Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரை நிறுத்த பிரபாகரன் இணங்கியிருக்க வேண்டும் - எரிக் சொல்ஹெய்ம்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரை நிறுத்த பிரபாகரன் இணங்கியிருக்க வேண்டும் - எரிக் சொல்ஹெய்ம்.!

Erik-Solheim-1.jpg

1998 முதல் 2009 வரை இலங்கையில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்புகள் குறித்து இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் தொடர்பாகவும் சமாதான முன்னெடுப்புகள் குறித்து மார்க் சால்டர் எழுதிய நூலை டுவிட்டரில் பகிர்ந்து, ஜெயான் ஜெயதிலக்க மற்றும் மார்க் சால்டருக்கும் இடையிலான இந்த விவாதம் கற்றுக்கொண்ட பாடங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவின் கீழ் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை மற்றும் வெள்ளைக் கொடி சம்பவத்திற்கு என்ன நடந்தது என்பது பற்றிய முழு வெளிப்பாடு தேவை என்றும் சமாதான முன்னெடுப்புகள் பற்றிய ஒவ்வொரு பதிவும் பொதுமக்களுக்கு வெளியிடப்பட வேண்டும் என்றும் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த எரிக் சொல்ஹெய்ம், இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபைக்கான விடுதலைப்புலிகளின் திட்டம் மற்றும் “வெள்ளைக் கொடி” விவகாரம் ஆகிய இரண்டின் உண்மைகளும் மார்க் சால்ட்டரின் “ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவர” என்ற புத்தகத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனக் கூறினார்.

மேலும் இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற இனத்தவர்களுக்கு முறையான சுய ஆட்சி மற்றும் சிறுபான்மை உரிமைகளை நிறுவ இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும் வன்முறை இல்லாமல், போராட நிறைய இருக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு கடந்த காலத்தில் செய்த அதே தவறுகளை வரலாற்றில் மீண்டும் மீண்டும் செய்வதைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும் என்றும் எரிக் சொல்ஹெய்ம் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் இடம்பெற்றபோது அமைதியாக அதை பார்த்துக்கொண்டு தாங்கள் இருக்கவில்லை என்றும் 2009 ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் மற்றும் அரசாங்கத்துடன் தாங்கள் தொடர்ந்தும் சமாதான தொடர்பில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது இந்திய மற்றும் அமெரிக்க ஆதரவுடன் அனைத்து தமிழ் பொதுமக்கள், விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் மற்றும் பணியாளர்களை வெளியேற்ற முன் வந்த போதும் பிரபாகரன் அதை தடுத்துவிட்டார் என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்.

அத்தோடு ஏப்ரல் 2009 இல் பிரபாகரன், தமிழ் மக்கள் மற்றும் விடுதலை புலி வீரர்கள் மற்றும் பணியாளர்களை வெளியேற்றுவது உள்ளிட்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட முடிவை மறுத்துவிட்டார்.

IMG-20200826-182709.jpg

இன்னொன்று மே மாதம் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோர் சரணடைய ஒப்புக்கொண்டபோதும் “வெள்ளைக் கொடி” சம்பவத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர் என்றும் இந்த இரண்டு உண்மைகளும் மறுக்க முடியாதவை என்றும் தெரிவித்தார்.

2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் போரை முடிவுக்கு கொண்டுவர பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்றும் இது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மற்றும் விடுதலை புலி உறுப்பினர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கும் என்றும் எரிக் சொல்ஹெய்ம் கூறினார்.

அந்த நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, இந்தியா அனைத்தும் ஆயுதங்கள் இல்லாமல் அனைவரையும் வெளியேற்ற எங்களுக்கு உதவ தயாராக இருந்தன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://vanakkamlondon.com/world/srilanka/2020/08/81997/

டிஸ்கி

மறுத்துரைக்க ஆரும் இல்லை அடிச்சு விடு தலீவா ..

  • Replies 69
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி

மறுத்துரைக்க ஆரும் இல்லை அடிச்சு விடு தலீவா ..

