Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகொன்று கடலில் மூழ்கியுள்ளது- சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுகளை கடற்படை கைப்பற்ற முயன்றவேளை சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் படகொன்று கடலில் மூழ்கியுள்ளது- சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுகளை கடற்படை கைப்பற்ற முயன்றவேளை சம்பவம்

Digital News Team 2021-01-19T15:34:08

நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இந்திய படகொன்றை கைப்பற்ற முயன்றவேளை படகு கவிழ்ந்து நீரில்மூழ்கியுள்ளது.
இலங்கை கடற்படை இதனைதெரிவித்துள்ளது.

6-300x225.jpg
50க்கும் மேற்பட்ட இந்திய டிரோலர் படகுகள் இலங்கை கடல் எல்லையை கடந்து உள்ளே நுழைந்தன என இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

5-225x300.jpg
இந்த படகுகளை கைப்பற்ற முயன்றவேளை அதிலிருந்து தப்பமுயன்ற படகொன்று இலங்கை கடற்படையின் படகுடன் மோதி கடலில் மூழ்கியது என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4-4-300x225.jpg
குறிப்பிட்ட படகில் எத்தனை மீனவர்கள் இருந்தனர் என்பது தெரியவில்லை என கடற்படை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் காரணமாக இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் கலமொன்று சேதமடைந்த நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1-2-300x225.jpg
இந்த சம்பவம் குறித்து இலங்கை கடற்படையினருக்கு அறிவித்துள்ளதுடன் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடலில் மூழ்கிய இந்திய படகினை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் நேற்றிரவு ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/105825

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை கடற்படையின் கப்பல்... ”கோலா ரின்னில்” செய்த மாதிரி,

இந்தளவுக்கு.... நெளிஞ்சு, ஓட்டையும் விழுந்திருக்குது. 😁

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இரு இந்திய மீனவர்களின் சடலம் மீட்பு; நால்வரும் பலி!

கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் கடற்படை படகுடன் மோதியதால் ஏற்பட்டதாக கூறப்படும் விபத்தினால் காணாமல் போயிருந்த மேலும் இரு இந்திய மீனவர்களில் சடலங்கள் இலங்கை கடற்படையினரால் இன்று (21) மீட்கப்பட்டுள்ளது.

நேற்றும் (20) இருவரது சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று இரு சடலங்கள் மீட்கப்பட்டது. இதன்படி படகில் இருந்த நால்வரும் பலியாகியுள்ளனர்.

கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் 18ம் திகதி எல்லை தாண்டிய மீனவர்களை கடற்படை கைது செய்ய முயன்ற போது படகு விபத்துக்குள்ளாகியது என்று கடற்படை தெரிவித்தது.

இதன்போது படகில் இருந்த இந்திய மீனவர்கள் நால்வர் காணாமல் போயிருந்தனர்.

தங்கச்சி மடத்தை சேர்ந்த ஏ.மெசியா (30-வயது), வட்டவாளத்தை சேர்ந்த வி.நாகராஜ் (52-வயது), மண்டபத்தை சேர்ந்த என்.சாம் (28-வயது) மற்றும் உச்சிப்புளியைச் சேர்ந்த எஸ்.செந்தில் குமார் (32-வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதில் சாம் 2009ம் ஆண்டு இல்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போது இந்தியாவிற்கு அகதியாக சென்றவர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இரு இந்திய மீனவர்களின் சடலம் மீட்பு; நால்வரும் பலி! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2021 at 03:20, தமிழ் சிறி said:

இலங்கை கடற்படையின் கப்பல்... ”கோலா ரின்னில்” செய்த மாதிரி,

இந்தளவுக்கு.... நெளிஞ்சு, ஓட்டையும் விழுந்திருக்குது. 😁

அப்படி அடிச்சுருக்குது “றோ”. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அமெரிக்க சார்பு அரசை இலங்கையில் இருந்து வேரறுத்தது.
சீனசார்பு அரசை நிலைகுலைய வைக்க முள்ளிவாய்க்கால் நினைவாலய உடைப்பு உதவவில்லை - மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள்.

ஆகவே கடலில் மீனவரை தாக்குவதில் ஆரம்பித்து கடற்படையையே தாக்குவது என்று வந்துவிட்டது “றோ”.

மறவன்புலவு சச்சியின் சத்தத்தையே காணவில்லை - பயனில்லை என்று ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து விட்டார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து மீன்பிடித்தார்களாம். அதனால் கைதுசெய்ய முயன்றார்களாம். ஒரு படகு தப்பியோடியதாம். அதைப் பிடிக்கத் துரத்திச் செல்லும்போது அது சறுக்கிக் கடலில் மூழ்கிவிட்டதாம்.

