Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள்!"

Featured Replies

"தேவன் வரப் போகின்றார், "தேவன் வந்து கொண்டிருக்கின்றார்", ";இதோ தேவன் வந்து விட்டார்" என்பது போன்று தெய்வீகச் செய்திகளுக்கு மேலாக இதோ ரஜனிகாந்தின் சிவாஜி வரப் போகிறது என்ற பரபரப்பான செய்திகள்தான் இன்று தமிழ் நாட்டையும், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் வணிகப் பத்திரிகைகளும் உலகின் தமிழ் இணையத் தளங்களும் இதைத்தான் எழுதிக் கொண்டிருக்கின்றன. இந்த தேவனின் வருகைக்காக தமிழ் மக்களும், புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளும் ஏங்கித் தவித்த நிற்பது போன்ற தோற்றம் கூட உருவாகி விட்டது. அது உண்மையாகக் கூட இருக்கலாம்.

சுப்பர்ஸ்ரார் என்கின்ற ஆங்கில சொற்தொடரை தனது பெருமையாகக் கொண்டிருக்கும் சிவாஜிராவ் என்கின்ற கன்னடனை முன்னிறுத்தி செயற்படுகின்ற இந்த ஆர்ப்பாட்டங்களின் ஊடாக தமிழன் எவ்வாறு திசை திருப்பப்பட்டு, அவனது பண்பாடும் எதிர்காலமும் எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பது குறித்து பலருக்கு அக்கறை இல்லை. ரஜனிகாந்து ஊடாக மாபெரும் சீரழிவு ஒன்று உருவாகி வருகிறது அல்லது உருவாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

ரஜனிகாந்த் மட்டும்தான் இந்த சீரழிவை செய்கிறாரா மற்றவர்கள் செய்யவில்லையா என்று கேள்வி கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு தவறைக் கொண்டு இன்னொரு தவறை நியாயப்படுத்தக் கூடாது. அது மட்டும் அல்லாமல் இன்று வரை அல்லது நேற்றுவரை தமிழக சினிமாவில் ரஜனிகாந்த் என்கின்ற நடிகர் மீது தமிழ் நாட்டு மக்கள் கொண்டிருப்பதாக சொல்லப்படும் திரைப்படும் மோகமும் சாதாரணமானது அல்ல. அவருடைய தாக்கமும் வீச்சும் முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இன்று தமிழ்நாட்டு திரைப்பட ரசிகர்களின் ஆதரவு காரணமாக பணமும் புகழும் பெற்று வாழ்ந்து வருகின்ற ரஜனிகாந்த் என்கின்ற கன்னட மனிதரின் பண்பாட்டு சீரழிவுத் திரைப்படங்கள் செய்கின்ற தாக்கம் ஒருபுறம் இருக்கட்டும். ரஜனிகாந்த் என்கின்ற ஒரு மனிதரை ஒரு கன்னடன் என்று சொல்லி தமிழர்களிடம் இருந்து அந்நியம் பேசுவது சரியா? அதனை தமிழர்கள் செய்யலாமா? என்று சில நியாயமான கேள்விகளும் எழுகின்றன. அவைகளுக்கு உரிய பதில் என்ன?

அவைகளுக்கு உரிய பதிலும் ரஜனிகாந்திடம் இருந்தே வருகின்றது. வந்தும் இருக்கின்றது. ரஜனிகாந்த் எப்போதுமே தன்னை ஒரு கன்னட வெறியன் என்று காட்டியும், நடந்தும் வந்திருக்கிறார் என்பது இங்கே சுட்டிக்காட்டத் தக்கது. சில பழைய சம்பவங்களை சொல்வது இங்கே பொருத்தமாக இருக்கும்.

ரஜனிகாந்த் முன்னாள் சிவாஜிராவாக இருந்த போது செய்த பல தொழில்களில் ஒன்றான மூட்டை தூக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் போது "கன்னட பாதுகாப்பு இயக்கம்" என்கின்ற கன்னட தீவிர இயக்கத்தின் உறுப்பினராக இருந்து வந்தார். அந்தக் காலகட்டத்தில் கலைஞர் கருணாநிதியின் படைப்பில் எம்ஜிஆர் அவர்கள் நடித்த "காஞ்சித் தலைவன்" என்ற திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது. அதில் கன்னட மன்னன் ஒருவனை தாழ்த்தி சில வசனங்கள் சொல்லப்பட்டிருந்தன.

இதற்கு தங்கள் கன்னடத்தை (கண்டனத்தை) காட்டுவதற்காக தமிழர்களின் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனை முன்னின்று செய்தவர் யார் தெரியுமா? வேறு யாருமில்லை. தமிழ்நாட்டின் இன்றைய சுப்பர்ஸ்ரார் ரஜனிகாந்தான் அதை முன்னின்று செய்தார். இன்றைய தினம் வரை ரஜனிகாந்த் "கன்னட பாதுகாப்பு இயக்கத்தின்" உறுப்பினராகத்தான் இருக்கிறார். அவருடைய அண்ணன் சத்தியநாராயணா இந்த இயக்கத்தின் ஒரு அமைப்பாளராகவும் இருக்கின்றார்.

