Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தார்  சீமான்..! | seeman introduces naam tamilar 234 candidates in single stage

234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்தது நாம் தமிழர் கட்சி- சென்னை திருவொற்றியூரில் சீமான் போட்டி!!

எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி அறிமுகம் செய்துள்ளது.

சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ. திடலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் அறிமுகம் செய்யப்பட்டனர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இதற்காக 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவு செய்துள்ளார்.

பெண்களுக்கு ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் சரிசமமாகத் தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவரும் சீமான், இந்த தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார்.

இதேவேளை, சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/234-வேட்பாளர்களையும்-ஒரே-மே/

ஒரே மேடையில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த சீமான்... கடலூரில்  போட்டி ! | Naam tamilar 234 Candidates list - Tamil Oneindia

  • Replies 179
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவிடம் பணத்தை வாங்கிவிட்டு, ஒரு தொகுதியிலும்  டெபாசிட் வாங்க முடியாது என்று தெரிந்தும் நிக்க வைத்து அழகு பார்க்கிற பாரு. எனக்கு அந்த டீல் பிடிச்சிருக்கு

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, zuma said:

பாஜகவிடம் பணத்தை வாங்கிவிட்டு, ஒரு தொகுதியிலும்  டெபாசிட் வாங்க முடியாது என்று தெரிந்தும் நிக்க வைத்து அழகு பார்க்கிற பாரு. 

இதற்கு நீங்கள் சாட்சியா??

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

இதற்கு நீங்கள் சாட்சியா??

உதற்கெல்லாம் சாட்சி வைத்துக் கொண்ட செய்வார்கள். சின்ன பையன் மாதிரி கதைக்கிறிங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, zuma said:

உதற்கெல்லாம் சாட்சி வைத்துக் கொண்ட செய்வார்கள். சின்ன பையன் மாதிரி கதைக்கிறிங்கள்.

ஆதாரத்தோடு கதைத்து பழக வேண்டும். எழுந்தமானமாக கதைத்தே இங்கு சிலருக்கு பழகி விட்டது.

அதெப்படி எடப்பாடி பிஜேபியுடன் கை கோர்த்து வெளிப்படையாக நிற்கும் போது ஒரு பதிலும் இல்லை. ( தமிழ் மக்களுக்கு நல்லது நடக்க நினைத்து இருந்தால்) 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

ஆதாரத்தோடு கதைத்து பழக வேண்டும். எழுந்தமானமாக கதைத்தே இங்கு சிலருக்கு பழகி விட்டது.

என்ன மாதிரி ஆதாரங்கள் எதிர்பாக்கின்றிர்கள்?. வாங்கி கணக்கு statements, டீல் பேசப்பட்ட  காணொளி என்பவையா?

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம் ஆதாரமாக இருந்தால் சரி. எனக்கு தெரியும் எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லை என. முயற்சியுங்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நூறு தொகுதி ஜெயிக்கிறவன், முதல்வர் ஆவரவன் எல்லாம்  கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றார்கள்.  வார்டு மெம்பர் கூட வெல்ல முடியாத காட்சி எல்லா தொகுதியிலும்  வேட்பாளர்களை நிறுத்துகின்றார்கள் எனறால் காரணம் என்ன?. உது எல்லாம் உய்தறிவதற்கு rocket science அறிவு தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, zuma said:

கள்ளரோடு கள்ளர் சேர்ந்து ஆட்சி அமைப்பது எல்லாத்துக்கும் ரொக்கட சயன்ஸ் தேவை இல்லை என்பது தெரியாதோ??

