Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-720x450.jpg

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு!

அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்களுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.  இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கவுள்ளார்.

இந்நிலையில்  அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக  ராமஜென்ம பூமி அறக்கட்டளை விடுத்துள்ள அறிக்கையில்  கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருப்பதால் 175 பிரமுகர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

90 வயதை கடந்த பிரமுகர்கள்,  அயோத்தியை அடைவது சாத்தியம் இல்லை. சதுர்மாக்கள்,  முனிவர்கள்,  சங்கராச்சாரியார்,  துறவிகள் ராமர் கோவில் கட்டுமானத்தில் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளது.

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜைக்காக நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீரும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/ராமர்-கோவில்-அடிக்கல்-நா-2/

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எங்கள் மறவன் புலவு சச்சியர் உள்ளடங்குகிறாரா 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

இதில் எங்கள் மறவன் புலவு சச்சியர் உள்ளடங்குகிறாரா 😂

மறவன் புலவு.. சச்சிதானந்தம்  அவர்களுக்கு, 
ஊரில் நிறைய, தேர்தல் வேலைகள் இருப்பதால்.. 
அவர் கலந்து கொள்ள மாட்டார் என நினைக்கின்றேன். :grin:

116267772_3244826878944744_4978120601508589230_o.jpg?_nc_cat=111&_nc_sid=8bfeb9&_nc_ohc=lqT8zbAJwoUAX_uVJmR&_nc_ht=scontent-frx5-1.xx&oh=bd1c262605a9e18d6eaec44d439e238a&oe=5F4E970C

//கோயில் கட்டுற சம்பந்தமா, ஜோஸியக்காரன் என்னமோ பரிகாரம் இல்லாத ஒரு வசமான குண்ட தூக்கி போட்டுருக்கான். 🤔🤔🤔
அதனாலதான் குடும்பம், புள்ளகுட்டி உள்ளவனெல்லாம் ஜகா வாங்குறானுக..//
 
ராமர் கோவில்,  அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டால்... குடும்பத்துக்கு தீங்கு வரும் என்று,  யாரோ ஒரு சாத்திரி சொல்லி விட்டதால், பல ஆட்கள்... மெதுவாக "காய் வெட்டு" கிறார்களாம்.  :grin:
 
 
42 minutes ago, Kapithan said:

இதில் எங்கள் மறவன் புலவு சச்சியர் உள்ளடங்குகிறாரா 😂

ஆம் நிச்சயமாக உள்ளடங்குவார்.  பட்டாபிஷேகத்திற்கு அரியணை தாங்க.

அரியணை அனுமன் தாங்க,
    அங்கதன் உடைவாள் ஏந்த,
பரதன் வெண்குடை கவிக்க,
    இருவரும் கவரி வீச
விரைசெறி குழலி ஓங்க
    வெண்ணெயூர்ச் சடையன் தங்கள்
மரபுேளார் கொடுக்க வாங்கி
    வசிட்டனே புனைந்தான் மௌலி

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 175 பிரமுகர்களுக்கு அழைப்பு!

இந்த நாடு திருந்த வாய்ப்பே இல்லை. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

இந்த நாடு திருந்த வாய்ப்பே இல்லை. :grin:

இலங்கையும் அந்த வரிசையில் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை (பிக்குகளின் நியமனம்) ☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, Kapithan said:

இலங்கையும் அந்த வரிசையில் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை (பிக்குகளின் நியமனம்) ☹️

பிக்குகள் இப்பவே ஒரு மார்க்கமாய்த்தானே திரியினம்.நான் நினைக்கிறன் லெக்சன் முடிய நிறைய கூத்துக்கள் பார்க்கலாம். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, குமாரசாமி said:

பிக்குகள் இப்பவே ஒரு மார்க்கமாய்த்தானே திரியினம்.நான் நினைக்கிறன் லெக்சன் முடிய நிறைய கூத்துக்கள் பார்க்கலாம். :grin:

நிச்சயமாக. 😀

  • கருத்துக்கள உறவுகள்

விழாக்கோலம் பூண்டது அயோத்தி; ராமர் கோவிலுக்கு இன்று பூமிபூஜை: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

விழாக்கோலம் பூண்டது அயோத்தி; ராமர் கோவிலுக்கு இன்று பூமிபூஜை:  பிரதமர் மோடி பங்கேற்கிறார்

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். இதனால் அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பதிவு: ஆகஸ்ட் 05,  2020 05:56 AM
அயோத்தி,

ராமபிரான் பிறந்த அயோத்தியில் அவருக்கு கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் நீண்டநாள் ஆசையாகும்.

அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவதற்காக விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ். எஸ். போன்ற அமைப்புகள் நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொண்டு வந்தன. ஆனால் அங்கு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தின் உரிமை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்ததால் இந்த முயற்சிகள் நிறைவேறாமல் இருந்தன.

பல்லாண்டுகளாக நீடித்து வந்த இந்த சட்டப்போராட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முடிவுக்கு வந்தது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளித்த சுப்ரீம் கோர்ட்டு, இதற்காக அறக்கட்டளை ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது.

எனவே ‘ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை நிறுவியது. அயோத்தி ராமஜென்மபூமியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டுவது என முடிவு செய்து, இந்த அறக்கட்டளை சார்பில் கோவில் கட்டுமான பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதன்படி ஆகஸ்டு 5-ந்தேதி (இன்று) ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் ஏராளமான தலைவர்கள் மற்றும் பிரபலங்களை பங்கேற்க வைப்பது என தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தநிலையில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டது. எனவே மிக மிக முக்கிய பிரபலங்கள், சாமியார்கள் என 175 பேருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. மேலும் விழாவுக்கான ஏற்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இதன் தொடர்ச்சியாக ராமர் கோவில் பூமி பூஜைக்கான சடங்குகள் ராமஜென்மபூமியில் நேற்று முன்தினம் காலையில் தொடங்கின. தொடர்ந்து நடந்து வரும் இந்த சடங்குகளின் நிறைவாக இன்று (புதன்கிழமை) பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடக்கிறது.

இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை 9.35 மணியளவில் விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் இருந்து லக்னோ கிளம்புகிறார். அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி கிளம்பும் அவர் 11.30 மணியளவில் அங்குள்ள சாகேத் கல்லூரி மைதானத்தில் இறங்குகிறார்.

பின்னர் நேராக அனுமன்ஹார்கி கோவிலுக்கு செல்லும் அவர், சுமார் 10 நிமிடங்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அங்கிருந்து 12 மணியளவில் ராமஜென்மபூமிக்கு சென்று அங்கு ராம்லல்லா (குழந்தை ராமர்) கோவிலில் வழிபாடு செய்கிறார். அத்துடன் அங்கு மரக்கன்று ஒன்றையும் பிரதமர் நட்டு வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து அவர் 12.30 மணியளவில் ராமர் கோவில் பூமி பூஜையில் இணைகிறார். அத்துடன் பிரமாண்ட ராமர் கோவிலுக் கான அடிக்கல்லையும் அவர் நாட்டுகிறார். பின்னர் விழாவின் நினைவாக சிறப்பு தபால் தலைகளை வெளியிட்டு அவர் சிறப்புரை நிகழ்த்துகிறார்.

சுமார் 1½ மணி நேரம் அங்கு தங்கியிருக்கும் பிரதமர் மோடி, பின்னர் மீண்டும் சாகேத் கல்லூரிக்கு திரும்புகிறார். அங்கிருந்து பிற்பகல் 2.20 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் லக்னோ திரும்புவார்.

மோடி பிரதமரான பிறகு அயோத்தியில் சாமி தரிசனம் செய்வது இதுவே முதல் முறையாகும். ஏற்கனவே தேர்தல் நேரங்களில் பலமுறை அயோத்தி சென்றிருந்தாலும் சர்ச்சைகளை தவிர்ப்பதற்காக அங்கு சாமி தரிசனம் செய்வதை தவிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்பதற்காக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், துணைத்தலைவர் பையாஜி ஜோஷி ஆகியோர் நேற்று மாலையிலேயே அயோத்தி சென்றடைந்தனர். அவர்கள் இருவரும் இன்று பிரதமருடன் விழாவில் பங்கேற்கின்றனர்.

இவர்களை தவிர மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

மேலும் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மாநில முன்னாள் முதல்-மந்திரி கல்யாண் சிங், பாபா ராம்தேவ் மற்றும் விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள், பா.ஜனதா தலைவர்கள், சாமியார்கள் என முக்கிய பிரபலங்களும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்கள்.

