Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

hindia-issue.png   loan-hindi-1600693466.jpg

"ஹிந்தி தெரியாதா? லோன் இல்லை" என கூறிய வங்கி மேலாளர் மீது மான நஷ்ட ஈடு கேட்டு ஓய்வுபெற்ற மருத்துவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து கடைசியாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது சொந்த ஊர் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள யுத்தப்பள்ளமாகும். இவருக்கு யுத்தப்பள்ளம், ஜெயங்கொண்டம் பகுதிகளில் சொந்த நிலம் மற்றும் வீடு ஆகியவை உள்ளது. இவர் கங்கைகொண்டசோழபுரத்திலுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கணக்கு வைத்து வரவு-செலவு பார்த்து வருகிறார்.

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகேயுள்ள அவரது இடத்தில் வணிக வளாகம் கட்ட திட்டமிட்டு கங்கைகொண்டசோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார். வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் பட்டேல் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டுள்ளார்.

அப்போது பேசிய வங்கி மேலாளர், "Do u know Hindi" (உனக்கு ஹிந்தி தெரியுமா?) என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர் "I dont know Hindi, but I know Tamil and English" (எனக்கு ஹிந்தி தெரியாது ஆனால் தமிழும், ஆங்கிலமும் தெரியும்) என ஆங்கிலத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் வட இந்திய வங்கி மேலாளரோ, "I am from Maharashtra, I know Hindi. Language problem" (நான் மகாராஷ்டிராவில் இருந்து வருகிறேன், எனக்கு ஹிந்தி தெரியும், மொழி பிரச்சினை) என தெரிவித்துள்ளார். மருத்துவர் மீண்டும் தனது ஆவனத்தை காண்பித்து, இதே வங்கி கிளையில்தான் கணக்கு வைத்துள்ளேன் என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது என தெரிவித்த போதும் வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல் கடன் கொடுக்க இயலாது என தெரிவித்துள்ளார். 

இதனால் சோர்வடைந்து வீட்டிற்கு திரும்பி வந்த மருத்துவர், மொழி பிரச்சனை காரணமாக அடிப்படை உரிமையை மறுத்து கடன் தர மறுத்ததால் தான் மன உளைச்சல் ஏற்பட்டதாக தெரிவித்து வங்கி மேலாளருக்கு மான நஷ்ட்டஈடு கேட்டு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். மேலும் நீதிமன்றம் செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

கங்கை முதல் கடாரம் வரை சென்று போரிட்டு வெற்றி பெற்ற இராசேந்திர சோழனின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹிந்தி தெரியாது என்ற காரணத்தினால், கடன் கிடையாது என மேலாளர் தெரிவித்தது தன்னை மிகவும் வேதனை படுத்தியதாக ஓய்வு பெற்ற அரசு தலைமை மருத்துவர் வருத்ததுடன் தெரிவித்தார்.

நியூஸ்7

Edited by ராசவன்னியன்

  • ராசவன்னியன் changed the title to "ஹிந்தி தெரியாதா? லோன் இல்லை" - இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர்
  • கருத்துக்கள உறவுகள்

119710468_3389736094453821_7507458530625069952_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=MPpDpiw9N1QAX_gJ8Qs&_nc_ht=scontent-frt3-2.xx&oh=379f8b4ec2ef1ef09a4db34845d1fb9b&oe=5F8F4E78

119572333_3351610081620183_7076288439152808800_n.jpg?_nc_cat=108&_nc_sid=dbeb18&_nc_ohc=ZWab35hhUFUAX_q1meh&_nc_ht=scontent-frt3-1.xx&oh=c2281cc011f872fdc89ef060d36b117e&oe=5F8DF248

119979797_350211302765321_5708619371700895215_n.jpg?_nc_cat=100&_nc_sid=dbeb18&_nc_ohc=Tb_LAAu0k7MAX980Lsx&_nc_ht=scontent-frx5-1.xx&oh=b2f594f7d2507de8e7984ff7c32de361&oe=5F8F62E7

