர் ரூற்றி செய்வது போல் தோன்றுகிறது.. 👌

சரியாக சொன்னீர்கள் வேணுமென்றே பிரச்சனைகளை கிழப்பி, சில பாரிய பிரச்சனைகளை மறைக்க  பார்க்கின்றார்கள், கவனத்தை சிதற விடுகின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நாய் அரசியல்

எந்த மனிதர்களுடைய வீட்டை தான் நன்றியுடன் காத்துவருகிறேனோ, அந்த மனிதர்கள் தமக்குப் பிடிக்காதவர்களை வசை பாட பல முன்னொட்டுக்களுடன் தன்னைப் பயன்படுத்துகிறார்களென்பதை நாய் அறியாது. பெயர் குறித்த விருப்பத் தெரிவுகளும் அதற்கில்லை. ஆனால், எது இழிவு எது பெருமையெனத் தாம் கருதுகிறோமென்பதை மனிதர்கள் அறிவார்கள். ‘எளிய பூனையே’என்றோ, ‘கள்ள அணிலே’என்றோ நாம் யாரையும் வசைபாடுவதில்லை. நடிகர் துல்கர் சல்மானுக்குக்கூட தெரியும் ‘பட்டியிண்ட மோனே’என்றால் வசையா இல்லையா என்பது.

புலியெதிர்ப்பாளர்கள் ஒப்புக்கொள்ள மறுக்கும் உண்மையொன்றுண்டு. அது, கோடிக்கணக்கான மக்களின் பெருமதிப்பிற்கும் பேரன்புக்கும் உரியவர் தலைவர் பிரபாகரன் என்பது. வசைபாடத் தங்களால் பயன்படுத்தப்படும் (உண்மையில் நாய் பாவம்) ஒரு பிராணிக்கு பல கோடிப் பேரின் போற்றுதலுக்குரிய தலைவரது பெயரைச் சூட்டுவதானது திட்டமிட்ட புண்படுத்தல், சீண்டல், மேன்மையெனக் கருதுவதன் மீது காறியுமிழ்தல். அதன் பின் ஒரு வெள்ளந்தி மனம் உள்ளது, தற்செயல், பெருமைப்படுத்தல் என கூறப்படும் காரணங்களை சிறுபிள்ளைகூட நம்பாது. மேலும், துல்கரைப் பொறுத்தமட்டில், தலைவர் பிரபாகரனை விடவும் பெருமதிப்பிற்குரியவர்கள் இருப்பார்கள். உண்மையில் பெருமை செய்யவே நாய்க்கு அந்தப் பெயரை வைத்தாரென்றால், தன் தந்தையின் பெயரையே கூட அந்த நாய்க்கு வைத்திருக்கமுடியும்.

இலக்கியத்தில் எப்படி படைப்பிலுள்ள அரசியலைக் கழித்துவிட்டு, ‘கலையைக் கலையாக மட்டும் பாருங்கள்’என்று இங்கு சிலர் அங்கீகாரங்களின் நிமித்தம் பம்முகிறார்களோ, அதற்கிணையானதுதான் இந்தப் பெயரரசியலும். இந்திய அரசில் தலையாடுகளாக இருந்த மலையாள அதிகாரிகள், எவ்விதம் ஈழத்தமிழர்களது அழித்தொழிப்பிற்குத் துணைபோனார்கள், திட்டமிட்டுக் கருவறுத்தார்கள் என்பதை உலகம் அறியும். ஈழத்தமிழர்கள் மீதான வெறுப்பின் தொடர்ச்சியாகவே இந்தப் பெயர் சூட்டலையும் கருதவேண்டும். அல்லாமல், பெருமைப்படுத்தவே பெயர்வைத்தார்களென்பது நகைப்பிற்குரிய சப்பைக்கட்டல்.

இந்தப் பெயர் சூட்டலைச் சரியெனத் தாங்கிப் பிடிப்பவர்கள், தங்களது பிள்ளைகளுக்கு ‘பப்பி’, ‘சீசர்’, ‘ரைகர்’இன்னபிற பெயர்களைச் சூட்டச் சம்மதிப்பார்களா?என வினயமாக வினவுகிறேன். 1f609.png

Thamizhnathy Nathy

https://www.facebook.com/thamizhnathy?__tn__=%2CdC-R-R&eid=ARCLLQOg7OKEdOsvsOItfU5Qxgx1spUolUQnSOp2touc-gfh0L3a2Z6W4leBi9lMu5p_RhK5xwVfUViK&hc_ref=ARQxeCPImaavDuMqepQlwiONIo3nYiVxUaG3L8JjOvcFkn7BoOLUhw8TXbgzVgavokA&fref=nf

Edited by பிழம்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2020 at 06:27, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எனக்கென்னவோ  ஏதோ ஒரு ஐ.ரி விங் ரூம் போட்டு கோரோனோ சீசனுக்கு ஓவர் ரூற்றி செய்வது போல் தோன்றுகிறது.. 👌

எனக்கும் அப்படித்தான்  தோணுது .

ஆனாலும் அவர்களின் கடவுள் மாபாலி(ஓணம் பண்டிகை கடவுள் ) படத்தை என் காலில் போட்டு மிதித்து படம் எடுத்து போட்டால் அவர்கள் தாங்குவார்களா ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

3 minutes ago, பெருமாள் said:

எனக்கும் அப்படித்தான்  தோணுது .

