Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனின் விசேட பாதுகாப்பு படையினருக்கு எதிராக யாழ்.மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனிற்கான பாதுகாப்பு கடமையில் ஈடுபடுகின்ற 16 விசேட அதிரப்படையினருக்கு எதிராக யாழ்.மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டினை வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் ( இலங்கை தமிழ் அரசுக் கட்சி ) , முன்னாள் விடுதலைப்புலிகள் போராளி உறுப்பினர் தனுபன் ( தற்போது இலங்கை தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர் ) ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் முறைப்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 6 - 08- 2020 திகதி யாழ்.மத்திய கல்லூரியில் தேர்தல் வாக்கு எண்ணும் நிலையத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் வாக்கெண்ணுதலை பார்வையிடுகின்ற முகவர்களாக நியமிக்கப்பட்டு அதன் நிமித்தம் பணியில் இருந்தோம்.

மிகவும் குறைந்தளவிலான யாழ்.தேர்தல் மாவட்ட வாக்குகளை பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பான விபரங்களை அறிவிக்காமல் வேண்டுமென்று மிக நீண்ட நேரத்திற்கு இழுத்தடிப்பு செய்தமைக்காக தாங்கள் அமைதியான முறையில் அங்கு ஒன்றுகூடி எதிர்ப்பினை தெரியப்படுத்தியிருந்தோம்.

அங்கு திடீரென்று வந்த சுமந்திரனும்,அவரது பாதுகாவலர்களும் தங்களையும் , கட்சித்தலைவர் மாவை சேனாதிராசாவின் மகனையும் இன்னும் பலரையும் தாக்கினர்.

அந்த பகுதி யாழ்.மாவட்ட செயலாளரின் கட்டுப்பாட்டில் காணப்பட்டிருந்ததாகவும் , ஆனால் அவரது முடிவினை பெற்றுக்கொள்ளாது சுமந்திரனின் பாதுகாவலர்கள் இந்த ஜனநாயக விரோத செயலை தன்னிச்சையாக மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டு மேற்படி முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

https://www.tamilwin.com/politics/01/253520?ref=imp-news

  • கருத்துக்கள உறவுகள்

இதனூடாக முறைப்பாட்டாளர்கள் கூறவருவதென்ன 

4 minutes ago, Kapithan said:

இதனூடாக முறைப்பாட்டாளர்கள் கூறவருவதென்ன 

இவர்களுக்கே தெரியாது எங்கே , யாருக்கு என்னத்தை கூறுவதென்று. யாரவது மூளைசாலிகள் கொஞ்சம் ஆலோசனை சொல்லுங்கப்பா. ரொம்பதான் குழம்பி போய் இருக்கிரார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இதனூடாக முறைப்பாட்டாளர்கள் கூறவருவதென்ன 

1 hour ago, Robinson cruso said:

இவர்களுக்கே தெரியாது எங்கே , யாருக்கு என்னத்தை கூறுவதென்று. யாரவது மூளைசாலிகள் கொஞ்சம் ஆலோசனை சொல்லுங்கப்பா. ரொம்பதான் குழம்பி போய் இருக்கிரார்கள்.

நாங்கள் மூளைசாலிகள்... மன்னிக்கவும் நான் மூளைசாலி, அப்பத்தை குரங்குகளிடம் பிரித்துத் தரும்படி கொடுத்த கதை படித்துக்கொண்டிருக்கிறேன், அதுகள் இம்மியும் தவறாது சரிபாதியாகப் பிரித்துத் தருங்கள்...

முடிவு இப்படித்தான் வரும் என்ற ஒரு நம்பிக்கையில் தொடர்ந்து வாசிக்கிறேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

உண்மையாகத்தான் கேட்கிறேன். இந்த முறைப்பாடு என்ன நோக்கத்தை வைத்து கொடுக்கப்பட்டதாக எண்ணுகிறீர்கள். 🤔

தனி நபர்கள் தங்களுக்கெதிராக அரச படைகள் ஆயுதக் குழுக்கள் மேற்கொள்ளும் துன்புறுத்தல்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யும்போது முறைப்பாட்டின் பின்னால் உள்ள அச்சத்தை புரிந்துகொள்ளலாம். 

ஆனால் இது அவைகளிலிருந்து வேறுபட்டதாக உணர்கிறேன். யாராவது விளக்கம் தர முடியுமா 🤔

  • கருத்துக்கள உறவுகள்

அதாவது காவலுக்கு வந்தவர்கள் கடிக்க வெளிக்கிட்டினமாம்
 தவிர 
வேலியே பயிரை மேயுதாம் 

அதாவது சுமந்திரன் கடந்த காலங்களில் தமிழர்கள் யாரிடமிருந்து அவர்களால் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக நாம் காலகாலமாகப் போராடிணோமோ அவர்களைக்கொண்டே அடக்குமுறையச் செய்கிறாராம்.

இன்னுமொரு விடையம் தெரிகிறது அவரது சொந்த மண்ணிலேயே சுமந்திரனுக்கு பாதுகாப்பில்லை எனும் சந்தேகமாம் அதாவது தனது இனத்தையே அவர் நம்பவில்லையாம்.

அண்ணர் டக்ளசே கடந்தகாலத்திலிருந்த அதி உச்ச பாதுகாப்பை விலக்கி ஓரிரு போலீசாருடன் குடாநாட்டில் திரிகையில் ஐயா தனது சொந்த இனத்தையே அன்நியப் படைகளால் அச்சுறுத்துகிறாரம்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

இதனூடாக முறைப்பாட்டாளர்கள் கூறவருவதென்ன 

உண்மையாகவே விளங்கவில்லையா? அல்லது பழக்கதோஷத்தில் கேள்விகளை அள்ளி விடுகிறீர்களா?

முறைப்பாட்டாளர்கள் தமிழ் அரசுக்கட்சி சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டவர்கள். விருப்புவாக்குகளில் குறைந்த வாக்குகள் எடுத்தோரின் பெயர்களை அறிவிக்கவேண்டாமென்று ஏதோ ஒரு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது??

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Elugnajiru said:

அதாவது காவலுக்கு வந்தவர்கள் கடிக்க வெளிக்கிட்டினமாம்
 தவிர 
வேலியே பயிரை மேயுதாம் 

அதாவது சுமந்திரன் கடந்த காலங்களில் தமிழர்கள் யாரிடமிருந்து அவர்களால் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக நாம் காலகாலமாகப் போராடிணோமோ அவர்களைக்கொண்டே அடக்குமுறையச் செய்கிறாராம்.

இன்னுமொரு விடையம் தெரிகிறது அவரது சொந்த மண்ணிலேயே சுமந்திரனுக்கு பாதுகாப்பில்லை எனும் சந்தேகமாம் அதாவது தனது இனத்தையே அவர் நம்பவில்லையாம்.

அண்ணர் டக்ளசே கடந்தகாலத்திலிருந்த அதி உச்ச பாதுகாப்பை விலக்கி ஓரிரு போலீசாருடன் குடாநாட்டில் திரிகையில் ஐயா தனது சொந்த இனத்தையே அன்நியப் படைகளால் அச்சுறுத்துகிறாரம்.

