Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியவளின் பொன் மொழிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துச் சிரங்கு ஒருவனுக்கு பிடித்துவிட்டால் அவனை ஒன்றுமே செய்யமுடியாது

அவன் பேனாவால் சொறிந்து கொண்டேயிருப்பான்

அதுதான் இங்க பலர் கீபோட்டை தட்டிகொண்டே இருக்கினமோ????

  • Replies 372
  • Views 56.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெண்னை அடக்கலாம் ஆனால் பெண்னின் மனத்தை அடக்க முடியாது.

Edited by rathy

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பென்னை சொல்கிறீர்கள் ரதி?. :icon_mrgreen:

பென்னல்ல பெண் ரதி.

  • கருத்துக்கள உறவுகள்

எந்த பென்னை சொல்கிறீர்கள் ரதி?. :icon_mrgreen:

பென்னல்ல பெண் ரதி.

தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி நுனாவிலான்.

Edited by rathy

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் முட்டாள்கள் தான் அதிகம் ஏன் என்றால் தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்று நினைப்பது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

01. கடவுள் நிச்சயம் புத்திசாலி ஆனால் அவன் ஒருபோதும் நேர்மையற்றவனாக இருந்ததில்லை - அல்பர்ட் ஐன்ஸ்டைன்.

02. இந்த உலகத்தை விளக்குவதற்காக, குறிப்பதற்காக கண்டு பிடிக்கப்பட்ட ஒரு சொல்லே கடவுளாகும். - அல்போன்ஸ்.டி.லாமர்டைன்

03. மனிதனின் கோபத்திற்கு மட்டுமே முதுமை கிடையாது, அதற்கு மரணம் மட்டுமே உண்டு. - சோபகிள்ஸ்

04. கோபத்தை வெளிக்காட்டுவது குளவிக்கூட்டில் கல்லெறிவது போன்ற செயலாகும் - மலபார் பழமொழி

05. எவன் ஒருவன் தனது கோபத்தைத் தடுத்துக் கொள்கிறானோ அவனே தன்னுடைய பெரிய எதிரியை வெற்றி கொண்டவனாகிறான். - லத்தீன் பழமொழி

06. உழைப்பு என்பது இந்தப் பிரபஞ்சத்தின் விதி ! வெட்டியாக சும்மா இருப்பதும் தற்கொலையும் ஒன்றுதான். - மாஜினி

07. கடுமையான உழைப்பாளிகள் பொதுவாக நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். காரணம் அவர்களுடைய உழைப்பு உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டு, உயரும் தன்மையை அவர்களுக்கு அளித்துவிடுகிறது. - போவீ

08. கடவுளுக்கு அடுத்தபடியாக உழைப்பை மட்டுமே நம்ப வேண்டும் - போவீ

09. துருப்பிடித்து அழிவதைவிட பயன்பட்டு தேய்வது மேல் - ரிச்சாட் கேம்பர்லேன்ட்.

10. வேலை மகிழ்ச்சியாகும்போது வாழ்க்கை சந்தோசமாகிறது. வேலை கடமையாகும்போது வாழ்க்கை அடிமைத்தனமாகிறது. - மாக்சிம் கார்க்கி

11. உட்கார்ந்திருக்கும் காகம் பட்டினிதான் கிடக்க வேண்டும் - ஐஸ்லாந்து பழமொழி.

12. சேம்பேறித்தனம் எல்லாவற்றையும் பிரச்சனைக்குரியதாகும், சுறுசுறுப்பு எல்லாவற்றையும் எளிதாக்கும் - பிராங்கிளின்.

