Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது -வலி சுமந்த மாதத்தின் 10 ம் நாள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது -வலி சுமந்த மாதத்தின் 10 ம் நாள்.

2009 மே 09 சனிக்கிழமை இரவு மற்றும் 10.05.2009  ஞாயிற்றுக்கிழமை காலை சிறிலங்கா இராணுவம் கொத்துக்குண்டுகள், ஆட்லறி எறிகணைகள் மற்றும் , கனொன் பீரங்கித்தாக்குதல்களை தொய்வின்றி செறிவாக மேற்கொண்டதில் 1200 க்கு மேற்பட்ட இறந்த பொதுமக்களின் உடல்களை தாங்கள் எண்ணியிருப்பதாக வன்னியிலிருந்து தெரியவந்தது ஆனாலும் இன்னும் எண்ணி முடிக்காமல் நிறைய உடல்கள் அங்காங்கு கிடக்கலாம் என்றும் அச்சம் நிலவியது

அதேவேளை படுகாயமடைந்து 1122 பேரும் இறந்த உடல்களாக  378 பேரும்  வைத்தியசாலைக்கு கொண்டவரப்பட்டதாகவும் இறந்தவர்களில் 106 பேரும் காயமடைந்தவர்களில் 251 பேரும் குழந்தைகள் என வைத்தியசாலை ஊழியர்கள் தகவல் தெரிவித்திருந்தனர் காயமடைந்தும் இறந்தும் போனவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களாகவும், மதியவர்களாகவும் இரந்தனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தவண்ணம் இருப்பதுடன் உண்மையான எண்ணிக்கையை கூட கணக்கிடமுடியாத அளவிற்கு  குறுகிய நாட்களுள்  பேரினவாத சிறிலங்கா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட பெரும் மனித படுகொலையாகவும் அது மாறிவருவதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

 இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மாற்றப்படுவதற்கு முன்னர் இந்தப்“ போரை முடிக்க  வேண்டும் என இந்தியா விரும்பியதாலேயே வகை தொகையின்றி  தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள் 

e6Ftp8yqqRjdxNWT38qG.jpg

qg45A4QVwx5AYB2jNDDA.jpg

orQgqiXU3Xn8dfy8CKtu.jpg

https://www.thaarakam.com/news/458f6bc5-da0e-4c50-a8e3-09da7b429def

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, கிருபன் said:

2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது -வலி சுமந்த மாதத்தின் 10 ம் நாள்.

இந்தியா மட்டுமல்ல எமது மாற்றுக்கருத்து மாணிக்கங்களும் விரும்பினார்கள்.
ஆனால்.....இன்று
தீயில் காலை வைத்தது போல் துவண்டு போய்விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 11/5/2021 at 07:50, கிருபன் said:

2009 மே மாதம் போரை முடிக்க வேண்டும் என இந்தியா விரும்பியது

இது முற்றிலும் தவறான ஒரு கருத்து. தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கு புலிகளே முற்றான காரணம். எமது இயலாமையினால் நாம் எமது தவறுகளை மற்றையவர்கள்மேல் போட்டுவிட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறோம்.

இந்தியாவோ இலங்கையோ தமிழ் மக்களை அழிக்கவில்லை. அவர்களை அழிக்கவேண்டிய தேவை எள்ளளவும் இந்தநாடுகளுக்கு இருக்கவில்லை.

ஆனால், தமிழர்களை எந்த விதத்திலாவது கொல்லவேண்டும் என்கிற தேவையும், விருப்பும் புலிகளுக்கு இருந்தது. அதனாலேயே 2006 இல் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முறித்துக்கொண்டு, சர்வதேசத்தின் உதவியுடன் இலங்கையை பேச்சுவார்த்தை மேசையிலிருந்து தள்ளி வெளியேற்றிவிட்டு, வன்னியில் இருந்த சர்வதேச அமைப்புக்களையும், தொண்டர் நிறுவனங்களையும் துரத்திவிட்டு, சாட்சிகள் அற்ற முற்றான இனக்கொலைக்கு ஆயத்தப்படுத்தினார்கள். மக்களைக் காக்க மனிதாபிமானப் போர் நடத்திய சிங்கள அரசையும், மீட்புப் பணிகளுக்கு உதவ வந்த இந்தியாவையும் சர்வதேசத்தில் அவமானப்படுத்த தாமே கொத்துக்குண்டுகளையும், ஆட்டிலெறி எறிகணைகளையும், மிகையொலி வான்குண்டு வீச்சுக்களையும் மழைபோலப் பொலிந்துதள்ளி, சூனியப் பிரதேசங்கள், வைத்தியசாலைகள், அகதிமுகாம்கள் மீதும் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து தாம் மிரட்டிப் பெற்றுக்கொண்ட அமைவிட புள்ளிகளைத் துல்லியமாகத் தாக்கி ஆயிரக்கணக்கில் மக்களைக் கொன்றுதள்ளி, கொல்லப்பட்ட தமிழ்ப் பெண்கள் மீதுகூட பாலியல் வன்புணர்வைக் கட்டவிழ்த்துவிட்டு, வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த இலங்கை ராணுவத்தினரை சுட்டுக்கொன்று, சரணடைந்த ராணுவ வீரர் ஒருவரின் மகனுக்கு சிற்றுண்டி கொடுத்த கையோடே அருகிலிருந்து மார்பில் சுட்டுக்கொன்றும் இந்த உலகம் பார்த்திராத இனக்கொலையினை அரங்கேற்றிவிட்டு முழுப்பழியினையும்  இலங்கையரசு மீதும் , இந்தியாவின்மீதும் போட்டுவிட்டுத் தப்பித்துக்கொண்டவர்கள். 

