Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய கடலில் மீன் இருந்தால் ஏன் இலங்கை பகுதிக்குள் செல்கிறோம்’ – இராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி கருத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கடலில் மீன் இருந்தால் ஏன் இலங்கை பகுதிக்குள் செல்கிறோம்’ – இராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி கருத்து

1-233-696x392.jpg
 24 Views

இந்திய பகுதியில் மீன் வளங்கள் மிகவும் குறைவு. இங்கு மீன் இல்லை என்றால் மீனவர்கள் என்ன செய்வார்கள்” என்று கேள்வி எழுப்புகிறார்  இராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி ஜேசுராஜா.

மேலும் கச்சத்தீவு மற்றும் இலங்கை பகுதியில்தான் அதிக மீன்கள் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபடுவதால் அடிக்கடி அவர்கள் மீது இலங்கை கடற்படையால் தாக்குதல் நடத்தப்படுவதும் படகுடன் மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்ந்து வருகின்றது.

இந்நிலையில், தமது வாழ்வாதாரத்தை இழந்து வருவதாக தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். அதே நேரம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் செயற்பாட்டினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி செய்தி நிறுவனம் கண்ட நேர்காணலில், இராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி ஜேசுராஜா, “இராமேஸ்வரத்தில் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் வைத்து பல குடும்பங்கள் இந்த மீன்பிடி தொழிலைத்தான் நம்பியிருக்கிறார்கள்.

அப்படி இருக்கையில் இங்கிருந்து இருக்கும் மீன்பிடி எல்லை மிகவும் குறைவாக இருக்கிறது. எல்லை தாண்டுவதாக தமிழக மீனவர்களை இலங்கை இராணுவம் கைது செய்வது, சிறை வைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, துப்பாக்கியால் சுடுவது போன்ற பிரச்னைகளால், மீன்பிடி தொழிலையே இங்கு பலரும் விட்டு செல்வதற்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளது” என்று அவர் தெரிவிக்கிறார்.

இருநாட்டு மீனவர்களும், அரசும் பேசி இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கொண்டுவராத பட்சத்தில், இன்னும் சில ஆண்டுகள் போனால், மீனுக்கு பெயர் போன இராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழிலே இருக்காது என்று  தெரிவித்துள்ளார்

https://www.ilakku.org/?p=45834

சொந்த வீட்டில் பணம் இல்லாட்டி என்ன செய்வது? அடுத்த வீட்டில் திருடுவது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னை: “பயமே எங்கள் வாழ்க்கையாகிவிட்டது” – செத்து பிழைக்கும் ராமேஸ்வரம் மீனவர்கள் #TamilNaduOnWheels

  • அபர்ணா ராமமூர்த்தி
  • பிபிசி தமிழ்
29 மார்ச் 2021, 05:46 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ராமேஷ்வரம்

(தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வெவ்வேறு துறையை சேர்ந்த நான்கு பெண் பைக்கர்கள் பிபிசி தமிழ் குழுவினரோடு சுமார் 1,300 கி.மீ., பயணித்து சாமானியர்களின் வாழ்வாதார பிரச்னைகளை பேசி, அந்த கதைகளை கேட்டு காணொளி வாயிலாக உங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அந்த வரிசையில், இந்தப் பயணம் குறித்து பிபிசி தமிழ் வெளியிடும் தொடர் கட்டுரைகளின் 4வது மற்றும் இறுதிப் பகுதி இது.)

இடம் - ராமேஸ்வரம், தமிழ்நாடு

ஒவ்வொரு நாளும் நீங்கள் பணிக்கு செல்லும்போது, நாம் மீண்டும் உயிருடன் திரும்பி வருவோமா என்ற அச்சம் இருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள்.

ராமேஸ்வர மீனவர்களின் அன்றாட நிலையே இதுதான்.

"வீட்டில் இருந்து கிளம்பும்போது ஒவ்வொரு முறையும், உயிருடன் திரும்பி வந்து விடுவோம், கவலைப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு கிளம்புவேன். ஆனால், நான் வீடு திரும்பும் வரை அது நிச்சயம் இல்லை. வீட்டிலும் அவர்கள் பயந்து கொண்டேதான் இருப்பார்கள். இப்படித்தான் என் வாழ்க்கை நகர்கிறது. பயம் எங்களுக்கு பழகிப் போய்விட்டது" என்கிறார் ராமேஸ்வரத்தை சேர்ந்த சபரி.

