Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரச குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஹரி- மேகன் மார்க்கல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளியானது இளவரசர் ஹரியின் மகனது ஒளிப்படம் !(படங்கள்) - Tamilarul.Net -  24மணி நேரச் செய்திகள்

அரச குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஹரி- மேகன் மார்க்கல்!

பிரித்தானிய இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கல் ஆகிய இருவரும் அரச குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், தங்களது தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள் குறித்தும் பகிர்ந்துக் கொண்டுள்ளனர்.

பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ் ப்ரைம்டைம் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய இரண்டு மணி நேர நேர்காணலில் வெளியிட்ட விபரங்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன.

அரச குடும்ப வாழ்க்கை குறித்த மேகனின் கருத்துக்களை ஓப்ரா கேட்டபோது, ‘நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை. இதை நான் ஹரியிடம் கூறுவதற்கு வெட்கப்படுகிறேன். ஏனெனில் ஹரி சந்தித்த இழப்புகள் அவ்வளவு அதிகம்’ என கூறினார்.

அப்போது நீங்கள் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை கொண்டிருந்தீர்களா என்று ஓப்ரா கேட்டதற்கு, ‘ஆம்!. அது எல்லா பிரச்னைகளையும் தீர்த்துவிடும் என்று நினைத்தேன். தனது இந்த எண்ணத்திலிருந்து விடுபட தேவையான ஆலோசனையை பெற அமைப்பொன்றின் உதவியை நாடும் தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது’ என கூறினார்.

‘தங்களுடைய திருமணம் தேவாலயத்தில் முறைப்படி நடக்கவிருந்த மூன்று நாட்களுக்கு முன்பே எங்களுக்கு திருமணம் நடந்து விட்டது. இதுவரை அது பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. கேட்டர்பரி பேராயரை அழைத்து, உலகின் பார்வைக்குதான் பெரிய திருமணம், ஆனால், எங்களுடைய இணைப்புக்கான திருமணமாக இது நடக்க வேண்டும் என்று கூறினோம்’ இந்த தகவலை முன்பே பதிவு செய்த கலந்துரையாடல் தொகுப்பின்போது மேகன், ஹரி தம்பதி ஓப்ராவிடம் தெரிவித்தனர்.

மேலும், ‘தங்களுக்கு ஆர்ச்சி மகனாக பிறந்தபோது அவரை இளவசர் ஆக அறிவிக்கவில்லை. அந்த தகவல் கிரகித்துக் கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. காரணம் அது பட்டம் பற்றியது மட்டுமல்ல. அவருக்கு பாதுகாப்பு கிடைக்காது என்பதுதான்’ என கூறினார்.

மகாராணியுடனான முதல் சந்திப்பு அனுபவம் பற்றி கேட்டதற்கு, ‘முதல் முறையாக பார்த்தபோது அது ஒரு பெரிய சம்பிரதாயமாக எனக்கு தோன்றவில்லை. ஆனால், ஹரி தன்னிடம் மரியாதை செய்வது எப்படி என தெரியுமா என கேட்டபோது, எப்படி செய்வது என வியந்தேன்’ என கூறினார்.

இதனைத்தொடர்ந்து இளவரசர் ஹரியிடம் வினவிய போது, ‘ஒரு கட்டத்தில் தனது குடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் முற்றிலும் கைவிட்டனர். எனது பாதுகாப்புக்கு நானே பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

என்னுடைய தாய் விட்டுச்சென்ற பணம் என்னிடம் உள்ளது. என்னைப் பொறுத்தவரை, நான் மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். என் மனைவி என் பக்கத்தில் அமர்ந்திருக்க, உங்களுடன் பேசுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என கூறினார்.

அரச குடும்ப பொறுப்புகளிலிருந்து விலகியபோது சந்தித்த விடயங்கள் குறித்து மேலும் பேசிய அவர், இது எங்கள் இருவருக்கும் நம்பமுடியாத அளவிற்கு கடினமாக இருந்தது. ஆனால் குறைந்தபட்சம் நாங்கள் ஒருவருக்கொருவராக இருந்தோம்’ என கூறினார்.

