Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பையடுத்து சுகாதார நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்வது தவறு : குணதாஸ அமரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைகின்ற முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருக்கும் நிலையில், இந்த சுகாதார நடைமுறைகளை மீள்பரிசீலனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை தவறான முன்னுதாரணத்தையே வழங்குகின்றது என்று தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இவ்வாறு இன அல்லது மத அடிப்படைவாதிகள் குழுவொன்றினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அமைவான நடைமுறையில் உள்ள சட்டத்தையோ, கொள்கைகளையோ அல்லது விதிமுறைகளையோ மாற்றியமைக்கக்கூடாது என்றும் அவர் மேலும் ஜனாதிபதியை வலியுறுத்தியிருக்கிறார்.

அடிப்படைவாதிகளின் கோரிக்கைகளுக்கு அமைவாக கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

மதஅடிப்படைவாதிகளின் தேவைகளுக்கேற்ப செயற்படும் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைவாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகப் பின்பற்றப்பட்டுவரும் நடைமுறைகளை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முற்பட்டுவருகின்றது என்ற எண்ணப்பாடு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

சமூகவலைத்தளங்களில் வெளியிடப்படும் தகவல்களுக்கு அமைவாக நோக்குகையில், கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மரணமடைகின்ற முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்வது தொடர்பில் சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் தமது எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர்.

கடந்த பாராளுமன்ற அமர்வில் இதுகுறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டதாகவும் அறியமுடிகின்றது. அக்கோரிக்கையின்படி எவ்வித இன, மதபேதங்களுமின்றி கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களைப் புதைக்காமல், தகனம் செய்யவேண்டும் என்று தொழில்நுட்பக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை மீண்டும் மறுபரீசிலனைக்கு உட்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

இவ்வாறு இன அல்லது மத அடிப்படைவாதிகள் குழுவொன்றினால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு அமைவான நடைமுறையில் உள்ள சட்டத்தையோ, கொள்கைகளையோ அல்லது விதிமுறைகளையோ மாற்றியமைப்பது அல்லது மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதென்பது மிகவும் தவறான முன்னுதாரணமொன்றை வழங்குவதாகவே அமையும் என்பதை உங்களிடம் வலியுறுத்த விரும்புகின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/93812

இவரது கருது சரியோ பிழையோ என்று கூற விரும்பவில்லை.  இவர் ஒரு கடும்போக்கான இனவாதி. தமிழர் பிரச்சினையிலும் இவர் தீவிரமாக எதிர்ப்பு தெரிவிப்பவர்.

இருந்தாலும் முஸ்லிம்களை எரிப்பதால் மதம் சம்மந்தமாக என்ன பிரச்சினை எண்டு யாரவது விபரம் தர முடியுமா? கிறிஸ்தவர்களையும் அடக்கம் பண்ணுவதுதான் முறைமை. இருந்தாலும் அவர்கள் இது குறித்து பெரிதாக எதிர்ப்பு தெரிவித்ததாக இல்லை.

அப்படி எரிப்பதால் முஸ்லிம்கள் நரகத்துக்கு சென்று விடுவார்களா? அல்லது வேறு எதாவது தீமை எடுபடுமா? நான் அறிந்தவரையில் அடக்கம் பண்ணின பின்னர் அவர்கள் செய்த தவறுகளுக்காக அல்லா வந்து பிரம்பினால் அவர்களுக்கு தணடனை கொடுப்பாராம். பின்னர் சுவனத்துக்கு கொண்டுபோவாராம். இது உண்மையா? யாருக்காவது விளக்கம் தெரிந்தால் எமக்கும் அறியாததரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Robinson cruso said:

இது முசுலிம் அரசியல் வாதிகளீன் அரசியல்...இதன் மூலம்   வோட்டு வன்கியை தக்க வைக்க முடியும்...மதநோயை கொதி நிலையில் வைத்து ஆதாயம் தேடல்...

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Robinson cruso said:

அப்படி எரிப்பதால் முஸ்லிம்கள் நரகத்துக்கு சென்று விடுவார்களா? அல்லது வேறு எதாவது தீமை எடுபடுமா?

