Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் இணையவன் அண்ணா

  • Replies 130
  • Views 17k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இணையவன்
    இணையவன்

    ஒரு வளியாக இந்த வருடம் பரிசில் நடைபெற்ற மரதன் போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது. 3 மாத கடும் பயிற்சியின் பின் சென்ற ஞாயிறு ஓடி முடித்துள்ளேன். கோவிட் காரணமாக இந்தத் தடவை சுமார் 30000 பேர் மட்டுமே

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

  • இணையவன்
    இணையவன்

    இரவுச் சாப்பாடு மனித வழக்கத்தில் இல்லாததாகச் சொல்லப்படுகிறது. விளக்கு எரிப்பதற்கான எண்ணை, மின்சாரம் வீடுகளுக்கு வந்தபின்னர்தான் இரவுச் சாப்பாடு முக்கியத்துவம் அடைந்தது. பகலில் குறிப்பிட்ட நேரம் கட்டாய

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பெருமாள் said:

அப்ப  யாழ்களத்திலே வயது குறைந்தவர் நீங்களாகத்தான் இருக்கனும் .

 

22 hours ago, Justin said:

😂பெருமாள், பையன், நன்னியர் என்று ஒரு இளவட்டப் பட்டாளமே இருக்கிறதே? நாங்கள் முந்தின ஜெனரேசன்!

அவர் உங்களை நக்கலடிக்கிறார் என்று நினைக்கிறேன் 

 

  • கருத்துக்கள உறவுகள்

பியரையும் ஓட்டத்தையும் பற்றி ஏதோ அரிய தகவல்கள் எழுதப் போவதாக எதிர்ப்பார்ப்பைக் கிளப்பி விட்டேன் போல இருக்கு, எனவே எதிர்பார்ப்பு பலூன் பெரிதாகிப் புஸ்ஸென்று காற்றுப் போக முதல்🤣 இதை முடித்து விடுகிறேன்: இவை என் அனுபவமும், சில தரவுகளும் இணைந்தது: 

பொறுப்புத் துறப்பு: பியர் - அல்கஹோல் அளவு பொதுவாகக் குறைவாக இருந்தாலும் - ஒரு மதுபானமே. அல்கஹோல் உடல்நலத்திற்குக் கேடு, தவிர்ப்பது ஐடியல், குடிக்காதோர் இதைப் பார்த்துக் குடிக்க ஆரம்பிக்காதீர்கள்! 

நெடுந்தூர ஓட்டம் - பியர் தொடர்பு:

அண்மையில் ஒரு கருத்துக் கணிப்பின் வழி எடுத்த ஆய்வொன்றில், அனேக நெடுந்தூர ஓட்டப் பிரியர்கள் பியர் பிரியர்களாகவும் இருப்பதாகக் கணித்திருந்தார்கள். என்ன காரணமாக இருக்கும்? நெடுந்தூர ஓட்டம் செய்வோர் அனேகமாக தங்கள் உடல் நலத்தில் அக்கறையுடையோராக இருப்பதால், அதிக அல்கஹோல் கொண்ட ஏனைய மதுபானங்களை விட பியரை நாடுகின்றனர் என்பது ஒரு விளக்கம். 

இன்னொரு விளக்கம் கொஞ்சம் நரம்பியல் தொடர்பானது: நெடுந்தூர ஓட்ட ஆர்வலர்களாக இருப்போர், அவ்வாறு நெடுந்தூரம் ஓடுவதற்கு அவர்களது உடலில் உற்சாகத்தைத் தூண்டும் எண்டோர்பின்கள் (endorphins) சுரப்பு ஒவ்வொரு ஓட்டத்தின் பின்னும் அதிகரிப்பது பிரதான காரணமாக இருக்கிறது (இது தான் ஓட்டத்திற்கு அடிமையாக addiction வருவதற்கும் காரணம்!). பல்வேறு மதுபானங்களைப் பரிசோதித்துப் பார்த்ததில், பியர் குடிக்கும் போது மட்டும் தான் மூளையில் எண்டோர்பின்கள் அதிகரிக்கின்றன என்கிறார்கள் (இதனால் தான் எப்போதுமே ஒருவர்  ஒரு பியரோடு நிறுத்துவதில்லை - பியர் குடிப்போருக்கு 1 beer = 2 beers 😎; இதன் காரணம் எங்கள் மூளை வெளிப்படுத்தும் reward signal).