அரச குடும்ப பொறுப்பில் இருந்து விலக என்ன காரணம் என்று ஓப்ரா கேட்டபோது, ‘அது அவசியப்பட்டது. நாங்கள் எல்லா இடங்களுக்கும் தனித்தனியாகவும் இணைந்தும் சென்று உதவி கேட்டோம்’ என்று கூறினார்.

அப்படியென்றால் நீங்கள் உதவி கேட்டு அது கிடைக்காமல் போனதால்தான் அந்த முடிவை எடுத்தீர்களா என ஓப்ரா கேட்டதற்கு, ‘ஆமாம். அப்போதும் கூட நாங்கள் குடும்பத்தை விட்டு விடவில்லை.

அப்போது மேகன், ‘அவர்கள்தான் ஏற்கெனவே உள்ள ஒரு வகை பொறுப்பில், அதாவது அரச குடும்பத்து மூத்த உறுப்பினர் பொறுப்பில் இல்லாதவர்களாக நடந்து கொள்ள வேண்டும் என விரும்பினார்கள்’ என்று தெரிவித்தார்.

https://athavannews.com/அரச-குடும்பத்தினர்-மீது/

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை என்ன நிறத்தில் பிறக்கும் என்பதை தாங்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரண்மனையிலை ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருக்குது போல.....கெலவி மண்டைய போட எல்லாம் கோவிந்தா கோவிந்தா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von Text „ROYAL COMMUNICATIONS Tuesday, 9th March, 2021 THE FOLLOWING STATEMENT IS ISSUED BY BUCKINGHAM PALACE ON BEHALF OF HER MAJESTY THE QUEEN The whole family is saddened to learn the full extent of how challenging the last few years have been for Harry and Meghan. The issues raised, particularly that of race, are concerning. While some recollections may vary, they are taken very seriously and will be addressed by the family privately. ENDS Harry, Meghan and Archie will always be much loved family members.“😁

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அரண்மனையிலை ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருக்குது போல.....கெலவி மண்டைய போட எல்லாம் கோவிந்தா கோவிந்தா

அதுதான் திட்டமே. 

உலகம் முழுவதும் உள்ள அரச குடும்பங்களின் கட்டுப்பட்டிலுள்ள (ஒன்று சேர்க்கும் பண்பை/பலத்தை) நாடுகளை உடைத்து பலவீனமாக்கும் வேலை மிகவும் சூட்டுமமாகவும் வேகமாகவும் நடைபெறுகிறது. 

ஐரோப்பிய யூனியனை உடைப்பது போல..

😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, Kapithan said:

அதுதான் திட்டமே. 

உலகம் முழுவதும் உள்ள அரச குடும்பங்களின் கட்டுப்பட்டிலுள்ள (ஒன்று சேர்க்கும் பண்பை/பலத்தை) நாடுகளை உடைத்து பலவீனமாக்கும் வேலை மிகவும் சூட்டுமமாகவும் வேகமாகவும் நடைபெறுகிறது. 

ஐரோப்பிய யூனியனை உடைப்பது போல..

😀

இது எல்லாத்தையும் செய்யிறது ஆர் ஆக்கள்? 😁

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பன் குதிருக்குள் இல்லை .. 😂

 

"Trudeau (Canadian prime ministet) says now is not the time to talk about scrapping the monarchy"

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செய்திக்கு  ஐம்பது தலையங்கம் போடுவாங்கள் பாருங்கள்  இதுக்கெல்லாம் படித்திருக்கவேண்டும்.  ஆனால் எங்களுக்கு தெரிந்தது  அந்த செய்திகளைப்படிக்க மட்டும்தான். அரசகுடும்பம் செய்தியை விற்று உழைக்கிறார்கள். நாளைக்கு ஒரு நகழ்ச்சி என்றல் எல்லாரும் ஒன்றாய் நிற்ப்பார்கள்.😇😇😇😇😇

  • கருத்துக்கள உறவுகள்

முதல் கோணல், முற்றிலும் கோணல்....

