Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெருசலேமில் வெடித்த புதிய மோதலால் 100 க்கும் மேற்பட்டோர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெருசலேமில் வெடித்த புதிய மோதலால் 100 க்கும் மேற்பட்டோர் காயம்

ஜெருசலேமில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலிய பொலிஸாருக்கும் இடையே சனிக்கிழமை வெடித்த புதிய மோதல்களின் விளைவாக 100 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

பழைய நகரான டமாஸ்கஸ் கேட்டில் எதிர்ப்பாளர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசினர், அதிகாரிகள் கையெறி குண்டுகள், இறப்பர் தோட்டாக்கள் மற்றும் நீர் பீரங்கி மூலம் பதிலளித்துள்ளனர்.

E03yO-mX0AwDjgD.jpg

யூதக் குடியேற்றவாசிகளால் உரிமை கோரப்பட்ட நிலத்திலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கான அமைதியின்மையாக இது தொடர்கிறது.

அல்-அக்ஸா மசூதி அருகே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 200 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் மற்றும் குறைந்தது 17 இஸ்ரேலிய பொலிஸார் காயமடைந்ததாக அவசரகால தொழிலாளர்கள் மற்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதி வளாகம் இஸ்லாத்தின் மிகவும் மதிக்கப்படும் தளங்களில் ஒன்றாகும், இந்த வளாகம் வன்முறைகளால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

முஸ்லிம்களின் புனித ரமலான் மாதம் முழுவதும் நகரத்திலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும், காசாவிலும் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. 

 

https://www.virakesari.lk/article/105155

 

  • கருத்துக்கள உறவுகள்

 

அல் அக்­ஸா மீதா­ன இஸ்ரேலின் மிலே­ச்­சத்­த­ன­மா­ன தாக்­கு­தல்­களை வன்­மை­யாகக் கண்­­டிக்­கி­றோம்

பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு

 

http://www.vidivelli.lk/wp-content/uploads/2021/05/SLCSP.pngஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்­ளி­வா­ச­­லில் தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேலியப் படையினர் மற்றும் பொலிஸாரினால் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலுக்கு பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்­ளது.

பலஸ்தீனுக்­கா­ன இலங்கை ஒருமைப்பாட்டுக் குழுவின் இணைத் தலைவர் பிமல் ரத்­நா­யக்­க, பொதுச் செய­லாளர் பெளசர் பாரூக் ஆகியோர் இணைந்து வெளி­யிட்­டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்­பி­­டப்­பட்டிருப்பதாவது:

ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா பள்­ளி­வா­ச­லில் ரமழானை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இஸ்ரேலியப் படையினரால் கடந்த வாரம் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை வன்­­மை­யாகக் கண்­டிக்­கி­­றோம். அது மாத்திரமன்றி கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷெய்க் ஜர்ராவிற்கு அருகில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்களை சட்டத்திற்கு முரணாக வெளியேற்றுவதற்கும் சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களை நிறுவுவதற்குமான முயற்சிகளையும் கண்டிக்கின்றோம்.

சர்வதேச ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் மற்றும் பலஸ்தீனத்திலிருந்து வெளிவரும் செய்திகள் ஆகியவற்றின் அடிப்படையில் நோக்குகையில், இஸ்ரேலியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப்பிரயோம் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன் பள்­ளி­வா­ச­லுக்குள் இறப்பர் குண்டுகளும் கைக்குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலின் காரணமாக நோன்பு மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமையன்று தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனியர்களில் சுமார் 200 பேர்வரையில் காயமடைந்துள்ளனர். இந்த மிகமோசமான மனிதத்தன்மையற்ற அத்துமீறிய தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்.

பல தசாப்தகால சட்டவிரோத இஸ்ரேலியக் குடியேற்றங்களின் அண்மைக்கால பேசுபொருளாக மாறியிருக்கும் ஷெய்க் ஜர்ராவை அண்மித்த பகுதிகளிலும் இஸ்ரேலியப் படையினரின் இந்த நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு சட்டத்திற்கு முரணான வகையில் இஸ்ரேலியக் குடியேற்றங்களை நிறுவுவதற்கான முயற்சிகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட மனிதாபிமானக் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானவையாகும்.

