Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

45,500 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

45,500 ஆண்டுகள் பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு

1-108-696x392.jpg
 1 Views

45,500 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் ஓவியம் ஒன்றை தொல்லியல் நிபுணர்கள் இந்தோனீசியாவில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

உலகின் பழமையான விலங்குகள் வாழ்ந்த குகையில் தீட்டப்பட்டுள்ள இந்த  காட்டுப்பன்றி ஓவியத்தை ஆச்ரே எனப்படும் ஒரு வகையான அடர் சிவப்பு இயற்கை மண் நிறமிகளால் வரைந்திருக்கிறார்கள்.

மேலும் இந்த ஓவியத்தில் இருக்கும் காட்டுப்பன்றி சூலவேசி வார்டி பன்றி என தொல்லியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த ஓவியம் சூலவேசி தீவில் இருக்கும் லியாங் டெடாங்கே என்கிற குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மனிதர்கள் தங்கி வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் அறியப்பட்டுள்ளது.

“இந்த ஓவியத்தை வரைந்தவர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். அவர்கள் விருப்பப்பட்ட ஓவியத்தை வரையும் அளவுக்கு, அவர்களிடம் எல்லா வகையான உபகரணங்கள் மற்றும் வரைவதற்கான திறன் இருந்தது” என ‘சயின்ஸ் அட்வான்செஸ்’ என்கிற சஞ்ஜிகையில் இந்த அறிக்கையை எழுதியவர்களில் ஒருவரான மேக்சிமே ஆபெர்ட் கூறியுள்ளார்.

https://www.ilakku.org/?p=39509

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ௐவியத்தில் ஒரு மயக்கம் உள்ளது. வலதுபக்கமிருந்து இடதுபக்கமாகப் பார்த்தால் பன்றிபோல் தெரிகிறது, இடதுபக்கமிருந்து வலதுபக்கமாகப் பார்த்தால் குருவிபோல் தெரிகிறது. எது உண்மை....?🤔

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Paanch said:

இந்த ௐவியத்தில் ஒரு மயக்கம் உள்ளது. வலதுபக்கமிருந்து இடதுபக்கமாகப் பார்த்தால் பன்றிபோல் தெரிகிறது, இடதுபக்கமிருந்து வலதுபக்கமாகப் பார்த்தால் குருவிபோல் தெரிகிறது. எது உண்மை....?🤔

என்ரை... கண்ணுக்கு, குருவி தெரியவில்லை. 😁🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

என்ரை... கண்ணுக்கு, குருவி தெரியவில்லை. 😁🤣

தெரியவில்லையா? மகன் வைத்தியர்தானே, செலவின்றி அவரிடம் காட்டிச் சிகிச்சை பெறுவதற்கு வழி உள்ளது சிறித்தம்பி.🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

இந்த ௐவியத்தில் ஒரு மயக்கம் உள்ளது. வலதுபக்கமிருந்து இடதுபக்கமாகப் பார்த்தால் பன்றிபோல் தெரிகிறது, இடதுபக்கமிருந்து வலதுபக்கமாகப் பார்த்தால் குருவிபோல் தெரிகிறது. எது உண்மை....?🤔

1 hour ago, தமிழ் சிறி said:

என்ரை... கண்ணுக்கு, குருவி தெரியவில்லை. 😁🤣

அவர் தலைப் பகுதியை மட்டும் சொல்கிறார் சிறியர். சட்டென்று பார்க்கும்போது குருவித்தலை போலும் நன்றாகப் பார்த்தால் பன்றியின் முன் மூக்கும் இரு துவாரங்களுடன் தெரிகிறது....!  👌  😁

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

தெரியவில்லையா? மகன் வைத்தியர்தானே, செலவின்றி அவரிடம் காட்டிச் சிகிச்சை பெறுவதற்கு வழி உள்ளது சிறித்தம்பி.🤣

53 minutes ago, suvy said:

அவர் தலைப் பகுதியை மட்டும் சொல்கிறார் சிறியர். சட்டென்று பார்க்கும்போது குருவித்தலை போலும் நன்றாகப் பார்த்தால் பன்றியின் முன் மூக்கும் இரு துவாரங்களுடன் தெரிகிறது....!  👌  😁

பாஞ்ச் அண்ணை.... சுவியர்,

விளக்கமாக சொன்ன பிறகு....

