Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திடீரென அரச அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி! கேள்விகளால் திகைத்துப்போன ஊழியர்கள்


Recommended Posts

பதியப்பட்டது

திடீரென அரச அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி! கேள்விகளால் திகைத்துப்போன ஊழியர்கள்

நாரஹெபிட்டியிலுள்ள வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்திற்குள் ஜனாதிபதி திடீரென விஜயம் செய்துள்ளார்.

ஒரு நபர் அளித்த முறைப்பாட்டை அடுத்து ஜனாதிபதி இன்று (23) குறித்த அலுவலகத்திற்கு சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ தேவை ஒன்றுக்காக குறித்த அலுவலகத்திற்கு வந்ததாகவும், எனினும் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் தமது வேலையை செய்து கொடுக்கவில்லை எனவும் ஜனாதிபதியிடம் பெண் ஒருவர் முறையிட்டுள்ளார்.

இதன்படி, வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகத்தை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், அங்கு போதுமான ஊழியர்கள் இருப்பதையும் அவதானித்தார். இருந்தும் அங்கு சரியாக கடமைகள் முன்னெடுக்கப்படவில்லை.

இதன்போது சேவையை நாட வந்த ஒரு ஊனமுற்ற நபரை ஜனாதிபதி கண்டார், மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் மற்றும் அவரது தேவைகள் மற்றும் தகவல்களை விசாரித்தார்.

குறித்த நபரும் தாம் நாள் முழுதும் வெளியில் இருப்பதாகவும், யாரும் கவனிப்பது இல்லை என்றும் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து ஊழியர்களைச் சந்தித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொது ஊழியர்களின் முதன்மைப் பொறுப்பை தெளிவுபடுத்தியதுடன், பொதுத் தேவைகளை திறமையாகவும் சமரசமின்றி நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

வாடிக்கையாளர்களை ஏன் வெளியில் அனுப்புகின்றீர்கள், எத்தனை பேர் இருக்கின்றீர்கள், ஏன் தாமதம் என்றெல்லாம் அடுத்தடுத்து கேள்விகளை தொடுத்துள்ளார்.

இதனால் ஊழியர்கள் தடுமாறியதுடன் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/151081?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்
Posted

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

அந்த.. ஈர வெங்காயம் எல்லாம் இருக்கட்டும்.
முதலில் ஜனாதிபதி 😷 "மாஸ்க்" போட்டுக் கொண்டு, 
அந்த அலுவலகத்துக்கு போயிருக்க வேண்டாமா...
அதுவே... ஒரு முன்மாதிரியாக இருந்திருக்குமே.

மற்றவர்களுக்கு... புத்திமதி சொல்ல முதல், தங்களை திருத்திக்  கொள்ள வேண்டும்.

Posted

நாடு தன்னிறைவு அடைய என்ன வழி என சிந்தித்து நடை முறைபடுத்துவதை விட்டுவிட்டு இப்படி படங்காட்ட வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, செண்பகம் said:

நாடு தன்னிறைவு அடைய என்ன வழி என சிந்தித்து நடை முறைபடுத்துவதை விட்டுவிட்டு இப்படி படங்காட்ட வேண்டாம்

கோத்தா விசுவாசிகள் உங்கள் கருத்தை கண்டு கெத கழிக்கப்போகினம் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரு முன்னாள் இராணுவ அதிகாரி.. Autocratic leadership ஐ காட்டுவது புதிதல்ல. இராணுவங்களில் இதுதான் தளபதிகளில் நிலை.

ஆனால்.. தேசிய தலைவர் போன்று இவர் ஒரு Charismatic leader ஆக எப்போதும் வர முடியாது.