யாழ் மத்திய கல்லூரி விடயத்தில் மற்றவர்கள் நடந்துகொண்ட விதம் சுமந்திரன் பாதுகாப்பு வேண்டி நின்றதது சரியே என்பதை தெளிவாகக் கூறுகிறது.  😤

பிரச்சாரத்திற்குப் போன இடங்களில் பொதுமக்கள் உணர்ச்சிவசப்பட்டதற்கும் , மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெற்றதற்கும் பாரிய வேறுபாடு உள்ளது. ☹️

4 hours ago, Eppothum Thamizhan said:

உண்மையாகவே விளங்கவில்லையா? அல்லது பழக்கதோஷத்தில் கேள்விகளை அள்ளி விடுகிறீர்களா?

முறைப்பாட்டாளர்கள் தமிழ் அரசுக்கட்சி சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டவர்கள். விருப்புவாக்குகளில் குறைந்த வாக்குகள் எடுத்தோரின் பெயர்களை அறிவிக்கவேண்டாமென்று ஏதோ ஒரு மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கிறது??

உங்கள் விளக்கம் தெளிவில்லாமல் இருக்கிறது. 🤔

16 hours ago, Elugnajiru said:

அதாவது காவலுக்கு வந்தவர்கள் கடிக்க வெளிக்கிட்டினமாம்
 தவிர 
வேலியே பயிரை மேயுதாம் 

அதாவது சுமந்திரன் கடந்த காலங்களில் தமிழர்கள் யாரிடமிருந்து அவர்களால் பறிக்கப்பட்ட உரிமைகளுக்காக நாம் காலகாலமாகப் போராடிணோமோ அவர்களைக்கொண்டே அடக்குமுறையச் செய்கிறாராம்.

இன்னுமொரு விடையம் தெரிகிறது அவரது சொந்த மண்ணிலேயே சுமந்திரனுக்கு பாதுகாப்பில்லை எனும் சந்தேகமாம் அதாவது தனது இனத்தையே அவர் நம்பவில்லையாம்.

அண்ணர் டக்ளசே கடந்தகாலத்திலிருந்த அதி உச்ச பாதுகாப்பை விலக்கி ஓரிரு போலீசாருடன் குடாநாட்டில் திரிகையில் ஐயா தனது சொந்த இனத்தையே அன்நியப் படைகளால் அச்சுறுத்துகிறாரம்.

ஒருவர் தனது சொந்த பாதுகாப்புக்காக பாதுகாப்பை கோருவதும் வைத்திருப்பதும் தவறில்லை. அந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஆயத்தங்கள் வைத்திருப்பது குருவி சுடுவதாட்கோ, விளையாடுவதாட்கோ  அல்ல. தேவைப்படும்போது பலத்தை பயன்படுத்துவதட்குத்தான் அவர்கள் அங்கு இருக்கிரார்கள். குழப்பக்காரர்கள் குழப்பம் விளைவிக்கும்போது சும்மா இருக்கமாட்ட்டார்கள்.

தமிழ் பகுதியோ , சிங்களப்பகுதியோ யாருக்கு பாதுகாப்பு தேவையோ அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும். சிங்கள பகுதியில் சிங்களவர்களுக்கும், தமிழ் பகுதியில் தமிழர்களுக்கும் பாதுகாப்பு தேவை இல்லை என்பதுபோல கருது எழுதுவது சரியாக தெரியவில்லை.

டக்ளஸ் அண்ணாவில் திடீர் பாசம் உருவாகியத்தின் நோக்கம் என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

உங்கள் விளக்கம் தெளிவில்லாமல் இருக்கிறது. 🤔

முறைப்பாட்டாளர்கள் கூறுவதை ஒன்றுக்கு மூன்றுமுறை அவதானமாக வாசித்துப்பாருங்கள். உங்களுக்கே புரியும் அவர்கள் என்ன சொல்கிறார்களென்று!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

முறைப்பாட்டாளர்கள் கூறுவதை ஒன்றுக்கு மூன்றுமுறை அவதானமாக வாசித்துப்பாருங்கள். உங்களுக்கே புரியும் அவர்கள் என்ன சொல்கிறார்களென்று!

தமிழ்வின் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக, கொடுக்கப்பட்டுள்ள ரசீதில் எந்தவித ஆதாரமும் இல்லை. முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டதாக ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. 

இதிலிருந்து எதனை நான் யூகித்துக்கொள்ளவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள் 😀

10 hours ago, Kapithan said:

தமிழ்வின் செய்தியை உறுதிப்படுத்தும் விதமாக, கொடுக்கப்பட்டுள்ள ரசீதில் எந்தவித ஆதாரமும் இல்லை. முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டதாக ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. 

இதிலிருந்து எதனை நான் யூகித்துக்கொள்ளவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள் 😀

அவரே, ஒன்றுக்கு மூன்று  முறை வாசித்து பார்க்க சொல்லுகிறார். அதிலிருந்தே என்னத்தை சொல்ல வருகிறார் என்று விளங்குததல்லவா? இதுக்கு மேலயும் விளக்கம் கேட்க போகாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடா நாட்டில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஆவா, சன்னா தாரா என பல ஆயுத வன்முறைக்குழுக்களால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகப் பலமுறை முறையிட்டவர்கள் அதாவது ஒரு தனிமனிதனுடய பாதுகாப்பிலும்பார்க்க ஒரு சமூகத்தின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் ஆனால் யாராவது அந்த வன்முறைக்கும்பலை ஒழித்தார்களா அதாவது அரசதரப்பில் இதற்காக அதிகாரமுள்ளவர்கள். 

தவிர குருவிசுடுவதுபோல் அவர்கள் நிறையப்பேரை சுட்டுத்தள்ளிவிட்டார்கள். தனது இனத்துக்கு நேர்மையாக உழைப்பவனுக்கு யாராலும் அச்சுறுத்தல் இருக்காது ஆனால் கள்ளவாக்குப்பொறுக்கிகளுக்கு அச்சுறத்தல் இருக்கும் என தானே கற்பனையில் இருக்கிறார். 

உங்களது அபிமானச் சிங்கள அரசாங்கம் நினைத்தால் யாருக்காவது அச்சுறுத்தல் இருக்கு என அப்பிராணிகளான முன்னால் போராளிகள் ஓரிருவரை செற்றப் பண்ணி அப்படியான சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.

டக்ளஸ் அவர்களது அபிமானி நான் இல்லை ஆனால் ஒரு காலத்தில் கூடுதலான அச்சுறுத்தல் உள்ள டக்ளசுக்கே இப்போது அதிகூடிய பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது அதியே நான் குறிப்பிட்டிருந்தேன். 

இப்போதைய நிலையில் சிங்களம் ஒருவரைப் போட்டுத்தள்ளிவிட்டு அதை புலிகள், அல்லது புலம்பெயர் புலிகள் அல்லது புலிகளது வால்கள் அல்லது விரக்தியடைந்த முன்னால் புலிகள் எனகூற நீண்ட நேரம் யோசிக்காது.