 எல்லாம் நடந்து முடிஞ்சு இப்ப பத்து வருசமாச்சுது.....தமிழினத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என யோசிக்கின்றார்களா?
எல்லோரும் அழிக்க வந்தவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இதன்போது இந்திய மற்றும் அமெரிக்க ஆதரவுடன் அனைத்து தமிழ் பொதுமக்கள், விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் மற்றும் பணியாளர்களை வெளியேற்ற முன் வந்த போதும் பிரபாகரன் அதை தடுத்துவிட்டார் என்றும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்தார்

இந்திய அமெரிக்க நலன்சார்ந்து எதையோ நடத்தும் நோக்கமாக இருக்கவேண்டும். அல்லது சிங்களத்துக்குக் கடிவாளமிட நினைவூட்டும் நோக்கமாக இருக்கவேண்டும்.

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் போரை முடிவுக்கு கொண்டுவர பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்றும் இது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மற்றும் விடுதலை புலி உறுப்பினர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்கும் என்றும் எரிக் சொல்ஹெய்ம் கூறினார்.

அப்படியென்றால்  ஏன் இன்னும் நீங்கள் இந்தப்படுகொலைகளைச் செய்தோரை  ஐநாவிற்குப் பாரப்படுத்தவில்லை. அல்லது அதற்காகக் குரல்கொடுக்கவில்லை. இல்லாத பிரபாகரன் மீது கையைக்காட்டும் பச்சைத் துரோகத்தை ஒரு இராஜதந்திரியாகவும் சமாதான முயற்சிகளின் சாட்சியாகவும் செய்வது சாமாதனத்தை விரும்பும் மக்களை ஏமாற்றும் செயலாகும்.  தமிழினத்தைக்  கைகுலுக்கியவாறு அழித்த சக்திகளில் நீங்களும் உள்ளடக்கம் என்பதைத் தெளிவாக விளம்புகின்றீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

large.E28E3C4E-8482-4981-8F0E-BB675455D200.jpeg.22a92e2025a2dbd698d298b836d4a631.jpeglarge.007DAAEC-C539-419F-BE96-A68FD884619A.jpeg.5a11a571d26d3fe4a1134ae611c1a3ea.jpeglarge.B7C7C208-0581-48CE-92B8-B89F830DDED2.jpeg.f21f1f18e2cbf4545f568ebbf2c6a406.jpeglarge.6D91EF1F-8453-49D6-AACF-AC51A8F5EF9B.jpeg.715eedbb3e3663e9081c94fc83cefff6.jpeg

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இவருடைய கருத்தை மறுதலிக்க ஒருவரும் உயிருடன் இல்லையே. 

அதுசரி, 

புலிகளையும் தமிழர்களையும் அழித்தவுடன் சமாதானத் தூதுவர்களின் கடமை முடிந்துவிட்டதா ?

நோர்வே சமாதான செய்யப் புறப்பட்ட இனப்பிரச்சனைகளை / போராட்டங்களை அவதானித்தால் உண்மை தெரியும் 🤥

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

இவருடைய கருத்தை மறுதலிக்க ஒருவரும் உயிருடன் இல்லையே. 

அதுசரி, 

புலிகளையும் தமிழர்களையும் அழித்தவுடன் சமாதானத் தூதுவர்களின் கடமை முடிந்துவிட்டதா ?

நோர்வே சமாதான செய்யப் புறப்பட்ட இனப்பிரச்சனைகளை / போராட்டங்களை அவதானித்தால் உண்மை தெரியும் 🤥

மனச்சாட்சி இல்லாத சர்வதேசம்.

இவர்கள் காதுகளுக்கு கேட்கும் வரை நாம் இன்னும் குரல் எழுப்பவேண்டும் அதனால் ஏதும் நன்மை விளையும் என நம்புகிறீகளா?

சர்வதேச சட்டம் என்பது பெரும்பாலும் நாடுகளாலேயே தீர்மானிக்கபடுவது. குறிப்பாக சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகள்.

இவர் இவ்வளவு எழுதுகிறார், புலிகளையும், அரசையும் தமது நாடு சார்பாக சர்வதேச தண்டனைக்கு உள்ளாக்கும் நடவடிக்கை ஏதும் எடுத்தாரா?

