Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாநில உரிமைகளை மத்திய அரசிடம் பறி கொடுத்துவிட்ட திராவிட கட்சிகள்: சீமான் கடும் சாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாநில உரிமைகளை மத்திய அரசிடம் பறி கொடுத்துவிட்ட திராவிட கட்சிகள்: சீமான் கடும் சாடல்

seeman-slams-dmk-aiadmk சீமான்: கோப்புப்படம்

மயிலாடுதுறை

மாநில தன்னாட்சி என பேசி வரும் திராவிட கட்சிகள் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் பறிகொடுத்து விட்டன என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோவில் பகுதியில் அக்கட்சியின் வேட்பாளர் காளியம்மாளை ஆதரித்து நேற்று (மார்ச் 17) மாலை சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய சீமான், "திராவிட கட்சிகள் மாநில தன்னாட்சி என பேசி வருகின்றன. ஆனால், கல்வி இல்லை, மருத்துவம் இல்லை, எல்லா உரிமைகளையும் மத்திய அரசிடம் பறிகொடுத்துவிட்டனர். அதனால், இந்த நாடும் நாட்டு மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்றால், நாம் தமிழர் கட்சியை ஆதரிக்க வேண்டும்" என சீமான் பேசினார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்த தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தங்கள் ஆட்சியில் தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியன இலவசமாக கிடைக்கும் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/647245-seeman-slams-dmk-aiadmk.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டுப் பாரு ஓட்டை; அப்புறம் பாரு நாட்டை; தலைசிறந்த மாநிலமாகத் தமிழகத்தை மாற்றுவேன்: சீமான்

put-the-vote-then-look-at-your-country-i-will-make-tamil-nadu-the-best-country-in-the-world-seeman  

எப்படியோ போகட்டும் என்று விட முடியாது. சினிமா எடுத்துப் பிழைத்துக் கொள்ளலாம். அதில் வருமானம் வரும். ஆனால், இனமானம்? வருமானத்தை விட இனமானம் பெரிது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

கடலூரில் சீமான் அவரது கட்சி வேட்பாளரை ஆதரித்துப் பேசியதாவது:

“நான் ஒரு கோட்பாட்டைக் கொண்டவன். வாழுகிற பூமிக்கு அரசியல் செய்யாமல் வணங்குகிற சாமிக்கு அரசியல் செய்ய ஒரு கூட்டம் கிளம்பியுள்ளது. நாட்டைச் சரி செய்ய வேண்டுமானால் உங்கள் கையில் உள்ளது ஒரு வாக்கு. அதை விவசாயிக்குப் போடுங்கள். 'வெற்றிக்கொடி கட்டு' படத்தில் ஒரு காமெடி சீனில் வடிவேலு சொல்வார், “போட்டாச்சு போட்டாச்சு” என்று. நீங்களும் அதிமுகவினர் வந்தால், 'போட்டாச்சு போட்டாச்சு' என்று சொல்லிட்டு ஒரு தடவை எங்களுக்கு வாக்கு செலுத்துங்கள்.

போட்டுப் பாரு ஓட்டை; அப்புறம் பாரு உன் நாட்டை. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றிப் படைப்பேன். பெருங்கனவு கொண்டிருந்த பெருந்தலைவனின் மகன் நான். 200 ஆண்டுகளுக்குப் பிறகு எம் தமிழ் இனம் எப்படி இருக்கும் எனக் கனவு கண்ட தலைவனின் மகன் நான்.

வருமானத்தை விட என் இனமானம் பெரிது என்பதால் நான் இங்கு பேசிக் கொண்டிருக்கிறேன். உடம்பெல்லாம் அரிக்கிறது, வெயில். ஆனால், இங்கு நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். ஏன்? உங்களுடன் பிறந்துவிட்டேன். நீங்கள் என்னைப் பெற்றுப் போட்டுவிட்டீர்கள். எப்படியோ போகட்டும் என்று விட முடியாது. சினிமா எடுத்துப் பிழைத்துக் கொள்ளலாம். அதில் வருமானம் வரும். ஆனால், இனமானம்? வருமானத்தை விட இனமானம் பெரிது”.

இவ்வாறு சீமான் பேசினார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/646785-put-the-vote-then-look-at-your-country-i-will-make-tamil-nadu-the-best-country-in-the-world-seeman.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரி நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிமுகம்: 14 ஆண்; 14 பெண் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்

pudhuchery-naam-thamizhar-candidates-introduced-by-seeman படம்: சாம்ராஜ்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை நாம் தமிழர் கட்சி தனித்து எதிர்கொள்கிறது. புதுச்சேரியில் உள்ள 28 தொகுதிகளிலும் இக்கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டுள்ளது. 14 பெண்கள், 14 ஆண்கள் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

இந்நிலையில், புதுச்சேரி ஏஎப்டி திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று (மார்ச் 16) இரவு நடைபெற்றது.

வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

வேட்பாளர்களின் விவரம்:

1.திருபுவனை-ரஞ்சித்
2.தட்டாஞ்சாவடி-ரமே‌‌ஷ்
3.லாஸ்பேட்டை-நிர்மல் சிங்
4.காலாப்பட்டு-காமராஜ்
5.உருளையன்பேட்டை-கருணாநிதி
6.நெல்லித்தோப்பு-சசிகுமார்
7.முதலியார்பேட்டை-வேலவன்
8.அரியாங்குப்பம்-சுந்தரவடிவேலு
9.மணவெளி-இளங்கோவன்
10.ஏம்பலம்-குமரன்
11.பாகூர்-ஞானபிரகா‌‌ஷ்
12.திருநள்ளாறு-சிக்கந்தர் பாட்‌ஷா
13.காரைக்கால் (தெற்கு)-மரி அந்துவான்
14.நிரவி திருப்பட்டினம்-முகமது யூசுப்
.15.மண்ணாடிப்பட்டு-சித்ரா
16.ஊசுடு-கீதா பிரியா
17.மங்களம்-பாரத் கலை
18.வில்லியனூர்-பிரவீனா
19.உழவர்கரை-பிரியா
20.கதிர்காமம்-சுபஸ்ரீ
21.இந்திரா நகர்-தேவிகா
22.காமராஜ் நகர்-சர்மிளா பேகம்
23.முத்தியால்பேட்டை-பரிதாபேகம்
24.ராஜ்பவன்-அந்தோணி சர்மிளா
25.உப்பளம்-தேவி பிரியா
26.நெட்டப்பாக்கம்-கவுரி
27.காரைக்கால் நெடுங்காடு-நிவேதா
28.காரைக்கால் வடக்கு-அனுசுயா

வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய சீமான், "புதுச்சேரியில் இத்தனை ஆண்டுகள் ஆண்ட கட்சிகள் ஏன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றத் தரவில்லை? மாஹே, ஏனாம் வேண்டாம். மாநில உரிமை வேண்டும். மாநில உரிமையை மறுக்கின்ற கட்சிகளோடு கூட்டணி வைக்கவில்லை. உங்களை நம்பித்தான் தனித்துப் போட்டியிடுகிறோம்" என்றார்.

காங்கிரஸ் கதர் அரசியலும், பாஜக காவி அரசியலும் செய்கின்றன: புதுச்சேரி வேட்பாளர்களை அறிமுகம் செய்து சீமான் பேச்சு

seeman-speech-in-pudhuchery படம்: சாம்ராஜ்

புதுச்சரி

காங்கிரஸ் கதர் அரசியலும், பாஜக காவி அரசியலும் செய்கின்றன என புதுச்சேரியில் நடந்த வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் சீமான் பேசியுள்ளார்.

புதுச்சேரி ஏஎப்டி திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நேற்று (மார்ச் 16) இரவு நடைபெற்றது.

