Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் பசு வதைக்கு தடை - அமைச்சரவை அனுமதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

தமிழ்சிறியர் உந்த ஆனைப்பந்தி இலுப்பையடி சந்தி, கணவாய் கந்தையர்.... கணவாயும்.... ரொட்டியும்.... மொக்கன் கடை  ரொட்டியும்.... பீவ்ப் ரோஸ்டும்.... மாதிரி வருமே எண்டுவார்.

பழைய ஆட்களிடம் கேட்டால்.... கொட்டடி நாகலிங்கம் போசனசாலை, கஸ்தூரியார் வீதி சிங்கப்பூர் போசனசாலை.... அந்த மாதிரி எண்டுவினம். உந்த நாகலிங்கம் போசனசாலையில, ஊத்தை நாலுமுழம், மடிச்சு கட்டி இருப்பினம்.... மேல ஒண்டும் இராதாம்.... எப்பன் குழப்பு ஊத்தண்ண, எண்டால், உள்ள போய் மண்சட்டியோடை வந்து கடந்து போய்.... வெளியாலை.... வெத்திலை எச்சிலை துப்பிப்போட்டு வந்து ஊத்துவீனமாம்...

🤣  யாழில நான் சாப்பிட்ட நல்ல கடையள் கேகேஎஸ் ரோட்டில காவேரி. சுன்னாகத்தில கே கே எஸ் ரோட்டிலும் ஸ்டேசன் ரோட்டிலும் ரெண்டு நானாமாரிண்ட கடை. பிறகு நெல்லியடில ஒரு கடை மேல் மாடியோட பெயர் மறந்து போச்சு.

ஆனால் கொத்தெண்டால் அது காத்தான் குடிலதான்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

🤣  யாழில நான் சாப்பிட்ட நல்ல கடையள் கேகேஎஸ் ரோட்டில காவேரி. சுன்னாகத்தில கே கே எஸ் ரோட்டிலும் ஸ்டேசன் ரோட்டிலும் ரெண்டு நானாமாரிண்ட கடை. பிறகு நெல்லியடில ஒரு கடை மேல் மாடியோட பெயர் மறந்து போச்சு.

ஆனால் கொத்தெண்டால் அது காத்தான் குடிலதான்.

அங்கை தானே ஏதோ குளுசை கலந்தது எண்டு சி மார் குழம்பினவையள்? 🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சாப்பிட முதல் அந்த கடைகளில் ஒன்னுக்கு போக போவது போல் போய்  கிச்சன் அறையை நோட்டம்  பார்த்தபின் சாப்பிடவே மனம் வராது பேசாமல் கோலாவை வாங்கி குடித்துவிட்டு போக சொல்லும் முக்கியமாய் நனமாரின் கடைகள் அசுத்தத்தின் சிகரமாய் இருக்கும் 90 களில்  நாணமாரின்  கடைகளில் ஏன் முஸ்லீம் மக்கள் குடும்பமாய் வந்து சாப்பிடுவதில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கணக்க  வேண்டாம் வெம்பிளி பக்கம் உள்ள உணவகங்களில் மட்டின் டெவில் எடுத்து பாருங்க வித்தியாசமாய் இருக்கும் டேஸ்ட் வித்தியாசமாக இருக்கும் கேட்டால் அவுஸ்டேலியன் மட்டன் என்பினம் .🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அங்கை தானே ஏதோ குளுசை கலந்தது எண்டு சி மார் குழம்பினவையள்? 🤔

உது ஞானசார வகையறாக்களின் பேய்கதை. இப்ப கோத்தா மகிந்த வந்த பிறகு உந்த தூள், பவுடர் கதை எல்லாம் துண்டற இல்லை கண்டியளோ.

உலகத்தில எத்தனை மல்டி பில்லியன் வருமானம் வரும் தொழில் உந்த கருத்தடை மருந்து வியாபாரம். நானாமார் இவ்வளவு சிம்பிளா குளிசை அடிகிறெண்டா உந்த அஸ்ரா செனிக்கா, கிளஸ்கோ ஸ்மித் கிளைன் எல்லாம் பேசாம காத்தான்குடில எல்லே போய் ரிசேச் கம்பஸ் துறந்திருப்பாங்கள்🤪

46 minutes ago, பெருமாள் said:

சாப்பிட முதல் அந்த கடைகளில் ஒன்னுக்கு போக போவது போல் போய்  கிச்சன் அறையை நோட்டம்  பார்த்தபின் சாப்பிடவே மனம் வராது பேசாமல் கோலாவை வாங்கி குடித்துவிட்டு போக சொல்லும் முக்கியமாய் நனமாரின் கடைகள் அசுத்தத்தின் சிகரமாய் இருக்கும் 90 களில்  நாணமாரின்  கடைகளில் ஏன் முஸ்லீம் மக்கள் குடும்பமாய் வந்து சாப்பிடுவதில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை .

ஓம். ஆனால் ஊரில எல்லா இடமும் உதுதானே கதை. Out of sight out of mind எண்டு அடிக்க வேண்டியதுதான். 

ஆனால் ஒரு நாளும் இதுவரை food poisoning வந்தது கிடையாது.

உந்த லண்டனில பெரிய ரெஸ்டீரண்டில சாப்பிட்டு - ஆஸ்பத்திரி போகாத குறை 🤣

வெம்பிளி பக்கம் மனிசன் சாப்பிடுவானே🤣

ஆனால் ரெய்னேர்ஸ் லேன் சிங்களவன்ற நண்டு கடை அந்த மாரி. நாதம் அங்கதான் அடிகடி, ஜொனி வோக்கருக்கு சைட் டிஸ் எடுகிறவர்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, பெருமாள் said:

ஏன் கணக்க  வேண்டாம் வெம்பிளி பக்கம் உள்ள உணவகங்களில் மட்டின் டெவில் எடுத்து பாருங்க வித்தியாசமாய் இருக்கும் டேஸ்ட் வித்தியாசமாக இருக்கும் கேட்டால் அவுஸ்டேலியன் மட்டன் என்பினம் .🤣

பெருமாள்,

உங்க முந்தி பதிந்திருக்கிறேன். ஒருமுறை நண்பர் ஒருவருடன், மெஸ்சுக்கு சமைக்க, மட்டன் வாங்க பாக்கீதுரையர் கடைக்கு போய், கொழுப்பு வேணாம் வெட்டி எறி எண்ட, அவன் பாவி, எறியாமல்.... ஒரு பெட்டில போடுறான். எட்டிப் பார்த்தால், பெட்டிக்குள்ள.... ஒரு 2, 3 கிலோ இருக்கும்....

ஏனப்பா, எறியாமல்.... உதுக்குள்ள போடுறாய் எண்ட..... இந்த கறி ரெஸ்டாரனில்லை, மட்டன் கறி சாப்பிட்டு இருக்கிறியா எண்ட.... சிலநேரம்... என்னவிசயம் என்று கேட்க...

நல்ல ருசியா.... எண்ணெய் தன்மையா....?

இதுதான் விசயம்.... உத கொண்டு போய்.... உருக்கி.... ஊத்தி.... கறியை கொண்டு வந்து வைப்பாங்கள்..... ஒரு 6 மாதம் அடிச்சா..... ஹார்ட் கழட்டி எறியவேண்டியது தான் என்றார்.

அதன் பிறகு, ரெஸ்டூரண்ட் போனால், நோ மட்டன்.

1 hour ago, பெருமாள் said:

சாப்பிட முதல் அந்த கடைகளில் ஒன்னுக்கு போக போவது போல் போய்  கிச்சன் அறையை நோட்டம்  பார்த்தபின் சாப்பிடவே மனம் வராது பேசாமல் கோலாவை வாங்கி குடித்துவிட்டு போக சொல்லும் முக்கியமாய் நனமாரின் கடைகள் அசுத்தத்தின் சிகரமாய் இருக்கும் 90 களில்  நாணமாரின்  கடைகளில் ஏன் முஸ்லீம் மக்கள் குடும்பமாய் வந்து சாப்பிடுவதில்லை என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை .

இண்டைக்கு கறி இண்டஸ்ட்ரியே சுருளுது எண்டால் காரணம் இவர்களது சுத்துமாத்து தான்....

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் ரெய்னேர்ஸ் லேன் சிங்களவன்ற நண்டு கடை அந்த மாரி. நாதம் அங்கதான் அடிகடி, ஜொனி வோக்கருக்கு சைட் டிஸ் எடுகிறவர்.

ம். க்...க்கும் .... கொப்பிழக்க கூடாது...

நாதர்.... ஜொனி வால்கரை கண்ணெடுத்தும் பாரன்...

ஜொனியிண்ட தங்கச்சி ஜென் வால்கெர் தான் இப்ப என்னை வைச்சிருக்கிறா...