இது குறித்து கன்னட தீவிரவாத இயக்கமான சளுவளி இயக்கத்தின் தலைவரான வட்டாள் நாகராஜ் 1992ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி வெளிவந்த "சுடச் சுடச் செய்தி" என்ற பத்திரிகைக்கு தெளிவாகவே செவ்வி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவிக்கையில் "இங்கே தமிழர்களின் கடைகளை அடித்து நொருக்குவதற்கு சிவாஜிராவ்தான் முன்னணியில் நிற்பான், ஏனென்றால் அவனுக்கு தமிழர்களை கண்டாலே பிடிக்காது, சிவாஜிராவ் நம்ம பையன், அவரை நாம் புரிந்து கொள்ள வேண்டும், அத்தோடு சத்தியநாராயணாவின் பிள்ளைகள் "கன்னட இளைஞர் முன்னணி" என்ற அமைப்பையும் ஆரம்பித்துள்ளார்கள், அப்படி ரஜனிகாந்தின் குடும்பமே கன்னடர்களுக்கு ஆதரவாக உள்ளது, தன்னுடைய படம் தமிழ்நாட்டில் ஓட வேண்டும் என்பதற்காக அவர் செய்கின்ற தமிழர் ஆதரவுப் பேச்சுக்களை நாம் பொருட்படுத்தக் கூடாது" என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்திரைப்படங்கள் அனைத்தும் கர்நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்பே திரையிடப்பட முடியும் என்ற நிலை இருக்கின்ற போது, ரஜனியின் "சிவாஜி" திரைப்படம் மட்டும் உடனடியாகவே எவ்வித பிரச்சனையும் இன்றி கர்நாடகத்தில் திரையிடப்பட முடிவதன் ரகசியமும் இதுதான்.

1991ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டு, மேலும் ஆயிரக்கணக்கானோர் அகதியாக ஓடி வந்து வந்த போதும் இந்த ரஜனிகாந்த் அவர்களுக்காக வாய் திறக்கவில்லை. நெய்வேலியில் தமிழ்நாட்டு திரையுலகம் பேரணி நடத்திய போது, தனித்து உண்ணாவிரதம் இருந்து ஒற்றுமைக்கு உலை வைத்தார்.

தமிழ்நாட்டு ரசிகர்களின் ஆதரவால் தான் பெற்ற கோடிக்கணக்கான செல்வத்தை ரஜனிகாந்த் இன்று கர்நாடாகவிலேயே பெரும்பாலும் முதலீடு செய்து தொழிற்சாலைகளும் மற்றும் வியாபாரங்களுமாக நடத்தி, தனது இனத்திற்கு உதவி செய்வது ஒரு விதத்தில் பாராட்டப்படக் கூடியதுதான். தான் எங்கு சென்று உழைத்தாலும், தனது இன மக்களும் மாநிலமும் பயன்பெற வேண்டும் என்கின்ற அவரது கன்னடப் பற்றும் பாராட்டுக்கு உரியதுதான்.

ஆனால் வேறொரு இனத்தினை (தமிழ் இனத்தை) ஏமாற்றியும், அவர்களை முட்டாள்கள் ஆக்கியும் அந்த இனத்தின் இலட்சக் கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தியும் அதன் மூலம் தன்னுடைய இனத்திற்கு உதவி செய்வது என்பது கண்டிக்கத்தக்கது.

வீரப்பன் கடத்திச் சென்ற கன்னட நடிகர் ராஜ்குமாரை ஐயா பழநெடுமாறன் அவர்களும், நக்கீரன் கோபால் அவர்களும் காடு சென்று பேச்சுவார்த்தைகள் நடத்தி மீட்டு வந்த போது, நடிகர் ரஜனிகாந்த் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு ஒரு அறிக்கை விடுத்தார். அதில் குறிப்பாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் அவர்களுக்கு ஒரு பாராட்டை தெரிவித்திருக்கின்றார். ரஜனி அந்தப் பாராட்டில் என்ன சொன்னார் தெரியுமா?

"நீங்கள் செய்த இந்த முயற்சி காரணமாக கர்நாடகாவில் தமிழர்களின் ரத்த ஆறு ஓடுவது தவிர்க்கப்பட்டு உள்ளது"

"சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி" என்கின்ற மாதிரி கன்னடர்களை தமிழர்களுக்கு எதிராக கிளப்புகின்ற அறிக்கையை ரஜனிகாந்த் வெளியிட்டார். அட, வீரப்பன் என்கின்றவர் ராஜ்குமார் என்கின்ற நடிகரை கடத்தினால் ஏன் கர்நாடகத்து தமிழர்கள் ரத்தம் சிந்த வேண்டும்? ஏன் அப்படி ஒரு சிந்தனையை தமிழ்நாட்டில் வாழுகின்ற இந்த ராஜனிகாந்த் என்கின்ற நடிகர் சொல்கிறார்?