இன்னும் சொல்லப்போனால், இந்தியாவும் இலங்கையும் சரியான நேரத்தில் முள்ளிவாய்க்காலுக்குப் போயிருக்காவிட்டால் மீதமிருந்த 288,000 தமிழர்களையும் கடற்கரையிலேயே கொன்றுதள்ளி தமது வெறியைத் தீர்த்திருப்பார்கள்.

தமிழர்களைக் காத்து, புலிகளை அழித்த மகிந்தவின் மனிதாபிமான அரசுக்கும், காந்தியின் அகிம்சா தேசத்திற்கும் ஈழத்தமிழினம் வாழ்நாள்வரையில் நன்றிக்கடன் பட்டிருக்கிறது !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

தமிழர்களைக் காத்து, புலிகளை அழித்த மகிந்தவின் மனிதாபிமான அரசுக்கும், காந்தியின் அகிம்சா தேசத்திற்கும் ஈழத்தமிழினம் வாழ்நாள்வரையில் நன்றிக்கடன் பட்டிருக்கிறது !

வரலாற்றை கூட்டவோ குறைக்கவோ வேண்டியதில்லை. மாற்றவோ விளக்கவோ வேண்டியதில்லை. உள்ளது உள்ளபடி பதிவுசெய்து வைக்கவேண்டும். நேற்றைய வரலாற்றை திருத்துவதும், திரிப்பதும் அத்தருணத்தில் வாழ்ந்து, வலிகளை சுமந்து மாண்டவர்களையும், வலிகளுடன் இன்றும் வாழ்பவர்களையும் ஒரு பொருட்டாக மதிக்காத செயல்.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

வரலாற்றை கூட்டவோ குறைக்கவோ வேண்டியதில்லை. மாற்றவோ விளக்கவோ வேண்டியதில்லை. உள்ளது உள்ளபடி பதிவுசெய்து வைக்கவேண்டும். நேற்றைய வரலாற்றை திருத்துவதும், திரிப்பதும் அத்தருணத்தில் வாழ்ந்து, வலிகளை சுமந்து மாண்டவர்களையும், வலிகளுடன் இன்றும் வாழ்பவர்களையும் ஒரு பொருட்டாக மதிக்காத செயல்.

நான் வரலாற்றை எங்கே திரித்திருக்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நான் மேலே எழுதியது புலிகளாலேயே  தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், ஆகவே வெளியில் காரணங்களைத் தேடவேண்டாம் என்று அறிவுரை கூறும் கனவான்களின் கருத்துக்களைத்தான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

நான் வரலாற்றை எங்கே திரித்திருக்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நான் மேலே எழுதியது புலிகளாலேயே  தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், ஆகவே வெளியில் காரணங்களைத் தேடவேண்டாம் என்று அறிவுரை கூறும் கனவான்களின் கருத்துக்களைத்தான். 

ரஞ்சித், நீங்கள் எழுதியது பிண அரசியல் கருத்து. அதை எழுதி உங்களை நீங்களே கேவலப்படுத்தியுள்ளீர்கள். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

ரஞ்சித், நீங்கள் எழுதியது பிண அரசியல் கருத்து. அதை எழுதி உங்களை நீங்களே கேவலப்படுத்தியுள்ளீர்கள். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை.

பிண அரசியல் கருத்தா? அப்படியென்றால் என்னவென்று சிறிது விளக்குங்கள்.

4 minutes ago, கிருபன் said:

ரஞ்சித், நீங்கள் எழுதியது பிண அரசியல் கருத்து. அதை எழுதி உங்களை நீங்களே கேவலப்படுத்தியுள்ளீர்கள். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை.

