Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரு. நாகராஜன் வந்தால் பெண்கள் வரமாட்டோம்: விவாதத்தில் ஆபாசம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரு. நாகராஜன் வந்தால் பெண்கள் வரமாட்டோம்: விவாதத்தில் ஆபாசம்!

தமிழக செய்தித் தொலைக்காட்சிகளில் நடக்கும் விவாதங்களில் பெண்களுக்கு எதிரான ஆபாசத் தாக்குதல்கள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் நியூஸ் 7 தொலைக்காட்சியில் நேற்று (மே 18) நடந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியிடம், பாஜகவைச் சேர்ந்த கரு. நாகராஜன் கடுமையாக தனி நபர் தாக்குதலில் ஈடுபட்டார். இதையடுத்து விவாதத்தில் இருந்து வெளியேறினார் ஜோதிமணி.

இதுகுறித்து ஜோதிமணி எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ( 18/05/2020 ) நியூஸ் 7 தமிழின் கேள்வி நேரம் விவாதத்தில் இருந்து பாஜகவின் கரு. நாகராஜன் என்கிற மூன்றாந்தரமான மனிதரின் தரம்கெட்ட பேச்சால் வெளியேறினேன். புலம் பெயர்த்தொழிலாளர்களின் வேதனையை பட்டியலிட்டு அரசு செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பினேன். தொடர்ந்து 45 நாட்களாக களத்தில் நிவாரணப் பணியில் இருந்து மக்களின் பசியை,வறுமையை,கண்ணீரை, வேதனையை,வலியை பக்கத்தில் இருந்து பார்ப்பதால் கடந்த சில தினங்களாக மக்களின் வேதனையை ஊடகங்களின் வழியே வெளிப்படுத்தி வருகிறேன்.

மோடி அரசு மக்களை எப்படி இரக்கமற்று கை கழுவி விட்டது என்பதை மக்களின் குரலாக பதிவு செய்து வருகிறேன். என்னை ,நான் கூறும் கசப்பான உண்மையை எதிர்கொள்ள பாஜகவினரால் முடியவில்லை. கரு.நாகராஜன் என்னை மிகத் தரக்குறைவாக மலிவான வார்த்தைகளில் ஒருமையில் விமர்சிக்கத் தொடங்கினார். நான் தொடர்ந்து அந்த விவாதத்தில் பங்கேற்க விரும்பாமல் எனது கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்துவிட்டு வெளியேறினேன். திமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கலாநிதி வீராசாமியும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

ஊடக விவாதங்களில் பாஜக வினர் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஊடகங்களையும், நெறியாளர்களையும் , எதிர்க்கட்சிகளையும் மிரட்டியே பணிய வைக்கலாம் என்று எண்ணுகின்றனர். பெண் என்றால் கூடுதலாக ஒரு ஆபாச அணுகுமுறை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஊடகங்களும் பாஜக வின் இந்தப் போக்கை அனுமதிக்கக் கூடாது.

பாஜக என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்துகொள்வது முதல்முறையல்ல. இதற்கு முன்பு இதேபோல பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மோடியையும்,பிஜேபியையும் தோலுரித்தேன் என்பதால் என்னை ஒரு ஆபாச வாட்ஸ் அப் குழுவில் இணைத்து என்னை அசிங்கப்படுத்த முயன்றார்கள். இதில் அசிங்கப்படவேண்டியது பிஜேபிதான் என்று வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்டுகளை பொதுவெளியில் வெளியிட்டு பிஜேபியின் ஆபாச அரசியலை வெளிப்படுத்தினேன். தமிழகமே அதிர்ந்தது #IStandwithJothimani லட்சக்கணக்கானவர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது. ஊடகங்கள் பிஜேபியை மேலும் தோலுரித்தன. பிஜேபி பொதுவெளியில் அசிங்கப்பட்டு நின்றது. அந்த வழக்கு இன்னும் நடந்துகொண்டிருக்கிறது.

ஒரு பெண்ணை அவருடைய கேரக்டரை சிதைப்பதன் மூலம் பொதுவெளியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று பிஜேபி நினைக்குமானால் அவர்கள் ஆபாச அரசியல் என்னிடம் வெற்றியடையாது. என்போன்ற பெண்கள் முறத்தால் புலி விரட்டிய வீரத்தமிழச்சியின் அம்சம்

"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் " கொண்ட பாரதி கண்ட புதுமைப் பெண்ணின் வம்சம்.

