Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாது என்று எல்லோரும் சொன்ன போரை வெல்ல இந்தியா உதவியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நானும் அதைத் தான் சொல்கிறேன்

நீங்கள் மேலே கூறியது போல

புலி நீக்கம் செய்ய முனைந்த சுமேந்திரன் களைகளாலா தூக்கி எறியப்பட்டார்????

உங்கள் அரசியலை நீங்கள் எப்படியும் எங்கேயும் செய்யுங்கள்.

அதற்குள் புலிகளை இருக்காதீர்கள்

யாழில் வன்னியில் கிழக்கில் இங்கே பேசுவது போல் சந்தியில் நின்று பேசிப் பாருங்கள்?

சுமந்திரன் வாக்குகள் குறைந்தது (தூக்கி எறியப்பட்டது??)  த.தே.கூவின் மீதான அதிருப்தி- அது மிகத் தெளிவாக் கிழக்கில் தெரிந்தது.

ஆனால், சுமந்திரன் போன்றோரின் நடமாடும், பேசும் சுதந்திரத்தை முதலில் அவுஸில் நடந்த சம்பவம் மூலம் அச்சுறுத்தியது நிச்சயமாக நீங்கள் சிலாகிக்கும் களைகள் தான்!

அதே களைகள் தான் பண மோசடி, புலி நீக்கம் என்று பொய்யான வதந்திகளைப் பரப்பியதும்.

விளைவு: சு.க வின் கையில் யாழ்ப்பாணம்! எனவே, களைகள் பெருமை கொள்வது புரிந்து கொள்ளக் கூடியதே!👍

யாழில் மட்டுமல்ல, தாயகத்தின் எல்லாப் பகுகிகளிலும் உங்கள் குறுகிய தேசிக்காய் வட்டத்தை விட்டு வெளியே இருப்போர் நானும் ருல்பெனும் போலத் தான் சாதாரணமாகப் பேசுகிறார்கள்!

 தீக்கோழி போல தலையை மண்ணில் புதைத்துக் கொள்வோர் இதை அறியாமல் இருப்பது வியப்பில்லை!

  • Replies 130
  • Views 10.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் விடுதலை புலிகளை தோற்கடிக்க இந்தியா உதவி செய்தது,

சீனா இந்தியாவை தோற்கடிக்கும்போது சிங்களம் ஒருபோதும் இந்தியாவிற்காய் குரல் கொடுக்காது.

புலிகள் போராளிகள் மட்டுமல்ல, எதிரி என்று வந்துவிட்டால் அவன் இனத்தை சேர்ந்த எவனையும் கொல்லலாம் அழித்தொழிப்பு செய்யலாம் என்று இஸ்லாமிய தீவிரவாதிகள் அமைப்புகள்போல் நினைக்காமல், நீதி  நேர்மை சர்வதேச யுத்த தர்மம் என்று ஒரு கோட்டுக்குள்  வாழ்ந்த ஏமாளிகள்.

அதனால்தான்  புலிகள் என்றால் இவ்வளவுதான் என்ற அலட்சியம் சிங்களவர்களிடையே நிலவியது.

தயவு தாட்சண்யமின்றி எதிரி இனத்தை இஸ்லாமியர்கள்போல் சகட்டுமேனிக்கு அழித்தொழிப்பு செய்திருந்தால், சிங்களவர்களே என்றோ அவர்களின் அரசின் காலில் விழுந்து தமிழருக்கு தனிநாடு கொடுக்க சொல்லி அழுதிருப்பார்கள், அல்லது ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள்.

எம் பலமும் பலவீனமும் எம்மிடமே உள்ளது, அதை தனக்கு சாதகமாய் பாவித்தவனே எமக்கு வெற்றியையும் தோல்வியையும் பரிசளிக்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

அதுதவறல்ல புலிகள் செய்தவை மட்டும்தான் தவறு 
புலிகள் செய்தால் தற்காப்பு கூட தவறாகும், மஹிந்த கோத்தா செய்தால் ethnic cleansing கூட சரியாகும்,
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை எரித்துக்கொன்றால்  அது சரியாகும், அதே என் மீனவனை தொட்டால் உன் மாணவனை தொடுவேன் என்று சீமான் பேசினால் அது பாசிசமும் சாவனிசமும் சேர்ந்த தவறாகும், பொன்சேகாவுக்கு வாக்கு குத்தினால் சரியாகும், அதே கோத்தாவுக்கு குத்தினால் வெள்ளை வான் வரும் நொள்ளை வான் வரும் தவறாகும்

எங்களிடையே இருக்கும் cognitive dissonance ஐ அப்படியே சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்! 

இதனால் தான் பொருளாதார, கல்வி ரீதியில் தாயக மக்களை கைதூக்கி விடும் வேலையை மட்டும் புலம்பெயர் தமிழர் செய்தால் நல்லது என நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Justin said:

எங்களிடையே இருக்கும் cognitive dissonance ஐ அப்படியே சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்! 

இதனால் தான் பொருளாதார, கல்வி ரீதியில் தாயக மக்களை கைதூக்கி விடும் வேலையை மட்டும் புலம்பெயர் தமிழர் செய்தால் நல்லது என நினைக்கிறேன்!

இதைத்தான் புலிகளுக்கும் நாம் செய்தோம். காசை மட்டுமே கொடுத்து அவர்களை போரிட ஊக்குவித்தீர்கள் என்பது போல தாயக மக்கள் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் போது (எப்படியும் சிங்களம் அப்படி தான் விடும்) மீண்டும் மீண்டும் பணத்தை மட்டும் கொடுத்ததால் வந்த தோல்வி என்பீர்கள். ஏனெனில் உங்களுக்கு ஏழறிவு. எங்களுக்கு சாதாரண ஆறறிவு மட்டுமே தான்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, valavan said:

சிங்களம் விடுதலை புலிகளை தோற்கடிக்க இந்தியா உதவி செய்தது,

சீனா இந்தியாவை தோற்கடிக்கும்போது சிங்களம் ஒருபோதும் இந்தியாவிற்காய் குரல் கொடுக்காது.