அதுசரி, அப்படியானால் இலங்கைக் கடற்படையின் படகில் சேதம் எவ்வாறு ஏற்பட்டது? காயமடைந்து வேறு படகுகளில் தப்பிவந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படை தமது படகின் மேல் வேண்டுமென்றே வந்து இடித்ததாகவும், இதனாலேயே தமது படகு மூழ்கியதாகவும் கூறுகிறார்கள். இதற்குள் ரோ எங்கிருந்து வந்தது? முழங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடலாமா? 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

அப்படி அடிச்சுருக்குது “றோ”. 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அமெரிக்க சார்பு அரசை இலங்கையில் இருந்து வேரறுத்தது.
சீனசார்பு அரசை நிலைகுலைய வைக்க முள்ளிவாய்க்கால் நினைவாலய உடைப்பு உதவவில்லை - மக்கள் விழித்துக்கொண்டு விட்டார்கள்.

ஆகவே கடலில் மீனவரை தாக்குவதில் ஆரம்பித்து கடற்படையையே தாக்குவது என்று வந்துவிட்டது “றோ”.

"றோ" இதனைச் செய்தது என்று.. 
இலங்கை கடற்படைக்கு தெரியுமா? :grin:

அல்லது.. வெட்கத்தில்,  மீனவர் படகு
தமது, கப்பலுடன்  மோதியது என்று "புலுடா" விடுகிறார்களா. 🤣

உங்கள் கற்பனை கதையை... மிகவும் ரசித்தேன். 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

"றோ" இதனைச் செய்தது என்று.. 
இலங்கை கடற்படைக்கு தெரியுமா? :grin:

அல்லது.. வெட்கத்தில்,  மீனவர் படகு
தமது, கப்பலுடன்  மோதியது என்று "புலுடா" விடுகிறார்களா. 🤣

உங்கள் கற்பனை கதையை... மிகவும் ரசித்தேன். 😂

நீங்களும் றோவும் நகமும் சதையும் போல என்று நாமறிவோம் தானே? இல்லாவிட்டால் றோவுக்கு வக்காலத்து வாங்க இப்படி ஒடி வருவீர்களா? எமது மக்களை கொன்றளித்ததில் றோவின் வகிபாகம் உலகறிந்தது. அதை மறைக்க நீங்கள் படும்பாடு யாழ் களம் அறிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

காலங்காத்தாலை...  கண்ட படி, எங்களை சிரிக்க வைக்காதீர்கள். 😂
நீங்கள் கனவுலகில் இருந்து கொண்டு...விடும் புலுடாக்களை,
நாம் நம்ப வேண்டும் என்று எதிர் பார்க்கின்றீர்களா? :grin:

றோவுக்கு  நாம் வக்காலத்து வாங்குகின்றோம் எண்டு சொன்னது நல்ல பகிடி.   🤣

  • கருத்துக்கள உறவுகள்

உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்க நடவடிக்கை

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நடுக்கடலில் மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் மீனவர்களின் உடலை தமிழகம் எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய கோரியும் இறந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டியும் ராமேஸ்வரம் மீனவர்கள், எதிர்வரும்  24ஆம் திகதி முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக  அறிவித்துள்ளனர்.

கடந்த 18 ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம் ஆகிய நான்கு மீனவர்களும் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று, மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

குறித்த மீனவர்கள் நெடுந்தீவுக்கு கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப்போவதாக எச்சரித்ததாக கூறப்படுகின்றது.

இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள், அங்கிருந்து தப்ப முயன்றபோது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மீது மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் படகில் இருந்த நால்வரும் நடுக்கடலில் மாயமாகினர். மாயமான மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக இலங்கை கடற்படையினர் தேடி வந்த நிலையில் நான்கு மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ சங்க தலைவர்கள் தங்கச்சி மடத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உயிரிழந்த நான்கு மீனவர்களின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டு, தமிழக மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் 1974ஆம் ஆண்டு போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி செயற்பட்டுவரும் இலங்கை அரசை கண்டித்தும், எதிர்வரும் 24ஆம் திகதி முதல் கடலோர மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து தங்கச்சி மடத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்துள்ளனர்.

http://athavannews.com/உயிரிழந்த-மீனவர்களுக்கு/

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

அப்படி அடிச்சுருக்குது “றோ”. 

இதுவா RAW இன் அடி?

யாரை எண்ணி எதை செய்யலாம், அழுவதா, சிரிப்பதா  என்று சிந்திக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kadancha said:

இதுவா RAW இன் அடி?