😂

இவர்கள் இப்போது நேரம் சரியில்லை என்பதால் இந்தளவில் இருக்கிறார்கள் அல்லாவிட்டால் முஸ்லிம் மதத்தை சேராதவர்களும் இறந்த பின் உடலை புதைக்க தான் வேண்டும் என்று குரான் சொல்வதாக விஞ்ஞான விளக்கமும் தருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விளங்க நினைப்பவன் said:

முஸ்லிம் மதத்தை சேராதவர்களும் இறந்த பின் உடலை புதைக்க தான் வேண்டும் என்று குரான் சொல்வதாக விஞ்ஞான விளக்கமும் தருவார்கள்.

முஸ்லீம் மதத்தைச் சேராதவர்களால் குரானைப்பற்றி சரியான விளக்கம் தரமுடியுமா தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

முஸ்லீம் மதத்தைச் சேராதவர்களால் குரானைப்பற்றி சரியான விளக்கம் தரமுடியுமா தெரியவில்லை. 

அவர்களே முஸ்லீம் மதத்தைச் சேராதவர்கள் குரான் சொல்கிறபடி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்வார்கள்.

அல்லாவின் மதத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும் பூமியிலும் உள்ளவை விரும்பியோ விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.
குரான் 3:83

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

அவர்களே முஸ்லீம் மதத்தைச் சேராதவர்கள் குரான் சொல்கிறபடி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை சொல்வார்கள்.

அல்லாவின் மதத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும் பூமியிலும் உள்ளவை விரும்பியோ விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.
குரான் 3:83

குழப்பமாக இருக்கிறது. குரான்: இஸ்லாம் (முஸ்லீம்) மதத்தைப்பற்றித்தானே கூறுகிறது. அப்படியிருக்கும் போது எப்படி  முஸ்லீம் அல்லாமல் குரானைபற்றிக் கூறமுடியும்? அந்த விளக்கம் சரியாக இருக்குமா? விவாதத்துக்கல்ல, தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்.

19 hours ago, alvayan said:

இது முசுலிம் அரசியல் வாதிகளீன் அரசியல்...இதன் மூலம்   வோட்டு வன்கியை தக்க வைக்க முடியும்...மதநோயை கொதி நிலையில் வைத்து ஆதாயம் தேடல்...

நாளைக்கு ஒரு ஆர்ப்படடம் செய்யப்போகிறார்களாம். பார்ப்பம் என்ன நடக்குதெண்டு. நேற்று நடந்த கூடத்திலும் அரச அதிகாரிகள் அடக்கம் செய்வதட்கு மறுத்து விடடார்கள். எனவே இந்த பிரச்சினையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் நோக்கமே காணப்படுகின்றது. இரண்டு பக்கத்துக்குமே இது தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதி

( எம்.ஆர் எம். வசிம் )

கொவிட் - 19 தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

spacer.png

இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நீதி அமைச்சர் அலி சப்றி ஜனாதிபதியிடம் இது தொடர்பாக எடுத்துரைத்த போதே ஜனாதிபதி இது தொடர்பான அனுமதியை வழங்கியுள்ளார்.

இவ்வாறு கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை முதல் கட்டமாக மன்னார் பிரதேசத்தில் இடமொன்றை ஒதுக்கி அடக்கம் செய்வதற்கு ஆராயப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியானதன் பின்னரே இந்த நடைமுறை அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/94045

5 hours ago, கிருபன் said:

நானும் செய்தி வாசித்தேன். அவர்களை அடக்கம் செய்வதில் பிரச்சினை இல்லை. இதட்கு மன்னாரில் அடக்கம் செய்ய வேண்டும்? மன்னார் மண்ணில் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி இருக்கிறதா? அல்லது வடக்கில் இருக்கும் மக்களை அளிக்க திடடமிடுகிறார்களா?