பிரதமர் முதல் பிஜேபியின் கரு. நாகராஜன் போன்ற பிஜேபியின் மூன்றாம் தர பேச்சாளர்கள் வரை எதிர்க்கட்சியினரை ,ஊடகங்களை ஒடுக்க ஆபாச அரசியலை முன்னெடுக்கலாம் . பெண்களை ஆபாசமாகப் பேசுவது,கொலை,பாலியல் வன்புணர்வு மிரட்டல் விடுவதுமான செயல்பாடுகளை செய்பவர்களை ஊக்குவிக்க சமூக வலைத்தளங்களில் பிரதமர் அவரை பின் தொடரலாம் (இது குறித்து பத்திரிக்கையாளர் ஸ்வாதி சதுர்வேதி விரிவாக ஒரு புத்தகமே- I am A Troll) எழுதியுள்ளார். ) ஆனால் நான் களத்தில் இருந்து நேர்மையோடும்,அன்போடும், கண்ணியத்துடனும் அரசியல் செய்ய வந்தவள்.ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் 25 ஆண்டுகளாக கரடுமுரடான பாதையினைக் கடந்து நாடாளுமன்றத்தில் கால் பதித்தவள். எனது நேர்மையை இந்த உலகறியும். அதனால் தான் எனது கரூர் தொகுதி மக்கள் எனது தேர்தலை தாங்களே களம் கண்டதாக கொண்டாடினார்கள்.எனது வெற்றி தங்கள் குடும்பத்துப் பெண்ணொருத்தியின் வெற்றியெனெ 4,20,000 வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை அளித்தார்கள். இந்த வெற்றி எனது வெற்றியல்ல. சாமானிய மக்களின் வெற்றி என்பதை நான் உணர்ந்துள்ளேன். பொதுவாழ்வை உண்மை,நேர்மை,அன்பின் வழியே ஒரு தவமென வாழ்கிறேன். இதை உலகறியும்.

இம்மாதிரியான விமர்சனங்களினால் பெண்களை முடக்கிவிட முடியும் என நினைக்கும் பிஜேபி தான் முடங்கிப்போகும்.

இன்றைய விவாதத்தின் தரத்தை கரு.நாகராஜன் சிதைத்த பிறகும் அவரை நியூஸ் 7 தமிழ் பேச அனுமதித்தது அதிர்ச்சியளிக்கிறது. நாகரீக அரசியலை கற்றுக் கொள்ளாத வரை பாஜக வினர் கலந்து கொள்ளும் எந்த விவாதங்களிலும் நான் கலந்து கொள்ளப் போவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தருணத்தில் என்னோடு நிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும்,அன்புச் சகோதர,சகோதரிகளுக்கும் மனமார்ந்த நன்றி. தொடர்ந்து பயணிப்பேன். எனது மக்களோடு களத்தில் நிற்பேன்” என்று கூறியுள்ளார்.

திமுக மகளிரணிச் செயலாளரும், எம்பியுமான கனிமொழி, “தரம் கெட்டவர்கள்தான் மனிதர்களையும் பெண்களையும் தரம் பிரிப்பார்கள். தன் கீழ்த்தரமான குணத்தைக் காட்டிவிட்டார் பிஜேபியை சேர்ந்த கரு.நாகராஜன்” என்று சாடியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாதர் சங்க முக்கியத் தலைவருமான திண்டுக்கல் பாலபாரதி, “

இனி கரு நாகராசன் கலந்துகொள்ளும் டிவி விவாதங்களில் பெண்கள் சார்பாக யாரும் பங்கெடுக்கமாட்டோம் என்பதை ஊடக உரிமையாளர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, “பாஜகவின் சித்தாந்தம் பெண்மைக்கு எதிரானது. பொதுவெளியில், இந்த 21ம் நூற்றாண்டில் ,பொது வாழ்க்கைக்கு வரும் பெண்களை இழிவாகப் பேசுகிற பாரதிய ஜனதா நண்பர்கள் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் தமிழ் சமூகம் அவர்களுக்கு நல்ல பாடத்தைப் புகட்டும் என தமிழக காங்கிரஸ் மிகக் கடுமையாக தெரிவித்துக்கொள்கிறது” என்று கூறியுள்ளார்.

பாஜகவினரோ, “குறிப்பிட்ட அந்த விவாதத்தில் மோடியை கல்லால் அடிக்கும் அளவுக்கு மக்கள் கோபத்தில் இருப்பதாகக் கூறினார் ஜோதிமணி. இது எப்படி சரியாகும்? இது வன்முறையைத் தூண்டிவிடுவது போல பேசக் கூடாது என்று விவாத நெறியாளரே கூறினார். அதற்கு எதிர்வினையாக கரு நாகராஜன் பேசப் போய்தான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்” என்கிறார்கள்.
 
https://minnambalam.com/politics/2020/05/19/33/tv-debate-jothimani-karu.nagarajan-women

  • Replies 56
  • Views 4.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

‘நீங்க எம்பி-யா இல்ல…’- காங்கிரஸின் ஜோதிமணி பற்றி பாஜகவின் கரு.நாகராஜன் சர்ச்சை கருத்து!

கிருபன் ஜீ....  இந்தத் தலைப்பை,  வைத்தே....
இரண்டு நாள்... பொழுது போக்கலாம். :grin:

நமக்கு... பா.ஜ.க. என்றாலும், காங்கிரஸ் என்றாலும்.... காரியமில்லை. 🤠
📢  இரண்டையும்... கழுவி ஊத்துவதில்,  😎
வரும் சந்தோசத்திற்கு... எல்லையே.. இல்லை   ஐயா.  🤣

💥  1..   🥁    2..  🎷     3...  🎹   ஸ்ரார்ட்  🎵 மியூசிக். 🎼   😅

  • கருத்துக்கள உறவுகள்

33 minutes ago, இசைக்கலைஞன் said:

என்ன சொல்ல வாறீர்கள் இசைக்கலைஞன். அவர்களும் ஆபாசமாக திட்டினார்கள், ஆகவே பிஜேபியினரும் ஆபாசமாக திட்டுகின்றார்கள்...ஆகவே இரண்டும் ஒன்றுதான்..அப்படியே ஜோதிமணியை ஆபாசமாக திட்டியது தொடர்பாக எதிர்க்காமல் இருக்க வேண்டும் என்றா?