இதில், மாநிலம் முழுவதும் போட்டியிடும் 28 தொகுதிகளின் வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், ‘‘நாங்கள் இனவெறி அரசியல் செய்யவில்லை. இன உரிமை அரசியல் செய்கிறோம். எங்களை எதிர்ப்பவர்கள்தான் இனவெறி அரசியல் செய்கின்றனர். மாட்டுக்கும் உயிர் தந்த நீதி தவறாத மக்கள் நாங்கள். ஜனநாயக தமிழகத்தில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் எதிர்த்துப் பேச முடியாமல் வெளிநடப்பு செய்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவையில் உங்கள் மகன் அமர்ந்து பேசும்போது, நான் யார் என்பது தெரியும்" என்று பேசினார்.

ஸ்டாலின் மீது விமர்சனம்:

"தமிழகத்தில் ஆகப்பெரும் சிந்தைனையாளன் தொடங்கிய இயக்கம், பேரறிஞர் தொடங்கிய கட்சி கடைசியில் யாரிடம் சிக்கிக்கொண்டு தத்தளிக்கிறது பாருங்கள். மோசமான மூடநம்பிக்கை என்பது பார்த்துப் படிக்கும்போது பல தவறுகள் செய்த ஒருவர் நல்லாட்சி தருவார் என்று நம்புவதுதான்" என்று கூறியதோடு பாடல் ஒன்றைப் பாடி ஸ்டாலினை சீமான் விமர்சித்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

''பேரறிஞர்கள், பெருமக்கள் வாழ்ந்த மண்ணில் நாங்கள் பிறந்து இறந்து கொண்டிருக்கிறோம். மற்ற இனங்களுக்கு எப்போதாவது போராட்டம் வரும், தமிழ் தேசிய இன மக்களுக்கு போராட்டம்தான் வாழ்க்கையாக மாறிவிட்டது. சிதைந்து அழிந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழப் போராடித்தான் பெற்றாக வேண்டும்.

மக்களைப் பற்றி துளியும் சிந்திக்காத கட்சிகள் காங்கிரஸ், பாஜக. தமிழகம், புதுச்சேரியில் பாஜக வந்துவிடும் என்று பூச்சாண்டி காட்டுகின்றனர். காங்கிரஸ், பாஜக என் இனத்துக்கு எதற்கு? என் இனத்தின் வளத்தையும், உரிமையையும் மீட்க நின்றுள்ளார்களா?

பாஜக மத்தியில் இவ்வளவு வலிமையோடு இருக்கக் காரணம் காங்கிரஸ். சகிக்க முடியாத ஊழலைச் செய்ததே. மதவாதத்துக்கு எதிரான கட்சி காங்கிரஸ் என்று நம்பிக்கொண்டிக்கின்றனர். ஆனால் பாஜக, காங்கிரஸ் இரண்டுமே ஒன்றுதான். தனியார்மயம், தாராளமயம், உலக மயம் எல்லோமே அவர்களுக்கு ஒன்றுதான்.

வெளியுறவுக் கொள்கை, கல்விக் கொள்கை உள்ளிட்ட அனைத்துமே இவ்விரு கட்சிகளுக்கும் ஒன்றுதான். காங்கிரஸ் கட்சி கதர் அரசியல் செய்கிறது. பாஜக காவி அரசியல் நடத்துகிறது.

நீட், ஜிஎஸ்டி, சிஏஏ உள்ளிட்டவற்றைக் கொண்டு வந்தது காங்கிரஸ், அதனைச் செயல்படுத்தியது பாஜக. இவர்கள் இருவருக்கும் என்ன வித்தியாசம். 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

அது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல, ஒட்டுமொத்தமானவர்களின் பிரச்சினை. மீனவன், மாணவன், விவசாயிகள் பிரச்சினைகளை அவரவர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால் நீ எதற்குதான் வருவாய். காங்கிரஸ், பாஜகவை எத்தனை நாட்கள் நம்பி ஏமாறுவீர்கள்?

காங்கிரஸ், பாஜக கட்சிகளிடம் என்ன வித்தியாசத்தைக் கண்டோம். இரண்டு கட்சிகளும் ஒன்றுதான். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். விழிப்புணர்வுடனும், எச்சரிக்கையுடம் இருக்க வேண்டும். பேராபத்தை நோக்கி நாட்டை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்பே நான் சொன்னேன் இந்தியா இப்போது விற்பனைக்கு என்று. இரண்டு கட்சிகளும் ஏலம் விட்டுவிட்டனர். மாநில முதல்வர்கள் ‘‘அனைத்திந்திய தரகர்களாகவும்’’ பிரதமர் ‘‘சர்வதேச தரகராகவும்’’ நம் நாட்டை உலக நாடுகளின் அடிமையாக்குவதுதான் இவர்களின் பொருளாதாரக் கொள்கை.

பொருளாதாரத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சந்தை முதலாளிகளுக்கு தரகு வேலை பார்க்க முடியுமே தவிர, தலைவனாக இருந்து நாட்டில் உள்ளவர்களுக்கு சேவை செய்ய முடியாது.

பசுமைப் பொருளாதாரத்தில் மட்டுமே நாட்டையும், பொருளாதாரத்தையும் வாழ வைக்க முடியும். இந்த 5 ஆண்டுகளில் அதானி இந்தியா, அம்பானி இந்தியா என்று வந்துவிடும். தமிழகம், புதுச்சேரி அரசுகள் மக்களைப் படிக்க வைக்காமல், குடிக்க வைக்கிறது. அரசியல்வாதிகளிடம் உள்ள பணத்தில் 50 ஆண்டுகள் வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்ய முடியும்.

புதுச்சேரியில் கிரண்பேடியை அனுப்பி நாராயணசாமியைப் பாடாய்ப்படுத்திவிட்டனர். எங்களைப் போன்றோர் உட்கார்ந்திருந்தால் என்ன நடத்திருக்கும் தெரியுமா?

புதுச்சேரியில் இத்தனை ஆண்டுகள் ஆண்ட கட்சிகள் ஏன் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றத் தரவில்லை? மாஹே, ஏனாம் வேண்டாம். மாநில உரிமை வேண்டும். மாநில உரிமையை மறுக்கின்ற கட்சிகளோடு கூட்டணி வைக்கவில்லை. உங்களை நம்பித்தான் தனித்துப் போட்டியிடுகிறோம்.

நாடும், மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சி ஆள வேண்டும். பலரின் ஆட்சியில் வாழ்ந்துவிட்டீர்கள், எங்களுடைய ஆட்சியில் ஒரு முறை வாழ்ந்து பாருங்கள். புதுச்சேரி மாநிலத்தில் போட்டியிடும் எங்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்''.

இவ்வாறு சீமான் பேசினார்.

https://www.hindutamil.in/news/breaking-news/646758-pudhuchery-naam-thamizhar-candidates-introduced-by-seeman-1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸும் பாஜகவும் ஒரே கொள்கை கொண்ட கட்சிகள்: சீமான்

tn-election  

சிவகங்கை

காங்கிரஸும் பாஜகவும் இரு வேறு கட்சிகள்தான். ஆனால், ஒரே கொள்கை கொண்ட கட்சிகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிவகங்கையில் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து சீமான் கூறும்போது, “கச்சத்தீவைத் திரும்பப் பெறுவது தொடர்பான வழக்கில், கச்சத்தீவைக் கொடுத்தது கொடுத்ததுதான். அதனைத் திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்று காங்கிரஸ் கூறியது. அடுத்து பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது. திரும்பவும் கச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக அரசு வழக்குப் போட்டது. பாஜகவும் அதைத்தான் கூறியது.