முஸ்லிம்கள் வாழும் பிரதேசம் எண்டு பார்த்தால் அமபரை மாவடடம்தான் முன்னிலையில் இருக்கிறது. எனவே அங்குதான் அடக்கம் செய்ய வேண்டும்.

தமிழ் அரசியல்வாதிகளும் (?) அங்குள்ள மக்களும்தான் இது பற்றி தீர்மானிக்க வேண்டும். மன்னாரில் அடக்கம் செய்வதால் வைரஸ் பரவாது என்றால் இலங்கையில் எங்கும் அடக்கம் செய்யலாம்.

இதெல்லாம் யாரை சமாதானப்படுத்தவோ, யாரை ஏமாற்ற செய்கிறார்களோ தெரியவில்லை. அமைச்சரவையில் இந்த தீர்மானம் எடுத்திருந்தால் டக்ளஸ் தேவானந்தாவே இதட்கு பதிலளிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Robinson cruso said:

அதுதானே... கொரோனாவால் இறந்த முஸ்லீம்களை அடக்கம் செய்ய... 
மன்னாரை  ஏன் தெரிவு செய்ய வேண்டும்?

அவர்களை எரிக்காமல், அடக்கம் செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்த...
முஸ்லீம்   அமைப்புகள்... காத்தான் குடி, அல்லது  கல்முனையில்.... 
இடம் ஒதுக்கிக் கொடுக்க,  பயமாய் இருக்கோ?

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் உலர்ந்த வலயம் என்பதால் இதை தெரிவு செய்துள்ளார்கள். 
வறண்ட இடத்தில் சடலங்களை புதைக்கும்போது சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்கிறார்கள்.

கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களை புதைப்பதற்கு அனுமதி வழங்கப் படவில்லை.

கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களை புதைப்பதற்கு 

அனுமதி வழங்கப் பட்டு விட்டதாக சமூக ஊடகங்களில் உலவும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று சுகாதாரத்துறையின் ஊடகப் பேச்சாராக செயல்படும் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.

நேற்று மாலையிலிருந்து சமூக ஊடகங்களில் கொரோனா தொற்றால் மரணமடையும் முஸ்லிம்களை நல்லடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அவர்களால் அனுமதி வழங்கப் பட்டு விட்டதாக செய்திகள் பரவி வந்தன.

நீதி அமைச்சர் கெளரவ அலி சப்ரி அவர்கள் தமக்கு இது தொடர்பாக தொலைபேசி ஊடாக அறியத் தந்ததாக ஒரு குரல் பதிவும் உலவி வந்தது.

மேலும் செய்தி ஊடகங்கள் பலவும் இது தொடர்பான செய்திகளையும் வெளியிட்டது. பல இஸ்லாமிய இயக்கங்களும் இதற்கு நன்றிகளைத் தெரிவித்திருந்தன.

இவ்வாறு பரவி வந்த செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்றும் மேற்படி தகவலை ஊடகப் பேச்சாளர் உறுதிப் படுத்தினார்.

https://www.madawalaenews.com/2020/11/video_10.html

5 minutes ago, colomban said:

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள்: அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்- ஞானசார தேரர்

கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடல்கள் தொடர்பாக அரசாங்கம், தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தினார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கலகொட அத்தே ஞானசார தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “இன்று நாட்டுக்குள் அதிக பேசுபொருளாக கொரோனா விவகாரம் மாற்றமடைந்துள்ளது.

இந்த நிலையில், இந்த வைரஸினால் உயிரிழக்கும் முஸ்லிம் மக்களின் உடல்களை எரிப்பதா- புதைப்பதா எனும் வாதமும் இடம்பெற்று வருகிறது. அத்தோடு, இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நாம் கடந்த காலங்களில் பல முஸ்லிம் அடிப்படைவாதம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்திருந்தோம்.  எனினும், கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது, இதனை அந்த அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை.

எம்மீது தான் குற்றஞ்சாட்டினார்கள். முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்க நாம் முயற்சிப்பதாகக் கூறினார்கள். இன்று அண்ணன் செய்த தவறையே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் செய்துள்ளார். உடல்களை புதைப்பதா- எரிப்பதா என்பதல்ல எமது பிரச்சினை.