13. தனது குழந்தைக்கு உழைப்பை, உழைப்பின் மேன்மையை கற்றுத்தரும் ஒரு தந்தை பெரும் சொத்தை விட்டுச் செல்வதைவிட பெரிய நன்மையைச் செய்கிறார் - வாட்லி

14. எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டும் சோம்பேறியல்ல தன்னால் முடிந்ததை செய்யாமல் இருப்பவனும் சேம்பேறியே - சாக்கிரட்டீஸ்

15. மற்ற எல்லா பெறுமதியான பொருட்களைப் போலவே அறிவையும் இலகுவாக அடைந்துவிட முடியாது. அதைக் கற்க வேண்டும், அதைச் சிந்திக்க வேண்டும், அதற்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். - டி. ஆர்னால்ட்

16. ஒரு நல்ல செயல் என்றுமே வீணாகாது. அது அந்தச் செயலை செய்பவனுக்காக சேமித்து வைக்கப்படுகிறது. - கால்டரான்.

17. நல்ல செயல்கள் தேனீ போன்றவை, அவை மலரிலிருந்து தேனை இழுப்பது போன்றது. தீய செயல்கள் சிலந்தி போன்றது, அது இனிய மலரில் இருந்து கூட விஷத்தை மட்டுமே எடுக்கக் கூடியது - யாரோ

18. என்றுமே தோல்வியடையாத மூலதனம் நல்லதனம் ஒன்றேயொன்றுதான் - கென்றி டேவிட் தோரோ.

19. வயதும், பலமும், அதிகாரமும் உன்னிடம் உள்ளபோதே நல்ல செயலைச் செய்யத் தொடங்கிவிடு - மார்க்கஸ் அவுரேலியஸ்.

20. ஏதோ ஆயிரம் வருடங்கள் வாழப்போவது போல நினைத்துக் கொண்டிராதே விதி உன் தோள்களில்தான் உட்கார்ந்திருக்கிறது மறந்துவிடாதே - கிழக்கிந்திய தத்துவம்.

21. உற்சாகமாக இருப்பவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். அவர்களே அதற்குப் பின்னரும் நமது உள்ளத்தில்

வாழ்கிறார்கள். - போவீ

22. யாருமே மிகுந்த துக்கத்துடனோ சந்தோசத்துடனோ இருப்பதில்லை அவன் எப்படி கற்பனை செய்கிறானோ அப்படியே இருக்கிறான் - ராக்பீல்ட்டு

23. உங்கள் முகங்களை சூரியனை நோக்கி வைத்திருங்கள், அப்போதுதான் உங்கள் நிழலைப் பார்க்க முடியாது. - கெலன் கெல்லன்

24. சந்தோசம் என்பது ஒரு வண்ணத்துப் பூச்சிபோல ஒரு நொடி வந்து தங்கிவிட்டு பறந்து போய்விடக் கூடியது - அன்னா பாவ்லோவா

25. யார் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களோ அவர்கள் மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துகிறார்கள

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

விவேகானந்தரின் பொன்மொழிகள்

கடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.

செயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.

வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.

  • 8 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களைப் பற்றிய பல்வேறு பொன்மொழிகள் உள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கேப் பார்க்கலாம்.

நட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம்.

பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள்.

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.

உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே.

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

உன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.

பெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.

நமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.

வேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.

ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.

சிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.

உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

ஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

நமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.

புதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.

புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

1. தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நின்றுவிடும். ஆண்டவனுடைய முடிவில்லாத நாட்கள் அதற்கும் உண்டு. - பிரையண்ட்

2. எதைக் கண்டு ஒரு மனிதனுக்கு சிரிப்பு வருகிறதென்று கவனி. அவன் எப்படிப்பட்டவனென்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம். - கெதே

3. அறிவு என்பது நம்முடைய ஒரு பகுதியாக இருக்கிறது. ஆனால், இதயம் நம்முடைய ஒவ்வொரு பகுதியாக இருக்கிறது. - ரிரேஸ்

4. சட்டம் ஒரு சிலந்திக்கூடு. வண்டுகள் அதை அறுத்துக்கொண்டு அப்பால் போகின்றன. ஆனால், பூச்சிகள் அதில் சிக்கிக் கொள்கின்றன.- செக்கோஸ்லோவேகியா