ஒருவரின் தவறை சுட்டிக்காட்டும் போது, ஏன் மற்றவர்களும் தவறு செய்யவில்லையா என நியாயப்படுத்தும் போக்கின் தொடர்ச்சி தான் உங்களின் இந்த வீடியோவும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நீங்கள் காணொளியை முழுமையாகக் காணவில்லைப் போலும். காணொளியின் இறுதியில் நாம் தமிழர் கட்சி சார்ப்பாக சாட்டையில் சொல்கிறார்களே... நாங்கள் இதுவிடயத்தில் (அவர் பரம எதிரியான காங்கிரஸ் கட்சியை சார்ந்திருந்தாலும்) ஜோதிமணி அக்கா சார்ப்பாக நிற்கிறோம்.. ஆனால்.. எல்லோரும் எல்லாக் கட்சியினரும் இப்படியான வாதங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தானே கேட்கிறார்கள். அதில் என்ன தவறிருக்கிறது.

முக நூல்களில் மற்றவர்களை அசிங்கமாக ஆபாசமான அருவருக்கத்தக்க வார்ததைகளை உபயோகித்து  திட்டுவதில் நாம் தமிழர் கட்சி விசிலடிச்சான் குஞ்சுகளும் கில்லாடிகள். 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

முக நூல்களில் மற்றவர்களை அசிங்கமாக ஆபாசமான அருவருக்கத்தக்க வார்ததைகளை உபயோகித்து  திட்டுவதில் நாம் தமிழர் கட்சி விசிலடிச்சான் குஞ்சுகளும் கில்லாடிகள். 

முத‌ல் உண்மையை தெரிந்து விட்டு நாக‌ரிக‌மாக‌ எழுத‌ ப‌ழ‌குங்கோ /

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி எதை வைச்சு சொல்லுறீங்க‌ள் விசில் அடிச்சான் குஞ்சுக‌ள் என்று / 

முக‌ நூலில் ‌ஒருத‌னே  ப‌ல‌ நூறு பேக் ஜ‌டி வைத்து இருப்பான் , அதில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தையோ அல்ல‌து அண்ண‌ன் சீமானின் ப‌ட‌த்தை போட்டு அவ‌தூறு எழுதினா அது க‌ட்சி தொண்ட‌ன் எழுதின‌து என்று ஆகிடுமா /

என்ர‌ முக‌ நூலில் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ளை த‌விற‌ வேறு ஒரு த‌ரும் இல்லை / 

என் பார்வையில் நீங்க‌ள் சொல்வ‌தை அவ‌ர்க‌ள் ஒரு போதும் செய்த‌து இல்லை ,

நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ளோடு நீண்ட‌ ந‌டைப‌ய‌ண‌மும் செய்த‌ நான் அவ‌ர்க‌ளின் நாக‌ரிக‌த்தை ப‌ற்றி என‌க்கு ந‌ல்லாவே தெரியும் / 

இதுக்கு மிஞ்சி உங்க‌ளுக்கு விள‌க்க‌ம் த‌ர‌ முடியாது / 
உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி மேல் க‌ல் எறிய‌ விருப்ப‌ம் இருந்தா திருட்டு திராவிட‌ கும்ப‌லுட‌ன் சேருங்க‌ள் அவ‌ர்க‌ள் சொல்லி த‌ருவின‌ம் குறுக்கு வ‌ழியில் போய் இப்ப‌டி எறிந்தா எறி ஒழுங்காய் விழும் என்று 😉

16 hours ago, பையன்26 said:

பையன் பொதுவாகவே இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் பெரும்பாலோனோர்  நாகரீகமாக பேச தெரியாதவர்கள்.  அதற்கு சீமானும் விதி விலக்கு அல்ல. நான் பதவிக்கு வர முன்னர் எனது அரசியல் எதிரிகள் இறந்து விடுங்கள். இல்லை யென்றால் உங்களை கொன்று அந்த கொலைப்பழியை நான் ஏற்க வேண்டிவரும்” என்று பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியது இவரைப்போன்ற  கேவலமான அரசியல்வாதிகள், தலைவர்கள்  பலர்  இந்தியாவில் உள்ளார்கள் என்பதற்கான ஒரு உதாரணம். நீங்கள் உங்கள் கட்சிக்காக வக்காலத்து வாங்குவதைப்போல் ஒவ்வொரு கட்சி ஆதரவாளர்களும் தமது கட்சிக்காக வாதாடுவார்கள். சாமான்ய மக்கள் இதை கணக்கெடுக்க வேண்டியதில்லை.  