கலியாணத்துக்கு, வாறன் எண்டு சொன்ன, தேப்பன் வரவில்லை. மகள், உலகின் பெரிய அரச குடும்பத்துல சம்பந்தம் வைக்கிற, தான், அடுத்த ராசாவின் சம்பந்தி எண்ட, கதையை, பேப்பர் காரருக்கு வித்து காசு பார்த்தார்... 

இவோ, முதலாவது ஆளை, கடாசினா விதம் மிக மோசமானது எண்டு சொல்லுகினம்.

இந்த ஹரி.... பாவம்.... பிள்ளையை தூக்கிக் கொண்டு ஆள், ஓடிடுது.

பிள்ளை பாசத்திலை ஓடின ஆளை, மடக்கி வைச்சுக் கொண்டு, இரண்டாவது பிள்ளையும் பெறப்போகுது...

லைப் இனி full settle. ஒரு கட்டத்தில், divorce  தான் அம்மணியின் முடிவா  இருக்கும். 

ஆனாலும், அடுத்த பிரிட்டிஷ் மன்னரின் இரண்டாவது மகன்.... தேப்பன்... கைவிடார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, Nathamuni said:

தேப்பன்... கைவிடார்.

தேப்பன்?????     ஆர் ஹரியின்ரை தேப்பனோ...!!!
அங்கையும் ஒரு பெரிய பிரச்சனை இருக்கெல்லோ? 😜

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

தேப்பன்?????     ஆர் ஹரியின்ரை தேப்பனோ...!!!
அங்கையும் ஒரு பெரிய பிரச்சனை இருக்கெல்லோ? 😜

அதையேன் கேக்குறியள்.... தாய்மனிசி வளர்ப்பு சரியில்லை.... அவோவிட தாய், புருசனை துரத்தி.... அது.... பெரிய கதை.... நேரிலை கானேக்க சொல்லுறனே .

உவர் தமிழ் சிறியர்.... சரியான விடுப்பு...கதை காவிக்கொண்டு திரிவார்... கண்டியளே...   😜

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Nathamuni said:

முதல் கோணல், முற்றிலும் கோணல்....

கலியாணத்துக்கு, வாறன் எண்டு சொன்ன, தேப்பன் வரவில்லை. மகள், உலகின் பெரிய அரச குடும்பத்துல சம்பந்தம் வைக்கிற, தான், அடுத்த ராசாவின் சம்பந்தி எண்ட, கதையை, பேப்பர் காரருக்கு வித்து காசு பார்த்தார்... 

இவோ, முதலாவது ஆளை, கடாசினா விதம் மிக மோசமானது எண்டு சொல்லுகினம்.

இந்த ஹரி.... பாவம்.... பிள்ளையை தூக்கிக் கொண்டு ஆள், ஓடிடுது.

பிள்ளை பாசத்திலை ஓடின ஆளை, மடக்கி வைச்சுக் கொண்டு, இரண்டாவது பிள்ளையும் பெறப்போகுது...

லைப் இனி full settle. ஒரு கட்டத்தில், divorce  தான் அம்மணியின் முடிவா  இருக்கும். 

ஆனாலும், அடுத்த பிரிட்டிஷ் மன்னரின் இரண்டாவது மகன்.... தேப்பன்... கைவிடார்.

அப்ப, மேகன் அவர்கள் ஹரியை  பலாத்கார பாலியல் வல்லுறவு கொண்டாரா?. ஊரிலே ninety பழசுகள் கதைக்கிற மாதிரி கதைக்கிறீர்கள்.நீங்கள் ஒரு கிசுகிசு( மஞ்சள்)  பத்திரிகை ஒன்று ஆரம்பிக்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்
Just now, zuma said:

அப்ப, மேகன் அவர்கள் ஹரியை  பலாத்கார பாலியல் வல்லுறவு கொண்டாரா?. ஊரிலே ninety பழசுகள் கதைக்கிற மாதிரி கதைக்கிறீர்கள்.நீங்கள் ஒரு கிசுகிசு( மஞ்சள்)  பத்திரிகை ஒன்று ஆரம்பிக்கலாம்

உங்களுக்கு, வேறை பிரச்சனை வர தொடங்கி விட்டது... 