5. செய்யத் தெரிந்தவன் சாதிக்கிறான். செய்யத் தெரியாதவன் போதிக்கிறான். - கர்னல் கீல்

6. தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. - லெனின்

7. வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை தீமை என்ற இரு நூல்களும் இருக்கும். - ஷேக்ஸ்பியர்

8. அவரவர் விதி அவரவர் கையிலேயே இருக்கிறது. - விவேகாநந்தர்

9. தனக்குத் தெரிந்த விஷயங்களை மட்டுமே மனிதன் பேச ஆரம்பித்தால் உலகில் பூரண அமைதி ஏற்படும். - பெர்னாட்ஷா

10. அன்பு என்பது கண்ணுக்குத் தெரியாத நீரூற்று. அது எப்போது எப்படி தோன்றுகிறது என்பதை நாம் அறிய முடியாது. ---யாரோ

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
kannadasantamilpoet2009.jpg
  • கருத்துக்கள உறவுகள்

விவேகானந்தரின் மணிமொழிகள்

பிறரை எள்ளி நகையாடுவது ஒரு நோய்!

நமது தேசீய இரத்தத்தில் ஒரு பயங்கரமான நோய் ஊர்ந்து கொண்டிருக்கிறது. அதாவது எதை எடுத்தாலும் எள்ளி நகையாடுவது, சிரத்தை இல்லாமல் இருப்பது. இந்த நோயை ஒழித்துக் கட்டுங்கள். வலிமையுடன் சிரத்தையைப் பெற்றவர்களாக இருங்கள். மற்றவை அனைத்தும் தாமாக நிச்சயம் வந்து சேரும்.

தாழ்ந்தவர்களுக்குக் கல்வி அளிப்பது சிறந்த நன்மை!

தாழ்ந்த நிலையிலுள்ள நம்முடைய மக்களுக்குக் கல்வியைத் தந்து, இழந்துவிட்ட தங்களின் உயர்ந்த நிலையை அவர்கள் வளர்த்துக் கொள்ளும்படி செய்ய வேண்டும். இதுதான் நாம் இப்போது செய்ய வேண்டிய ஒரே சேவையாகும். ஊயர்ந்த கருத்துக்களை இவர்களுக்குக் கொடுங்கள். இந்த ஒஉர ஒரு உதவிதான் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. பிறகு அதன் விளைவாக அற்ற நன்மைகள் எல்லாம் வந்து சேரும். இரசாயனப் பொருள்களை ஒன்று சேர்த்து வைப்பதுதான் நமது கடமை. பின்பு அவை இயற்கையின் விதியையொட்டித் தாமாகவே படிகங்களாக மாறி விடும். இப்போது மலை முகமதுவிடம் செல்லா விட்டால் முகமதுதான் மலையிடம் செல்ல வேண்டும். ஏழைப் பையன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.

நல்லொழுக்கம் தருவதே உயர்ந்த கல்வி!

எத்தகைய கல்வி நல்ல ஒழுக்கத்தை உருவாக்குமோ, மன வலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனைத் தன்னுடைய சுய வலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை.

மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மசரியமும், வாழக்கையின் அடிப்படை இலட்சியங்களாக நமக்குத் தேவைப்படுகின்றன.

எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது என்று வேதாந்தம் சொல்கிறது. இந்த அறிவு ஒரு சிறுவனிடம் கூட இருக்கிறது. இந்த அறிவை விழித்து எழும்படி செய்வதுதான் ஆசிரியனுடைய வேலையாகும்.

நமக்குத் தேவை அன்பும் பொறுமையும்!

அன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் தவிர வேறொனுறுமே நமக்குத் தேவையில்லை. அன்புதான் வாழக்கையாகும்.

எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். இந்த உண்மை இம்மை மறுமையாகிய இரண்டு உலகம்களுக்கும் பொருந்தும். நண்மை செய்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமலிருப்பதுதான் மரணம். இப்போது நாம் பார்க்கிற மக்களில் தொண்ணூறு சதவீதம் இறந்து போனவர்கள். அவர்கள் பிசாசுகள்தாம். ஏனது அருமைக் குழந்தைகளே, அன்பு செலுத்துபவர்களைத் தவிர வேறு யாரையும் வாழ்வதாகக் கருதக் முடியாது.