இதற்கு பியரில் இருக்கும் திரட்சியான, சிக்கலான சுவை (complex taste) காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் - சுவை மட்டுமன்றி அரோமா எனப்படும் வாசனை, கிளாசில் இருந்தால் அதன் வர்ணம் என்பனவும் காரணமாக இருக்கலாம்! 

என் அனுபவம்: பியர் எனக்கு வெகுமதி போன்றது. ஒரு வாரத்தில் போதியளவு ஓடவில்லையானால் அந்த வெள்ளிக்கிழமை பியர் கட்! அதே போல ஒரு வெள்ளிக்கிழமை இரண்டு பியர் எடுத்தால் அடுத்த நாள் ஒரு மைல் கூடுதல் ஓட்டம்! இப்படி வெகுமதி - தண்டனை (reward-punishment) என்ற சக்கரம் தான் என் அனுபவம். ஏனையோருக்கும் இப்படி இருக்கலாம்!

இனி சசியரின் ஒரிஜினல் பதிவு: உடற்பயிற்சி செய்ய பியரோடு வருகின்றனர்! 

இதில் ஆரோக்கியப் பிரச்சினை இருக்கிறதா?

இதற்கு என் அபிப்பிரயம் பக்கச் சார்பாகத் தான் இருக்கும், ஆனாலும் தரவுகளோடு தருகிறேன்: ஒரு பியரில் அடிப்படையில் இருப்பவை: கார்ப்-carb (இது தான் கலோரி) , புரதம், அல்கஹோல், விற்றமின்கள், antioxidants எனப்படும் உடலுக்கு நன்மை தரும் பொருட்கள் (இந்த நன்மை தரும் பொருட்களும், விற்றமின்களும் ஏனைய மதுபானங்களில்  இருப்பதில்லை என்பதைக் கவனிக்க! - சிவப்பு வைனில் மட்டும் இந்த antioxidants சிறிதளவு உண்டு).  கலோரியின் அளவையும், அல்கஹோலின் அளவையும் குறைவாகக் கொண்ட பியர் ஒப்பீட்டளவில் ஆரோக்கியமானது எனலாம். 

லைற் பியர் வகைக்குள் அடங்கும் லாகர், வியன்னா லாகர், பில்ஸ்னர் ஆகியவை அனேகமாக 5% இலும் குறைந்த அல்கஹோல், கலோரி 100 முதல் 150 இருக்கும் (ஒரு 12 அவுன்ஸ் போத்தலில்) -ஒப்பீட்டிற்குப் பார்த்தால் ஒரு நடுத்தர சைஸ் வாழைப்பழத்தில் 110 கலோரிகள் இருக்கின்றன.

இதுவும் உங்கள் உணவுக்கட்டுப் பாட்டுடன் ஒத்து வரவில்லையென்றால், விசேடமாக டயற்றில் இருப்போருக்கென இப்போது சில 90 கலோரி பியர்களும் இருக்கின்றன.சில கம்பனிகள் ஒரு படி மேலே போய் நெடுந்தூர ஓட்டப் பிரியர்களுக்கென கனியுப்புகள் (electrolytes) நிறைந்த பியர்களையும் உற்பத்தி செய்கின்றனர். எனவே, இவற்றை கடின உடல் உழைப்பின் பின்னர் எடுத்துக் கொள்வது பாரிய ஆரோக்கியக் குறைவைத் தராது!

பியர் வகைகளில் அதிகம் பேர் விரும்புவது (நான் உட்பட) IPA (India Pale Ale) எனப்படும் கசப்பு அதிகமான பியர். ஆனால், இந்த பியரில் கலோரியின் அளவு 200 வரை இருக்கும், அல்கஹோல் அனேகமாக 6% முதல் 8 % வரை இருக்கும்! எனவே IPA டயற்றோடு அவ்வளவு ஒத்து வராது - ஆனால்  IPA பியர் வகையின் சுவையை வேறெந்த பியரும் வெல்ல முடியாது!

இன்னும் மேலே போனால், Double IPA, Triple IPA, Belgian Tripel எனப்படும் வகைகள் இன்னும் அதிக கலோரி, அல்கஹோல் கொண்டவை. இது சுவைக்காக அல்லாமல் வெறிக்காக குடிக்கும் வெறிக்குட்டிகள் குடிப்பது!😜

Stout வகையைச் சேர்ந்த கின்னஸ் போன்றவை, அதிக அல்கஹோல் இல்லா விட்டாலும், 300 கலோரிகள் வரை ஒரு 12 அவுன்ஸ் போத்தலில் கொண்டவை - எனவே இவ்வகையை எடுப்பதானால் உடல் எடை கூடுவதைப் பற்றிய கவலையை விட்டு விட வேண்டும்! 
 

