Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்ற இளம் தாய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியைச் சேர்ந்த ஹலிமா சிஸ்ஸே என்ற 25 வயதான தாய் ஒருவர் ஒன்பது குழந்தைகளைப் பிரசவித்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

181709604_350400733309948_11083035520017

இவருக்கு 5  ஆண் குழந்தைகளும் 4 பெண் குழந்தைகளும் ஒரே பிரசவத்தில் கிடைத்துள்ளன.

ஏற்கனவே இவரை ஸ்கேன் செய்த போது இவருக்கு ஏழு குழந்தைகள் பிறக்கும் என வைத்தியர்கள் கூறியிருந்தனர்.

எனினும் ஒன்பது குழந்தைகளை அடுத்தடுத்து பிரசவித்துள்ளார் இந்த இளம் தாய்.

181759430_350400819976606_21537309185498

அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

181638832_350400783309943_63210212952206

மாலி இளம் தாயின் இந்த பிரவசவம் உலகில் ஆச்சரியமாக பார்க்கப்படுவதுடன் மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தலைவர்களையும் ஈர்த்துள்ளது.

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்ற இளம் தாய் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கெனவே பயங்கரமான சனதொகை பெருக்கத்தால் ஊழலால் ஏழ்மையை அனுபவிக்கும் மாலி நாட்டிற்கு மேலும் சோதனை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே பிரசவத்தில்... 9 குழந்தைகள்  என்பது அதிகம்.
தாய்க்கும், சேய்க்கும்... ஆபத்து ஏற்படாமல் பிறந்து பெரிய விடயம்.
குழந்தைகளில்...  ஏதாவது ஒன்று ஊனமாக பிறந்திருந்தாலே,
பெற்றோருக்கு அது பெரிய போராட்டமாக இருந்திருக்கும்.

இங்கு.... மூன்று குழந்தைக்கு மேல், கரு உருவாகி இருந்தால்,
ஆரம்பத்திலேயே.. பெற்றோர் சம்மதத்துடன், 
மற்றவற்றை... கலைக்க சொல்லி  ஆலோசனை கொடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

200x9= ?????????

ஜேர்மனியிலை எண்டால்.......கிண்டர் கெல்ட் எவ்வளவு வரும் சிறித்தம்பி? 😎

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

200x9= ?????????

ஜேர்மனியிலை எண்டால்.......கிண்டர் கெல்ட் எவ்வளவு வரும் சிறித்தம்பி? 😎

மாலியிலும் பிரான்ஸ் சட்டம் தான். இனி அவர்கள் லட்சாதிபதிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, விசுகு said:

மாலியிலும் பிரான்ஸ் சட்டம் தான். இனி அவர்கள் லட்சாதிபதிகள்

உலகத்திலையே பெரிய செல்வம் எண்டால் பிள்ளைச்செல்வம் தான் எண்டு எங்கடை ஊரிலை சொல்லுவினம். நான் காசை வைச்சு சொல்லேல்லை. ஒரு குடும்பத்திலை 10 பிள்ளைகள் எண்டால் அந்த குடும்பத்தின்ரை பலம் சொல்லி வேலையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

200x9= ?????????

ஜேர்மனியிலை எண்டால்.......கிண்டர் கெல்ட் எவ்வளவு வரும் சிறித்தம்பி? 😎

குமாரசாமி  அண்ணை.... 9 x 350 = 3150 €.

அம்மாவுக்கு.... உடனடியாக முழு ஓய்வூதியம். அப்பா... அந்தக் காசை வைத்தே.... புது, “மெர்சிடஸ் பென்ஸ்” கார் வாங்கி, ஜாலியாக ஓடலாம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இங்கே உயர் நிலையில் உள்ள பிரான்ஸ் யேர்மனியை வைத்து மாலிக் நாட்டில் 9 குழந்தைகள் பெற்ற கொண்டதை நினைக்கிறீர்கள். மாலி நாட்டின் நிலை இந்தியா பங்களாதேஷ் பாக்கிஸ்தான் இவற்றுக்கும் கீழே உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் இங்கே உயர் நிலையில் உள்ள பிரான்ஸ் யேர்மனியை வைத்து மாலிக் நாட்டில் 9 குழந்தைகள் பெற்ற கொண்டதை நினைக்கிறீர்கள். மாலி நாட்டின் நிலை இந்தியா பங்களாதேஷ் பாக்கிஸ்தான் இவற்றுக்கும் கீழே உள்ளது.

இதே நிலை இலங்கையாக இருந்தாலும் கஞ்சியும் கந்தல் துணியும் தான். நாம் எதையும் மறக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

இதே நிலை இலங்கையாக இருந்தாலும் கஞ்சியும் கந்தல் துணியும் தான். நாம் எதையும் மறக்கவில்லை.

இதுக்கு தான் ஒன்றோட ஓரத்தில படுத்துறங்குவது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதுக்கு தான் ஒன்றோட ஓரத்தில படுத்துறங்குவது .

எனக்கு ஒண்டும் விளங்கேல்லை.....இன்னுமொருக்கால்....😎

  • கருத்துக்கள உறவுகள்
On 9/5/2021 at 02:59, குமாரசாமி said:

எனக்கு ஒண்டும் விளங்கேல்லை.....இன்னுமொருக்கால்....😎

தணிக்கை செய்யப்பட்டுள்ளது சாமியார்

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2021 at 19:32, தனிக்காட்டு ராஜா said:

இதுக்கு தான் ஒன்றோட ஓரத்தில படுத்துறங்குவது .

ஓரத்தில் படுத்துறங்குவது ஒராள் எடுக்கும் முடிவல்ல ராசா.......முந்தானை விலகினாலோ  மூச்சுகாற்று பட்டாலோ  முனகல் தொடங்கிடும் ராசா......!  😢

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தணிக்கை செய்யப்பட்டுள்ளது சாமியார்

13 minutes ago, suvy said:

ஓரத்தில் படுத்துறங்குவது ஒராள் எடுக்கும் முடிவல்ல ராசா.......முந்தானை விலகினாலோ  மூச்சுகாற்று பட்டாலோ  முனகல் தொடங்கிடும் ராசா......!  😢

ஐயோ கொல்லுறாங்களே.......🥰

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

ஓரத்தில் படுத்துறங்குவது ஒராள் எடுக்கும் முடிவல்ல ராசா.......முந்தானை விலகினாலோ  மூச்சுகாற்று பட்டாலோ  முனகல் தொடங்கிடும் ராசா......!  😢

மன்மதன் ஐயா நீங்க சகல ரகசியங்களையும் கரைத்து குடித்து இருக்கிறீர் இந்த ரகசியம் எமக்குள் இருக்கட்டும் என்ன 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.