புலிகள் போராளிகள் மட்டுமல்ல, எதிரி என்று வந்துவிட்டால் அவன் இனத்தை சேர்ந்த எவனையும் கொல்லலாம் அழித்தொழிப்பு செய்யலாம் என்று இஸ்லாமிய தீவிரவாதிகள் அமைப்புகள்போல் நினைக்காமல், நீதி  நேர்மை சர்வதேச யுத்த தர்மம் என்று ஒரு கோட்டுக்குள்  வாழ்ந்த ஏமாளிகள்.

அதனால்தான்  புலிகள் என்றால் இவ்வளவுதான் என்ற அலட்சியம் சிங்களவர்களிடையே நிலவியது.

தயவு தாட்சண்யமின்றி எதிரி இனத்தை இஸ்லாமியர்கள்போல் சகட்டுமேனிக்கு அழித்தொழிப்பு செய்திருந்தால், சிங்களவர்களே என்றோ அவர்களின் அரசின் காலில் விழுந்து தமிழருக்கு தனிநாடு கொடுக்க சொல்லி அழுதிருப்பார்கள், அல்லது ஆர்ப்பாட்டம் செய்திருப்பார்கள்.

எம் பலமும் பலவீனமும் எம்மிடமே உள்ளது, அதை தனக்கு சாதகமாய் பாவித்தவனே எமக்கு வெற்றியையும் தோல்வியையும் பரிசளிக்கிறான்.

நன்றி சகோ.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

பிரபாகரனை, புலிகளை நோக்கி பழைய தவறுகளைச் சுட்டிக் காட்டுவது , இன்னொரு புலிகள் 2.0 இனை திறமாக உருவாக்கும் நோக்கத்தில் அல்ல! அது இனி எப்போதும் நடக்காது! 

பின் ஏன் விமர்சனம்? புலிகளின் அதே தவறுகள், சில மடமைகள் ஆயுதம் மூலம் அல்லாமல் வேறு வழிகளில் இன்றும் புலிகளின் தீவிர ஆதரவாளர்களால் தற்போதைய அரசியலில் பயன்படுத்தப் படுகின்றன. எனவே அந்த தவறுகள் சுட்டிக் காட்டப் படுவது மிகவும் முக்கியம் எனக் கருதுகிறேன்!

ஒரு உதாரணம்: புலிகளை நேரடியாக ஆதரிக்காத சுமந்திரன் "புலி நீக்கம்" செய்கிறார் என்ற பொய்ப்பிரச்சாரம் எவ்வாறு தாயகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்று பார்க்கிறோம். அமீரை வழிக்கு வராததால் கொலை செய்தார்கள்; "புலிகளை invoke செய்து வாக்குக் கேட்காமல் வெல்வேன்" என்று சொன்னதால் சும் என்ற மிதவாத, தமிழ் ஆதரவு அரசியல் வாதியை வீழ்த்தப் போய் இன்று யாழில் அங்கஜன்  என்கிற துரையப்பா 2.0 ஆட்சி செய்கிறார். 

எனவே, புலிகள் தங்கள் தவறுகளால் சர்வதேச நாடுகள் பாதகமான நிலை எடுக்க பெருமளவு உதவினர் என்பதை ஒழிவு மறைவின்றிச் சொல்ல வேண்டியது அவசியம்!  

இந்த உலகில்  எல்லாம் பிழையாகச்செய்தவன் எவனுமில்லை...எல்லாம்  சரியாகச்செய்தவனும் எவனுமில்லை..ஒவ்வொரு மனிதரினின் வாழ்க்கையிலும் சரியானசெயலும்..பிழையானசெயலும் ..வெவ்வேறுவீதங்களிலுண்டு..இது. பிரபாகரனுக்கும் ..பொருந்தும்..பிரபாகரன்..தமிழ்மக்களால் உருவாக்கப்பட்டவன்..முப்பது ஆண்டுகள்..பெரும்பான்மை தமிழ்மக்கள் ஆதரவுயளித்துள்ளார்கள்..பிரபாகரன். லாபநோக்கமில்லாமால் செயல்பட்ட ஒரு தலைவன்.அவன்விட்டதவறுகள்..தமிழ்மக்கள் விட்ட தவறுகளாகும். தமிழ்மக்களுக்கு கிடைத்ததலைவர்களில்..கொண்டகொள்கையில் உறுதிமிக்கதலைவன் பிரபாகரன் . தமிழ்மக்களின் வாக்குப்பிச்சையில்..பராளுமன்ற உறுப்பினராக..அமைச்சராக..அதே தமிழ்மக்களை..எமாற்றி வாழ..பிரபாகரன்..எண்ணியதில்லை..அமிர்..சுமத்திரன்..போன்றேர் பதவி..பணம்..மண். ஆசை உடையவர்கள்..இவற்றுக்காக எதையும்..சொல்லாவும். செய்யவமும் கூடியவர்கள். பிரபாகரன் அதிகம் படிக்கவில்லை..அதிகம் பேசவில்லை. ஆனால் அதிகம் செய்துள்ளான்.தனக்காகவில்லை..தமிழ்மக்களுக்காக..

