Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து

ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து

ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பான தமது கருத்தினை இன்று பாராளுமன்றத்தில் சுமந்திரன் தெரிவித்தபோது, ரஞ்சன் ராமநாயக்கவின் குறித்த வழக்கில் தாமே அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி என்பதை தெரியப்படுத்தியதோடு நேர்மையானதொரு அரசியல்வாதியின் சார்பில் தாம் அவ்வழக்கினை முன்னெடுத்ததில் பெருமையடைவதாயும் தெரிவித்திருந்தார்.

துரதிஷ்டவசமாக அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய தண்டனை விதிக்கப்பட்டது அசாதாரணமானதும் பாரதூரமானதொரு நிகழ்வு என்பதை தெரிவித்திருந்தார்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக சட்டங்கள் இயற்றப்படாத காரணத்தினால் பாராளுமன்றம் இதற்கு பொறுப்பு கூற வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

நீண்ட காலமாக இவ்வாறான நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட வேண்டிய தேவையிருந்தும், பொதுநல நோக்கோடு அநேக வரைபுகள் வரையப்பட்டும் சட்டங்கள் இயற்றப்படவில்லை. எனவே காட்டுக்கழுதைக்கு கிடைத்த சுதந்திரம் போல எவரும் எதனையும் தீர்ப்பளிக்க கூடியதொரு சூழ்நிலை காணப்படுவதின் பாரதூர தன்மையினையும் விளக்கினார்.

மேலும் உள்ளூர் சட்டங்கள் இயற்றப்படாத நிலையில் ஆங்கில சட்டமே நடைமுறையில் கடைபிடிக்கப்படுவதாலும், ஆங்கில சட்டத்தில் இப்படியான கூற்றுக்கள் நீதிமன்ற அவதூறாக கணிக்கப்படுவதில்லை என்பதனை கருத்தில் கொள்ளாதுஇ குறித்த தீர்ப்பினை அளித்தது தவறானதொரு போக்கு என்பதே தமது நிலைப்பாடு என்பதனையும் தெரிவித்தார்.
 
-யாழ். நிருபர் பிரதீபன்-

ரஞ்சன் ராமநாயக்கவின் நீதிமன்ற அவமதிப்பு தீர்ப்பு தொடர்பில் சுமந்திரனின் கருத்து (adaderana.lk)

  • கருத்துக்கள உறவுகள்

வாதாடி தோத்து அவரை 4 வருசம் உள்ளுக்கு அனுப்பினதும் இல்லாமல் விளக்கம் வேறு கொடுத்திட்டு இருக்கிறார் 🤣🤣🤣
 
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ரதி said:

வாதாடி தோத்து அவரை 4 வருசம் உள்ளுக்கு அனுப்பினதும் இல்லாமல் விளக்கம் வேறு கொடுத்திட்டு இருக்கிறார் 🤣🤣🤣
 
நீதிமன்றுகளுக்கு கடிவாளம் தேவை.

ஒரு தீர்ப்பு குறித்து அல்லது தீர்ப்பளித்த நீதிபதி குறித்து கருத்து சொன்னால், நீதிமன்ற அவமதிப்பு. தண்டனை சரியாயிருக்கும்.

இலங்கை நீதித்துறை ஊழல் மிக்கது என்ற கருத்து சொன்னால், அதுக்கு இந்த தண்டனை தவறு. ஊழல் இல்லவே இல்லை என்று யாருமே சொல்ல முடியாது.

பத்திரிகை துறை யாருமே, அதே நீதிமன்ற அவமதிப்பு பயத்தில், வாயே திறவாமல் உள்ள போது, சுமேந்திரன் பாராளுமன்றில் சொன்னது, இந்த வகையில் தவறு இழைக்கும் நீதித்துறைக்கு கடிவாளம் போட, புதிய சட்டம் வரவேண்டும் என்று.

அரசாங்கத்தின் அமைச்சர்எஸ் பி திசாநாயக்க.... இதே போல, இரண்டு வருடம் உள்ளே இருந்தார். அநேகமாக, அவரும் புதிய சட்டத்துக்கு ஆதரவு கொடுப்பார்.