அத்தோடு ஆதாரம் இல்லாமல் கதைப்பது தான் சின்ன பிள்ளைதனம். இதற்கும் ரொக்கட் சயன்ஸ் தேவை இல்லை.😊

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் ஸ்டாலினைக் கொளத்தூர் தொகுதியை விட்டிட்டு வாய்மையின் மறுவடிவம் செந்தமிழன் சீமான் அண்ணன் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் நின்று மோதிப்பார்க்கச் சொல்லுங்க. அப்ப தெரியும் அண்ணனின் பலம். தோல்வி பயத்தில் கடைசிவரை ஸ்டாலின் ஒத்துக்கொள்ளவே மாட்டார். 😹

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, வாலி said:

ஸ்டாலினை எதிர்த்து தான் போட்டி போடுவேன்என்று கைய மேல தூக்கி முறுக்கி சொல்லிட்டு திரிஞ்ச சீமானுக்கு ... இப்ப என்ன ஆச்சி?? 😂😂

Edited by zuma

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
36 minutes ago, zuma said:

உதற்கெல்லாம் சாட்சி வைத்துக் கொண்ட செய்வார்கள். சின்ன பையன் மாதிரி கதைக்கிறிங்கள்.

சாட்சிகள் ஆதாரங்கள் இல்லாமல் பழி போடுவது எல்லோராலும் முடியும். இனிவரும் காலங்களில் ஆதாரத்தோடு கருத்தெழுத பழகுங்கள். ஒரு காலத்தில் இப்படித்தான் ஆதாரமில்லாமல் பழி சுமத்தி பழி சுமத்தி இன்று ஈழத்தமிழினத்தை நடுத்தெருவில் விட்டுள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

சாட்சிகள் ஆதாரங்கள் இல்லாமல் பழி போடுவது எல்லோராலும் முடியும். இனிவரும் காலங்களில் ஆதாரத்தோடு கருத்தெழுத பழகுங்கள். ஒரு காலத்தில் இப்படித்தான் ஆதாரமில்லாமல் பழி சுமத்தி பழி சுமத்தி இன்று ஈழத்தமிழினத்தை நடுத்தெருவில் விட்டுள்ளார்கள்.

சுமந்திரன், கருணாநிதி பெட்டி வாங்கின கதைகள் எல்லாம் சொல்லிப்போட்டு, இப்ப இப்படி சொல்லுகின்றிர்களே?. உதைத்தான் சொல்லுகின்றது  தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வாலி said:

முடிந்தால் ஸ்டாலினைக் கொளத்தூர் தொகுதியை விட்டிட்டு வாய்மையின் மறுவடிவம் செந்தமிழன் சீமான் அண்ணன் போட்டியிடும் திருவொற்றியூர் தொகுதியில் நின்று மோதிப்பார்க்கச் சொல்லுங்க. அப்ப தெரியும் அண்ணனின் பலம். தோல்வி பயத்தில் கடைசிவரை ஸ்டாலின் ஒத்துக்கொள்ளவே மாட்டார். 😹

எந்த அரசியல்வாதி வாய்மையின் வடிவம்.  பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, zuma said:

சுமந்திரன், கருணாநிதி பெட்டி வாங்கின கதைகள் எல்லாம் சொல்லிப்போட்டு, இப்ப இப்படி சொல்லுகின்றிர்களே?. உதைத்தான் சொல்லுகின்றது  தனக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி. 

நான் இன்று வரைக்கும்  ஆதாரம் இல்லாவிட்டால் எந்த திரியாயினும் மூக்கை நுழைப்பதில்லை. சுமந்திரன் பற்றிய திரியில் அவரின் அரசியல் நடவடிக்கை சம்பந்தமாக மட்டும் கருத்துக்கள் எழுதியுள்ளேன். பெட்டி வாங்கியது பண பரிமாற்றங்கள் பற்றி இது வரைக்கும் நான் எழுதியதில்லை. மற்றையது கருணாநிதி சம்பத்தப்பட்ட விடயங்கள் ஊரறிந்த விடயம். அதற்குள் வருவீர்களானால் நீங்கள் தான்நாறுவீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, zuma said:

ஸ்டாலினை எதிர்த்து தான் போட்டி போடுவேன்என்று கைய மேல தூக்கி முறுக்கி சொல்லிட்டு திரிஞ்ச சீமானுக்கு ... இப்ப என்ன ஆச்சி?? 😂😂

ஏதோ தமிழ்நாட்டை  விட்டு ஓடி விட்டார் சீமான் என்பது போல் இப்படி ஒரு புளகாங்கிதாம்.😜

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

எந்த அரசியல்வாதி வாய்மையின் வடிவம்.  பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.

