Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்துபோன இணை; உடலருகில் அமர்ந்து துக்கம் அனுசரித்த அன்னப் பறவையால் 23 ரயில்கள் காத்திருப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இணை இறந்த துக்கத்தில் அவ்விடத்தைவிட்டு நகராமல் இருந்த அன்னப் பறவை. படம்: ஊடகம்

இணை இறந்த துக்கத்தில் அவ்விடத்தைவிட்டு நகராமல் இருந்த அன்னப் பறவை. படம்: ஊடகம்

29 Dec 2020 20:46

இணைப் பறவை இறந்த துக்கம் தாளாமல் அதன் உடலருகே அமர்ந்திருந்த அன்னப் பறவையால 23 ரயில்கள் பயணத்தைத் தொடர முடியாமல் காத்திருக்க வேண்டியதாயிற்று.

ஜெர்மனியின் கேசல், கோட்டிங்கன் நகரங்களுக்கிடையேயான அதிவேக ரயில் தடத்துக்கு அருகில் இரு அன்னப் பறவைகள் சுற்றித் திரிந்ததாக கேசல் நகர போலிசார் தெரிவித்தனர்.

அவற்றில் ஒன்று மின்சார கம்பிகளில் சிக்கி உயிரிழந்தது. இறந்துபோன பறவையின் உடலுக்கருகில் அமர்ந்த அதன் இணை அவ்விடத்தை விட்டு நகருவதாயில்லை.

அதனால் அந்தத் தடத்தில் செல்ல வேண்டிய 23 ரயில்கள் தங்களது பயணத்தை ஒத்தி வைத்துக் காத்திருந்தன. 

தீயணைப்புப் படையினர் சிறப்பு உபகரணங்களைக் கொண்டு  உயிருடனிருந்த அன்னப் பறவையை அவ்விடத்தில் இருந்து அகற்றினர். பத்திரமாக மீட்கப்பட்ட அது, பின்னர் ஃபுல்டா நதியில் விடப்பட்டது.

சுமார் 50 நிமிட தாமதத்துக்குப் பிறகு ரயில்கள் அந்தத் தடத்தில் பயணத்தைத் தொடர்ந்தன.

கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்த இந்தச் சம்பவம் பற்றிய தகவல்கள் நேற்று வெளியாகின.

பொதுவாக, அன்னப் பறவைகள் வாழ்நாள் முழுவதும் ஒரே இணையுடன் தான் வாழும் என பிரிட்டனின் ராயல் சொசைட்டி பறவைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.

https://www.tamilmurasu.com.sg/world/story20201229-58490.html?fbclid=IwAR1GDZ0qpEpMjFeJrP-jSINqBn79LBpfWxuQD3UuNdpM3u0MllgCs_1R1Mc

  • Replies 61
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 minutes ago, பெருமாள் said:
இணை இறந்த துக்கத்தில் அவ்விடத்தைவிட்டு நகராமல் இருந்த அன்னப் பறவை. படம்: ஊடகம்

இணை இறந்த துக்கத்தில் அவ்விடத்தைவிட்டு நகராமல் இருந்த அன்னப் பறவை. படம்: ஊடகம்

இதுவே இலங்கை இந்தியாவாக இருந்தால்  அன்னப்பறவை ஒரே சதக்...
 
  • கருத்துக்கள உறவுகள்

இணை அன்னப்  பறவைக்காக... 
23 ரயில்கள் நிறுத்தப் பட்ட  நிகழ்வு,
ஜேர்மனியில்,  மட்டுமே நடக்கும். ❤️

அதனால்... ஜேர்மன்  தமிழராக இருப்பதில்,  பெருமைப் படுகின்றேன்.  :)

தகவலுக்கு... நன்றி, பெருமாள்.  👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

இணை அன்னப்  பறவைக்காக... 
23 ரயில்கள் நிறுத்தப் பட்ட  நிகழ்வு,
ஜேர்மனியில்,  மட்டுமே நடக்கும். ❤️

அதனால்... ஜேர்மன்  தமிழராக இருப்பதில்,  பெருமைப் படுகின்றேன்.  :)

தகவலுக்கு... நன்றி, பெருமாள்.  👍

சும்மா சொல்லக்கூடாது ஜேர்மன்காரர் நாய்,பூனை குருவியளிலை சரியான பாசம்...பிள்ளைமாதிரி கவனிப்பினம்

451bd97053bb4b242f6604afe7f3df11.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு ஜெர்மன் காரரும் உச்சி குளிர்ந்தது காணும் 😀 இந்த செய்தி சிங்கப்பூர் இணையதளம் தமிழ்முரசு தான் போட்டிருக்கு நம்ம இணையங்கள் செத்த வீட்டு செய்தி கூட்டமைப்பின் கூத்துக்கள் போடுவதில் படு பிஸியாய்  இருக்கினம் .