"கர்நாடகத் தமிழர்கள் இரத்தம் சிந்தினால், தமிழ்நாட்டில் கன்னடர்களின் இரத்தம் ஆறாக ஓடும் என்று யாராவது கர்நாடகத்தில் சொல்லி இருக்க முடியுமா? சொல்லியிருந்தால் அவர்கள் கதி என்னவாகி இருக்கும்? அதுதான் தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் உள்ள வித்தியாசம்.

அன்று தனது "பாபா" திரைப்படத்திற்கு அதிகூடிய கட்டணத்தில் நுழைவுச் சீட்டுக்களை விற்பதற்கு அனுமதியை பெறவேண்டும் என்பதற்காக அன்றைய தமிழ்நாட்டு முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு சத்தியநாராயணா மூலம் மலர்க்கொத்து ஒன்றினை அனுப்பி சமாதானத் தூது விட்ட இந்த ரஜனிகாந்த் சில வருடங்களிற்கு முன்பும் செல்வி ஜெயலலிதாவிற்கு அன்புடன் ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

ஒரு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் முன்னிலையில் ரஜனிகாந்த் பேசும் போது சொல்கிறார் "அம்மா, விடுதலைப் புலிகளால் மட்டும் உங்களுக்கு ஆபத்து வரும் என்று நினைக்காதீர்கள்! இங்கேயும் சில புலிகளால் உங்களுக்கு ஆபத்து வரலாம்! ஆகவே, கவனமாக இருங்கள்! - இது ரஜனிகாந்தின் அன்பான அறிவுரை!

இந்த ரஜனிகாந்த் 2001 ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சனை குறித்து பேசும் போது, இது புராணங்கள் எமக்கு தருகின்ற விளக்கம் என்று புதிராக கருத்தினை வெளியிட்டார். தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கருத்துக்கள் இன்றைய காலகட்டத்திற்கு ஒத்து வராது என்று முன்னர் சொன்ன போது, ரஜனிக்கு எதிராக பல கண்டனங்கள் எழுந்தன. அப்போது ரஜனியை காப்பாற்ற ஓடோடி வந்தவர் வேறு யாருமில்லை. தந்தை பெரியாரின் பாசறையில் பயின்ற கலைஞர் கருணாநிதிதான். பெரியாருக்கு எதிராக ரஜனி சொன்ன கருத்துக்களை மழுப்பி அறிக்கை ஒன்றை விட்டு நிலைமையை சமாளித்த கருணாநிதி ரஜனியை கண்டிக்கக்கூட இல்லை.

தமிழ்நாட்டு தமிழர்களை சிந்திக்க விடாமல் திரைப்பட மாயையில் அழிழ்த்தி வைத்திருக்கும் அதிகார சக்திகளின் ஒரு கருவிதான் இந்த ரஜனிகாந்த் என்பதில் ஐயமில்லை. ரஜனிகாந்த் என்கின்ற கருவி மழுங்கிப் போனால், புதிய ஒரு முகத்தை உருவாக்கும் பணியில் இந்தச் சக்திகள் இறங்கக்கூடும் என்பதையும் நாம் உணர வேண்டும்.

இதே வேளை தமிழ்நாட்டு தமிழர்களை மட்டும் இந்த திரைப்பட மாயை பாதிக்கவில்லை. இதற்கு பலம் சேர்த்து உலகம் எங்கும் பரவச் செய்ய உறுதுணையாக இருப்பதில் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு பெரும் பங்கு உண்டு. இன்று தமிழகத்தின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும், நடிகர்களும் நம்பி இருப்பதும், தங்கி இருப்பதும் புலம்பெயர்ந்த தமிழர்களின் பணத்தைத்தான்.

தமிழ் படங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் முன்பு வைத்ததற்கும், பாடல்கள் ஆங்கிலத்தில் பாடப்படுவதற்கும், வசனங்கள் தமிங்கிலத்தில் பேசப்படுவதற்கும் தமிழனின் பண்பாடு பகிரங்கத்தில் சீரழிக்கப்படுவதற்கும் காரணமாக இருக்கின்ற தமிழ்நாட்டில் வாழும் மார்வாடிப் பண முதலீட்டார்களக்கு கைகொடுத்து உதவுவது எமது புலம்பெயர்ந்த தமிழர்களே.

இந்திய சீன யுத்தத்தின் போதும், கார்க்கில் போரின் போதும் மற்றைய வேறு பிரச்சனைகளின் போதும் நிதிசேகரித்துக் கொடுப்பதில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டு திரைப்படத் துறையினர்தான் முன்னிற்கிறார்கள். அவர்களுடைய வருவாயில் முக்கிய பங்கை செய்கின்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் இரத்த உறவுகள் கொடிய அடக்குமுறையில் துன்பப்படுகின்ற போது இந்தத் திரைப்படத்துறையினர் என்ன செய்து கிழித்தார்கள்?

தென்னாபிரிக்காவில் நிறவெறி என்றவுடன் அந்த நாட்டுடன் விளையாட்டுப் போட்டிகளை தவிர்த்த நாடுகளும் மக்களும் உண்டு. சீனாவில் மனித உரிமை மீறல்களுக்காக அவர்களின் உற்பத்திப் பொருட்களை வாங்க மறுத்தவர்கள் உண்டு. அதே போல் தமிழ் இனப் பண்பாட்டின் சீரழிவை, மொழிக் கொலையை நாம் ஏன் எமது செலவில் இறக்குமதி செய்ய வேண்டும்?