பாஜகவும் காங்கிரஸும் ஒரே கொள்கையைக் கொண்ட கட்சிகள். விவசாயிகள் கடனாளி ஆகக் கூடாது என்று நீங்கள் நினைத்தால் தயவுசெய்து எங்களுக்கு வாக்களியுங்கள்" என்று தெரிவித்தார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தங்கள் ஆட்சியில் தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியன இலவசமாகக் கிடைக்கும் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/647718-tn-election.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

50 ஆண்டுகளாக நீங்கள் செய்த பாவங்களுக்கு எங்களுக்கு ஓட்டு போட்டு பரிகாரம் தேடிக்கொள்ளுங்கள்: தேவகோட்டையில் சீமான் பிரச்சாரம்

seaman-campaign  

தேவகோட்டை

50 ஆண்டுகளாக நீங்கள் செய்த பாவத்துக்கு எங்களுக்கு வாக்களித்துப் பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள், என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் துரைமாணிக்கம் (காரைக்குடி), கோட்டைகுமார் (திருப்பத்தூர்) ஆகியோரை ஆதரித்து தேவகோட்டையில் சீமான் பேசியதாவது:

நாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு ஒரு மீனவரைக்கூட கொல்லவில்லை, என பாஜகவினர் கூறுகின்றனர். சமீபத்தில்கூட 4 மீனவர்களை இலங்கைக்காரர்கள் கொன்றார்கள். அதைக் கண்டித்து பிரதமரோ, ஹெச்.ராஜாவோ ஒரு வார்த்தைகூட பேசியது கிடை யாது. ஏன் காங்கிரஸ் தலைவர் கூட கண்டிக்கவில்லை. ஆனால், நமது வீட்டு வாசலில் வாக்குக்காக நிற்கின்றனர்.

காவிரி நதி நீர் உரிமை, முல்லை பெரியாறு பிரச்சினைகளில் காங்கிரஸ், பாஜக நிலைப்பாடு என்ன என்பதை மக்கள் கேட்க வேண்டும். இந்த மண்ணுக்கும், மக்களுக்கும் பிரச்சினை என்றால் முதல் மகனாக ஓடி வந்து நிற்பேன். நாட்டில் கட்சிகளே இருக்கக் கூடாது. அதேபோல் ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை ஒழித்தால்தான் மத்தியில் கூட்டாட்சி, தமிழகத்தில் தமிழன் ஆட்சி மலரும். அனைத்தையும் தனியாருக்கு தாரைவார்த்ததால் வளரும் நாடுகள் பட்டியலில் இருந்தே இந்தியாவை தூக்கி விட்டனர்.

நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ்தான். நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்தால்தான் தகுதி என்றால், ஏற்கெனவே நாடு சுதந் திரம் அடைந்ததில் இருந்து மருத்துவர்கள் ஆனவர்கள் தகுதியற்றவர்களா? அவர்களை தகுதி நீக்கம் செய்துவிடுவார்களா?

ஊழலில் தலைசிறந்த நாடுகளில் ஒன்று நைஜீரியா, மற்றொன்று இந்தியா. கச்சத்தீவை எடுத்துக் கொடுக்கும்போது ஒன்றும் செய்யாமல் இப்போது மீட்போம் என்கின்றனர். ஆனால், கச்சத்தீவை கொடுத்தது கொடுத்ததுதான் என காங்கிரஸ், பாஜக கூறுகின்றன. இதன்மூலம் இரு கட்சிகளும் வேறு, வேறாக இருந்தாலும் கொள்கை ஒன்று தான்.

கச்சத்தீவு இந்தியாவின் சொத்து அல்ல, தமிழரின் சொத்து. ஊழல், லஞ்சம் பெறுபவர்களுக்கு மட்டுமல்ல அவர்களுக்கு வாக்களிப் பவர்களும் சாபத்துக்கு உள்ளாக நேரிடும். 50 ஆண்டுகளாக நீங்கள் செய்த பாவத்துக்கு எங்களுக்கு வாக்களித்துப் பரிகாரம் தேடிக் கொள்ளுங்கள், என்று கூறினார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/647489-seaman-campaign-1.html

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி இருக்கும் வரை பாஜக வராது; அதை நம்புகிற வீரர்கள் எனக்கு வாக்களியுங்கள்: சீமான் பேச்சு

the-bjp-will-not-come-as-long-as-we-are-the-naam-tamilar-party-vote-for-me-players-who-believe-in-it-seaman  

ராமநாதபுரம்

நாம் தமிழர் கட்சி இருக்கும் வரை பாஜக வராது. அதை நம்புகிற வீரர்கள் எனக்கு வாக்களியுங்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்துக் களம் காண்கின்றன. இதற்கிடையே நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் ஜவஹர் (திருவாடானை), சசிகலா (பரமக்குடி), கண்.இளங்கோ (ராமநாதபுரம்), ரஹ்மத் நிஷா (முதுகுளத்தூர்) ஆகியோருக்கு ஆதரவாக ராமநாதபுரம் அரண்மனை முன் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், ''22 ஆண்டுகளைத் திமுகவுக்குக் கொடுத்துவிட்டீர்கள். 20 ஆண்டுகளை அதிமுகவுக்கும் கொடுத்துவிட்டீர்கள். விடுதலை பெற்ற இந்தியாவைக் காங்கிரஸ் 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆள அனுமதித்து விட்டீர்கள். அவர்கள் செய்த சகிக்க முடியாத ஊழல் மற்றும் லஞ்சத்தால்தான் பாஜக என்னும் கட்சியே வந்தது. இல்லையென்றால் வந்திருக்காது.

கச்சத்தீவு மற்றும் காவிரி பிரச்சினைகளில் காங்கிரஸும், பாஜகவும் ஒரே கருத்துடன்தான் செயல்படுகின்றன. மத்திய அரசு, நிறுவனங்கள் அனைத்தையும் தனியார் மயமாக்கி அதானி, அம்பானிகளிடம் பிரித்துக் கொடுத்துவிட்டது.

நானும் நாம் தமிழர் கட்சியும் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வராது. அதை நம்புகிற வீரர்கள் எனக்கு வாக்களியுங்கள். இதைச் சொல்ல நான் பயப்படப் போவதில்லை. இந்த நிலத்தை என் இனத்தை, என்னைத் தாண்டித்தான் ஒருவர் தொட முடியும். இது சத்தியம்'' என்று சீமான் தெரிவித்தார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/648142-the-bjp-will-not-come-as-long-as-we-are-the-naam-tamilar-party-vote-for-me-players-who-believe-in-it-seaman-1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்: சீமான் பேச்சு

seeman-s-speech  

தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் வேட்பாளர்களுக்காக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் சீமான் பேசும்போது, ''வலிமையான ஆயுதம் ஓட்டு. நாம் நோட்டை வாங்கிக் கொண்டு ஓட்டை விற்கிறோம். அவர்கள் நாட்டை விற்கிறார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்று நாம் அனைவரும் பேசுகிறோம். ஆனால், யார் கொடுக்கிறார்கள், வாங்குகிறார்கள்? ஊழலைச் சட்டம் போட்டுத் திருத்த முடியாது. ஒவ்வொருவரும் திருந்த வேண்டும்.

என் கையில் ஆட்சி வந்துவிட்டால் என் ஆட்சியில் ஊழல் செய்தால் பணியிட மாற்றம், தற்காலிகப் பணி நீக்கம் எல்லாம் கிடையாது. நேரடியாக டிஸ்மிஸ்தான். பத்து தலைமுறைகளுக்கு அவர்களுக்கு அரசுப் பணி கிடைக்காது.