தமிழ்நாடு ரஜனியின் பொய்களில் மயங்கி கிடக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால்.......

சந்தோசமாகப் போற திரிய யாம் ஏன் திரிக்கணும் என்றேன்... 😂😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

ஆனால்.......

சந்தோசமாகப் போற திரிய யாம் ஏன் திரிக்கணும் என்றேன்... 😂😂

வாங்கோ வாங்கோ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்கோ அங்காள பக்கம் எங்கடை தலைவர்மார் என்கிறவையல்  பண்ணுற கூத்து பார்த்து தலைவலியே வந்துடும் போல் இருக்கு .கொஞ்ச நாளைக்கு அரசியல் பார்க்காமல் இருந்தால் நல்லது போல் இருக்கு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, பெருமாள் said:

இரண்டு ஜெர்மன் காரரும் உச்சி குளிர்ந்தது காணும் 😀 இந்த செய்தி சிங்கப்பூர் இணையதளம் தமிழ்முரசு தான் போட்டிருக்கு நம்ம இணையங்கள் செத்த வீட்டு செய்தி கூட்டமைப்பின் கூத்துக்கள் போடுவதில் படு பிஸியாய்  இருக்கினம் .

தமிழ்நாடு ரஜனியின் பொய்களில் மயங்கி கிடக்கு .

பல அரசியல் தீர்வுகள் முடிவுகள் அப்பலோ ஆஸ்பத்திரியிலைதான் எடுக்கிறார்களாம்  உண்மையோ?😁

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

பல அரசியல் தீர்வுகள் முடிவுகள் அப்பலோ ஆஸ்பத்திரியிலைதான் எடுக்கிறார்களாம்  உண்மையோ?😁

அப்பலோ... ஆசுப்பத்திரி, எனும் போதே... குலை நடுங்குது.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

அப்பலோ... ஆசுப்பத்திரி, எனும் போதே... குலை நடுங்குது.  🤣

அப்பலோ அல்ல. அப்பாலே போ ஆசுப்பத்திரி.. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

அப்பலோ அல்ல. அப்பாலே போ ஆசுப்பத்திரி.. 😂

ஓகோ... அதைத்தான், இப்படி... சூசகமாக அழைக்கிறார்களா... :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, தமிழ் சிறி said:

அப்பலோ... ஆசுப்பத்திரி, எனும் போதே... குலை நடுங்குது.  🤣

இதுகளை யோசிக்கத்தான் கண்ணிலை தண்ணி வருது...😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறந்து போன மனிதவாழ்வை மிருகங்களும் பறவைகளும்  ஞாபகப்படுத்துகின்றன .

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

இதுகளை யோசிக்கத்தான் கண்ணிலை தண்ணி வருது...😂

அட... கறுமமே, இப்பிடி எல்லாம்... சினிமா பைத்தியங்கள் இருக்குமா
இவர்களில்... பெரும்பாலோனோர், கஸ்ரப்  பட்டு உழைக்கும்... 
கூலித்  தொழிலாளர்களாம். 😡

இப்படியான... உடுப்புகள், தைக்கவே... எவ்வளவு காசு,  செலவு செய்திருப்பார்கள்.
அதனை... தனது, குடும்பத்திற்கு கொடுத்திருந்தால், 
அவர்களின் மனைவியும், பிள்ளைகளும்.... எவ்வளவு, சந்தோசம் அடைந்து இருப்பார்கள். ❤️
சரியான... விசர் கூட்டங்கள்.  🥵

