Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டிசம்பர் 16 முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூடிவைப்பதற்கு ஜேர்மன் திட்டம் !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டிசம்பர் 16 முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூடிவைப்பதற்கு ஜேர்மன்  திட்டம் ! | Athavan News

டிசம்பர் 16 முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூடிவைப்பதற்கு ஜேர்மன் திட்டம் !

கட்டுப்பாடுகளை கடுமையாக்கி, கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்த, ஜேர்மனி அரசாங்கம் எதிர்வரும் புதன்கிழமை முதல் ஜனவரி 10 வரை பெரும்பாலான கடைகளை மூட திட்டமிட்டுள்ளது.

அதிபர் அங்கலா மேர்க்கலுக்கும் மாநிலத் தலைவர்களுக்கும் இடையிலான கூட்டத்தின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முன்னர் நாடளாவிய ரீதியிலான கட்டுப்பாடுகளுக்கு ஆதரவளிக்காத ஜேர்மனியின் மாநிலங்களும் இந்த நடவடிக்கைக்கு ஆதரவை தெரிவித்துள்ளன.

அதன்படி பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் போன்ற அத்தியாவசிய கடைகள் மற்றும் வங்கிகள் மட்டுமே திறந்த நிலையில் இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

http://athavannews.com/டிசம்பர்-16-முதல்-ஜனவரி-10-வரை/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் இழுத்து மூடுறாங்கள்.  இண்டைக்கு திருப்பி கொஞ்ச சாமான் சக்கட்டையள் ஸ்ரொக் பண்ணி வைச்சாச்சு...😁

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலும் மீண்டும் கடுமையாக்க போறார்களாம்...எப்படித் தான் கட்டுப்படுத்தினாலும் சனம் சொல்வழி கேளாது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, ரதி said:

லண்டனிலும் மீண்டும் கடுமையாக்க போறார்களாம்...எப்படித் தான் கட்டுப்படுத்தினாலும் சனம் சொல்வழி கேளாது 

எதுக்கெடுத்தாலும் தமிழன்,தமிழர்,புலம்பெயர்தமிழர் பழக்கவழக்கங்கள் துண்டற சரியில்லை.ஊரிலையும் அப்பிடி இஞ்சையும் அப்பிடி.பட்டிக்காடுகள்,நாகரீகம் தெரியாததுகள்,திருந்தாத சனங்கள் எண்டு ஒரு பட்டியல் இருக்கெல்லோ? 

வெள்ளைக்காரன் திறமானவங்கள், சொக்கத்தங்கங்கள் வெல்லைக்காரன்கள் எதையும் முன்னோக்கித்தான் யோசிப்பாங்கள் எண்டதெல்லாம் என்னமாதிரி தங்கச்சி?

கொரோனா இப்ப எல்லாரையும் ஒரு வரிசையிலை கொண்டுவந்து இருத்தி விட்டிருக்கு( கடவுள்)
காசு பணம் இருந்தென்ன? சொத்து சொகம் இருந்தென்ன? ஏறினால் கார் இறங்கினால் காபெட் வசதி இருந்தென்ன? நீ பெரிசு நான் பெரிசு எண்ட தினாவெட்டு எங்கை? நான் அறிவாளி எண்ட திமிர் எங்கை? நாங்கள் பகுத்தறிவுவாதிகள் எண்ட கும்பல் என்ன? சக உறவுகளை மூடன்/மூடர் எண்டு எள்ளி நகையாடிய பெருமான்கள் என்ன?

எல்லாருக்கும் ஒரே சட்டம் அதுதான் முகக்கவசம். என்ன கூத்தாடினியள்? இயற்கையை கடவுளை மீறினால் நான் இருக்கிறன் எண்டு காட்டத்தான் இந்த கொரோனா.