உலக சுகாதார ஸ்தாபனம் விடுக்கும் வேண்டுகோளுக்கு இணங்கவே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. எனினும், கொரோனாவை ஒழிக்க யாரிடமும் ஒரு தெளிவான நிலைப்பாடு இல்லை. கொரோனா வைரஸ் எதனால் உருவானது என்பது குறித்து கூட யாருக்கும் தெளிவில்லை.

இந்த நிலைப்பாடு நாட்டுக்கு நாடு மாற்றமடைகிறது. எமது நாட்டில் ஒரு சட்டம் தான் இருக்க வேண்டும்.எமது நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்த நபர்களை எந்தக் காரணம் கொண்டும், புதைக்கக்கூடாது என்று சுகாதார அமைச்சினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

உடல்களை புதைப்பதால், நீர் மாசுபடுகிறது என்று எச்சரிக்கையும் கடந்த காலங்களில் விடுக்கப்பட்டது. இந்த நிலையில்தான், முஸ்லிம்களின் உடல்களை புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கம் இந்த விடயத்தில் நாடகமொன்றைதான் அறங்கேற்றி வருகிறது. அரசாங்கம் சார்பாக இதற்கான விளக்கம் வெளியிடப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/கொரோனாவினால்-உயிரிழந்த-3/

2 hours ago, colomban said:

மன்னார் உலர்ந்த வலயம் என்பதால் இதை தெரிவு செய்துள்ளார்கள். 
வறண்ட இடத்தில் சடலங்களை புதைக்கும்போது சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்கிறார்கள்.

கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களை புதைப்பதற்கு அனுமதி வழங்கப் படவில்லை.

கொரோனா தொற்றால் மரணமடைந்தவர்களை புதைப்பதற்கு 

அனுமதி வழங்கப் பட்டு விட்டதாக சமூக ஊடகங்களில் உலவும் செய்தியில் எந்த உண்மையும் இல்லை என்று சுகாதாரத்துறையின் ஊடகப் பேச்சாராக செயல்படும் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.

நேற்று மாலையிலிருந்து சமூக ஊடகங்களில் கொரோனா தொற்றால் மரணமடையும் முஸ்லிம்களை நல்லடக்கம் செய்வதற்கு ஜனாதிபதி அவர்களால் அனுமதி வழங்கப் பட்டு விட்டதாக செய்திகள் பரவி வந்தன.

நீதி அமைச்சர் கெளரவ அலி சப்ரி அவர்கள் தமக்கு இது தொடர்பாக தொலைபேசி ஊடாக அறியத் தந்ததாக ஒரு குரல் பதிவும் உலவி வந்தது.

மேலும் செய்தி ஊடகங்கள் பலவும் இது தொடர்பான செய்திகளையும் வெளியிட்டது. பல இஸ்லாமிய இயக்கங்களும் இதற்கு நன்றிகளைத் தெரிவித்திருந்தன.

இவ்வாறு பரவி வந்த செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்றும் மேற்படி தகவலை ஊடகப் பேச்சாளர் உறுதிப் படுத்தினார்.

https://www.madawalaenews.com/2020/11/video_10.html

வறண்ட பிரதேசம் எண்டு பார்க்கும்போது ஹம்பந்தோட்டையும் வறண்ட பிரதேசம்தான். வறண்ட பிரதேசம் எண்டு பார்க்கும்போது அது குறைவான மலை பெய்யும் இடமாக காணப்படும். இப்போது வட கிழக்கு பருவ மழை காலம். இந்த இரண்டு மாதமும் மன்னாரில் கடும் மழை பெய்யும். இவர்களின் விஞான விளக்கம் எல்லாம் தமிழர்களுக்கோ , முஸ்லிம்களுக்கோ பொருந்தாது. சிங்கள பகுதியில் புதைத்தால்தான் வைரஸ் பரவும். தமிழ் பகுதியில் புதைத்தால் வைரஸ் பரவாது.

