Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடும்பப்பகை – சுழிபுரத்தில் இருவர் படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடும்பப்பகை – சுழிபுரத்தில் இருவர் படுகொலை

November 14, 2020

IMG_2511-1024x498.jpg

யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த  சின்னவன் செல்வம் (வயது-56) மற்றும் இராசன் தேவராசா (வயது-31) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர். 
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு நேற்றைய தினமும் ஏற்பட்டுள்ளது. மாலை இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டு , கைக்கலப்பாக மாறும் சூழ் காணப்பட்ட போது அயலவர்களால் இரு தரப்பினரும் சமாதானப்படுத்தப்பட்டனர்.

பின்னர் பின்னிரவு நேரம் ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். 
அதில்  சின்னவன் செல்வம் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார், மற்றையவரான இராசன் தேவராசா (வயது-31) சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  #சுழிபுரம் #குடும்பப்பகை #படுகொலை

IMG_2508-1024x498.jpgIMG_2509-1024x498.jpgIMG_2510-1024x498.jpgIMG_2511-1024x498.jpg

https://globaltamilnews.net/2020/153012/

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பற்றி தமிழ்பேஜ்ஜில் ஒரு ஆக்கம் போட்டு இருக்கிறார்கள் ...வாழ்க தமிழினம் ...இன்னம் எத்தனை நாளைக்கு சிங்களவனை திட்டிக் கொண்டு இருக்க போறோம் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இதைப்பற்றி தமிழ்பேஜ்ஜில் ஒரு ஆக்கம் போட்டு இருக்கிறார்கள் ...வாழ்க தமிழினம் ...இன்னம் எத்தனை நாளைக்கு சிங்களவனை திட்டிக் கொண்டு இருக்க போறோம் 

குடும்பப்பகை, தகராறு , அடிபாடு, வெட்டுக்குத்து, கொலை .. இதில் 'தமிழினம்' என்று ஏன் தூக்கி பேசுகிறீர்கள்.
இவை மனித அவலங்கள், மனித வன்மங்கள். சிங்களவன்,தமிழன், வெள்ளையன், கருவல், சப்பட்டை  அனைவருக்கும் பொது.  

சிங்களவனை திட்டுவது அவனது இனத்துவேசம் கொண்ட அரசியலால், அவன் செய்த இன அழிப்பு நடவடிக்கைகளால். இல்லை என்று கூறுவீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

13 hours ago, கிருபன் said:

யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்ததில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 

3 hours ago, ரதி said:

இதைப்பற்றி தமிழ்பேஜ்ஜில் ஒரு ஆக்கம் போட்டு இருக்கிறார்கள் ...வாழ்க தமிழினம் ...இன்னம் எத்தனை நாளைக்கு சிங்களவனை திட்டிக் கொண்டு இருக்க போறோம் 

சிங்களப்பகுதிகளில் இதை விட பல மடங்கு சம்பவங்கள் உள்ளது.
இனிமேலும் நாக்கு ஊத்தை வழிக்கும் போது அக்கம் பக்கம் பாருங்கள்.

19 hours ago, Sasi_varnam said:

குடும்பப்பகை, தகராறு , அடிபாடு, வெட்டுக்குத்து, கொலை .. இதில் 'தமிழினம்' என்று ஏன் தூக்கி பேசுகிறீர்கள்.
இவை மனித அவலங்கள், மனித வன்மங்கள். சிங்களவன்,தமிழன், வெள்ளையன், கருவல், சப்பட்டை  அனைவருக்கும் பொது.  

சிங்களவனை திட்டுவது அவனது இனத்துவேசம் கொண்ட அரசியலால், அவன் செய்த இன அழிப்பு நடவடிக்கைகளால். இல்லை என்று கூறுவீர்களா?

சிங்களவரை இனத்துவேசம் கொண்டவர்கள் என்று கூறிவிட்டு,  நீங்களும்  இனத்துவேச சொற்களை உபயோகித்துள்ளீர்களே ச‍சிவர்ணம். மன்னிக்கவும்.  இதில் உங்களை தவறாக சொல்லவில்லை. எம்மவர்கள் அப்படி அடுத்த இனங்களை பற்றி பேசும் போது இப்படி இனதுவேச சொற்களை உபயோகித்து பேசுவது வழமை என்பதால் தான் அப்படி உபயோகிதீர்கள் என்பது தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

சிங்களப்பகுதிகளில் இதை விட பல மடங்கு சம்பவங்கள் உள்ளது.
இனிமேலும் நாக்கு ஊத்தை வழிக்கும் போது அக்கம் பக்கம் பாருங்கள்.

கு.சா.

மற்றய இனத்தவரை விட அதிகமாக நாம் இழந்துள்ளோம். அதிகமாகப் போராடியுள்ளோம். அதிக தியாகங்களைச் செய்துள்ளோம்.

எனவே எமக்கு அதிகமாக ஒற்றுமையாக இருக்க வேண்டிய தேவையும், பொறுப்பும் உள்ளது. 