நீங்கள் நன்றாக பிரபாகரனைப்பற்றி எடுத்து கூறுங்கள்..நான் தடுக்கவில்லை..நானும் எடுத்து கூறுகிறேன்..கேட்ப்பவர்கள் .முடிவுசெய்யட்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

இதைத்தான் புலிகளுக்கும் நாம் செய்தோம். காசை மட்டுமே கொடுத்து அவர்களை போரிட ஊக்குவித்தீர்கள் என்பது போல தாயக மக்கள் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் போது (எப்படியும் சிங்களம் அப்படி தான் விடும்) மீண்டும் மீண்டும் பணத்தை மட்டும் கொடுத்ததால் வந்த தோல்வி என்பீர்கள். ஏனெனில் உங்களுக்கு ஏழறிவு. எங்களுக்கு சாதாரண ஆறறிவு மட்டுமே தான்.

(இந்த அறிவு வகைகள் பற்றிய உங்கள் கருத்தை உதாசீனம் செய்கிறேன்  ஏனெனில், பதில் சொல்ல இயலாமல் மூலையில் மாட்டிக் கொள்ளும் போது நீங்கள் கையிலெடுக்கும் அசிங்கமான அஸ்திரம் அது! நீங்கள் அங்கேயே நில்லுங்கள், நான் வரவில்லை!😎)

ஆனால் கீழ் கருத்து முக்கியமானது: ஏனெனில் அது நீங்கள் புலத்தில் நடந்த  போராட்டத்தை என்னை விட வேறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு ஆதாரமான கருத்து அது!

புலிகள் இருந்த போது நீங்கள் அனுப்பிய பணம் போராட்டப் பங்களிப்பு. ஆயுதங்கள், போராளிகள் பராமரிப்பு என்பனவே பிரதான செலவு! அப்படியல்ல , தமிழர்களின் கல்வி, பொருளாதாரம் நோக்கிய பங்களிப்பென்று பணம் சேகரித்தோர் சொல்ல நீங்கள் நம்பியிருந்தால், உங்களுக்கு காதில் பூ சுத்தியிருக்கிறார்கள் என்று மட்டும் சொல்ல முடியும்!

இப்போது நான் சொல்லும் பொருளாதார , கல்வி பங்களிப்பு, வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்களை முறைசார், முறைசாரா வழிகளில் 80 களிற்கு முன்னர் இருந்த நிலைக்குக் கொண்டு வரும் பங்களிப்பு. அதற்குள் மோட்டார் சைக்கிள் , ஐபோன் வாங்க அனுப்பும் காசெல்லாம் வராது. இதை புலம் பெய்ர்ந்த  இளையோர் அமைப்புகள் பல சத்தமின்றிச் செய்கின்றன என்பது நல்ல செய்தி. 

இந்த விடயங்களில் ஈடுபட்டிருப்பதாலும், மௌனமாக ஈடுபடும் பலரை அறிந்திருப்பதாலும் தான், சிலர் இங்கே "செயல் செய்தோம்" என்று தண்டோரா போடும் தருணங்களில் உள்சிரிப்புடன் கடந்து செல்ல முடிகிறது!
 
Edited by Justin
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

இந்த உலகில்  எல்லாம் பிழையாகச்செய்தவன் எவனுமில்லை...எல்லாம்  சரியாகச்செய்தவனும் எவனுமில்லை..ஒவ்வொரு மனிதரினின் வாழ்க்கையிலும் சரியானசெயலும்..பிழையானசெயலும் ..வெவ்வேறுவீதங்களிலுண்டு..இது. பிரபாகரனுக்கும் ..பொருந்தும்..பிரபாகரன்..தமிழ்மக்களால் உருவாக்கப்பட்டவன்..முப்பது ஆண்டுகள்..பெரும்பான்மை தமிழ்மக்கள் ஆதரவுயளித்துள்ளார்கள்..பிரபாகரன். லாபநோக்கமில்லாமால் செயல்பட்ட ஒரு தலைவன்.அவன்விட்டதவறுகள்..தமிழ்மக்கள் விட்ட தவறுகளாகும். தமிழ்மக்களுக்கு கிடைத்ததலைவர்களில்..கொண்டகொள்கையில் உறுதிமிக்கதலைவன் பிரபாகரன் . தமிழ்மக்களின் வாக்குப்பிச்சையில்..பராளுமன்ற உறுப்பினராக..அமைச்சராக..அதே தமிழ்மக்களை..எமாற்றி வாழ..பிரபாகரன்..எண்ணியதில்லை..அமிர்..சுமத்திரன்..போன்றேர் பதவி..பணம்..மண். ஆசை உடையவர்கள்..இவற்றுக்காக எதையும்..சொல்லாவும். செய்யவமும் கூடியவர்கள். பிரபாகரன் அதிகம் படிக்கவில்லை..அதிகம் பேசவில்லை. ஆனால் அதிகம் செய்துள்ளான்.தனக்காகவில்லை..தமிழ்மக்களுக்காக..

நீங்கள் நன்றாக பிரபாகரனைப்பற்றி எடுத்து கூறுங்கள்..நான் தடுக்கவில்லை..நானும் எடுத்து கூறுகிறேன்..கேட்ப்பவர்கள் .முடிவுசெய்யட்டும்...

நீங்கள் பிழைகளைச் சுட்டுவதில் என்ன பயன் என்று கேட்டீர்கள், நான் பயனை எடுத்து சொன்னேன்! இந்தப் பதில் உரையாடலுக்கு தொடர்பேயில்லாமல் இருக்கிறது. 

ஆனால், "பிரபாகரனும், புலிகளும் விட்ட தவறுகள் தமிழர்கள் விட்ட தவறுகளே" என்பது அர்த்தமேயில்லாத ஒரு rhetoric. இதை உங்களால் கூட விளக்க முடியாது.