குப்பையை அதற்குரிய இடங்களில் கொட்ட வேண்டும். நீங்கள் மாடியிலிருந்து கொட்டினால் அங்கு சிசிடிவி கேமரா வைத்து கண்காணிக்கப்பட்டு உங்கள் நீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவை நிறுத்தப்படும். நீங்கள் குடியுரிமையை இழந்துவிட்டீர்கள் என்று கூறப்படும். இறங்கி வந்துதான் குப்பைகளைக் கொட்ட முடியும். இப்படி இல்லை என்றால் செதுக்க முடியாது. தன்னலமற்ற, அன்பான, சர்வாதிகார ஆட்சி முறையால் மட்டுமே ஒரு தேசத்தை வளர்த்தெடுக்க முடியும்” என்று பேசினார்.

 

 

https://www.hindutamil.in/news/tamilnadu/649062-seeman-s-speech-1.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எண்ணூர் துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால் சென்னை மூழ்கும்: சீமான் எச்சரிக்கை

seeman-speech  

எண்ணூர் துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால் தலைநகரான சென்னை மூழ்கும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருக்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, “ சென்னையில் வெள்ளம் ஏற்படும்போது, கொசஸ்தலை ஆறு, பழவேற்காட்டில் உள்ள முகத்துவாரத்தில் நீர் சென்று கலக்கிறது. இந்த நிலையில் எண்ணூர் துறைமுகத்தை விரிவாக்கம் செய்தால் இப்பகுதிகளில் மட்டும் பாதிப்பு ஏற்படாது. எண்ணூர் துறைமுக விரிவாக்கம் செய்தால் தலைநகர் சென்னை மூழ்கும். மேலும், தனியார் முதலாளிகளுக்கு மீனவர்கள் நலனில் அக்கறை இல்லை.’’ எனக் கூறினார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தங்கள் ஆட்சியில் தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியன இலவசமாகக் கிடைக்கும் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/649498-seeman-speech.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ள திருவொற்றியூர்

seeman-in-thiruvottriyur  

தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு மிக அருகில் கடற்கரையையொட்டி அமைந்துள்ளது திருவொற்றியூர் தொகுதி. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுவதால் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது.

கே.பி.பி.சங்கர் (திமுக), கே.குப்பன் (அதிமுக), சீமான் (நாம் தமிழர் கட்சி), எம்.சவுந்திரபாண்டியன் (அமமுக), டி.மோகன் (மக்கள் நீதி மய்யம்) உள்பட 22 பேர் களத்தில் உள்ளனர். சீமான் களத்தில் இருப்பதாலோ என்னவோ தொடக்கம் முதலே பிரச்சாரம் அனல் பறக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு திருவொற்றியூர் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை என்று திமுக வேட்பாளர் கே.பி.பி.சங்கரும், மெட்ரோ ரயில் உள்பட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருப்பதாகக் கூறி அதிமுக வேட்பாளர் கே.குப்பனும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவேன் என்று உறுதி அளித்து சீமான் பிரச்சாரம் செய்கிறார்.

திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதி, திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட சென்னை மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதிகள் அடங்கியது. வடசென்னை மக்களவைத் தொகுதியில் அடங்கியுள்ள திருவொற்றியூர் தொகுதியின் எல்லைகளாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், பொன்னேரி ஆகிய தொகுதிகள் உள்ளன.

இத்தொகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. எண்ணூர் அனல் மின் நிலையம், அசோக் லேலண்டு, எம்.ஆர்.எப் டயர், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மெட்ராஸ் உரத் தொழிற்சாலை, என்பீல்டு மோட்டார் சைக்கிள் என ஏராளமான கனரக தொழிற்சாலைகள் உள்ளன. மணலியில் ஏராளமான ரசாயனத் தொழிற்சாலைகள் இருக்கின்றன.

மீனவர், வன்னியர், ஆதிதிராவிடர், நாடார், முதலியார் உள்ளிட்ட சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர். இத்தொகுதியில் நடைபெற்ற 12 தேர்தல்களில் தி.மு.க. 6 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

2016-ம் ஆண்டு தேர்தலில் கே.பி.பி.சாமி (தி.மு.க.) 82,205 வாக்குகள் பெற்று வென்றார். பி.பால்ராஜ் (அ.தி.மு.க.) 77,342, ஏ.வி.ஆறுமுகம் (தே.மு.தி.க.) 13,463, ஆர்.கோகுல் (நாம் தமிழர்) - 3,313 ஆகியோர் தோல்வியைத் தழுவினர். கே.பி.பி.சாமி கடந்தாண்டு மறைந்த நிலையில், தற்போது திருவொற்றியூர் தொகுதி காலியாக உள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இளம் தலைமுறையினர் வாக்குகளைக் கவர்வதில் முனைப்புடன் செயல்படுகிறார்.

2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சீமான் கடலூர் தொகுதியில் போட்டியிட்டு 12,497 (7.24 சதவீதம்) வாக்குகள் பெற்றார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் திருவொற்றியூர் தொகுதியை உள்ளடக்கிய வடசென்னை தொகுதியில் காளியம்மாள் போட்டியிட்டார். அவர் திருவொற்றியூர் தொகுதியில் மட்டும் 15,748 வாக்குகள் பெற்றார். இந்நிலையில், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான், தமிழ் தேசியம் முழக்கத்துடன் களம் காண்கிறார். பிற மாநிலத்தவரும் வசிக்கும் இத்தொகுதியில் அவர்கள் வாக்குகளைப் பெற சீமான் பகீரத பிரத்யனம் செய்ய வேண்டியதிருக்கும்.

அமமுக வேட்பாளர் எம்.சவுந்திரபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் பிரச்சாரம் செய்யும்போது "சவுந்தரபாண்டியன் ஒரு தொழிலதிபர், அவர் சராசரி அரசியல்வாதியைப் போல அராஜகம் செய்யமாட்டார். மக்களில் ஒருவராக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார். அதனால் அவருக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அவரும் அதுபோலவே வீதி, வீதியாக, வீடு, வீடாக வாக்கு சேகரிக்கிறார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.டி.மோகன், ஒட்டுமொத்த மாற்றத்துக்காகவும், ஊழலற்ற நிர்வாகத்தை கொடுப்பதற்காகவும் களம் இறங்கியுள்ள கமல்ஹாசனின் கரத்தை வலுப்படுத்த தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரி வாக்கு சேகரித்து வருகிறார்.

22 பேர் போட்டியிட்டாலும் அதிமுக, திமுக, சீமான் உள்ளிட்ட 3 பேருக்கு இடையில்தான் போட்டி கடுமையாக உள்ளது. இதனால் யார் வென்றாலும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சீமான் அதிக வாக்குகளைப் பிரித்து, வெற்றி பெற வேண்டியவரை தோற்கடிப்பாரா அல்லது தோற்க வேண்டியவரை வெற்றி பெறச் செய்வாரா அல்லது சீமானே வெற்றி பெறுவாரா என்பது மே 2 -ம் தேதி தெரியவரும்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/649451-seeman-in-thiruvottriyur-2.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணி அமைத்தால் ஊழல், லஞ்சத்தை ஒழிக்க முடியாது; தனித்து வென்றால்தான் சாத்தியம்- சீமான் சிறப்புப் பேட்டி

seeman-interview  

திராவிடக் கட்சிகள் உள்பட யாருடன் கூட்டணி அமைத்தாலும் ஊழல், லஞ்சத்தை ஒருபோதும் ஒழிக்க முடியாது. தனித்தன்மையோடு தனித்து நின்று வென்றால்தான் சாத்தியம் என்கிறார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

தமிழக அரசியல் களத்தில் வலுவான சக்தியாக உருவெடுத்திருக்கும் சீமான், "இந்து தமிழ் திசை" நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி வருமாறு:-

நீங்கள் சந்திக்கும் 3-வது தேர்தல். இதுவரை 4 சதவீதம் வாக்குகளுக்கு மேல் பெற முடியவில்லை. எந்த நம்பிக்கையில் ஆட்சி அமைப்போம் என்கிறீர்கள்?