யாருமில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, nunavilan said:

எந்த அரசியல்வாதி வாய்மையின் வடிவம்.  பட்டியலிடுங்கள் பார்க்கலாம்.

தானைத்தலைவன் தன்னிகரில்லா தலைவன் மானத்தமிழன் அடங்காத்தமிழன் வீரத்தமிழன்  தமிழின தலைவன் தமிழீழ தலைநகர் தலைவன் மாண்புமிகு அதி உத்தம இரா சம்பந்தன்.😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Bild

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

நான் இன்று வரைக்கும்  ஆதாரம் இல்லாவிட்டால் எந்த திரியாயினும் மூக்கை நுழைப்பதில்லை. சுமந்திரன் பற்றிய திரியில் அவரின் அரசியல் நடவடிக்கை சம்பந்தமாக மட்டும் கருத்துக்கள் எழுதியுள்ளேன். பெட்டி வாங்கியது பண பரிமாற்றங்கள் பற்றி இது வரைக்கும் நான் எழுதியதில்லை. மற்றையது கருணாநிதி சம்பத்தப்பட்ட விடயங்கள் ஊரறிந்த விடயம். அதற்குள் வருவீர்களானால் நீங்கள் தான்நாறுவீர்கள்.

அப்ப நீங்கள் கள்ள மெளனம் சாதித்து விட்டு, இப்ப மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றிர்கள்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, zuma said:

அப்ப நீங்கள் கள்ள மெளனம் சாதித்து விட்டு, இப்ப மற்றவர்களுக்கு அறிவுரை வழங்குகின்றிர்கள்.
 
உங்களுக்கு இருக்கும் எனக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் போல் மற்றவர்களுக்கும் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்

234 தொகுதிகளுக்கு ஆட்பிடிக்கவே இயலாத கட்சின்னு திராவிடக் கட்சிகள் பழித்துத் திரிந்த போதும்.. ஆணுக்குப் பெண் சமனாக 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்திய நாம் தமிழரின் துணிச்சல் பாராட்டத்தக்கதே. 

மேலும்.. சீமானின் முன்னைய ஊடக சந்திப்புக்களின் போதான அறிவிப்பு... தி மு க கும்பலிடத்தில் ஏற்படுத்திய பதட்டம்.. நல்ல நாடிபிடிப்பு. நாம் தமிழர் சரியான திசையில் நோக்கி தமிழகத்தில் தமிழர்களுக்கு அவசியமான திசையில்.. பயணிக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

6 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கு இருக்கும் எனக்கு இருக்கும் கருத்து சுதந்திரம் போல் மற்றவர்களுக்கும் உண்டு. 

வாழ்க உங்கள் கருத்து (சு)தந்திரம். 

Edited by zuma

  • கருத்துக்கள உறவுகள்

234தொகுதியில் துணிந்து நிப்ப‌வ‌ர்க‌ளுக்கு கூட‌ அதிக‌ம் வேர்க்க‌ வில்லை , ப‌த‌ட்ட‌த்தில் எழுதுற‌வ‌ருக்கு தான் அதிக‌ம் வேர்க்குது தாத்தா ?

க‌ட்சியை மெது மெது வ‌ள‌க்க‌ அதுக‌ள் ப‌ட்ட‌ க‌ஸ்ர‌ங்க‌ள் சிந்தின‌ வேர்வைக‌ள் அதிக‌ம் ?

க‌ட‌ந்து செல்லுங்க‌ள் குரைப்ப‌வ‌ர்க‌ள் குரைக்க‌ட்டும் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.