ஒரு உதாரணத்திற்கு, "முள்ளிவாய்க்காலில் அடைத்து வைக்கப் பட்டு இறந்த தமிழர்கள் இறந்தது அவர்களின் தவறு.." இதை சிங்களவன் சில இடங்களில் சொல்கிறான். நீங்கள் சொல்வதற்கும் இதுவா அர்த்தம்?🤔

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Justin said:

எனது பார்வையில் போரடியது  தமிழர்கள் ..பிழை விட்டதும் தமிழர்கள்..போராடவேண்டியநிலை வந்தது ..சிங்களவனால்.  இலங்கையில் பெருவாரியான தமிழ் மக்கள் இலங்கையரசால் கொல்லப்படடுள்ளார்கள் ..நான் சொன்னதிற்க்கு  அதுவல்லக்கருத்து..(சிங்களவன் சொன்னகருத்து) இந்த  நாட்டில் நான் வாழ்கிறேன்  பதுகாப்பு..கல்வி..வேலைவாய்ப்பு...மருத்துவம்...மற்றும் உதவிகள்...அனைவருக்கும் சமனாகக்கிடைக்கிறது..ஆனால். இலங்கையில் எகப்பட்ட பிரச்சனைகள் வலிந்துந ஆட்சியாளர் உருவாக்கின்றனர்..இதனால் தமிழ்த்தலைவர்கள்..போராட அழைப்புவிட்டார்கள் தமிழர்கள் போரடினார்கள்..இலங்கையரசுடன்.முள்ளவாக்கல் கொலைக்கு நீதிமன்றம் .தீர்ப்பு அளிக்கும்.நான் நீதிபதி இல்லை .நானும். நீங்களும். வெவ்வேறு நபர்கள் எனவே கருத்துக்கள் வெவ்வேறுயானவை..

13 minutes ago, Kandiah57 said:

போராடியது தமிழர்கள் என்று  கூறுவதை விட தமிழ் தலைமைகள். விமர்சனம் என்பது தமிழ் தலைமைகளின் மீது தான். தமிழர்கள் மீது அல்ல. ஈழத்தில் தமிழ் தேசியப்பிரச்சனை இன்னும் தீராத நிலையில் கடந்த கால தமிழ் தலைமைகளின் விட்ட தவறுகளைப் பற்றி உரையாடுவதில் தவறு ஏதும் இல்லை. கடந்த காலத் தலைமைகள் என்பவற்றுள் அனைவரும் அடக்கம். அதில் எந்த பேதமும் இல்லை. எவருக்கும் விதிவிலக்கு இல்லை. எவரும் புனிதமானவகள் அல்லர். 

போராடியது தமிழர்கள் என்று பரந்து பட நீங்கள் கூற முடியாது. ஜேர்மனியில் வாழும் உங்களால் ஒரு காலத்தில் தனிப்பட எந்த அரசியல் போராட்டத்தையும் ஒழுங்கு செய்ய உங்களுக்கு அனுமதி இல்லை என்பது உங்களுக்கு தெரியும். உங்களுக்கு அனுமதி இல்லாதபோது உங்களால் எப்படி போராடியிருக்க முடியும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

1 - (இந்த அறிவு வகைகள் பற்றிய உங்கள் கருத்தை உதாசீனம் செய்கிறேன்  ஏனெனில், பதில் சொல்ல இயலாமல் மூலையில் மாட்டிக் கொள்ளும் போது நீங்கள் கையிலெடுக்கும் அசிங்கமான அஸ்திரம் அது! நீங்கள் அங்கேயே நில்லுங்கள், நான் வரவில்லை!😎)

ஆனால் கீழ் கருத்து முக்கியமானது: ஏனெனில் அது நீங்கள் புலத்தில் நடந்த  போராட்டத்தை என்னை விட வேறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு ஆதாரமான கருத்து அது!

2 - புலிகள் இருந்த போது நீங்கள் அனுப்பிய பணம் போராட்டப் பங்களிப்பு. ஆயுதங்கள், போராளிகள் பராமரிப்பு என்பனவே பிரதான செலவு! அப்படியல்ல , தமிழர்களின் கல்வி, பொருளாதாரம் நோக்கிய பங்களிப்பென்று பணம் சேகரித்தோர் சொல்ல நீங்கள் நம்பியிருந்தால், உங்களுக்கு காதில் பூ சுத்தியிருக்கிறார்கள் என்று மட்டும் சொல்ல முடியும்!

இப்போது நான் சொல்லும் பொருளாதார , கல்வி பங்களிப்பு, வடக்கு கிழக்கு தமிழ் மாணவர்களை முறைசார், முறைசாரா வழிகளில் 80 களிற்கு முன்னர் இருந்த நிலைக்குக் கொண்டு வரும் பங்களிப்பு. அதற்குள் மோட்டார் சைக்கிள் , ஐபோன் வாங்க அனுப்பும் காசெல்லாம் வராது. இதை புலம் பெய்ர்ந்த  இளையோர் அமைப்புகள் பல சத்தமின்றிச் செய்கின்றன என்பது நல்ல செய்தி. 

3 - இந்த விடயங்களில் ஈடுபட்டிருப்பதாலும், மௌனமாக ஈடுபடும் பலரை அறிந்திருப்பதாலும் தான், சிலர் இங்கே "செயல் செய்தோம்" என்று தண்டோரா போடும் தருணங்களில் உள்சிரிப்புடன் கடந்து செல்ல முடிகிறது!
 