🐤 குருவி தெரியுது. 👍🏼😁😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தமிழ் சிறி said:

பாஞ்ச் அண்ணை.... சுவியர்,

விளக்கமாக சொன்ன பிறகு....

🐤 குருவி தெரியுது. 👍🏼😁😂

L'enfer c'est aussi soi-même – fluffybanana

பாஞ்சின் கண்கள்.....!

Excuse Me Reaction GIF by Mashable - Find & Share on GIPHY

சிரியரின் கண்கள்.....!

The Manager GIF - MichaelScott TheManager FingerGuns - Discover & Share GIFs

சுவி ......!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, suvy said:

சுவியர்... இந்தப் படங்களை, பார்க்க.. சிரிப்பு தாங்க முடியவில்லை. 🤣
மினைக்கெட்டு... தேடி எடுத்தமைக்கு, நன்றி ஐயா. 👍

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

இந்த ௐவியத்தில் ஒரு மயக்கம் உள்ளது. வலதுபக்கமிருந்து இடதுபக்கமாகப் பார்த்தால் பன்றிபோல் தெரிகிறது, இடதுபக்கமிருந்து வலதுபக்கமாகப் பார்த்தால் குருவிபோல் தெரிகிறது. எது உண்மை....?🤔

ஐயா,

உண்மையிலேயே உங்கள் பார்வை விசேசம்தான்.

இப்படி இரு தோற்றம் வரும் முறையில் கீறுவது ஒரு வகை கண்கட்டி வித்தை (optical illusion).

நீங்கள் கூறியதன்பின், இதை கீறியவர் இந்த optical illusion என்ற concept ஐ அத்தனை வருடங்களுக்கு முன்பே அறிந்திருந்தாரா? அல்லது இது தற்செயலா என்று யோசிக்கவைக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

என்ரை... கண்ணுக்கு, குருவி தெரியவில்லை. 😁🤣

இதுக்கு போய் , 45,000 மே கொஞ்சம் ஓவர். அங்காள ஒரு 500 எக்ஸ்ட்ரா என்ன கணக்கு.... எப்படி அளந்தார்கள் எண்டு ஏதாவது இழவு விளங்கினால் சொல்லுங்கோ...

இத்தாலி பார்டர் பாய்ஞ்சு, பிரான்சுக்குள் வரேக்க, ஒரு ரயில்வே குகை வருமாம்... அதுக்கிளை.... இருட்டுக்குள்ள  வரேக்கை, டார்ச் லைட் வைச்சு.... நான், பாரிஸ் போறான்.... வயிரவரே துணைக்கு வா... எண்டு எழுதின விஷயங்கள் கணக்க  இருக்குதாம். 

இப்படி ஆஸ்திரேலியா போக பார்டர் பாய்ஞ்ச ஆட்களின் கிறுக்கல் போலை தான் கிடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

இத்தாலி பார்டர் பாய்ஞ்சு, பிரான்சுக்குள் வரேக்க, ஒரு ரயில்வே குகை வருமாம்... அதுக்கிளை.... இருட்டுக்குள்ள  வரேக்கை, டார்ச் லைட் வைச்சு.... நான், பாரிஸ் போறான்.... வயிரவரே துணைக்கு வா... எண்டு எழுதின விஷயங்கள் கணக்க  இருக்குதாம். 

மாலை வேலை ஆலையில் முடிந்து, வாழைச்சேனையில் உள்ள சுங்காங்கேணிக்குச் செல்ல இரவு 10மணிக்கு மேலாகிவிடும். ச.கு னாவின் பெற்றோல் செற்றுக்கு அப்பால் எங்கள் வீடு செல்லும் வீதி  ஒரே கும்மிருட்டாக இருக்கும். ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் எங்களைத் தூரத்தில் வரும் நண்பனின் தேவாரப் பாடல்கள் எழுப்பிவிடும், மிகவும் பயந்தவன், அவன் சைக்கிளுக்கு லைற்ரும் இல்லை. அந்த மாலை வேலை அவனுக்கு தேவாரம், திருவாசகம், புராணம் என பல பாடல்களை பாடவைத்து இறையருளையும் பெற வைத்தது.   