ரச போசன.... நல்லம் தான். நேரத்துக்கு போய்..... ஒரு பிரண்டோட,  மூலையில இருந்து.... தண்ணியும் அடித்து புபேயும் எடுத்தம்.... நல்ல டீல்.... 

எனக்கு பக்கத்தில குடுமியர்.... ஈஸ்டர்ன் பயர் பிடிக்கும். நெத்தலிப்பிட்டும்.... ரொட்டியும் மலேசியன் சம்பலும் எண்ட விருப்பம்.

எனக்கு சிங்கள சாப்பாடு எண்டால்... சட்பறி ஹில் பப் முந்தி பிடிக்கும்.... இப்ப இது பரவாயில்லை.

ரெய்னர்ஸ் லேன் பிஸ்சா ஹட் பக்கத்தில் பூட் கோர்னெர், சனி, ஞாயிறு லம்ப்ரைஸ் போடுவார்கள். நல்லா இருக்கும்.

ஹாரோ வீல்ஸ்டோன் ஸ்டேஷனுக்கு முன்னால, டேஸ்ட் ஒப் ஆசியா எண்டு எங்கண்ட நானா கடை. அவர் கட்டினது ஈரான் பக்கம். ஆனா நானா தான் சமையல்.

சபன் எண்டு அவயட (இலங்கை முஸ்லீம்) சாப்பாடு ஓடர் பண்ணி பாருங்ககோ. 7 முதல் 8 பேர் சாப்பிடலாம்.... நல்லா இருக்கும். 

முந்தி ஈஸ்ட் ஹாம் பக்கம், காதரின் ரோட்டில உதயா ரெஸ்டூரண்ட் எண்டு சேட்டன் மாரிண்ட கடை இருந்தது.... அங்க ஒரு மீன் பொழிச்சதும், ரொட்டியும், றால் பிரையும் அடித்தால்.... அந்த மாதிரி.

பிறகு அந்த கடையை ஒரு சிங்களவர் எடுத்து, நாத்தி.... இப்ப வேற மலையாளிகள் எடுத்து பழைய லெவெலிலை செய்யினமாம். போகவில்லை....   

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

வெம்பிளி பக்கம் மனிசன் சாப்பிடுவானே🤣

நான் ஒருக்கால் வெம்பிளியிலை சாப்பிடு மூண்டு நாள் காணாமலே போயிட்டன்.
நல்லகாலம் இரண்டு கிழமை லீவிலை வந்தபடியாலை தப்பீட்டன்.இனிமேல் பைப் தண்ணியை குடிச்சாலும் பரவாயில்லை வெளியிலை போய் சாப்பிடுறேல்லை எண்டு முடிவெடுத்துட்டன் 🙃

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

நாதம்,

அந்த நண்டு கடைய விட்டுட்டியள். Fat Crab சரவண பவனுக்கு பக்கத்தில. கொஞ்சம் விலை ஆனால் நல்ல உறைப்பா இருக்கும். றாலும்தான். 

டேஸ்ட் ஓப் ஏசியா ஓனர் உண்மையிலேயே தங்கமான மனுசன். உதவி செய்யும் மனபான்மை. சாப்பாடும் நல்லம்தான்.

நான் வருடத்தில் ரெண்டு தரமாவது உண்மையாகவே எனது நண்பர்களோட கூடி இருந்து பெருநாள் “சவன்” சாப்பிடுவதால் - எனக்கு அவர்களின் சவன் பெரிதாக தெரியவில்லை.

முந்தி ஹெண்டன்ல பிரின்ஸ் ஒப் சிலோன் இருந்தது. ஐரோபாவிலேயே முதல் சிறி லங்கன் ரெஸ்டுரண்ட் என்பார்கள். கொத்து பரவாயில்லை. இப்ப மூடீடாங்கள்.

.

15 minutes ago, குமாரசாமி said:

நான் ஒருக்கால் வெம்பிளியிலை சாப்பிடு மூண்டு நாள் காணாமலே போயிட்டன்.
நல்லகாலம் இரண்டு கிழமை லீவிலை வந்தபடியாலை தப்பீட்டன்.இனிமேல் பைப் தண்ணியை குடிச்சாலும் பரவாயில்லை வெளியிலை போய் சாப்பிடுறேல்லை எண்டு முடிவெடுத்துட்டன் 🙃

அண்ணை வெளிகிட முதல் திண்ணைல கேட்டா எங்க கைய நனைக்கலாம், எங்க நனைக்க கூடாது எண்டு சொல்லி இருப்பன் எல்லே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 minutes ago, goshan_che said:

அண்ணை வெளிகிட முதல் திண்ணைல கேட்டா எங்க கைய நனைக்கலாம், எங்க நனைக்க கூடாது எண்டு சொல்லி இருப்பன் எல்லே.