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, tulpen said:

சீமான் ஆயிர‌ம் ந‌ல்ல‌து சொல்லி இருப்பார் , அது உங்க‌ள் காதுக்கு கேட்டு இருக்காது , உதார‌ன‌த்துக்கு போலிம‌ர் தொலைக் காட்சியில் வ‌ரும் சிறு காணொளிக‌ளை பார்த்து அண்ண‌ன் சீமானை ம‌ட்ட‌ம் த‌ட்டுவ‌து உங்க‌ட‌ இய‌லாமை / 

போலிம‌ர் தொலைக் காட்சியை போல் இந்த‌ உல‌கில் ஒரு கேடு கெட்ட‌ தொலைக்காட்சியை பார்க்க‌ முடியாது , அவ‌ங்க‌ளின் பிராட்டுத‌ன‌ங்க‌ளை அன்மையில் ப‌ட‌ இய‌க்கின‌ர் வெளிச்ச‌ம் போட்டு காட்டினார் ம‌ற்ற‌ ஊட‌க‌ங்க‌ள் மூல‌ம் /

ஊழ‌ல் ச‌ம்ம‌ந்த‌ ப‌ட்ட‌ க‌தை வ‌ரும் போது தான் அண்ண‌ன் சீமான் சொன்ன‌த‌ வெட்டி போட்டு , நான் ஆட்சிக்கு வ‌ர‌ முன் நீங்க‌ள் செத்துடுங்க‌ள் என்று சொன்ன‌த‌ வெட்டி ஒட்டி ப‌ர‌ப்புவ‌துக்கு 200ரூபாய்க்கு கூலிக்கு மார் அடிக்கும் கூட்ட‌ம் அத‌ ப‌ர‌ப்பின‌து  /

அது ச‌ரி அண்ண‌ன் சீமான் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌தில் இருந்து குறைந்த‌து ம‌க்க‌ள் முன் மாண‌வ‌ர்க‌ள் முன் 400 மேடையில் பேசி இருப்பார் அதில் எத்த‌ன‌ பேச்சை காணொளி மூல‌ம் பார்த்திங்க‌ /

வைக்கோ மாதிரி அண்ண‌ன் சீமான் த‌னது தொண்ட‌ர்க‌ளுக்கு முன்னால் நின்று ஆவேச‌ பேச்சு பேசின‌து கிடையாது /

வைக்கோ க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் எவ‌ளவ‌த்தை சொன்னார் , ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு ஒன்னு ந‌ட‌ந்தா த‌மிழ் நாட்டில் ர‌த்த‌ ஆறு ஓடும் என்று / க‌ட‌சியில் முத்துகுமார் தான் எம் இன‌ம் அழிவ‌தை பார்த்து த‌ன‌க்கு தானே தீ மூட்டினார் , முத்துகுமாரின் தியாக‌த்தையும் திராவிட‌ம் கொச்சை ப‌டுத்தின‌து காத‌ல் தோல்வியில் தீமுட்டினார் என்று /

அன்மையில் த‌ன‌து தொண்ட‌ர்க‌ளுட‌ன் போய் ஈழ‌த்தை மீட்பேன் என்று மேடையில் இருந்து வைக்கோ பேச‌ அவ‌ரின் தொண்ட‌ர்க‌ள் விசில் அடிச்சு கோச‌ம் போட்ட‌து உங்க‌ளுக்கு வேனும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் என‌க்கு எல்லாம் தெரியும் /

அன்பும‌ணி
வைக்கோ 
ராம‌தாஸ் 
திருமாள‌வ‌ன் - இவ‌ர்க‌ளை ந‌ம்பினா இன்னொரு முள்ளிவாய்கால் உறுதி 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, tulpen said:

. நான் பதவிக்கு வர முன்னர் எனது அரசியல் எதிரிகள் இறந்து விடுங்கள். இல்லை யென்றால் உங்களை கொன்று அந்த கொலைப்பழியை நான் ஏற்க வேண்டிவரும்” என்று பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியது 

அந்த பதிவை இங்கு இணைக்க முடியுமா? 

முழு பதிவையும் பார்த்தால்தான் அவர் ஏன் அப்படி பேசினார் என விளங்கமுடியும் 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

அந்த பதிவை இங்கு இணைக்க முடியுமா? 

முழு பதிவையும் பார்த்தால்தான் அவர் ஏன் அப்படி பேசினார் என விளங்கமுடியும் 

நான் மேல‌ அத‌ற்கு விளக்க‌ம் குடுத்து இருக்கிறேன் உடையார் ஜ‌யா /

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பையன்26 said:

நான் மேல‌ அத‌ற்கு விளக்க‌ம் குடுத்து இருக்கிறேன் உடையார் ஜ‌யா /

நன்றி பையா, நுனிபுல் மேய்ந்தால், இப்படிதான் எழதுவார்கள். ஒருவர் என்ன நிலையில் அந்த வார்த்தை பிரயோகத்தை வெளியிடுகின்றார் என்பது முக்கியம், நானும் பல தடவை நிலை தடுமாறியுள்ளேன், மனிதருக்கு இது சகஜம்

12 minutes ago, உடையார் said:

அந்த பதிவை இங்கு இணைக்க முடியுமா? 