அதேவேளை பாராளுமன்ற சிறப்புரிமை காரணமாக, அங்கே பேசுவதை, நீதித்துறை தண்டிக்க  முடியாது.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

https://www.lawgazette.co.uk/practice-points/criticising-judges-a-risky-business/5041481.article 
 
https://www.theleaflet.in/contempt-dignity-and-fair-criticism-what-do-they-mean-to-courts/# 
 
ஒரு வழக்கில் தீர்ப்பு (conviction) வேறு, தண்டனை (sentencing) வேறு. 

அண்மையில் இராமநாயக்க, பிரசாந்த் பூஷன் இருவருடைய வழக்குகளையும் பார்க்கும் போதும், இங்கிலாந்து சட்டத்தின் தற்போதைய நிலையை பார்க்கும் போதும் இராமநாயக்கவுக்கு கொடுத்த தீர்ப்பு சரியானதே. 

ஆனால் தண்டனை மிக அதிகம். 

இங்கிலாந்தில் இனவாதி டாமி ராபின்சனுக்கு கொடுக்க பட்ட தீர்ப்பும் கவனிக்கதக்கது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நீதிமன்றுகளுக்கு கடிவாளம் தேவை.

ஒரு தீர்ப்பு குறித்து அல்லது தீர்ப்பளித்த நீதிபதி குறித்து கருத்து சொன்னால், நீதிமன்ற அவமதிப்பு. தண்டனை சரியாயிருக்கும்.

இலங்கை நீதித்துறை ஊழல் மிக்கது என்ற கருத்து சொன்னால், அதுக்கு இந்த தண்டனை தவறு. ஊழல் இல்லவே இல்லை என்று யாருமே சொல்ல முடியாது.

பத்திரிகை துறை யாருமே, அதே நீதிமன்ற அவமதிப்பு பயத்தில், வாயே திறவாமல் உள்ள போது, சுமேந்திரன் பாராளுமன்றில் சொன்னது, இந்த வகையில் தவறு இழைக்கும் நீதித்துறைக்கு கடிவாளம் போட, புதிய சட்டம் வரவேண்டும் என்று.

அரசாங்கத்தின் அமைச்சர்எஸ் பி திசாநாயக்க.... இதே போல, இரண்டு வருடம் உள்ளே இருந்தார். அநேகமாக, அவரும் புதிய சட்டத்துக்கு ஆதரவு கொடுப்பார்.

அதேவேளை பாராளுமன்ற சிறப்புரிமை காரணமாக, அங்கே பேசுவதை, நீதித்துறை தண்டிக்க  முடியாது.

உங்கட கருத்து உங்களுக்கே சின்ன பிள்ளைத்தனமாய் தெரியவில்லை ...ஒருவர் ஒரு நாட்டின் நீதிமன்றத்தை அவமதித்து இருக்கிறார் .அவரை கூப்பிட்டு விருது கொடுக்க சொல்கிறீர்களா?...சும் மட்டும் அல்ல வேறு யார் வாதாடி இருந்தாலும் அவருக்கு தண்டனை கிடைத்திருக்கும் . ஆனால் குறைவாய் கிடைத்திருக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

அக்கோய்,

சும்மா, நான் அடி, நுனி தெரியாமல் கதைக்கிறேன் எண்டு நினைக்கப்படாது.

ஒரு நீதிபதியோட, தீர்ப்பை மாத்தி எழுத  பேரம் பேசினதை, அவரே ரெகார்ட் பண்ணி, அது வெளிய வந்தது தெரியுமே, இல்லையோ....

பிறகென்ன, தண்டனை கொடுக்கிறது?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அக்கோய்,

சும்மா, நான் அடி, நுனி தெரியாமல் கதைக்கிறேன் எண்டு நினைக்கப்படாது.

ஒரு நீதிபதியோட, தீர்ப்பை மாத்தி எழுத  பேரம் பேசினதை, அவரே ரெகார்ட் பண்ணி, அது வெளிய வந்தது தீருமோ, இல்லையோ....