இல்லை...சோலி வேண்டாம் காய்ஞ்ச பாண் எண்டாலும் நான் சமாளிக்கிறன்...

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

Fat Crab சரவண பவனுக்கு பக்கத்தில. கொஞ்சம் விலை ஆனால் நல்ல உறைப்பா இருக்கும். றாலும்தான். 

ஆ... ஒரு நாளும் போகேல்ல... போய் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

இல்லை...சோலி வேண்டாம் காய்ஞ்ச பாண் எண்டாலும் நான் சமாளிக்கிறன்...

தெளிவா இருக்கிறியள் 🤣

6 minutes ago, Nathamuni said:

ஆ... ஒரு நாளும் போகேல்ல... போய் பார்ப்போம்.

கு. சா அண்ணை அளவுக்கு நீங்கள் விபரம் இல்லை 🤣

நானும் போய் ஒரு வருசம் இருக்கும். சின்ன கடை. நான் டேக் எவேதான். ஒரு பொலிதீன் பையில கட்டி தருவாங்கள்.

Ministry of Crab ஸ்டைல்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

இல்லை...சோலி வேண்டாம் காய்ஞ்ச பாண் எண்டாலும் நான் சமாளிக்கிறன்...

உங்க முக்கியமான விசயம் என்ன எண்டா... இந்த பங்களாதேஷ் ஆக்கள் தான் 85% சாப்பிட்டு கடையலை வச்சிருக்கினம்.

தங்கட சமையல் விண்ணர்களுக்கு விசா வேணும் எண்டு வாங்கி கண காலமா பேக்காட்டிக் கொண்டிருந்தவயல்...

டேவிட் காமாரன் எண்ட ஒருத்தர் வந்து.... உள்ளாலை... விசாரித்து பார்த்தால்.... வருறவை ஒருத்தரும் அங்கை அதுகளை சமைச்சோ, சாப்பிடுறதோ இல்லை.... சமையல் விண்ணர் எண்டு விசா எடுத்து வந்து, பிறகு இங்க  தான் சமையலே செய்ய பழகினம் எண்டு தெரிய வந்துது.

அந்தாள், 1.5 மில்லியன் பவுனை போட்டு, ஒரு ட்ரைனிங் சென்டரை துறந்து,  இனி விசா கிடையாது, உங்கண்ட ஆக்கள் கன பேர் வேலை இல்லை எண்டு பெனிபிட் எடுத்துக் கொண்டு இருக்கினம்.... அவயலை இங்க அனுப்பி, அரசாங்க செலவிலை இலவசமா கறி ட்ரைனிங் எடுப்பிச்சு, வேலையை கொடுங்கோ எண்டு சொல்லிப்போட்டார்.

சென்டர் பூட்டியாச்சு.... ஒருத்தரும் போகேல்ல எண்டு...

இப்ப அரசாங்கம்.... நோ விசா பாலிஸி. 

இப்ப அவையிண்ட சுத்துமாத்து கதை முடிஞ்சார்.... இனி எங்கண்ட ஆக்கள் தான் மார்க்கெட்டை பிடிக்க வேணும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிழலி said:

அப்ப இனி கொழும்புக்கு போனால் தெஹிவளையில் இருக்கும் ஹோட்டல் டி இம்பாலாவின் மாட்டு இறைச்சிக் கொத்து வாங்கி சாப்பிட முடியாதா?

ஊருக்கு போனால் மாமி எப்படியும் எங்காவது வாங்கி தானே சமைத்து வைப்பார் என்பதால் ரெசிப்பி தேவையில்லை

நான் வான்கோழி முட்டையையே வாங்கி பொரித்துப் பார்த்தவன். மில்ரன் நகருக்கு அருகில் இருந்த ostrich farm இல் வாங்கி பொரித்துப் பார்த்தனான் (நூற்றுக்கணக்கான வான்கோழிகள் இருந்தன..இப்ப அதை நிரந்தரமாக மூடி விட்டார்கள்)

வந்த புதிதில் தீக்கோழி முட்டை இங்கு வாங்கி பொரித்தனான் ஒரு முட்டை பத்து பேருக்கு காணும் 😂

The ostrich legend | நெருப்புக்கோழி புராணம் | Dinakaran

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இப்ப அவையிண்ட சுத்துமாத்து கதை முடிஞ்சார்.... இனி எங்கண்ட ஆக்கள் தான் மார்க்கெட்டை பிடிக்க வேணும்.