மேலும் ஒரு சனநாயக நாட்டின் தலைவர் democractic leader ஆக இருப்பதும் மக்களின் கருத்தை பங்களிப்பை கேட்பதும் உணர்வதும் வழிகாட்டுவதுமே நல்லதாக அமைய முடியும். ஊழியர்களும் மக்களே.. பயன்பெறுநரும் மக்களே. எல்லோர் கருத்தையும் உள்வாங்கி சரியான வழிகாட்டுதலை வழங்க வகை செய்வதை விடுத்து இராணுவ தளபதி போல் நிர்வாகம் நடத்த முடியாது சனநாயக நாட்டில்.. நிறுவனங்களில். 

Leadership Styles, 9 Types of leadership PART 1 (Session 14) management  lessons/Dr Kirti Jainani - YouTube

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, செண்பகம் said:

நாடு தன்னிறைவு அடைய என்ன வழி என சிந்தித்து நடை முறைபடுத்துவதை விட்டுவிட்டு இப்படி படங்காட்ட வேண்டாம்

இல்லை, அவர் செய்வது சரியானது. அமேரிக்காவில் இருந்த படியால், புரிகிறது.

இலங்கையில் ஒரு அரச அலுவலகத்தில் வேலை ஒன்று ஆகவேண்டுமாயின், முதலில் அவர்கள் சொல்வது, நாளைக்கு வாங்க, ஹெட்ட எண்ட.

ஏதோ தலைக்கு மேலே வேலைப்பளுக்கள் போலவும், தாம் தான் அலவலகத்தின் முழு வேலையை செய்வது போலவும் பீலா விடுவார்கள்.

பீலாவுக்கு காரணம்.... லஞ்சம் வாங்க...  

லண்டனிலை இருந்து போன ஒருத்தர் சொன்னார். ஊரிலை ஒரு சொந்தத்துடன், உதவி அரசாங்க அதிபர் அலுவலகத்துக்கு போனதாகவும், வெளியில இருங்கோ எண்டு போட்டு, உதயன் பேப்பரை வாசித்து முடித்து, கூப்பிட்டு, இண்டைக்கு சரியான பிசி, நாளைக்கு வாருங்கோ எண்டாராம்....

தனக்கு கொதி வந்து, உதயன் பேப்பர் வாசிக்கவே, சம்பளம் தருகினம் எண்ட, அவருக்கு கொதி வந்துடுத்தாம்.

உன்னால முடிஞ்சத பாரு எண்ட ரீதிலா சவால் விட, நான் வெளிநாட்டுக்காரர்.... இவரோட வந்தனான்.... இங்கு ஒரு நலத்திட்டம் விசயமாக நான் தொடர்பில் இருக்கும் அமைச்சரிடம் பேசுகிறேன், நாங்கள் பேசினது ரெக்கோர்டிங்கில் இருக்கு எண்டோன்ன, பம்பரம் போல சுழன்று அலுவலை முடித்துக் கொடுத்தாராம்.

4 hours ago, தமிழ் சிறி said:

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

அந்த.. ஈர வெங்காயம் எல்லாம் இருக்கட்டும்.
முதலில் ஜனாதிபதி 😷 "மாஸ்க்" போட்டுக் கொண்டு, 
அந்த அலுவலகத்துக்கு போயிருக்க வேண்டாமா...
அதுவே... ஒரு முன்மாதிரியாக இருந்திருக்குமே.

மற்றவர்களுக்கு... புத்திமதி சொல்ல முதல், தங்களை திருத்திக்  கொள்ள வேண்டும்.

போட்டுகொண்டு போனவர். அறிவுரை சொல்ல கழட்டி இருப்பார்.... உதவியாளர்கள் வாங்கி வைத்திருப்பினம்...