மறைந்திருக்கும் அழுகையும் சிரிப்பும்!

மேலை நாடுகளிலுள்ள சமுதாய வாழ்க்கை முறை கணீரென்று சிரிப்பதைப் போன்றதாகும். ஆனால் அதன் அடியில் அழுகையும், புலம்பலும் மறைந்திருக்கின்றன.

அதன் முடிவும் தேம்பியழுவதாகவே அமையப் போகிறது. மேற்புறத்தில் மட்டுமே வேடிக்கையும், விளையாட்டும் அங்கு காணப்படுகின்றன. ஆனால் உண்மையில் அளவில்லாத துயரமே அதில் நிறைந்திருக்கிறது.

மாறாக, இந்த நாட்டிலோ வெளிப்படையாக இருளம், துயரும் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் அடியில் கவலையின்மையும், மகிழச்சியும் மறைந்திருக்கின்றன.

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்

 
பறவைகளைப் போல் மனிதனால் காற்றில் பறக்க முடியும். மீனைப் போல் தண்ணீரில் நீந்த முடியும். ஆனால் அவன் இவ்வுலகில் மனிதனைப் போல நடக்க மட்டும் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை.
-          டாக்டர் ராதாகிருஷ்ணன்
 
 
 
நீங்கள் எவ்வளவு புயல்களை சமாளித்தீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள உலகம் ஆர்வம் காட்டப் போவதில்லை. கப்பலைப் பத்திரமாக துறைமுகத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தீர்களா என்பதைத் தான் உலகம் அறிய விரும்புகிறது.
                -வில்லியம் மெக்ஃபி
 
 
கெட்ட வழிகளில் கிடைக்கும் லாபமானது நஷ்டத்துக்குச் சமமானது.
-          நார்மன் வின்செண்ட் பீல்
 
 
நீங்கள் புதிதாகத் தெரிந்து கொள்வதை என்று நிறுத்த ஆரம்பிக்கின்றீர்களோ அன்றே உங்கள் வயோதிக காலம் ஆரம்பித்து விடுகிறது.
                   -ஹெர்பர்ட் காஸன்
 
 
ஒரு உபதேசம் கேட்க ஆறு மைல் தூரம் செல்வது எளிது. ஆனால் வீடு திரும்பிய பின் அது பற்றி கால் மணி நேரம் சிந்திப்பது கஷ்டம்.
-          பிலிப் ஹென்றி
 
 
நெருக்கமான பழக்கம் வெறுப்பை உண்டாக்கா விட்டாலும் இருக்கிற மதிப்பின் கூர்மையை மழுக்கி விடும்.
-          ஹாஸ்லிட்
 
 
கண்ணியமான மனிதனே இல்லை என்று எவன் சொல்கிறானோ அவன் அயோக்கியன்.
-          பெர்க்லி
 
 
இருவர் விவாதம் செய்கையில் ஒருவருக்குக் கோபம் வருமானால் விவாதத்தைத் தொடராமல் நிறுத்துபவன் அறிவாளி.
                  -புளுடார்க்
 
 
ஒரு மனிதனிடம் யோக்கியதை எந்த அளவு அதிகமாயிருக்கிறதோ அந்த அளவு அவன் ஒரு ஞானி போல் நடிக்க மாட்டான்.
-          லவேட்டர்.
 
 
பணக்காரர்களே சந்தோஷத்தைக் காணாமல் பரிதாபமாக வாழ்கையில் ஒவ்வொருவனையும் பணக்காரனாக மாற்ற முயற்சிப்பதில் என்ன பயன்?
-          பெர்ட்ராண்டு ரஸ்ஸல்
  • கருத்துக்கள உறவுகள்

கெட்ட வழிகளில் கிடைக்கும் லாபமானது நஷ்டத்துக்குச் சமமானது.
 