உள்ளாட்சி தேர்தலில் 12 சதவீதம் வாக்குகள் எடுத்துள்ளோம். ஆனால், அதை தேர்தல் ஆணையம் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மேற்கு வங்கத்தில் மம்தா அரசியலுக்கு வந்தார், தோற்றார். பின்னர் இரண்டு தடவை முதல்வர் ஆனார். தனித்து நின்று போராடி சாதித்தார். வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோர் கூட்டணிக்குப் போனதால் தனித்துவத்தை இழந்தார்கள். தனித்
துவம், தனித்தன்மை, தத்துவத்தோடு பயணிப்பதால் நாங்களும் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

கட்சி தொடங்கியபோது இருந்த பெரும்பாலானோர் இப்போது இல்லை. உங்கள் மீது அவர்கள் கடும் விமர்சனத்தை முன்வைக்கிறார்கள். அது உங்கள் வெற்றியைப் பாதிக்காதா?

கட்சியில் இருந்து நிறையப் பேர் வெளியே போகவில்லை. சிலர் போனார்கள். சிலரை நாங்களே வெளியே அனுப்பினோம். என்னை எதிர்ப்பவர்கள் எதிரி இல்லை. நான் யாரை எதிர்க்கிறேனோ அவன்தான் எதிரி. விமர்சனங்கள் என்னை வீழ்த்திவிடும் என்றால் நான் என்ன போராட்டக்காரன். கடலில் கல்லை எறிவதால் கடல் காயம்படுவதில்லை. நாம் கடலாக இருந்து கல்லை விமர்சனமாக எடுத்துக் கொண்டு போகவேண்டியதுதான்.

தமிழகத்தில் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் உள்ளது. ஆனால், திமுகவை எதிர்க்கும் அளவுக்கு அதிமுகவை எதிர்ப்பதில்லை என்று உங்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறதே?

நான் தமிழ் தேசியம் பேசுறேன். திமுக திராவிடம் பற்றி பேசுகிறது. பாஜகவை மனிதகுல எதிரியாகப் பார்க்கிறேன். காங்கிரஸை இன எதிரியாகப் பார்க்கிறேன். அதிமுகவையும் விமர்சிக்கத் தவறியதே இல்லை. திமுகவைவிட பாஜகவை எதிர்க்கிறேன். திமுகவுக்கும், எனக்கும் இருப்பது அண்ணன், தம்பி சண்டை. திமுக 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்தது. அப்போது கச்சத்தீவை மீட்கவோ, ஏழு பேரை விடுதலை செய்யவோ, திருக்குறளை தேசிய நூலக அறிவிக்கவோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

அதிமுக, திமுக போலவே நாம் தமிழர் கட்சியிலும் ஒற்றைத் தலைமை, அதுவும் சர்வாதிகாரம் நிலவுவதாக விமர்சிக்கிறார்களே?

எத்தனை பேர் சென்றாலும் வாகனத்தை ஒருவர்தான் ஓட்டியாக வேண்டும். கப்பலுக்கு ஒரு மாலுமி, ஆயிரம் பேர் கொண்ட படையில் ஒரு கட்டளை தளபதிதான் இருப்பார். அதுபோலத்தான் அரசியல் கட்சியில் ஒற்றைத் தலைமையால் மட்டுமே சாதிக்கமுடியும். என்னைத் தோற்கடிக்க முடியும். ஆனால், நான் முன்வைக்கும் அரசியலை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது. எப்போதும் நான் என்னை முன்னிறுத்துவதில்லை. கொள்கைகள், கோட்பாடுகள்தான் முன்னிறுத்தப்படுகின்றன.

விடுதலைப் புலிகளை பகிரங்கமாக ஆதரித்த கட்சிகள் தமிழகத்தில் வென்றதில்லை என்பது வரலாறு. மதிமுகவை உதாரணமாகச் சொல்லலாம். நாம் தமிழர் கட்சியால் மட்டும் எப்படி சாதிக்க முடியும்?

அதைத் தகர்த்து வென்றுகாட்டுவேன். நான் முதல்வராக அமரும்போது எனக்குப் பின்னால் என் அண்ணன் பிரபாகரன் படம் இருக்கும். எனது டேபிளில் நான் பிரபாகரனுடன் எடுத்துக் கொண்ட போட்டோ இருக்கும். நான் வளர்ந்து வருகிறேன். ஈழப் பிரச்சினைகளை மட்டுமல்லாமல், தமிழ் மண்ணைப் பாதிக்கும் பிரச்சினைகளை எதிர்த்தும் போராடி வருகிறேன்.

வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள் உங்களுக்கு நிதியுதவி அளிப்பதாக குற்றம்சாட்டப்படுகிறதே - உங்கள் கட்சிக்கு எங்கிருந்து நிதி பெறப்படுகிறது?

வெளிநாட்டில் இருந்து அவ்வளவு எளிதாக யாரும் பணம் அனுப்ப முடியாது. கடும் சட்டங்களை இந்தியா அமல்படுத்தி வருகிறது. உதாரணத்துக்கு எனது திருமணத்திற்கு எங்கள் அண்ணி (மதிவதணியின் அக்கா) ரூ.75 ஆயிரம் அனுப்பினார்கள். அதை அரசு தரவில்லை. பின்னர் நான் நேரில் போய் எனது திருமண சான்று போன்றவற்றைக் காண்பித்த பிறகு கொடுத்தனர். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை எனக்கு பணம் வருவதைக் கண்டுபிடிக்காமல் என்ன செய்கிறது. எங்களது தேர்தல் அறிக்கை வெளியிடுவதற்குக்கூட பணம் இல்லாமல் சிரமப்படுகிறோம். இதுதான் நடைமுறை.

அதிமுக, திமுக தேர்தல் அறிக்கை இத்தேர்தலில் எதிரொலிக்குமா? உங்கள் தேர்தல் அறிக்கையில் இலவச திட்டங்கள் இடம்பெறுமா?

நாட்டில் முதன்மையான வளம் கல்வியறிவுதான். அது தனியாரின் சந்தைப் பொருளாக இருக்கக்கூடாது. அரசு கல்வி நிலையங்களை தரம் உயர்த்திவிடுவேன். அரசுப் பள்ளிகளில் படித்தால்தான் அரசு வேலையில் முன்னுரிமை. அரசுப் பள்ளி,
கல்லூரியில் வேலை பார்ப்பவர்களின் குழந்தைகள் அரசு கல்வி நிறுவனங்களில் தான் படிக்க வேண்டும். இல்லாவிட்டால் பாதி சம்பளத்தை அரசு எடுத்துக் கொள்ளும். குறைந்தபட்ச ஜனநாயகத்திற்கு அதிகபட்ச சர்வாதிகாரம் தேவைப்படுகிறது.

விவசாயம் அரசு வேலை என்பது சாத்திய மாகுமா? சாத்தியம் இல்லாத வாக்குறுதிகளை வைத்து மக்களை ஏமாற்றுவதாக உங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?

உலகம் முழுவதும் கூட்டுப்பண்ணைதான் நடைபெறுகிறது. பிரபாகரன் அதைச் செய்து காட்டினார். அதில் தற்சார்பும் பெற்றார். விவசாயம் என்பது நமது பண்பாடு, வாழ்வியல் ஆகும். உலகத்திற்கு சோறிடுவது தெய்வச்செயல். குழந்தைகளுக்கு தரமான கல்வி,
பெற்றோருக்கு தரமான மருத்துவம். அப்படியென்றால் வாங்கும் சம்பளத்தைக்கூட செலவு பண்ண தேவையிருக்காது. டென்மார்க் அதைத்தான் செய்கிறது. நாங்கள் அதைச் செய்து காட்டுவோம்.