முழு பதிவையும் பார்த்தால்தான் அவர் ஏன் அப்படி பேசினார் என விளங்கமுடியும் 

உடையார் அவர் ஏன் சொன்னார் எதுக்கு சொன்னார் என்பதெல்லாம் முக்கியமில்லை. சொன்னார் என்பது தான் முக்கியம். இங்கு நான் குறிப்பிடுவது  இந்திய அரசியல்வாதிகளில்  பெரும்பான்மையானவர்கள் இப்படித்தான் என்பதைத்தான். சீமான் எனபவர்  மட்டுமல்ல பெரும்பாலான அரசியல்வாதிகள்  அப்படித்தான். அந்த அரசியல்வாதிகள்  வரிசையில்  ஒருவரே இந்த சீமான்  எனபவர்.  

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

துல்பன் நம்பிக்கையிருக்கு சீமான் மற்றவர்கள் மாதிரியிருக்கமாட்டார் என்று, காலம் பதில் சொல்லும்

26 minutes ago, உடையார் said:

துல்பன் நம்பிக்கையிருக்கு சீமான் மற்றவர்கள் மாதிரியிருக்கமாட்டார் என்று, காலம் பதில் சொல்லும்

நம்பிக்கை தமிழக மக்களுக்கு தான் வர வேண்டும். அங்கு ஆட்சிக்கு அவரை அந்த மக்கள் தெரிவு செய்தால்  அங்கு நிர்வாகத்தை நன்றாக கவனிக்கட்டும். 

  எமது பிரச்சனையில் சீமான் எதுவும் வெட்டிப் புடுங்க முடியாது.   என்பது தான் ஜதார்ததம். அது சீமானுக்கும் தெரியும். சும்மா கத்திக் குளறி உள்ளதையும்  கெடுக்காமல்  விட்டால் அதுவே பெரிய காரியம். 

சீமான் மட்டுமல்ல எந்த தமிழக கட்சியாலும்  எமக்கு எதுவும் செய்ய முடியாது. 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
On 19/5/2020 at 20:25, தமிழ் சிறி said:

‘நீங்க எம்பி-யா இல்ல…’- காங்கிரஸின் ஜோதிமணி பற்றி பாஜகவின் கரு.நாகராஜன் சர்ச்சை கருத்து!

கிருபன் ஜீ....  இந்தத் தலைப்பை,  வைத்தே....
இரண்டு நாள்... பொழுது போக்கலாம். :grin:

நமக்கு... பா.ஜ.க. என்றாலும், காங்கிரஸ் என்றாலும்.... காரியமில்லை. 🤠
📢  இரண்டையும்... கழுவி ஊத்துவதில்,  😎
வரும் சந்தோசத்திற்கு... எல்லையே.. இல்லை   ஐயா.  🤣

💥  1..   🥁    2..  🎷     3...  🎹   ஸ்ரார்ட்  🎵 மியூசிக். 🎼   😅

எனது ஆதரவு நாகராசு மாமாவுக்கு தான்....

இந்த ஜோதிமணி ஒரு கேவலமான பெண் என்பதில் சந்தேகமில்லை.

நடத்தையினை சொல்லவில்லை. மனதளவில்...

2009ல் ஈழ அவலத்துக்கு பிறகான தேர்தலில், காங்கிரஸ் தமிழகத்தில் பெரும் தோல்வி அடைந்திருந்தது.

கீச்சகத்தில் பிரசாந்த் ரங்கசாமி என்பவர், "தெய்வம் நின்று கொல்லும். ஈழத்தில் தமிழர்கள் கதறிய போது, இங்கே அதிகார மமதையில், ஆணவத்துடன் சுத்திய அதனை பேரையும் தெய்வம் நின்று கொல்லும்' என்று பதிவிட்டார்...

காங்கிரஸ் காரர்கள் எல்லாம் அமைதியாக இருக்க, இந்தம்மா மட்டும் வந்து போட்ட பதில், 'போடா முட்டாள்'.

உண்மையில் தவறாக அவர் போட்டது: 'போடா மூமுட்டாள்'.

இப்ப இந்த கூமுட்டை, தானே ஒரு திரியை ஆரம்பித்திருக்கிறது: 'Support Jothimani'.

நாமழும் முடிந்தால் 'Support Nakaraja' என்று ஆரம்பிக்க வேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, tulpen said:

நம்பிக்கை தமிழக மக்களுக்கு தான் வர வேண்டும். அங்கு ஆட்சிக்கு அவரை அந்த மக்கள் தெரிவு செய்தால்  அங்கு நிர்வாகத்தை நன்றாக கவனிக்கட்டும். 

  எமது பிரச்சனையில் சீமான் எதுவும் வெட்டிப் புடுங்க முடியாது.   என்பது தான் ஜதார்ததம். அது சீமானுக்கும் தெரியும். சும்மா கத்திக் குளறி உள்ளதையும்  கெடுக்காமல்  விட்டால் அதுவே பெரிய காரியம். 

சீமான் மட்டுமல்ல எந்த தமிழக கட்சியாலும்  எமக்கு எதுவும் செய்ய முடியாது. 