ராமர் கோவிலுக்கான பூமி பூஜை நடைபெறுவதையொட்டி அயோத்தி முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த நிகழ்வை அயோத்தி மக்கள் தீபாவளி போல கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். தங்கள் வீடுகளில் விளக்கேற்றியும், வண்ண விளக்குகளால் அலங்கரித்தும், வாசலில் கோலமிட்டும், இனிப்புகள் பரிமாறியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

மேலும் சரயு நதிக்கரை, நகர வீதிகள், ராமஜென்மபூமி சுற்றுவட்டாரங்கள் என மாவட்டம் முழுவதும் ராமாயண காட்சிகள், ராமபிரானின் படங்கள் சுவர்களில் வரையப்பட்டும், வீதி முழுவதும் கோலமிட்டும் அலங்கரிக்கப்பட்டு உள்ளன. இரவில் வண்ண விளக்குகளால் ஒளியேற்றியும், அகல் விளக்கேற்றியும் வருவதால் அயோத்தி முழுவதும் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது.

நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக அயோத்தி முழுவதும் மிகத்தீவிர தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஏராளமான சுகாதார அதிகாரிகள் அங்கு முகாமிட்டு உள்ளனர்.

இதைப்போல பிரதமர் மோடி மற்றும் ஏராளமான முக்கிய தலைவர்கள் பங்கேற்பதால் அயோத்தியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அயோத்தி மாவட்டம் முழுவதுமே ஏற்கனவே சீல் வைக்கப்பட்டு உள்ளது. பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பாதுகாப்பு வளையத்துக்குள் அயோத்தி கொண்டு வரப்பட்டு உள்ளது.

ராமர் கோவிலுக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டுவிழா நடைபெறுவதையொட்டி நாட்டு மக்கள் அனைவரின் கவனமும் அயோத்தியை நோக்கியே இருக்கிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த நிகழ்வை நேரில் காண இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களும் ஏங்கினர்.

ஆனால் கொரோனா தொற்றால் நேரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே ராமபக்தர்களின் இந்த ஏக்கத்தை தணிப்பதற்காக இன்றைய நிகழ்வுகளை டி.வி.க்களில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படுவதன் மூலம் பா.ஜனதாவின் மற்றுமொரு முக்கியமான தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி நீக்கப்பட்டதன் மூலம் ஏற்கனவே முக்கியமானதொரு தேர்தல் வாக்குறுதியை பா.ஜனதா நிறைவேற்றி இருந்தது.

அதன் முதலாம் ஆண்டு தினத்தில் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இதன் மூலம் இந்துக்களின் கனவும் நனவாகிறது. இந்த நிகழ்வை பல்வேறு எதிர்க்கட்சிகளும் வரவேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அலோக் குமார் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ராமர் கோவிலுக்கு இன்று பிரதமர் மோடியின் முன்னிலையில் கட்டுமானப்பணிகள் தொடங்குகிறது. அங்கு அமைய உள்ள பிரமாண்ட கோவிலின் கருவறையில் 3 ஆண்டுக்குள் பக்தர்கள் வழிபட முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/05055654/The-festival-was-held-in-Ayodhya-Bhoomi-Pooja-at-Ram.vpf

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளம் தனக்கென இராமர் கோவில் கட்ட முனைந்தால் நிலமை என்னாகும் ? 😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இந்த நாடு திருந்த வாய்ப்பே இல்லை. :grin:

⬇️ கீழே.... புது, பஞ்சாயத்து ஒண்டு... தொடங்கியிருக்கு.⬇️  :grin:

ram-temple-sambha-1596485693.jpg

//அயோத்தியில் மீசை இல்லாமல் ராமர் சிலையை வைத்தால்... என்னை போன்ற ராம பக்தர்களுக்கு பயனில்லை.. சம்பாஜி தெரிவிப்பு.
அயோத்தியில், கட்டப்பட உள்ள கோவிலில்... உள்ள ராமர் சிலைக்கு மீசை இருக்க வேண்டும் என்று, இந்துத்துவா அமைப்பின் தலைவர்... சம்பாஜி பிதே, திங்களன்று தெரிவித்தார்.//

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

0027534_janmashtami-iskcon-prasad-large_ நான் நினைக்கிறேன் இது பெங்களூர் இஸ்கான் கோவிலின் மன்னிக்கவும் சொப்பிங் காம்லெக்சின் மறுவடிவமாக இருக்கும் . ராமரை ஒரு மூலையில் வைத்துவிட்டு ராமர் பிரான்ட் புராடக்ஸ் , ஊதுபத்தி , சாம்பிராணி , ராமர் றி சொர்ட் , வில் & அம்பு ,கேடயம் ,லட்டு ,மிக்சர் காரா சேவு   எல்லாம் விற்க போகினம். .👍 மோடி ஒரு பிசினஸ் மேன்..👌

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ பாவம்கள்..😢 தமிழ் நாட்டு சனம் ரெண்டு ஓட்டாவது போட்டு விடுங்கப்பா ..👌

117244897_1905099972980235_2058272574769

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.