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அட... கறுமமே, இப்பிடி எல்லாம்... சினிமா பைத்தியங்கள் இருக்குமா
இவர்களில்... பெரும்பாலோனோர், கஸ்ரப்  பட்டு உழைக்கும்... 
கூலித்  தொழிலாளர்களாம். 😡

இப்படியான... உடுப்புகள், தைக்கவே... எவ்வளவு காசு,  செலவு செய்திருப்பார்கள்.
அதனை... தனது, குடும்பத்திற்கு கொடுத்திருந்தால், 
அவர்களின் மனைவியும், பிள்ளைகளும்.... எவ்வளவு, சந்தோசம் அடைந்து இருப்பார்கள். ❤️
சரியான... விசர் கூட்டங்கள்.  🥵

இல்லை அண்ணா இது ஒரு தொழில்.

ரஜனி தேர்தலில் நின்றிருந்தால் கொஞ்ச காசு பார்திருப்பார்கள். இப்போ அதிலும் மண்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

இல்லை அண்ணா இது ஒரு தொழில்.

ரஜனி தேர்தலில் நின்றிருந்தால் கொஞ்ச காசு பார்திருப்பார்கள். இப்போ அதிலும் மண்.

கோசான்... நேற்று,  நீங்கள் தானே.... ரஜனியிடம் இருந்து காசா?
என்ற தொனியில், நாலு கேள்விக் குறி போட்டு... பதில் எழுதி இருந்தீர்கள். :grin:

அப்படி... இருக்க,  இந்த  ரசிக குஞ்சுகள்...
யாரிடம்.. பணத்தை, எதிர் பார்த்து... இந்த "கோமாளி"  வேசம்  போட்டவர்கள்   🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கோசான்... நேற்று,  நீங்கள் தானே.... ரஜனியிடம் இருந்து காசா?
என்ற தொனியில், நாலு கேள்விக் குறி போட்டு... பதில் எழுதி இருந்தீர்கள். :grin:

அப்படி... இருக்க,  இந்த  ரசிக குஞ்சுகள்...
யாரிடம்.. பணத்தை, எதிர் பார்த்து... இந்த "கோமாளி"  வேசம்  போட்டவர்கள்   🤣

ரஜனி தேர்தலில் நின்றால், அத்தனை தொகுதியிலும் நிற்பவர்கள் ஆளுக்கு எவ்வளவு செலவழிக்க முடியும் என்று ஒரு கேள்வி கேட்டே சீட் ஒதுக்கபடும்.

சில வசதி படைத்த வேட்பாளர்கள் தாமே செலவழிப்பார்கள்.

உதிரி கட்சிகள், டெபாசிட்டே தேறாது என தெரிந்தும் போட்டியில் குதித்தவர்கள், அவர்கள் யார் திட்டபடி வாக்கை பிரிக்க இறங்கினார்களோ (அமித்ஷா) அவர்களிடம் வாங்கி செலவழிப்பார்கள். அல்லது மணல் மாபியா போன்றவர்கள் இவர்களுக்கு பின்னால் இருந்து பண சப்ளை செய்வார்கள்.

இது எல்லா கட்சியும் செய்வதுதான். அப்படி செலவழிக்கும் பணத்தில் கொஞ்சம் இப்படியானவர்களுக்கும் பொசியும்.

சுற்றுலா சீசன் போல, எலக்சன் சீசனும் அன்றாடம் காய்சிகள் காசு பார்க்கும் சீசன்தான்.

ஆனால் தலைவர்கள் சொந்த காசை செலவழிப்பது மிக குறைவு. எனக்கு தெரிய விஜயகாந்த் மட்டும்தான்.

அதுவும் கருணாநிதி, ஜெயா, ரஜனி, ஸ்டாலின், சீமான், வைகோ போன்றவர்கள் - நோ சான்ஸ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

சுற்றுலா சீசன் போல, எலக்சன் சீசனும் அன்றாடம் காய்சிகள் காசு பார்க்கும் சீசன்தான்.

200 வீத உண்மை அவர்களுக்கு உள்ள பிரச்சனை  அரசியல் தெளிவின்மை அந்த தெழிவைத்தான்  சீமான் கொடுக்கிறார் .