எனவே இஸ்ரேலியப் படைகளின் இந்த மனிதத்தன்மையற்ற செயற்பாட்டைக் கண்டித்துவரும் உலக நாடுகளுடன் இலங்கை அரசாங்கமும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அத்தோடு ஜெருசலேமிலுள்ள அல் அக்ஸா உள்­ளிட்ட புனித தலங்­களின் காவ­லர்­கள் என்ற அடிப்படையில் இது விடயத்தில் உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று ஜோர்தானைக் கோருகின்றோம்.
மேலும் இஸ்­ரே­லிய ஆக்­கி­ர­மிப்பாளர்கள் சர்­வ­தேச சட்­டங்­களை மதித்து நடக்க வேண்­டும் என்றும் ஐக்­கிய நாடுகள் சபை பலஸ்­தீன மக்­கள் எதிர்­நோக்­கி­வரும் பிரச்­சி­­னை­களை முடி­­வுக்குக் கொண்டு வரு­வ­தற்­கான தனது பொறுப்­புக்­களை நிறை­வேற்ற முன்­வர வேண்­டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

http://www.vidivelli.lk/article/10697

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் ராக்கெட் தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு!

ஹமாஸ் ராக்கெட் தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 20 பேர் உயிரிழப்பு!

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் ராக்கெட் தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய வான்வெளி தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.

ஹமாஸ் பயங்கரவாதிகளின் ராக்கெட் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் அந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை பதிலடி கொடுத்துள்ளது.

காசா முனையில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 20 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் பதிலடி தாக்குதலால் ஜெருசலேம், ஹமாஸ் பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

https://athavannews.com/2021/1214947

  • கருத்துக்கள உறவுகள்

 

Jerusalem violence: பதிலடி கொடுத்த Israel; Al-Aqsa Mosque ல் வன்முறை- முழுமையான Palestine கள நிலவரம்

 

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல்

ஹமாஸ் அரசியல் தலைமையின் அலுவலகமாக செயற்பட்டுவந்த 13 மாடி கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்!

ஹமாஸ் அரசியல் தலைமையின் அலுவலகமாக செயற்பட்டுவந்த 13 மாடி கட்டடத்தை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது.

குறிப்பாக கடந்த திங்கட்கிழமை அல்-அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனைபகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் ரொக்கெட் தாக்குதல் நடத்தியது.

இதற்கு இஸ்ரேலிய இராணுவத்தின் பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் காசா முனை பகுதியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை நேற்று மீண்டும் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டது.

காசா டவர் என்று அழைக்கப்படும் அந்த கட்டிடம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகம் செயற்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக அந்த 13 மாடி கட்டடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ள போதிலும் இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் குறித்த பகுதிகளில் பதற்றம் நீடிக்கிறது.

https://athavannews.com/2021/1215253

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹிட்லர் யூதர்களுக்கு செய்ததை இன்று இஸ்ரேல் (யூதர்கள்)  பாலஸ்த்தீனியர்களுக்கு செய்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

ஹிட்லர் யூதர்களுக்கு செய்ததை இன்று இஸ்ரேல் (யூதர்கள்)  பாலஸ்த்தீனியர்களுக்கு செய்கிறார்கள். 

நாளை சீனர்கள் யூதர்களுக்கு செய்வார்கள் 
உலகம் ஒரு உருண்டை வரலாறும்  சுழன்றுகொண்டு இருக்கும் 

ரஷ்யர்களுக்கும் தீர்க்க வேண்டிய பல பழைய கணக்குகள் இருக்கிறது 

அழிந்த சாம்ராஜ்ஜியங்களும் அதிகாரமும்தான் வரலாறு பூராக உண்டு 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் - ஹமாஸின் பரஸ்பர ரொக்கெட் தாக்குதல்களால் இதுவரை 70 க்கும் மேற்பட்டோர் பலி!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் இராணுவ பிரிவு ஒருவருக்கொருவர் நூற்றுக்கணக்கான ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியுள்ளமையினால் இதுவரை 70 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

gaza3.jpg

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 69 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய அதிகாரிகளின் கூறியுள்ளனர்.