வரி ஏய்ப்பு செய்பவர்கள் யோசிக்கவேண்டியது..

  • கருத்துக்கள உறவுகள்

இனியவளின் பொன்மொழிகள் இங்க இருக்கு....

இனியவள் எங்க இருக்கா?

ஆள ரொம்ப நாளா காணோம்....

:(

பெண்னை அடக்கலாம் ஆனால் பெண்னின் மனத்தை அடக்க முடியாது.

 

இந்த பெண்ணின் மனதை அறிய முடிந்திருந்தால் ஆண்கள் எப்பவுமே சந்தோஷமாக இருந்திருப்பார்கள். இந்த நிலையற்ற மனத்தால்தானே இத்தனை கஷ்டம் எங்களுக்கு

 

 

சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக் கூடாது

 

 

“சிறுவெள் அரவின் அவ்வரிக் குருளை

கான யானை அணங்கி யாஅங்கு

இளையள், முளைவாள் எயிற்றள்

வளையுடைக் கையள் – எம் அணங்கியோளே“

(குறுந்தொகை- 119- சத்திநாதனார்.)

 

download.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டும் என்ற முயற்சி தான் உலகில் பெருந்துயருக்குக் காரணமாய் இருக்கின்றது. 
                     -              காபெட்
 
 
 
கடமையும் இந்த நாளுமே நம்முடையவை. பயன்களும், எதிர்காலமும் கடவுளைச் சேர்ந்தவை.
-          ஹாஸ்லிட்
 
ஆசிரியராக விரும்புபவன் முதலில் மாணவனாக இருக்க வேண்டும்.
-          டிரைடன்
 
ஒருவர் புன்னகை புரியும் விதத்தில் இருந்தே அவர் குணத்தைப் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ளலாம். சிலர் புன்னகைப்பதே இல்லை. ஆனால் இளிக்க மட்டும் செய்வார்கள்.
-          போவீ
 
பொறாமையுள்ளவன் தன் தாழ்ச்சியை எப்போதும் உணர்ந்து இருப்பான்.
-          பிளினி
 
மருந்துக்களில் முதன்மையானவை ஓய்வும் உபவாசமும்.
-          ஃபிராங்க்ளின்
 
ஒன்றுக்கும் பிரயோசனமில்லை என்று தள்ளி விடும் படியானவராக உள்ள எவரையும் இது வரையில் நான் பார்த்ததில்லை. சரியான சமயம் வாய்த்தால் ஏதாவதொரு வகையில் எவரும் பயன்படக் கூடும்.
-          ஹென்றி ஃபோர்டு
 
வெறும் பேச்சும், பெரும் பேச்சும் பேசி செயல்படாமல் சோம்பிக் கிடப்பவர்கள் வழிகாட்டும் தலைவர்கள் என்ற மதிப்பினைப் பெறுகின்றனர் என்றால் அவர்கள் சுட்டிக் காட்டுகின்ற வழியில் நடப்பவர்கள் எத்தகைய லட்சியவாதிகளாகத் திகழ்வர் என்பதைக் கூறவும் வேண்டுமா?
-          மான்செஸ்டர் கார்டியன்
 
சோம்பேறித்தனம், கர்வத்தால் மனம் கெடுதல், தடுமாற்றம், கூட்டமாக வீண் அரட்டையடித்தல், முரட்டுப் பிடிவாதம், போலித் தற்பெருமை, சுயநலம் ஆகிய ஏழு கெட்ட தன்மைகளும் நம்மை சுற்றி வளைத்துக் கொண்டு கெடுதல் செய்கின்ற பாவங்களாகும்.
-          விதுர நீதி
 
ஒரு ஏழையான முட்டாளுக்கு நிறைய பணம் கிடைத்தால் அவன் பணக்கார முட்டாளாகத் தான் மாற முடியும்.
-          ஆபிரகாம் மில்லர்
  • கருத்துக்கள உறவுகள்
கட்சி என்பது சிலருடைய நன்மைக்காகப் பலருக்குப் பைத்தியம் பிடிப்பதாகும்.  
              -           போப்
 