கதையோட கதையாகக் கூறுகிறேன்

செல்வராஜ கஜேந்திரன் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கு எதிகாலத்தில் எதும் நடக்கலாம்,  

அது கடந்த சில மாதங்களுக்கு முன்பு மானிபாய் பகுதியில் போலீசாரால் சுட்டுக்கலைத்துப் பிடிக்கப்பட்ட ஆவா அல்லது சன்னா அழைக்கப்படும் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரை தங்களது கருவியாகப் பாவிக்கப்பட்டு நடக்கலாம்

இதன் பின்னணியில் மணிவண்ணன் தமிழ்தேசிய மக்கள் முண்ணணியினக்கு இடையில் ஏற்பட்ட முறணைக் காரணம்காட்டி நடைபெறலாம் ஆனால் பிராண்சில் பரிதியைப்போட்டதுபோல் குதிரையர் (யாழ் களத்தில் சிலர் சந்தோசப்படட்டுமே என இப்படி விழிக்கிறேன்) சம்பவமொன்றில் போடப்படலாம்.

On 16/8/2020 at 13:42, Robinson cruso said:

ஒருவர் தனது சொந்த பாதுகாப்புக்காக பாதுகாப்பை கோருவதும் வைத்திருப்பதும் தவறில்லை. அந்த பாதுகாப்பு அதிகாரிகள் ஆயத்தங்கள் வைத்திருப்பது குருவி சுடுவதாட்கோ, விளையாடுவதாட்கோ  அல்ல. தேவைப்படும்போது பலத்தை பயன்படுத்துவதட்குத்தான் அவர்கள் அங்கு இருக்கிரார்கள். குழப்பக்காரர்கள் குழப்பம் விளைவிக்கும்போது சும்மா இருக்கமாட்ட்டார்கள்.

தமிழ் பகுதியோ , சிங்களப்பகுதியோ யாருக்கு பாதுகாப்பு தேவையோ அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டும். சிங்கள பகுதியில் சிங்களவர்களுக்கும், தமிழ் பகுதியில் தமிழர்களுக்கும் பாதுகாப்பு தேவை இல்லை என்பதுபோல கருது எழுதுவது சரியாக தெரியவில்லை.

டக்ளஸ் அண்ணாவில் திடீர் பாசம் உருவாகியத்தின் நோக்கம் என்னவோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

யாழ் குடா நாட்டில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஆவா, சன்னா தாரா என பல ஆயுத வன்முறைக்குழுக்களால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகப் பலமுறை முறையிட்டவர்கள் அதாவது ஒரு தனிமனிதனுடய பாதுகாப்பிலும்பார்க்க ஒரு சமூகத்தின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் ஆனால் யாராவது அந்த வன்முறைக்கும்பலை ஒழித்தார்களா அதாவது அரசதரப்பில் இதற்காக அதிகாரமுள்ளவர்கள். 

தவிர குருவிசுடுவதுபோல் அவர்கள் நிறையப்பேரை சுட்டுத்தள்ளிவிட்டார்கள். தனது இனத்துக்கு நேர்மையாக உழைப்பவனுக்கு யாராலும் அச்சுறுத்தல் இருக்காது ஆனால் கள்ளவாக்குப்பொறுக்கிகளுக்கு அச்சுறத்தல் இருக்கும் என தானே கற்பனையில் இருக்கிறார். 

உங்களது அபிமானச் சிங்கள அரசாங்கம் நினைத்தால் யாருக்காவது அச்சுறுத்தல் இருக்கு என அப்பிராணிகளான முன்னால் போராளிகள் ஓரிருவரை செற்றப் பண்ணி அப்படியான சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.

டக்ளஸ் அவர்களது அபிமானி நான் இல்லை ஆனால் ஒரு காலத்தில் கூடுதலான அச்சுறுத்தல் உள்ள டக்ளசுக்கே இப்போது அதிகூடிய பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது அதியே நான் குறிப்பிட்டிருந்தேன். 

இப்போதைய நிலையில் சிங்களம் ஒருவரைப் போட்டுத்தள்ளிவிட்டு அதை புலிகள், அல்லது புலம்பெயர் புலிகள் அல்லது புலிகளது வால்கள் அல்லது விரக்தியடைந்த முன்னால் புலிகள் எனகூற நீண்ட நேரம் யோசிக்காது.

கதையோட கதையாகக் கூறுகிறேன்

செல்வராஜ கஜேந்திரன் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கு எதிகாலத்தில் எதும் நடக்கலாம்,  

அது கடந்த சில மாதங்களுக்கு முன்பு மானிபாய் பகுதியில் போலீசாரால் சுட்டுக்கலைத்துப் பிடிக்கப்பட்ட ஆவா அல்லது சன்னா அழைக்கப்படும் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரை தங்களது கருவியாகப் பாவிக்கப்பட்டு நடக்கலாம்

இதன் பின்னணியில் மணிவண்ணன் தமிழ்தேசிய மக்கள் முண்ணணியினக்கு இடையில் ஏற்பட்ட முறணைக் காரணம்காட்டி நடைபெறலாம் ஆனால் பிராண்சில் பரிதியைப்போட்டதுபோல் குதிரையர் (யாழ் களத்தில் சிலர் சந்தோசப்படட்டுமே என இப்படி விழிக்கிறேன்) சம்பவமொன்றில் போடப்படலாம்.

இங்கே நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் இலங்கையில் தனியார் புலனாய்வு நினுவனம் ஒன்றை ஆரம்பிக்க நிதி தேடும் விளம்பரம் போல தெரிகிறதே? திட்டம் ஏதும் உள்ளதா, அல்லது ஆரம்புத்து விட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரம் இணுவிலில் நடைபெற்ற முண்ணணிக்கெதிரான வன்முறைகலந்த எதிர்ப்பிற்கு முன்பு சுதுமல அம்மன் கோவிலுக்கு முன்பாக இதே இளைஞர் குழு செல்வராஜ கஜேந்திரன் காண்டீபன் ஆகியோருடன் முரண்பட்டிருக்கிறார்கள் சுமார் பத்துக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழுவே முரண்பட்டிருக்கு அதில் சன்னா குழு என அறிமுகப்படுத்தப்படும் வன்முறைக்குழுவின் முன்னைநாள் தலை அல்லது தளபதி பிரசன்னா ( இவர் இப்போது நல்லூரடியில் ஒரு பெண்ணை காதல் செய்து திருமணம் செய்து பின்னர் சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்) அவர்களுடைய தம்பியாரும் அடக்கம்.