எல்லோரும் கூட்டணி அமைக்கும்போது, நீ்ங்கள் மட்டும் எக்கட்சியிலும் சேராமல் தனித்து நிற்பதன் காரணம் என்ன?

தனித்து தன்மானத்தோடு போரிடுவதால், மக்கள் தனித்து நிற்பதைத்தான் விரும்புகிறார்கள். கூட்டணியில் இருந்தால் எதையும்
சாதிக்க முடியாது. விவசாயம், பெண்களுக்கு சம உரிமை, பாலியல் வேறுபாடற்ற சமத்துவம் என எதையும் நிறைவேற்ற முடியாது. ஆதித் தமிழ்க் குடிகளுக்கு பொதுத் தொகுதியில் கடந்த முறை 22 இடம் கொடுத்தேன். இப்போது குயவர், நாவிதர், பண்டாரம், வண்ணார், குறவர் என 16 பேருக்கும் சீட் தந்துள்ளேன். சமூக நீதி பற்றி பேசும் கட்சிகள் கொடுத்திருக்கிறதா. பெண்ணிய உரிமை பேசும் திராவிடக் கட்சிகள் பெண்களுக்கு 12, 15 இடங்கள்தான் கொடுத்திருக்கிறார்கள். நாங்கள் 117 சீட்டை பெண்களுக்கு ஒதுக்கியிருக்கிறோம். கூட்டணியோடு நாங்கள் சேர்ந்தால் ஊழல், லஞ்சத்தை ஒருபோதும் ஒழிக்க முடியாது.

இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

 

https://www.hindutamil.in/news/tamilnadu/650436-seeman-interview-4.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காரைக்காலை கண்டுகொள்ளாத முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள்; பரபரப்பாக இயங்கும் பாஜக

no-political-leaders-campaigning-in-karaikkal புதுச்சேரி பாஜக வேட்பாளர்ளை ஆதரித்து தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா எம்.பி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். படம்: எம்.சாம்ராஜ்

காரைக்கால்

காரைக்காலில் இதுவரை முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளாத நிலையில், தொடக்கம் முதலே பாஜக படு வேகமாக செயல்பட்டு வருகிறது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட காரைக்கால் பிராந்தியத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில், இந்த 5 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ், அமமுக, நாம் தமிழர், தேமுதிக, மக்கள் நீதி மய்யம், எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இவற்றுள் பாஜக, நாம் தமிழர் கட்சிகளை தவிர மற்றக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களோ, நட்சத்திரப் பேச்சாளர்களோ இதுவரை காரைக்காலில் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.

கடந்த பிப்.26-ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்பிருந்தே பாஜகவின் தேசிய பொறுப்பாளர்கள் காரைக்காலில் மையம் கொண்டிருந்தனர். கடந்த பிப்.28-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காரைக்காலில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

மத்திய இணை அமைச்சரும், புதுச்சேரி மாநிலத்துக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளருமான அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி மாநில பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, மாநிலங்களவை உறுப்பினரும் தேர்தல் இணை பொறுப்பாளருமான ராஜிவ் சந்திரசேகர், அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சரும், பாஜகவின் முதல்வர் வேட்பாளராக பேசப்பட்டவருமான ஏ.நமச்சிவாயம் உள்ளிட்டோர், அடிக்கடி காரைக்கால் வந்து தேர்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

16164968011863.JPG புதுச்சேரி லாஸ்பேட்டை பாஜக வேட்பாளர் சுவாமிநாதனுக்கு ஆதரவு கேட்டு தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா எம்.பி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். படம்: எம்.சாம்ராஜ்

பாஜகவைச் சேர்ந்த நடிகை கவுதமி காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். அதே சமயம் மற்ற கட்சிகளை சேர்ந்த குறிப்பாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய தலைவர்கள், பொறுப்பாளர்கள் யாரும் இதுவரை தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக காரைக்கால் வரவில்லை.

பொதுவாக, தமிழகத்தின் நாகை மாவட்டத்துக்கு வரக்கூடிய தமிழக அரசியல் தலைவர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் அருகில் உள்ள காரைக்காலிலும் பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம். ஆனால், அவ்வாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மட்டுமே கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரைக்காலுக்கு வந்து தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

கடந்த 18-ம் தேதி நாகையில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான பழனிசாமி, காரைக்கால் வழியாக மயிலாடுதுறை பகுதிக்குச் சென்றார். ஆனால், காரைக்காலில் பிரச்சார ஏற்பாடு செய்யப்படவில்லை.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி, என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி உள்ளிட்டோர் கூட இதுவரை காரைக்காலுக்கு வரவில்லை. அதனால் தேர்தல் பிரச்சாரக் களத்தில் பாஜக தீவிரமாக இயங்குவது போன்ற தோற்றம் உருவாகியுள்ளது.

அதே சமயம் மற்ற கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகுட்பட்ட பகுதிகளில், மக்களை தனித் தனியாக சந்தித்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதையும் களத்தில் காண முடிகிறது.

https://www.hindutamil.in/news/tamilnadu/649554-no-political-leaders-campaigning-in-karaikkal-2.html

 

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2021 at 09:35, உடையார் said:

மாநில உரிமைகளை மத்திய அரசிடம் பறி கொடுத்துவிட்ட திராவிட கட்சிகள்: சீமான் கடும் சாடல்

seeman-slams-dmk-aiadmk சீமான்: கோப்புப்படம்

 

 

திராவிட கட்சிகள் ஆவது உரிமைகளை மத்திய அரசிடம் பறிகொடுத்தனர், ஆனால் சீமான் அவர்கள்  அதனை மத்திய அரசிடம் விற்று அல்லவா(புரோக்கர் வேலை பார்த்து) பிழைப்பு  நடத்துகின்றார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, zuma said:

 

திராவிட கட்சிகள் ஆவது உரிமைகளை மத்திய அரசிடம் பறிகொடுத்தனர், ஆனால் சீமான் அவர்கள்  அதனை மத்திய அரசிடம் விற்று அல்லவா(புரோக்கர் வேலை பார்த்து) பிழைப்பு  நடத்துகின்றார்.

எதையாவது அலம்புகிறீர்கள். ஒரு விடயத்தினை சொல்லும் போது, காத்திரமாக, ரசிக்க தக்க வகையில் சொல்ல வேண்டும். keyboard இருக்கு, கை இருக்கு என்று, சிந்திக்கும் மூளையை தூக்கி கடாசி விட்டு எழுதக்கூடாது. எழுத்தில், கண்ணியம், மிகவும் முக்கியம் அய்யா.

வர வர... உங்கள் நிலைமை சீரியஸ் ஆகிக் கொண்டே போகிறது. மட்டுறுத்தினர் எப்போதுமே, உங்களை காப்பாத்த முடியாது.

நிச்சயம் கொரோனா அறிகுறி இல்லை. கவனமெடுங்கள். தாமதித்தால், மிகவும் கடினமாகிவிடும். 😰

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

 

வர வர... உங்கள் நிலைமை சீரியஸ் ஆகிக் கொண்டே போகிறது. மட்டுறுத்தினர் எப்போதுமே, உங்களை காப்பாத்த முடியாது.

நிச்சயம் கொரோனா அறிகுறி இல்லை. கவனமெடுங்கள். தாமதித்தால், மிகவும் கடினமாகிவிடும். 😰

தல 
நீங்கள் பெட்டிசன்  அடிக்கின்றது விளங்குது.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, zuma said:

தல 
நீங்கள் பெட்டிசன்  அடிக்கின்றது விளங்குது.

