Jump to content

முட்டைப் பொரியலை இப்படி செய்து பாருங்கள்

nige

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்...ம்... தண்ணிக்கு நல்ல பொரியல்

சமையல் தொடக்கமே முட்டை பொரியலுடன்தான்...

இப்ப மகன் முட்டை பொரியல் தொடங்கிவிட்டார், மகள் இன்னுமில்லை...😁

நன்றி நிகே பகிர்வுக்கு

முட்டை பொரியலும் புட்டும் கட்டி பாடசாலைக்கு அம்மா தந்துவிடுவா.. எப்படா மதிய இடைவேளை வருமென்றுதான் இருக்கும்..

படிப்பைவிட முட்டை பொரியலும் புட்டும்தான் நினைப்பில இருக்கும் 😂

Posted
20 hours ago, உடையார் said:

எங்கள் வீட்டிலும் பாடசாலைக்கு இதே சாப்பாடுதான்.திங்கள், வெள்ளி நாட்களில் தோசை. அவை மறக்க முடியாத நாட்கள்.

Posted
On 16/9/2020 at 21:50, ஈழப்பிரியன் said:

புதுமையான தோசைக்கல்லாக இருக்கிறது.
செய்முறைக்கு நன்றி.

இது இரும்பில் செய்த பழையகால தோசைக்கல்.அம்மாவிற்கு nonstick தோசைக்கல். பிடிக்காது என்பதால் காலம் மாறினாலும் நம் வீட்டு தோசைக்கல் என்னும் மாறவில்லை...நன்றி ஈழப்பிரியன் உங்கள் கருத்து பகிர்விற்கு 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உங்களின் சிறப்பான விளக்கத்தால் சாதாரண முட்டைப் பொரியல்கூட  அசாதாரண முட்டைப் பொரியலாக மாறிவிட்டிருக்கு......பொதுவாக பழையகால தோசைக்கல் சீனச்சட்டியில்தான் இருக்கும்......!  😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, nige said:

இது இரும்பில் செய்த பழையகால தோசைக்கல்.அம்மாவிற்கு nonstick தோசைக்கல். பிடிக்காது என்பதால் காலம் மாறினாலும் நம் வீட்டு தோசைக்கல் என்னும் மாறவில்லை...நன்றி ஈழப்பிரியன் உங்கள் கருத்து பகிர்விற்கு 

உங்கள் அம்மாவிற்கு விருப்பமான...  இரும்பு தோசைக்கல் என்ற படியால்தான்...
முட்டைப் பொரியல்... திருப்பி போடும் போது, பிய்யாமல் அழகாக வந்தது.

நம் வீட்டில், எப்படி பிரட்டினாலும்...  பொரியல் பிய்ந்து விடும் என்பதால்..
அதனை பிரட்ட முன்... நான்கு துண்டுகளாக வெட்டி விடுவார்கள்.

இந்தப் பொரியலுக்கு.... ஒரு  தக்காளிப் பழத்தையும்,
சிறு துண்டுகளாக வெட்டிப் போட, இன்னும்.. சுவையாக இருக்கும்.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/9/2020 at 07:48, nige said:

நாளை தொடக்கம் புரட்டாசி என்டாலும் முட்டை சைவம் என்டபடியால் தப்பித்தன். 👍பகிர்விற்கு நன்றி..👌

  • கருத்துக்கள உறவுகள்
Posted
17 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நாளை தொடக்கம் புரட்டாசி என்டாலும் முட்டை சைவம் என்டபடியால் தப்பித்தன். 👍பகிர்விற்கு நன்றி..👌

சனி பகவானுக்கு... விரதம் இருக்கின்ற நாளை, நினைவூட்டியமைக்கு... நன்றி தோழர்.💓

Posted
2 hours ago, suvy said:

உங்களின் சிறப்பான விளக்கத்தால் சாதாரண முட்டைப் பொரியல்கூட  அசாதாரண முட்டைப் பொரியலாக மாறிவிட்டிருக்கு......பொதுவாக பழையகால தோசைக்கல் சீனச்சட்டியில்தான் இருக்கும்......!  😁

பாராட்டுக்கு மனம் நிறைந்த நன்றி சுவி...இது சீனச்சட்டியாக கூட இருக்கலாம்.ஆனால் பாரம் என்னவோ இரும்புமாதிரித்தான் இருக்கு...

2 hours ago, தமிழ் சிறி said:

உங்கள் அம்மாவிற்கு விருப்பமான...  இரும்பு தோசைக்கல் என்ற படியால்தான்...
முட்டைப் பொரியல்... திருப்பி போடும் போது, பிய்யாமல் அழகாக வந்தது.

நம் வீட்டில், எப்படி பிரட்டினாலும்...  பொரியல் பிய்ந்து விடும் என்பதால்..
அதனை பிரட்ட முன்... நான்கு துண்டுகளாக வெட்டி விடுவார்கள்.

இந்தப் பொரியலுக்கு.... ஒரு  தக்காளிப் பழத்தையும்,
சிறு துண்டுகளாக வெட்டிப் போட, இன்னும்.. சுவையாக இருக்கும்.  

கருத்திற்கு நன்றி தமிழ் சிறி

எனக்கும் தக்காளி சேர்த்து பொரித்து பாணிற்குள் வைத்து சாப்பிட பிடிக்கும்.அம்மாவிற்கு முட்டை பொரியல் என்றால் இந்த முறையில்தான் பொரிக்க வேண்டும் . முட்டைக்கு ஏன் தக்காளியை போடுறாய் எண்டு கேட்பா. அதனால புட்டிற்கு முட்டை செய்யும்போது தக்காளி சேர்ப்பதில்லை. மற்ற நேரங்களில் நானும் தக்காளி சேரப்பதுண்டு. நன்றி 

Posted
8 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நாளை தொடக்கம் புரட்டாசி என்டாலும் முட்டை சைவம் என்டபடியால் தப்பித்தன். 👍பகிர்விற்கு நன்றி..👌

இந்த முட்டை பற்றிய தகவலை என் கணவருக்கு தெரியாமல் பாத்துக்கொள்ளணும். 

Posted
6 hours ago, சுவைப்பிரியன் said:

இப்படியும் ஒருக்கதல் செய்தால் போச்சு.

செய்து பார்த்திட்டு சொல்லுங்கள். கருத்திற்கு நன்றி 

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.