1  - தமிழர் எடுத்த அத்தனை முடிவுகளும் முட்டாள்களின் முடிவு நான் அவர்கள் அனைவரையும் விட அறிவாற்றல் உள்ளவன் என இங்கு உங்கள் நண்பர்கள் எழுதிய போது தமிழ் மக்களை விட உங்கள் நண்பர்கள் முக்கியம் என அந்த கருத்தை கடந்து சென்றவர் தான் நீங்கள்.

2 - புலிகள் பற்றிய உங்கள் புரிதலும் பார்வையும் இவ்வளவு தான். ஆனால் எனது அனுபவம் வேறு. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு பிச்சைக்காரரோ அனாதையான குழந்தைகளோ வயோதிபரோ வீதியில் இருந்ததில்லை. புலிகளின் சாப்பாடு கூட (வார்த்தைகளால் அதை எழுதமுடியாது)

3 - மக்களை நேசிப்பவன் என்ற ரீதியில் உங்கள் சேவை என்னை அந்தவகையில் செய்ய தூண்டுகிறது. அதை தம்பட்டம் என்று சொல்லி நமட்டு சிரிப்பு எனக்கு வராது. தம்பட்டம் என்பதே நாலு பேரை அது சென்றடையும் என்பது தானே? யாழ் களம் அதற்கு எமக்கு பெரும் பலம். அப்படியான தம்பட்டம் இங்கு பல ஊக்குவிப்பு களையும் அடுத்த அடுத்த கட்டத்துக்கான முயற்சிகளுக்கான அத்திவாரங்களையும் இட்டு சாட்சியாக நிற்கிறது . தேடி வாசியுங்கள்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, tulpen said:

போராடியது தமிழர்கள் என்று  கூறுவதை விட தமிழ் தலைமைகள். விமர்சனம் என்பது தமிழ் தலைமைகளின் மீது தான். தமிழர்கள் மீது அல்ல. ஈழத்தில் தமிழ் தேசியப்பிரச்சனை இன்னும் தீராத நிலையில் கடந்த கால தமிழ் தலைமைகளின் விட்ட தவறுகளைப் பற்றி உரையாடுவதில் தவறு ஏதும் இல்லை. கடந்த காலத் தலைமைகள் என்பவற்றுள் அனைவரும் அடக்கம். அதில் எந்த பேதமும் இல்லை. எவருக்கும் விதிவிலக்கு இல்லை. எவரும் புனிதமானவகள் அல்லர். 

போராடியது தமிழர்கள் என்று பரந்து பட நீங்கள் கூற முடியாது. ஜேர்மனியில் வாழும் உங்களால் ஒரு காலத்தில் தனிப்பட எந்த அரசியல் போராட்டத்தையும் ஒழுங்கு செய்ய உங்களுக்கு அனுமதி இல்லை என்பது உங்களுக்கு தெரியும். உங்களுக்கு அனுமதி இல்லாதபோது உங்களால் எப்படி போராடியிருக்க முடியும். 

நீங்கள் சொல்லியபடி போராடினாலும் தீர்வு கிடைக்காது.நான் தனிப்படபோராட இது எனது வீட்டுப்பிரச்சனையில்லை. தமிழ்மக்கள் பிரச்சனை என்றுதான் நான் இதில் கருத்து எழுதினேன்..தலைவர்கள பிரச்சனைக்கும்..எனக்கும் எந்தத்தொடர்புமில்லை.உங்கள கருத்தை நான் எற்றுக்கொள்ளவில்லை .நான் யாரையும் என கருத்தை எற்க்கும்படி கூறுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kandiah57 said:

ஆமாம் ஆனால் நாங்கள் எதை எழுதினாலும் அதை எனது தனிப்பட்ட பிரச்சினையாக ஏன் பார்க்கிறீர்கள் என அவர் அழாத இடமில்லை 😡 அவருக்கு வந்தால் மட்டுமே ரத்தம்

18 minutes ago, Kandiah57 said:

நீங்கள் சொல்லியபடி போராடினாலும் தீர்வு கிடைக்காது.நான் தனிப்படபோராட இது எனது வீட்டுப்பிரச்சனையில்லை. தமிழ்மக்கள் பிரச்சனை என்றுதான் நான் இதில் கருத்து எழுதினேன்..தலைவர்கள பிரச்சனைக்கும்..எனக்கும் எந்தத்தொடர்புமில்லை.உங்கள கருத்தை நான் எற்றுக்கொள்ளவில்லை .நான் யாரையும் என கருத்தை எற்க்கும்படி கூறுவதில்லை.

இது உங்கள் வீட்டு பிரச்சனை என்று நான் கூறவில்லை கந்தையா. எனது கருத்தை உங்களிடம் திணிக்கவும் இல்லை.  பொதுப்பிரச்சனையில் கருத்துக்கூறும் உரிமை உங்களுக்கு உண்டு. அதை தடுக்க எனக்கு உரிமை இல்லை.  பொதுவாகவே முன்பு தமிழர்கள் தாமாக போராட அனுமதி வழங்கபடவில்லை என்பதை தான் சுட்டிக்காடினேன்.  அதுவும் போராடியது தமிழர்கள் என்று நீங்களை கூறியதால்.

இங்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு கூறலால். தமிழர்கள் சிலர் தாமாக இலங்கை அரசின் அடக்குமுறைகளையும் மனித உரிமை மீறல்களையும் சுவிஸ் மக்கள் மத்தியில் பரப்புரை செய்ய ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் சமுகமளித்த சுவிஸ் பிரஜைகள் சிலர்  விடுதலை போராளிகள் செய்த மனித உரிமை மீறல்களை பற்றி ஆதாரங்களுடன் பதில் கேள்வி கேட்டபோது அதில் வந்திருந்த பொதுமக்களில்  சிலர் அதையும் நாம் ஆதரிக்கவில்லை. சிங்கள மக்களுக்கு எதிராக நாம் போராட வில்லை அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராகவே தமிழர்கள் போராடுகிறோம் என்றும் எமது போராளிகள் செய்தாலும் மனித உரிமை மீறல்கள் தவறு என்று குறிப்பிடனர். 

