Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“இலங்கையை அரேபியாவாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் கைப்பற்றப்பட்ட சஞ்சிகைகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மிகிந்தலையில் உள்ள அச்சகம் ஒன்றில் “இலங்கையை அரேபியாவாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட சஞ்சிகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய கோன்வெவ பிரதேசத்தில் இயங்கும் அரபு பாடசாலை ஒன்றில் நடைபெற இருந்த ஆண்டு விழாவுக்காகவே இந்த சஞ்சிகை அச்சிடப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய குறித்த சஞ்சிகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://thamilkural.net/newskural/news/80225/

  • கருத்துக்கள உறவுகள்

நண்டு கொழுத்தா வளையில் தங்காது என்பது இதனா..?

* லவ் ஜிகாத்

* மதமாற்றம்

* இன பெருக்க வீதம் .?

  • கருத்துக்கள உறவுகள்

எண்ம்ணைக்கு எங்க போறதாம் 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

“இலங்கையை அரேபியாவாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் கைப்பற்றப்பட்ட சஞ்சிகைகள்!

தமிழர்களுக்கு கூட இலங்கையை தமிழ்நாடாக மாற்றும் எண்ணம் வரவேயில்லை.
திண்ணையில் ஒதுங்க இடம் விட்டால் இதுதான் பிரச்சனை

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, colomban said:

மிகிந்தலையில் உள்ள அச்சகம் ஒன்றில் “இலங்கையை அரேபியாவாக மாற்றுவோம்” என்ற தலைப்பில் அச்சிடப்பட்ட சஞ்சிகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய கோன்வெவ பிரதேசத்தில் இயங்கும் அரபு பாடசாலை ஒன்றில் நடைபெற இருந்த ஆண்டு விழாவுக்காகவே இந்த சஞ்சிகை அச்சிடப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய குறித்த சஞ்சிகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://thamilkural.net/newskural/news/80225/

நானா... சும்மா இரிங்கவா.

நம்ப செல்ல வந்தது.... சவுதி மாதரி... எண்ண.... தோண்டி எடித்து... அத... உத்து.... சல்லி சம்பாதித்து.... நாட்ட.... அரேபிக்காரன் மாதிரி..... மிச்சம் சல்லி வைச்சீக்கிற நாடா மாத்திறை பத்தி.....

இவனுவளுக்கு வெளக்கம்.... நாட அப்படியே ..... இஸ்லாத்துக்கு தூக்கிட்டு பேத்திற மாதிரி....

இனி... என்ன செல்லேலும் வாப்பா..... இரிட்டில பாக்கிறவன் கண்ணுக்கு.... பாக்கிறதெல்லாமே...சைத்தான்... கத போலதானே ஈக்கு.. வாப்பா.... 😛

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நானா... சும்மா இருங்கவா.

நம்ப செல்ல வந்தது.... சவுதி மாதரி... எண்ண.... தோண்டி எடித்து... அத... உத்து.... சல்லி சம்பாதித்து.... நாட்ட.... அரேபிக்காரன் மாதிரி..... மிச்சம் சல்லி வைச்சீக்கிற நாடா மாத்திறை பத்தி.....

இவனுவளுக்கு வெளக்கம்.... நாட அப்படியே ..... இஸ்லாத்துக்கு தூக்கிட்டு பேத்திற மாதிரி....

இனி... என்ன செல்லேலும் வாப்பா..... இரிட்டில பாக்கிறவன் கண்ணுக்கு.... பாக்கிறதெல்லாமே...சைத்தான்... கத போலதானே ஈக்கு.. வாப்பா.... 😛

நீங்கள் முஸ்லிம் மக்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் எழுதி இருந்தாலும் அவர்கள் பொருளாதார அபிவிருத்தியையே அவ்வாறாக எழுதியிருக்குறார்கள் என்ற உங்கள் கருத்தே உண்மை என்று படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, கற்பகதரு said:

நீங்கள் முஸ்லிம் மக்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் எழுதி இருந்தாலும் அவர்கள் பொருளாதார அபிவிருத்தியையே அவ்வாறாக எழுதியிருக்குறார்கள் என்ற உங்கள் கருத்தே உண்மை என்று படுகிறது.

கிண்டலா.... அனங், மணங்...பேச வேணாம் ஜீட்....நாணா. 🤨

நம்ம பேச்சே.... அயித்தானேவா..... 😛

நம்ம டாம் ஸரீட் பஜார் பெடியன்மாருவா.... நபீசா ஓட்டல்ல, ஆசிக்கா.... ரொட்டியும்.... ரோஸ் பீவ்வும் துன்னு வளர்ந்த ஆளுவா.... 😁

நம்ம, ரா(க்)மன் கத படிச்சீங்களாவா,

நம்ம தெமட்டகொட கூட்டாளி சசி வர்ணம் நானா கிட்ட கேளுங்கவா!