ஒரு உலக மகா யுத்தம் வந்தால்கூட இந்த  உலகம் இவ்வளவுக்கு அடங்காது ஒடுங்காது. மனிதன் செய்யும் யுத்தம் ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டத்திற்கு கேட்காது புரியாது விளங்காது ஏனைய மக்கள் உணரவும் மாட்டார்கள். இதுதான் கடவுளின் கொரோனா யுத்தம்.    வெடிகுண்டு சத்தமில்லாமல் வெடிகுண்டு மணமில்லாமல் சாப்பிடுற சாப்பாட்டினரை மணம்கூட  இல்லாமல்....மூக்குக்கு எந்த வாசனையும் இல்லாமல்.....காயம் இல்லாமல்  இரத்தக்களரி இல்லாமல் உலகளாவிய ஒரு படிப்பினை என்றால் அது கொரோனா.

மனிதமே அடங்கு...
 மனிதமே இருப்பதை நேசி 
மனிதமே இருப்பதை காப்பாற்று 
மனிதமே இயற்கையை அழிக்காதே
மனிதமே இயற்கையை நேசி 
மனிதமே இருப்பதை அனுபவி
மனிதமே இல்லாததிற்கு ஆசைப்படாதே
மனிதமே முடியாததை தேடாதே
மனிதமே உன்னை நீயே புகழாதே
மனிதமே எதை நீ கண்டு பிடித்தாய்
மனிதமே நீ வரும் போது ஏதாவது கொண்டு வந்தாயா?
மனிதமே போகும் போது ஏதாவது கொண்டு செல்கின்றாயா?

மனிதமே இனியாவது பிற உயிர்களை நேசி
மனிதமே இனியாவது இயற்கையை காப்பாற்று
மனிதமே இனியாவது இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே...அதாவது  சந்திரனில் தண்ணீர் தேடாதே.....அயலவனுக்கு தண்ணீரை கொடு.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி இப்படி எமுதும் நீங்கள் என்னத்துக்கு சாமன் சக்கட்டைகளை ஸ்ரோக்ப்பண்ணி வைச்சுயி௫ககிறீர்கள்😂👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
57 minutes ago, Kandiah57 said:

அது சரி இப்படி எமுதும் நீங்கள் என்னத்துக்கு சாமன் சக்கட்டைகளை ஸ்ரோக்ப்பண்ணி வைச்சுயி௫ககிறீர்கள்😂👍

வணக்கம் கந்தையர்!

ஆட்டை கடிக்காமல் மாட்டை கடிக்காமல் நேரை என்னட்டை வந்திருக்கிறியள்...? 😁

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

லண்டனிலும் மீண்டும் கடுமையாக்க போறார்களாம்...எப்படித் தான் கட்டுப்படுத்தினாலும் சனம் சொல்வழி கேளாது 

புதன் கிழமை இரவில் இருந்து மூன்றடுக்கு லொக்டவுன்  .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

அது சரி இப்படி எமுதும் நீங்கள் என்னத்துக்கு சாமன் சக்கட்டைகளை ஸ்ரோக்ப்பண்ணி வைச்சுயி௫ககிறீர்கள்😂👍

5 hours ago, குமாரசாமி said:

வணக்கம் கந்தையர்!

ஆட்டை கடிக்காமல் மாட்டை கடிக்காமல் நேரை என்னட்டை வந்திருக்கிறியள்...? 😁

Vadivelu Hugs GIF - Vadivelu Hugs Comfort GIFs

கந்தையரின்.... டீலிங் பிடிச்சிருக்கு.  :grin:  🤣

  • கருத்துக்கள உறவுகள்

மிக்கநன்றி .தமிழ் Sri  அண்ணை.😀

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குமாரசாமி அண்ணை .உங்கள் செய்கையில் கருத்து உண்டு .உங்கள் நீண்ட பந்தியிலும் நல்லகருத்துண்டு .அனால் உங்கள் பதிலில் கருத்தைககாணவில்லை .🤓🤝

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Kandiah57 said:

வணக்கம் குமாரசாமி அண்ணை .உங்கள் செய்கையில் கருத்து உண்டு .உங்கள் நீண்ட பந்தியிலும் நல்லகருத்துண்டு .அனால் உங்கள் பதிலில் கருத்தைககாணவில்லை .🤓🤝

நானும் தேடிப்பாத்தன் ஒண்டையும் காணேல்லை. வெறும் சக்கை...:cool:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கந்தையா என்று யாரும் பெயர் மாத்தி இருக்கினமோ ?