அதுகளுக்கு எல்லாம் பெட்டிசம் அடிக்க தேவையில்லை. உடனேயே தூக்கிற மாதிரி தான் எழுதி பதிக்கிறீர்கள். 😰

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவின் உண்மையான பி டீம் திமுகதான்: சீமான்

seeman-speech  

பாஜகவின் உண்மையான பி டீம் திமுகதான் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கோவையில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

பாஜகவின் உண்மையான பி டீம் திமுகதான். பாஜக இந்துகளின் கட்சி. நாங்கள் தான் இந்துகளுக்கு பாதுகாப்பானவர்கள் என்று கூறுகிறது.

இதையே தான் திமுகவும் சொல்கிறது. எங்கள் கட்சியில் 90% இந்துகள் தான் உள்ளனர், நாங்கள் தான் இந்துகளுக்கு நிறைய செய்திருக்கிறோம் என்று திமுகவும் கூறுகிறது. .

பாஜகவுக்கும், திமுகவுக்கும் வித்தியாசம் எதுவும் இல்லை. பாஜகவும், திமுகவும் மறைமுகமான உறவை கொண்டுள்ளன. நானும் நான் தமிழர்களும் இருக்கும்வரை தமிழகத்தில் பாஜக வரமுடியாது நம்புகிறவர்கள் எனக்கு வாக்களியுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தங்கள் ஆட்சியில் தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியன இலவசமாகக் கிடைக்கும் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

https://www.hindutamil.in/news/breaking-news/650866-seeman-speech-1.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/3/2021 at 08:15, zuma said:

 

திராவிட கட்சிகள் ஆவது உரிமைகளை மத்திய அரசிடம் பறிகொடுத்தனர், ஆனால் சீமான் அவர்கள்  அதனை மத்திய அரசிடம் விற்று அல்லவா(புரோக்கர் வேலை பார்த்து) பிழைப்பு  நடத்துகின்றார்.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தன்னாட்சி அதிகாரமுள்ள வருமானவரித் துறையை தனக்கான அமைப்பாக மாற்றும் பிரதமர் மோடி: சீமான் குற்றச்சாட்டு

seeman-accuses-modi-of-turning-autonomous-income-tax-department-into-his-own-body புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசுகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

புதுக்கோட்டை

பிறரைப் பழிவாங்கும் நடவடிக்கைக்கு வருமான வரித்துறையை ஒரு கருவியாக மத்திய அரசு பயன்படுத்துகிறது எனவும் தன்னாட்சி அதிகாரமுள்ள துறையை தனக்கான அமைப்பாகப் பிரதமர் மோடி மாற்றி வருவதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து புதுக்கோட்டையில் இன்று (மார்ச் 27) அவர் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு வருவது என்பது மத்திய அரசின் கையாலாகாத் தனத்தையும், இயலாமையையும்தான் காட்டுகிறது.

தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் ஏற்றுவார்கள். ஏற்கெனவே ஏற்றி இருப்பதையே மக்களால் சமாளிக்க முடியவில்லை. தன்னாட்சி அதிகாரமுள்ள வருமான வரித் துறையை தேர்தல் நேரத்தில் பயன்படுத்தி தனக்கான அமைப்பாக மாற்றி வருகிறார் பிரதமர் மோடி. பிறரைப் பழிவாங்கும் நடவடிக்கைக்குக் கருவியாகவும் வருமான வரித்துறை பயன்படுத்தப்படுகிறது.

ஒரு கருத்தைக் கூறியோ, ஆட்சியின் சிறப்புகளைக் கூறியோ, வாக்குறுதிகளை அளித்தோ வாக்குக் கேட்பதற்கு அதிமுக, பாஜக கூட்டணியினரிடம் ஒன்றும் இல்லாததால் இரவில் மின் இணைப்புகளைத் துண்டித்துவிட்டு பணப்பட்டுவாடாவில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் தேர்தல் களம் நாம் தமிழர் கட்சிக்கு சிறப்பாக உள்ளது'' என்று சீமான் தெரிவித்தார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/651348-seeman-accuses-modi-of-turning-autonomous-income-tax-department-into-his-own-body.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மண்ணில் தாமரை மலராது; எத்தனை முறை நட்டா தமிழகம் வந்தாலும் நோட்டாவுக்குக் கீழ்தான் பாஜக: சீமான் பேச்சு

no-matter-how-many-times-natta-comes-the-votes-are-under-nota-seeman-speech  

அரவக்குறிச்சி

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா எத்தனை முறை தமிழகம் வந்தாலும், நோட்டாவுக்குக் கீழ்தான் பாஜகவுக்கு வாக்குகள் கிடைக்கும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே கூட்டணி அமைத்துக் களம் காண்கின்றன. இதற்கிடையே நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. தேர்தலுக்கு 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அனிதா பர்வீனை ஆதரித்து பள்ளபட்டி பகுதியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, ''காங்கிரஸ் எங்கள் இனத்தை அழித்தது. பாஜக மனிதகுல எதிரி. இந்த இரண்டு கட்சிகளையும் ஏற்கமாட்டேன். ஒரு காலத்திலும் இரண்டையும் என் இனத்துக்குள் உள்ளே விடமாட்டேன். அவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று ஒரு தடவையாவது ஸ்டாலின் சொல்வாரா?

பாஜகவுக்குக் கதவு திறந்துவிட்டவர்கள் அதிமுகவும், திமுகவும்தான். எத்தனை முறை இங்கு நட்டா வந்தாலும், நோட்டாவுக்குக் கீழ்தான் பாஜகவுக்கு வாக்குகள் விழும். தமிழ் மண்ணில் தாமரை மலராது'' என்று சீமான் தெரிவித்தார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக தமிழகம் வந்துள்ளார். சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து, திறந்த வாகனத்தில் நின்றபடி வீதி வீதியாக நட்டா நேற்று பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

 

https://www.hindutamil.in/news/tamilnadu/651318-no-matter-how-many-times-natta-comes-the-votes-are-under-nota-seeman-speech-1.html

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திமுக, அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஊழலும், லஞ்சமும் தொடரும்: திருப்பூரில் தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் விமர்சனம்

seeman-election-campaign  

திருப்பூர்

திமுக, அதிமுக ஆட்சிக்கு வந்தால்ஊழல், லஞ்சம் இருந்துகொண்டேதான் இருக்கும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தார்.

திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, உடுமலை, தாராபுரம், காங்கயம் உட்பட திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களான ஈஸ்வரன், சண்முகசுந்தரம், சுப்பிரமணியன், சோபா, சனுஜா, சிவானந்தம், ராஜேந்திர பிரசாத், ரஞ்சிதா ஆகியோரை ஆதரித்து, திருப்பூர் புஷ்பா திரையரங்கு வளைவு, வளர்மதி மேம்பாலம், பல்லடம் என்.ஜி.ஆர். சாலை மற்றும் காங்கயம்ஆகிய பகுதிகளில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

பள்ளி, கல்லூரிக்கு படிக்க சென்றால் கல்விக் கொள்ளை நடக்கிறது. மருத்துவமனைகளில் உயிர் வியாபாரமாகிவிட்டது. ஆற்று மணல் கொள்ளை எனஎல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்கிறோம். பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள். ஆசிரியர் பணி நியமனம், இடமாற்றம், பிறப்பு - இறப்பு சான்றிதழ் என அனைத்துக்கும் லஞ்சம் வாங்குகிறார்கள். ஊழல், லஞ்சத்தை ஒழிப்பதற்காக செயல்படும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி. கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மூலமாக, ரூ.26 லட்சத்தை மீட்டு மக்களிடம் ஒப்படைத்துள்ளோம். கடந்த 50 ஆண்டு கால ஆட்சிகளால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

திமுகவுக்கு மாற்றாக அதிமுகவுக்கும், அதிமுகவுக்கு மாற்றாக திமுகவுக்கும் வாக்களிக்கிறார்கள். இது அல்ல மாற்றம். ஆட்சியில் இருந்த ஆட்கள் மாறுவார்கள். ஆனால், ஆட்சி அமைப்பு முறை மாறவில்லை. இரண்டு கட்சிகள் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல், லஞ்சம் இருந்துகொண்டேதான் இருக்கும். இரண்டு கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கும் சாராய ஆலைகள் உள்ளன. தமிழகத்தில் வடமாநிலங்களை சேர்ந்த ஒன்றரை கோடி பேர் பணிபுரிகிறார்கள். அனைத்து வேலைகளையும் அவர்கள் செய்யதொடங்கிவிட்டார்கள். மின் பொறியாளர் பணி, தபால் துறை உள்ளிட்டவற்றில் வடமாநிலத்தவருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இங்குள்ள அடிமை அரசுகள். ரயில்வே துறையிலும் வடமாநிலத்தவர்தான் அதிகளவில் உள்ளனர். தமிழர்களை குறைவாக பணியமர்த்துகின்றனர்.