அடிபட்டு  போவது என்று முடிவாகின பின் எதுக்கும் பயப்பிட கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அன்னம் என்னாச்சு.🤪

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுவைப்பிரியன் said:

அந்த அன்னம் என்னாச்சு.🤪

அருகில் இருந்து அழுத அன்னத்தை ஆத்துல விட்டாச்சுது, அமரரான அன்னத்தை ஆழப்  புதைச்சாச்சுது ........!  🦢 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

சும்மா சொல்லக்கூடாது ஜேர்மன்காரர் நாய்,பூனை குருவியளிலை சரியான பாசம்...பிள்ளைமாதிரி கவனிப்பினம்

451bd97053bb4b242f6604afe7f3df11.jpg

செல்லப் பிராணிகளில் அன்பு வைப்பதில் தப்பில்லை ஆனால் நம்மவர்கள் கொஞ்சம் லேதிக கவனிப்புக்கள்..நெற்றியில் குங்குமம் சந்தணம் வைப்பது..சாமித் தட்டில் கொண்டு போய் விட்டு சாமிக்கு வைச்ச அதே சாப்பாட்டை வைப்பதும் நன்றாகவா இருக்கிறது..அண்மையில் இங்கு ஒரு தாயார் தன் பெண் பிள்ளைக்கு $3.000 டொலர்களுக்கு நாய் வாங்கிக் கொடுத்திருகிறா ஏன் என்று கேட்டால்  பிள்ளை தவறான வழிகளில் போகாமல் நாயோடு வீட்டில் இருக்கட்டும் என்று  வாங்கிக் கொடுதாராம்...பிறிதொரு இடத்தில் வீட்டு கதவை தட்டினால் அப்பா வாறார் போய் பாரு என்று சொல்லி விட்டால் அது கதவருகில் வந்து பார்த்துக் கொண்டே இருக்கும்..சில பேர் இப்படித் தான் தூக்கு காவடி..வின்றரில் எல்லாம் பாவங்கள் நடக்க இயலாது கஸ்ரம் தான் ஆனால் சிறிது வந்த வழியையும் பார்க்க வேண்டும்.ச்சே என்ன உலகம் இது.இப்படித் தான் நம் மக்களின் முன்னேற்றங்கள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, யாயினி said:

இங்கு மண்டபிரசர் ஏறாமல் இருக்க தனிமையை போக்க என்று செல்லப்பிராணிகளை வளர்ப்பது பலரால் வரவேற்கப்பட்ட ஒன்று அதுக்காக 3000 டொலர் எல்லாம் ஓவர் பிள்ளைகள் வளர்ந்து யுனி வேலை என்று ஓட  பெறோர்கள் இருவருக்கும் தனித்து விடப்பட்டதை போன்ற உணர்வை அனுபவிக்க வேண்டி வரும் அப்படியான நேரம்களில் பிள்ளைகளே ஒரு குட்டி நாய் ஒன்றை கொண்டுவந்து முதலில் தாங்கள்தான் வளர்க்கப்போவதாய் சொல்வார்கள் கடைசியில் வளர்ப்பது அப்பாவும் அம்மாவும்தான் அதிலும் நாய் முடி என்றாலே அருவருக்கும் அம்மா கூட அன்பாய் இருப்பது பெரும் அதிசயமாய் இருக்கும் இங்கு பலவீடுகளில் இந்த கதை வித்தியாசம் இல்லாமல் ஒரே கதையாய் இருக்கும் .

காலம் வெகுவேகமாய் ஓடிக்கொண்டு இருக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

200 வீத உண்மை அவர்களுக்கு உள்ள பிரச்சனை  அரசியல் தெளிவின்மை அந்த தெழிவைத்தான்  சீமான் கொடுக்கிறார் .

அடிபட்டு  போவது என்று முடிவாகின பின் எதுக்கும் பயப்பிட கூடாது .