எங்கட கூட்டம் மற்ற துறைகளில் விண்ணர்களா இருந்தாலும் இந்த சாப்பாட்டு கடை விடயத்தில் படுமோசம் சொல்லி வைத்தது போல் வெஸ்டேர்ன் இரவு மரக்கறி மார்க்கட்டில் வித்து மீதமாகும் பன்னிகளுக்கு போடும் மரக்கறி வகைகளை வாங்க பதுங்கி பதுங்கி நிப்பினம் இப்படி எது மலிவோ அதை தேடி வாங்கி சாப்பாடு எனும் பெயரில் கட்டி அடிப்பினம் பிறகு விலைபோகாமல் ஒரு பவுனுக்கு நாலு ரோல்  எண்டு போட்டு அதையும் குளிர் பெட்டியில் முடியும்மட்டும் நாலு ஐந்து நாளைக்கு வைத்து  விப்பினம் வாங்கி சாப்பிடுறவனுக்கும் உபத்திரவம் தாங்களும் நட்டப்பட்டு ஏன் இப்படி என்று தெரியவில்லை .

அதை விட்டு நல்லதாய் செய்து ஒரு பவுன் என்று வித்தாலும் தரமாய் இருந்தால் வெளிமார்கட் இலகுவாக அவர்கள் கையில் சிறிய லாபம் தரமான பொருள் அதிக விற்பனையால் லாப வருமானம் நிரந்தரம் அதைவிட்டு  அதிக உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு தரமற்ற பொருள் விற்பனை சரிவை நோக்கி பயணித்து வியாபாரம் மூடு விழாவில்  போய் நிற்கும் . 

இந்த கொரனோ வரமுதல் சம்பல் எக்ஸ்பிரஸ் என்று சவுத் கரோவில் ரெஸ்டோரண்ட் உள்ளே போனால் சிங்கள சனம் கூட்டமாய் இருந்து சாப்பிடுதுகள் மதிய நேரம் இருக்க இடமில்லாமல் இருந்தது அநேக டேபிள்கள் சொறிலங்கன் பியர் ஸ்டவுட் இருந்தன சாப்பாடு ஓரளவுக்கு ஓகே   அசைவ உணவு வீட்டை விட்டு வெளியில் வந்தால் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன் அதனால் நம்மை பொறுத்தவரை சரவணபவன் தாளி விலை கூட அவர்களிடம் என்றாலும் நல்ல டேஸ்ட் .

லண்டனில் ஒரு ரெஸ்டாரன் ஆட்களுக்கும் டீ  போட ஒழுங்கா தெரியாது டீ என்றால் பிரான்ஸ் லா சப்பல் கணேசா தான் இயூரோப்புக்குள் எந்த நாட்டுக்கு போனாலும் லாசப்பல் தேநீர் இல்லாமல் கார் நகராது ஊர் போல் சுடு தண்ணி சிலிண்டரும் வைத்து அடித்து ஆத்தி தருவார்கள் .

இங்கு தேநீர் என்றால் வெறுப்புடன் ஒரு பார்வை பார்ப்பார்கள் நடக்காமல் சிலோ மோஷனில் போவது போல் போய் கேத்திலை தட்டி பிளாஷ்டிக் கப்பில் மலிந்த தேயிலை பையை போட்டு சுடுதண்ணியை விட்டு பாலையும் சீனியையும் போட்டு கரண்டியால் கலக்கி விட்டு டொக் எண்டு டேபிளில் வைத்து விட்டு போவார்கள் பொறுமையிழந்து இன்னொரு கப் வேண்டி நாங்கள்தான் அடிச்சு ஆத்தனும் அதுக்குள்ள சூடு இறங்கிவிடும் பிரிட்ச் பச்சை பாலின் வேலை .