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ராஜவன்னியன், எனக்குத் தெரிகிறது...
உங்கள் நாட்டு... இணைய வழங்கியில், சில கட்டுப்பாடுகள் இருக்கலாம் என கருதுகின்றேன். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

ராஜவன்னியன், எனக்குத் தெரிகிறது...
உங்கள் நாட்டு... இணைய வழங்கியில், சில கட்டுப்பாடுகள் இருக்கலாம் என கருதுகின்றேன். :)

அது நாட்டு கட்டுப்பாடு இல்லை, அலுவலக கட்டுப்பாடு..! 😜

ப்ராக்சி செர்வர் முகவரியை மாற்றினால் படங்கள் தெரிகின்றன. :)

21 minutes ago, தமிழ் சிறி said:

119979797_350211302765321_5708619371700895215_n.jpg?_nc_cat=100&_nc_sid=dbeb18&_nc_ohc=Tb_LAAu0k7MAX980Lsx&_nc_ht=scontent-frx5-1.xx&oh=b2f594f7d2507de8e7984ff7c32de361&oe=5F8F62E7

இதுவே சிறந்த வழி..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

அது நாட்டு கட்டுப்பாடு இல்லை, அலுவலக கட்டுப்பாடு..! 😜

ப்ராக்சி செர்வர் முகவரியை மாற்றினால் படங்கள் தெரிகின்றன. :)

வேலைக்குப் போனால்... வேலையை செய்ய வேணும்.
அதை விட்டிட்டு... கொம்புயூட்டரை, நோண்டிக்  கொண்டிருந்தால்...
ஷேக்குக்கு...  கோவம் வரும் தானே....    :grin:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

வேலைக்குப் போனால்... வேலையை செய்ய வேணும்.
அதை வீட்டிடு... கொம்புயூட்டரை, நோண்டிக்  கொண்டிருந்தால்...
ஷேக்குக்கு...  கோவம் வரும் தானே....    :grin:

நான்கு மாதமாக கடும் வேலைப் பளு..

கோடை காலம், இரண்டு நாட்களுக்கு முன் முடிந்து இப்பொழுது வசந்த காலம்..!

இன்று கடும் புகை மூட்டமாக இங்கே இருக்கிறது.. மனசும் லேசாக பறக்கிறது..!!🥰

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ராசவன்னியன் said:

நான்கு மாதமாக கடும் வேலைப் பளு..

கோடை காலம், இரண்டு நாட்களுக்கு முன் முடிந்து இப்பொழுது வசந்த காலம்..!

இன்று கடும் புகை மூட்டமாக இங்கே இருக்கிறது.. மனசும் லேசாக பறக்கிறது..!!🥰

எங்களுக்கு... இன்றிலிருந்து, இலையுதிர் காலம் ஆரம்பிக்கன்றது.
குளிர் வரப்  போகுது என்பதற்கான முன்னோட்டம்.
இனி... ஜக்கெற், தொப்பி, கையுறை என்று மெல்ல மெல்ல மாட்டிக் கொள்ள வேணும். 🥶

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த வங்கிக்கு மதுரையில் நடந்த கூத்து..

EigG4hpU4AAhPpq?format=jpg&name=900x900

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ராசவன்னியன் said:

அந்த வங்கிக்கு மதுரையில் நடந்த கூத்து..

மதுரையில் மட்டும் அல்ல தமிழ்நாடு முழுக்க இருக்கும் அந்த வங்கியின் ஹிந்தி எழுத்துக்கள் அழிக்கப்படணும் .

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ராசவன்னியன் said:

அந்த வங்கிக்கு மதுரையில் நடந்த கூத்து..

EigG4hpU4AAhPpq?format=jpg&name=900x900

நாங்கள் சிங்கள 'சிறீ' அழிப்புப் போராட்டம் நடாத்தி தமிழ் காவல்துறை அதிகாரியிடம் உதை வாங்கிய காலம் ஞாபகத்திற்கு வருகிறது.🤔

தமிழகத்தில் தமிழ் காவல்துறையினரும் கழுதைப்பால் குடிப்பதாகக் கேள்வி. 😵

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, colomban said:

இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டும். 