அந்த சம்பவத்திற்கு  பிறகு யாரும்  இப்படியான பிரச்சார கூட்டங்களை எவரும் ஒழுங்கு செய்ய கூடாது என்றும் அனைத்து கூட்டங்களும் எங்கள் மூலமாக எமது பிரசன்னதில் தான் நடத்தப்படவேண்டும் என்றும் இங்குள்ள விடுதலை புலிகளால் தடை விதிக்கபட்டது. 

 இப்படி இருக்க நடைபெற்ற அழிவுக்கு பொதுமக்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது தவறானது என்பது எனது கருத்து. ஆனால் அதை நீங்கள் ஏற்கவேண்டியதில்லை. 

47 minutes ago, விசுகு said:

ஆமாம் ஆனால் நாங்கள் எதை எழுதினாலும் அதை எனது தனிப்பட்ட பிரச்சினையாக ஏன் பார்க்கிறீர்கள் என அவர் அழாத இடமில்லை 😡 அவருக்கு வந்தால் மட்டுமே ரத்தம்

அந்த அவர் என்பவர் யார் அவர். சில மணித்தியாலங்களுக்கு முன்பு உங்களை போன்றவர்கள் கொலை செய்தாலும் அதற்கு ஆதரவளிப்பேன் என்று கூறி கொலை மிரட்டல் விடுத்தீர்களே அவரே அந்த அவர். ஆனால் போட்டு தள்ளும் காலம் காலாவதியாகிவிட்டது என்பது கூட தெரியாமல் கற்பனையில் வாழ்கின்றீர்கள். 😂😂😂

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா நொய் நொய் எண்டு கத்துற சனத்துக்கு புலிகள்தான் முழு பிழையும் விட்டார்கள் என்று சொன்னால் ஏதாவது செய்வார்களா? 🤔

புலிகள் ஆதிக்கம் இல்லாமல் 10 வருசமாச்சு....

வாயிலை வருது 😎

கண்ணுக்கெட்டிய தூரம் எதுவும் செய்ததாக தெரியவில்லை...

6 minutes ago, குமாரசாமி said:

சும்மா நொய் நொய் எண்டு கத்துற சனத்துக்கு புலிகள்தான் முழு பிழையும் விட்டார்கள் என்று சொன்னால் ஏதாவது செய்வார்களா? 🤔

புலிகள் ஆதிக்கம் இல்லாமல் 10 வருசமாச்சு....

வாயிலை வருது 😎

கண்ணுக்கெட்டிய தூரம் எதுவும் செய்ததாக தெரியவில்லை...

இதற்கான பதில் முன்பு   ஒரு திரியில் தெளிவாக உங்களுக்கு தரப்பட்டு விட்டது. மீண்டும் மீண்டும் வாயிலை வருகிது என்றால் போய் வெத்திலையை துப்பிப்போட்டு வாறது தானே.🤣🤣🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, tulpen said:

இதற்கான பதில் முன்பு   ஒரு திரியில் தெளிவாக உங்களுக்கு தரப்பட்டு விட்டது. மீண்டும் மீண்டும் வாயிலை வருகிது என்றால் போய் வெத்திலையை துப்பிப்போட்டு வாறது தானே.🤣🤣🤣

மன்னிக்கவும். நான் எழுதியது உங்களுக்கானது அல்ல.
நீங்கள் உத்தமன் என்று எனக்கு நன்றாகவே தெரியும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

1  - தமிழர் எடுத்த அத்தனை முடிவுகளும் முட்டாள்களின் முடிவு நான் அவர்கள் அனைவரையும் விட அறிவாற்றல் உள்ளவன் என இங்கு உங்கள் நண்பர்கள் எழுதிய போது தமிழ் மக்களை விட உங்கள் நண்பர்கள் முக்கியம் என அந்த கருத்தை கடந்து சென்றவர் தான் நீங்கள்.

2 - புலிகள் பற்றிய உங்கள் புரிதலும் பார்வையும் இவ்வளவு தான். ஆனால் எனது அனுபவம் வேறு. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஒரு பிச்சைக்காரரோ அனாதையான குழந்தைகளோ வயோதிபரோ வீதியில் இருந்ததில்லை. புலிகளின் சாப்பாடு கூட (வார்த்தைகளால் அதை எழுதமுடியாது)

3 - மக்களை நேசிப்பவன் என்ற ரீதியில் உங்கள் சேவை என்னை அந்தவகையில் செய்ய தூண்டுகிறது. அதை தம்பட்டம் என்று சொல்லி நமட்டு சிரிப்பு எனக்கு வராது. தம்பட்டம் என்பதே நாலு பேரை அது சென்றடையும் என்பது தானே? யாழ் களம் அதற்கு எமக்கு பெரும் பலம். அப்படியான தம்பட்டம் இங்கு பல ஊக்குவிப்பு களையும் அடுத்த அடுத்த கட்டத்துக்கான முயற்சிகளுக்கான அத்திவாரங்களையும் இட்டு சாட்சியாக நிற்கிறது . தேடி வாசியுங்கள்.

1. யூட்டர் இன்னொரு இடத்தில் சொன்னதை நான் எதிர்க்கவில்லையென்பது பிரச்சினையா? அதை நான் உள்ளூர ஆமோதித்தால் ஏன் எதிர்க்க வேண்டும்? உங்களிடம் முதுகு சொறியல் வாங்கவா? அது ஏன் இங்கே பேசு பொருள் இப்ப? எழுத எதுவும் இல்லையா?