இதற்கு தீர்வாக பலர் பலதரப்பட்ட கருத்துக்களை சொல்கிறார்கள். இது நடைமுறைச் சாத்தியம்தானா, இதற்கு அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் மக்களும் ஒத்துழைப்பார்களா என்ற யதார்த்தமான கேள்வியையும் சிலர் கேட்கிறார்கள். திரைப்படங்களை திரையில் பார்க்காது ஒளிநாடாக்களிலும், இறுவெட்டுக்களிலும் பார்க்கலாம் என்று சிலர் மாற்றுத் தீர்வு யோசனை சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டின் அரசியலையும், பொருளாதாரத்தையும் தீர்மானிக்கின்ற மிக முக்கியமான சக்தியாக இன்று தமிழ் திரையுலகம் விளங்குகின்றது. கலைஞரின் வார்த்தைகளை கடன் வாங்கினால் "அது இன்று கொடியவர்களின் கூடாரமாக விளங்கி வருகின்றது". ஆனால் இந்தக் கொடியவர்களின் கூடாரம் இன்று புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவையும் நம்பித்தான் இயங்குகின்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மஹாத்மா காந்தியின் வழியில் கொடுக்கக்கூடிய புறக்கணிப்புக்கள் வணிகரீதியில் தமிழ்நாட்டு அரசை மட்டும் அல்ல, மத்திய அரசையும் வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரு வழியில் உதவக் கூடும். புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது உறவுகளே! உங்கள் அனைவருக்கும் உரிமையோடும் உறவோடும் தாயகத்தில் இருந்து நாம் முன்வைக்கின்ற வேண்டுகோளை தயவு செய்து செவிமடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நமக்கு உதவாத, நமக்கு எதிரான இந்தக் கேவலமான கீழ்த்தரமான நடிகர்களினதும், தயாரிப்பாளர்களினதும் திரைப்படத்தை புறக்கணியுங்கள். இவற்றை வாங்கி வெளியிடுகின்ற அன்பு உறவுகளுக்கும் இதே வேண்டுகோளைத்தான் நாம் முன்வைக்கின்றோம். அன்று எம்ஜிஆர் என்கின்ற நடிகர் தமிழ்தேசியத்திற்கு முன்னின்று உதவினார். இன்று ரஜனி என்கின்ற நடிகர் சுயநலத்திற்காக தமிழ்தாயை உதைக்கின்றார்.

புலம்பெயர்ந்த உறவுகளே! உங்களின் சிவாஜிப் படப் புறக்கணிப்பு நீங்கள் எடுத்து வைக்கின்ற முதல் அடியாக இருக்கட்டும். அதுவே நீங்கள் கொடுக்கின்ற முதல் இடியாகவும் இருக்கட்டும். இந்த இடி பேரிடியாக எதிர்காலத்தில் மாறட்டும். இன்று இங்கே அல்லல்பட்டு அகதிகளாக ஓடித்திரிகின்ற எமது உறவுகளுக்கு உங்களின் இந்த நடவடிக்கை தேவனின் உண்மையான வருகையாக அமையட்டும்.

- தாயகத்தில் இருந்து அரங்கன்

Edited by சபேசன்

  • Replies 217
  • Views 23.4k
  • Created
  • Last Reply

ஈழத்தமிழன் யாருக்கும் அடிமையாவதில்லை..

எங்களால் இது முடியும் என்றாலும் இது தேவைதானா?

எங்களால் எப்படி முடியும்? என்்னைப் பொறுத்தளவில் புகலிடத்ததில் ஈழத் தமிழர்கீர்களில் பெரும்பாலானோர் இன்னும் சுரணை அற்றவர்களாகவே உள்ளார்கள். ஸ்ரீலங்கா பொருட்களை புறக்கணி என்று கூச்சலிடுபவர்களே மெலிபன் பிஸ்கெற்றுகளுடன் போவதைத்தான் பார்க்கக் கூடியதாக உள்ளது. யாழ்ப்பாணத்தில 2 பேரை ச சுட்டுப்போட்டாங்களாம் என்றுவிட்டு சினிமாக்குள் மூழ்கும் தமிழழர்கள்தான் சாதராரணமான வாழ்க்கையில் எதிர்ப்படுபவர்கள். எனினும், இவ்வாறான கோரிக்கைகளால் ஒரு சிலராவது நிசங்களை உணர்ந்து தன்னிலை விளங்கினால் சந்தோசமே!!

  • தொடங்கியவர்

ரஜனிகாந்தை ஒரு நடிகனாக மட்டும் பார்க்க வேண்டும் என்று சொல்பவர்கள் இந்தக் கட்டுரையை படித்து உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்

ரஜனியை ஒரு நடிகராக மட்டும்தான் பார்க்க முடியும். ஏனென்னால் அவர் ஒரு சிறந்த "நடிகர்".