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Nathamuni said:

இதுக்கு போய் , 45,000 மே கொஞ்சம் ஓவர். அங்காள ஒரு 500 எக்ஸ்ட்ரா என்ன கணக்கு.... எப்படி அளந்தார்கள் எண்டு ஏதாவது இழவு விளங்கினால் சொல்லுங்கோ...

இத்தாலி பார்டர் பாய்ஞ்சு, பிரான்சுக்குள் வரேக்க, ஒரு ரயில்வே குகை வருமாம்... அதுக்கிளை.... இருட்டுக்குள்ள  வரேக்கை, டார்ச் லைட் வைச்சு.... நான், பாரிஸ் போறான்.... வயிரவரே துணைக்கு வா... எண்டு எழுதின விஷயங்கள் கணக்க  இருக்குதாம். 

இப்படி ஆஸ்திரேலியா போக பார்டர் பாய்ஞ்ச ஆட்களின் கிறுக்கல் போலை தான் கிடக்குது.

என்ன பாஸ், 

நான் இதை நீங்கள் நாயக்கரோட சேத்து, பண்டாரநாயக்கவ இழுத்து ஒரு குழையல் குழைப்பியள் எண்டு பார்த்தா, ஈசியா முடிச்சிட்டியள்.

இதையும் ஒருக்கா பாருங்கோ.

https://blog.britishmuseum.org/the-lion-man-an-ice-age-masterpiece/

எங்கட நரசிம்மர வச்சு கதை விடுறாங்கள்.

ஒடிசா பாலுவுக்கு ஒரு மெயில தட்டி விடுங்கோ. ஆமையோட வந்து - இது நரநிம்மந்தான் என நிறுவட்டும்😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

என்ன பாஸ், 

நான் இதை நீங்கள் நாயக்கரோட சேத்து, பண்டாரநாயக்கவ இழுத்து ஒரு குழையல் குழைப்பியள் எண்டு பார்த்தா, ஈசியா முடிச்சிட்டியள்.

அதெல்லாம்.... சும்மா... காசை வாங்கிக்கொண்டு... வீட்டிலை இருந்து உங்களோட கும்மாம் குத்து போட்டது ....

இப்ப... புது இடம்.... கொஞ்சம் வேலை செய்யிற மாதிரி.... பல்ஸ் பிடிச்சு... ஏறி ஒக்காந்தப் பிறகு.... பழையபடி விளாடுவோம்...

ஓகே... அது வரைக்கும்.... உங்க... கிரௌண்டை... வடிவா  பார்த்து... ஈ  காக்காய் அண்டாமல் பாருங்கோ...  :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

உந்த கிரவுண்ட் பிடிக்கிற வேலை குரே பாக்கில் இருந்து செய்யுறியள் என🤣

நானும் கு சா அண்ணையும் பிடிச்சு வக்கிறம் கெதியா வாங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

உந்த கிரவுண்ட் பிடிக்கிற வேலை குரே பாக்கில் இருந்து செய்யுறியள் என🤣

நானும் கு சா அண்ணையும் பிடிச்சு வக்கிறம் கெதியா வாங்கோ.

சாமியார் இல்லாமலும், தனி ஆளாய்  நிண்டு விளையாடுவியல்  எண்டு தானே, தல எண்டுறம்.. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

10 ஆயிரம் வருட மனித நாகரீகத்துக்குள்ள 
நிண்டு குப்பை கொட்டுற கோஸ்ட்டி இனிதான் இந்த திரிக்கு வரும்போல .....

On 16/1/2021 at 14:00, Nathamuni said:

இப்படி ஆஸ்திரேலியா போக பார்டர் பாய்ஞ்ச ஆட்களின் கிறுக்கல் போலை தான் கிடக்குது.

நீங்கள் வேடிக்கையாகச் சொன்னாலும் இதில் இன்னொரு சுவாரசியமான விடயம்: வெள்ளையர் ஆஸ்திரேலியாவுக்கு வருமுன்னரேயே கடல் கடந்து வந்தவர்கள் தான் மக்காசர் எனும் இந்தோனேசியாவின் ஒரு பகுதி மக்கள் என்று வாசித்திருக்கிறேன். 17ம் நூற்றாண்டுக்கு முந்தின நிகழ்வுகள் இவை. இவர்களின் வருகை எப்போது தொடங்கியது என்ற ஆய்வுக்குள் நான் இன்னும் போகவில்லை.