மற்றயது , வைத்தியர் ஜயருவான் பண்டார தெரிவித்த கருது. சுகாதார அமைச்சினூடாக அப்படி ஒரு தீர்மானமும் எடுக்கவில்லை என்றுதான் கூறி இருந்தார். ஆனால் அரசியல் ரீதியாக அமைச்சரவையில் இன்று தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. நாளைக்குத்தான் சுகாதார அமைச்சினூடாக தீர்மானிப்பதட்கான கூடடம் நடைபெற இருக்கின்றது. எனவே அதட்கு சார்பான தீர்மானம்தான் அநேகமாக எடுக்கப்பட சந்தர்ப்பம் இருக்கின்றது. இருந்தாலும், ஞானசாரர் இதட்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை புதைக்க அமைச்சரவை அங்கீகாரம் ; உண்மைக்கு புறம்பான செய்தி என்கிறார் அமைச்சரவை பேச்சாளர்

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் இனத்தவர்களின் உடலை  புதைப்பதற்கு அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியுள்ளது. என தவறான செய்தி  சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

இவ்விடயம் தொடர்பில் நீதியமைச்சர் அமைச்சரவைக்கு முன்வைத்த யோசனையை  சுகாதார குழுவினருக்கு வழங்கவே அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் நாட்டில் முதலாவதாக  இறந்தவரின் உடலை தகனம் செய்வது, அல்லது புதைப்பதா என்ற விடயம் சுகாதார தரப்பினரால் அதிக ஆராயப்பட்டது.

எமது நாட்டின் பௌதீக  மற்றும் பொது காரணிகளை அடிப்படையாக கொண்டு  கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் இறப்பவர்களின் உடலை தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

 கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் இறக்கும் முஸ்லிம் இனத்தவர்களின் உடலை தகனம் செய்வது தொடர்பில் பல்வேறு தரப்பினர் மாறுபட்ட கருத்தினை தெரிவித்தார்கள்.

இவ்விடயம் பாராளுமன்றத்திலும், அமைச்சரவை கூட்டத்திலும் பேசப்பட்டது. இவ்வாறான நிலையில்  நீதியமைச்சர் ஜனாதிபதி  சட்டத்தரணி அலி சப்ரி இவ்வாரம் இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில்  இவ்விடயம் தொடர்பில் அமைச்சரவை  யோசனையை முன்வைத்தார்.

நடைமுறையில் உள்ள சட்டம்,சுகாதார அறிவுறுத்தல்கள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் உடலை உலர்வலய பிரதேசத்தில் புதைக்க முடியுமா என்ற யோசனை மாத்திரம் முன்வைக்கப்பட்டது.

நீதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை கொவிட்-19 வைரஸ் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் சுகாதார குழுவினரின் பரிசீலனைக்கு வழங்க மாத்திரமே அமைச்சரவை அனுமதி வழங்கியது. என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். 

இந்த தீர்மானம் சமூகவலைத்தளங்களில் திரிபுப்படுத்தப்பட்ட வகையில் வெளியாகியுள்ளன என்றார்.

https://www.virakesari.lk/article/94131

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பிழம்பு said:

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடலை புதைக்க அமைச்சரவை அங்கீகாரம் ; உண்மைக்கு புறம்பான செய்தி என்கிறார் அமைச்சரவை பேச்சாளர்

வேண்டுமென்றால்... அந்த உடல்களை, 
சவூதி அரேபியாவுக்கு... கொண்டு போய் புதைக்கட்டும்.
ஸ்ரீலங்காவில் எரிப்பது தான்... நல்ல பாதுகாப்பு. 😎

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் கொரோனா சடலங்களை அடக்கம் செய்ய அனுமதித்த தகவல் பொய்யானது

November 10, 2020

கொரோனா வைரஸ் தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான, சர்வதேச ரீதியான தரங்களை பொருட்படுத்தாமல், விதித்த தடையை அரசாங்கம் நீக்கியுள்ளதாக பொய்யான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற விடயம்  அம்பலமாகியுள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி அளித்ததாக வெளியான தகவல்கள் பொய்யானவை என சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

உயிரிழக்கும் முஸ்லீம்களின் இறுதி சடங்கை நடத்துவதற்கான கோரிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக இலங்கையின் முன்னணி இஸ்லாமிய அமைப்பு ஒன்று அறிவித்துள்ளது.

முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்காக,  நன்றி தெரிவிப்பதாக, நேற்று முன்தினம் (09)  ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட ராஜபக்ச சகோதரர்களுக்கு எழுதிய கடிதத்தில்,  சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் பொதுச் செயலாளர் ஆர். அப்துர் ராசிக் தெரிவித்திருந்தார்.

தற்போதைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உண்மைகளின் அடிப்படையில்  யாராவது இறந்தால் அந்த உடல் தகனம் செய்யப்படும் என நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த ஜயருவன் பண்டார,  தௌஹீத் ஜமாத் அமைப்பின் அறிவித்தலையும் நிராகரித்தார்.  

விதிகள் மாற்றப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வந்தாலும், சுகாதார அமைச்சு இதுவரை அவ்வாறான ஒரு தீர்மானத்தை  எடுக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

 “கொரோனா உடல்கள் தகனம் செய்யப்படும். இந்த நாட்டின் பிரதேச பற்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உண்மைகள் இரண்டின் அடிப்படையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தீர்மானத்தை அறிவித்தார். இந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்மானத்தில் எந்த மாற்றமும் இல்லை. சமூக ஊடகங்களில் வெளியாகும் பல்வேறு விடயங்கள்  குறித்து சுகாதார அமைச்சு இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. “

புதிய கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய தற்போதைய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக  சமூக ஊடகங்களில் பரவும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்து முஸ்லிம்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, இறந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதித்தமைக்கு, ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் நீதித்துறை அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு, முஸ்லிம் சமூகம் சார்பில் நன்றி தெரிவிக்கின்றோம்” என அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்தை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக  சில இணையதளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதுகுறித்து எவ்வித தகவலும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் விவாதம்

கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் இறுதி சடங்குகள் குறித்து இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு ஒரு பக்கச்சார்பற்ற நிபுணர் குழுவை நியமிக்குமாறு வைத்திய நிபுணர்கள் விடுத்த வேண்டுகோள் தொடர்பில் ஆறு மாதங்கள் கடந்தும் சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தாமைத் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அண்மையில் கவலை தெரிவித்தன.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் காணப்படுகின்ற போதிலும், அவற்றை புறந்தள்ளி கொரோனா தொற்றுநோயால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை எரிக்கும் அரசாங்கத்தி குறித்து தீர்மானம் ஆராய்வதற்காக குழுவை நியமிப்பது தொடர்பில் ஆறு மாதங்களுக்கு முன்னர் அழைப்பு விடுக்கப்பட்டது.  

நவம்பர் 4ஆம் திகதி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,  இலங்கையில் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான மனித உரிமையை விரைவில் அனுமதிக்குமாறு நீதி அமைச்சருக்கு அழைப்பு விடுத்ததோடு, இறந்த ஒன்பது முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ள விடயத்தையும் சுட்டிக்காட்டினார்.

“இன்று ஒன்பது பேர். நேரம் செல்ல செல்ல இது அதிகரிக்கும். இது ஒரு மனிதாபிமான பிரச்சினை. இது அரசியல் அல்ல. நீங்கள் இறந்தால், நீங்களும் எரிக்கப்படுவீர்கள். நான் இறந்தால், நான் எரிக்கப்படுவேன். அதைப் பற்றி சிந்தியுங்கள்.” என முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தினார்.