முதலில் அரங்கன் என்ற முகமூடியை பாவித்து சிலர் தமது ஆசையைப் புகுத்தியுள்ளனர். ஆக்கம் எங்கு பெறப்பட்டது?? கட்டுரையில் தமது கற்பனைக்கேற்றவாறு பல விடயங்கள் புகுத்தப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் பற்றி கவலைப்பட வேண்டியவர்கள் இந்தியத் தமிழர்கள். மேற்ச்சொல்லப்பட்ட காரணங்களால் எமக்கு எந்தப் பாதிப்புமில்லை. இதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமுமில்லை. உண்மையில் ரஜனிகாந்தின் சிவாஜி திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டுமாயின் அதனை வெளியிட்டு பணம் பண்ணப் பார்ப்பகளிடமே அந்தத் திரைப்படத்தை புறக்கணிக்கச் சொல்லலாமே. புறக்கணிப்பு வெற்றிகரமாக இருக்கும். பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல் தேவை தானா?? இந்த புறக்கணிப்பின் இலட்சணம் இக்களத்தில் இணைக்கப்படும் சிவாஜி திரைப்படம் பற்றிய செய்திகளின் எண்ணிக்கையைப் பார்த்தாலே புரியும். உண்மையில் உளப்பூர்வமாக எதனை மேற்கொண்டாலும் அது வெற்றிகரமாகவே நடக்கும். ஆனால் இங்கு இரட்டை வேடம் போடுபவர்களே அதிகம். அதனாலேயே அனைத்தும் தோல்வியடைகின்றன. :lol::icon_idea:

  • தொடங்கியவர்

வெளிநாடுகளின் திரைப்பட வியாபாரிகளிடம் சொல்வதில் அர்த்தம் இல்லை. அவர்களை படத்தை வாங்க வேண்டாம் என்று சொன்னால், யாராவது ஒட்டுக் குழு உறுப்பினர் படத்தை வெளியிட்டு லாபம் பார்ப்பார். அத்துடன் ஒட்டுக் குழுவுக்கு நிதியும் அனுப்பி வைப்பார்.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவதே முக்கியம். மக்கள் திரைப்படங்களை புறக்கணிக்கத் தொடங்கினால், திரைப்படங்களை வாங்குபவர்கள் தாமாகவே அதை நிறுத்துவார்கள்.

இங்கு விழிப்புணர்வு பற்றிப் பேசுபவர்கள் தானே வியாபாரத்தையும் செய்கின்றார்கள். தரிசனம் தொலைக்காட்சி பற்றி; சினிமாவை ஒதுக்கி எமது கலை கலாச்சாரத்தை பேணுவது அது இது என்று கொடி பிடித்தவர்கள் தானே அதே சினிமாவை புகுத்தியுள்ளார்கள். அதே தொலைக்காட்சியில் சிவாஜி பட விளம்பரம் வேறு பிச்சுக்கிட்டு போகுது. சிலவேளை சபேசன் இங்கு பணம் கிடைக்கிறது அதற்காக விளம்பரம் போடுகின்றார்கள் என்று வக்காலத்து வாங்கினாலும் வாங்குவார். எல்லாம் வெறும் ஊருக்கு உபதேசங்கள் மட்டும் தான். இங்கு தடுமாற்றம் மக்களுக்கில்லை விழிப்புணர்வு என்று வேடம் போடும் வேடதாரிகளுக்கே. :

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரத்துக்கு அழகு விளம்பரம் செய்தல் என்பதுபோல சிவாஜீ படத்துக்கு நல்ல விளம்பரம் எல்லாம் போகுது.

மக்களாய் பாத்து திருந்தினால் தான் உண்டு.

வியாபாரத்துக்கு அழகு விளம்பரம் செய்தல் என்பதுபோல சிவாஜீ படத்துக்கு நல்ல விளம்பரம் எல்லாம் போகுது.

மக்களாய் பாத்து திருந்தினால் தான் உண்டு.

அதுதானே.. திருடனாய்ப் பார்த்த திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது... :lol:

ஓம் ஓம் விளம்பரங்களை மக்கள் தானே போடச் சொன்னார்கள், படத்தையும் வெளியிடச் சொன்னதும் மக்கள் தானே, இல்லாவிட்டால் போராட்டம் ஆர்பாட்டம் நடத்தப் போவதாக மக்கள் தானே அறிவித்தார்கள். நொண்டிக்குதிரைக்கு சறிக்கினது சாட்டுப் போல் அவரவர் தாம் செய்யும் தவறுகளுக்கு மக்கள் தானே பலிக்கடாக்கள்.

ஒவ்வொரு தனிமனிதனும்தான் மக்கள்..

உன்னைத்திருத்திக்கொள் கமூகம் தானே திருந்தும்..

நாலு பேர் முரண்பாடாக..பேசினால்..

தவறு செய்பவர்கள் அதை திருப்தியோடு செய்வார்கள்..

இது தவறெனக் கண்டால் பேசாலாம்..

இது சரிப்படாது என்பதால்தான் எதுவும் உருப்படாமல் போகிறது..