யாரை எண்ணி எதை செய்யலாம், அழுவதா, சிரிப்பதா  என்று சிந்திக்கிறேன். 

முதலில் அழுது, பிறகு சிரியுங்கள். மீண்டும் அழுது, பின்பு சிரியுங்கள். றோவின் செயற்திட்டம் வெளிச்சத்துக்கு வரும்வரை இப்படியே பொழுதை போக்குங்கள். இதற்கெல்லாம் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ள உங்களுக்கு றோவின் சங்கதி வெளிச்சத்துக்கு வந்தபின்தான் தெரியும்.

1 hour ago, தமிழ் சிறி said:

றோவுக்கு  நாம் வக்காலத்து வாங்குகின்றோம் எண்டு சொன்னது நல்ல பகிடி.   🤣

“நாம்” என்று எழுதியிருக்கிறீர்கள். முன்னர் றோவின் கட்டளைக்கு கீழ் இயங்கிய இயக்கங்கள் போன்ற ஒரு குழுவிலா இருக்கிறீர்கள்?

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

முதலில் அழுது, பிறகு சிரியுங்கள். மீண்டும் அழுது, பின்பு சிரியுங்கள். றோவின் செயற்திட்டம் வெளிச்சத்துக்கு வரும்வரை இப்படியே பொழுதை போக்குங்கள். இதற்கெல்லாம் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ள உங்களுக்கு றோவின் சங்கதி வெளிச்சத்துக்கு வந்தபின்தான் தெரியும்.

ஆம் RAW க்கு வேலை இல்லை சும்மா முட்டி மோதி பார்க்கும் மாயக் கண்ணன் RAW.

புலனாய்வு தகவல் மூலம் சிரிக்க வைத்தமைக்கு எனது நன்றிகள். 
 
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kadancha said:

ஆம் RAW க்கு வேலை இல்லை சும்மா முட்டி மோதி பார்க்கும் மாயக் கண்ணன் RAW.
 
ம் .... றோ பலரை இறக்கியிருப்பது தெரிகிறது. நீங்கள் செய்வதும் றோவின் வேலைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

ம் .... றோ பலரை இறக்கியிருப்பது தெரிகிறது

இதை ஒரு போதுமே மறுக்கவில்லை. அதுவே RAW இந்த தலையாய கடமை.

4 minutes ago, கற்பகதரு said:

நீங்கள் செய்வதும் றோவின் வேலைதான்.

கண்ணா RAW க்கு லீலாவின் ஏக்கம் புரியவில்லை. RAW கண்டுகொள்ளவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கற்பகதரு said:

“நாம்” என்று எழுதியிருக்கிறீர்கள். முன்னர் றோவின் கட்டளைக்கு கீழ் இயங்கிய இயக்கங்கள் போன்ற ஒரு குழுவிலா இருக்கிறீர்கள்?

நாம்... என்பது,
தமிழ்த் தேசியத்தை நேசிக்கும், மக்கள் ராசா... 

"புலி, பசித்தாலும்... புல்லைத்  தின்னாது."
எமக்கு... றோவை, கண்டாலே... அலர்ஜி.

உங்கள், கருத்துக்களைப்  பார்த்தால்..
அரசியலில்... நீங்கள், இன்னும்.. 
அரிவரி   வகுப்பில்தான்... உள்ளீர்கள் போலுள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கற்பகதரு said:

நீங்களும் றோவும் நகமும் சதையும் போல என்று நாமறிவோம் தானே? இல்லாவிட்டால் றோவுக்கு வக்காலத்து வாங்க இப்படி ஒடி வருவீர்களா? எமது மக்களை கொன்றளித்ததில் றோவின் வகிபாகம் உலகறிந்தது. அதை மறைக்க நீங்கள் படும்பாடு யாழ் களம் அறிந்தது.

யாழில் கொஞ்சம் சரக்கிருக்கும் ஆள் என்று இவ்வளவுகாலமும் நினைத்தது என் மடமைத்தனம் .

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Shock - Discover & Share GIFs

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

யாழில் கொஞ்சம் சரக்கிருக்கும் ஆள் என்று இவ்வளவுகாலமும் நினைத்தது என் மடமைத்தனம் .

Vadivel Vadivelu GIF - Vadivel Vadivelu Shock - Discover & Share GIFs

நானும்... அப்படித்தான்,  நினைத்திருந்தேன்.
உள்ளே... போய் பார்த்தால், அவ்வளவும் களிமண். :grin:

  • கருத்துக்கள உறவுகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.