எந்த சட்ட வரையரையில் குறிப்பிடப்பட்டுள்ளது..?images?q=tbn:ANd9GcRfHeCOjFIDgxNAnhm8gK1aEUpWFh78uO6e-Q&usqp=CAU

Update:

இந்தி சர்ச்சை: கங்கைகொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயண் பணியிடமாற்றம்..!

Eig2cjgVkAAvZ1V?format=jpg&name=small

Eig58ILVoAE7S_k?format=jpg&name=small

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"இந்தி தெரியாதா? லோன் இல்லை": வங்கி மேலாளர் பணியிடமாற்றம்!

97195.jpg

பாலசுப்பிரமணியன்

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயணன் காம்ளேவை பணியிட மாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற தலைமை அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு யுத்தப்பள்ளம், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் பல்வேறு இடங்களில் சொந்த நிலம், வீடு ஆகியவை உள்ளன. இதையடுத்து ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனது இடத்தில் வணிக வளாகம் கட்ட முடிவு செய்து கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு லோன் கேட்டு சென்றுள்ளார். வங்கியில் தற்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த விஷால் நாராயணன் காம்ளே என்பவர் கிளை மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் சென்று பாலசுப்பிரமணியன் தனது இடம் சம்பந்தமான ஆவணங்கள், வரவு செலவு கணக்குகள் மற்றும் வருமான வரி செலுத்தும் படிவம் ஆகியவற்றை காண்பித்து கடன் கேட்டுள்ளார்.

அப்போது பேசிய வங்கி மேலாளர், “Do u know Hindi?” என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார், அதற்கு மருத்துவர் “I don’t know Hindi, but I know Tamil and English” என ஆங்கிலத்தில் பதில் அளித்துள்ளார். “I am from Maharashtra, I know Hindi. Language problem” என தெரிவித்துள்ளார் மேலாளர்.

மருத்துவர் மீண்டும் தனது ஆவணத்தை காண்பித்து, "நான் உங்கள் கிளையில் தான் கணக்கு வைத்துள்ளேன். என்னிடம் எல்லா ஆவணங்களும் உள்ளது" என தெரிவித்த போதும் வங்கி மேலாளர் மீண்டும் மீண்டும் மொழி பற்றியே பேசி, கடன் சம்பந்தமாக எந்த ஆவணத்தையும் பார்க்காமல், "கடன் கொடுக்க இயலாது" என தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற மருத்துவர் வங்கி மேலாளருக்கு மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இதனிடையே திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்தியை திணிக்கும் வங்கியின் மேலாளரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "வங்கி மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் "அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்" எனவும் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளர் விஷால் நாராயணன் காம்ளேவை திருச்சி மண்டல அலுவலகம் விசாரணைக்கு அழைத்தது. அங்கும் தனக்கு இந்தி மட்டுமே தெரியும் என்றதால் அவரை பணியிடமாற்றம் செய்து திருச்சி மண்டல அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிய தலைமுறை

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ராசவன்னியன் said:

இலங்கையில் இந்த சிங்கள கிரந்தம் இன்னும் விடவில்லை. பெரும்பாலும், தமிழ் மக்கள் சண்டை பிடிக்காமல் போயிருந்தால், அப்படி நடந்திருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

இலங்கையில் இந்த சிங்கள கிரந்தம் இன்னும் விடவில்லை. பெரும்பாலும், தமிழ் மக்கள் சண்டை பிடிக்காமல் போயிருந்தால், அப்படி நடந்திருக்கலாம்.

கிரந்தம் விடவில்லை என்றால், தமிழர்கள் விரும்பி படிக்கிறார்களா..? என்ன சொல்ல வருகிறீர்களென புரியவில்லையே..? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

கிரந்தம் விடவில்லை என்றால், தமிழர்கள் விரும்பி படிக்கிறார்களா..? என்ன சொல்ல வருகிறீர்களென புரியவில்லையே..? 🤔

இலங்கையில் இந்த சிங்கள மொழி தெரியாதா என்ற  கிரந்தம் இன்னும் இல்லை.

