Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனத்துக்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டமே இரணைமடு குடிநீர்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனத்துக்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டமே இரணைமடு குடிநீர்; சிறிதரன்.!

1596256568_br%20copy.jpg

"இனத்துக்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் இரணைமடு குடிநீர்த் திட்டம்."

- இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சி.சிறிதரன் தெரிவித்தார்.

பூநகரி, முக்கொம்பன் பகுதியில் இன்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது:-

"யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து யார் எங்கு குடியேறினார்கள் என்று அனைவருக்கும் தெரியும். 1901ஆம் ஆண்டு இரண்டு மடுக்களாக இருந்ததை இணைத்து இரணைமடுவாக ஆங்கிலேயர்கள் ஒரு குளத்தைக் கட்டினார்கள். குளம் உருவாக்கப்பட்ட பிற்பாடு அந்தக் குளத்தைச் சூழ மக்கள் அந்தத் தண்ணீரை நம்பி குடியேறினார்கள். யாழ்ப்பாணத்திலும் ஆங்கில மொழி மூலம் படித்த எட்டாம் வகுப்புக்கு மேல் சித்தி பெற்றவர்களைக் காணி கொடுத்து அங்கே குடியேற்றினார்கள். அந்தக் குடியேற்றத் திட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பல ஊர்களில் இருந்தவர்களும் அங்கு குடியேற்றப்பட்டார்கள். அதனைவிட 1956,1983ஆம் ஆண்டு தென்பகுதியில் ஏற்பட்ட வன்முறைகளாலும் பெரும்பகுதியான மக்கள் அந்த மண்ணிலே வந்து குடியேறினார்கள்.

இன்றைக்கு மலையகப் பகுதிகளில் இருந்த பல மக்கள் அங்கு குடியேறி வாழ்கின்றார்கள். இவ்வாறு காலத்துக்குக் காலம் விவசாயம் செய்து கொண்டு வருகின்றபோது இப்போது 42 ஆயிரம் ஏக்கர் வயல்கள் அக்குளத்துக்குக் கீழ் விவசாயம் செய்யக் கூடிய நிலம் உள்ளது.

42 ஆயிரம் ஏக்கர் வயல் நிலத்தில் 20 ஆயிரம் ஏக்கர் வயல் நிலத்துக்கு மட்டுமே நீர் பாய்ச்சக் கூடிய வாய்க்கால்கள் உண்டு. மிகுதி 22 ஆயிரம் ஏக்கர்களும் மானவாரி நிலங்கள். வாய்க்கால்கள் உள்ள 20 ஆயிரம் ஏக்கர் வயல்களில் ஆகக் கூட 15 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே சிறுபோகம் செய்யக் கூடியதாக உள்ளது. இது புனரமைப்பு செய்வதற்கு முதல் 7 ஆயிரம் அல்லது 8 ஆயிரம் ஏக்கர்களாக இருந்தன. அதிலும் கடந்த வருடம் 15 ஆயிரம் ஏக்கர் விதைத்து இறுதி நேரம் தண்ணீர் இல்லாமல் குளத்தில் பக்கோ போட்டு வெட்டித்தான் தண்ணீர் எடுத்தார்கள். குடிக்கவும் தண்ணீர் வைத்திருக்கவில்லை. குளத்தில் கடைசி 10 அடி தண்ணீர் வைத்திருக்க வேண்டும் என்கின்ற விதி உண்டு. காரணம் மாடுகள், உயிரினங்கள் குடிப்பதற்காக அதனையும் தாண்டி கடந்த முறை தண்ணீரை வெட்டி எடுத்தார்கள்.

இம்முறை சித்திரையில் சிறு மாரி பொழிந்த படியால் இப் பிரச்சினை தோன்றவில்லை. அதனால் குளத்தில் சிறியளவு தண்ணீர் உள்ளது. மற்றைய உயிரினங்களுக்காகக் குடிக்கத் தண்ணீர் தர மாட்டோம் என்று கிளிநொச்சியைச் சார்ந்த யாருமே தெரிவித்தது கிடையாது.

அங்குள்ள விவசாயிகள் கேட்பது வயல் நிலங்களுக்கான உற்பத்தி பிரச்சினைகளை முதலிலே தீருங்கள் என்று. அதற்கு ஏதாவது ஒரு முடிவைச் சொல்லுங்கள். 42 ஆயிரம் ஏக்கரில் 20 ஆயிரம் ஏக்கருக்குத்தான் தண்ணீர் பாய்ச்சக் கூடியது. அதிலும் 15 ஆயிரம் ஏக்கர்தான் சிறுபோகம் செய்யலாம். இவ்வாறு நிலைமை உள்ளது. அதற்கு ஒரு மாற்றத்தைச் செய்து தாருங்கள் என்று கேட்டால் அதற்கு விடை இல்லை.