மீன்பிடிக்க செல்வது அவர்கள் தொழில். அவர்களின் வாழ்வாதாரம். ஆனால், அதனை சுமூகமாக செய்ய முடியாத நிலை.

"உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தினம் தினம் செத்துப் பிழைப்பது எங்கள் வாழ்க்கையாகிவிட்டது" என்கிறார் அங்குள்ள மீனவர் ஒருவர்.

தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சிறை பிடிப்பு, மீனவர்களின் படகுகளை பிடித்த வைத்த இலங்கை என மீனவர்கள் பிரச்னை குறித்து நாம் பல ஆண்டுகளாக செய்திகளில் பார்த்து வருகிறோம்.

ஆனால், அவர்கள் படும் துன்பங்களை பொதுமக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்த பிபிசி தமிழ் குழு ராமேஸ்வரம் பயணித்தது. மீனவர்களுடன் படகில் பிபிசி குழுவும் கடலுக்குள் சென்றது.

"பயமே எங்கள் வாழ்க்கை"

"முன்பெல்லாம் காலை 6 மணிக்கு மீன் பிடிக்க சென்று, மறுநாள் காலை 6 கரை திரும்புவோம். ஆனால் இப்போது மாலை 3 மணிக்கு சென்றுவிட்டு மறுநாள் காலை 5-6 மணிக்கு திரும்புகிறோம். இலங்கை பிரச்னையால் இந்த நிலை" என்கிறார் நாம் பயணித்த படகை இயக்கிய சபரி.

காலை வேளையில் சென்றால் இலங்கை கடற்படை கண்ணில் மாட்டிவிடுவோமோ என்று அச்சமாக இருக்கும். மாலை அந்தப்பக்கம் அவ்வளவு ஆட்கள் இருக்க மாட்டார்கள். அதனால் 24 மணி நேர மீன்பிடிப்பை விடுத்து, இவ்வாறு செய்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

பிபிசி குழு

"ஒரு வேளை இலங்கை கடற்படையிடம் மாட்டிக் கொண்டுவிட்டால், விரைவாக போட்டை திருப்பி இந்தியா பக்கம் வந்துவிட வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. அவர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. சில நேரத்தில் சுட்டாலும் சுட்டுவிடுவார்கள்" என்று சபரி கூறும் போது அந்த மக்களின் அச்சத்தை நம்மால் உணர முடிகிறது.

பிபிசி குழு

" நாங்கள் இந்தியா பக்கத்தில் இருந்தும் இலங்கை கடற்படையினர் எங்களை பிடித்தாலும், நாங்கள் யாரும் பேசமுடியாது. அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதுதான். கையில் துப்பாக்கி வைத்திருப்பார்கள். அடித்தாலும் மிதித்தாலும் வாங்கித்தான் ஆக வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

"குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதைத் தவிற வேறு வழியில்லை"

சபரியை தொடர்ந்து அந்தப் படகில் பயணம் செய்த சுரேஷ் என்ற மீனவரை சந்தித்துப் பேசினோம். இலங்கை கடற்படையிடம் தனது படகை பறிகொடுத்த அவர், தற்போது தன் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கிறார்.

சுரேஷ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"கடந்த மே மாதம்தான் புது படகு எடுத்தேன். 45 லட்சம் ரூபாய் ஆனது. அதில் 15 லட்சம் ரூபாய், வெளியில்தான் வட்டிக்கு கடன் வாங்கினேன். டிசம்பர் மாதம் நான் இலங்கை கடல்பகுதியில் மீன் பிடித்ததாக கூறி என் படகை இலங்கை கடற்படை எடுத்துக் கொண்டது. இப்போது தொழில் செய்யப் படகும் இல்லை. கடன் கட்ட வழியும் இல்லை" என்கிறார் வேதனையுடன்.

சுமார் 39 நாட்கள் இலங்கை கட்டுப்பாட்டில் இருந்த சுரேஷும் அவரது மகனும் இந்தாண்டு ஜனவரி மாதம் விடுவிக்கப்பட்டனர்.

