Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் வாழ மிகவும் ஆபத்தான பகுதிகள் போலீசார் வெளியிட்ட பட்டியல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் வாழ மிகவும் ஆபத்தான பகுதிகள் போலீசார் வெளியிட்ட பட்டியல்
 
லண்டனில் வாழ மிகவும் ஆபத்தான பகுதிகள் போலீசார் வெளியிட்ட பட்டியல்
 
லண்டன் போலீசாரின் புள்ளி விவரங்களின் படி குரோய்டோன் வாழ மிகவும் ஆபத்தான இடமாக பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவம், துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்பது சர்வசாதரணமாகி வருகிறது.வன்முறை மற்றும் குடும்ப சண்டை போன்றவைகளாலும் இறப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது தலைநகரான லண்டனில் இருக்கும் குரோய்டோனில்  வன்முறை குற்றங்கள் பொதுவாக 5,978 பதிவாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு இதுவரை குரோய்டோனில் கிட்டத்தட்ட 19,000 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூலை 31 வரை 18,955 குற்றங்கள் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளதாக பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

திருட்டு மற்றும் வாகன குற்றங்கள் முறையே 2,584 மற்றும் 3,121-ஆக பதிவாகியுள்ளன். ஜனவரி மாதத்தில் தான் இந்த நகரில் அதிக குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பொலிசாரின் அறிக்கையின் படி பார்த்தால், 2980 குற்றங்கள் பதிவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் குற்றங்களின் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகரித்து வருவதாக பொலிசாரின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பெருநகரத்தைப் பொறுத்தவரை 1000 குடியிருப்பாளர்களில், 49.57 என குற்ற எண்ணிக்கை பதிவாகிறது. அதன் படி குரோய்டோனில் இருக்கும் பகுதிகளில் எத்தனை குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

பட்டியலில் தோர்ன்டன் ஹீத் ஐந்தாவது இடத்தில் வருகிறது. இங்கு இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜுலை 31 வரை 1078 குற்றங்கள் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளன.நபருக்கு எதிரான வன்முறை என்பது 366 பதிவாகியுள்ளதாகவும், ஆதே நேரத்தில் ஆயுதங்கள் வைத்திருப்பதில் 12-ஆக பதிவாகியிருப்பதாகவும், இது மிகக் குறைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த படியாக வாடான் உள்ளது. இங்கு குற்ற விகிதம் என்பது 52.07 சதவீதமாக உள்ளது. இது சராசரியை விட சற்றே அதிகம். இங்கு அதிக குடியிருப்பு பகுதி என்பதால், குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. இந்த ஆண்டில் எந்த மாதங்களையும் விட, கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் 187 குற்றங்கள் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ளன.குறைந்தது என்றால் 125 குற்றங்கள் மாதங்களில் பதிவாகியுள்ளது.

மேற்கு தோர்ன்டன் இங்கு 443 குற்றங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக திருட்டு மற்றும் வாகன குற்றங்கள் முறையே 251 மற்றும் 237 ஆக பதிவாகியுள்ளது. இங்கு குற்ற விகிதம் 74.5 சதவீதமாக இருப்பதால், இது சராசரியை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகம் ஆகும்.

மேற்கு தோர்ன்டனில் 443 குற்றங்கள் பதிவாகியுள்ளதால், அந்த நபருக்கு எதிரான வன்முறை மிகவும் பொதுவான குற்றமாகும்.திருட்டு மற்றும் வாகன குற்றங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாவது பொதுவானவை, முறையே 251 மற்றும் 237 குற்றங்கள்.குற்ற விகிதம் 74.5 ஆக இருப்பதால், இது சராசரியை விட கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகம்.

பிராட் கிரீன் இங்கு கடந்த ஏப்ரல் முதல் குற்றங்கள் நிலையான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. ஜுலை மாதத்தில் மட்டும் 290 பிராட்கிரீன்குற்றங்கள் பதிவாகியுள்ளன. இந்த இந்த ஆண்டு இதுவரை எந்த மாதத்திலும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.பொதுவான குற்றமாக 454 பதிவாகியுள்ளது.