சீமானால் ஒன்றும் வெட்டி புடுங்க‌ முடியாது என்று தெரிந்தால் அவ‌ர் அவ‌ர‌து ஆர‌ம்ப‌ தொழில‌ செய்ய‌ தொட‌ங்கி இருப்பாரே /

இந்த‌ 11வ‌ருட‌த்தில் நீங்க‌ள் ஈழ‌த்துக்காக‌ என்ன‌த்த‌ வெட்டி புடுங்கி நீங்க‌ள் அதை முத‌ல் சொல்லுங்கோ , 

எம் பிர‌ச்ச‌னையை இன‌ அழிப்பை த‌மிழ‌க‌ ம‌க்க‌ளிட‌ம் எடுத்து சொன்ன‌தே அண்ண‌ன் சீமான் தான் /

எம் இன‌த்தை அழித்த‌வ‌ங்க‌ளை க‌ட்டி பிடிக்க‌வும் இல்லை அவ‌ர்க‌ள் கூட‌ அண்ண‌ன்  சீமான் கைகுலுக்க‌வும் இல்லை /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு சொறில‌ங்காவில் ந‌ட‌க்கும் அர‌சிய‌லை புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் எட்டியும் பார்ப்ப‌து இல்லை / 

யாழுக்கை வ‌ந்து முர‌ட்டு த‌ன‌மாய் இர‌ண்டு ப‌திவு போட்ட‌ உட‌ன் நீங்க‌ள் நினைத்த‌த‌ சாதிச்சிட்டீங்க‌ள் என்று நினைக்க‌ வேண்டாம் , க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ இப்ப‌ இருக்கிற‌ இளைஞ‌ர்க‌ள் யார் ப‌க்க‌ம் நிக்கின‌ம் என்று / 

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, tulpen said:

நீங்கள் சொல்வது தர்க்கரீதியாக தவறு.

மேற்கு வங்கத்தின் சித்தார்த்த சங்கர ராஜின் பேரழுத்தத்தினால் தான் இந்திரா காந்தி இந்திய ராணுவத்தினை கிழக்கு பாகிஸ்தானுள் அனுப்பினார்.

1520ல் யாழ்பாணமும், 1529ல் தமிழகமும் அந்நியர்களிடம் வீழ்ந்தது. இருபக்கமும் இன்னமும் எழவில்லை, எழமுடியவில்லை.

தமிழகம் எழுந்து தனது காலில் நின்றால், அதுவே போதும்.

சீமான் தமிகத்தினை மீட்டாலே போதும். ஏனையவை தானே நடக்கும்.

இப்போது சீமான் தமிழகத்தினை மீட்க்கும் முயல்வுகளுக்கு கை கொடுக்கமுடியாவிடின், தார்மீக ஆதரவினை கொடுக்க வேண்டும்.

தான் போக வழி இல்லாத மூன்சூறு, ஈழம் என்ற விளக்குமாறை இப்போது காவும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

எதிர்பார்ப்பினை ஒரு பக்கம் வைத்து, தமிழனாக, சீமானுக்கு ஆதரவு தருவோம். உங்களது இந்த கருத்தினை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

  • நம்பிக்கை தமிழக மக்களுக்கு தான் வர வேண்டும். அங்கு ஆட்சிக்கு அவரை அந்த மக்கள் தெரிவு செய்தால்  அங்கு நிர்வாகத்தை நன்றாக கவனிக்கட்டும். 

அடுத்த இரு கருத்துக்களும் இன்றய நிலையில் யதார்த்தம் தான்.

ஆனாலும், சூரியன் மறையாத சாம்ராஜ்யத்தினை, கீரிடத்தில் இருந்த முத்து, இந்தியாவினை அசைத்தது... காந்தியின் உண்ணாவிரதம் இல்லை. ஆஸ்திரியாவில் பிறந்து, ஜெர்மனியில் குடியேறிய ஹிட்லர்.

ஆகவே ஒரே நாளில் எதுவும், எங்கோ மாறலாம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

நீங்கள் சொல்வது தர்க்கரீதியாக தவறு.

மேற்கு வங்கத்தின் சித்தார்த்த சங்கர ராஜின் பேரழுத்தத்தினால் தான் இந்திரா காந்தி இந்திய ராணுவத்தினை கிழக்கு பாகிஸ்தானுள் அனுப்பினார்.

1520ல் யாழ்பாணமும், 1529ல் தமிழகமும் அந்நியர்களிடம் வீழ்ந்தது. இருபக்கமும் இன்னமும் எழவில்லை, எழமுடியவில்லை.

தமிழகம் எழுந்து தனது காலில் நின்றால், அதுவே போதும்.

சீமான் தமிகத்தினை மீட்டாலே போதும். ஏனையவை தானே நடக்கும்.

இப்போது சீமான் தமிழகத்தினை மீட்க்கும் முயல்வுகளுக்கு கை கொடுக்கமுடியாவிடின், தார்மீக ஆதரவினை கொடுக்க வேண்டும்.

தான் போக வழி இல்லாத மூன்சூறு, ஈழம் என்ற விளக்குமாறை இப்போது கவும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

எதிர்பார்ப்பினை ஒரு பக்கம் வைத்து, தமிழனாக, சீமானுக்கு ஆதரவு தருவோம். 