எனினும் இந்த மக்காசரின் ஓவியங்கள் மற்றும் ஏனைய கலாசார அம்சங்களின் தாக்கம் ஆஸ்திரேலியாவின் வடபகுதியில் வாழும் அபோரிஜினல் மக்களிடம் இருக்கிறதாம். அருகிலுள்ள இன்னொரு நாட்டின் ஒரு பகுதியிலிருந்து அவர்கள் வந்தது அதிசயமல்ல; எனினும் இவர்களின் வரலாறு சுவாரசியமானது. எல்லாத்தையும் படிக்கத் தான் நேரமில்லை! கல்லாதது உலகளவு!

சாம்பிளுக்கு ஒரு article, இவை பற்றிய தேடல் உள்ளோர்க்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக இதைப் பகிர்கிறேன். கீழே பகிர்ந்த ஓவியங்களையும், மேலே தலைப்பில் இணைக்கப்பட்ட ஓவியத்தையும் மீண்டும் ஒரு முறை பார்க்கவும்!

https://www.google.com.au/amp/s/theconversation.com/amp/introducing-the-maliwawa-figures-a-previously-undescribed-rock-art-style-found-in-western-arnhem-land-145535large.BFCC0535-7729-456E-B179-E82F2FFB9C2D.jpeg.982a74098b442193412390f578c787c5.jpeg

large.DE8A6774-1085-4639-89D1-041EF2CE87EA.jpeg.5c0e80df79c8b30897111a03338a1d67.jpeg

Edited by மல்லிகை வாசம்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

10 ஆயிரம் வருட மனித நாகரீகத்துக்குள்ள 
நிண்டு குப்பை கொட்டுற கோஸ்ட்டி இனிதான் இந்த திரிக்கு வரும்போல .....

வணக்கம் மருதர்,

இது எனக்கு எறிஞ்ச கல்மாதிரி தெரியவில்லை (நான் மேலே என் பதிவை போட்டுள்ளேன்), ஆனால் 10 ஆயிரம் வருட கருத்தை முன் வைத்தவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் உங்களுக்கான பதில்.

நான் சொன்னது 10 ஆயிரம் வருடத்தின் பின்தான் நகர நாகரீகம் தொடங்கியது. அதாவது ஒரு நிலத்தில் தங்கி, உழுது, விவசாயம் பார்க்கும் அகேரியன்/ ஏர்பன் சிவிலைசேசன்.

ஆகவேதான் 45 000 ஆண்டுக்கு முன் பூம்புகாரில் ஒரு துறைமுகம் இருந்தது என்பதை மறுத்துரைதேன்.

ஆனால் மனித இனமாமாகிய ஹோமோ சேப்பியன் சேப்பியன்ஸ் தோன்றி பல ஆயிரம், லட்சம் ஆண்டுகள் ஆகவே ஒரு குகையில் படம் கீறும் அளவில் மனித இனம் 45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வளர்ந்து இருந்தது என்பது -10 ஆயிரம் வருடத்தின் பின் தான் அகேரியன் நாகரீகம் தொடங்கியது எனும் கொள்கைக்கு முற்றிலும் ஏற்புடையதே.

நான் மேலே சொன்ன ஐரோப்பாவில் கண்டு பிடிக்கபட்ட lion-man ஓவியமும் இப்படியே. இதை போல் மேலும் சில உள்ளன.

ஆனால் இவை எவையும் 10, 000 ஆண்டுக்கு முன் அகேரியன்/நகர நாகரீகம் இருந்தது என சொல்லும் தரவுகள் அல்ல.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

தற்போது இருக்கும் ஆதார அடிப்படைகள் பிரகாரம் நீங்கள் கூறுவது சரியானது
ஆனால் இப்போது இருக்கும் ஆதாரங்கள் முழு மனித இனத்தை ஆய்வறியும் 
அளவுக்கு போதுமானதாக இல்லை ... அப்படி இருந்து இருந்தால் கீழடி பற்றி 
மண்ணை கிளாராமலே நாங்கள் அறிந்திருக்க வேண்டும். ஒவ்வரு இடமும் 
எதோ ஒரு புதிய தகவல் வந்துகொண்டுதான் இருக்கிறது. 
தவிர சீனா பகுதிகளில் மேற்கு நாடுகளின் ஆய்வுகள் மிக மிக குறைவு 
அங்கு என்ன எல்லாம் புதைந்து கிடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. 