ஒரு பிரிவினைவாத தீர்மானம்

கொரோனா மரணம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட தரப்பினரின் விருப்பத்திற்கு அமைய புதைப்பது அல்லது தகனம் செய்வதன் மூலம் இறுதிச் சடங்குகளை நடத்தலாம் என உலக சுகாதார ஸ்தாபனம்  (WHO) தெரிவித்துள்ளபோதிலும், இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் ஒரு பிரிவினைவாத தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி , நீதி அமைச்சர் அலி சப்ரி, முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதில் மக்களுக்கு பிரச்சினை இருந்தாலும், அதை அரசியல் மயப்படுத்தக்கூடாது என வலியுறுத்தினர்.

 உலகின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்ட இலங்கை

கொரோனா தொற்றுநோய் பரவலுடன் இணைந்தாக மேற்கொள்ளப்படும் முஸ்லிம்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு உலகின் சக்திவாய்ந்த இஸ்லாமிய அமைப்பு  இலங்கைக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தது.

முஸ்லிம்களுக்கு எதிரான பாகுபாட்டைக் கண்டித்திருந்த 57 நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC), சமூகத்தின் உரிமைகள் மற்றும் கௌரவங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் மற்றும் இஸ்லாமிய சடங்குகளை மீறி கொரோனா நோயால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யும், கொரோனா தொற்றுநோயைத் தடுக்கும் பொறுப்பில் உள்ள அரச அதிகாரிகளின் செயற்பாடுகள் குறித்து, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் மனித உரிமை அமைப்புகள், பிரதான ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக கவலையை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. #முஸ்லீம் #கொரோனா #அடக்கம் #பொய்யானது #இஸ்லாமியஒத்துழைப்புஅமைப்பு #தௌஹீத்ஜமாத்
 
https://globaltamilnews.net/2020/152894/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

வேண்டுமென்றால்... அந்த உடல்களை, 
சவூதி அரேபியாவுக்கு... கொண்டு போய் புதைக்கட்டும்.

அது தான் நடக்காது. சிரியா, அபிரிக்க முஸ்லிம் அகதிகள் ஐரோப்பா நோக்கி படைஎடுத்து வந்தபோது சவுதி அரேபியா டுபாய் போன்ற பணக்காரநாடுகள் அவர்களை ஏற்று கொள்ளவில்லை. காலத்துக்கு ஒவ்வாத முஸ்லிம் மதசட்டங்களை இவர்கள் காவி கொண்டு திரிவதால் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு தான்  பிரச்சனை. முஸ்லிம்களிடம் உள்ள சுதந்திர ஜனநாயக எண்ணங்கள் கொண்டவர்களுக்கும் பிரச்சனை தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களின் சடலங்களை எரிப்பதா ? புதைப்பதா?: அரசின் நிலைப்பாடு என்ன ? - குணதாச அமரசேகர கேள்வி

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் பொது தன்மையில் தீர்மானம் எடுக்க வேண்டும். வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் இனத்தவர்களின் உடலை தகனம் செய்வதா, அல்லது புதைப்பதா என்று எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் குணதாச அமரசேகர தெரிவித்தார்.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/138447/asda.jpg

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்வது குறித்து தற்போது மாறுப்பட்ட கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் இனத்தவர்களின் உடலை தகனம் செய்ய வேண்டாம் என முஸ்லிம் தரப்பினரும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தொடர்ந்து அழுத்தம் பிரயோகித்து வருகிறார்கள்.

உடல்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்த வேண்டாம் என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் முஸ்லிம் இனத்தவர்களின் உடல்கள் தகனம் செய்யும் போது இஸ்லாமிய மத உரிமை மீறப்படுவதாக குறிப்பிடுகிறார்கள்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழக்கும் பௌத்தர்கள், இந்துக்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் ஆகியோரது உடல்கள் தகனம் செய்யப்படுகின்றன. இதன் போது அவரவர் மத உரிமைகள் மீறப்படுகின்றன. நெருக்கடியான சூழ்நிலையிலும் மத காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்களை புதைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின. பின்னர் அந்த செய்தி தவறானது என அரசாங்கம் மறுப்பு தெரிவித்தது. இதில் எது உண்மை என தெரியவில்லை. ஆகவே இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் சிறந்த தீர்மானத்தை விரைவில் எடுக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/94259

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.