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, நிழலி said:

நான் வான்கோழி முட்டையையே வாங்கி பொரித்துப் பார்த்தவன். மில்ரன் நகருக்கு அருகில் இருந்த ostrich farm இல் வாங்கி பொரித்துப் பார்த்தனான் (நூற்றுக்கணக்கான வான்கோழிகள் இருந்தன..இப்ப அதை நிரந்தரமாக மூடி விட்டார்கள்)

ஏன் மூடினார்கள் என்று தெரியுமா.ஏன் என்றால் வான் கோழி இப்ப ஊரில் நல்ல மதிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பெருமாள் said:

எங்கட கூட்டம் மற்ற துறைகளில் விண்ணர்களா இருந்தாலும் இந்த சாப்பாட்டு கடை விடயத்தில் படுமோசம் சொல்லி வைத்தது போல் வெஸ்டேர்ன் இரவு மரக்கறி மார்க்கட்டில் வித்து மீதமாகும் பன்னிகளுக்கு போடும் மரக்கறி வகைகளை வாங்க பதுங்கி பதுங்கி நிப்பினம் இப்படி எது மலிவோ அதை தேடி வாங்கி சாப்பாடு எனும் பெயரில் கட்டி அடிப்பினம் பிறகு விலைபோகாமல் ஒரு பவுனுக்கு நாலு ரோல்  எண்டு போட்டு அதையும் குளிர் பெட்டியில் முடியும்மட்டும் நாலு ஐந்து நாளைக்கு வைத்து  விப்பினம் வாங்கி சாப்பிடுறவனுக்கும் உபத்திரவம் தாங்களும் நட்டப்பட்டு ஏன் இப்படி என்று தெரியவில்லை .

அதை விட்டு நல்லதாய் செய்து ஒரு பவுன் என்று வித்தாலும் தரமாய் இருந்தால் வெளிமார்கட் இலகுவாக அவர்கள் கையில் சிறிய லாபம் தரமான பொருள் அதிக விற்பனையால் லாப வருமானம் நிரந்தரம் அதைவிட்டு  அதிக உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு தரமற்ற பொருள் விற்பனை சரிவை நோக்கி பயணித்து வியாபாரம் மூடு விழாவில்  போய் நிற்கும் . 

இந்த கொரனோ வரமுதல் சம்பல் எக்ஸ்பிரஸ் என்று சவுத் கரோவில் ரெஸ்டோரண்ட் உள்ளே போனால் சிங்கள சனம் கூட்டமாய் இருந்து சாப்பிடுதுகள் மதிய நேரம் இருக்க இடமில்லாமல் இருந்தது அநேக டேபிள்கள் சொறிலங்கன் பியர் ஸ்டவுட் இருந்தன சாப்பாடு ஓரளவுக்கு ஓகே   அசைவ உணவு வீட்டை விட்டு வெளியில் வந்தால் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன் அதனால் நம்மை பொறுத்தவரை சரவணபவன் தாளி விலை கூட அவர்களிடம் என்றாலும் நல்ல டேஸ்ட் .

லண்டனில் ஒரு ரெஸ்டாரன் ஆட்களுக்கும் டீ  போட ஒழுங்கா தெரியாது டீ என்றால் பிரான்ஸ் லா சப்பல் கணேசா தான் இயூரோப்புக்குள் எந்த நாட்டுக்கு போனாலும் லாசப்பல் தேநீர் இல்லாமல் கார் நகராது ஊர் போல் சுடு தண்ணி சிலிண்டரும் வைத்து அடித்து ஆத்தி தருவார்கள் .

இங்கு தேநீர் என்றால் வெறுப்புடன் ஒரு பார்வை பார்ப்பார்கள் நடக்காமல் சிலோ மோஷனில் போவது போல் போய் கேத்திலை தட்டி பிளாஷ்டிக் கப்பில் மலிந்த தேயிலை பையை போட்டு சுடுதண்ணியை விட்டு பாலையும் சீனியையும் போட்டு கரண்டியால் கலக்கி விட்டு டொக் எண்டு டேபிளில் வைத்து விட்டு போவார்கள் பொறுமையிழந்து இன்னொரு கப் வேண்டி நாங்கள்தான் அடிச்சு ஆத்தனும் அதுக்குள்ள சூடு இறங்கிவிடும் பிரிட்ச் பச்சை பாலின் வேலை .

பெருமாள், சவுத் விம்பிள்டன் வோச் மீ யிலை சாப்பிடேலையோ? முந்தி அந்த மாதிரி இப்ப கொஞ்சம் தரம் குறைவெண்டாலும் சாப்பிடலாம். மிக்ஸ் டெவல் அந்த மாதிரி இப்பவும்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாதவூரான் said:

பெருமாள், சவுத் விம்பிள்டன் வோச் மீ யிலை சாப்பிடேலையோ? முந்தி அந்த மாதிரி இப்ப கொஞ்சம் தரம் குறைவெண்டாலும் சாப்பிடலாம். மிக்ஸ் டெவல் அந்த மாதிரி இப்பவும்

முன்பு இருந்த ஓனர் தரத்துக்கு முன்னுரிமை கொடுப்பவர் ஐரோப்பிய நண்பர்கள் வந்தால்  லண்டன் சுற்றி முடிய கட்டாயம் இரவு சாப்பாடு அங்குதான் . அவர்களின் நிகழ்ச்சி நிரலில் கட்டாயம் இருக்கும் . போதாக்குறைக்கு புதிதாய் வருபவர்களுக்கும் சொல்லி விடுவார்கள் அந்த ரெஸ்டாரண்டை  பற்றி .