இந்தப்பிரசன்ன வேறு யாரும் இல்லை தொண்ணூறுகளில் விடுதலைப்புலிகள் , யாழ்ப்பாணம் கச்சேரியில் நிலாளவைத்திணைக்களத்தில் வேலைசெய்த ஊழியர்களையும் போராளிகளையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைத்து பலாலி இராணுவமுகாமை அண்டிய பகுதிகளிண் வரைபடம் தயாரித்திருந்தார்கள் பலாலி முகாமை அண்டிய அனைத்துப் பிரதேசங்களினது ஆட்லறி மற்றும் எறிகணை விச்சு எல்லைகளுக்கான அமைவிடங்களைக் குறித்து அவ்விடங்களில் இலக்கமிட்டு அவற்றை வரைபடமாக்கி ஆவணப்படுத்தினார்கள்

அவ்வேளையில் ஒப்பிலாமணி எனும் போராளி இராணுவத்துடன் தொடர்பெடுத்து அவ்வரைபடங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு பலாலி முகாமுக்குள் நுளைய ஏழாலைப்பகுதியில் பதுங்கியிருதான் அந்த போராளிக்கு மறைவதற்கு இடம் கொடுத்தது சன்ன குழு பிரசன்னவின் தந்தையாகும்.

2 hours ago, கற்பகதரு said:

இங்கே நீங்கள் எழுதியிருப்பதை பார்த்தால் இலங்கையில் தனியார் புலனாய்வு நினுவனம் ஒன்றை ஆரம்பிக்க நிதி தேடும் விளம்பரம் போல தெரிகிறதே? திட்டம் ஏதும் உள்ளதா, அல்லது ஆரம்புத்து விட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Elugnajiru said:

கடந்த வாரம் இணுவிலில் நடைபெற்ற முண்ணணிக்கெதிரான வன்முறைகலந்த எதிர்ப்பிற்கு முன்பு சுதுமல அம்மன் கோவிலுக்கு முன்பாக இதே இளைஞர் குழு செல்வராஜ கஜேந்திரன் காண்டீபன் ஆகியோருடன் முரண்பட்டிருக்கிறார்கள் சுமார் பத்துக்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழுவே முரண்பட்டிருக்கு அதில் சன்னா குழு என அறிமுகப்படுத்தப்படும் வன்முறைக்குழுவின் முன்னைநாள் தலை அல்லது தளபதி பிரசன்னா ( இவர் இப்போது நல்லூரடியில் ஒரு பெண்ணை காதல் செய்து திருமணம் செய்து பின்னர் சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்) அவர்களுடைய தம்பியாரும் அடக்கம்.

இந்தப்பிரசன்ன வேறு யாரும் இல்லை தொண்ணூறுகளில் விடுதலைப்புலிகள் , யாழ்ப்பாணம் கச்சேரியில் நிலாளவைத்திணைக்களத்தில் வேலைசெய்த ஊழியர்களையும் போராளிகளையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைத்து பலாலி இராணுவமுகாமை அண்டிய பகுதிகளிண் வரைபடம் தயாரித்திருந்தார்கள் பலாலி முகாமை அண்டிய அனைத்துப் பிரதேசங்களினது ஆட்லறி மற்றும் எறிகணை விச்சு எல்லைகளுக்கான அமைவிடங்களைக் குறித்து அவ்விடங்களில் இலக்கமிட்டு அவற்றை வரைபடமாக்கி ஆவணப்படுத்தினார்கள்

அவ்வேளையில் ஒப்பிலாமணி எனும் போராளி இராணுவத்துடன் தொடர்பெடுத்து அவ்வரைபடங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு பலாலி முகாமுக்குள் நுளைய ஏழாலைப்பகுதியில் பதுங்கியிருதான் அந்த போராளிக்கு மறைவதற்கு இடம் கொடுத்தது சன்ன குழு பிரசன்னவின் தந்தையாகும்.

நீங்கள் கூறும் விடயம் சரியானதாக இருந்தால் வரைபடங்களை கொண்டுபோனவர் போராளியல்ல என்பது எனது கருத்து. 🤥

  • கருத்துக்கள உறவுகள்

ஒப்பிலாமணி விடுகலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ வேவுப்பிரிவில் இருந்தவர் அதாவது றெக்கி குறூப்பில் பலமுறை பலாலிக்குள் நுழைந்த அனுபவம் இவருடம் இருக்கு.
தவிர ஒப்பிலாமணியின் தாய் அல்லது தகப்பன் சிங்கள இனத்தவராவார் காலப்போக்கில் சிறீலங்காவின் இராணுவக்கட்டமைப்பு அவரது பெற்றோரை இனம்கண்டு தனது நோக்கத்தைக் கச்சிதமாக நிறைவேற்றியிருந்தது. பாரிய இடன்பெயர்வின் பின்னதான யாழ்குடாநாடிற்குற் பொதுமக்களை உள்வாங்கியா ஆரம்பநாளில் யாழ்நகர் தட்டாதெருச்சந்தியில் அமைந்துள்ள இராணுவச்சோதனைச் சாவடியில்  இவரை நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.

இதைத்தவிர

அண்ணண் பல்ராஜ் தமிழ்செல்வன் ஆகியோர் யாழ் பொது மருத்துவமனையில் காயம்பட்டுச் சிகிச்சையிலிருந்தபோர்கு நடந்த ஒரு சம்பவத்துக்கும் "சன்னா" என்ற பெயருக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு யாராவது விரும்பினால் தொடருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் சொல்லுங்கள் எழுஞாயிறு.

சொல்லுங்கோ கேட்போம். 👍

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் பொதுமருத்துவமனையில் வைரவர் கோவிலுக்குப் பக்கத்தில் அதாவது இப்போது ஜப்பானின் உதவியுடன் கட்டப்பட்டிருக்கும் கட்டடத்தொகுதி இருக்கும் இடத்தில் பதிவான ஒரு கட்டிடம் இருந்தது. அங்கு பக்கத்துப்பக்கத்து அறைகளில் பால்ராஜ் அவர்களும் சுப அவர்களும் அதற்கு அடுத்த அறையில் இயக்கத்தால் காயப்பட்டுப் பிடிக்கப்பட்ட இராணுவமும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஒருநாள் நள்ளிரவில் தேசியத்தலைவர் பொட்டம்மானுடன் தொடர்புகொண்டு ஒருக்கால் யார்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்குப் போய்ப்பார் எனத் திடீரெனக்கூறியுள்ளார் பொட்டரும் என்ன ஏது எனக்கேதாமல் அங்கு போய் அனைவரிடமும் விசாரித்துவிட்டு அங்கு பால்ராஜ் மற்றும் சு பவுக்குத் துணையாக நின்றவர்களிடம் எல்லாம் சரியாக இருக்கா எனக்கேட்டுவிட்டு அடுத்தநாள்பால்ராஜ் அவர்ளது சத்திரசிகிச்சை தொடர்பான விபரங்களைக் கேட்டுத்தெரிந்துகொண்டு புறப்படும் நேரம் திடீரென்று அதுசரி நாளைக்கு யார் பால்ராஜை ஒப்பிரேசன் வார்டுக்குக் கொண்டுபோவது அவர் நடப்பாரா அல்லது வீசெயாரில்தான் போகவேண்டுமா யார் வீல்செயாரை தள்ளிக்கொண்டுபோவது என விசாரித்திருக்கிறார்.