ஆமாம் நாதமுனி, தமிழனாக சீமனுக்கு என் ஆதரவுகள், மலரட்டும் தமிழ்ஆட்சி தமிழ் நாட்டில், ஈழத்தில் தானாக மலரும்

3 minutes ago, பையன்26 said:

சீமானால் ஒன்றும் வெட்டி புடுங்க‌ முடியாது என்று தெரிந்தால் அவ‌ர் அவ‌ர‌து ஆர‌ம்ப‌ தொழில‌ செய்ய‌ தொட‌ங்கி இருப்பாரே /

இந்த‌ 11வ‌ருட‌த்தில் நீங்க‌ள் ஈழ‌த்துக்காக‌ என்ன‌த்த‌ வெட்டி புடுங்கி நீங்க‌ள் அதை முத‌ல் சொல்லுங்கோ , 

எம் பிர‌ச்ச‌னையை இன‌ அழிப்பை த‌மிழ‌க‌ ம‌க்க‌ளிட‌ம் எடுத்து சொன்ன‌தே அண்ண‌ன் சீமான் தான் /

எம் இன‌த்தை அழித்த‌வ‌ங்க‌ளை க‌ட்டி பிடிக்க‌வும் இல்லை அவ‌ர்க‌ள் கூட‌ அண்ண‌ன்  சீமான் கைகுலுக்க‌வும் இல்லை /

2009ம் ஆண்டுக்கு பிற‌க்கு சொறில‌ங்காவில் ந‌ட‌க்கும் அர‌சிய‌லை புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் எட்டியும் பார்ப்ப‌து இல்லை / 

யாழுக்கை வ‌ந்து முர‌ட்டு த‌ன‌மாய் இர‌ண்டு ப‌திவு போட்ட‌ உட‌ன் நீங்க‌ள் நினைத்த‌த‌ சாதிச்சிட்டீங்க‌ள் என்று நினைக்க‌ வேண்டாம் , க‌ண்ண‌ திற‌ந்து போட்டு பாருங்கோ இப்ப‌ இருக்கிற‌ இளைஞ‌ர்க‌ள் யார் ப‌க்க‌ம் நிக்கின‌ம் என்று / 

பையன் ஈழத்திற்காக  எதையாவது சாதிக்கும் வலு 11 வருடங்களுக்கு முன்பே புலிகளிடம் மட்டும்  இருந்தது.அப்போது எம்மால் இயன்றதை எல்லா மக்களைப்போல நாமும் செய்தோம்.  விடுதலைப்புலிகளை முற்றாக நம்பினோம்.  சாதிக்க கூடிய வலுவுடன் இருந்தவர்களே தமது  தவறான அரசியலால் அதை கோட்டை விட்ட பிறகு என்னிடம் இந்த கேளவியை கேட்கிறீர்களே! 2009 ன் முன்னர் சுவிஸ் வாழ் தமிழர் நாம் என்ன உதவிகளைச் செய்தோம் என்பதை இப்போது சொல்லி என்ன பிரயோசனம். யாழுக்கை இல்லை யாழ்பாணத்திற்கு சென்று சாதாரண மக்களிடம் சீமானைப்பற்றிச்  சொல்லிப் பாருங்கள் அந்த மக்களின் நக்கல் சிரிப்பை காண முடியும். ஏனெனில் தாயகத்தில் வாழும் தமது பட்டறிவால் அரசியலில் தெளிவாக உள்ளனர். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, tulpen said:

உங்கள் விரக்தி புரிகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களுடன் நானும் பேசி இருக்கிறேன்.

இன்று நேற்று அல்ல. பல்லாண்டு கால விரக்தி... 1520ல் இருந்து இரத்தத்தில் ஊறிய விரக்தி.

புலிகள் என்னும் மாபெரும் சக்தியாலேயே முடியாமல் போனதே என்னும் விரக்தி.

அதே நேரம் சீமானுக்கு பேராதரவு இல்லாமலும் இல்லை.

இருந்தாலும், புலிகள் தோல்விக்கு புறக்காரணிகள் பல. சில புலிகளே உருவாக்கியவை.

உதாரணமாக, நீங்கள் வேறு திரியில் பதிந்த மகிந்த வெற்றி.

உன்னிப்பாக தமிழக அரசியலை கவனித்தால், இலங்கை அரசியல் வரலாறுடன் பார்த்தால், உங்களுக்கு ஒரு விடயம் புலப்படும்.

பண்டாரநாயக்கா, ஜெயவர்த்தனே, சிறிமா இன்று மகிந்த ஆகியோரின் வெற்றிக்கு காரணம், இனவாதம்... அதே போல மோடி வெற்றிக்கு காரணம் மதவாதம்.