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கற்பகதரு said:

நீங்கள் முஸ்லிம் மக்களை கிண்டல் செய்யும் நோக்கத்தில் எழுதி இருந்தாலும் அவர்கள் பொருளாதார அபிவிருத்தியையே அவ்வாறாக எழுதியிருக்குறார்கள் என்ற உங்கள் கருத்தே உண்மை என்று படுகிறது.

என்ன பொருளாதார அபிவிருத்தி ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பெருமாள் said:

என்ன பொருளாதார அபிவிருத்தி ?

கற்பகத்தார்! காத்தான்குடி பேரீச்சம்பழ அபிவிருத்தியைத்தான் சொல்லுறார் எண்டு நினைக்கிறன்😎

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

கற்பகத்தார்! காத்தான்குடி பேரீச்சம்பழ அபிவிருத்தியைத்தான் சொல்லுறார் எண்டு நினைக்கிறன்😎

அப்ப  பேரீச்சம் பழ  வியாபாரத்தில் பில்லியன்கணக்கில் வருமானம் வரப்போகுது என்று கற்பகத்தரு சொல்ல வருகிறார் .😀

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களில் இனவாத கருத்து... சர்ச்சைக்குள்ளான ஜமாலியா அரபுக் கல்லூரி விவகாரம் குறித்து உண்மை இதுதான் என விளக்குகிறார் மத்ரசா அதிபர் சம்சுதீன் .

தொகுப்பு: முஹம்மட் ஹாசில் (ஊடகவியலாளர்) 

அநுராதபுரம், ஹெட்டுவெவ அரபுக் கல்லூரி பற்றி அண்மையில் சிங்கள ஊடகங்கள்

மூலம் வெளியான தவறான செய்தி பற்றிய உண்மைத்தன்மை தொடர்பில், அரபுக் கல்லூரியின் அதிபர் சம்சுதீன் தெரிவிக்கின்றார்.

அநுராதபுர மாவட்டம், கஹடகஸ்திகிலிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஹெட்டுவெவ கிராமத்தில் 1995 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஜமாலியா அரபுக் கல்லூரியானது இந்த ஆண்டு தனது 25 வருட பூர்த்தியை முன்னிட்டு வெள்ளி விழாவையும் கல்லூரியின் ஏழாவது பட்டமளிப்பு விழாவையும் கடந்த 11.10.2020 அன்று நடாத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதோடு அவ்விழாவில் 25 வருட பூர்த்தியை முன்னிட்டு கல்லூரி மாணவர்களின் ஆக்கங்கள், ஆசிரியர்களின் வாழ்த்துச்செய்திகள், அதிதிகளின் வாழ்த்துச்செய்திகள் போன்றவற்றை உள்ளடக்கி 'வெள்ளிவிழா சிறப்பு மலர்' எனும் பெயரில் சஞ்சிகை ஒன்றையும் வெளியிட தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன. 

இதற்கிடையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நமது நாட்டில் மீண்டும் பரவியதை அடுத்து 06.10.2020 அன்று சுகாதார அமைச்சினால்

நாட்டில் களியாட்ட நிகழ்வுகள், தனியார் வைபவங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் தேவையற்ற ஒன்று கூடல் என்பனவற்றுக்கு மறு அறிவித்தல் வரை தடைவிதித்தது.

இதையடுத்து ஜமாலியா அரபுக் கல்லூரியின் வெள்ளி விழா மற்றும் ஏழாவது பட்டமளிப்பு விழாவையும் கல்லூரி நிர்வாகத்தால் நாட்டின் சூழ்நிலையைக் கருதி மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த விழாவில் வெளியிட தீர்மானித்த சஞ்சிகையானது மிஹிந்தலை நகரில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் அச்சுப்பதிப்புக்காக வழங்கப்பட்டிருந்தது, குறித்த வேலை நடைபெறும் போது அங்கே பணிபுரியும் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்த ஒரு சிலரால் அரபு எழுத்தணியில் இலங்கை வரைபட உருவில் வரையப்பட்ட ஆக்கம் ஒன்றை அவதானிக்கப்பட்டதையடுத்து, இவர்கள் இலங்கை முழுவதையும் அரபு நாடாக மாற்றப்பார்க்கின்றார்கள் எனக்கருதி தவறான புரிதலின் அடிப்படையில் இது தொடர்பில் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தில் 09.10.2020 அன்று முறையிட்டுள்ளனர்