இந்தியா சரியான மத்தியஸ்தம் செய்யாது, சுயநலன் பார்க்கும் என்று இவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். இந்தியா 13 ஐ ஆவது பெற்று தந்தது. அதை தொடர்ந்து 16வது திருத்தம் தமிழ் மொழிக்கு உத்தியோக அந்தஸ்து கொடுத்தது.

இவர்களால்?

இவர் சொல்லுவதன் பிரகாரம் கூட, பிரபாகரன் மக்கள் வெளியேறுவதை தடுத்தார். அந்த மக்களை அரசு கண்மூடித்தனமாக தாக்கியது.

பிரபாகரனும் அவர் இயக்கமும் இப்போ இல்லை. ஆனால் அரசும் அதன் கர்த்தாக்களும் இன்னும் உளர்.

அவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்க தேவையில்லை. தண்டிக்க போகிறோம் எனும் ராஜதந்திர அழுத்தத்தை கொடுத்து, தமிழருக்கு ஒரு நியாயமான தீர்வை பெற்று கொடுத்திருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் இவர் சொல்வதில் பல உண்மையுண்டு. 

அவையாவன

1. புலிகள் மக்கள் வெளியேறுவதை தடுத்தார்கள்

2. அரசு மக்களை தாக்கியது

3. ரஜீவை புலிகளே கொன்றார்கள்

4. இரு தரப்பின் ஏட்டிக்கு போட்டியான சதியாலே சமாதானம் முறிந்தது

இவர்கள் மீதான எனது கோபம் எல்லாம் 2009 இன் பின் இவர்கள் எம்மக்களை அப்படியே கை கழுவி விட்டார்கள் என்பதில்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

கொடுத்த வேலையே புலிகளை முடிக்க வேண்டும் என்பது. திறம்பட செய்து முடித்தார்.

புலிகளுக்கும் அது தெரிந்திருந்தது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

3. ரஜீவை புலிகளே கொன்றார்கள்

புலிகள் ராஜீவை கொல்லவில்லை என ஆயிரம் கட்டுரைகளும் ஆய்வுகளும் இருக்கும் போது தாங்களும் தங்களைப் போன்றவர்களும் ஒரு அறிக்கையை மட்டும் வைத்து புலம்புவதன் மர்மம் என்னவோ?

4 minutes ago, goshan_che said:

4. இரு தரப்பின் ஏட்டிக்கு போட்டியான சதியாலே சமாதானம் முறிந்தது

உரிமைகளை கேட்டால் அதற்கு பெயர் ஏட்டிக்கு போட்டியா?
அல்லது குறைந்த பட்ச அதிகாரங்களை பெற்று வயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப் பதிலளிக்கக்கூடிய ஒருவர் இப்போதும் இருக்கிறார் அவர்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இறுதிப்போரில் நடந்த நிறையவிடையங்களை அவர் இதுவரை வெளியிடாமலுள்ளார். காரணம் சிலவேளை யாருடையதோ அறிவுறுத்தலாகவும் இருக்கலாம்.

தவிர அவரைவிடச் சிலருக்கும் இதுபற்றித்தெரியும் அதாவது கடைசியில் அனைவருடனும் தொடர்பிலிருந்தவர்கள்.

ஒரு திரியில் பையன் அவர்கள் அமெரிக்காவில் யாரோ பாதுகாப்பாக இருக்கிறார் என எழுதியது நினைவிலிருக்கலாம் அப்படி ஒரு முயற்சி எடுத்தது உண்மைதான் ஆனால் கடைசியில் அது சரிவரவிலை என்பதையே நான் அறிந்தது. 

தலைவரது வீரமரணத்துக்குப் பின்பு பொட்டரும் தனது முடிவினைத் தானே தேடிக்கொண்டார் என்பதே இதுவரை நான் அறிந்த உண்மை.

ஆனால் தமிழரில் இவ்வளவு அழிவுக்கும் ரணில் எரிக் கருணா மற்றும் ராஜபக்சாக்கள் தவிர இந்திய மேற்குமாடமும் சோணியாவும்தான் காரணம்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Elugnajiru said:

இதற்குப் பதிலளிக்கக்கூடிய ஒருவர் இப்போதும் இருக்கிறார் அவர்தான் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இறுதிப்போரில் நடந்த நிறையவிடையங்களை அவர் இதுவரை வெளியிடாமலுள்ளார். காரணம் சிலவேளை யாருடையதோ அறிவுறுத்தலாகவும் இருக்கலாம்.