👍

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Sasi_varnam said:

குடும்பப்பகை, தகராறு , அடிபாடு, வெட்டுக்குத்து, கொலை .. இதில் 'தமிழினம்' என்று ஏன் தூக்கி பேசுகிறீர்கள்.
இவை மனித அவலங்கள், மனித வன்மங்கள். சிங்களவன்,தமிழன், வெள்ளையன், கருவல், சப்பட்டை  அனைவருக்கும் பொது.  

சிங்களவனை திட்டுவது அவனது இனத்துவேசம் கொண்ட அரசியலால், அவன் செய்த இன அழிப்பு நடவடிக்கைகளால். இல்லை என்று கூறுவீர்களா?

சசி குடும்ப பகை, வெட்டு குத்து எல்லா இடமும் நடப்பது தான் ....இன துவேச செயல்களுக்கு சிங்களவனை திட்டுவது வேறு  ஆனால் இங்கு சிலர் ஊரில் எது நடந்தாலும் அதை சிங்களவன் தலையில் தானே தூக்கி போடுகிறார்கள்.
இதற்கு பின்னால் போதைவஸ்து கும்பல் இருக்கின்றது.
சிங்களவனுக்கு [ஆமி /பொலீஸ்] இதை பற்றி கவலையில்லை/கவலைப்பட வேண்டிய தேவையுமில்லை ...போதைவஸ்து பாவித்து செத்தால் அவர்களுக்கு லாபம் தானே ...அவர்கள் தடுக்க வேண்டிய தேவையில்லை ...இதை செய்கிறவர்களுக்கு அரசியல் பின்பலம் இருக்குது என்று சொல்கிறார்கள்...டக்கி,கருணா என்றவுடன் கேள்வி கேட்கும் இவர்கள் கூட்டமைப்பு எம்பிமார் என்ன செய்யினம் என்று கணக்கெடுப்பதில்லை... அரசியல்வாதிகள் தலையீடு இருப்பதால் காவற்துறையும் கண்டு கொள்வததில்லை ....எம்மை அழிக்க சிங்களவர் தேவையில்லை...இப்படியே மிச்சம் இருக்கும் தமிழரும் அழிந்து போகட்டும் 
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

சிங்களவரை இனத்துவேசம் கொண்டவர்கள் என்று கூறிவிட்டு,  நீங்களும்  இனத்துவேச சொற்களை உபயோகித்துள்ளீர்களே ச‍சிவர்ணம். மன்னிக்கவும்.  இதில் உங்களை தவறாக சொல்லவில்லை. எம்மவர்கள் அப்படி அடுத்த இனங்களை பற்றி பேசும் போது இப்படி இனதுவேச சொற்களை உபயோகித்து பேசுவது வழமை என்பதால் தான் அப்படி உபயோகிதீர்கள் என்பது தெரியும். 

துல்பென் நான் வேண்டும் என்றே தான் இந்த செற்பதங்களை பிரயோகித்தேன்.
இவை துவேசமான சொற்கள் என்பதும் எனக்குத்தெரியும். 

1 hour ago, ரதி said:

சசி குடும்ப பகை, வெட்டு குத்து எல்லா இடமும் நடப்பது தான் ....இன துவேச செயல்களுக்கு சிங்களவனை திட்டுவது வேறு  ஆனால் இங்கு சிலர் ஊரில் எது நடந்தாலும் அதை சிங்களவன் தலையில் தானே தூக்கி போடுகிறார்கள்.
இதற்கு பின்னால் போதைவஸ்து கும்பல் இருக்கின்றது.
சிங்களவனுக்கு [ஆமி /பொலீஸ்] இதை பற்றி கவலையில்லை/கவலைப்பட வேண்டிய தேவையுமில்லை ...போதைவஸ்து பாவித்து செத்தால் அவர்களுக்கு லாபம் தானே ...அவர்கள் தடுக்க வேண்டிய தேவையில்லை ...இதை செய்கிறவர்களுக்கு அரசியல் பின்பலம் இருக்குது என்று சொல்கிறார்கள்...டக்கி,கருணா என்றவுடன் கேள்வி கேட்கும் இவர்கள் கூட்டமைப்பு எம்பிமார் என்ன செய்யினம் என்று கணக்கெடுப்பதில்லை... அரசியல்வாதிகள் தலையீடு இருப்பதால் காவற்துறையும் கண்டு கொள்வததில்லை ....எம்மை அழிக்க சிங்களவர் தேவையில்லை...இப்படியே மிச்சம் இருக்கும் தமிழரும் அழிந்து போகட்டும் 
 
ஊரில் நடக்கும் எல்லா கண்றாவியையும் சிங்களவன் தலையில் போட்டு நாங்கள் பரிசுத்த பாப்பரசர்களாக காட்டிக்கொள்வதும் தவறுதான்.

சிங்களவரின் இனத்துவேஷமான நடவடிக்கைகளை கண்டும் காணாதது போல கடந்து போக முயல்வதும் தவறுதான் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

கு.சா.

மற்றய இனத்தவரை விட அதிகமாக நாம் இழந்துள்ளோம். அதிகமாகப் போராடியுள்ளோம். அதிக தியாகங்களைச் செய்துள்ளோம்.