2.  புலிகள் தங்கள் பணத்தை நன்றாக நிர்வாகம் செய்தார்கள். அதில் தானமும் இருந்தது. ஆனால், தமிழ் மக்களின் கல்விக்காக, பொருளாதார உயர்வுக்காக என்று பிரதானமாக எதுவும் செய்யவில்லை என்பது அங்கே வசித்த என் அவதானிப்பு. அங்கே வசிக்காத உங்களுக்கு என்ன சொல்லப் பட்டது என்று நான் அறியேன்!

3. சுயவிளம்பரம் என்பதை நீங்கள் அந்த நோக்கத்தில் பயன்படுத்தியதை விட, அதிக சந்தர்ப்பங்களில் எதிர்கருத்தாளர் எதுவும் செய்யாமல் பேசுகிறார் என்று தட்டிக் கழிக்க அதிகமாகப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்! அண்மைய திரிகளில் உங்கள் கருத்துக்களை நீங்களே தேடி வாசிக்க வேண்டும்! 

2 hours ago, Kandiah57 said:

எனது பார்வையில் போரடியது  தமிழர்கள் ..பிழை விட்டதும் தமிழர்கள்..போராடவேண்டியநிலை வந்தது ..சிங்களவனால்.  இலங்கையில் பெருவாரியான தமிழ் மக்கள் இலங்கையரசால் கொல்லப்படடுள்ளார்கள் ..நான் சொன்னதிற்க்கு  அதுவல்லக்கருத்து..(சிங்களவன் சொன்னகருத்து) இந்த  நாட்டில் நான் வாழ்கிறேன்  பதுகாப்பு..கல்வி..வேலைவாய்ப்பு...மருத்துவம்...மற்றும் உதவிகள்...அனைவருக்கும் சமனாகக்கிடைக்கிறது..ஆனால். இலங்கையில் எகப்பட்ட பிரச்சனைகள் வலிந்துந ஆட்சியாளர் உருவாக்கின்றனர்..இதனால் தமிழ்த்தலைவர்கள்..போராட அழைப்புவிட்டார்கள் தமிழர்கள் போரடினார்கள்..இலங்கையரசுடன்.முள்ளவாக்கல் கொலைக்கு நீதிமன்றம் .தீர்ப்பு அளிக்கும்.நான் நீதிபதி இல்லை .நானும். நீங்களும். வெவ்வேறு நபர்கள் எனவே கருத்துக்கள் வெவ்வேறுயானவை..

கந்தையா, நீங்கள் மீளவும் வேறு வரிகளில் எழுதியிருப்பதெல்லாம் போராட்டத்தின் தவறுகளுக்கு எல்லாத் தமிழர்களும் காரணகர்த்தர்கள் என்று தான்! அர்த்தமேயற்ற வெற்றுக் கோசம் இது!

எனவே தான் முள்ளிவாய்க்காலை உதாரணமாகக் காட்டினேன். உங்கள் வாதப் படி தமிழர்கள் அரைவாசிக் காரணமான ஒரு இன அழிவுக்கு, எப்படி தமிழர்களே வழக்குத் தொடுப்பது? 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

2.  புலிகள் தங்கள் பணத்தை நன்றாக நிர்வாகம் செய்தார்கள். அதில் தானமும் இருந்தது. ஆனால், தமிழ் மக்களின் கல்விக்காக, பொருளாதார உயர்வுக்காக என்று பிரதானமாக எதுவும் செய்யவில்லை என்பது அங்கே வசித்த என் அவதானிப்பு. அங்கே வசிக்காத உங்களுக்கு என்ன சொல்லப் பட்டது என்று நான் அறியேன்!

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கூட்டம்.

இப்படியானவர்களுக்கு யாழ்களத்தில் அதரவு வழங்க ஒருகூட்டம். அதிலும்.......

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் கூட்டம்.

இப்படியானவர்களுக்கு யாழ்களத்தில் அதரவு வழங்க ஒருகூட்டம். அதிலும்.......

தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்: சேர்த்த காசு பிரதானமாக யுத்தத்திற்கே சென்றது! தாயகத்தில் இருந்தவர்கள் கூட கொடுக்க வேண்டி இருந்தது! அங்கே இருந்ததால் சொல்கிறேன். 

"அப்படி இல்லை, சேர்த்தது மக்களுக்குக் கொடுக்கத் தான்" என்கிற உங்கள் "பூசணிக்காயை" இங்கே முன்வைத்தால் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, tulpen said:

இது உங்கள் வீட்டு பிரச்சனை என்று நான் கூறவில்லை கந்தையா. எனது கருத்தை உங்களிடம் திணிக்கவும் இல்லை.  பொதுப்பிரச்சனையில் கருத்துக்கூறும் உரிமை உங்களுக்கு உண்டு. அதை தடுக்க எனக்கு உரிமை இல்லை.  பொதுவாகவே முன்பு தமிழர்கள் தாமாக போராட அனுமதி வழங்கபடவில்லை என்பதை தான் சுட்டிக்காடினேன்.  அதுவும் போராடியது தமிழர்கள் என்று நீங்களை கூறியதால்.

இங்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்கு கூறலால். தமிழர்கள் சிலர் தாமாக இலங்கை அரசின் அடக்குமுறைகளையும் மனித உரிமை மீறல்களையும் சுவிஸ் மக்கள் மத்தியில் பரப்புரை செய்ய ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் சமுகமளித்த சுவிஸ் பிரஜைகள் சிலர்  விடுதலை போராளிகள் செய்த மனித உரிமை மீறல்களை பற்றி ஆதாரங்களுடன் பதில் கேள்வி கேட்டபோது அதில் வந்திருந்த பொதுமக்களில்  சிலர் அதையும் நாம் ஆதரிக்கவில்லை. சிங்கள மக்களுக்கு எதிராக நாம் போராட வில்லை அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராகவே தமிழர்கள் போராடுகிறோம் என்றும் எமது போராளிகள் செய்தாலும் மனித உரிமை மீறல்கள் தவறு என்று குறிப்பிடனர். 