பிறகென்ன, தண்டனை கொடுக்கிறது?

நாதம் இலங்கையின் நீதித் துறை 100% பேபக்ட் என்று நான் சொல்லவில்லை ...ஆனால் இவரே நீதித் துறையை அவமதிக்கின்ற மாதிரி கதைத்தால் சாதாரண மனிதன் என்ன செய்வான்?எப்படி நீதிமன்றத்தையோ அல்லது சட்டத்தையோ மதிப்பான்?  ..இவர் செய்தது பிழை ...தண்டனை சரியானது ...இவர் மீதான வழக்கு வேறு ...வாயை வைச்ச்சிட்டு சும்மா இருந்திருந்தால் உப்ப உள்ளுக்குள்ள இருக்க வேண்டியதில்லை 

நீதிபதி பிழை செய்தால் அவருக்கு எதிராய் சும்மை பிடித்து ஒரு வழக்கை போடுறது , அதை விடுத்து என்ன இது சின்ன பிள்ளைத்தனமாய் 😂

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ரதி said:

அக்காச்சி,

உந்த லோயர்மார், லாடு லபக்கதாசுகள் எல்லாம் jurisprudence (சட்டத்தின் வியாக்கியானம்?) என்பதை பற்றி பக்கமா எழுதி மண்டைகாய வைப்பாங்கள். நீங்கள் contempt of court இன் jurisprudence ஐ ஒரு பந்தியில் சும்மா வகுந்து எடுத்து விட்டீர்கள் 👏🏾👏🏾👏🏾.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ரதி said:

வாதாடி தோத்து அவரை 4 வருசம் உள்ளுக்கு அனுப்பினதும் இல்லாமல் விளக்கம் வேறு கொடுத்திட்டு இருக்கிறார் 🤣🤣🤣
 
தங்கச்சி! உங்களுக்கு ஏற்கனவே பிள்ளையான் விசயத்திலை சுமந்திரனை துண்டற பிடிக்காது. அதை வைச்சு வரிஞ்சு கட்டுறியள்....😀

எனக்கும் சுமந்திரனை பிடிக்காதுதான்....அதுக்காக...😎

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

தங்கச்சி! உங்களுக்கு ஏற்கனவே பிள்ளையான் விசயத்திலை சுமந்திரனை துண்டற பிடிக்காது. அதை வைச்சு வரிஞ்சு கட்டுறியள்....😀

எனக்கும் சுமந்திரனை பிடிக்காதுதான்....அதுக்காக...😎

அண்ணை,

பிடிக்கும் பிடிக்காததற்கு அப்பால், சுமந்திரன் வாதாடிய வழக்குகள் எனக்கு தெரிய,

1. வடக்கு-கிழக்கு பிரிப்பு வழக்கு

2. இராணுவ வீரர்களுக்கு எதிராக

3. பிரதம நீதியரசர் ஷிராணிக்கு ஆதரவாக

4. பிள்ளையானுக்கு எதிராக

5. ராமநாயக்கவுக்கு ஆதரவாக 

இப்படி எல்லாம் தோக்கிற வழக்காவே நீளுது லிஸ்ட்……

ரதி அக்காச்சி ஜஸ்ட் லைக் தட் விளங்கபடுத்தின மேட்டர பாலிமெண்டில போய் கதைச்சிருக்கு மனுசன்.

சரி மற்றப்பக்கம் எப்படி என்று பாப்பாம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாதாடிய பிரபல வழக்குகளை தேடினால்…

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, goshan_che said:

அண்ணை,

பிடிக்கும் பிடிக்காததற்கு அப்பால், சுமந்திரன் வாதாடிய வழக்குகள் எனக்கு தெரிய,

சுமந்திரன் அன்றைய சனாதிபதியின் வழக்கறிஞர். அவர் எப்படி தமிழ்மக்களுக்கு சார்பாக வாதாடி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்க முடியும்?