அதைத்தான் அண்ணே நானும் சொன்னேன் இவரும், சந்திரகாந்தன் சந்திரநேருவும்  இன்னும் சிலரும் போடாமல் இருக்க என்ன காரணம். .?? சொன்னால் சைக்கிள் இன்னும் வேகமாக ஓடுமே.😀😀😀

இந்த கேள்வியை சைக்கிளுக்கு வக்காலத்து வாங்கும் அனைவரையும் பார்த்து கேட்க விரும்புகிறேன் அண்ணே 😝

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

புலிகள் ராஜீவை கொல்லவில்லை என ஆயிரம் கட்டுரைகளும் ஆய்வுகளும் இருக்கும் போது தாங்களும் தங்களைப் போன்றவர்களும் ஒரு அறிக்கையை மட்டும் வைத்து புலம்புவதன் மர்மம் என்னவோ?

வேறு ஒன்றும் இல்லை - பிரபா தன் வாயால் சொன்ன வார்தைகள்.

கொஞ்சம் யோசியுங்கள். பிரபா தன்னை ஒர் இராணுவ தளபதி என்ற நிலைக்கு அப்பால், ஒரு சிவில் தலைவராக முன்னிறுத்தி தன் தரப்பு நியாயங்களை, தெளிவுபடுத்தலை சொல்ல விழைந்த நிகழ்வே அவரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

அது நடந்த போது:

1. புலிகள் மீது இந்த குற்றம் சாட்டபட்டு, வழக்கு நடந்து தீர்ப்பும், பிரபாவுக்கு மேல் - வந்து விட்டது.

2. இதன் பலனாக ஓரிரவில் ஆதரவு தளம் என்ற நிலையில் இருந்து அபயாய நிலம் என்ற நிலைக்கு தமிழகம் போயிருந்தது.

3. இந்திய பத்திரிகையாளர்கள் - புரொண்ட் லைன், இந்து இப்படி பல வந்திருந்தார்கள். இந்த கேள்வி வரும் என்பதை ஊகிக்க பாலா போன்ற ஒருவர் தேவையில்லை, நீங்களும் நானுமே ஊகித்திருப்போம். 

4. கேள்விகள் கேட்க பட்ட போது, பாலா, பிரபா பக்கம் திரும்பி நாம் முன்பே ஆலோசித்த பதிலை சொல்வோம் என்ற தொனியில் தமிழில் பேசியதா நியாபகம்.

5. இந்த பின் புலத்தில் அவர் சொன்ன பதில் என்ன? இது ஒரு துன்பியல் சம்பவம். இதை மறந்து இந்தியாவோடு நட்பாக நாம் விரும்புகின்றோம்.

6. நீங்கள் பக்கத்து வீட்டுகாரரை கொலை செய்யவில்லை. கொலைசெய்தீர்கள் என குற்றசாட்டு எழுந்து, உங்களை போலீஸ் கேள்வி கேட்டால், நீங்கள் ஆணித்தரமாக மறுபீர்களா? அல்லது அது ஒரு துன்பியல் சம்பவம். பக்கத்து வீட்டோடு தொடர்ந்து நல்லுறவை நான் விரும்புகிறேன் என்பீர்களா?

7. பிரபாவின் பதிலை வைத்து, என் அரிசிக்கு எட்டிய படி: தாங்கள்தான் செய்தோம் (இதில் வேறு பலர் சம்பந்த பட்டு இவர்களை மட்டும் மாட்டி விட்டு தப்பினார்கள்) என்பது இந்தியாவுக்கு ஐயம் திரிபற தெரிந்து விட்டது. இதை இனி மறைத்து பயன் இல்லை. நேரடியாக ஒத்துகொண்டால் எமக்கும் சிக்கல். அத்தோடு இந்தியா விரும்பினாலும் அதற்கான எதிர்வினையை ஆக்கும் படி இந்தியாவில் உள்நாட்டு நிர்பந்தம் உருவாகலாம். ஒரேயடியாக மறுத்தாலும் இந்தியாவை சினமூட்டலாம். எனவே “நடந்தது நடந்து போயிற்று, இனி நடப்பது நல்லதாக நடக்கட்டும்” என்ற பிரபாவின் இந்தியாவுக்கான சமிக்ஞையே அந்த பதில்.