மேலும் அந்தாளுக்கு கொரோன இல்லை என்று உடனே சோதிச்சு சொல்ல, டாக்குத்தர்மாறும் பக்கத்தில் நிப்பினம். 😁

ஜனாதிபதி எல்லோ... 😎

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, Nathamuni said:

 

மேலும் அந்தாளுக்கு கொரோன இல்லை என்று உடனே சோதிச்சு சொல்ல, டாக்குத்தர்மாறும் பக்கத்தில் நிப்பினம். 😁

ஜனாதிபதி எல்லோ... 😎

கொத்தா என்றால் கொரானா கிருமிக்கும் பயமாம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, செண்பகம் said:

திடீரென அரச அலுவலகத்திற்குள் நுழைந்த ஜனாதிபதி! கேள்விகளால் திகைத்துப்போன ஊழியர்கள்

இதெல்லாம் சிறிலங்கா மக்களுக்கு பிரமாண்டமாக தெரியும்.
ஆனால் அபிவிருத்தியடைந்த ஜனநாயக நாடுகளில் இருந்து பார்க்கும் போது சூட்சுமங்கள் விளங்கும்.
பிள்ளையானுக்கு வாழ்த்து சொல்லும் மக்கல் இருக்கும் வரை....😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, குமாரசாமி said:

இதெல்லாம் சிறிலங்கா மக்களுக்கு பிரமாண்டமாக தெரியும்.
ஆனால் அபிவிருத்தியடைந்த ஜனநாயக நாடுகளில் இருந்து பார்க்கும் போது சூட்சுமங்கள் விளங்கும்.
பிள்ளையானுக்கு வாழ்த்து சொல்லும் மக்கல் இருக்கும் வரை....😁

சகோதரர் மாரின் சொத்து கணக்கை மூடி மறைக்க அதிஉத்தமர் இப்படியான ஸ்டண்ட்களை செய்யத்தான் வேணும்...சிங்களமக்களை எப்படி கைக்குள் போடுவது என்று நல்லாக தெரிந்த அதிஉத்தமர்.....சாதாரண சட்டத்தரணியாகவும்,நடுத்தர  படையதிகாரியுமாக இருந்த தங்கள் எஜமானர்கள் எப்படி சிறிலங்காவின் பணக்காரவரிசையில் முதல் இடங்களை பிடித்தார்கள் என நினைத்து பார்க்க போவதில்லை சிங்களமக்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொஞ்சம் இடக்கு முடக்கா வரும் இனிமையான தமிழைக் கேளுங்கள் . ........!  👍
    • அனுபவஸ்தர் இப்படி மேலெழுந்த விதமாகக் கதைக்கக் கூடாது.  சுய கட்டுப்பாட்டிற்கும் easy access க்கும் இடையிலான வேறுபாடு தெரியாத ஆள் தாங்கள் அல்ல. 
    • பாதுகாப்புத்துறை அமைச்சராக கௌதம புத்தர் எப்போது நியமிக்கப்பட்டார்? 🤔
    • கிளிநொச்சியில் கோர விபத்து - குழந்தை பலி December 25, 2024  08:58 pm கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (25) இரவு 7.00 மணியளவில் மோட்டார் சைக்கிளுடன் ரிப்பர் வாகனம் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. A9 வீதியால் பயணித்த ரிப்பர் வாகனம் குறித்த மோட்டார் சைக்கிளை மோதி விபத்தினை ஏற்படுத்தியதுடன், விபத்து இடம்பெற்ற பகுதியிலிருந்து சுமார் 100m பாதையை விட்டு விலகி பயணித்துள்ளது. விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளையும் ரிப்பர் வாகனம் குறிப்பிட்ட அளவு தூரம் இழுத்து சென்றுள்ளதுடன், தொழிற்பயிற்சி நிறுவனத்தின் விளம்பர பலகை மற்றும் தொலைத்தொடர்பு கம்பம் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியுள்ளது. குறித்த ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி மதுபோதையில் இருந்ததாக சம்பவ இடத்தில் நின்ற மக்கள் குறிப்பிடுகின்றனர்.  விபத்து தொடர்பில் சாரதியை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் 6 வயதுடைய குழந்தையும் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். https://tamil.adaderana.lk/news.php?nid=197830  
    • இருபது ஆண்டுகளாயிற்று.2004 - 2024.🙏    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.