Jump to content

ஜேர்மனி- நெதர்லாந்தில் கடுமையான பனிப்பெழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für schnee in deutschlAND

Bildergebnis für schnee in deutschlAND

ஜேர்மனி- நெதர்லாந்தில் கடுமையான பனிப்பெழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஜேர்மனி மற்றும் நெதர்லாந்தில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக, அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது.

வடக்கு ஜேர்மனியில் காணப்படும் பனியால் நெதர்லாந்து மற்றும் சில நீண்டதூர இடங்களுக்கு ரயில் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனியில், மைனஸ் 7 டிகிரி செல்சியசுக்கு வெப்பநிலை பதிவாகும் என்றும் பனிப்புயல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பெர்லின், ஹனோவர் உள்பட பல்வேறு இடங்களுக்கு மறு உத்தரவு வரும்வரை ரயில்களை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே நெதர்லாந்தில் 9ஆண்டுகளுக்கு பிறகு கடுமையான அளவு பனிப் பொழிவு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 90கிலோ மீட்டர்வேகத்தில் குளிர்காற்று வீசக்கூடும் என்றும் 20சென்டிமீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

http://athavannews.com/ஜேர்மனி-நெதர்லாந்தில்-க/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பெருமாள் said:

இது அடுத்த லொக் டவுன் .

அடுத்தது இல்லை. இதுதான் உண்மையான லொக்டவுன் மாதிரி கிடக்கு. நான் இருக்கிற இடத்திலை றோட்டிலை கார்,காகத்தை காணேல்லை. கடையளுக்கை சனத்தை காணேல்லை.வெளியிலை சும்மா காத்து வாங்குவம் எண்டுட்டு இறங்கினன். காதுக்கை குளிர் உள்ளட்டு இப்பவும் விண்கூவுது.

- Bildquelle: dpa

- 21லை குளிர் அடிக்குது🥶

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குளிரோடு காத்தில இருக்கும் கொரோனா  கிருமிகள் எல்லாம் அழிஞ்சிடும்.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் மீண்டும் லொக்டவுண் நீடித்துள்ளார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்துவார்கள் போல் இருக்கின்றது. கொரோனா தொற்றுவீதமும் கொஞ்சம் குறைந்திருக்கின்றது.

ஆனால் தண்ணியடிக்கிற இடங்கள் திறக்கிறதுக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் சான்ஸ்சே இல்லை..😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Dicht gedrängt genießen die Konzertbesucher in Wellington die Musik von Six60

Übrigens sind in Neuseeland auch Selfies mit mehreren Freunden wieder möglich – wie hier im Sky Stadium von Wellington

https://www.bild.de/news/ausland/news-ausland/neuseeland-ohne-corona-30-000-fans-bei-rock-konzert-von-six60-75355116.bild.html

நியுஸ்லாந்திலை நடக்கிற இப்பிடி சந்தோச கொண்ட்டாட்டங்களை பாக்க இவங்களுக்கு மண்டை பிளக்குது...:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.