8. அப்போதைய நிலையில் அது பாலா அண்ணையின் ஒரு diplomatic master stroke கூட.

இந்த விளக்கம் எனக்கு இருப்பதால் - நான் வேறு எந்த அறிக்கையையோ, பழனி பாபா போன்ற ISI ஏஜெண்டுகள் சொல்லியதையோ கருத்தில் எடுப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, குமாரசாமி said:

புலிகள் ராஜீவை கொல்லவில்லை என ஆயிரம் கட்டுரைகளும் ஆய்வுகளும் இருக்கும் போது தாங்களும் தங்களைப் போன்றவர்களும் ஒரு அறிக்கையை மட்டும் வைத்து புலம்புவதன் மர்மம் என்னவோ?

இந்த ஆயிரம் கட்டுரைகளும் ஆய்வுகளும், அல்லது அவற்றில் எதிலாவது ராஜீவை யார் கொன்றது என்று தெளிவாக ஆதாரங்களோடு நிருபித்துள்ளார்களா?

17 minutes ago, குமாரசாமி said:

உரிமைகளை கேட்டால் அதற்கு பெயர் ஏட்டிக்கு போட்டியா?
அல்லது குறைந்த பட்ச அதிகாரங்களை பெற்று வயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா?

வாயை திறந்து வைத்திருக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. 😱

  • கருத்துக்கள உறவுகள்

பழனி பாபாவை விடுங்க அவர் ராஜீவ் இடுப்பிலே கிரனைட்டுடன் தான் திரிவார் எண்டு அவிட்டு விட்டவர்.

பாலா அண்ணை தன்னுடைய இறுதி NDTV இற்கு வழங்கின பேட்டியில் மன்னிப்புக்கேட்டு அதை T.S தலைவரிடம் போட்டு கொடுத்து ஊதிவிட்டு, பேச்சுவார்த்தை குழுவில் இருந்து உடல்நல குறைவைக்காட்டி ஓய்வெடுக்க சொன்னது தெரியுமோ அண்ணை.

அந்தாள் சாகும்போதும் வித்தியரை கூப்பிட்டு என்ன சொல்லிவிட்டவர் என்றாவது தெரியுமோ அண்ணே.

சரி விடுங்கோ 

கூவும் குரல் வன்னியிலே கேட்டிடுமோ லண்டனிலே என்று எங்கட சாந்தன் அண்ணை பாடின பாட்டு உங்களுக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும் அண்ணே 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, கற்பகதரு said:

இந்த ஆயிரம் கட்டுரைகளும் ஆய்வுகளும், அல்லது அவற்றில் எதிலாவது ராஜீவை யார் கொன்றது என்று தெளிவாக ஆதாரங்களோடு நிருபித்துள்ளார்களா?

ராஜீவை புலிகள் கொல்லவில்லை என்று நிரூபித்திருக்கிறார்கள்.
ராஜீவை கொன்றவர்களை தேடிப்பிடித்து நிரூபிக்க வேண்டிய அவசியம் மற்றவர்களின் வேலையல்ல.

6 minutes ago, கற்பகதரு said:

வாயை திறந்து வைத்திருக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. 😱

திறந்து வைத்திருக்கும் உரிமை உங்களுக்கு இல்லையா?😱

  • கருத்துக்கள உறவுகள்

கடந்தகாலங்களில் தேசியத்தலைவர் அரசியல் ரீதியான பல பலகீனமான முடிவெடுத்துவிட்டார் எனினும் அவர் தன்னளவில் நேர்மையாகவே இருந்தார் என்பதை இப்போது தேசியம் பேசும் அனைவரும் மனதளவில் ஒத்துக்கொண்டாலும் தேசியத்தலைவரது வீரமரணத்துக்கு மதிப்பளித்து அவ்விடையத்தை விமர்சிக்காது விட்ட்டுவிட்டார்கள் அதுவே இப்போது விரும்பத்தக்கது.