அதேநேரம் காசாவிலிருந்து ரொக்கெட்டுகள் வீசியதன் விளைவாக, ஏழு இறப்புகளையும் 200 க்கும் மேற்பட்ட காயங்களையும் இஸ்ரேல் உறுதிப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலிய படைகள் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதால் காசா பகுதியில் கடும் குண்டுவீச்சு வியாழக்கிழமை அதிகாலை தொடர்ந்தது.

ஹமாஸ் அதன் காசா நகர தளபதி பாஸ்ஸெம் இசா, இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பதை உறுதிபடுத்தியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் பொலிஸ் கட்டிடங்களுக்கு மேலதிகமாக பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கு சொந்தமான தளங்களில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசியதாக பாலிஸ்தீனிய வட்டாரங்கள் தெரிவித்தன.

gaza1.jpg

காசாவின் சுகாதார அமைச்சகம் சமீபத்திய தாக்குதலின் தொடக்கத்திலிருந்து 17 சிறுவர்கள், எட்டு பெண்கள் உட்பட மொத்தம் 69 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், 390 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வியாழக்கிழமை அறிவித்தது.

முற்றுகையிடப்பட்ட கடலோரப் பிரதேசத்தில் 14 மாடிக் கட்டிடத்தை இஸ்ரேலிய ஏவுகணைகள் அழித்ததை அடுத்து, காசா பகுதியை நிர்வகிக்கும் ஹமாஸ், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கொடிய ரொக்கெட் தாக்குதல்களை கட்டவிழ்த்தது.

gaza2.jpg

இதன் விளைவாக ஆறு வயது சிறுவன் உட்பட மொத்தம் 6 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் காசாவிலிருந்து இஸ்ரேலின் பல்வேறு இடங்களுக்கு சுமார் 1,500 ரொக்கெட்டுகள் வீசப்பட்டதாகக் கூறியுள்ளது.

அதேநேரம் பாலஸ்தீனிய இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் யூத இஸ்ரேலியர்களுடன் மோதிக்கொண்ட நிலையில், இஸ்ரேலுக்குள் இனங்களுக்கு இடையிலான வன்முறைகளும் பதிவாகியுள்ளன.

இஸ்ரேலுக்கு எதிராக இன்னும் பன்முகப்படுத்தப்பட்ட பதிலடி தொடரும் என்றும், பாலஸ்தீனியர்களைப் பாதுகாப்பதற்கான தனது போராட்டத்தை தனது குழு முன்னெடுக்கும் என்று ஹமாஸின் செய்தித் தொடர்பாளர் ஹசீம் கஸ்ஸெம் உறுதியாக கூறியுள்ளார்.

இந் நிலையில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான பதற்றங்கள் மற்றும் பல நாட்கள் எல்லை தாண்டிய விரோதங்களுக்கு மத்தியில் ஜெருசலேமில் உள்ள முஸ்லிம்கள் புனித ரமலான் மாதத்தின் முடிவைக் கொண்டாடும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி இஸ்லாமிய நாட்காட்டியில் பிரார்த்தனை மற்றும் நோன்பின் ஒரு மாதமான புனித ரமழான் மாதத்தின் முடிவான ஈத் அல்-பித்ரைக் கொண்டாட பிரார்த்தனைகளில் இணைய முஸ்லிம் வழிபாட்டாளர்கள் ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதிக்கு வெளியே கூடிவருகிறார்கள்.

5SVQTmqZ.jpg

காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் டஜன் கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதையடுத்து பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஈத் அல் பித்ர் கொண்டாட்டங்களை முன்னதாக ரத்து செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/105422

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

அகதியாக தஞ்சமடைந்த இங்கிலாந்து பிரான்ஸ் ஜேர்மனி உட்பட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை இன்னும் 25 வருடங்களுக்குள் இஸ்லாமிய நாடுகளாக மாற்றுவோம்னு முஸ்லீம்கள் எக்காளமிடுவது சரியென்றால்,

ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்லாமிய நிலபரப்பை முழுவதுமாக இஸ்ரேலாக மாற்றுவோம் என்று இஸ்ரேல் நினைப்பதில் என்ன தவறு?