நமக்குள் நாமே விரோதி

உண்மைதான் "உன்னைத் திருத்திக்கொள் சமூகம்; தானாகத் திருந்தும் என்பார்கள". தன்னையே திருத்தாமல் அடுத்தவனுக்கு உபதேசம் செய்வதில் என்னபயன் என்பதையே நானும் சொல்கின்றேன். சொல்லிற்கும் செயலிற்கும் சம்மந்தம் வேண்டாமா??

ஓ.. வசம்பு உங்களுக்கு

பெரிய அளவில் உளவுப்படை இருப்பது தெரியாமல் வம்புக்கு வந்துவிட்டேன் போல இருக்கிறது.. :lol:

ஓ.. வசம்பு உங்களுக்கு

பெரிய அளவில் உளவுப்படை இருப்பது தெரியாமல் வம்புக்கு வந்துவிட்டேன் போல இருக்கிறது.. :lol:

:P :icon_idea: :P :D

இங்கு விழிப்புணர்வு பற்றிப் பேசுபவர்கள் தானே வியாபாரத்தையும் செய்கின்றார்கள். தரிசனம் தொலைக்காட்சி பற்றி; சினிமாவை ஒதுக்கி எமது கலை கலாச்சாரத்தை பேணுவது அது இது என்று கொடி பிடித்தவர்கள் தானே அதே சினிமாவை புகுத்தியுள்ளார்கள். அதே தொலைக்காட்சியில் சிவாஜி பட விளம்பரம் வேறு பிச்சுக்கிட்டு போகுது. சிலவேளை சபேசன் இங்கு பணம் கிடைக்கிறது அதற்காக விளம்பரம் போடுகின்றார்கள் என்று வக்காலத்து வாங்கினாலும் வாங்குவார். எல்லாம் வெறும் ஊருக்கு உபதேசங்கள் மட்டும் தான். இங்கு தடுமாற்றம் மக்களுக்கில்லை விழிப்புணர்வு என்று வேடம் போடும் வேடதாரிகளுக்கே. :

சரியாகச் சொன்னீர்கள்! உங்கள் கருத்தோடு நான் நூற்;றுக்கு நூறு வீதம் உடன்படுகிறேன்.கோடம்பாக்க கழிகடை சினிமாவை புறக்கணித்துவிட்டு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்களால் மக்கள் தொலைக்காட்சியை வெற்றிகரமாக நடத்த முடிகிறது.ஆனால் 19 ஆயிரத்துக்கு அதிகமான மகாவீரர்களின் தியாக வரலாற்றையும் ஒரு சிறிய கைத்துப்பாக்கியுடன் ஒரு பெரிய அரசாங்கத்தை எதிர்க்க முடியும் வெல்லமுடியும் என்று துணிச்சலுடனும் புறப்பட்ட தேசியத் தலைவரின் முன்மாதிரியையும் கொண்ட நம்மால் கோடம்பாக்க சீரழிவு சினிமாவை தாண்டி வெளியே வர முடியவில்லை.மாவீரர்களின் தியாகங்கள் மற்றும் தேசியத் தலைவரின் முன்மாதிரி எல்;லாம் பேச்சுக்குதான் சரி நடைமுறைக்கு சாத்தியமற்றவை.இவற்றை வைத்து மக்களை அணிதிரட்ட முடியாது ஊடகங்களை நடத்த முடியாது என்ற எண்னமே எங்களுடைய மனதிலே இருக்கிறது..இந்த நிலையில்; மக்களை நாங்கள் எப்படி குறைசொல்ல முடியும்?

  • தொடங்கியவர்

வசம்புவும், நவமும் கடைசியாகச் சொன்ன கருத்தோடு நானும் முற்றுமுழுதாக ஒத்துப் போகின்றேன்.

சிறிலங்காவின் விமானசேவைக்கான விளம்பரம், சிறிலங்காவின் பொருட்களுக்கான விளம்பரம் என்று அனைத்துமே எமது ஊடகங்களில் நன்றாகவே போய்கொண்டிருக்கிறது.

இது உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய இழிவான நிலை.´

சில மாதங்களிற்கு முன்பு தமிழர் பண்பாட்டிற்கு விரோதமான சில விளம்பரங்கள் ஒரு பெரும் ஊடகத்தில் வந்தது. இது குறித்து கேட்ட போது, அவர்கள் சொன்ன பதில் இதுதான்.

"நீங்கள் அவர்கள் தருகின்ற விளம்பரப் பணத்தை தந்தால், நாங்கள் அவைகளை போடாது விடுகின்றோம்".

இந்த விடயத்தில் மருத்துவர் ராமதாசு பாராட்டுக்கு உரியவர். அவர் "மக்கள் தொலைக்காட்சியை" தொடர்ந்து நடத்த வேண்டும்.

எமது ஊடகங்களிடம் சொல்லிப் பயனில்லை. அவர்கள் ஒவ்வொரு வியாக்கியானம் பேசிக் கொண்டிருப்பார்கள்.

மக்களிடம்தான் சொல்ல வேண்டும்.

அரங்கன் எழுதிய கட்டுரையும் பெரும்பாலும் மக்களை நோக்கித்தான் பேசுகிறது!