அதேபோன்றே இறுதி யுத்தத்தில் நடந்த பலவிடையங்களை நாம் வெளியிடுவதால் அரசியல் ரீதியான பின்னடைவுகள் மீண்டும் தமிழினம் எதிர்நோக்கலாம் இதில் முதலாவது பத்தி எனது கருத்தும் இரண்டாவது பத்தி எனது எதிர்வுகூறலுமாகும் ஒருசிலர் இக்கருத்துடன் உடன்படலாம்.

நான் தனிப்பட்ட ரீதியில் கஜேந்திரகுமாருடன் இதுபற்றிக்கேட்டிருக்கிறேன் எனது கேள்விக்கான பதிலை அவ்வேளையில் தரமுடாமல் போனது. ஆனால் அதேவேளை அவர் கூறினார் இதற்கான பதிலகளை நாம் பெறவேண்டுமாகவிருந்தால் சர்வதேச நாடுகளினது ஐ நா பாதுகாப்புச் சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துடனதும் நடிநிலையான விசாரணையில் பல உண்மைகள் வெளியில் வரலாம் இப்பொது அவை வந்தால் அனைத்தையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிடலாம் எனக்கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, குமாரசாமி said:

புலிகள் ராஜீவை கொல்லவில்லை என ஆயிரம் கட்டுரைகளும் ஆய்வுகளும் இருக்கும் போது தாங்களும் தங்களைப் போன்றவர்களும் ஒரு அறிக்கையை மட்டும் வைத்து புலம்புவதன் மர்மம் என்னவோ?

உரிமைகளை கேட்டால் அதற்கு பெயர் ஏட்டிக்கு போட்டியா?
அல்லது குறைந்த பட்ச அதிகாரங்களை பெற்று வயை மூடிக்கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா?

கேட்டவற்றை சொல்லவில்லை. ஏட்டிக்கு போட்டியான கொலைகள் இதர சம்பவங்கள்.

2 minutes ago, முதல்வன் said:

பழனி பாபாவை விடுங்க அவர் ராஜீவ் இடுப்பிலே கிரனைட்டுடன் தான் திரிவார் எண்டு அவிட்டு விட்டவர்.

பாலா அண்ணை தன்னுடைய இறுதி NDTV இற்கு வழங்கின பேட்டியில் மன்னிப்புக்கேட்டு அதை T.S தலைவரிடம் போட்டு கொடுத்து ஊதிவிட்டு, பேச்சுவார்த்தை குழுவில் இருந்து உடல்நல குறைவைக்காட்டி ஓய்வெடுக்க சொன்னது தெரியுமோ அண்ணை.

அந்தாள் சாகும்போதும் வித்தியரை கூப்பிட்டு என்ன சொல்லிவிட்டவர் என்றாவது தெரியுமோ அண்ணே.

சரி விடுங்கோ 

கூவும் குரல் வன்னியிலே கேட்டிடுமோ லண்டனிலே என்று எங்கட சாந்தன் அண்ணை பாடின பாட்டு உங்களுக்கு கட்டாயம் தெரிஞ்சிருக்கும் அண்ணே 

எனக்கு இவை எதுவும் தெரியாது. இது சம்பந்தமான என் விளக்கம், பிரபா கொடுத்த பதிலை என் தர்க அறிவுக்கு ஏற்ப மட்டுமே.

அந்த NDTV பேட்டி ஒளிபரப்பாகியதா? இல்லை எனில் ஏன்?

பாலா அண்ணையை ஓய்வில் போக சொன்னது தெரியும். சில விடயங்கள் பிடிக்காததால் என்றும் கேள்விப்பட்டேன். அதற்கு மேல் தெரியாது.

எந்த வித்தி? என்ன சொன்னார்?

சாந்தன் இதுக்குள் ஏன் வாறார்? பூடகமா சொல்லாமல் நேரடியாக சொன்னால் நாமும் அறிவோம்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே கொஞ்சம் தேடிப்பாருங்க எல்லாம் கிடைக்கும்.