  • தொடங்கியவர்
21 hours ago, Justin said:

லைற் பியர் வகைக்குள் அடங்கும் லாகர், வியன்னா லாகர், பில்ஸ்னர் ஆகியவை அனேகமாக 5% இலும் குறைந்த அல்கஹோல், கலோரி 100 முதல் 150 இருக்கும் (ஒரு 12 அவுன்ஸ் போத்தலில்) -ஒப்பீட்டிற்குப் பார்த்தால் ஒரு நடுத்தர சைஸ் வாழைப்பழத்தில் 110 கலோரிகள் இருக்கின்றன.

நன்ற்றி ஜஸ்ரின்.

நான் அறிந்த வகையில் உடலுக்குச் சக்தியை (கலோரி) வழங்கும் வழிகளில் அல்கஹோலும் ஒன்று. என்ன பிரச்சனை என்றால் அல்கஹோல் வழங்கும் சக்தியை உடல் கட்டுப்படுத்தி மேலதிகமானதைச் சேமித்து தேவையானபோது பாவிக்க முடியாது. இதை வெறுமையான கலோரிகள் என்று பிரெஞ்சில் சொல்வார்கள். இரத்தத்தில் உடனடியாகச் சேர்க்கப்படும் இச் சக்தி உடனடியாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதால் இது முதன்மை பெற்று உடலின் ஏனைய சக்தி வழங்கல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இது வேறு விடயம்.

ஓட்டத்துக்கு வருவோமேயானால், எனது ஊருக்குப் பக்கத்தில் ஓட்டப் போட்டி ஒன்று ஒவ்வொரு வருடமும் நடக்கும். ஒவ்வொரு 3 கிலோமீற்றரிலும் தண்ணீர்ப்பந்தலில் பியர் வழங்கப்படும். குடித்துவிட்டு ஓட வேண்டும். இப்ப்படியான போட்டி பெல்ஜியத்தில் பரவலாக நடப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். 😀

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, இணையவன் said:

நன்ற்றி ஜஸ்ரின்.

நான் அறிந்த வகையில் உடலுக்குச் சக்தியை (கலோரி) வழங்கும் வழிகளில் அல்கஹோலும் ஒன்று. என்ன பிரச்சனை என்றால் அல்கஹோல் வழங்கும் சக்தியை உடல் கட்டுப்படுத்தி மேலதிகமானதைச் சேமித்து தேவையானபோது பாவிக்க முடியாது. இதை வெறுமையான கலோரிகள் என்று பிரெஞ்சில் சொல்வார்கள். இரத்தத்தில் உடனடியாகச் சேர்க்கப்படும் இச் சக்தி உடனடியாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதால் இது முதன்மை பெற்று உடலின் ஏனைய சக்தி வழங்கல்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இது வேறு விடயம்.

 

ஆம், அல்கஹோல் தினசரி எடுத்துக் கொள்வோருக்கு உடல் பருமன், கொழுப்பு தொடர்பான நோய்கள் வருவதற்கு நீங்கள் சொன்னது தான் காரணம். எனவே தான் பியர் குடிப்போரும் -சிறிதளவே அல்கஹோல் அதில் இருந்தாலும் - அளவுக்கு மிஞ்சிப் போகக் கூடாது. 

On 22/10/2021 at 14:40, நிழலி said:

பின்னால் ஓடியவர்கள், நின்றவர்களைத் தான் திரும்பி பார்க்க முடியவில்லை, முன்னுக்கு ஒயிலாக ஓடுகின்றவ மயிலின் பெயர், விலாசம் அல்லது ஆகக் குறைந்தது தொலைபேசி இலக்கமாவது வாங்கினீர்களா? 😄

நிழலி, பின்னால் ஓடியவர்களிடம் Start Point ல் பெயர், விலாசம், தொலைபேசி எண் கேட்க போய் தான் இவ்வளவு வேகமாக ஓட முடிந்தது இணையவனுக்கு.😀 அதற்கும் முன்னே ஓடும் மயிலிடம் கேட்க போனால் சுற்றி வளைத்து கும்மிவிடுவார்களே. 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.