Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடனான மோதலின் பின்னர் காணாமல்போன 18 இந்திய பாதுகாப்பு படையினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடனான மோதலின் பின்னர் காணாமல்போன 18 இந்திய பாதுகாப்பு படையினர்

சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் சனிக்கிழமை நடைபெற்ற மோதலையடுத்து குறைந்தது 18 பாதுகாப்பு படையினரை காணவில்லை என்று இந்திய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

Untitled-1.jpg

மாவோயிஸ்டுகளுடனான மோதலின் போது ஐந்து பாதுகாப்பு வீரர்கள் இறந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று சத்தீஸ்கர் பொலிஸார் நேற்று தெரிவித்தனர். 

அதேநேரம் இந்த மோதலில் பெண் மாவோயிஸ்ட் ஒருவரின் சடலமும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது.

இது குறித்து சத்தீஸ்கர் காவல்துறை பணிப்பாளர் ஜெனரல் டி.எம். அவஸ்தி கூறுகையில்,

சில பாதுகாப்புப் பணியாளர்கள் காணவில்லை, தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. உயிரிழந்த ஐந்து பணியாளர்களில், இருவரின் சடலத்தை நாங்கள் மீட்டுள்ளோம், மூன்று பேர் இன்னும் காட்டில் உள்ளனர் என்றார்.

மாவோயிஸ்டுகளின் கோட்டையாகக் கருதப்படும் தெற்கு பஸ்தார் காடுகளில் உள்ள பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களில் இருந்து 2,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படைகளின் தனித்தனி கூட்டுக் குழுக்கள் மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியதாக சத்தீஸ்கர் பொலிஸார் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/103244

 

  • கருத்துக்கள உறவுகள்

மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் 22 பேர் பலி

 மணி நேரங்களுக்கு முன்னர்
சத்தீஸ்கர்

பட மூலாதாரம்,ANI

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் சனியன்று நடந்த மோதலில் பாதுகாப்பு படையினர் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளனர், ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று அந்த மாநிலத்தின் காவல்துறை தெரிவிக்கிறது. குறைந்தது 30 பேர் காயமடைந்துள்ளனர்.

மாவோயிஸ்டுகள் வலுவாக உள்ள பகுதிகளாகக் கருதப்படும் பிஜப்பூர் மற்றும் சுக்மா ஆகிய மாவட்டங்களில் இருக்கும் தெற்கு பஸ்தார் காட்டுப் பகுதியில், 2,000 பேருக்கும் அதிகமான படையினரைக் கொண்ட வெவ்வேறு குழுக்கள் வெள்ளி இரவு மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளைத் தொடங்கினர்.

இந்திய ரிசர்வ் காவல் படையினர், 'கோப்ரா' படையினர், சத்தீஸ்கர் மாநில காவல் துறையின் சிறப்புப் படையினர் உள்ளிட்டோர் இவர்களில் அடக்கம்.

அப்போது பிஜப்பூர் மற்றும் சுக்மா மாவட்ட எல்லையில், சனிக்கிழமை மதியம் அவர்களைச் சுற்றி வளைத்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கினர் என்று பிடிஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.இருதரப்பு மோதல் மூன்று மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில நாட்களாகவே தலைமறைவாக உள்ள மாவோயிஸ்டு தலைவர் மாத்வி ஹித்மா என்பவர் குறித்த தகவல் மாவோயிஸ்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்திய அரசுப் படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு படையினரை இலக்கு வைத்து தாக்க திட்டமிட்ட மூன்று மாவோயிஸ்டுகள் கடந்த வியாழனன்றுதான் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையில் காயமடைந்த பாதுகாப்பு படையை சேர்ந்த 37 பேர் பிஜாப்பூர் மற்றும் ராய்ப்பூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மாவோயிஸ்டு தாக்குதல் இது என நம்பப்படுகிறது.

"படையினரின் தியாகம் என்றும் நினைவில் வைத்து கொள்ளப்படும்" என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பாதுகாப்பு படையினரின் தியாகத்திற்கு முன் நான் தலை வணங்குகிறேன். படையினரின் வீரத்தை நாடு மறவாது. அமைதி மற்றும் வளர்சிக்கு எதிரான எதிரிகளை நோக்கிய நடவடிக்கை தொடரும்." என தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகேல் படையினரின் தியாகம் வீணாகாது என தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் 22 பேர் பலி - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

22 படையினர் கொல்லப்பட்டு, 30 படையினர் வைத்தியசாலையில் காயப்பட்டு இருப்பதைப் பார்க்க.... மிகப் பெரிய தாக்குதல் ஒன்று நடந்துள்ளது போல் தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாட்களாக அமைதியாக இருந்த மாதிரி இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தேர்தலிலும் அதன் இறுதி நாட்களில் இது போன்ற தாக்குதல்கள் இடம்பெறுவது வளமையாகிவிட்டது. 

புல்வோமா (காஸ்மீர்) தாக்குதல் போன்று இதுவும் இந்திய BJP அரசே முன்கூட்டியே திட்டமிட்ட தாக்குதலாக இருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். 

☹️

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Kapithan said:

ஒவ்வொரு தேர்தலிலும் அதன் இறுதி நாட்களில் இது போன்ற தாக்குதல்கள் இடம்பெறுவது வளமையாகிவிட்டது. 

புல்வோமா (காஸ்மீர்) தாக்குதல் போன்று இதுவும் இந்திய BJP அரசே முன்கூட்டியே திட்டமிட்ட தாக்குதலாக இருப்பதற்கான வாய்ப்புக்களே அதிகம். 