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தார் என்ற வரலாறு மாறுவது 
என்பது எளிதானது அல்ல. எகிப்த்து பிரமிட்டுக்களும் மாயன்களின் பிரமிட்டுகளும் 
ஒரே நேர் கோட்டில் இருப்பது தற்செயலா? தாய் செயலா? என்பதை படிப்பவர்கள் 
மட்டுமே அறிந்துகொண்டு இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு கொலம்பஸ் அமெரிக்காவை 
கண்டு பிடித்த்தில் இருந்து வரலாறு தொடங்குகிறது 

நாம் இன்றுவாழும் உலகம் உருவாகி அதில் தோன்றிய உயிரினங்கள் எழுப்பிய சத்தங்களுடன், இன்று எழும் சத்தங்களும் காற்றோடு கலந்து தங்கிக் காற்றோடு அலைகிறதாம், அவை என்றுமே காற்றைவிட்டு அகன்று அழியாது எனவும், காற்றில் கலந்திருந்தாலும், அவை கலைந்து இருப்பதால், அது தெளிவின்றிப்   பேரிரைச்சலாக எங்கள் காதுகளில் கேட்பதாகவும் படித்த ஞாபகம் உண்டு. சத்தங்களை ஒன்றிணைத்து அறியும் வல்லமை உடையவர்கள் தோன்றும்போது கற்காலத்திற்கு அப்பாலும் நாம் வாழும் பூமிபற்றி அறியமுடியும் என்று அதில் தெரிவித்திருந்தார்கள். படித்த ஞாபகம் உள்ளதே தவிர, அது எந்தப் புத்தகம், யாருடைய வெளியீடு என்பது ஞாபகமில்லை.🤔      

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

இதை நான் அந்த திரியில் சொல்லியும் விட்டேன்.

மனித இடப் பெயர்வு ஆசியாவுடன் இணைந்த வட அமெரிக்கா வழி நடந்தாக நம்ப படுகிறது. அதேபோல் தான் அவுஸ்ரேலியா நியூசிலாந்து போனவர்களும் என.

இங்கே வரலாற்றை ஆராயும் எவரும் கொலம்பஸ்ஸில் இருந்து அது ஆரம்பிப்பாதக சொல்வதில்லை. நீங்கள் அப்படி அவர்கள் சொல்வதாக கருதுகிறீர்கள்.

ஆனால் இதுவரை உலகம் ஏற்று கொண்ட வரலாற்று தியரிகளை தாண்டி ஏனையவற்றை முன்வைக்கும் போது அதை அப்படியே ஏற்று கொள்ள முடியாது.

நான் எப்போதும் புது தியரிகளை காது கொடுத்து கேட்பேன்.

நடு இரவில் பூம்புகார் ரிசேர்ஜ் என இணைத்த 10 பக்க pdf இணைப்பை படித்து அதில் உள்ள குறைகளை விளக்கி பதிலும் இட்டேன். ஆகவே புதிய சிந்தனைகளுக்கு கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால் அவை நம்ப கூடியதாக இருக்க வேண்டும்.

ஆமைகளை பின் பற்றி தமிழர்கள் கொலம்பியா போனார்கள் என்று சொல்லும் போது - அதை யார் சொல்கிறார் என பார்க்க வேண்டும்.  அவர் ஒரு பெளதீகவியல் இளமானி. சரி பரவாயில்லை அடுத்து அவர் இதை ஏதாவது ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளாரா என பார்க்கவேண்டும்.

இல்லை - ஆமைகள் இப்படி போகிறன, இந்த ஊர்களில் எல்லாம் தமிழை நிகர்ந்த ஒலி வரும் ஊர் பெயர்கள் உள்ளன ஆகவே இவை தமிழ் ஊர்கள்தான், தமிழர்கள்தான் அங்கே போனார்கள் என்பதே அவரின் ஆய்வு எனும் போது. என்ன செய்ய முடியும்?