எனவே எமக்கு அதிகமாக ஒற்றுமையாக இருக்க வேண்டிய தேவையும், பொறுப்பும் உள்ளது. 

👍

முதலில் நாம் அரசியலில் ஒன்று பட வேண்டும். அது இன்னும் இல்லை. 

அதை விட இந்த செய்தி குடும்ப பகை என்றே கூறுகின்றது. நான் புலம்பெயர்ந்திருந்தாலும் ஒரு சில குடும்ப பகைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இருக்கும். இதை தமிழின அரசியலுடன்/இன அழிவுகளுடன் சேர்ப்பது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரம் இரட்டைக்கொலை விவகாரம்- பொலிஸாரின் செயற்பாட்டில் அதிருப்தி!

police-314d-696x392.jpg
 47 Views

வலி.மேற்கு பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதில் வட்டுக்கோட்டை பொலிஸார் அசமந்தப் போக்கை கடைப்பிடிப்பது தொடர்பாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுசெல்வது என வலி.மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சுழிபுரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இரட்டைப் படுகொலையை தடுத்து நிறுத்த முடியுமாக இருந்த போதிலும் பொலிஸார் உரிய நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு செல்லாத காரணத்தாலேயே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது எனவும் சபையில் தெரிவிக்கப்பட்டது. பொலிஸாரின் இந்தச் செயற்பாட்டுக்கு சபையில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

வலி.மேற்கு பிரதேச சபையின் 33 ஆவது அமர்வு இன்று (16) தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது சுழிபுரம் – குடாக்கனையில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பாக உறுப்பினர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இப்பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாலேயே அடிக்கடி இவ்வாறான படுகொலைகள் இங்கு நடைபெறுகின்றன என உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

கசிப்பு உற்பத்தி செய்பவர்களுக்கும் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன எனவும் இதனாலேயே இங்கு கசிப்பு உற்பத்தியைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேற்படி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி செய்பவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்று வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கடந்த வருடம் கையளிக்கப்பட்டது எனவும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் சபையில் கருத்து முன்வைக்கப்பட்டது.

கடந்த வெள்ளி நள்ளிரவு மேற்படி படுகொலை நடைபெற்ற இடத்தில் மாலை வேளையே ஒருவர் தாக்கப்பட்டார். பின்னர் இரவு 10 மணியளவில் கொலையாளிகள் வாள்களுடன் நிற்கின்றனர் என்ற விடயம் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தொலைபேசியில் பல தடவைகள் அறிவிக்கப்பட்டது. எனினும் அவர்கள் அங்கு செல்லவில்லை.

கொலை இடம்பெற்ற பின்னர் இராணுவத்தினர் அங்கு சென்று உடல்களை தமது வாகனத்தில் ஏற்றிச் சென்ற பின்னரே பொலிஸார் சென்றனர். எனவேஇ குறித்த படுகொலைக்கு பொலிஸாரும் உடந்தையாக இருந்தனரா என்ற கேள்வி எழுகின்றது எனவும் சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

சுழிபுரத்தில் இடம்பெறும் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையை கட்டுப்படுத்தி அப்பகுதியிலும் அயல் பிரதேசங்களிலும் வசிக்கும் பொதுமக்களை பாதுகாக்குமாறும் வட்டுக்கோட்டை பொலிஸாரின் செயற்றிறன் அற்ற தன்மை குறித்தும் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவருவது என சபையில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்பு போராட்டம்

இதேவேளை, மேற்படி இரட்டைப் படுகொலை, குடாக்கனை கசிப்பு உற்பத்தி, பொலிஸாரின் நடவடிக்கைகள் போன்றவற்றைக் கண்டித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை சுழிபுரம் சந்தியில் அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவது எனவும் சபையில் தீர்மானிக்கப்பட்டது.

https://www.ilakku.org/சுழிபுரம்-இரட்டைக்கொலை-வ/

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, உடையார் said:

கடந்த வெள்ளி நள்ளிரவு மேற்படி படுகொலை நடைபெற்ற இடத்தில் மாலை வேளையே ஒருவர் தாக்கப்பட்டார். பின்னர் இரவு 10 மணியளவில் கொலையாளிகள் வாள்களுடன் நிற்கின்றனர் என்ற விடயம் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தொலைபேசியில் பல தடவைகள் அறிவிக்கப்பட்டது. எனினும் அவர்கள் அங்கு செல்லவில்லை.

கொலை இடம்பெற்ற பின்னர் இராணுவத்தினர் அங்கு சென்று உடல்களை தமது வாகனத்தில் ஏற்றிச் சென்ற பின்னரே பொலிஸார் சென்றனர். எனவேஇ குறித்த படுகொலைக்கு பொலிஸாரும் உடந்தையாக இருந்தனரா என்ற கேள்வி எழுகின்றது எனவும் சபை உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

பொலிசாரின் அசமந்தப் போக்கால்.... தமிழினம், இரண்டு குடும்பத் தலைவர்களை இழந்து நிற்கின்றது. 😡

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.