அதற்கு அங்குள்ளவர்கள் நாங்கள் காலையில் புறப்பட்டுவிடுவோம் அடுத்தகுரூம் காலையில் வந்துவிடும் ஆனால் வீசெயாரைப் பக்குவமாகக் கொண்டுபோவதற்கு ஆஸ்பத்திரி அர்ரண்டன் ஒருவர் இருக்கிறார் அவரைத்தான் நாங்கள் அதிகமாகக் கூப்பிடுகிறனங்கள் எனக்கூறி ஆனால் அவருக்கு அதிகாலை வேலை இப்போ வீட்டுக்குப் போய்விட்டர் எனக்கூறியுள்ளனர் 

சரி வீலெச்யார் இப்போ எங்குள்ளது அவர் எப்போதும் குறிப்பிட்ட வீல்செயாரைத்தான் பாவிப்பாரா எனப் பொட்டர் கேட்டதற்கு ஓம் அது இதேபகுதியில் அதெற்கென இருக்கும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளனர்.

பொட்டர் என்ன யோசித்தாரோ தெரியாது சரி வீசெயாரைப் பர்ப்போம் எனக் கூறி அங்குபோய் பார்த்தவிடத்தில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்துள்ளார்,

உடனடியாக வெடிபொருதளைக் கையாளும் இயக்கப்  போராளிகள் வரவளைக்கப்பட்டு சோதனையிட்ட் இடத்தில் வீல்செயாரில் அனேகமான குளாய்களுக்குள் ஆர் டி எஸ் வெடிமருந்து ரிமோட் கொன்றோல் மூலம் வெடிக்கவைக்கத்தயாரான நிலையில் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது.

இதை இயக்கவும் கையாளவும் சன்னா எனும் வைத்தியசாலை ஊழியருக்கு இராணுஅப்புலனாய்வுப்பிரிவால் பயிற்சியளிக்கப்பட்டிருந்தது 

சன்ன என்பவர் யாழ் கரையூர் பகுதியில் அனைத்துச் சிங்களவரும் போர் காரணமாக இடம்பெயர்ந்திருதும் யாழைவிட்டுப்போகாது அதேவேளை அவர் சிங்களவர் என பெரும்பாலோரால் அறியப்படாமல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர் எப்படியோ மேப்பம் பிடித்து சிறீலங்காப்ப் புலனாய்வுத்துறை அவருடன் தொடர்பெடுத்து யாழ் வைத்திய சாலையில் சிகிச்சைபெறவரும் மூத்த தளபதிகளைப் போட்டுத்தள்ளத் திட்டமிட்டிருந்தது.

இவை அனைத்து விடிவதற்கு முன்பே நடந்துமுடிந்துவிட்டது அதேவேளை  அடுத்த அறையில் சு ப வுக்குத் துணயாக நின்ற போராளிகளுக்குக்கூட அடுத்த நாளே விடையம் தெரியும் 

சன்ன பிடிக்கப்பட்டு போடப்பட்டார்.

On 17/8/2020 at 16:54, Elugnajiru said:

யாழ் குடா நாட்டில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஆவா, சன்னா தாரா என பல ஆயுத வன்முறைக்குழுக்களால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகப் பலமுறை முறையிட்டவர்கள் அதாவது ஒரு தனிமனிதனுடய பாதுகாப்பிலும்பார்க்க ஒரு சமூகத்தின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் ஆனால் யாராவது அந்த வன்முறைக்கும்பலை ஒழித்தார்களா அதாவது அரசதரப்பில் இதற்காக அதிகாரமுள்ளவர்கள். 

தவிர குருவிசுடுவதுபோல் அவர்கள் நிறையப்பேரை சுட்டுத்தள்ளிவிட்டார்கள். தனது இனத்துக்கு நேர்மையாக உழைப்பவனுக்கு யாராலும் அச்சுறுத்தல் இருக்காது ஆனால் கள்ளவாக்குப்பொறுக்கிகளுக்கு அச்சுறத்தல் இருக்கும் என தானே கற்பனையில் இருக்கிறார். 

உங்களது அபிமானச் சிங்கள அரசாங்கம் நினைத்தால் யாருக்காவது அச்சுறுத்தல் இருக்கு என அப்பிராணிகளான முன்னால் போராளிகள் ஓரிருவரை செற்றப் பண்ணி அப்படியான சூழ்நிலையை ஏற்படுத்தலாம்.

டக்ளஸ் அவர்களது அபிமானி நான் இல்லை ஆனால் ஒரு காலத்தில் கூடுதலான அச்சுறுத்தல் உள்ள டக்ளசுக்கே இப்போது அதிகூடிய பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது அதியே நான் குறிப்பிட்டிருந்தேன். 

இப்போதைய நிலையில் சிங்களம் ஒருவரைப் போட்டுத்தள்ளிவிட்டு அதை புலிகள், அல்லது புலம்பெயர் புலிகள் அல்லது புலிகளது வால்கள் அல்லது விரக்தியடைந்த முன்னால் புலிகள் எனகூற நீண்ட நேரம் யோசிக்காது.

கதையோட கதையாகக் கூறுகிறேன்

செல்வராஜ கஜேந்திரன் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்கு எதிகாலத்தில் எதும் நடக்கலாம்,  

அது கடந்த சில மாதங்களுக்கு முன்பு மானிபாய் பகுதியில் போலீசாரால் சுட்டுக்கலைத்துப் பிடிக்கப்பட்ட ஆவா அல்லது சன்னா அழைக்கப்படும் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டு நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரை தங்களது கருவியாகப் பாவிக்கப்பட்டு நடக்கலாம்

இதன் பின்னணியில் மணிவண்ணன் தமிழ்தேசிய மக்கள் முண்ணணியினக்கு இடையில் ஏற்பட்ட முறணைக் காரணம்காட்டி நடைபெறலாம் ஆனால் பிராண்சில் பரிதியைப்போட்டதுபோல் குதிரையர் (யாழ் களத்தில் சிலர் சந்தோசப்படட்டுமே என இப்படி விழிக்கிறேன்) சம்பவமொன்றில் போடப்படலாம்.