19 minutes ago, goshan_che said:

சரி மற்றப்பக்கம் எப்படி என்று பாப்பாம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாதாடிய பிரபல வழக்குகளை தேடினால்…

உரிமைக்காக வாதாடுபவர்களுக்கு ஒரு சந்தர்ப்பமாவது கொடுக்க வேண்டும்.அந்த வகையில் கஜேந்திரகுமார். பார்ப்போம் அடுத்த நடவடிக்கைகளை....

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

சுமந்திரன் அன்றைய சனாதிபதியின் வழக்கறிஞர். அவர் எப்படி தமிழ்மக்களுக்கு சார்பாக வாதாடி வெற்றி பெறுவார் என எதிர்பார்க்க முடியும்?

44 minutes ago, குமாரசாமி said:

இல்லை அண்ணை, ஜனாதிபதி சட்டதரணி என்பது சட்டதரணிகளில் உயர் நிலையில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் பட்டம்.

இங்கிலாந்தில் Queen’s  Counsel (QC) என்பார்கள், பேச்சுவழக்கில் Silk என்றும் அழைப்பார்கள். பழைய ஆட்களில் சேர் பி, ஜி ஜி, எஸ் ஜே வி இன்னும் பலர் QCக்கள்.

1972 முதலாம் குடியரசு யாப்பின் பின் இலங்கை ஜனாதிபதியின் பெயரில் இதை President’s Counsel என மாற்றினார்கள். அதை தமிழில் மொழி பெயர்ப்பதுதான் ஜனாதிபதி சட்டத்தரணி. தவிர அவர்கள் ஜனாதிபதியின் சட்டதரணிகள் அல்ல.

சுமந்திரன் எந்த ஜனாதிபதியின் சட்டதரணியாகவும் இருந்ததாக எனக்கு தெரியாது.

48 minutes ago, குமாரசாமி said:

உரிமைக்காக வாதாடுபவர்களுக்கு ஒரு சந்தர்ப்பமாவது கொடுக்க வேண்டும்.அந்த வகையில் கஜேந்திரகுமார். பார்ப்போம் அடுத்த நடவடிக்கைகளை....

எல்லாருக்கும் சந்தர்பம் கொடுக்கத்தான் வேண்டும்.

ஆனால் கஜன் என்னை விட வயசு கூடின ஆள். படிச்சு முடிச்சும் கனகாலம்- ஆனாலும் ஏன் ஒரு பிரபல தமிழ் வழக்குகளை எடுத்து நடத்துவதில்லையோ தெரியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

இல்லை அண்ணை, ஜனாதிபதி சட்டதரணி என்பது சட்டதரணிகளில் உயர் நிலையில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் பட்டம்.

இங்கிலாந்தில் Queen’s  Counsel (QC) என்பார்கள், பேச்சுவழக்கில் Silk என்றும் அழைப்பார்கள். பழைய ஆட்களில் சேர் பி, ஜி ஜி, எஸ் ஜே வி இன்னும் பலர் QCக்கள்.

1972 முதலாம் குடியரசு யாப்பின் பின் இலங்கை ஜனாதிபதியின் பெயரில் இதை President’s Counsel என மாற்றினார்கள். அதை தமிழில் மொழி பெயர்ப்பதுதான் ஜனாதிபதி சட்டத்தரணி. தவிர அவர்கள் ஜனாதிபதியின் சட்டதரணிகள் அல்ல.

சுமந்திரன் எந்த ஜனாதிபதியின் சட்டதரணியாகவும் இருந்ததாக எனக்கு தெரியாது.

எனக்கு இதைப்பற்றி நல்லவடிவாக தெரியாது. ஆனால் சுமந்திரன் ஜனாதிபதி மைத்திரியின் வழக்கறிஞர் என ஒரு திரி இங்கேயும் எரிஞ்சு கருகிப்போன ஞாபகம் இருக்கு...

5 minutes ago, goshan_che said:

எல்லாருக்கும் சந்தர்பம் கொடுக்கத்தான் வேண்டும்.

ஆனால் கஜன் என்னை விட வயசு கூடின ஆள். படிச்சு முடிச்சும் கனகாலம்- ஆனாலும் ஏன் ஒரு பிரபல தமிழ் வழக்குகளை எடுத்து நடத்துவதில்லையோ தெரியாது.