பயர் பீல்டு இது தான் நகரின் குற்றங்களின் மைய இருப்பிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக 2294 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு குற்ற விகித 206,21 ஆக உள்ளது. இது சராசரியை விட நான்கு மடங்கு அதிகம்.நபருக்கு எதிரான வன்முறை மற்றும் திருட்டு குற்றங்கள் முறையே 582 மற்றும் 567 ஆகிய பதிவாகியுள்ளன

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/25141139/The-most-dangerous-places-to-live-in-Croydon-according.vpf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லூட்டன் பக்கம் பாதிப்பு,அசம்பாவிதம் ஏதும் இல்லைத்தானே?

10898340_470088976495802_3145618477071470853_n.jpg?_nc_cat=101&_nc_sid=7aed08&_nc_ohc=Gu8v_1HLKO4AX8oG8Vd&_nc_ht=scontent-dus1-1.xx&oh=2d9ddddf20ae7c0d148d49e5803fe182&oe=5F693C72

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

லூட்டன் பக்கம் பாதிப்பு,அசம்பாவிதம் ஏதும் இல்லைத்தானே?

10898340_470088976495802_3145618477071470853_n.jpg?_nc_cat=101&_nc_sid=7aed08&_nc_ohc=Gu8v_1HLKO4AX8oG8Vd&_nc_ht=scontent-dus1-1.xx&oh=2d9ddddf20ae7c0d148d49e5803fe182&oe=5F693C72

நம்ம சங்கத்து உறுப்பினர் ஆரும் இருக்கிறதோ அங்கே

  • கருத்துக்கள உறவுகள்

5 வருடங்களுக்கு மேல் வாழ்ந்த இடம். மறக்க முடியாத அனுபவங்களை கொடுத்தது. எதனை சொல்வேன் காப்பிரியின் கையால் அடிவாங்கியதை சொல்வேனா?. அதே ஜமைக்காகாரியை ஷூ கடையில் கண்டபோது தாரள/பெரிய மனதுடன் இடித்துரைத்து கட்டியணத்து அரை விலைக்கு வின்ரர் ஷூவை எனக்கு விற்ற‌ கதையை சொல்லவா? சிவபெருமானினின் மனைவியின் பெயரை கொண்ட த‌மிழே தெரியாத‌ மொரிசியஸ் நாட்டு  தேவதையுடன் ஸ்பைசிலாண்டில் தேசை சாப்பிட்டதை சொல்லவா? கீழ் வீட்டில் இருக்கும் ரொமனியன் நாட்டு பெண்களுடன் குளிர்ந்த ப‌னி படந்த இரவில் கும்மாளம் அடித்ததை சொல்லவா.

Croydon I miss you lot! 

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே ஹரோ வெம்பிலி பக்கம் என்ன மாதிரி.😀

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, முதல்வன் said:

அண்ணே ஹரோ வெம்பிலி பக்கம் என்ன மாதிரி.😀

ஓம் ஓம் இதற்கு கிட்ட அல்பர்டன்  என்னும் ஒர் இடமுண்டு. ஏஜன்சிக்கு பல லட்சம்கட்டி சென்று, விசா/வதிவிட உரிமை எல்லாம் இருந்தும், சேவ் எடுக்காமல், பல்விளக்கமல் ஊத்தை உடுப்புக்களுடன்  மது நாற்றத்துடன் க‌டந்து செல்பவர்களை உத்துப்பர்ர்த்து அண்ணா நீங்கள் சிறில‌ங்காவா எனக்கு ஒரு 10 பவுண் தாங்கோ சாப்பிட‌வில்லை என கேட்டும் ஒரு கூட்டத்த‌யும் காணலாம்.காசு கொடுத்த‌வுடன் உடனடியாக மதுவை வாங்கிக் குடிப்பார்கள். இவர்கள் எல்லாம் நம் தமிழ் பேசும் உறவுகள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நம்ம சங்கத்து உறுப்பினர் ஆரும் இருக்கிறதோ அங்கே

அஞ்சாறு வாசக வாசகிகள் இருக்கினம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

லூட்டன் பக்கம் பாதிப்பு,அசம்பாவிதம் ஏதும் இல்லைத்தானே?

10898340_470088976495802_3145618477071470853_n.jpg?_nc_cat=101&_nc_sid=7aed08&_nc_ohc=Gu8v_1HLKO4AX8oG8Vd&_nc_ht=scontent-dus1-1.xx&oh=2d9ddddf20ae7c0d148d49e5803fe182&oe=5F693C72

அண்ணர் அடிக்கடி வந்திறங்கிற ஏர்போர்டெல்லே.