தமிழகத்தில் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் இல்லை, வீதி பெயர்களும் தமிழில் இல்லை. வாக்களிக்க மட்டுமே அரசுப் பள்ளிக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். காங்கிரஸும், திமுகவும் கைகோர்த்து தமிழர்களை அழித்து, ஈழத்தில் 60 ஆண்டு கால கனவை நசுக்கின. வரும் தேர்தலி்ல் போட்டியிட திமுகவில் பெண்களுக்கு 12 இடங்களும், அதிமுகவில் 11 இடங்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், நாங்கள் மட்டுமே 117 இடங்களை வழங்கியுள்ளோம். சம காலத்தில் சமூக நீதி,பெண் விடுதலையை காப்பது நாம் தமிழர் கட்சி மட்டுமே. கோடிகளை கொட்டி தேர்தலை சந்திக்கவில்லை; கொள்கைகளை கொட்டி சந்திக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/651173-seeman-election-campaign.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க் போன்ற நிர்வாகத்தைத் தமிழகத்தில் கொண்டுவரத் துடிக்கிறோம்: சீமான் பேச்சு

seeman-speech  

டென்மார்க் நாட்டின் நிர்வாகத்தை நாங்கள் பார்க்கிறோம், படிக்கிறோம். அதுபோன்ற நிர்வாகத்தைத் தமிழகத்தில் கொண்டுவரத் துடிக்கிறோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “உலகிலேயே ஊழலில் பெருத்த நாடுகள் இந்தியா, நைஜீரியா. ஊழலில் குறைவாக உள்ள நாடு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள டென்மார்க்.

டென்மார்க்கின் நிர்வாகத்தை நாங்கள் பார்க்கிறோம், படிக்கிறோம். அதுபோன்ற நிர்வாகத்தைத் தமிழகத்தில் கொண்டுவரத் துடிக்கிறோம், தவிக்கிறோம். ஊழல், லஞ்சத்தை ஒழிப்பதற்கு ஒரு படைப்பிரிவை உருவாக்கி அதனைச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் கட்சி நாம் தமிழர் கட்சி.

மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும் என்று அனைவரும் கூறுவது சரியாகத்தான் உள்ளது. ஆனால், அதிமுகவிடமிருந்து ஆட்சியை வாங்கி திமுகவிடம் கொடுப்பதும், திமுகவிடமிருந்து ஆட்சியை வாங்கி அதிமுகவிடம் கொடுப்பது மாற்றம் அல்ல. இரண்டு கட்சிகளின் ஆட்சியாளர்களும் மதுபானத் தொழிற்சாலைகளை வைத்துள்ளனர். எனவே திமுக, அதிமுக மாற்று அல்ல” என்று பேசினார்.

சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களைப் போல இந்தத் தேர்தலிலும் தனித்துப் போட்டியிடுகிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மாநிலம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சீமான், திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும், தங்கள் ஆட்சியில் தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியன இலவசமாகக் கிடைக்கும் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/650928-seeman-speech-1.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, உடையார் said:

டென்மார்க் போன்ற நிர்வாகத்தைத் தமிழகத்தில் கொண்டுவரத் துடிக்கிறோம்: சீமான் பேச்சு

சீமான் ஏன் நெடுகலும் டென்மார்க்கை உதாரணத்துக்கு எடுக்கிறார்? ஆரும் தெரிஞ்ச ஆக்கள் சொந்தக்காரர் இருக்கினமோ தெரியேல்லை....:cool:
போகப்போக எல்லாம் வெளிச்சத்துக்கு வரும் தானே...😁

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

சீமான் ஏன் நெடுகலும் டென்மார்க்கை உதாரணத்துக்கு எடுக்கிறார்? ஆரும் தெரிஞ்ச ஆக்கள் சொந்தக்காரர் இருக்கினமோ தெரியேல்லை....:cool:
போகப்போக எல்லாம் வெளிச்சத்துக்கு வரும் தானே...😁

ஹா ஹா தாத்தா  😁😀?

அன்மையில் நான் போட்ட‌ ப‌திவை ப‌ற்றி அண்ண‌ன் சீமான் பேசி இருந்தார் ?

சூரிய‌ வெப்ப‌த்தில் க‌ர‌ன்ட் எடுப்ப‌து ப‌ற்றி ?

ஊழ‌ல் இல்லாத‌ நாடு டென்மார்க்  , இங்கு ஆடு மாடு கோழி பன்றி இற‌ச்சிக‌ள் தான் ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அதிக‌ம் ஏற்றும‌தி செய்ய‌ப் ப‌டுது தாத்தா , ஆடு மாடு மேய்ப‌து ப‌ற்றி ஆர‌ம்ப‌த்தில் கிண்ட‌ல் அடித்தார்க‌ள் ஆனால் இப்போது ப‌ல‌ரும் அண்ண‌ன் சீமான் சொன்ன‌தையே ம‌ற்ற‌ அர‌சிய‌ல் க‌ட்ச்சி த‌லைவ‌ர்க‌ளும் சொல்லின‌ம் ?

ஜேர்ம‌ன் அவுஸ்ரேலியா க‌னடா என்று உதார‌ன‌த்துக்கு ப‌ல‌ நாடுக‌ளை சொல்லி ஊட‌க‌த்தில் பேசி இருக்கிறார் ?

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

சீமான் ஏன் நெடுகலும் டென்மார்க்கை உதாரணத்துக்கு எடுக்கிறார்? ஆரும் தெரிஞ்ச ஆக்கள் சொந்தக்காரர் இருக்கினமோ தெரியேல்லை....:cool:
போகப்போக எல்லாம் வெளிச்சத்துக்கு வரும் தானே...😁

நேர்மையான‌ த‌ன்மான த‌மிழ‌ன் த‌மிழ‌க‌த்தை  ஆள‌னும் தமிழ‌க‌ம் இன்னொரு  டென்மார்க் போல் வ‌ந்து விடும் அதோடு இந்தியாவின் முன்னேறிய‌ முத‌ல் மானில‌மாக‌ தமிழ‌க‌ம் இருக்கும் ?

த‌மிழ‌க‌த்துக்கு பிடிச்ச‌ ச‌ணிய‌ன் : திராவிட‌ம் :

திராவிட‌ம் அழிந்தால் தான் த‌மிழ‌க‌த்துக்கு விடிவு கால‌ம் இல்லை என்றால் ஜ‌ந்துக்கும் ப‌த்துக்கும் கையேந்தி அது இல்லை இது இல்லை என்று அவ‌ர்க‌ளின் வாழ்க்கையும் அடுத்த‌ ச‌ந்த‌தி பிள்ளைக‌ளின் வாழ்க்கை வீனா போயிடும் 

Edited by பையன்26

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே மேடையில் என்கூட பேச ரெடியா ? : சவால் விடும் சீமான்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.