இந்தக் கனவான்கள் கூறும்போது அமைதியாகக் கேட்டுக்கொண்டு நிற்கும் உங்களுக்கு, நான் அவர்கள் கூறுவதைக் கூறும்போது கேவலமாகத் தெரிகிறதா? அடுத்தது உங்களுக்குக் கேவலமாகத் தெரிவதால் மட்டும் எனது கருத்துக் கேவலமாகிவிடாது. எனது கருத்துக்கள் பற்றிய உங்கள் புரிதலுக்கு மிக்க நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, கிருபன் said:

ரஞ்சித், நீங்கள் எழுதியது பிண அரசியல் கருத்து. அதை எழுதி உங்களை நீங்களே கேவலப்படுத்தியுள்ளீர்கள். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கில்லை.

ரஞ்சித் கூறியது பிண அரசியல் என்றால் உங்கள் நிலைப்பாடு விபச்சார அரசியல் என்றாகிவிடும். 

இதில் எது சரியான அரசியல்..🤥

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kapithan said:

ரஞ்சித் கூறியது பிண அரசியல் என்றால் உங்கள் நிலைப்பாடு விபச்சார அரசியல் என்றாகிவிடும். 

இதில் எது சரியான அரசியல்..🤥

என்னுடைய நிலைப்பாடு என்ன என்று நீங்கள் புரிந்துவைக்கும் அரசியல்தான் சரியான அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கிருபன் said:

என்னுடைய நிலைப்பாடு என்ன என்று நீங்கள் புரிந்துவைக்கும் அரசியல்தான் சரியான அரசியல்.

அப்படியென்றால் எனது யூகம் தவறல்ல என்றாகிவிடுகிறது.. 🤥

புலிகள்தான் தமிழருக்கான தீர்வுக்கு தடை என்றார்கள், ஆனால் இன்று புலிகளும் இல்லை, தீர்வும் இல்லை…

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பழுவூர்கிழான் said:

புலிகள்தான் தமிழருக்கான தீர்வுக்கு தடை என்றார்கள், ஆனால் இன்று புலிகளும் இல்லை, தீர்வும் இல்லை…

புலிகளுக்கு முன்னரும் அது இருக்கவில்லை என்பதைத்தான் 
அவர்கள் உங்களுக்கு மறைத்தது 

யார் அடிக்கிறான் என்பதில் என்றாலும் கொஞ்சம் தெளிவு இருந்தால்தான் 
ஏன் அடிக்கிறார்கள் என்பதிலும் இருக்கும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Kapithan said:

அப்படியென்றால் எனது யூகம் தவறல்ல என்றாகிவிடுகிறது.. 🤥

கருத்தை எவர் வேண்டுமென்றாலும் சொல்லலாம். சொல்பவருக்கு இருக்கும் தகுதி என்ன என்பதே கருத்துக்கு மதிப்பை அளிக்கிறது. நீங்கள் அதிகம் தகுதி உள்ளவராக இருப்பதால் தரமும் அதிகமாகத்தான் இருக்கின்றது.😎

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, பழுவூர்கிழான் said:

புலிகள்தான் தமிழருக்கான தீர்வுக்கு தடை என்றார்கள், ஆனால் இன்று புலிகளும் இல்லை, தீர்வும் இல்லை…

சொன்னவர்களும் தமிழர்களுடன் இல்லை.☹️

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, கிருபன் said:

கருத்தை எவர் வேண்டுமென்றாலும் சொல்லலாம். சொல்பவருக்கு இருக்கும் தகுதி என்ன என்பதே கருத்துக்கு மதிப்பை அளிக்கிறது. நீங்கள் அதிகம் தகுதி உள்ளவராக இருப்பதால் தரமும் அதிகமாகத்தான் இருக்கின்றது.😎

நன்றி.

🙏

  • கருத்துக்கள உறவுகள்

Veeravanakkam

சிலருக்கு...  அப்பவும், இப்பவும்...   "புலி"  என்றாலே, 
"பயப் பிராந்தி" ... வந்து விடுகின்றது.

புலிகளின்.... போராட்டம், நேர்மையானது.
அவர்கள்... ஆயுதத்தை, மௌனித்த பின்...
பல வருடங்கள், கடந்தும்....

அதனை... இங்கு, விமர்சிக்க.. 
எவருக்கும்... எள்ளளவும், தகுதி இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

நான் வரலாற்றை எங்கே திரித்திருக்கிறேன் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?

நான் மேலே எழுதியது புலிகளாலேயே  தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், ஆகவே வெளியில் காரணங்களைத் தேடவேண்டாம் என்று அறிவுரை கூறும் கனவான்களின் கருத்துக்களைத்தான். 

ரஞ்சித் , 

இது பொது வெளி கருத்தாடல்களில் நானும்  அடிக்கடி சந்திக்கும் நிலைமைகளில் ஒன்று.