கஜேந்திரனுக்கு ஏன் ஆபத்து ஏட்படசந்தர்ப்பம் இருக்குது? சுமந்திரனுக்கு அப்படியான சந்தர்ப்பம் ஏன் உருவாகாது என்று கூறுகிறீர்கள்? தமிழ் பகுதியில் இருப்பதாலா? இந்து தீவிரவாதிகளால் ஆபத்து  ஏட்படலாம் அல்லவா? அவர்களதானே அவருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து செல்கிறார்கள்? அவர் கிறிஸ்தவர் என்பதால் தாக்கப்படுகிறார் என்று இன்னும் அறியாமல் இருக்கிறீர்களா? சச்சிதானந்தம் பொய்யாக இவருக்கு எதிராக விடட அறிக்கையை படிக்கவில்லையா? கிறிஸ்தவ வாக்குகளால் சுமந்திரன் தெரிவு செய்யப்படத்தை ஏற்கவில்லையா? நிச்சயமாக எல்லாவற்றிட்கும் இல்லை என்றுதான் நொண்டி  சாக்கு சொல்லுவீர்கள். ஆனால் உண்மை அதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Elugnajiru said:

யாழ் பொதுமருத்துவமனையில் வைரவர் கோவிலுக்குப் பக்கத்தில் அதாவது இப்போது ஜப்பானின் உதவியுடன் கட்டப்பட்டிருக்கும் கட்டடத்தொகுதி இருக்கும் இடத்தில் பதிவான ஒரு கட்டிடம் இருந்தது. அங்கு பக்கத்துப்பக்கத்து அறைகளில் பால்ராஜ் அவர்களும் சுப அவர்களும் அதற்கு அடுத்த அறையில் இயக்கத்தால் காயப்பட்டுப் பிடிக்கப்பட்ட இராணுவமும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஒருநாள் நள்ளிரவில் தேசியத்தலைவர் பொட்டம்மானுடன் தொடர்புகொண்டு ஒருக்கால் யார்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்குப் போய்ப்பார் எனத் திடீரெனக்கூறியுள்ளார் பொட்டரும் என்ன ஏது எனக்கேதாமல் அங்கு போய் அனைவரிடமும் விசாரித்துவிட்டு அங்கு பால்ராஜ் மற்றும் சு பவுக்குத் துணையாக நின்றவர்களிடம் எல்லாம் சரியாக இருக்கா எனக்கேட்டுவிட்டு அடுத்தநாள்பால்ராஜ் அவர்ளது சத்திரசிகிச்சை தொடர்பான விபரங்களைக் கேட்டுத்தெரிந்துகொண்டு புறப்படும் நேரம் திடீரென்று அதுசரி நாளைக்கு யார் பால்ராஜை ஒப்பிரேசன் வார்டுக்குக் கொண்டுபோவது அவர் நடப்பாரா அல்லது வீசெயாரில்தான் போகவேண்டுமா யார் வீல்செயாரை தள்ளிக்கொண்டுபோவது என விசாரித்திருக்கிறார்.

அதற்கு அங்குள்ளவர்கள் நாங்கள் காலையில் புறப்பட்டுவிடுவோம் அடுத்தகுரூம் காலையில் வந்துவிடும் ஆனால் வீசெயாரைப் பக்குவமாகக் கொண்டுபோவதற்கு ஆஸ்பத்திரி அர்ரண்டன் ஒருவர் இருக்கிறார் அவரைத்தான் நாங்கள் அதிகமாகக் கூப்பிடுகிறனங்கள் எனக்கூறி ஆனால் அவருக்கு அதிகாலை வேலை இப்போ வீட்டுக்குப் போய்விட்டர் எனக்கூறியுள்ளனர் 

சரி வீலெச்யார் இப்போ எங்குள்ளது அவர் எப்போதும் குறிப்பிட்ட வீல்செயாரைத்தான் பாவிப்பாரா எனப் பொட்டர் கேட்டதற்கு ஓம் அது இதேபகுதியில் அதெற்கென இருக்கும் இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளனர்.

பொட்டர் என்ன யோசித்தாரோ தெரியாது சரி வீசெயாரைப் பர்ப்போம் எனக் கூறி அங்குபோய் பார்த்தவிடத்தில் ஏதோ வித்தியாசத்தை உணர்ந்துள்ளார்,

உடனடியாக வெடிபொருதளைக் கையாளும் இயக்கப்  போராளிகள் வரவளைக்கப்பட்டு சோதனையிட்ட் இடத்தில் வீல்செயாரில் அனேகமான குளாய்களுக்குள் ஆர் டி எஸ் வெடிமருந்து ரிமோட் கொன்றோல் மூலம் வெடிக்கவைக்கத்தயாரான நிலையில் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தது.

இதை இயக்கவும் கையாளவும் சன்னா எனும் வைத்தியசாலை ஊழியருக்கு இராணுஅப்புலனாய்வுப்பிரிவால் பயிற்சியளிக்கப்பட்டிருந்தது 

சன்ன என்பவர் யாழ் கரையூர் பகுதியில் அனைத்துச் சிங்களவரும் போர் காரணமாக இடம்பெயர்ந்திருதும் யாழைவிட்டுப்போகாது அதேவேளை அவர் சிங்களவர் என பெரும்பாலோரால் அறியப்படாமல் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர் எப்படியோ மேப்பம் பிடித்து சிறீலங்காப்ப் புலனாய்வுத்துறை அவருடன் தொடர்பெடுத்து யாழ் வைத்திய சாலையில் சிகிச்சைபெறவரும் மூத்த தளபதிகளைப் போட்டுத்தள்ளத் திட்டமிட்டிருந்தது.

இவை அனைத்து விடிவதற்கு முன்பே நடந்துமுடிந்துவிட்டது அதேவேளை  அடுத்த அறையில் சு ப வுக்குத் துணயாக நின்ற போராளிகளுக்குக்கூட அடுத்த நாளே விடையம் தெரியும் 

சன்ன பிடிக்கப்பட்டு போடப்பட்டார்.

நீங்கள் குறிப்பிடும் சன்னாவும் மேலும் பலரும்(13/14) ஒரே நாளில் இல்லாமலாக்கப்பட்டார்கள் என நினைவு. அவர்களின் படங்களும் ஈழநாதம் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டன என நம்புகிறேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரனுக்கு ஆபத்து ஏற்பட காரணமாக சிங்களம்தான் இருக்கும், அதற்கான விடை கடந்த பத்து வருடகாலத்தில் தமிழர்மத்தியில் நாம் பலமிழந்து இருக்கிறோம் எம்மால் இனிமேல் எமக்கான உரிமைகளை முழுவதுமகப் பெற்றுவிடமுடியாது ஏதோ தருவதை வாங்குவோம் எனும் மனநிலைக்குச் ச்சென்றுவிட்டார்கள் ஆதலால் போர்க்குற்றம் சர்வதேச விசாரணை போர்க்குற்றத்துக்கான காரணம் இன் அழிப்பு அதற்கான காரணம் இன்ச்சுத்திகரிப்பு அதன்மூலம் தமிழ் இனப் பரம்பலை இல்லாதொழிப்பது ஆகியவற்றை சர்வதேச விசாரணை நடுநிலைமை ஆகியவற்றினூடாக தமிழர்களுக்கான நீதி அதன்பின்னதான தமிழர்கள் மட்டும் பங்குகொள்ளும் சர்வஜன வாக்கெடுப்பின் பின்னதான பிரிந்துபோதல் இந்த நிகழ்சித்திட்டத்தின் முதற்படியே தாயகத்தில் மக்கள் அதைநோக்கிப் பயணிக்க ஆரம்பிப்பதுதான் அதை ஆரம்பத்திலேலேயே கிள்ளி எறிந்தால் அவை தடைப்படும் தவிர மீண்டும் தமிழர் மன்ச்சோவடைவர் இவைகளே சிங்களத்தின் நிகழ்சித்திட்டம் 
(அதற்காக செல்வராஜ காஜேந்திரன் தொடர்ந்தும் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு அரசியல் செய்வார் என என்னல் அறுதியிட்டுக்கூறமுடியாது ஆனால் இவர்கள் விட்ட இடத்திலிருந்து வேறு ஒருவரும் தொடரக்கூடிய சாத்தியம் இருக்கு அதையும் இல்லாதொழிப்பதே இப்போது அவர்களின் நோக்கம்)