ஆனாலும் அவர்களின் கடவுள் மாபாலி(ஓணம் பண்டிகை கடவுள் ) படத்தை என் காலில் போட்டு மிதித்து படம் எடுத்து போட்டால் அவர்கள் தாங்குவார்களா ?

ஆனா இந்த வீடியோக்களை பார்க்க வேணுமென்றே செய்த மாதிரி இருக்கு, காட்சியை நீக்கி, இனிமேல் இப்படி நாடக்காமல் இருக்க மழையாள சினிமா கவனத்தில் எடுக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

காட்சி உண்மையில் நீக்கப்பட்டு  இருக்கணும் ஆனால் அவர்கள் சுழித்தோடுவார்கள்  அதுக்கு தகப்பன் காரனை  இழுத்தாள் காணும் ஆனால் இது வேண்டுமென பல சேதிகள்  அடியில் போக இதை ஊதி  பெருபிக்கிறார்கள் ஆனாலும் தமிழ்நாடு இவ்வளவு குமுறினதே இப்போ இருக்கும் தமிழ்நாட்டு  டெல்லி அடிமைகளை சிந்திக்க வைத்து இருக்கும் .

நேற்றும் யாரோ திண்ணையில் இருந்து இந்த செய்தி பற்றி தேடிக்கொண்டு இருந்தினம் திண்ணையில் வைத்து விளங்கப்படுத்தும் அளவுக்கு இது பெரிது அல்ல .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=BuXbu9nhycQ

 

https://youtu.be/BuXbu9nhycQ

 

உங்களுக்கு ஒரு சாதாரண பெயர்... எங்களுக்கு அதுவே உயிர் - துல்கர் சல்மானுக்கு இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கண்டனம்

 

உங்களுக்கு ஒரு சாதாரண பெயர்... எங்களுக்கு அதுவே உயிர் - துல்கர் சல்மானுக்கு இயக்குனர்  எஸ்.ஆர்.பிரபாகரன் கண்டனம்

அனுப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்துள்ள ‘வரனே அவஷ்யமுண்டு’ என்ற மலையாள படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்து நல்ல வசூல் பார்த்தது. இந்த படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்று பெயர் வைத்து அழைப்பர். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அன்பிற்குரிய துல்கர் சல்மான் &  அனுப் சத்யன் உங்களின் சமீபத்திய வெளியீடான  #VaraneAvashyamund " எனும் மலையாள திரைப்படத்தில், நாய்க்கு "பிரபாகரன்" என்று பெயர் சூட்டி இருப்பதாக வரும் வசனம் பற்றியும் அதன் மூலம் எழுந்த சர்ச்சை பற்றியும், அதற்கு, மன்னிப்பா? அல்லது விளக்கமா என்று புரியாத வகையில் நீ அளித்த பதிவையும் சற்று முன்பே பார்க்கவும் படிக்கவும் நேர்ந்தது., நிற்க.,

அதென்ன  கேரள தேசத்திலும் மலையாள திரைப்படங்களிலும் தமிழர்களையும் தமிழினத்தின் தேசியத் தலைவரையும் தொடர்ந்து கொச்சை படுத்தி வருகிறீர்கள்.? யார் சொல்லி கொடுத்தது உங்களுக்கு, மலையாளிகளை விட தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்று., உங்களின் தாய்மொழி மலையாளத்திற்கும் தாய்மொழி எங்களின் தமிழ்மொழி என்பதை மறந்து விடாதீர்கள்..!

"பிரபாகரன்" என்பது உங்களுக்கு ஒரு சாதாரண பெயர்., எங்களுக்கு அதுவே உயிர்., இதை சொன்னால் உங்களுக்கு நிச்சயம் புரியாது., இனியும் நீங்கள்  தமிழர்களையும் தமிழின தலைவரையும் தொடர்ந்து தரம் தாழ்த்தி பேசுவதாகவும் எழுதுவதாகவும் இருந்தால்- நாங்களும்  "கேரளத்து காந்தி" என்றழைக்கப்பட்ட கே.கேளப்பன் பெயரையும் சுதந்திர போராட்ட காலத்திலிருந்து பெருந்தலைவராக அங்கு அறியப்பட்ட "மொகம்மத் அப்துல் ரஹிமான் சாகிப்" பின் பெயரையும் "வக்கம் மௌலாவி" யின் பெயரையும் எங்களின் படைப்புகளில் நாய்களுக்கும் பன்றிகளுக்கும் பெயராக சூட்ட  வேண்டிய சூழல் ஏற்படும்., யார் இதை செய்கிறார்களோ இல்லையோ., நான் நிச்சயம் என் படைப்பில் இதை செய்வேன் என்பதை பணிவோடு கூறிக்கொள்கிறேன்.,

நடிகர் பிரசன்னா., சக நடிகர் என்கிற முறையில் துல்கர்க்கு ஆதரவாக பேசுவதை விட்டு விட்டு., "தலைவர்" பிரபாகரன் யார் என்பதை எடுத்து கூறினால் நன்றாக இருக்கும்..,  என்று கூறியுள்ளார்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/28191019/1468199/Director-sr-Prabhakaran-condemn-to-dulquer-salmaan.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

பொதுவாகக்  மலையாள  படங்கள்  நன்றாகவே  இருக்கும் .  ஆனால்  அவர்களின்  படங்களில்  தமிழர்களை 

நல்லதாக  காட்டமாட்டாரகள் .

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.