இஸ்ரேலாவது ஒரு நாட்டைதான் ஆக்கிரமிக்கிறது, இவர்கள் முழு உலகையுமே இஸ்லாத்தின் ஆளுகையின்கீழ் கொண்டுவர துடித்து படிப்படியாக பிறமதத்தவரை வகை தொகையின்றி கொன்று அதன் பழியை அமெரிய யூத சதி என்று அள்ளிவிட்டு உள்ளூக்குள் பெரு மகிழ்வடைகிறார்கள்.

தமது இனத்துக்கு சிறு பாதிப்பென்றால் அநியாயம் அக்கிரம் என்று உலகம் முழுவதிலுமே பொங்கியெழுகிறார்கள், பிற மதத்தை சேர்ந்தவர்களை தமது மதத்தினர் கொன்று குவிப்பதுக்கு ஒருவரி கண்டனம்கூட தெரிவிக்காமல் பெரும் மெளனம் காக்கிறார்கள்.

 

அதாவது பிறரை கொன்று அடுத்தவன்மேல் பழிபோட்டு அவர்களது இனபரம்பலை குறைக்கவேண்டும் அதேவேளை தமது இனத்தை  பத்திரமா பாதுகாத்து உலகம் முழுவதும் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்
.

சதிக்கு உலகில் பெயர் போனவர்கள் யூதர்கள், அவர்களிடம் உங்கள் சதி திட்டங்கள் எடுபடாது.

ஹமாஸ் ராக்கெட் தாக்குதலை நிறுத்தினால் இஸ்ரேலும் தாக்குதலை நிறுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமியருக்குத் தேவையான vaccine இஸ்ரேலிடம்தான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன் தற்போதைய இஸ்ரேல்

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

185742884_498372127970679_90724899109918

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல்- ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் மோதல்: காஸாவில் 132 பாலஸ்தீனர்களும் இஸ்ரேலில் 8பேரும் உயிரிழப்பு!

இஸ்ரேல்- ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் மோதல்: காஸாவில் 132 பாலஸ்தீனர்களும் இஸ்ரேலில் 8பேரும் உயிரிழப்பு!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் இடையே நடக்கும் மோதலில், காஸாவில் 132 பாலஸ்தீனர்களும் இஸ்ரேலில் எட்டு பேரும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மேற்குக் கரையில் நடந்த வன்முறையில் 11பேர் கொல்லப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவில் ஒரு சுரங்கப்பாதை வலையமைப்பில் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் இஸ்ரேலை நோக்கி டஸன் கணக்கான nhக்கெட்டுகளை வீசியுள்ளது

மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காசா முனை மீது தாக்குதல் நடத்த விமானப்படையுடன் சேர்த்து தரைப்படையையும் இஸ்ரேல் களமிறக்கியுள்ளது. இதனால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

காசா முனையில் வசித்து வந்த பாலஸ்தீனர்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர். தற்போது மேற்குக் கரையில் மோதல்கள் பரவியுள்ளன

ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மத வழிபாட்டு தளத்தில் வழிபாடு செய்வதற்கு பாலஸ்தீனியர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள இஸ்ரேல், ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுத்தது.

இதனால் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த மோதல், கடந்த சில நாட்களாக உச்சத்தை தொட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஷா மதவழிபாட்டு தளம் அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை பெருமளவில் குவிந்த பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தடுக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் முயற்சித்தனர். அப்போது, இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் இஸ்ரேல் இராணுவம் காசா பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

https://athavannews.com/2021/1215937

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் வான்வழித் தாக்குதல் நடத்தினர்.