 
எந்த மனிதனும் தவறு செய்யக் கூடும். ஆனால் முட்டாளைத் தவிர வேறு எவனும் அதைத் தொடர்ந்து செய்ய மாட்டான்.
                                         - சிஸரோ
 
 
செல்வத்தை வீட்டுக்குள் அனுமதிக்கலாம். ஆனால் இதயத்திற்குள் அனுமதிக்கக் கூடாது.
-         கோல்டன்
 
 
உண்மையான அழகின் அளவுகோல் எதுவென்றால் ஆராய ஆராய அந்த அழகு கூடிக் கொண்டிருக்க வேண்டும். போலியாக இருந்தால் அழகு குறைந்து கொண்டே இருக்கும்.
-           கிரெவில்லி
 
உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் போது அறிவு வெளியே போய் விடும்.
                                         - எம்.ஹென்றி
 
சொற்கள் சுருங்கினால் பயன் வீணாவதில்லை.
-           ஷேக்ஸ்பியர்   
 
உன் எதிரிகளைக் கவனி. அவர்களே உன் குற்றங்களை முதலில் கவனிப்பவர்கள்.
-         ஃபெனிலன்
         
 
தகுதியற்ற புகழ்ச்சி மறைமுகமான அவதூறாகும்.
-         போப்
 
நாம் விரும்புவதையெல்லாம் பெற முடியாததால், நாம் பெற முடிந்ததில் திருப்தி கொள்வோம்
                               - ஸ்பெயின் நாட்டுப் பழமொழி
        
 
நடக்க முடியாதவர்கள் குதிரைகள் மீதேறிச் செல்வது போல சொற்பொழிவாளர்கள் தங்கள் விஷயம் பலவீனமாக இருந்தால் அப்போது தான் காரசாரமாய் பேசுவார்கள்.
-         சிஸரோ   
 
சோம்பல் உன்னை ஏமாற்றாமல் பார்த்துக் கொள். ஏனென்றால் அதற்கு இன்று ஒரு நாளைக் கொடுத்தால் அது அடுத்த நாளையும் திருடிக் கொள்ளும்.
-         குரோக்வில்
 
எது நடந்தாலும் நான் எப்போதும் திருப்தியாக இருக்கிறேன். ஏனெனில் நான் தேர்ந்தெடுப்பதை விட இறைவன் தேர்ந்தெடுப்பது மேலானது என்பதை நான் அறிவேன்.
-         எபிக்டிடஸ்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் தான் தவறு செய்வதை ஒப்புக் கொள்ள வெட்கப்படவே கூடாது. ஒப்புக் கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றை விட இன்று அதிக அறிவு பெற்றிருக்கிறான் என்பதே.-         போப்
 
 
நாம் வாழும் போது உலகம் முழுவதையும் வளைத்துக் கட்டிக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் இறந்த பிறகு தான் எவ்வளவு சிறிய இடம் நமக்குப் போதுமானது என்று தெரிகிறது.
-         மாசிடோனிய மன்னர் பிலிப்
 
கல்விச் செருக்கு படித்த குப்பைகளை நம் தலைகளில் திணித்து
இருக்கின்ற மூளையை வெளியே தள்ளி விடுகின்றது.
-         கோல்டன்
 
கேலியின் பெருமை கேட்பவர் செவியைப் பொறுத்தது. அது ஒரு போதும் சொல்பவர் நாவில் இல்லை.
-         ஷேக்ஸ்பியர்
 
சணலை  நெருப்பில் இருந்து ஒதுக்கி வைக்கவும். இளைஞனை சூதாட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கவும்.
-         ஃபிராங்க்ளின்
 
ஒருவன் எந்த மனிதனுக்கு அஞ்சுகிறானோ அவனை நேசிப்பதில்லை.
-         அரிஸ்டாடில்
 
சம்பாஷணை உலக அறிவை விருத்தி செய்யும். ஏகாந்தம் பேரறிவின் பள்ளி.
-         கிப்பன்
 