ஆனால் உது பெயரிலதான் லண்டன். உண்மையில் லண்டலில் இருந்து வெகுதூரம்.

17 hours ago, colomban said:

ஓம் ஓம் இதற்கு கிட்ட அல்பர்டன்  என்னும் ஒர் இடமுண்டு. ஏஜன்சிக்கு பல லட்சம்கட்டி சென்று, விசா/வதிவிட உரிமை எல்லாம் இருந்தும், சேவ் எடுக்காமல், பல்விளக்கமல் ஊத்தை உடுப்புக்களுடன்  மது நாற்றத்துடன் க‌டந்து செல்பவர்களை உத்துப்பர்ர்த்து அண்ணா நீங்கள் சிறில‌ங்காவா எனக்கு ஒரு 10 பவுண் தாங்கோ சாப்பிட‌வில்லை என கேட்டும் ஒரு கூட்டத்த‌யும் காணலாம்.காசு கொடுத்த‌வுடன் உடனடியாக மதுவை வாங்கிக் குடிப்பார்கள். இவர்கள் எல்லாம் நம் தமிழ் பேசும் உறவுகள். 

இந்த கோஸ்டியள இப்ப ஒரு 3/4 வருசமா காணேல்லல. எல்லாம் கதை முடிஞ்சோ தெரியா.

  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2020 at 12:30, உடையார் said:

பிராட் கிரீன் இங்கு கடந்த ஏப்ரல் முதல் குற்றங்கள் நிலையான விகிதத்தில் அதிகரித்து வருகிறது. ஜுலை மாதத்தில் மட்டும் 290 பிராட்கிரீன்குற்றங்கள் பதிவாகியுள்ளன. இந்த இந்த ஆண்டு இதுவரை எந்த மாதத்திலும் இல்லாத அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும்.பொதுவான குற்றமாக 454 பதிவாகியுள்ளது.

பயர் பீல்டு இது தான் நகரின் குற்றங்களின் மைய இருப்பிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக 2294 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு குற்ற விகித 206,21 ஆக உள்ளது. இது சராசரியை விட நான்கு மடங்கு அதிகம்.நபருக்கு எதிரான வன்முறை மற்றும் திருட்டு குற்றங்கள் முறையே 582 மற்றும் 567 ஆகிய பதிவாகியுள்ளன

நம்ம ஏரியா! நாம இருக்கிறதால கெத்தாகத்தான் இருக்கு😜

  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2020 at 19:45, colomban said:

ஓம் ஓம் இதற்கு கிட்ட அல்பர்டன்  என்னும் ஒர் இடமுண்டு. ஏஜன்சிக்கு பல லட்சம்கட்டி சென்று, விசா/வதிவிட உரிமை எல்லாம் இருந்தும், சேவ் எடுக்காமல், பல்விளக்கமல் ஊத்தை உடுப்புக்களுடன்  மது நாற்றத்துடன் க‌டந்து செல்பவர்களை உத்துப்பர்ர்த்து அண்ணா நீங்கள் சிறில‌ங்காவா எனக்கு ஒரு 10 பவுண் தாங்கோ சாப்பிட‌வில்லை என கேட்டும் ஒரு கூட்டத்த‌யும் காணலாம்.காசு கொடுத்த‌வுடன் உடனடியாக மதுவை வாங்கிக் குடிப்பார்கள். இவர்கள் எல்லாம் நம் தமிழ் பேசும் உறவுகள். 

அப்படி பிச்சை  கேட்பவர்கள் ஏழு பேருக்கு மேல் ஸ்ரீலங்கா முஸ்லீம் அதில் இரண்டு பேர் குளிர் தாங்கமுடியாமல் போனவருடம் சவுத் கரோ வில் இறந்த பின்தான் எங்களுக்கே தெரியும் முஸ்லீம் என்று ஏன் அப்படி திரிகிறார்கள் என்று கேட்டதுக்கு இலங்கை தமிழர் என்று இவர்களால் இங்குள்ள ஹோமோ ஆபிசுக்கு நிரூபிக்க முடியவில்லையாம் வடகிழக்கு தமிழ் அல்லாமல் ஏலியன் தமிழில் கதைத்தால்  யார்தான் நம்புவார்கள் இருவரை இந்தியர் என்று சென்னைக்கு அவசரப்பட்டு அனுப்பி திருப்பி எடுத்த சம்பவமும் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.