நீங்கள் சொன்னது போல் நாளைக்கே 45,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் நகரம் கட்டி வாழ்ந்தார்கள் என ஆய்வு வந்தால் அதை ஏற்கலாம்.

ஆனால் ஒன்று அந்த ஆய்வு யூடியூபில் வராது. ஏதாவது ஒரு பல்கலையில், பல துறைசார் நிபுணர்கள் உழைப்பில்தான் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Paanch said:

நாம் இன்றுவாழும் உலகம் உருவாகி அதில் தோன்றிய உயிரினங்கள் எழுப்பிய சத்தங்களுடன், இன்று எழும் சத்தங்களும் காற்றோடு கலந்து தங்கிக் காற்றோடு அலைகிறதாம், அவை என்றுமே காற்றைவிட்டு அகன்று அழியாது எனவும், காற்றில் கலந்திருந்தாலும், அவை கலைந்து இருப்பதால், அது தெளிவின்றிப்   பேரிரைச்சலாக எங்கள் காதுகளில் கேட்பதாகவும் படித்த ஞாபகம் உண்டு. சத்தங்களை ஒன்றிணைத்து அறியும் வல்லமை உடையவர்கள் தோன்றும்போது கற்காலத்திற்கு அப்பாலும் நாம் வாழும் பூமிபற்றி அறியமுடியும் என்று அதில் தெரிவித்திருந்தார்கள். படித்த ஞாபகம் உள்ளதே தவிர, அது எந்தப் புத்தகம், யாருடைய வெளியீடு என்பது ஞாபகமில்லை.🤔      

இதை பற்றி எங்கோ வாசித்த/பார்த்த நினைவு எனக்கும் உண்டு. காபன் டேடிங் போல, ஒலி அலைகளை வைத்து செய்ய முடியுமா என்பதை ஒரு கேள்வியா எழுப்பி இருந்தார்கள் என நினைக்கிறேன். எனக்கும் போதிய விளக்கம்/நியாபகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இதை நான் அந்த திரியில் சொல்லியும் விட்டேன்.

மனித இடப் பெயர்வு ஆசியாவுடன் இணைந்த வட அமெரிக்கா வழி நடந்தாக நம்ப படுகிறது. அதேபோல் தான் அவுஸ்ரேலியா நியூசிலாந்து போனவர்களும் என.

இங்கே வரலாற்றை ஆராயும் எவரும் கொலம்பஸ்ஸில் இருந்து அது ஆரம்பிப்பாதக சொல்வதில்லை. நீங்கள் அப்படி அவர்கள் சொல்வதாக கருதுகிறீர்கள்.

ஆனால் இதுவரை உலகம் ஏற்று கொண்ட வரலாற்று தியரிகளை தாண்டி ஏனையவற்றை முன்வைக்கும் போது அதை அப்படியே ஏற்று கொள்ள முடியாது.

நான் எப்போதும் புது தியரிகளை காது கொடுத்து கேட்பேன்.

நடு இரவில் பூம்புகார் ரிசேர்ஜ் என இணைத்த 10 பக்க pdf இணைப்பை படித்து அதில் உள்ள குறைகளை விளக்கி பதிலும் இட்டேன். ஆகவே புதிய சிந்தனைகளுக்கு கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும். ஆனால் அவை நம்ப கூடியதாக இருக்க வேண்டும்.

ஆமைகளை பின் பற்றி தமிழர்கள் கொலம்பியா போனார்கள் என்று சொல்லும் போது - அதை யார் சொல்கிறார் என பார்க்க வேண்டும்.  அவர் ஒரு பெளதீகவியல் இளமானி. சரி பரவாயில்லை அடுத்து அவர் இதை ஏதாவது ஆய்வுகள் மூலம் நிறுவியுள்ளாரா என பார்க்கவேண்டும்.

இல்லை - ஆமைகள் இப்படி போகிறன, இந்த ஊர்களில் எல்லாம் தமிழை நிகர்ந்த ஒலி வரும் ஊர் பெயர்கள் உள்ளன ஆகவே இவை தமிழ் ஊர்கள்தான், தமிழர்கள்தான் அங்கே போனார்கள் என்பதே அவரின் ஆய்வு எனும் போது. என்ன செய்ய முடியும்?