அந்த சம்பவத்திற்கு  பிறகு யாரும்  இப்படியான பிரச்சார கூட்டங்களை எவரும் ஒழுங்கு செய்ய கூடாது என்றும் அனைத்து கூட்டங்களும் எங்கள் மூலமாக எமது பிரசன்னதில் தான் நடத்தப்படவேண்டும் என்றும் இங்குள்ள விடுதலை புலிகளால் தடை விதிக்கபட்டது. 

 இப்படி இருக்க நடைபெற்ற அழிவுக்கு பொதுமக்களும் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவது தவறானது என்பது எனது கருத்து. ஆனால் அதை நீங்கள் ஏற்கவேண்டியதில்லை. 

அந்த சம்பவத்தை அராயவும் தீர்ப்பு கூறவும் நான் விரும்பவில்லை..ஆனால் நீங்கள் ஒவ்வோர் திரியிலும் பிரபாகரனை மிகவும் மூர்க்கமாக எதிர்த்திர்கள் ஏன்?பிரபாகரனைப்போல் உறுதியான கொள்கைப்பற்றுள்ள..சுயநலமற்ற..தலைவனைப் இனி எக்காலத்திலும் தமிழ் இனம் பெறமுடியாது..நீங்கள விரும்பினால் தலைமையை நன்றாக விமர்சனம் செய்யலாம்..ஆனல். 04-02-1948 இலிருந்து தொடங்குங்கள் நானும் வாசிக்க ஆவலாகவுள்ளேன்..இதை விட்டு இடையில் வந்த புலிகளை மட்டும் விமர்சனம் செய்வது என்றால் அது உண்மையில் விமர்சனமில்லை.

(1) 04-02-1948 இருந்து ஆயுதப்போராட்ட ஆரம்பம் வரை..

(2) ஆயுதப்போராட்டக்காலம்..

(3) 18-05-2009இருந்து இன்று வரை  இந்த ஆய்வு முடியமுன் நாடு முழுக்க சிங்கள மயமாகிவிடும். இப்படியான விமர்சனத்தின் பயனாக..இனி எவனும் போராட்டத்துக்கு தலைமை எற்க வர முடியாதபடி எம்மை அறியமால் நாமே தடை செய்தவர்கள் ஆவோம் ஆகவே மறப்போம் மன்னிப்போம் நல்லதே நடக்கும்  எங்கள் அமைவிடம்  ஐரோப்பாவிலிருந்து இருத்தால் ஆறுபது ஆண்டுகளுக்குமுன் ஐ.நா சபையில் அங்கத்தவராகியிருப்போம். சிங்களவர் ஒரு மாநில சுய ஆட்சி தரவிரும்பமையே இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Justin said:

"அப்படி இல்லை, சேர்த்தது மக்களுக்குக் கொடுக்கத் தான்" என்கிற உங்கள் "பூசணிக்காயை" இங்கே முன்வைத்தால் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்!

ஈழ தமிழ் மக்களுக்காகத்தான் கொடுக்கப்பட்டது.
அதில் கல்வி சுகாதாரம் வீதி போக்குவரத்து ஓய்வூதியம் என பல விடயங்கள் இதற்குள் சேரும்.

***

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

ஈழ தமிழ் மக்களுக்காகத்தான் கொடுக்கப்பட்டது.
அதில் கல்வி சுகாதாரம் வீதி போக்குவரத்து ஓய்வூதியம் என பல விடயங்கள் இதற்குள் சேரும்.

****

இவர்கள் மதில் மேல் பூனை அல்ல புலிகளின் அழிவுக்கு காரணமான அனைத்தையும் உள்ளேயும் வெளியேயும் செய்தவர்கள். அதனால் தான் புலிகளின் ஒரு பக்கத்தை மட்டுமே முழுமையாக பொறுக்கி எடுத்து வைத்திருக்கிறார்கள்.

நாம் எவ்வளவோ எழுதியும் கெஞ்சியும் அவர்கள் புலிகளை தூற்றுவதையும் எம்மை கோபப்படுத்துவதையும் நிறுத்துவதாக இல்லை என்பதே இவர்களின் நோக்கத்தை தெளிவாக சொல்கிறது 

எனவே நேரம் பொன்னானது.
***

டொட்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
26 minutes ago, Justin said:

தெளிவாகச் சொல்லியிருக்கிறேன்: சேர்த்த காசு பிரதானமாக யுத்தத்திற்கே சென்றது!

சர்வதேசம் நாட்டு அபிவிருத்திக்கென கொடுத்த உதவிகள் தமிழ்மக்களை அழிக்க பயன்படுத்தப்பட்ட போது வராத கேள்வி....
சுனாமியால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கு அனுப்பப்பட்ட நிவாரண உதவிகள் சிங்கள தேசத்திற்கு பரிமாறப்பட்ட போது வராத கேள்வி....
யுத்தத்தின் பின்னர் உலக நாடுகளால் தமிழர் பிரதேசங்களுக்கு மட்டும் என அளிக்கப்பட்ட உதவிகள் ஏனைய பிரதேசங்களுக்கு மாற்றப்பட்டப்பட்ட போது வராத கேள்வி...

மௌனிக்கப்பட்ட  விடுதலைப்புலிகள் மீது மட்டும் எழும் வரும்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.