இதையடுத்து மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தினூடாக குறித்த அச்சகத்தை நாடி ஆரம்பகட்ட விசாரணையின் போது குறித்த அச்சகத்தின் உரிமையாளர் கஹடகஸ்திகிலிய பிரதேசதில் அமைந்துள்ள ஜமாலியா அரபுக் கல்லூரியினால் அச்சுப்பதிப்புக்காக வழங்கப்பட சஞ்சிகை என தகவல் வழங்கப்பட்டதையடுத்து, குறித்த அரபுக் கல்லூரி நிருவாககத்திற்கு மிஹிந்தலை பொலிஸ் நிலையத்தினூடாக அழைப்பு விடுக்கப்பட்டு கல்லூரி அதிபர், செயலாளர் உள்ளிட்ட நிரவாகத்தை பொலிசாரால் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுத்தனர். 

குறித்த விசாரணையின் போது அரபு எழுத்தாணி என்பது ஓர் கலை என்றும், அது நாம் எமது விருப்பத்திற்கமைய அரபு எழுத்துக்களை கொண்டு வரைதல் ஆகும், இதில் வேறு எதுவிதமான மறைமுக கருத்தக்களும் இல்லை என்பதனை மத்ரசா நிர்வாகம் பொலிசாருக்கு தெளிவுபடுத்தினர்

இதையடுத்து குறித்த 'அரபு எழுத்தாணி' கலை பற்றி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஊடாக ஒரு கடிதத்தினை பெற்றுத்தருமாறு, பொலிசாரால் அரபுக் கல்லூரி நிருவாகத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

மேலும் பொலிசார் குறித்த சஞ்சிகை அச்சுப்பதிப்பு செய்யும் அச்சகத்திற்கும் கல்லுரியின் நிர்வாகத்திற்கும் அவ் சஞ்சிகையின் சர்ச்சைக்குரிய வரைபடம் தொடர்பில் முழுமையான விசாரணை முடியும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். 

இதனையடுத்து 10.10.2020 அன்று கல்லூரி நிர்வாகத்தால் குறித்த விடயம் சம்மந்தமாக, முஸ்லிம்கள் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன், அரபுக் கல்லூரி நிருவாகம் தொடர்புகொண்டு பிரச்சினையை தெளிவுபடுத்திய பின்னர் மிஹிந்தலை பொலிஸ் நிலையத்திற்கு குறித்த கடிதத்தினை தொலைநகல் மூலம் வழங்குவதற்கு திணைக்களம் இணக்கம் தெரிவித்தது, 14.10.2020 அன்று தொலைநகல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. 

இதையடுத்து 14.10.2020 மாலை மிஹிந்தலை பொலிஸ் நிலையத்திற்கு ஜமாலியா அரபுக் கல்லூரி நிர்வாகத்தை வரவழைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, குறித்த சஞ்சிகையை முழுமையாக சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டு அதில் வேறு ஏதேனும் முரண்பாடுகள் உள்ளனவா என முழுமையாக ஆராய்ந்த பின்னரே சஞ்சிகையினை அச்சுப்பதிப்பு நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கவும், வெளியிடவும் முடியும் என இறுதியாக உத்தரவிட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை இப்பிரச்சினையை சந்தர்ப்பமாக பயன்படுத்தி பல தமிழ், சிங்கள ஊடகங்கள் உண்மை நிலையை கண்டறியாது, இலங்கையை அரபு நாடாக மாற்றுவது தொடர்பிலான சஞ்சிகை ஒன்று வெளியிட குறித்து கல்லூரி தீர்மானித்திருந்தாகவும், அந் நிகழ்வை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாகவும், அப்பட்டமான பொய்களை உள்ளடக்கி நாளுக்கு நாள் செய்திகளை வெளியிட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Racism-Against-Jamaliya-Arabic-College-Anuradhapura-2.jpg

https://yarl.com/forum3/topic/249061-“இலங்கையை-அரேபியாவாக-மாற்றுவோம்”-என்ற-தலைப்பில்-கைப்பற்றப்பட்ட-சஞ்சிகைகள்/?tab=comments#comment-1487110

  • கருத்துக்கள உறவுகள்

Racism-Against-Jamaliya-Arabic-College-Anuradhapura-2.jpg

சீனா காரன் கண்ணில் இது பட்டால் 
அரபு எண்ணையை குறைந்த விலையில் 
அல்லாஹ்வின் பெயரில் இறக்க திட்டம் வகுத்து கொடுப்பான்
அதே நேரம் உள் ஊரில்  வெளி காயம் தெரியாமல் எப்படி போட்டு 
குத்துவது என்றும் சொல்லி கொடுப்பான். அவன் கண்ணில் படாமல் 
பார்ப்பதுதான் இலங்கை முசுலீம்களுக்கு நன்று 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.