ஆதவன் செய்தி நிறுவனம் தாக்குதலுக்கான விமானத்தை  ஹமாஸுக்கு வழங்கியதாக தெரிகிறது.🤣

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

ஆதவன் செய்தி நிறுவனம் தாக்குதலுக்கான விமானத்தை  ஹமாஸுக்கு வழங்கியதாக தெரிகிறது.🤣

இந்த ரகசியம்.... நமக்குள்ளே இருக்கட்டும். 🤣 😁

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

இந்த ரகசியம்.... நமக்குள்ளே இருக்கட்டும். 🤣😁

ஆமாமா ,

வலு கவனமாயிருக்கோணும், விஷயம் வெளியில தெரிஞ்சால் இஸ்ரேலுக்கும் ஆதவனுக்கும் இடையில் பெரும் மோதல் வெடிப்பதற்கான சாத்தியம் இருக்கு எண்டுதான் நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, valavan said:

ஆமாமா ,

வலு கவனமாயிருக்கோணும், விஷயம் வெளியில தெரிஞ்சால் இஸ்ரேலுக்கும் ஆதவனுக்கும் இடையில் பெரும் மோதல் வெடிப்பதற்கான சாத்தியம் இருக்கு எண்டுதான் நினைக்கிறன்.

ஆதவனிடம்.... இன்னும், ஆயிரக்கணக்கான போர்  விமானங்கள் இருப்பதால்... இஸ்ரேல் கொஞ்சம் அடக்கி வாசிக்கும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2021 at 09:55, valavan said:

அகதியாக தஞ்சமடைந்த இங்கிலாந்து பிரான்ஸ் ஜேர்மனி உட்பட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை இன்னும் 25 வருடங்களுக்குள் இஸ்லாமிய நாடுகளாக மாற்றுவோம்னு முஸ்லீம்கள் எக்காளமிடுவது சரியென்றால்,

ஆக்கிரமிக்கப்பட்ட இஸ்லாமிய நிலபரப்பை முழுவதுமாக இஸ்ரேலாக மாற்றுவோம் என்று இஸ்ரேல் நினைப்பதில் என்ன தவறு?

இஸ்ரேலாவது ஒரு நாட்டைதான் ஆக்கிரமிக்கிறது, இவர்கள் முழு உலகையுமே இஸ்லாத்தின் ஆளுகையின்கீழ் கொண்டுவர துடித்து படிப்படியாக பிறமதத்தவரை வகை தொகையின்றி கொன்று அதன் பழியை அமெரிய யூத சதி என்று அள்ளிவிட்டு உள்ளூக்குள் பெரு மகிழ்வடைகிறார்கள்.

தமது இனத்துக்கு சிறு பாதிப்பென்றால் அநியாயம் அக்கிரம் என்று உலகம் முழுவதிலுமே பொங்கியெழுகிறார்கள், பிற மதத்தை சேர்ந்தவர்களை தமது மதத்தினர் கொன்று குவிப்பதுக்கு ஒருவரி கண்டனம்கூட தெரிவிக்காமல் பெரும் மெளனம் காக்கிறார்கள்.

 

அதாவது பிறரை கொன்று அடுத்தவன்மேல் பழிபோட்டு அவர்களது இனபரம்பலை குறைக்கவேண்டும் அதேவேளை தமது இனத்தை  பத்திரமா பாதுகாத்து உலகம் முழுவதும் அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்
.

சதிக்கு உலகில் பெயர் போனவர்கள் யூதர்கள், அவர்களிடம் உங்கள் சதி திட்டங்கள் எடுபடாது.

ஹமாஸ் ராக்கெட் தாக்குதலை நிறுத்தினால் இஸ்ரேலும் தாக்குதலை நிறுத்தும்.

இதில் ஒரு வரியை கூட உங்களால் 
உண்மை என்று நிறுவ முடியாது .. 
காரணம் இவை எதிலும் சற்று உண்மை கூட இல்லை.

எதோ ஒரு பரப்புரையை அவ்வாறே கொப்பி பேஸ்ட் செய்து இருக்கிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 13/5/2021 at 16:13, குமாரசாமி said:

 

சர்வதேச ஊடக நிறுவனங்கள் இருந்த கட்டடக் கோபுரத்தைத் தாக்கியழித்தது இஸ்ரேல்- உச்சக்கட்டத் தாக்குதல்!

சர்வதேச ஊடக நிறுவனங்கள் இருந்த கட்டடக் கோபுரத்தைத் தாக்கியழித்தது இஸ்ரேல்- உச்சக்கட்டத் தாக்குதல்!