ம்

சங்கர் படம் என்றாலே ஒரே அமர்க்களம்தான்

பாய்ஸ் படம் வந்த நேரம் அந்த படத்திற்காக ஏகப்பட்ட விளம்பரங்கள். ஆபாசமான படம்; என்று அதைப் பார்ப்பதற்கு எத்தனையேபேர் முண்டியடித்து பார்த்தார்கள். அதைப்போலத்தான் இந்த விளம்பரமும்.

என்னைப் பொறுத்தவரையில் சிவாஜி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் சாதிக்கப்போவது எதுவும் இல்லை. நாம் போகவில்லை என்றால் பக்கத்து வீட்டுக்காரன் போவான். அவனைத் தடுப்பதற்கு எமக்கு உரிமை இல்லை.

உண்மையில் செய்யவேண்டியவர்கள் திரைப்படத்தை வெளியிடும் இலங்கைத்தமிழர்கள். அதற்கான விளம்பரத்தை காண்பிக்கும் தரிசனம் தொலைக்காட்சியினர்தான். ஏன் மக்களை குறை சொல்ல வேண்டும்.

உன்னால் முடிந்தால் செய் அல்லாவிட்டால் மூடிக்கொண்டு இரு...........

உங்களால் முடிந்தால் செய்யுங்கள் இல்லை மூடிக்கொண்டு இருங்கள்

என்று மரியாதையாக எழுதியிருந்தால் மட்டுறுத்தினர்களும் சந்தோசப்படுவார்களே..

  • தொடங்கியவர்

sivajidvd1ht8.jpg

சிவாஜி" டிவிடி வெளிவந்துவிட்டது!!????

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் பல கோடி பணத்தை கொள்ளையிட வருகின்ற "சிவாஜி" திரைப்படத்தின் டிவிடி வெளியாகி விட்டதாக பரபரப்பான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. இன்று அல்லது நாளை "சிவாஜி" திரைப்படத்தை இணையத்தில் பார்க்க முடியும் என்றும் தெரிகிறது.

"சிவாஜி" திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் இருந்தே, "சிவாஜி" படக்குழுவினரை மீறி அது பற்றிய தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆரம்பத்தில் சிவாஜி திரைப்படத்தின் காட்சிகள் புகைப்படங்களாக வெளிவந்தன. மிகவும் ரகசியமாக வைக்கப்பட்ட மொட்டைத் தலை ரஜனியின் படமும் வெளிவந்தது.

அதன் பிறகு அடுத்த அதிர்ச்சியாக சிவாஜி படத்தின் பாடல்கள் வெளிவந்தன. பாடல் வெளியீட்டு விழா நடைபெறுவதற்கு முன்னமே சிவாஜி படத்தின் 3 பாடல்கள் பல இணையத் தளங்களில் வெளியாகின.

மிகவும் ரகசியமாவும் பாதுகாப்பவும் வைக்கப்பட்டும் இவைகள் அனைத்தும் வெளியாகின.

இதற்கு முன்பு ரஜனிகாந்த் நடித்திருந்த "சந்திரமுகி" திரைப்படமும் படம் திரையிடப்பட்ட அடுத்த நாளே 20இற்கும் மேற்பட்ட இணையத் தளங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

சிவாஜி படத்தின் பாடல்களும், புகைப்படங்களும் முன்னமேயே வெளியானது போன்று தற்பொழுது சிவாஜி படத்தின் "டிவிடியும்" வெளியாகிவிட்டதாக செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. இந்த "சிவாஜி" டிவிடியில் தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளும் உள்ளதாகவும், திரையில் வருகின்ற சிவாஜியை விட மேலும் சில நிமிடங்கள் அதிகமாக வருவதாகவும் அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

ஐரோப்பாவில் "சிவாஜி" திரைப்படம் ஏறக்குறைய 20 யூரோ நுழைவுக் கட்டணத்துடன் திரையிடப்படுகிறது. ஒரு குடும்பம் "சிவாஜி" படத்தை பார்ப்பதற்கு ஏறக்குறைய 100 யூரோக்கள் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் "சிவாஜி" டிவிடி உடனடியாக இணையத் தளங்களில் வெளியாவதால் பெரும்பாலான தமிழ் மக்கள் டிவிடியில் "சிவாஜி" திரைப்படத்தை பார்த்து மகிழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவாஜி;பற்றி தர்க்கம் விவாதம் செய்தே இதை அதிகம் விளம்பரம் செய்து விட்டோமா என்று கூட எண்ண தோன்றுகின்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை நடிகை நடிகர்களுக்காக தற்கொலை செய்பவர்களும் உண்டு. தமிழ்நாட்டு அரசியலின் பிரதான பங்கும் சினிமாவுக்கு உண்டு. சினிமா மேலான மக்களின் மோகம் ஒரு விதத்தில் வெறித்தனமான மோகம் மக்களின் பலவீனமாகவும் சினிமாவின் பலமாகவும் உள்ளது. இதற்கு பல காரணங்கள் உண்டு.