எனக்கும் தெரியாது. தெரிந்தவர்கள் பதில் சொன்னால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அண்ணை,

பிடிக்கும் பிடிக்காததற்கு அப்பால், சுமந்திரன் வாதாடிய வழக்குகள் எனக்கு தெரிய,

1. வடக்கு-கிழக்கு பிரிப்பு வழக்கு

2. இராணுவ வீரர்களுக்கு எதிராக

3. பிரதம நீதியரசர் ஷிராணிக்கு ஆதரவாக

4. பிள்ளையானுக்கு எதிராக

5. ராமநாயக்கவுக்கு ஆதரவாக 

இப்படி எல்லாம் தோக்கிற வழக்காவே நீளுது லிஸ்ட்……

ரதி அக்காச்சி ஜஸ்ட் லைக் தட் விளங்கபடுத்தின மேட்டர பாலிமெண்டில போய் கதைச்சிருக்கு மனுசன்.

சரி மற்றப்பக்கம் எப்படி என்று பாப்பாம் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாதாடிய பிரபல வழக்குகளை தேடினால்…

அண்ணை 
தாங்கள்  எனக்கு 

உங்களிடம் மற்றைய கருத்தாளரின் வாயை அடைக்கும் ஒரு தந்திரம் இருக்கிறது. இதை நானும் இன்னும் சிலரும் முன்பும் சுட்டி காட்டி உள்ளோம்.

கிழக்கில் நீங்கள் ஆதரித்த அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை என்பதை சுட்டி காட்டினால் - கூட்டமைப்பு என்ன செய்தது, நீங்கள் தேசிக்காய்கள் என்ன செய்தீர்கள் என கேட்பீர்கள்.

இப்படி சொன்னதாக ஞாபகம், இப்போ சுமந்திரனை பற்றி பேசும் போது கஜே எங்கிருந்து வந்தார் ...?
தேசிக்காய்சும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைஸ் தான் அண்ணை, அரிவரியிலிருந்தே தான் தப்புவதற்காக பக்கத்திலிருப்பவனை இழுத்துவிட்டு வளர்ந்த கூட்டம், அதெல்லாம் இரத்தத்தில் ஊறியது, என்ன சும்மா பம்பலுக்காக மற்றவனுக்கு கதையடிப்பது 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

அக்னி,

இதென்னப்பா கூத்தா கிடக்கு. சுமந்திரனை தப்ப வைக்க அவர் தோத்த வழக்கை யாரும் லிஸ்ட்போடுவார்களா🤣.

நான் முன்பே சொல்லி விட்டேன், 2013இல் இருந்து 2015 வரை சும்+விக்கி க்கு ஒரு சந்தர்பம் கொடுக்கலாம் என நான் யோசித்தது உண்மை. நான் நினைத்தது போல் அவர்கள் நடக்கவில்லை என்றதும் உங்களை போல் “போய் தேசிக்காயை கேளுங்கள்” என மழுப்பாமல், எனது கணிப்பு பிழை அவர்களும் ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்பதை ஒத்து கொண்டு, அவர்களுக்கு சந்தர்பம் கொடுக்க வேண்டும் என்று எழுதுவதை நிறுத்தி, அவர்கள் மீது விமர்சனத்தையும் வைத்து வருகிறேன்.

ஆனால் கஜேந்திரகுமார் மீது நம்பிக்கை ஒரு போதும் வரவில்லை. அவர் சொல்லும் விடயங்கள் அத்தனை சாத்தியமறரதாய் இருப்பதால்.

ஆனால் ஒரு தோல்வியடைந்த வக்கீலை இன்னொரு தோல்வியடைந்த வக்கீலால் பிரதியீடு செய்ய கூடாது என்பதை காட்டவே இருவரையும் ஒப்பிட்டு எழுதினேன்.