உரையாடலில் மௌனமாய் இருப்பதும் ஒரு கலையாகும்.
-         ஜாஸ்லிட்
 
அறிவுடைமை வலிமையை விடப் பெரியது. இயந்திர நுணுக்கங்களை அறிந்தவன் வெறும் வலிமையைக் கண்டு சிரிக்கிறான்.
-         ஜான்சன்
 
நல்லவர்களது துரதிர்ஷ்டம் அவர்களை வானை நோக்கி முகங்களைத் திரும்பும்படி செய்கின்றது; கெட்டவர்களது துரதிர்ஷ்டம் அவர்கள் தரையை நோக்கி தலைகளைத் தொங்கவிட்டுக் கொள்ளும்படி செய்கின்றது.
-         ஸா அதி
 
கண்கள் ஒன்று சொல்ல நாவொன்று சொன்னால், விஷயம் அறிந்தவன் கண்கள் சொல்வதையே நம்புவான்.
-         எமர்சன்
 
பொய்யைத் துரத்திக் கொண்டு ஓடாதே. நீ அதை விட்டு விட்டால் அது விரைவில் தானாகவே செத்து விடும்.
-         இ.நாட்
 
 
வழக்கங்கள், நம்பிக்கைகள், உறுதிகளை அமைக்க வேண்டிய பருவம் இளமைப் பருவம்.
-         ரஸ்கின்
 
கூட்டம் தன் அபிமானத்தைக் கொண்டே சிந்திக்கும். அறிவைக் கொண்டு சிந்திக்காது.
                                  -ட்புள்யூ.ஆர்.ஆல்ஜெர்
 
நேர்த்தியாகச் செய்து முடிப்பதோடு உன் வேலை தீர்ந்தது. அதைப் பற்றி பேசுவதை மற்றவர்களுக்கு விட்டு விடு.
-         பிதாகோரஸ்
 
 
  • கருத்துக்கள உறவுகள்

முகத்துதியாகப் பேசுவோரிடம் இருப்பதை விட காகங்களிடையே வீழ்ந்து கிடக்கலாம். அவைகள் பிணங்களை மட்டுமே கொத்தும். இவர்கள் உயிர் உள்ளவர்களையே கொத்துகிறார்கள்.                   
 
-         ஆண்டிஸ்தினீஸ்
 
 
சில சமயம் இழப்பது தான் பெரிய ஆதாயமாயிருக்கும்.
-         ஹெர்பர்ட்
 
 
போரிலே கூட புற ஆற்றலினும் மன ஆற்றலே மூன்று மடங்காகும்.
-         நெப்போலியன்
 
 
அற்ப விஷயங்கள், சொற்ப உபசாரங்கள், ஒன்றுமில்லை என்று சொல்லத்தக்க சாதாரண விஷயங்கள்  இவற்றைக் கொண்டே உலக வாழ்வில் மக்கள் உன்னை விரும்புகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள்.
-         செஸ்டர்ஃபீல்டு
 
 
இதயத்தின் காரணங்களைப் பகுத்தறிவு புரிந்து கொள்வதில்லை.
-         பாஸிட்
 
 
இயற்கையின் விதிகள் நீதியானவை. ஆனால் பயங்கரமானவை.
                           - லாங்ஃபெல்லோ
 
 
இழிவான அற்ப விஷயங்களில் ஈடுபடுவது மனம் பலவீனமாக இருப்பதைக் காட்டும், மேலும் பலவீனப்படுத்தும்.
-         கௌப்பர்
 
 
வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் எத்தகையவை என்பதை விட அவைகளை எப்படி நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இன்பம்.
-         ஹம்போல்ட்
 
 
உலகின் இயல்பு இறந்து போன திருத்தொண்டர்களைப் புகழ்தலும் உயிரோடிருப்பவர்களைத் துன்புறுத்துவதும் தான்.
-         என்.ஹேர்
 
 
 
உலகில் நமக்குள்ள ஒரே வேலி அதை நன்றாகப் புரிந்து கொள்ளல் மட்டுமே.
                           - லாக்
      
 
களைப்பு கல்லின் மீதும் குறட்டை விடும். அமைதி இல்லாத சோம்பலிற்குத் தலையணையும் உறுத்தும்.
                            - ஷேக்ஸ்பியர்
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

 
 
  • பேசும்முன் கேளுங்கள்; எழுதும்முன் யோசியுங்கள்; செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.