கொரனோ க்கு முதல் அங்கு போன போது  நெத்தலி பொரியல் அவர்களின் ஸ்பெஷல் கருவேப்பிலையை காணவில்லை விசாரித்தபோது விலை கூடிப்போய் விட்டது அதனால் தாங்கள் கருவேப்பிலை ஒரு சாப்பாட்டுக்கும் பாவிப்பது இல்லையாம்  30 வயதுகளில்  இருப்பவர் ஓனர் அனுபவமிண்மை காரணமாக இருக்கலாம் .மிக்ஸ் டெவில் 12க்கு போட்டு மலிந்த  சாமானை போடுவதை விட 20 பவுனுக்கு விலை கூட்டி றால் போன்றவற்றை தாரளமாக போட்டு விற்பது புத்திசாலித்தனம் .ஏனென்றால் அந்த உணவகத்துக்கு செல்பவர்கள் அவர்களின் சுவைக்கு அடிமையானவர்கள் .

இப்பவும் பரவாயில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எங்கட கூட்டம் மற்ற துறைகளில் விண்ணர்களா இருந்தாலும் இந்த சாப்பாட்டு கடை விடயத்தில் படுமோசம் சொல்லி வைத்தது போல் வெஸ்டேர்ன் இரவு மரக்கறி மார்க்கட்டில் வித்து மீதமாகும் பன்னிகளுக்கு போடும் மரக்கறி வகைகளை வாங்க பதுங்கி பதுங்கி நிப்பினம் இப்படி எது மலிவோ அதை தேடி வாங்கி சாப்பாடு எனும் பெயரில் கட்டி அடிப்பினம் பிறகு விலைபோகாமல் ஒரு பவுனுக்கு நாலு ரோல்  எண்டு போட்டு அதையும் குளிர் பெட்டியில் முடியும்மட்டும் நாலு ஐந்து நாளைக்கு வைத்து  விப்பினம் வாங்கி சாப்பிடுறவனுக்கும் உபத்திரவம் தாங்களும் நட்டப்பட்டு ஏன் இப்படி என்று தெரியவில்லை .

அதை விட்டு நல்லதாய் செய்து ஒரு பவுன் என்று வித்தாலும் தரமாய் இருந்தால் வெளிமார்கட் இலகுவாக அவர்கள் கையில் சிறிய லாபம் தரமான பொருள் அதிக விற்பனையால் லாப வருமானம் நிரந்தரம் அதைவிட்டு  அதிக உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு தரமற்ற பொருள் விற்பனை சரிவை நோக்கி பயணித்து வியாபாரம் மூடு விழாவில்  போய் நிற்கும் . 

இந்த கொரனோ வரமுதல் சம்பல் எக்ஸ்பிரஸ் என்று சவுத் கரோவில் ரெஸ்டோரண்ட் உள்ளே போனால் சிங்கள சனம் கூட்டமாய் இருந்து சாப்பிடுதுகள் மதிய நேரம் இருக்க இடமில்லாமல் இருந்தது அநேக டேபிள்கள் சொறிலங்கன் பியர் ஸ்டவுட் இருந்தன சாப்பாடு ஓரளவுக்கு ஓகே   அசைவ உணவு வீட்டை விட்டு வெளியில் வந்தால் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன் அதனால் நம்மை பொறுத்தவரை சரவணபவன் தாளி விலை கூட அவர்களிடம் என்றாலும் நல்ல டேஸ்ட் .

லண்டனில் ஒரு ரெஸ்டாரன் ஆட்களுக்கும் டீ  போட ஒழுங்கா தெரியாது டீ என்றால் பிரான்ஸ் லா சப்பல் கணேசா தான் இயூரோப்புக்குள் எந்த நாட்டுக்கு போனாலும் லாசப்பல் தேநீர் இல்லாமல் கார் நகராது ஊர் போல் சுடு தண்ணி சிலிண்டரும் வைத்து அடித்து ஆத்தி தருவார்கள் .