தங்களின் செல்ஃபோன், படகு, ஜிபிஎஸ் கருவியைகூட அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

"பிற படகுகளில் மீன்பிடிக்க வேலைக்கு சென்றாலும், கடனை அடைக்கும் அளவுக்கு காசு இல்லை. அது சாப்பாட்டிற்கே சரியாக இருக்கிறது. கடன்காரர்கள் வீட்டுக்கு வந்து கடனை திரும்பித்தரும்படி மோசமாக பேசுகிறார்கள். இதனாலேயே இரவு நேரத்தில்கூட நாங்கள் வீட்டில் தூங்குவதில்லை. என் படகை திரும்பப் பெற மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும். இல்லையென்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிற வேறு வழியில்லை" என்கிறார் சுரேஷ்.

இதனால் மகனுடைய கல்லூரி படிப்புக்கு கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார் சுரேஷ்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்வது ஏன்?

பல ஆண்டுகளாக இந்த விவகாரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கடலில் எல்லை எப்படி எல்லையை வரையறுப்பது என்று ஒரு பக்கம் வாதம் இருந்தாலும், சிலர் தெரிந்தே இலங்கை கடல் பக்கம் சென்று மீன் பிடிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க பிரதிநிதி ஜேசுராஜாவிடம் கேட்டோம்.

ஜேசுராஜா

"ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்திலேயே இலங்கை கடல்பகுதி வந்துவிடும். மொத்தம் 12 நாட்டிக்கல் மைல் வரைதான் இந்திய எல்லை.

Instagram பதிவை கடந்து செல்ல, 1

Instagram பதிவின் முடிவு, 1

இந்திய பகுதியில் மீன் வளங்கள் மிகவும் குறைவு. கச்சத்தீவு மற்றும் இலங்கை பகுதியில்தான் அதிக மீன்கள் கிடைக்கும். இங்கு மீன் இல்லை என்றால் மீனவர்கள் என்ன செய்வார்கள்" என்று கேள்வி எழுப்புகிறார் ஜேசுராஜா.

ராமேஸ்வரத்தில் 750க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் வைத்து பல குடும்பங்கள் இந்த மீன்பிடி தொழிலைத்தான் நம்பியிருக்கிறார்கள்

"அப்படி இருக்கையில் இங்கிருந்து இருக்கும் மீன்பிடி எல்லை மிகவும் குறைவாக இருக்கிறது. எல்லை தாண்டுவதாக தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்வது, சிறை வைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, துப்பாக்கியால் சுடுவது போன்ற பிரச்னைகளால், மீன்பிடி தொழிலையே இங்கு பலரும் விட்டு செல்வதற்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளது" என்று அவர் தெரிவிக்கிறார்.

இருநாட்டு மீனவர்களும், அரசும் பேசி இதற்கு ஒரு நிரந்தர தீர்வு கொண்டுவராத பட்சத்தில், இன்னும் சில ஆண்டுகள் போனால், மீனுக்கு பெயர் போன ராமேஸ்வரத்தில் மீன்பிடி தொழிலே இருக்காது என்று ஜேசுராஜா கவலை தெரிவித்தார்.

டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மீனவர்கள்

இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியில் நாங்கள் கடலுக்கு செல்கிறோம். ஆனால், டீசல் விலை உயர்வு எங்கள் மேல் விழுந்த இன்னொரு பெரிய இடி என்கிறார் எடிசன்.

எடிசன்

"நான் ராமேஸ்வரம் கடற்கரைக்கு வந்து 33 ஆண்டுகள் ஆகிறது. நான் இங்கு வரும்போது, டீசல் விலை லிட்டர் 3 ரூபாய் 36 காசுக்கு விற்றது. அப்போது, ஒரு கிலோ இறாலுடைய விலை 700 - 800 ரூபாய். ஆனால், இப்போது டீசல் விலை லிட்டர் 87 ரூபாய்க்கு விற்கிறது. இன்று இறால் ஒரு கிலோ 350 ரூபாய். எங்களுக்கு எப்படி கட்டுப்படி ஆகும்? அதிக வருமானம் வேண்டும். அப்போது தான் கட்டுப்படி ஆகும். எனவேதான் நாங்கள் இலங்கை பகுதிக்கு மீன் பிடிக்க செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம்.