பாலா அண்ணை கொஞ்சம் அதிகமாக வருத்தம் தெரிவிச்சதை எல்லாருமா சேர்ந்து மன்னிப்பு என்று ஆக்கி அவருக்கு ஆப்படிச்சவங்கள் அண்ணை. அதுக்கு எல்லாரும் உடந்தை. எப்படியாவது அவரை பேச்சுவார்த்தையில் இருந்து அகற்றவேணும் என்று விரும்பின சக்திகள் எல்லாரும். (இந்தியா உட்பட)

நம்ம ஆள் தான் கொஞ்சம் உணர்ச்சி கூடினவர். (உங்களுக்கு தெரியாததா என்ன)

நம்ம உதயன் வித்தியர் தான். 

கடைசியா சாந்தனின் பாலா அண்ணனின் பாட்டு கேட்டிருப்பீங்கள் என்று தமாஷுக்கு சொன்னேன் அண்ணே 😝

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முதல்வன் said:

அண்ணே கொஞ்சம் தேடிப்பாருங்க எல்லாம் கிடைக்கும்.

நம்ம உதயன் வித்தியர் தான். 

கடைசியா சாந்தனின் பாலா அண்ணனின் பாட்டு கேட்டிருப்பீங்கள் என்று தமாஷுக்கு சொன்னேன் அண்ணே 😝

பார்கிறேன். என்ன மனுசன்யா நீர்🤣 ஆர்வத்த கிண்டி விடுறீரா, சும்மா கத வுடுறீரா என்றே தெரிய மாட்டேங்குது🤣

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு நாள் முதல்வர் அண்ணை மிச்சத்தை நீங்க தான் பார்க்கோணும் அண்ணே 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

பார்கிறேன். என்ன மனுசன்யா நீர்🤣 ஆர்வத்த கிண்டி விடுறீரா, சும்மா கத வுடுறீரா என்றே தெரிய மாட்டேங்குது🤣

உந்த நடிப்புக்கு சிவாஜிகணேசனே தோத்துப்போவார்.

10 minutes ago, goshan_che said:

எனக்கு இவை எதுவும் தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

பார்கிறேன். என்ன மனுசன்யா நீர்🤣

அண்ணே நீங்க திட்டும்போது ஒரு சந்தோசம் தானா வருகுது 😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரி சமாதான தூதுவர்களின் பங்களிப்பு  என்ன என்பதாக இருக்கவேண்டும். துரதிட்டவசமாக எப்போதும்போலவே நேர் எதிராக ராஜீவை கொன்றது யார் என்கின்ற வகையில் போகிறது. 😏

திருந்தவே மாட்டோம். ☹️

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, முதல்வன் said:

அண்ணே கொஞ்சம் தேடிப்பாருங்க எல்லாம் கிடைக்கும்.

நம்ம உதயன் வித்தியர் தான். 

கடைசியா சாந்தனின் பாலா அண்ணனின் பாட்டு கேட்டிருப்பீங்கள் என்று தமாஷுக்கு சொன்னேன் அண்ணே 😝

https://www.ndtv.com/video/shows/talking-heads/talking-heads-anton-balasingham-aired-july-2006-312369
 
ஓமோம் இதை விட தெளிவா மன்னிப்பு கேட்க முடியாது. வயசு போகுது. எனக்கு இது நடந்தது நியாபகமே இல்லை.

பாவம் பாலா வரப்போகும் ஆபத்தை அறிந்து முடிந்தளவு முயற்சித்துள்ளார். என் மனதில் இன்னும் ஒரு அடி மேலே போகிறார்🙏🏾

  • கருத்துக்கள உறவுகள்

கப்டன்,

அந்த சமாதான முயற்சிகள் தோற்றுப்போக பாலா அண்ணை இல்லாமல் போனதும் தான் காரணம். 

அதுக்கு ரஜீவின் படுகொலையை வைச்சு இந்தியா ஆடின நாடகமும் தான் காரணம்.

அதை ஒருக்காலும் நம்ம எரிக்கர் வாயை திறந்து சொல்லமாட்டார். கடைசியிலே காப்பாத்த இந்தியா வந்தமாதிரியும் தலைவர் மறுத்த மாதிரியும் மட்டும் தான் சொல்லுவார் போல 😂

சரி நாம வந்த வேலை முடிஞ்சுது இனி திரி பத்தி எரியட்டும். 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.