யாழுக்கு புதுசா யாரும் வருவதில்லை வந்தவையளும் போண்டா பணியாரம் என்று நிக்கினம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பெருமாள் said:

இங்கு கந்தையா என்று யாரும் பெயர் மாத்தி இருக்கினமோ ?

யாழுக்கு புதுசா யாரும் வருவதில்லை வந்தவையளும் போண்டா பணியாரம் என்று நிக்கினம் .

பெருமாள்... எனக்கும், அந்த சந்தேகம் இருக்குது. 😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, Kandiah57 said:

Kandiah  where are you from?

Kandiah  woher kommst du?

Kandiah waar kom jy vandaan?

కాంతయ, మీరు ఎక్కడ నుండి వచ్చారు?

你從哪裡來?

កន្តាយ៉ាតើអ្នកមកពីណា?

آپ کہاں سے ہیں؟

கந்தையர் எங்கிருந்து வருகின்றீர்கள்?

Кантая, адкуль ты?

કંટાયા, તું ક્યાં છે?

Kandiah hvor kommer du fra?

Kandiah ເຈົ້າມາຈາກໃສ?

आप कहां के निवासी हैं?

කන්ටයා, ඔබ කොහෙන්ද?

ನೀವು ಎಲ್ಲಿನವರು?

كنتايا ، من أين أنت؟

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

பெருமாள்... எனக்கும், அந்த சந்தேகம் இருக்குது. 😁

யாழுக்கு வந்த எவருமே எந்த மூலைக்குள் எது இருக்கு எண்டு தெரிந்து கொள்ளவே ஒரு ஆறு மாதம் எடுக்கும் அதன்பின் சக கருத்தாளருடன் கடிபட ஒருவருடம் எடுக்கும் இது வேறை டிசைன் .😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

யாழுக்கு வந்த எவருமே எந்த மூலைக்குள் எது இருக்கு எண்டு தெரிந்து கொள்ளவே ஒரு ஆறு மாதம் எடுக்கும் அதன்பின் சக கருத்தாளருடன் கடிபட ஒருவருடம் எடுக்கும் இது வேறை டிசைன் .😁

சரியாக சொன்னீர்கள். எப்படியும்... ஆள் வசமாக அம்பிடுவார். அது வரை, விட்டுப் பிடிப்பம். 😄

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் பல வருட வாசகன் பின் கருத்தாளர் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்.

புதிதாக எழுதுபவர்= யாழுக்கு புதியவர் இல்லை.

வாசித்தே கு.சா அண்ணை போன்ற அதிரடி கருத்தாளர்களை பற்றி ஒரு மதிப்பீடும், அன்னியோன்யமும் ஏற்பட்டுவிடும்.

அது பின்னர் எழுதும் போதும் வரும் போது, நீங்கள் அவரோ, இவரோ எண்டு கேள்வி வரும் 🤣.

கந்தையர் திண்ணைக்கு வந்த கையோட வணக்கம் வச்சுட்டு நான் கேட்டது நீங்கள் புதிய மொந்தையில பழைய கள்ளோ எண்டுதான். இல்லை என்றார். அப்படியே ஆகட்டும்.

ஆனால் கருத்துகள் அற்புதமாய்தான் இருக்குது.