காசா நகரில் உள்ள சர்வதேச ஊடக நிறுவனங்களும் அமைந்துள்ள கட்டடத் தொகுதி இஸ்ரேலிய விமானப்படையின் தாக்குதலில் தகர்க்கப்பட்டுள்ளது.

15 மாடிகள் கொண்ட குறித்த கட்டத் தொகுதியில் அசோசியேட்டட் பிரஸ் மற்றும் அல் ஜசீரா ஆகிய சர்வதேச ஊடக நிறுவனங்கள் மற்றும் பல உள்ளூர் ஊடகங்கள், பல இணைய ஊடகங்கள் உள்ளிட்ட அலுவலகங்கள், தனியார் குடியிருப்புகள் ஆகியன இருந்தன.

இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையிலான தொடர்ச்சியான போரின் ஆறாவது நாளான இன்று (சனிக்கிழமை) மக்கள் திரட்சிகொண்ட நகர மையப் பகுதியில் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.

மக்கள் வெளியேறுவதற்கு ஒரு மணிநேரம் அவகாசம் கொடுத்த பின்னர், வான்வழித் தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் இராணுவம், குறித்த கட்டடக் கோபுரத்தை முற்றாக அழித்துள்ளது.

எனினும், குறித்த கட்டம் அழிக்கப்பட்டமைக்கான சரியான காரணத்தை இஸ்ரேல் தெரிவிக்காத நிலையில், இந்தத் தாக்குதல் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது என சர்வதேச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கட்டிடத்தின் உரிமையாளர் அபு ஹுஸாம், இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரியைத் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு, குறித்த கட்டடத்தில் உள்ள ஊடகக் பணியாளர்களுக்கு தங்கள், அலுவலகங்களில் இருந்து உபகரணங்களை வெளியேற்ற நேரம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார். எனினும் அவரது கோரிக்கை மறுக்கப்பட்டது.

இதேனிடையே, குறித்த கட்டடத்தில் ஹமாஸின் உளவுத்துறை அலுவலகங்களுக்குச் சொந்தமான இராணுவச் சொத்துக்கள் இருந்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த கட்டடத்தில் இருந்து, பொதுமக்கள் வெளியேற முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததுடன், அவர்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறப் போதுமான நேரம் வழங்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஹமாஸ் இயக்கம், வேண்டுமென்றே காசா பகுதியில் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளின் மையத்தில் இராணுவத் தளங்களை வைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Israel-bombed-a-Gaza-media-tower-3.jpg

Israel-bombed-a-Gaza-media-tower-4.jpg

Israel-bombed-a-Gaza-media-tower-7.jpg

Israel-bombed-a-Gaza-media-tower-5-scaled.jpg

Israel-bombed-a-Gaza-media-tower-6.jpg

Israel-bombed-a-Gaza-media-tower-2.jpg

https://athavannews.com/2021/1215984

  • கருத்துக்கள உறவுகள்

 

பாலஸ்தீன செய்திகளுக்கு ஆப்பு | Israel அசுரனாக மாறி விட்டது 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் குழுவின் தலைவரை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் இராணுவம் இடையிலான மோதல் 7ஆவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

இந்த நிலையில், காசா நகரில் ஹமாஸ் போராளிகள் அமைப்பின் அரசியல் தலைவரான யஹ்யா சின்வாரின் வீட்டை குண்டு வீசித் தகர்த்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.‌

அத்தோடு, யஹ்யா சின்வாரின் சகோதரரான முஹமது சின்வாரின் வீடும் தரைமட்டமாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் தலைவரின் வீடு குண்டு வீசி தாக்கப்பட்டது தொடர்பான வீடியோ ஒன்றையும் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.

இவர்கள் இருவரும் ஹமாஸ் போராளிகள் அமைப்பின் தளவாடங்கள் மற்றும் மனிதவள தலைவர்களாக இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

யஹ்யா சின்வாரின் வீடு குண்டு வீசித் தகர்க்கப்பட்டதை பாலஸ்தீன அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் யஹ்யா சின்வார் மற்றும் முஹமது சின்வார் குறித்து உத்தியோகப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் இராணுவம் வான்தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குவதும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1216193

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.