உதாரணமாக இன்று இறால் விலை 1200-1300 ரூபாய்க்கு விற்குமானால் நாங்கள் இலங்கை பகுதிக்கு போக வேண்டிய சூழலே இருக்காது" என்கிறார் மீன் தொழில் செய்யும் எடிசன்

"எல்லை குறைவாக இருக்கிறது. இறந்தாலும் பரவாயில்லை, குடும்பம் நடத்தனும் என்ற எண்ணத்தில் மீனவர்கள் எல்லை தாண்டுகிறார்கள்" என்கிறார் எடிசன்.

நியாயமான விலை வேண்டும்

தக்காளிக்கு அரசு விலை நிர்ணயம் செய்கிறது. ஆனால் மீன்களுக்கு உரிய விலை இல்லை. கேக்கற காசுக்கு கொடுக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. அதனால்தான் அதிக மீன்கள் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எல்லை தாண்டிப் போவதாக அங்குள்ள மீனவர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

டீசல் விலையை குறைத்து, எங்கள் மீன்களுக்கு உரிய விலையை அரசு நிர்ணயித்தால், இந்த பிரச்னை சற்று குறையும் என்பது அவர்கள் கருத்தாக இருக்கிறது.

டீசல் உயர்வு, மீன்களுக்கு உரிய விலை இல்லை, மீன்பிடி படகில் பயன்படுத்தப்படும் கருவிகளுக்கு ஜி.எஸ்.டி வரி போன்ற சுமைகளால் தங்கள் வாழ்கை சுமை அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ராமேஸ்வரம் என்றால் ராமநாதசுவாமி கோயிலுக்கு அடுத்து மீன்பிடி தொழிலுக்கு பெயர் போன இடம். இந்த நிலை மாறி வரும் ஆண்டுகளில் மீன்பிடி தொழில் அழிந்து விடுமோ என்ற அச்சத்தை அவர்களிடம் காண முடிந்தது.

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

தடை செய்யப்பட்ட இழுவை படகுகள் மூலம் மீன்பிடித்தால்  எப்படி மீன் வளம் பெருகும் ? பக்கத்து நாட்டு மீன் வளத்தை  கொள்ளையடிப்பது மாத்திரம் அல்ல அங்கும் மீன் பெருகும் கண்டமேடைகளை மொட்டையடிப்பதால் தற்போதே அங்கும் மீன் வளம் குறைந்துவிட்டது எல்லாம் அரசியல் ஆகிவிட்டது மீனவர்களை கைது  செய்வதை விட ரோலர்களை இழுவைப்படகுகளை பறிமுதல் செய்தால்தான் தீர்வு ஏனென்றால் முல்லைத்தீவு கடல் மட்டும் வரும் இவர்களால் கேரளவுக்கோ அல்லது ஆந்திர பிரதேச கடலிலோ மீன்  பிடிக்க முடியாது காரணம் இவர்களை அங்கு கண்டாலே அங்குள்ள மீனவ சங்கம் கடலிலே வைத்து கலைத்து  விடுவார்கள் அதிக மீனுக்கு ஆசைப்பட்டு உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு முதலாளிகள் திமுகா பினாமிகள் சேட்டு பாய்கள் தான் இவ்வளவு பிரச்சனையும் எழ காரணம் அப்பாவி தமிழ் மீனவர்களின் உயிரும் ஆபத்தும்  தேடி செல்கிறார்கள் இந்த விடயம் சிங்கள கடல்படைக்கும் தெரியும் தெரிந்தும் தமிழ்மீனவர்களின் வாழ்வில் விளையாடுவது அவர்களுக்கு பொழுது போக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

சொந்த வீட்டில் பணம் இல்லாட்டி என்ன செய்வது? அடுத்த வீட்டில் திருடுவது!