போர் முடிந்த பின் வன்னிப் பகுதியில் 4 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் எவ்வாறு உயிர் வாழ்ந்தார்கள்? என்று கோட்டாபய ஆராய்ந்தார். பொருளாதாரத் தடை, எரிபொருட்கள் இல்லை, உணவு இல்லை, எந்தவிதமான பொருட்களும் வரவில்லை, இவ்வாறான நிலைமையில் அந்த மக்கள் எவ்வாறு உயிர் வாழ்ந்தார்கள் என்று கோட்டாபய தரப்பினர் ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்விலே அவர்கள் ஒன்றைப் புரிந்துகொண்டார்கள். அங்கு இருந்த குளங்களும் அந்தக் குளங்களைச் சூழ இருந்த பயிர்ச்செய்கைகளும் மக்களையும் போராட்டத்தையும் பாதுகாத்திருக்கின்றது என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.

இவற்றை இல்லாது ஒழிக்க என்ன வழி? யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்லுகின்ற ஒரு திட்டத்தை அவர்கள் உருவாக்கினார்கள். யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் இருப்பவர்கள் கணிசமானவர்கள் குடும்ப உறவுகள்தான். அவர்களை அடிபட வைக்க இதனை ஒரு பெரிய திட்டமாகக் கொண்டுவந்தார்கள். பின்னர் இரணைமடுவில் இருந்து குடிக்கத் தண்ணீர் தருகின்றார்கள் இல்லை என்று மாபெரும் பிரதேசவாதத்தைக் கோட்டாபய தரப்பினர் தரப்பினர் கொண்டு வந்தார்கள்.

அப்போதுதான் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பல விரிவுரையாளர்கள் எங்களை அழைத்துப் பேசி இருந்தர்கள். எங்களுக்குப் பல விளக்கங்களைத் தந்திருந்தார்கள். இந்த அறிவைத் தந்ததே யாழ்ப்பாணம் பல்கழைக்கழகம்தான். அதுவரை எனக்குக்கூட அவ்வளவு விளக்கம் இருக்கவில்லை. விவசாயிகள் தங்களது கருத்துக்களை முன்வைத்தார்கள்.

உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் கிளிநொச்சியிலுள்ள பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை என்று? மாரிகாலத்திலும் கோடை காலத்திலும் இப்போதும் நீர்த்தாங்கிகளிலேயே நீர் விநியோகிக்கப்படுகின்றது. அங்குகூட இரணைமடுக் குளத்தில் இருந்து நீர் விநியோகிக்கப்படுவதில்லை. கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கல்லாறு போன்ற பகுதிகளில் குடிக்கத் தண்ணீர் இல்லை.

கிளிநொச்சியில் குடிக்கத் தண்ணீர் இல்லை. விவசாயம் செய்யத் தண்ணீர் இல்லை. இந்தநிலையில் யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டால் இங்கே ஒரு விரோதத்தைக் கட்டி வளர்க்கலாம் என்று அரசு திட்டமிட்டது. இதனால் மக்கள் சிலரிடம் இந்தக் கேள்வி இருக்கின்றது.

நான்கூட யாருக்கும் தண்ணீர் தரமாட்டேன் என்று சொல்லவில்லை. நியாயத்தைச் சொன்னேன். திட்டமிட்ட வகையில் இனத்துக்குள் பிளவுகள் வரக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் இரணைமடு குடிநீர்த் திட்டம்" - என்றார்.

http://aruvi.com/article/tam/2020/08/01/15088/

  • கருத்துக்கள உறவுகள்

லூசுப் பய மவ,

தண்ணீர் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அதைச் சரியான முறையில் பகிர்வதுதான் தர்மம். மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் தண்ணீர் வேண்டும் எனத் தெரிந்திருக்கும் சிறீதரனுக்கு மனிதருக்கு குடினீர் தேவை என்பது தெரியாமல் போனது காலத்தின் துயரம். 

விவசாயத்திற்குப் போதிய நீர் தேவை என்பது உண்மை. மனிதருக்கும் குடி நீர் தேவை என்பதும் உண்மை. தேவையை எப்படிப் பூர்த்தி செய்யலாம் என்பதுதான் ஞானம் உள்ளவனின் சிந்தனையாயிருக்க வேண்டுமேயொழிய இடக்குமாறாக யோசித்து பிரச்சனையை தீர்க்க விடாமல் இழுத்தடிப்பதாக இருக்கக் கூடாது. 