சுமந்திரனுக்கு எதிரான சச்சிதானந்தத்தின் குற்றச்சாட்டுகளின் மூலம் அதாவது பின்புலம் வேறு அது இந்தியாவின் இந்துத்துவான் எனும் கோட்பாட்டுக்குள் மக்களை குழப்புவது அல்லது அரசியல் செயற்பாடுகளைக் குழப்புவது. அது மிகவும் இறுக்கமானது பலம்வாய்ததும் சுமந்திரனால் எதிர்த்துப் போராடமுடியாததுமாகும் காரணம் அங்கு இந்தியாவின் நிர்வாகம் பின்னால் நிற்கிறது .

உதாரணத்துக்கு 

சச்சியரால் யாழ் ஊடக மையத்தில் கூறப்பட்ட ஒரு விடையம்

சுமந்திரனது மனைவியார் இலட்சக்கணக்கில் காசு வாங்கிக்கொண்டு சைவசமயத்தவர்களை மதமாற்றம் செய்கிறாரென  சாதாரணமாக எதுக்கெடுத்தாலும் நஸ்டைஇடு கேட்டு கோட்டுக்குப் போகிறேன் எனக்கூறும் சுமந்திரன் ஏன் அதுக்குமட்டும் மெளனம் காத்தார் அதற்கு அண்மித்த நாதளில் கொழும்பில் சுமந்திரனை சிவசேனாவின் முக்கியஸ்தர் ஒருவர் சந்தித்துப் பேசியிருந்தார் எதுவாக இருக்கும் காரணம் அது மிகப்பெரிய சக்தி அதனுடன் அரசியல் விளையாட முடியாது.

சுமந்திரனுக்கு எதிரான கிறிஸ்தவர் குற்றச்சாட்டு விக்கியர் தரப்பிலிருந்தே அவிழ்த்துவிடப்படுகிறது.

காரணம் சுமந்திரன் ரணிலுடன் சேர்ந்து சம்பந்தரை மேற்குலகம் நோக்கி வழிநடத்திவிட்டார்.

விடுதலைப்புலிகள் ஒழிக்க இந்தியா ஒத்துழைத்தபோது கூட்டமைப்புக்குக் கூறப்பட்ட விடையம் நாம் புலிகளை இப்போது ஒழிக்கிறோம் அதேபோல் எங்களுக்குச் சாதகமாக நீங்கள் செயற்படாதுவிட்டால் பிலிகளிடத்தில் உங்களை வைத்ததுபோல் உங்களது இடத்தில் நாம் வேறொருவரை வைப்போம் என்பதாகும் அது நேரடியாகச் சொல்லப்படாதுவிடினும் கூட்டமைப்புக் குறிப்பறிந்து செயற்படத் தவறிவிட்டது. அவர்களது நிகழ்சித்திட்டத்திலிருந்து பாதிவழியில் பின்வாங்கிவிட்டது 

அதன் பிரதிபலிப்புத்தான் மோடியின் இலங்கைப்பயணத்தில் கெளரவமான இடத்தில் வைத்துக் கூட்டமைப்பைச் சந்திக்காது போகிற வழியில் விமான நிலையத்தில் சந்தித்தது.

இந்தியா எனும் மிகப்பெரிய இலங்கைக்கு அருகில் உள்ள வல்லரசு நாடு ஒருத்தரை எங்கு வைத்துச் சந்திக்கிறது என்பதிலேயே அதன் அரசியல் அர்த்தங்களை சிங்களம் உட்பட மேற்குலகம் ஈறாக அனைத்து அரசியல் தெரிந்தவனும் உணருவான் அதன் பின்பு கூட்டமைப்பை யாராவது சீண்டுவானா? இராஜங்கரீதியில் பேச எத்தனிப்பானா? இவைகள் அனைத்தையும் செய்து முடித்தது ரணில் இதற்குத்துணை நின்றது சுமந்திரன்.

6 hours ago, Robinson cruso said:

கஜேந்திரனுக்கு ஏன் ஆபத்து ஏட்படசந்தர்ப்பம் இருக்குது? சுமந்திரனுக்கு அப்படியான சந்தர்ப்பம் ஏன் உருவாகாது என்று கூறுகிறீர்கள்? தமிழ் பகுதியில் இருப்பதாலா? இந்து தீவிரவாதிகளால் ஆபத்து  ஏட்படலாம் அல்லவா? அவர்களதானே அவருக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து செல்கிறார்கள்? அவர் கிறிஸ்தவர் என்பதால் தாக்கப்படுகிறார் என்று இன்னும் அறியாமல் இருக்கிறீர்களா? சச்சிதானந்தம் பொய்யாக இவருக்கு எதிராக விடட அறிக்கையை படிக்கவில்லையா? கிறிஸ்தவ வாக்குகளால் சுமந்திரன் தெரிவு செய்யப்படத்தை ஏற்கவில்லையா? நிச்சயமாக எல்லாவற்றிட்கும் இல்லை என்றுதான் நொண்டி  சாக்கு சொல்லுவீர்கள். ஆனால் உண்மை அதுதான். 

1 hour ago, Elugnajiru said:

கஜேந்திரனுக்கு ஆபத்து ஏற்பட காரணமாக சிங்களம்தான் இருக்கும், அதற்கான விடை கடந்த பத்து வருடகாலத்தில் தமிழர்மத்தியில் நாம் பலமிழந்து இருக்கிறோம் எம்மால் இனிமேல் எமக்கான உரிமைகளை முழுவதுமகப் பெற்றுவிடமுடியாது ஏதோ தருவதை வாங்குவோம் எனும் மனநிலைக்குச் ச்சென்றுவிட்டார்கள் ஆதலால் போர்க்குற்றம் சர்வதேச விசாரணை போர்க்குற்றத்துக்கான காரணம் இன் அழிப்பு அதற்கான காரணம் இன்ச்சுத்திகரிப்பு அதன்மூலம் தமிழ் இனப் பரம்பலை இல்லாதொழிப்பது ஆகியவற்றை சர்வதேச விசாரணை நடுநிலைமை ஆகியவற்றினூடாக தமிழர்களுக்கான நீதி அதன்பின்னதான தமிழர்கள் மட்டும் பங்குகொள்ளும் சர்வஜன வாக்கெடுப்பின் பின்னதான பிரிந்துபோதல் இந்த நிகழ்சித்திட்டத்தின் முதற்படியே தாயகத்தில் மக்கள் அதைநோக்கிப் பயணிக்க ஆரம்பிப்பதுதான் அதை ஆரம்பத்திலேலேயே கிள்ளி எறிந்தால் அவை தடைப்படும் தவிர மீண்டும் தமிழர் மன்ச்சோவடைவர் இவைகளே சிங்களத்தின் நிகழ்சித்திட்டம் 
(அதற்காக செல்வராஜ காஜேந்திரன் தொடர்ந்தும் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு அரசியல் செய்வார் என என்னல் அறுதியிட்டுக்கூறமுடியாது ஆனால் இவர்கள் விட்ட இடத்திலிருந்து வேறு ஒருவரும் தொடரக்கூடிய சாத்தியம் இருக்கு அதையும் இல்லாதொழிப்பதே இப்போது அவர்களின் நோக்கம்)