நீங்கள் சொன்னது போல் நாளைக்கே 45,000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் நகரம் கட்டி வாழ்ந்தார்கள் என ஆய்வு வந்தால் அதை ஏற்கலாம்.

ஆனால் ஒன்று அந்த ஆய்வு யூடியூபில் வராது. ஏதாவது ஒரு பல்கலையில், பல துறைசார் நிபுணர்கள் உழைப்பில்தான் வரும்.

வாதங்களில் எனக்கு இப்போது இஷடம் பெரிதாக இல்லை 
நான் கடந்த காலங்களை இப்படி வீண் செய்து இருக்கிறேன் என்பதை 
நினைத்து இப்போ வெட்கப்படுகிறேன்.

உங்களின் கருத்தை எதிர்ப்பதோ மறுப்பதோ எனது எண்ணம் இல்லை 
எனது கருத்தை பகிர்வதே நோக்கம்.
நான் இந்த ஓவியம் பற்றியும் மனிதர்களின் கடந்த கால ஆய்வுகள் பற்றியும் மட்டுமே 
சிந்திக்கிறேன் இந்த காலப்பகுதியில் இப்படி ஓவியம் வரைய கூடிய அறிவு அளவில் மனிதர்கள் 
வாழ்ந்தார்கள் என்று இதற்கு முன்பு யாரும் எங்கும் கூறவில்லை. 

வேறு திரியில் என்ன பேசுகிறார்கள் 
யார் ஆமையில் பயணம் செய்கிறார்கள் என்பதுக்குள் நாம் மையம் கொள்ள தேவை இல்லை என்று எண்ணுகிறேன். நான் கூறிய கொலம்பஸ் உதாரணம் அமரிக்க வரலாறு பற்றியது. மனித குழுமம் 
கொலம்பஸில் தொங்கும்போது அதற்கு முந்திய அமரிக்க வாழ் மனிதர்களின் வரலாறு என்பது இருளாகவே 
இருக்கும் யார் அந்த இருளுக்குள்ளும் பயணிக்கிறார்கள் என்பதே உண்மைக்கு வலி சமைக்கும் 

நான் மகாபாரதத்தை நம்பவில்லை அதுக்கு போதுமான அளவு அறிவு எனக்கு இல்லாததும்  காரணமாக இருக்கலாம்  ஆனால் அது எழுதப்பட்ட காலம் அதுக்கு முந்திய காலம் எனும்போது வேத காலத்துக்கு முந்திய 
காலமாக அது பத்து ஆயிரம் ஆண்டு தாண்டுகிறது. அந்த புள்ளியில் இப்போது இவர்கள் முன்வைக்கும் முசுப்பேத்திய நாகரீகத்தை தொடக்கமாக கொள்வது என்பது கேள்வி குறியானதே. 

நான் வாசித்த அளவில் மனித நாகரீகம் பத்து ஆயிரம் வருடம் முன்னதாகவே இருக்கிறது 
அதை யாருக்கும் திணிக்க வேண்டும் என்பதில் எனக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் 
அதில் எனக்கு அக்கறை இல்லை

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இதை பற்றி எங்கோ வாசித்த/பார்த்த நினைவு எனக்கும் உண்டு. காபன் டேடிங் போல, ஒலி அலைகளை வைத்து செய்ய முடியுமா என்பதை ஒரு கேள்வியா எழுப்பி இருந்தார்கள் என நினைக்கிறேன். எனக்கும் போதிய விளக்கம்/நியாபகம் இல்லை.

இது ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்துபோன நட்ஷத்திரங்களைத்தான் 
நாம் இப்போ வானில் பார்க்கிறோம் என்பது போன்ற தியோரி 
இதை இல்லை என்று நாம் அடித்து கூறமுடியாது. 

ஒளி தொடர்ந்தும் பயணிக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று என்றாலும் 
இன்னொரு பால்வீதியை கடக்கும்போது வரும் ஒளி முறிவு அதன் தாக்கம் 
அதிர்வலைகள் எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஒரு இருண்ட வெளியில் 
ஒளி பயணிக்கிறது எனும்போது ஏற்றக்கொள்ள கூடிய தியறியாகவே நான் பார்க்கிறேன்.