2 hours ago, பெருமாள் said:

தடை செய்யப்பட்ட இழுவை படகுகள் மூலம் மீன்பிடித்தால்  எப்படி மீன் வளம் பெருகும் ? பக்கத்து நாட்டு மீன் வளத்தை  கொள்ளையடிப்பது மாத்திரம் அல்ல அங்கும் மீன் பெருகும் கண்டமேடைகளை மொட்டையடிப்பதால் தற்போதே அங்கும் மீன் வளம் குறைந்துவிட்டது எல்லாம் அரசியல் ஆகிவிட்டது மீனவர்களை கைது  செய்வதை விட ரோலர்களை இழுவைப்படகுகளை பறிமுதல் செய்தால்தான் தீர்வு ஏனென்றால் முல்லைத்தீவு கடல் மட்டும் வரும் இவர்களால் கேரளவுக்கோ அல்லது ஆந்திர பிரதேச கடலிலோ மீன்  பிடிக்க முடியாது காரணம் இவர்களை அங்கு கண்டாலே அங்குள்ள மீனவ சங்கம் கடலிலே வைத்து கலைத்து  விடுவார்கள் அதிக மீனுக்கு ஆசைப்பட்டு உடனடி லாபத்துக்கு ஆசைப்பட்டு முதலாளிகள் திமுகா பினாமிகள் சேட்டு பாய்கள் தான் இவ்வளவு பிரச்சனையும் எழ காரணம் அப்பாவி தமிழ் மீனவர்களின் உயிரும் ஆபத்தும்  தேடி செல்கிறார்கள் இந்த விடயம் சிங்கள கடல்படைக்கும் தெரியும் தெரிந்தும் தமிழ்மீனவர்களின் வாழ்வில் விளையாடுவது அவர்களுக்கு பொழுது போக்கு .

என்னவாக இருந்தாலும் தொப்புள்கொடி உறவுகள் அல்லவா? மீன்களை பகிர்ந்து வாழலாம் இல்லையா? உறவுகள் என்றுதானே எங்களிடம் வருகிறார்கள்? ஆந்திரா, கேரளா எல்லாம் தொப்புள்கொடியல்லவே? அண்ணன் சீமானிடம் தீர்வு கேட்போமா?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கற்பகதரு said:

என்னவாக இருந்தாலும் தொப்புள்கொடி உறவுகள் அல்லவா? மீன்களை பகிர்ந்து வாழலாம் இல்லையா? உறவுகள் என்றுதானே எங்களிடம் வருகிறார்கள்? ஆந்திரா, கேரளா எல்லாம் தொப்புள்கொடியல்லவே? அண்ணன் சீமானிடம் தீர்வு கேட்போமா?

நான் இம்முறை தீர்வு  சீமானிடம் கேட்கமாட்டேன் சீமானை வென்ட இனவெறியர்  ஒருத்தர் இருக்கார் அவரிடம் கேட்கலாம் என்று இருக்கிறன். நீங்களும் வருகிரியலா ?

ஆஸ்கார் மேடையில் வைத்து இனவெறி ஆடியது பத்தாமல் அங்கு உள்ளூர் மேடைகளிலும் இனவெறி கொண்டு ஆடுகிறார் அவரிடம் தீர்வு கேட்க்கலாமா ?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இவ்வளவு துணிச்சலாக இந்த களத்தில் சீமானை இனவெறியர் என்று எழுதியதற்கு பாராட்டுகள். ஆஸ்கார் மேடை சம்பவத்தை நான்   போதிய அளவு அறியவில்லை. பாடகர் ஒருவர் ஏதோ தமிழில் மட்டும் பாடுவேன் என்று எங்கோ படித்த நினைவு மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

இவ்வளவு துணிச்சலாக இந்த களத்தில் சீமானை இனவெறியர் என்று எழுதியதற்கு பாராட்டுகள். ஆஸ்கார் மேடை சம்பவத்தை நான்   போதிய அளவு அறியவில்லை. பாடகர் ஒருவர் ஏதோ தமிழில் மட்டும் பாடுவேன் என்று எங்கோ படித்த நினைவு மட்டுமே.

உங்களுக்கு விளங்கியது அவ்வளவுதான்!  சீமானை எதிர்ப்பவர்கள் சிந்தனை இவ்வளவு குறுகியது என்று என்னால் இன்றுதான் கண்டு கொண்டேன் அதிலும் பாருங்க ஆஸ்கார் சம்பவமே தெரியாதவர்கள் எல்லாம் சீமானுக்கு எதிராக கம்பு சுற்றுவது .