மகாவலி வந்தால் சிங்களக் குடியேற்றம் வரும். யாழ்ப்பாணத்திற்குக் குடி நீர் வழங்கினால் விவசாயம் செய்ய போதிய நீர் இருக்காது என்றால் அது எப்படி நியாயமாக இருக்க முடியும் ☹️

முதலில் வடக்கு கிழக்கில்(ரதி அக்கா ஓடி வந்து கிழக்கைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறப்போகின்றா 😀) நிலத்தடி நீரைப் பாதுகாக்க இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகள் என்ன நடவடிக்கையை எடுத்தார்கள் ? 

தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான். ☹️

(இவர் ஒரு ஆசிரியர், இவரிடம் படித்த மாணவர்களுக்கு எப்படிப் பரந்த சிந்தனை வரும் என எதிர்பார்க்கலாம் 😜)

இவர் தமிழ்நாடு கர்நாடகா பாணியில் தண்ணீர் அரசியல் பண்ணுபவர். அதே போல் வன்னியை தனி மாகாணமாக்க முயல்பவர் என நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அங்குள்ள விவசாயிகள் கேட்பது வயல் நிலங்களுக்கான உற்பத்தி பிரச்சினைகளை முதலிலே தீருங்கள் என்று. அதற்கு ஏதாவது ஒரு முடிவைச் சொல்லுங்கள். 42 ஆயிரம் ஏக்கரில் 20 ஆயிரம் ஏக்கருக்குத்தான் தண்ணீர் பாய்ச்சக் கூடியது. அதிலும் 15 ஆயிரம் ஏக்கர்தான் சிறுபோகம் செய்யலாம். இவ்வாறு நிலைமை உள்ளது. அதற்கு ஒரு மாற்றத்தைச் செய்து தாருங்கள் என்று கேட்டால் அதற்கு விடை இல்லை.

மகாவலி நதியை திருப்பி இரணைமடு குளத்தை நிறைத்தபின் கடலுக்குள் விடும் திட்டம் டி.எஸ். சேனநாயக்க காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. சிங்கவர்கள் வந்து குடியேறிவிடுவார்கள் என்று தமிழர்கள் எதிர்த்ததாலும், பின்னர் உள்நாட்டு போராலும் இந்த திட்டம் பிற்போடப்பட்டு வந்திருக்கிறது. தேர்தலுக்கு பின் கோத்தபாயவின் ஆதரவுடன் சுமந்திரனும் அங்கஜனும் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். 20,000 ஏக்கர் வயல்களுக்கும் வாய்க்கால் வெட்டுவதை சிறீதரனுக்கும் அவரது அடியாட்களுக்கும் புனர்வாழ்வு பயிற்சியின் அங்கமாக வழங்குமாறு கோத்தபாயவை அங்கஜன் கேட்டுக்கொள்ள வேண்டும்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

முதலில் வடக்கு கிழக்கில்(ரதி அக்கா ஓடி வந்து கிழக்கைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறப்போகின்றா 😀) நிலத்தடி நீரைப் பாதுகாக்க இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகள் என்ன நடவடிக்கையை எடுத்தார்கள் ? 

வடக்கு கிழக்கு பிரிக்கும் போதே பாரிய பிளவு ஏற்பட்டுவிட்டது போல எண்ணத்தோன்றியது காலப்போக்கில் அதை அரசியல் வாதிகள் கவனத்தில் கொள்ளாமல் போனது முற்றிலுமான பிளவை உண்டாக்கி விட்டது நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதுதான் நிசம் 😜

  • கருத்துக்கள உறவுகள்

இவரே  இப்பத்தான்  முழிக்கிறார்

ஆனால்  முதலில்  தனக்கே  புரியவில்லை  என்பது

தான்  இது  சம்பந்தமாக  செய்த  குளறுபடிகளை  மறைக்க மட்டுமே...

இதற்காக  சரி

இவர்களது  வாயிலிருந்து ஒரு சில  உண்மைகள்  வருவதற்காகவாவது

தேர்தல் அடிக்கடி வரவேணடும்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வடக்கு கிழக்கு பிரிக்கும் போதே பாரிய பிளவு ஏற்பட்டுவிட்டது போல எண்ணத்தோன்றியது காலப்போக்கில் அதை அரசியல் வாதிகள் கவனத்தில் கொள்ளாமல் போனது முற்றிலுமான பிளவை உண்டாக்கி விட்டது நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதுதான் நிசம் 😜

ஐயா, 

நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருடன் கூட்டுச் சேர வேண்டும் அல்லது  உங்கள் விருப்பத்தை நீங்கள் தீர்மானிப்பதை நான் குறை சொல்ல முடியாது. அது உங்கள் உரிமை. 