சீமானின் அரசியலும் ஒருவகையில் இனவாதம் தான். அதுதான், கோசன், நிழலி போன்றோர் சொல்வது. ஆனால் அது எடுபடும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

பையன் ஈழத்திற்காக  எதையாவது சாதிக்கும் வலு 11 வருடங்களுக்கு முன்பே புலிகளிடம் மட்டும்  இருந்தது.அப்போது எம்மால் இயன்றதை எல்லா மக்களைப்போல நாமும் செய்தோம்.  விடுதலைப்புலிகளை முற்றாக நம்பினோம்.  சாதிக்க கூடிய வலுவுடன் இருந்தவர்களே தமது  தவறான அரசியலால் அதை கோட்டை விட்ட பிறகு என்னிடம் இந்த கேளவியை கேட்கிறீர்களே! 2009 ன் முன்னர் சுவிஸ் வாழ் தமிழர் நாம் என்ன உதவிகளைச் செய்தோம் என்பதை இப்போது சொல்லி என்ன பிரயோசனம். யாழுக்கை இல்லை யாழ்பாணத்திற்கு சென்று சாதாரண மக்களிடம் சீமானைப்பற்றிச்  சொல்லிப் பாருங்கள் அந்த மக்களின் நக்கல் சிரிப்பை காண முடியும். ஏனெனில் தாயகத்தில் வாழும் தமது பட்டறிவால் அரசியலில் தெளிவாக உள்ளனர். 

ஒரு சில‌ உற‌வுக‌ள் சொன்ன‌த‌ வைச்சு ஒட்டு மொத்த‌ யாழ்பாண‌ உற‌வுக‌ள் சீமானை ப‌ற்றி சிரித்தார்க‌ள் என்று சொல்லுவ‌து ந‌ம்பும் ப‌டியாய் இல்லை ,

ஏன் யாழ்பாண‌த்தில் போரால் பாதிக்க‌ ப‌ட்ட‌ ம‌க்க‌ள் என‌க்கு முன்னால் த‌லைவ‌ரை கெட்ட‌ வார்தையால் பேசினார்க‌ள் , அதுக்கா ஒட்டு மொத்த‌ யாழ்பாண‌த்து ம‌க்க‌ளும் பிர‌பாக‌ர‌னுக்கு எதிரான‌ ம‌க்க‌ள் என்று ஆகிவிடுமா /

சிரிப்பையே பொழுது போக்காக‌ கொண்ட‌வ‌ர்க‌ள் சிரிக்க‌ தான் செய்வின‌ம் / 

போராட்ட‌த்தில் பிள்ளைக‌ளை இழ‌ந்த‌ பெற்றோர்க‌ளை ச‌ந்திச்சு  க‌தைச்சு பாருங்கோ அவை என்ன‌ சொல்லுகின‌ம் என்று 🙏💪

 எம்ம‌வ‌ர்க‌ள் போச்சு வார்த்தையில் விட்ட‌ த‌வ‌றுட‌ன் ஒத்து போகிறேன் /
ஆனால் அவ‌ர்க‌ள் சிந்தின‌ வேர்வை தியாக‌ங்க‌ளை ம‌ற்ற‌வ‌ர்க‌ள் கொச்சை ப‌டுத்துவ‌தை வேடிக்கை பார்க்க‌ முடியாது /

என‌து பார்வையில் புல‌ம் பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் இளைஞ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமான் பின்னால் நிக்கின‌ம் , 

5 minutes ago, பையன்26 said:

என‌து பார்வையில் புல‌ம் பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் இளைஞ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமான் பின்னால் நிக்கின‌ம் , 

ஒரு சிறு திருத்தம்

“ எனது பார்வையில் உள்ள சில இளைஞர்கள் சீமானின் பின்னால் நிற்கினம்”   

மற்றய இளைஞர்கள்  படித்து  முன்னேறி  உள்ளனர். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, tulpen said:

ஒரு சிறு திருத்தம்

“ எனது பார்வையில் உள்ள சில இளைஞர்கள் சீமானின் பின்னால் நிற்கினம்”   

மற்றய இளைஞர்கள்  படித்து  முன்னேறி  உள்ளனர். 

உங்கண்ட கதை பிழை கண்டியளே....

அப்ப.... நாங்கள் உங்களை மாதிரியே  படிச்சு முன்னேற வேண்டும் எண்டு சொல்லுறியளோ? 😎

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

ஒரு சிறு திருத்தம்

“ எனது பார்வையில் உள்ள சில இளைஞர்கள் சீமானின் பின்னால் நிற்கினம்”   

மற்றவர்கள் படித்து  முன்னேறி  உள்ளனர். 

புல‌ம்பெய‌ர் நாட்டில் பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கு எம் போராட்ட‌ம் ப‌ற்றி பெரிய‌ புரித‌ல் இல்லை , இது நித‌ர்ச‌ உண்மையும் கூட‌ , நான் சொல்ல‌ வ‌ந்த‌து ஈழ‌த்தில் பிற‌ந்து புல‌ம்பெய‌ர் நாட்டில் வ‌சிக்கும் இளைஞ‌ர் கூட்ட‌த்தை /

இங்கை பிற‌ந்த‌ பிள்ளைக‌ளுக்கும் சீமான் என்றால் யார் என்று தெரியும் , அவ‌ர் முன்னொடுக்கும் அர‌சிய‌ல் ப‌ற்றி தெரிய‌ வாய்ப்பு இல்ல‌ ,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.