நான் பேசுவது காற்றாலையில் அதிர்வலையாக பயணிக்கும்போது 
அந்த அதிர்வலையை ஒரு விமானம் அல்லது பட்டாசு வெடி ஓசையின் 
அதிர்வலை கடக்கும்போது அங்கு என்ன நிகழும்? 
ஏன் சோர்ட் வே வானொலி அலை குறிப்பிட்ட எல்லையை கடந்ததும் 
கேட்க்க முடியாது போகிறது? 

ஜேசு பேசிய ஒரு பகுதியை நான் பதிவு செய்து வைத்திருக்கிறேன் 
அவர் ஓம் நமச்சிவாய என்று கூறுகிறார் என்று நாம் புது புரளியை கிளம்பிவிட வேண்டும் 
மூலிகை பெட்ரோல் மாதிரி 

பின்பு அவர்களாகவே ஆய்வு செய்து அப்படி பதிய முடியாது என்று சொல்வார்கள் 

Edited by Maruthankerny
missed some words

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் வேடிக்கையாகச் சொன்னாலும் இதில் இன்னொரு சுவாரசியமான விடயம்: வெள்ளையர் ஆஸ்திரேலியாவுக்கு வருமுன்னரேயே கடல் கடந்து வந்தவர்கள் தான் மக்காசர் எனும் இந்தோனேசியாவின் ஒரு பகுதி மக்கள் என்று வாசித்திருக்கிறேன். 17ம் நூற்றாண்டுக்கு முந்தின நிகழ்வுகள் இவை. இவர்களின் வருகை எப்போது தொடங்கியது என்ற ஆய்வுக்குள் நான் இன்னும் போகவில்லை.

எனினும் இந்த மக்காசரின் ஓவியங்கள் மற்றும் ஏனைய கலாசார அம்சங்களின் தாக்கம் ஆஸ்திரேலியாவின் வடபகுதியில் வாழும் அபோரிஜினல் மக்களிடம் இருக்கிறதாம். அருகிலுள்ள இன்னொரு நாட்டின் ஒரு பகுதியிலிருந்து அவர்கள் வந்தது அதிசயமல்ல; எனினும் இவர்களின் வரலாறு சுவாரசியமானது. எல்லாத்தையும் படிக்கத் தான் நேரமில்லை! கல்லாதது உலகளவு!

சாம்பிளுக்கு ஒரு article, இவை பற்றிய தேடல் உள்ளோர்க்கு ஒரு ஆரம்பப்புள்ளியாக இதைப் பகிர்கிறேன். கீழே பகிர்ந்த ஓவியங்களையும், மேலே தலைப்பில் இணைக்கப்பட்ட ஓவியத்தையும் மீண்டும் ஒரு முறை பார்க்கவும்!

https://www.google.com.au/amp/s/theconversation.com/amp/introducing-the-maliwawa-figures-a-previously-undescribed-rock-art-style-found-in-western-arnhem-land-145535large.BFCC0535-7729-456E-B179-E82F2FFB9C2D.jpeg.982a74098b442193412390f578c787c5.jpeg

large.DE8A6774-1085-4639-89D1-041EF2CE87EA.jpeg.5c0e80df79c8b30897111a03338a1d67.jpeg

பகிர்வுக்கு நன்றி.

கிறீஸ்தவருக்கு முதலே முஸ்லிம்கள் அவுஸ்ரேலியா வந்து விட்டார்கள் என்றும் மக்கசார் முஸ்லிம்களுடன் அபொர்ஜினிகள் திருமண பந்தம் வைத்தார்கள் எனவும் அண்மையில் வாசித்தேன். ஆனால் bookmark பண்ணவில்லை🤦‍♂️.

நான் ஒரு ரயில் பிரியன். இல்லை வெறியன்.  உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். உங்கள் ஊரில் GAN என்று ஒரு ரெயில் ஓடுகிறது அடிலேட்-அலிஸ் ஸ்பிரிங்ஸ்-டார்வின்னை இணைப்பது. அதன் பெயரும் Afghan என்பதன் சுருக்கம்தானாம்.

வெள்ளையர்கள் வந்த பின் camel caravans மூலம் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பொருட்களை நகர்த்தும் பொருட்டு பல ஆப்கானிகள் தருவிக்கபட்டார்களாம். பின்னர் அந்த பாதை வழியே ஓடிய ரயிலும் அதே பெயரில் ஓடுகிறதாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.