     

  • சிலவேளைகளில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும். 

     

  • யாரிடம் கற்கிறோமோ அவரே நம் ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

     

  • நாம் மாறும்போது தானும் மாறி, நாம் தலையசைக்குபோது தானும் தலையசைக்கும் நண்பன் நமக்குத் தேவையில்லை. அதற்கு நம் நிழலே போதும்.

     

  • நோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்.

     

  • நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

     

  • நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

     

  • வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

     

  • சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஓராண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

     

  • முழுமையானவன் இன்னும் பிறக்கவில்லை; இனியும் பிறக்க மாட்டான்.

     

  • பரபரத்து ஓடுவதில் பயனில்லை; உரிய நேரத்தில் புறப்படுங்கள்.

     

  • எல்லோரையும் நேசிப்பது சிரமம்தான்; ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

     

  • நல்லவர்களோடு நட்பாயிருங்கள்; நீங்களும் நல்லவனாகலாம்.

     

  • காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை; ஆனால் கோபத்தின் காரணம் பெரும்பாலும் நல்லதாய் இருப்பதில்லை.

     

  • விந்தையான சிலரைப் பார்க்கும்போது இவர்கள் ஏன் இப்படி? என்பதைவிட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள்.

     

  • யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்.

     

  • ஆயிரம் முறை சிந்தியுங்கள்; ஒருமுறை முடிவெடுங்கள்.

     

  • அச்சம்தான் நம்மை அச்சுறுத்துகிறது. அச்சத்தை அப்புறப் படுத்துவோம். 

     

  • நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக எவருடனும் விவாதிப்பது சிறப்பாகும்.

     

  • உண்மை புறப்பட ஆரம்பிக்கும்முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

     

  • உண்மை தனியாகச் செல்லும்; பொய்க்குத்தான் துணை வேண்டும்

     

  • வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்  தத்துவங்களாக இருக்கட்டும்.

     

  • தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாறிப் போகிறான்.

     

  • உலகம் ஒரு நாடக மேடை; ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

     

  • செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும்; அப்போதுதான் முன்னேற முடியும்.

     

  • அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

     

  • வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்றவனாவான்.

     

  • தோல்வி ஏற்படுவது, "அடுத்தச் செயலைக் கவனமாகச் செய்" என்பதற்கான எச்சரிக்கை.

     

  • பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயல வேண்டும்.

     

  • கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம்தான் கடினம்.

     

  • ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

     

  • சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

     

  • ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

தொகுப்பு: அபூ ஸாலிஹா

  • கருத்துக்கள உறவுகள்

பிற்ர் தனக்கு செய்த  உதவியை காப்பாற்ற தெரியாதவனுக்கும்..
பிறர் தனக்கு செய்த உதவியை என்னால் ஆனது என்பவனுக்கும்..
பிறர் தனக்கு செய்த உதவியை ஏளனம் செய்பவனுக்கும்..

எக்காலத்திலும் ???????

டிஸ்கி

இது புரட்சியின் புதுமொழி

 

 

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

247496_472474589487304_1632029355_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

302756_247645342027056_128769126_n.jpg

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

10886_456031241161744_1213735032_n.jpg

 

10886_456031241161744_1213735032_n.jpg

 

உண்மை..... சிந்திக்கத்தூண்டும் வரிகள் ..............நல்லவர்கள் சிந்திப்பார்களா ...............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.