ரகுமான் தமிழில் கதைக்கனும்  என்கிறார் அப்படி பார்த்தால் ரகுமானையும் தமிழ் இனவெறியர் என்போம் ஏனெனில் தமிழ் தமிழ் என்று கதைத்தால் உடனே அவரை இனவெறியர் என்று துரோகி பட்டம் கொடுப்பது போல் கண்ணை மூடிக்கொண்டு இனவெறியர்  என்ற பட்டத்தை உடனே கொடுக்கிறோம் ஆதலால் இன்றில் இருந்து தமிழுக்காக கதைப்பவர்கள்  அனைவரும் இனவெறியர்  என்போம் என்று தமிழனுக்கு என்று ஒரு நாடு பிறக்குதோ அது மட்டும் இனவெறியர் கவுரவமாக அழைப்போம் நாடு அமைவது ஆயிரம் ஆண்டுகள் ஆனலும் அது மட்டும் அழைத்து கொண்டு இருப்போம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, கற்பகதரு said:

இவ்வளவு துணிச்சலாக இந்த களத்தில் சீமானை இனவெறியர் என்று எழுதியதற்கு பாராட்டுகள். ஆஸ்கார் மேடை சம்பவத்தை நான்   போதிய அளவு அறியவில்லை. பாடகர் ஒருவர் ஏதோ தமிழில் மட்டும் பாடுவேன் என்று எங்கோ படித்த நினைவு மட்டுமே.

கற்பகதரு என்று ஏன் தங்களுக்கு பெயர் சூட்டினீர்கள்? அங்கே இன வெறி தெரியவில்லையா? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

 ஆஸ்கார் மேடை சம்பவத்தை நான்   போதிய அளவு அறியவில்லை.

ஒஸ்காரில் தமிழ் பேசிய தமிழன் என்று சிலர் ஓவராக புகழ்ந்து சொன்னதால் நானும் சமீபத்தில் தான் இதை பற்றி அறிந்தேன். Slumdog Millionaire என்ற இந்தியாவில் எடுக்கபட்ட ஆங்கில படத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த ரகுமான் இசை அமைத்தார் இசைக்காக அவருக்கு ஒஸ்கார் பரிசு கிடைத்த விழாவில் அவர் ஆங்கிலத்தில்  பேசிவிட்டு ஒரே ஒரு வசனம் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற முஸ்லிம் மத வசனத்தை மட்டும் தமிழில் சொல்லியுள்ளார்.

4 hours ago, கற்பகதரு said:

பாடகர் ஒருவர் ஏதோ தமிழில் மட்டும் பாடுவேன் என்று எங்கோ படித்த நினைவு மட்டுமே.

அவர் தமிழ்பாட்டை விட ஹிந்தி பாடல்கள் தான் அதிகம் நிகழ்ச்சிகளில் பாடுவாராம்

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஒஸ்காரில் தமிழ் பேசிய தமிழன் என்று சிலர் ஓவராக புகழ்ந்து சொன்னதால் நானும் சமீபத்தில் தான் இதை பற்றி அறிந்தேன். Slumdog Millionaire என்ற இந்தியாவில் எடுக்கபட்ட ஆங்கில படத்திற்கு தமிழ்நாட்டை சேர்ந்த ரகுமான் இசை அமைத்தார் இசைக்காக அவருக்கு ஒஸ்கார் பரிசு கிடைத்த விழாவில் அவர் ஆங்கிலத்தில்  பேசிவிட்டு ஒரே ஒரு வசனம் எல்லா புகழும் இறைவனுக்கே என்ற முஸ்லிம் மத வசனத்தை மட்டும் தமிழில் சொல்லியுள்ளார்.

அவர் தமிழ்பாட்டை விட ஹிந்தி பாடல்கள் தான் அதிகம் நிகழ்ச்சிகளில் பாடுவாராம்

உங்களால் அதே மேடையில் ஹிந்தி  பேசும் தொகுப்பாளினியின் பேச்சை  நிற்பாட்ட முடியுமா ? தூக்கி சடைந்து விடுவார்கள் ரகுமான் ஏதோ  செய்கிறார் விட்டு விடுங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கற்பகதரு என்று ஏன் தங்களுக்கு பெயர் சூட்டினீர்கள்? அங்கே இன வெறி தெரியவில்லையா? :cool:

இது மொழி வெறி ஐயா, இனவெறியல்ல, போர்த்துகேய வம்சாவளியில் மதவாச்சியில்சிங்களவனாக ஏறி, யாழ்ப்பணத் தமிழில் மயங்கி தமிழனாக இறங்க  மொழி வெறி தானே காரணம்? எப்படி இனவெறியாகும்? 🙃