வாழ்துகள்.....தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, தமிழ் சிறி said:

பெருமாள்... எனக்கும், அந்த சந்தேகம் இருக்குது. 😁

எனது அப்பா பெயர் கந்தையா .நான் பிறந்த வருடம்1957 .........5_12_1984தொடக்கம்  ஜெர்மானியிலிருக்கிறேன் . ........மானிலம்NRW.  ஆகும்.  உலகில் மிகச்சிறந்த  சட்டாட்சி நடக்கும்  நாட்டிலிருப்பது  மிகமகிச்சியளிக்கிறது.😄

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kandiah57 said:

எனது அப்பா பெயர் கந்தையா .நான் பிறந்த வருடம்1957 .........5_12_1984தொடக்கம்  ஜெர்மானியிலிருக்கிறேன் . ........மானிலம்NRW.  ஆகும்.  உலகில் மிகச்சிறந்த  சட்டாட்சி நடக்கும்  நாட்டிலிருப்பது  மிகமகிச்சியளிக்கிறது.😄

அப்பிடியே சாதகம் நாட் குறிப்பையும் போட்டு விட்டிங்களெண்டால் குமாரசாமியருக்கு வசதியாயிருக்கும்!😜

(பகிடிக்கு, செய்து போடாதையுங்கோ)

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

யாழில் பல வருட வாசகன் பின் கருத்தாளர் என்ற அனுபவத்தில் சொல்கிறேன்.

புதிதாக எழுதுபவர்= யாழுக்கு புதியவர் இல்லை.

வாசித்தே கு.சா அண்ணை போன்ற அதிரடி கருத்தாளர்களை பற்றி ஒரு மதிப்பீடும், அன்னியோன்யமும் ஏற்பட்டுவிடும்.

அது பின்னர் எழுதும் போதும் வரும் போது, நீங்கள் அவரோ, இவரோ எண்டு கேள்வி வரும் 🤣.

கந்தையர் திண்ணைக்கு வந்த கையோட வணக்கம் வச்சுட்டு நான் கேட்டது நீங்கள் புதிய மொந்தையில பழைய கள்ளோ எண்டுதான். இல்லை என்றார். அப்படியே ஆகட்டும்.

ஆனால் கருத்துகள் அற்புதமாய்தான் இருக்குது.

வாழ்துகள்.....தொடருங்கள்.

வணக்கம் goshan—che நீங்கள்சொன்னது  மிகச்சரி.   2008 ஆம் ஆண்டிலிருந்து.அல்லது அதற்க்குமுன்புயிருநது நான் யாழ்கள வாசகன் .👍😇

21 hours ago, குமாரசாமி said:

Kandiah  where are you from?

Kandiah  woher kommst du?

Kandiah waar kom jy vandaan?

కాంతయ, మీరు ఎక్కడ నుండి వచ్చారు?

你從哪裡來?

កន្តាយ៉ាតើអ្នកមកពីណា?

آپ کہاں سے ہیں؟

கந்தையர் எங்கிருந்து வருகின்றீர்கள்?

Кантая, адкуль ты?

કંટાયા, તું ક્યાં છે?

Kandiah hvor kommer du fra?

Kandiah ເຈົ້າມາຈາກໃສ?

आप कहां के निवासी हैं?

කන්ටයා, ඔබ කොහෙන්ද?

ನೀವು ಎಲ್ಲಿನವರು?

كنتايا ، من أين أنت؟

வணக்கம் பன்மொழிப்புலவர் குமாரசாமியண்ணை எனக்கு தெரிந்த ஒரேமொழி தமிழ் மட்டும்தான். அதுவும் சரியாகயெழுதமாட்டேன். சிலசமயம் [ர]போடுவதில்லை. மற்றும் நான் உங்கள் நாட்டிருந்துதான் வந்தேன்    உங்கள்  நாட்டில் தானிருக்கிறேன். எனக்கு 1994 ஆம் ஆண்டு பிறந்த ஒர்மகளும் .1997ஆம் ஆண்டு பிறந்த ஒர் மகனுமுண்டு . மகளின் திருமணமவிழா 18-10-2020 ,இல் 150 நபர்களுடன் சிறப்பாக நடந்தது .😄

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

இங்கு கந்தையா என்று யாரும் பெயர் மாத்தி இருக்கினமோ ?