ஆனால் அவர்கள் வக்கீல் தொழிலில் பிரகாசிக்கவில்லை என்பதால் அரசியலில் பிரகாசிக்க மாட்டார்கள் என்பதில்லை அதனால்தான் அவருக்கு ஒரு சந்தர்பம் தரலாம் என்றும் எழுதினேன்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பார்க்கலாம், இருவரில் யார் வினைதிறனாக செயல்பட்டார்கள் அல்லது இருவரும் ஒரே கேஸ்தானா என.

இதுதான் எப்போதும் என் நிலைப்பாடு. நான் எந்த அரசியல் கட்சிக்கும் “நேர்ந்து விடப்பட்டவன் அல்ல”🤣. ஆகவே உங்களை போல் அன்றி, என்னால் சந்திரகாந்தனையும், சுமந்திரனையும், கஜேந்திரகுமாரையும் ஒரு சேர விமர்சிக்க இயலுமாய் உள்ளது.

ஆனானப்பட்ட திரு பிரபாகரன் அவர்களின் சில அரசியல் முடிவுகளையே விமர்சித்து எழுதுபவன் நான் - பிஸ்கோத்து சுமந்திரனுக்கு கவர் எடுக்கிறேன் என்று என்னை சொல்வதை பெரும் மானநஸ்டமாகவே கருதுகிறேன்🤣

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, குமாரசாமி said:

தங்கச்சி! உங்களுக்கு ஏற்கனவே பிள்ளையான் விசயத்திலை சுமந்திரனை துண்டற பிடிக்காது. அதை வைச்சு வரிஞ்சு கட்டுறியள்....😀

எனக்கும் சுமந்திரனை பிடிக்காதுதான்....அதுக்காக...😎

பிள்ளையானுடைய கேசில் கடைசி ஹியரிங்கில் தான் சும் அவருக்கு எதிராய் வாதாட போறேன் என்று வந்தார் ...ஏன் கடைசி நேரத்தில் போய் மூக்குடை பட்டார் என்று அவரது வால்களுக்கே தெரியவில்லை.
இவருக்கு ஓவர் கொன்பிடன்ட் என்று நினைக்கிறேன்.
பிள்ளையானுக்காய் எல்லாம்  சும்மை எதிர்க்க வேண்டிய தேவை எனக்கில்லை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, ரதி said:

ஏன் கடைசி நேரத்தில் போய் மூக்குடை பட்டார் என்று அவரது வால்களுக்கே தெரியவில்லை.

எல்லாம் மேல் இடத்தின்ரை பவர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/1/2021 at 22:20, nunavilan said:

துரதிஷ்டவசமாக அவர் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருட கடூழிய தண்டனை விதிக்கப்பட்டது அசாதாரணமானதும் பாரதூரமானதொரு நிகழ்வு என்பதை தெரிவித்திருந்தார்.

வாழ்நாள்  முழுவதும்  விசாரணையின்றி, இளமையைத் தொலைத்து, சிறையில் விடுதலைக்காய் ஏங்கித் தவிக்கும் தமிழ் இளைஞர்களுக்கு நடப்பது அநீதி என இவருக்கு விங்கவில்லை..... ரஞ்சனுக்காக  புலம்புகிறார். எல்லாம் பணம், கூடி வாழும் பாக்கியம். இருக்கட்டும்.... இவர் தமிழ் மக்களின் பிரதிநிதி, ஜெனிவாவில் வெட்டி வீழ்த்தப்போறார் என்பதுதான் தாங்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

.
இவருக்கு ஓவர் கொன்பிடன்ட் என்று நினைக்கிறேன்.

100% ✔️
அத்துடன் தேவையில்லாமல் வாயை திறப்பதும், தேவையே இல்லாத விடயங்களில் மூக்கை நுழைப்பதும். தவிரவும் மாற்று கருத்தை ஏற்று கொள்வதிலும் பரந்த அணுகுமுறை இல்லை, தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் ரகமாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜயகலா விடுதலை புலிகளை பற்றி எதோ சொல்லி விட்டார் என்று பெரிய விசாரணை கமிசன் ஆள் போல தொலைக்காட்சியில் மானபங்க படுத்திய ரஞ்சனை  ஒரு 10 வருடம் உள்ளுக்குள் போட்டிருக்கலாம்.😀

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.