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கற்பகதரு said:

போர்த்துகேய வம்சாவளியில் மதவாச்சியில்சிங்களவனாக ஏறி, யாழ்ப்பணத் தமிழில் மயங்கி தமிழனாக இறங்க  

அப்படியா, யாரவன் அப்படி மாறியவன், அடியேன் எங்களுக்கு அறியதரலாம் அல்லவா

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, கற்பகதரு said:

இது மொழி வெறி ஐயா, இனவெறியல்ல, போர்த்துகேய வம்சாவளியில் மதவாச்சியில்சிங்களவனாக ஏறி, யாழ்ப்பணத் தமிழில் மயங்கி தமிழனாக இறங்க  மொழி வெறி தானே காரணம்? எப்படி இனவெறியாகும்? 🙃

1 hour ago, உடையார் said:

அப்படியா, யாரவன் அப்படி மாறியவன், அடியேன் எங்களுக்கு அறியதரலாம் அல்லவா

அடியேன் தான், என்ன, அடையாளமே தெரியவில்லையா? கருந்தோல் இல்லாத ஈழத்தமிழர் எல்லாம் போர்த்துகேயர் காலத்து போர்வீரர் வழிவந்தோர். டச்சுகாரர் வந்து அடித்து கலைக்க, எங்கள் முப்பாட்டிகளை அம்போ என்று விட்டுவிட்டு இந்த போர்வீரர்கள் ஓடிவிட்டார்கள். நாங்கள் எல்லாம் கருகாத ரோஸ்பாண் ஆகி விட்டோம். Roast Panனில் பிறந்து  ரோஸ்பாண் ஆகிவிட்டோம்.😁

  • கருத்துக்கள உறவுகள்
On 29/3/2021 at 13:16, கற்பகதரு said:

என்னவாக இருந்தாலும் தொப்புள்கொடி உறவுகள் அல்லவா? மீன்களை பகிர்ந்து வாழலாம் இல்லையா? உறவுகள் என்றுதானே எங்களிடம் வருகிறார்கள்? ஆந்திரா, கேரளா எல்லாம் தொப்புள்கொடியல்லவே? அண்ணன் சீமானிடம் தீர்வு கேட்போமா?

சொந்த வீட்டிற்குள்ளேயே  கூட்டிக் கொடுக்கும் உங்கள் பொன்னான குணம் யாருக்கு வரும். 🤥

16 hours ago, கற்பகதரு said:

இது மொழி வெறி ஐயா, இனவெறியல்ல, போர்த்துகேய வம்சாவளியில் மதவாச்சியில்சிங்களவனாக ஏறி, யாழ்ப்பணத் தமிழில் மயங்கி தமிழனாக இறங்க  மொழி வெறி தானே காரணம்? எப்படி இனவெறியாகும்? 🙃

நீங்கள் EPDP அல்லது EPRLF வென எனக்கொரு சந்தேகம். உங்களின் எழுத்துக்களின் தரம் அப்படியே அவர்களை ஒத்திருக்கிறது. பெயரும் ஒத்துப் போகிறது. 

4 hours ago, கற்பகதரு said:

அடியேன் தான், என்ன, அடையாளமே தெரியவில்லையா? கருந்தோல் இல்லாத ஈழத்தமிழர் எல்லாம் போர்த்துகேயர் காலத்து போர்வீரர் வழிவந்தோர். டச்சுகாரர் வந்து அடித்து கலைக்க, எங்கள் முப்பாட்டிகளை அம்போ என்று விட்டுவிட்டு இந்த போர்வீரர்கள் ஓடிவிட்டார்கள். நாங்கள் எல்லாம் கருகாத ரோஸ்பாண் ஆகி விட்டோம். Roast Panனில் பிறந்து  ரோஸ்பாண் ஆகிவிட்டோம்.😁

சொந்த வீட்டிற்குள்ளேயே கூட்டியும் காட்டியும் கொடுப்பீர்கள் என்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

நீங்கள் EPDP அல்லது EPRLF வென எனக்கொரு சந்தேகம். உங்களின் எழுத்துக்களின் தரம் அப்படியே அவர்களை ஒத்திருக்கிறது. பெயரும் ஒத்துப் போகிறது. 

இன்னமும் சந்தேகமா? 😄

douglas-devananda.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.