மற்றயவர்களும் ஒரு குறிப்பிட்ட ஒரு  தராதரத்திற்கு மேல் கருத்தாடப்படும் விடயத்தைப் பற்றி அறிந்து வைத்திருப்பர் எனும் அனுமாணமும் ஆக குறைந்தது பதில்  கருத்து இடுவதற்கு முன் முதல் பதிவை முழுமையாக வாசித்து விளங்கிக் கொண்டிருப்பர் என்ற எண்ணமுமே இந்நிலைக்கு இட்டுச் செல்கிறது..🤔 

  • கருத்துக்கள உறவுகள்

சாமானியன், ரஞ்சித்.. 
ஒரு, இலக்கை,  நோக்கி... பயணிப்பவர்கள்....
பொது... வெளியில்,  கருத்து முரண்பாடு.. வேண்டாம் என்பதே என் ஆசை.

இப்படி, உள்ளடி.... வேலைகளை  செய்ததால்...
எம்... தலைவனையும், போராளிகளையும், நாட்டையும்...  இழந்து நிற்கின்றோம்.
அது.. வேதனையின்... உச்சம். 

  • கருத்துக்கள உறவுகள்

வேறொரு குழுமத்தில் பதிவிட்டது இது.
 தி. மு. க.  பற்றி இப்படியெல்லாம் மனச்சாட்சியில்லாமால் எப்படி கதைக்கப் போயிற்று என்று நான் இப்ப முள்ளிவாய்க்காலின் நடுவில் சொல்லடிகளுக்கு மத்தியில்.
 பதிவில் உள்ளடங்கிய வேறு எது பற்றியும் அவர்களுக்கு கருத்து இல்லை என்பது ஒரு மனப்பாரத்துடன் கவனிக்காக கூடிய விடயம்……

மனித நேயங்களை பற்றி கதைக்கும் போது து மனதின் அடித்த தளத்தில் நீண்ட நாட்களாக கனன்று கொண்டிருக்கும் ஒரு சம்பவத்தை பகிரலாமோ என்று தோன்றுகிறது ..
எனது நெருங்கிய நண்பர் / உறவினரொருவர் இ பதின்ம வயதில் பிள்ளைகள் மூவர்-  இரு பெண்கள் ஒரு ஆண்.. மிகவும் வசதியாக வாழ்ந்த குடும்பம். 
பல நாட்களாக சாப்பாடில்லை இ மயக்கம் வரும்போது உணவு உதவி செய்ய கோயிலும் இல்லை. அருகிருந்த ஒருவருக்கும் உணவில்லை. இருந்த இடத்திலும் தொடர்ந்து இருக்க முடியாது.  
வீட்டிலிருந்து புறப்பட்டு நடக்கத் தொடங்குகிறார்கள்.
 ஒன்றாக நடப்பதில்லை உடம்பில் எஞ்சியிருந்த சக்தியை பொறுத்து சிலர் முன்னே பலர் துவண்டும் தவழ்ந்தும் பின்னே ..
இருந்தால்  போல் ஒரு பெரிய சத்தம் ..
பின்னால் வந்து கொண்டிருந்த தந்தை - எனது உறவினர் சதைக் குவியலாகினார் .
அப்பா என்று அலறிக் கொண்டு திரும்பி ஓடிச் சென்ற பதின்ம  வயது மகள் அப்பாவின்  குவியலை எட்டு முன்னரேஇ  தானும் ஒரு சதைக் குவியலாகிறாள். 
இதே நேரம் பல காத தொலைவு தள்ளி நாடகம் ஒன்று அரங்கேறுகிறது .
வயோதிபர்  ஒருவர் -  நடை பயில சென்றவர் -  இருந்தால் போல் மணலில் உட்கார-  குளிர் சாதனமும் சொகுசுக் காட்டிலும் அருகே வர-   நாடகம் தொடர்கிறது சில மணித் துளிகள்.. 
எனது  நண்பனினதும் மகளினதும் சதைக் குவியலை அப்படியே கைவிட்டு விட்டு தாயும் எஞ்சிய இருவரும் - அவர்களும் இப்போது சதைக் குவியலின் நிலை தான் - நடந்தார்களோ தவண்டார்களோ … 
மறு பக்கம் நாடகம் முடிகிறது பழ  ரசத்துடன் ..
ஆளுமை என்போருக்கு ஒன்று சொல்வேன்-  
மனிதனாக முதலில் இருப்பவர்களே பின்னர் ஆளுமை கொள்வர் .
நான் இங்கே அகரத்தை கரைத்துக் குடித்ததைப் பற்றி சொல்லவில்லை  உயிர்களை எள்ளி நகையாடியதையே மனப் பாரத்துடன்…..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.