சுமந்திரனுக்கு எதிரான சச்சிதானந்தத்தின் குற்றச்சாட்டுகளின் மூலம் அதாவது பின்புலம் வேறு அது இந்தியாவின் இந்துத்துவான் எனும் கோட்பாட்டுக்குள் மக்களை குழப்புவது அல்லது அரசியல் செயற்பாடுகளைக் குழப்புவது. அது மிகவும் இறுக்கமானது பலம்வாய்ததும் சுமந்திரனால் எதிர்த்துப் போராடமுடியாததுமாகும் காரணம் அங்கு இந்தியாவின் நிர்வாகம் பின்னால் நிற்கிறது .

உதாரணத்துக்கு 

சச்சியரால் யாழ் ஊடக மையத்தில் கூறப்பட்ட ஒரு விடையம்

சுமந்திரனது மனைவியார் இலட்சக்கணக்கில் காசு வாங்கிக்கொண்டு சைவசமயத்தவர்களை மதமாற்றம் செய்கிறாரென  சாதாரணமாக எதுக்கெடுத்தாலும் நஸ்டைஇடு கேட்டு கோட்டுக்குப் போகிறேன் எனக்கூறும் சுமந்திரன் ஏன் அதுக்குமட்டும் மெளனம் காத்தார் அதற்கு அண்மித்த நாதளில் கொழும்பில் சுமந்திரனை சிவசேனாவின் முக்கியஸ்தர் ஒருவர் சந்தித்துப் பேசியிருந்தார் எதுவாக இருக்கும் காரணம் அது மிகப்பெரிய சக்தி அதனுடன் அரசியல் விளையாட முடியாது.

சுமந்திரனுக்கு எதிரான கிறிஸ்தவர் குற்றச்சாட்டு விக்கியர் தரப்பிலிருந்தே அவிழ்த்துவிடப்படுகிறது.

காரணம் சுமந்திரன் ரணிலுடன் சேர்ந்து சம்பந்தரை மேற்குலகம் நோக்கி வழிநடத்திவிட்டார்.

விடுதலைப்புலிகள் ஒழிக்க இந்தியா ஒத்துழைத்தபோது கூட்டமைப்புக்குக் கூறப்பட்ட விடையம் நாம் புலிகளை இப்போது ஒழிக்கிறோம் அதேபோல் எங்களுக்குச் சாதகமாக நீங்கள் செயற்படாதுவிட்டால் பிலிகளிடத்தில் உங்களை வைத்ததுபோல் உங்களது இடத்தில் நாம் வேறொருவரை வைப்போம் என்பதாகும் அது நேரடியாகச் சொல்லப்படாதுவிடினும் கூட்டமைப்புக் குறிப்பறிந்து செயற்படத் தவறிவிட்டது. அவர்களது நிகழ்சித்திட்டத்திலிருந்து பாதிவழியில் பின்வாங்கிவிட்டது 

அதன் பிரதிபலிப்புத்தான் மோடியின் இலங்கைப்பயணத்தில் கெளரவமான இடத்தில் வைத்துக் கூட்டமைப்பைச் சந்திக்காது போகிற வழியில் விமான நிலையத்தில் சந்தித்தது.

இந்தியா எனும் மிகப்பெரிய இலங்கைக்கு அருகில் உள்ள வல்லரசு நாடு ஒருத்தரை எங்கு வைத்துச் சந்திக்கிறது என்பதிலேயே அதன் அரசியல் அர்த்தங்களை சிங்களம் உட்பட மேற்குலகம் ஈறாக அனைத்து அரசியல் தெரிந்தவனும் உணருவான் அதன் பின்பு கூட்டமைப்பை யாராவது சீண்டுவானா? இராஜங்கரீதியில் பேச எத்தனிப்பானா? இவைகள் அனைத்தையும் செய்து முடித்தது ரணில் இதற்குத்துணை நின்றது சுமந்திரன்.

கஜேந்திரன் இரண்டு நாளைக்கு முன்னே பேசியதை பார்க்கவில்லையா? ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வாம், ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டுதான் சத்தியப்பிரமாணம் எடுக்க வேண்டுமாம். அப்பத்து அது எல்லாம் தெரியவில்லையா? இதைத்தான் ஏமாத்து அரசியல் என்பது. எந்த கட்சியாக இருந்தாலும் இதே நிலைமைதான். அதனால்தான் போலி தமிழ் தேசியம் என்பது.

இனி கஜேந்திரனுக்கு பாதுகாப்பு தேவைப்படலாம். அது யாரிடமிருந்து என்பதை நீங்கள் தீர்மானித்து கொள்ளுங்கள்.

என்னை பொறுத்த வரைக்கும் சுமந்திரன் எதோ ஒரு காரணத்தினால் பாதுகாப்பு கேட்க்கிறார். நான் மேட்க்கூறிய காரணமாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அது அவரது தனிப்படட விடயம். நான் கூறிய மேட்படி கரணம் இல்லாவிட்ட்தால், நீங்கள் கூறுகின்ற காரணத்துக்காக இல்லாமலும் இருக்கலாம்.

எனவே ஒருவர் தனிப்படட ரீதியாக பாதுகாப்பை தேடினால் அது அவரது சுயவிருப்பம். அதில் தலையிடுவது மனித உரிமை மீறல். அப்படி அதட்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தால் அதன் பலனை பார்த்திருப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என எங்கும் கூறவில்லை

ஆனால் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டுதான் பதிவிப்பிரமானம் எடுக்கவேண்டுமென்பதே தற்போதைய நிலை இல்லாதுவிட்டால் பதவிப்பிரமானம் எடுத்து பாராளுமன்றம் செல்லமுடியாது நடைமுறையைத்தெரிந்து கொள்ளவேண்டும் பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது சிறீ லங்காவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி. 

இல்லை நான் பதவிப்பிரமானம் எடுக்க மாட்டன் என்றால் சரி போங்கோ எங்கூறு அனுப்பிவைப்பார்கள்

ஒரு நாடு இரு தேசம் என்பதன் அர்த்தம் கிட்டத்தட்ட சுயாட்சி மாதிரியானது. எந்தவேளையிலும் பிரிந்து செல்லக்கூடியதான சரத்துக்களையும் இருதரப்பும் விரும்பினால் உள்ளடக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.