🤣 அரசியல் தெளிவின்மையை பயன்படுத்தி கட்டுகதைகள் கூறி தம் விம்பத்தை பெருக்கும் ஒருவர் நிச்சயம் தெளிவை உருவாக்க வல்லவர்தான் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, யாயினி said:

செல்லப் பிராணிகளில் அன்பு வைப்பதில் தப்பில்லை ஆனால் நம்மவர்கள் கொஞ்சம் லேதிக கவனிப்புக்கள்..நெற்றியில் குங்குமம் சந்தணம் வைப்பது..சாமித் தட்டில் கொண்டு போய் விட்டு சாமிக்கு வைச்ச அதே சாப்பாட்டை வைப்பதும் நன்றாகவா இருக்கிறது..அண்மையில் இங்கு ஒரு தாயார் தன் பெண் பிள்ளைக்கு $3.000 டொலர்களுக்கு நாய் வாங்கிக் கொடுத்திருகிறா ஏன் என்று கேட்டால்  பிள்ளை தவறான வழிகளில் போகாமல் நாயோடு வீட்டில் இருக்கட்டும் என்று  வாங்கிக் கொடுதாராம்...பிறிதொரு இடத்தில் வீட்டு கதவை தட்டினால் அப்பா வாறார் போய் பாரு என்று சொல்லி விட்டால் அது கதவருகில் வந்து பார்த்துக் கொண்டே இருக்கும்..சில பேர் இப்படித் தான் தூக்கு காவடி..வின்றரில் எல்லாம் பாவங்கள் நடக்க இயலாது கஸ்ரம் தான் ஆனால் சிறிது வந்த வழியையும் பார்க்க வேண்டும்.ச்சே என்ன உலகம் இது.இப்படித் தான் நம் மக்களின் முன்னேற்றங்கள்..

எனக்கும் உந்த செல்ல பிராணிகள் வளர்ப்பில் ஏற்பில்லை. 

குதிரை மாரி பெரிய நாயாளோட போவது, சும்மா போற வயது போன ஆக்கள் ரோட்டை கடந்து மறு பக்கத்தால் போகுங்கள் பாவம்.

நாய் வீதியில் அசுத்தம் செய்தால் அதை பொறுக்குவது 10% மட்டுமே. ஏனையவை அடுத்து வாறவன் சப்பாத்துக்கு பொலிஷ் போடுற கூட்டம் 🤣

எத்தனையோ நாய்கள் பிள்ளையளை குதறி சாகடிச்ச சம்பவங்களும் உண்டு.

இந்த நாடுகளில் கூட foster care இல் இருந்து அவதிபடும் பிள்ளைகள் ஏராளம். சொந்த பிள்ளையள் வீட்டை விட்டு வெளிகிட்டால் இப்படி பிள்ளைகளை எடுத்து பார்த்தால் புண்ணியமாகும்.

ஆனால் காசு கொடுத்து நாய் வாங்குவினம். 

இது இப்ப பெரிய தொழில் நாய்குட்டிகள் நல்ல விலையில் போகும். களவெடுத்து கூட விக்கிறார்கள்.

எல்லாம் சுயநலம்தான், ஒல்லி குச்சான் உடம்புகாரர் சிறுத்தை போல நாயோட போறது ஒரு பாதுகாப்பு🤣

அதே போல் ஒரு வயதுக்கு பிறகு பிள்ளைகளை அதிகாரம் பண்ண முடியாது, நாய் ஒரு பிஸ்கேட்டை போட்டால் எப்பவும் வாலாட்டும் 🤣.

கார், வீடு மாரி இதுவும் ஒரு fashion accessory தான். 

ஊரில மீன் முள்ளை நாய்க்கு போட்டு வீட்டுக்கு வெளில விட்ட ஆக்கள்தான் எல்லாரும்🤣. இப்ப வெள்ளைகாரன் மாரி நாய்க்கு தனிரூம், இன்சூரண்ஸ், கோவிலில் ராசி சொல்லி அர்ச்சனை🤣.

பிராணிகளை அதன் வாழ்விடத்தில் இயற்கையாக வாழ விட முடியாத சுயநலமிகள்.

என்ன செய்வது ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் பொறுத்து போக வேண்டியதுதான் வேறு வழியில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

🤣 அரசியல் தெளிவின்மையை பயன்படுத்தி கட்டுகதைகள் கூறி தம் விம்பத்தை பெருக்கும் ஒருவர் நிச்சயம் தெளிவை உருவாக்க வல்லவர்தான் 🤣

அண்ணெய்  அது அவர்கள் நாடு சீமான் அந்த நாட்டுக்காரர் அங்கு அவர்கள் என்ன செய்தாலும் எங்களுக்கு ஒன்றும் இல்லை 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.