தயவு செய்து, பதிய முதல், இது சரியானது தானா  என்று ஒருக்கா பார்க்க கூடாதோ?

பிறகு மன்னிப்பு கேக்கிறதிலும் பார்க்க.... அது நல்லது.

இங்கே பெண்களும் இருக்கிறார்கள். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

உங்களுக்கு, வேறை பிரச்சனை வர தொடங்கி விட்டது... 

தயவு செய்து, பதிய முதல், இது சரியானது தானா  என்று ஒருக்கா பார்க்க கூடாதோ?

பிறகு மன்னிப்பு கேக்கிறதிலும் பார்க்க.... அது நல்லது.

இங்கே பெண்களும் இருக்கிறார்கள். நன்றி.

நீங்கள் பெண் இனத்தை மலினமான கதைத்து விட்டு என்னை குற்றம் சாட்டுகின்றிர்கள்.
மற்றவர்களை குற்றம் சாட்ட முன் தங்களை ஒருமுறை கண்ணாடியில் பார்க்கவும்.

Quote

இவோ, முதலாவது ஆளை, கடாசினா விதம் மிக மோசமானது எண்டு சொல்லுகினம்.
பிள்ளை பாசத்திலை ஓடின ஆளை, மடக்கி வைச்சுக் கொண்டு, இரண்டாவது பிள்ளையும் பெறப்போகுது...
தாய்மனிசி வளர்ப்பு சரியில்லை.... 
அவோவிட தாய், புருசனை துரத்தி.... அது.... பெரிய கதை

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, zuma said:

நீங்கள் பெண் இனத்தை மலினமான கதைத்து விட்டு என்னை குற்றம் சாட்டுகின்றிர்கள்.
மற்றவர்களை குற்றம் சாட்ட முன் தங்களை ஒருமுறை கண்ணாடியில் பார்க்கவும்.

 

🤦‍♂️

மீண்டும், மீண்டும்.... உங்களுடன் விவாதம் செய்யும் தகுதி, எனக்கு இல்லை என்று சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது. நன்றி. 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Der Buckingham Palace wird renoviert – ganze 10 Jahre lang!

நிறவெறி குற்றச்சாட்டு தொடர்பில் கவனம் செலுத்தும் அரண்மனை!

ஹரி மற்றும் மேகன் ஆகியோரால் சுமத்தப்பட்ட நிறவெறிக் குற்றச்சாட்டு தொடர்பில் கவனம் செலுத்துவதாக Buckingham அரண்மனை தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை மிகவும் தீவிரமான பிரச்சினையாக கருதி செயற்படவுள்ளதாகவும் அரண்மனை கூறியுள்ளது.

முன்னைய நிகழ்வுகளை நினைவுகூருவது மாறுபட்டிருந்தாலும், அவை தனிப்பட்ட முறையில் அறிக்கையிடப்பட்டிருக்க வேண்டுமென அரண்மனை குறிப்பிட்டுள்ளது.

குழந்தையினுடைய நிறம் எவ்வாறிருக்கும் என ஹரியிடம் அவருடைய குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்ததாக, நேர்காணல் ஒன்றில் சீமாட்டி மேகன் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், அரண்மனை வௌியிட்டுள்ள அறிக்கையில் சீமாட்டி மேகன் மீது அரச குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த அன்பு கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹரி மற்றும் மேகன் ஆகியோர் வழங்கிய நேர்காணலையடுத்து ஏற்பட்ட நெருக்கடி நிலையை தொடர்ந்து, அரச குடும்பத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையிலான அவசர கலந்துரையாடலொன்று நேற்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றிருந்தது.

இந்தக் கலந்துரையாடலையடுத்து, இளவரசர் மற்றும் சீமாட்டி ஆகியோரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையிலான குறித்த அறிக்கையை Buckingham அரண்மனை வௌியிட்டிருந்தது.

http://athavannews.com/நிறவெறி-குற்றச்சாட்டு-தொ/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.