நிஜவாழ்வில் சாதாரண மனிதனின் கனவுகள் ஆசைகள் சினிமா தீர்த்து வைக்கிறதாக கூட சொல்ல இடமுண்டு. சாதாரண மனிதர்கள் டுயட் பாடுவதில்லை. காதல் இலகுவாக வருவதில்லை. சாதி மதங்களை தாண்டி காதலை சாதாரண மனிதனின் கீரோத்தனம் வென்று விடுவதில்லை. ஒழுக்கமான கதாநாயகியும் கதாநாயகனும் சினிமாவில் அடயாளப்படுத்தப் படுகின்றனர்.

இவ்வாறு நிஜ வாழ்வில் கலாச்சார சாதிய இறுக்கம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அதன் நிமிர்த்தம் உருவாக்கப்பட்டுள்ள உளவியல் ரீதியான தாக்கத்திற்கு சினிமாவில் ஓரளவு ஆறுதல் கிடைப்பதாக ஓரு மாயத்தோற்றம் மக்களை ஆட்கொண்டுள்ளது.

ஒரு சினிமா திரைக்கு வரும் சமயம் புறக்கணிப்பது பற்றி நாம் பேசலாம் ஆனால் இது பிரச்சனைக்கு தீர்வாகுமா? ஏன் மக்கள் நடிகரை தேவனாக நோக்குகின்றனர் அவ்வாறான நிர்பந்தத்தை ஏற்படுத்தும் காரணிகள் என்ன என்று ஆராய்ந்து அதனை நிவர்த்தி செய்ய ஆக்க பூர்வமாக ஏதாவது செய்வது சிறப்பாக இருக்கும்

புறக்கணிப்பது என்ற கருத்துக்கு எதிர்வாதம் எனது நோக்கம் இல்லை ஆனால் புறக்கணிப்புகள் பிரச்சனைக்கு தீர்வாகும் என்பதில் நம்பிக்கை இல்லை. பிரச்சனை நடிகரிடம் இருப்பதாக நான் நம்பவில்லை. தேவனாக ஆக்கியது மக்களே. மக்கள் ஏன் தேவனாக ஆக்கினார்கள் என்பதில் இருந்தே இந்த பிரச்சனையை அணுக வேண்டும் என்பது எனது கருத்து.

Edited by sukan

முதல்ல அதைச்செய்யுங்கோப்பா படத்தை உடனே இணையத்தில வெளியிடுங்கோ கோடிபுண்ணியம்...

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் பல காலம் இருந்தன். பெடியனா இருக்கேக்குள்ள ரஜினி வெறி பிடித்து முதல்நாள் காட்சிக்கு முண்டியடித்து சட்டை தலை கிலையெல்லாம் கலைஞ்சு பெல்ட் கழண்டு சினிமா பாத்து சந்தோசப்பட்டன். பிறகு கொஞ்சம் வளந்தாப்பிறகு பாக்கேக்கைதான், இந்த ரஜினி ஆரெண்டு தெரிஞ்சிது. :unsure: தமிழ்நாட்டு சனத்திண்ட காசில வாழுறது ஒருபக்கம். கன்னடத்துக்கு வக்காலத்து இன்னொருபக்கம். அவரைச்சொல்லித் தப்பில்லை. ஏனெண்டால் போஸ்டர் ஒட்ட எங்கட ரசிகப்பெருமக்கள் இருந்தாங்களே. ஆராச்சும் கொஞ்சம் வில்லங்கமா கேள்விகேட்டால் தேசிய ஒருமைப்பாடு பஞ்சர் ஆகிப்போட்டுது எண்டு சொல்லி அமத்திப்போடுவாங்கள். :)

இங்க எங்கட ஆக்களும் என்ன சும்மாவே! தொங்குற களுசானெல்லாம் போட்டுக்கொண்டு தலைமயிர மினக்கேட்டு பின்னல் போட்டுக்கொண்டு (கறுப்பர் ஆகினமாம்...) எங்கட ஆதி மாதிரி சேட்டை விட்டுக்கொண்டு ரஜினி படம் பார்த்தால்தான் அவையளுக்குத் திருப்தி. அவையளிண்ட அப்பா அம்மாமாருக்கும் பெருமை. :unsure: இதில எங்க போய் படத்தைப் புறக்கணிக்கிறது?!! எங்கட ஆக்களுக்கு உண்மையிலையே கொஞ்சமாவது சூடு சுரணையிருந்தா இந்தப்படத்தை தியட்டருக்குப் போய் பாக்கமாட்டினம். கள்ள சிடி எண்டால் ஓக்கே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்ல அதைச்செய்யுங்கோப்பா படத்தை உடனே இணையத்தில வெளியிடுங்கோ கோடிபுண்ணியம்...

நிட்சயமாக வெளியிடப்படும். முடிந்தால் சிடியும் இலவசமாக சில இடங்களில் வழங்கப்படும்.

தயவு செய்து பணம் கொடுத்து இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டாம்.

Edited by tamillinux

எங்கட ஆக்களுக்கு உண்மையிலையே கொஞ்சமாவது சூடு சுரணையிருந்தா இந்தப்படத்தை தியட்டருக்குப் போய் பாக்கமாட்டினம்.

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.