இங்கு தேநீர் என்றால் வெறுப்புடன் ஒரு பார்வை பார்ப்பார்கள் நடக்காமல் சிலோ மோஷனில் போவது போல் போய் கேத்திலை தட்டி பிளாஷ்டிக் கப்பில் மலிந்த தேயிலை பையை போட்டு சுடுதண்ணியை விட்டு பாலையும் சீனியையும் போட்டு கரண்டியால் கலக்கி விட்டு டொக் எண்டு டேபிளில் வைத்து விட்டு போவார்கள் பொறுமையிழந்து இன்னொரு கப் வேண்டி நாங்கள்தான் அடிச்சு ஆத்தனும் அதுக்குள்ள சூடு இறங்கிவிடும் பிரிட்ச் பச்சை பாலின் வேலை .

1 hour ago, வாதவூரான் said:

பெருமாள், சவுத் விம்பிள்டன் வோச் மீ யிலை சாப்பிடேலையோ? முந்தி அந்த மாதிரி இப்ப கொஞ்சம் தரம் குறைவெண்டாலும் சாப்பிடலாம். மிக்ஸ் டெவல் அந்த மாதிரி இப்பவும்

பிரச்சனை என்னவெண்டால், எங்கட ஆக்கள், குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட நிக்கினம்.... பெரிய சந்தையை விட்டுப்போட்டு.... எங்கட தமிழர்களையே டார்கெட் பண்ணி, வடையும், ரோலும் யாவாரம் செய்தால் சரி வருமே?

ரோல்ஸ் விக்க தொடஙகேக்க ஒன்று 75 பென்ஸ். இப்ப மூன்று ஒரு பவுன். காரணம் போட்டி.

ரெய்னர்ஸ் லேன் பக்கமா சென்னை சில்க் கடை.... ஒரு மைல் தூரத்தில் கிளை. இரண்டு கடையும் காயுது. சரி உந்த கிளை தேவை எண்டால், லண்டன்ல வேற பக்கமா போடிருக்கலாமே.... அநேகமா, மூனா.... இரண்டு இடத்துக்கும் ஓடி, ஓடி யாவாரம் பார்க்க வசதி எண்டு நினைச்சிருக்கலாம். 🤦‍♂️

இவர்கள் கணக்காளர்களை யாவாரம் தொடங்க முதலே சந்திப்பதில்லை. எல்லாம் முடிந்த பிறகு.... போஸ்டமோட்டம் செய்வது போல, சந்திப்பார்கள்.... 

கணக்கியல் துறையில் அடிப்படைக் கல்வி..... பக்கத்து கடையினை எடுத்தால், வாடிக்கையாளர்கள் அதிகரிக்க மாட்டார்கள்.... உள்ளவர்கள் தான்....வருவார்கள். ஆனால் செலவு தான் அதிகரிக்கும்.... அது முதல்கடையினையும் சேர்த்து கவுக்கும்.

பக்கத்துக்கடை வருது.... அதனையும் வாங்கி, குத்தகைக்கு எடுத்து, பெரிசாக்கலாம் எண்டு இருக்கிறன் எண்டு சொல்லும் பெரும் வித்தக யாவரிகள் இருக்கினம். 

இன்று, டெஸ்கோ, சயின்ஸபரி சிறிய கடைகளை திறந்து வைத்ததால், அவர்களது பெரிய கடைகளே வியாபாரம் வீழ்ந்து உள்ளன. இதனால் வாய்ட்ரோஸ், அஷ்டா முழித்துக் கொண்டு சிறிய கடைகளை திறப்பதில்லை என்று முடிவு செய்து விட்டன.

இது cannibalism என்பார்கள். தனது சொந்த யவராத்தினை....கிளைகளை திறந்து செலவை அதிகரித்து, பிரித்துக் கொள்வது.

இந்தியன் ரெஸ்டூரண்ட் கறியலிலும் பார்க்க, மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர் pre-prepared take away curry நல்லா இருக்குது எண்டு UK பேப்பர்ல வருகுது. அது இலங்கை கறி என்றும் சொல்கின்றன என்று யாராவது எமது ரெஸ்டூரண்ட் காரர்கள் கவனித்ததாக தெரியவில்லை.

நம்மவர்களின் சிக்கல், தம்மை படிப்பித்துக் கொள்வதில்லை. கேட்டு தெரிந்து கொள்வதும் இல்லை.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.