யாழுக்கு புதுசா யாரும் வருவதில்லை வந்தவையளும் போண்டா பணியாரம் என்று நிக்கினம் .

எனக்கும் இந்தக் குளப்பம் இருந்தது பின்னர் பறவாயில்லை யாராக இருந்தாலும் யாழுக்கு ஒரு உறுப்பினர் கூடி இருக்கிறது என்ற எண்ணம்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Kandiah57 said:

எனது அப்பா பெயர் கந்தையா .நான் பிறந்த வருடம்1957 .........5_12_1984தொடக்கம்  ஜெர்மானியிலிருக்கிறேன் . ........மானிலம்NRW.  ஆகும்.  உலகில் மிகச்சிறந்த  சட்டாட்சி நடக்கும்  நாட்டிலிருப்பது  மிகமகிச்சியளிக்கிறது.😄

ஓ...அப்பியே..? அப்ப நாங்கள் கிட்டக்கிட்ட வந்திட்டம். 😁 🙏🏽

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kandiah57 said:

வணக்கம் goshan—che நீங்கள்சொன்னது  மிகச்சரி.   2008 ஆம் ஆண்டிலிருந்து.அல்லது அதற்க்குமுன்புயிருநது நான் யாழ்கள வாசகன் .👍😇

வணக்கம் பன்மொழிப்புலவர் குமாரசாமியண்ணை எனக்கு தெரிந்த ஒரேமொழி தமிழ் மட்டும்தான். அதுவும் சரியாகயெழுதமாட்டேன். சிலசமயம் [ர]போடுவதில்லை. மற்றும் நான் உங்கள் நாட்டிருந்துதான் வந்தேன்    உங்கள்  நாட்டில் தானிருக்கிறேன். எனக்கு 1994 ஆம் ஆண்டு பிறந்த ஒர்மகளும் .1997ஆம் ஆண்டு பிறந்த ஒர் மகனுமுண்டு . மகளின் திருமணமவிழா 18-10-2020 ,இல் 150 நபர்களுடன் சிறப்பாக நடந்தது .😄

சந்தோசம்.
உங்கள் மகளுக்கு என் திருமண வாழ்த்துக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

எனது அப்பா பெயர் கந்தையா .நான் பிறந்த வருடம்1957 .........5_12_1984தொடக்கம்  ஜெர்மானியிலிருக்கிறேன் . ........மானிலம்NRW.  ஆகும்.  உலகில் மிகச்சிறந்த  சட்டாட்சி நடக்கும்  நாட்டிலிருப்பது  மிகமகிச்சியளிக்கிறது.😄

இப்போதுதான் இதை பார்கிறேன். உங்கள் வயது/பெயர் காரணம் அறியாமல் “கந்தையர்” என விழித்தமைக்கு மன்னிக்கவும்.

யாழின் பல நாள் வாசகன் என்பதால் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். 

தெலுங்கர் மீது இனவாதம் வேண்டாமே என எழுதினால்? இவர் கல்யாணம் கட்டினது ஆந்திராவிலோ எண்டு யோசிக்க கூடிய பெருந்தகைகள் உலாவும் ரண பூமி இது 🤣.

அப்புரம் தனிப்பட்ட தகவல்களை பகிருவதும் விடுவதும் உங்கள் தெரிவு.

  • கருத்துக்கள உறவுகள்

தெலுங்கர்கள் இன வாதம் பேசலாம், அப்பாவி தெழிலாளிகள் எத்தனை பேரையும் கேள்வியில்லாம் சுட்டு தள்ளலாம், தண்ணி கேட்டா அடித்து நொறுக்கலாம். சிங்களவினிடமும் அடி வாங்கலாம், ஒன்பது ஓட்டைகளையும் தமிழன் பொத்திகிட்டு இருக்கனும், நல்ல சிந்தாந்தம் 😂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.