☹️

இதுதான் இந்திய சிறிலங்கா அரசியல்கள்.
பணத்திற்கும் பதவிக்கும்  எதையும் செய்யும் அரசியல்.மனிதாபிமானம் அறவே இல்லாத அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

“கொல்வது எங்கள் நோக்கம் அல்ல” – இந்திய பாதுகாப்பு படை வீரரை கடத்திய மாவோயிஸ்டுகள்!

 
naxal-27-14617552841-1617765392.jpg
 83 Views

சத்தீஸ்கரில் சண்டையின் போது காணாமல் போன கோப்ரா படையின் வீரர் ஒருவரை சிறைபிடித்துள்ள மாவோயிஸ்டுகள் அவரை விடுவிக்க மத்தியஸ்தர்களை நியமிக்குமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடிதம் எழுதி உள்ளனர்.

அண்மையில் சத்தீஸ்கரில் சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஏராளமானோர் திடீரென பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 22 வீரர்கள் பலியாகினர். இந்த சண்டையில் தங்கள் உறுப்பினர்கள் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும் மாவோயிஸ்டுகள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

தங்கள் நிலம், பெருமை மற்றும் உயிர்களைக் காப்பாற்ற பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், தாக்குதல் நடத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே மாவோயிஸ்டுகளின் தரப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றும், மாவோயிஸ்டுகள் மறைப்பதாகவும் சத்தீஸ்கர் காவல்துறை தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கரின் மூலையில் இருக்கும் இரண்டு முக்கிய மாவட்டங்கள் பிஜாபூர் மற்றும் சுக்மா. இங்கு மாத்வி ஹித்மா என்ற மாவோயிஸ்டு தலைவர் பதுங்கி இருந்து மிகப்பெரிய மாவோஸ்டு படைகளை நிறுவி உள்ளார். இந்த மாவோஸ்டுகளை அழிப்பதற்காக 2,000இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் ஜிரகுடெம் கிராமத்திற்கு அருகே சனிக்கிழமை வந்திருந்தனர்.

இதை மோப்பம் பிடித்த சுமார் 400 மாவோயிஸ்ட் படையினர், முகாமின் நான்கு பக்கத்தையும் சுற்றி வளைத்து தாக்கி உள்ளனர். ஏற்கனவே இங்கு அவர்கள் பதுக்கி வைத்து இருந்த ஐஇடி குண்டுகளையும் வெடிக்க செய்திருக்கிறார்கள். இந்த குண்டுகளை வெடிக்க செய்யும் போதே துப்பாக்கி மூலம் தாக்கி உள்ளனர். இயந்திரத் துப்பாக்கிகளை பயன்படுத்தி உள்ளனர். கையெறி குண்டுகளையும் பாதுகாப்பு படையினர் மீது வீசி உள்ளனர்.

எதிர்பார்க்காத நேரத்தில் சுற்றிவளைத்து தாக்கியதால் மறைய கூட இடம் இல்லாமல் மரங்களுக்கு பின் மறைந்து கொண்டு கடைசி வரை பதில் தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் வீரர்கள். கடுமையாக போராடிய பாதுகாப்பு படையினர் பின் வீரமரணம் அடைந்துள்ளார்கள். 22 பாதுகாப்பு வீரர்கள் உயிரிழந்தனர். 31 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் கோப்ரா படையைச் சேர்ந்த வீரர் ஒருவரை பிடித்து வைத்துள்ள மாவோயிஸ்டுகள், மற்றவர்கள் தப்பிவிட்டனர் என்று கூறியுள்ளனர். அவரை விடுவிக்க மத்தியஸ்தர்களை அனுப்பிவைக்குமாறு சத்தீஸ்கர் அரசை வலியுறுத்தியுள்ளனர். பேச்சுவார்த்தை நடக்கும் வரை அவர் எங்கள் கட்டுப்பாட்டில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 210 வது கோப்ரா பட்டாலியனின் காவலர் ராகேஷ்வர் சிங்கை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மாவோயிஸ்டுகளின் தண்டகரண்யா சிறப்பு மண்டலக் குழுவின் (டி.கே.எஸ்.இசட்) செய்தித் தொடர்பாளர் விகல்ப் பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டது.

மாவோயிஸ்டுகள் தங்கள் அறிக்கையில், பாதுகாவலர்கள் தங்கள் எதிரிகள் அல்ல என்று கூறி, மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சண்டையில் அவர்கள் இறந்ததற்கு வருத்தம் தெரிவித்தனர். மேலும் நாங்கள் தற்காப்பிற்காக மட்டுமே பதிலடி கொடுத்தோம்.  இது பாதுகாப்பு வீரர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது. துப்பாக்கிச் சண்டையில் 14 துப்பாக்கிகள், 2,000 இற்கும் மேற்பட்ட தோட்டாக்கள் மற்றும் பிற உபகரணங்களை கைப்பற்றியுள்ளோம் என்று கூறியுள்ளனர்.

இதனிடையே பழங்குடியினர் ஆர்வலர் சோனி சோரி, ஜவானை சிறைபிடித்திருந்தால் விடுவிக்குமாறு மாவோயிஸ்டுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “அவர்கள் ஜவானை விடுவிப்பதை தாமதப்படுத்தினால், நானே புதன்கிழமை காட்டை நோக்கிச் செல்வேன், அவரை விடுவிக்க அவர்களுடன் (மாவோயிஸ்டுகள்) பேச முயற்சிப்பேன்” என்று சோரி கூறினார்

இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

 

https://www.ilakku.org/?p=46713

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.