இருந்தாலும் பெருன்பான்மையர் மொழி என்ற பெருமை உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இலங்கையில் இந்த சிங்கள மொழி தெரியாதா என்ற  கிரந்தம் இன்னும் இல்லை.

இருந்தாலும் பெருன்பான்மையர் மொழி என்ற பெருமை உண்டு.

பெருமையா..?

ஒருவேளை தமிழ் ஈழம் என்ற அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்ற எல்லைக்கோடு இல்லை. அதனால் இந்த பிரச்சினையே இல்லையென எண்ணுகிறேன். விதியே என்று ஏற்றுக்கொண்டு இருக்க வேண்டிய நிலையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ராசவன்னியன் said:

பெருமையா..?

ஒருவேளை தமிழ் ஈழம் என்ற அங்கீகரிக்கப்பட்ட பகுதி என்ற எல்லைக்கோடு இல்லை. அதனால் இந்த பிரச்சினையே இல்லையென எண்ணுகிறேன். விதியே என்று ஏற்றுக்கொண்டு இருக்க வேண்டிய நிலையாக இருக்கும்.

இல்லை.... இன்று இலங்கையில் இவ்வளவு பிரச்சணைகளுக்கு மத்தியிலும், அரச வேலையானால், இரு மொழிகளும் கட்டாயம் என்று இருப்பதால்.... அந்த நிலை.

முன்னர் சிங்களம் மட்டுமே என்று இருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

இல்லை.... இன்று இலங்கையில் இவ்வளவு பிரச்சணைகளுக்கு மத்தியிலும், அரச வேலையானால், இரு மொழிகளும் கட்டாயம் என்று இருப்பதால்.... அந்த நிலை.

முன்னர் சிங்களம் மட்டுமே என்று இருந்தது.

ரொம்ப நல்லது..

இங்கே சட்டப்படி இந்தி தமிழ் நாட்டுக்கு பொருந்தாது என "இந்திய அலுவல் மொழி 1976 விதிகள்" இருந்தும் திணிப்பு இருக்கிறது.

Test.png

அலுவக மொழி விதி 1976

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணொளியில் மாஸ்க் அணிந்து, வங்கியை விட்டு வெளியேறுபவர்தான் அந்த கிளை மேலாளர்..விஷால் நாராயணன் காம்ளே.

  • கருத்துக்கள உறவுகள்

120003344_3392742844153146_3468067444837954014_o.jpg?_nc_cat=110&_nc_sid=8bfeb9&_nc_ohc=Guj3QOmvzmMAX8DtEl1&_nc_ht=scontent-frx5-1.xx&oh=dc9117fd061bcac7c291f7823fb8c184&oe=5F9133D1

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

120133085_123546352820954_349927942094998335_o.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_ohc=s5wyHjxMf2kAX-M3rPu&_nc_oc=AQk8jWfrZYtt9VFa20SabJY9gd70Fgehlht395ZKCCrGXV_MBGrIOA93Ad3t7eidJiBwt0ctWj5B8BSwjaFwi_oi&_nc_ht=scontent-frt3-1.xx&oh=883540821b0266a2ec9587fc1f76563e&oe=5F8ECFDB

119952327_123130359529220_2068618251219456948_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_ohc=IX3KGm4pm6IAX8ObSoj&_nc_ht=scontent-frt3-1.xx&oh=41ff674f9abbb3eaf5e5eb1447f79478&oe=5F9174E1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

119952327_123130359529220_2068618251219456948_n.jpg?_nc_cat=102&_nc_sid=8bfeb9&_nc_ohc=IX3KGm4pm6IAX8ObSoj&_nc_ht=scontent-frt3-1.xx&oh=41ff674f9abbb3eaf5e5eb1447f79478&oe=5F9174E1

Soooooooooooo Cute…🤩

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.