நீங்கள் முரளீதரனுக்கோ அல்லது சந்திரகந்தனுக்கோ அல்லது கிஸ்புல்லாவுக்கோ வாக்களியுங்கள். முசிலும்களுடன் சேர்ந்து வாளுங்கள் அல்லது சிங்களத்துடன் ஒன்றாகக் கலந்து ஐக்கியமாகுங்கள். அதையிட்டுக் கதைக்க எனக்கு உரிமை இல்லை என்று நீங்கள் கூறுங்கள். அதை ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் தயவு செய்து எங்களின் இன்றைய நிலைக்கும் நாளைய நிலைக்கும் கப்பித்தான்தான் காரணம் என்று கூறாதீர்கள் என்று உங்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
On 1/8/2020 at 17:24, Kapithan said:

உங்களை குற்றம் சொல்லவில்லையே

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

உங்களை குற்றம் சொல்லவில்லையே

நான் கூற விரும்பிய விடயத்தை அடையாளம் கண்டால் சரிதான் 😀

On 1/8/2020 at 11:54, Kapithan said:

லூசுப் பய மவ,

தண்ணீர் எல்லா உயிர்களுக்கும் பொதுவானது. அதைச் சரியான முறையில் பகிர்வதுதான் தர்மம். மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் தண்ணீர் வேண்டும் எனத் தெரிந்திருக்கும் சிறீதரனுக்கு மனிதருக்கு குடினீர் தேவை என்பது தெரியாமல் போனது காலத்தின் துயரம். 

விவசாயத்திற்குப் போதிய நீர் தேவை என்பது உண்மை. மனிதருக்கும் குடி நீர் தேவை என்பதும் உண்மை. தேவையை எப்படிப் பூர்த்தி செய்யலாம் என்பதுதான் ஞானம் உள்ளவனின் சிந்தனையாயிருக்க வேண்டுமேயொழிய இடக்குமாறாக யோசித்து பிரச்சனையை தீர்க்க விடாமல் இழுத்தடிப்பதாக இருக்கக் கூடாது. 

மகாவலி வந்தால் சிங்களக் குடியேற்றம் வரும். யாழ்ப்பாணத்திற்குக் குடி நீர் வழங்கினால் விவசாயம் செய்ய போதிய நீர் இருக்காது என்றால் அது எப்படி நியாயமாக இருக்க முடியும் ☹️

முதலில் வடக்கு கிழக்கில்(ரதி அக்கா ஓடி வந்து கிழக்கைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறப்போகின்றா 😀) நிலத்தடி நீரைப் பாதுகாக்க இந்த பாழாய்ப்போன அரசியல்வாதிகள் என்ன நடவடிக்கையை எடுத்தார்கள் ? 

தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான். ☹️

(இவர் ஒரு ஆசிரியர், இவரிடம் படித்த மாணவர்களுக்கு எப்படிப் பரந்த சிந்தனை வரும் என எதிர்பார்க்கலாம் 😜)

இங்கு நான் ஒன்றை குறிப்பிட விரும்புகின்றேன்.  இந்த இரணைமடுக்குளம் இப்போதைக்கு மாகாண அரசின்கீழ் இருக்கின்றது. அதன் கொள்ளளவை அதிகரித்து மேலதிக நீரைத்தான் வடக்கு நோக்கி கொண்டு   செல்வதட்கு திடடமிடப்பட்ட்து. இதட்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி வழங்கி இருந்தது.

ஸ்ரீதரன்தான் இதனை கடுமையாக எதிர்த்தவர். பின்னர் விக்கியும் இதே நிலையை எடுத்தார். ஸ்ரீதரனுக்கு நிறைய வேளாண்மை காணிகள் இருப்பதால் இதனை கடுமையாக எதிர்த்தார்.

இப்போது நிலைமை வேற்கை விட்ட்து. மத்திய அரசு மகாவலி நீரை திசை திருப்பும் வேலையே தொடங்கிவிட்ட்து. அதாவது மகாவலி நீரை இரணைமடு குளத்துக்கு கொண்டு வந்து யாழுக்கு நீர்விநியோகம் செய்யப்பளிக்கிறார்கள்.

இங்குள்ள ஒரு முக்கியமான காரணியை பார்க்க வேண்டும். மகாவலி நீர் இந்த குளத்துக்கு வந்தவுடன் இரணைமடு குளம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும். அதன் பின்னர் சிங்கள குடியேற்றம் தாராளமாக நடைபெறும். இதை எல்லாம் அறியாத மடயர்கள்தான் எமது காவலர்களாக இருக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.