Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியவளின் பொன் மொழிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1235918_428881960563048_1199822959_n.jpg

  • 2 weeks later...
  • Replies 372
  • Views 56.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

kannadasan.jpg
 
 
1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

 2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு,  ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம். 

  

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான். 

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம். 

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை. 

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது

பகிர்வுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

971281_536794939721843_1122489934_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%
 
 
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
... 5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

253110_414210171980321_2114794733_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கை நூல்களில் படித்ததில் இருந்து திரட்டிய தகவல்கள்..

01. தான் எந்தளவுக்கு வெற்றி பெற்றார்களோ அந்தளவுக்கு அடக்கமும் கொண்டவர்களாக பல தலைவர்கள் இருந்துள்ளார்கள்.

02. அதிகாரம் என்பது ஒரு தலைமைக்கு மாற்றாகாது. அதிகாரத்தை மட்டுமே நம்பியிருக்கும் போலித்தலைவர்களைவிட, மற்றவர்களை ஈர்க்கக்கூடிய தலைவர்கள் எப்போதுமே சிறந்து விளங்குகிறார்கள்.

03. பணிந்து நடப்பதை ஒருபோதும் கற்றுக்கொள்ளாதவர்களிடம் ஆணையிடும் அதிகாரத்தை ஒப்படைக்கும் ஒரு சமுதாயம் ஆபத்திற்குள்ளாகிறது.

04. மற்றவரைவிட நான் உயர்ந்தவன் என்று எண்ணுவதில் பெருமை கொள்வதற்கு எதுவும் இல்லை, உண்மையான பெருமை என்பது நான் என்ற அகங்காரத்தை வெற்றி கொள்வதுதான்.

05. தன்னிடம் இல்லாத ஒன்றை கிடைத்ததைவிட அதிகம் கிடைக்க வேண்டுமென்று எதை மனிதன் நினைக்கிறானோ அதுதான் பகட்டு.

06. தகுதி இல்லாதவர்களைப் புகழ்ந்தால் அவர்களுக்கு தலைக்கனம் ஏறிவிடுகிறது, அவர்களை பகட்டுக்காரர் ஆக்கிவிடுகிறது. இப்படியான பகட்டு முட்டாள்தனம் என்ற காற்று நுழைவதற்கான ஜன்னலைத் திறந்துவிடுகிறது.

07. தனக்குக் கிடைத்திருக்க வேண்டியதை விட அதிகமாகக் கிடைத்துள்ளதாக எப்போது கருதுகிறீர்களோ அப்போது வருவதுதான் அடக்கம்.

08. எனக்குள் இருக்கும் புனிதம் உனக்குள் இருக்கும் புனிதத்தை வணங்கினால் அதுதான் அடக்கம்.

09. அடக்கம் என்பது இயற்கையிலேயே அமைந்திருக்க வேண்டும் இல்லையேல் அது செயற்கையானது என்று தெரிந்துவிடும். தெளிவு, எளிமை, கண்ணியம், எதார்த்த நடத்தை இவைகள்தான் அடக்கம்.

10. மமதை கொள்ளும் தலைவர்கள் தொண்டர்களிடமிருந்தும், ஆதரவாளர்களிடமிருந்தும் பிரிக்கப்பட்டு விடுகிறார்கள்.

11. ஒரு நல்ல தலைவன் மக்களுக்கு தைரியத்தைத் தருகிறான். அவன் மறைந்த பிறகும்கூட எத்தனை இதயங்களை வெற்றி கொண்டான் என்பதைப் பொறுத்தே அவனடைய தலைமை மதிப்புப் பெறுகிறது.

12. ஒரு நல்ல தலைவன் பயிற்சியாளனாகவும் இருக்கிறான், பங்கேற்பவனாகவும் இருக்கிறான்.

13. வாழ்க்கை என்பது எவ்வளவு கொடுக்கிறோமோ அவ்வளவைப் பெறுகிறோம் என்ற கணக்கில்தான் நடக்கிறது.

14. நம் குழந்தைகளுக்குக் கிடைக்கும் கல்வி, குடிக்கும் தண்ணீர், வாங்கும் மருந்துகள், செலுத்தும் வரிகள் என்று அனைத்தும் அரசியல்தான், நமது இருப்புக்கூட ஒருவகை அரசியல்தான். அப்படியிருக்க நாம் அரசியலில் ஈடுபடுவதில்லை என்று எப்படிக் கூறுவது..?

15. சட்டம் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டதேயன்றி சட்டத்துக்காக மனிதர்கள் அல்ல. அதுபோல அரசு என்பது மக்களின் ஊழியனே அல்லாது எஜமானன் அல்ல.

16. ஊழல் அரசாங்கங்களில் மனிதர்களுக்காக புதிய பதவிகள் உருவாக்கப்படும், நல்லதொரு அரசாங்கத்தில் இருக்கிற பதவிகளுக்காக மனிதர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

17. ஊழல் ஜனநாயகம் என்றால் என்ன பொருள்..? சீருடை அணிந்த குண்டர்கள் அரசாங்கத்தை நடாத்துகிறார்கள், நேர்மையான குடிமக்களை மிரட்டுகிறார்கள் என்பது பொருள்.

18. ஓர் அமைப்பு ஊழலுடையதாக இருக்கும்வரை நல்லவர்களுக்கு சோதனைக்காலமாகும், அதே அமைப்பு ஊழல் அற்ற அமைப்பாக இருந்தால் மோசமானவர்களுக்கு சோதனை காலமாகும்.

19. ஒவ்வொரு மனிதனும்.. ஊழலையும், அநீதியையும் ஒழிப்பதென உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். உறுதியான நேர்மையான தலைவர்களை உருவாக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக தேசிய இயக்கம் தொடங்கப்பட வேண்டும். ஊழலை சகித்துக்கொள்ளக் கூடாது, ஒதுங்கி நிற்கும் குடிமக்கள் எதிர்ப்பு தெரிவிக்க முன்வர வேண்டும்.

20. தேசத்திற்கு துரோகம் செய்பவர்கள் இறுதியில் தன் கழுத்தை தானே அறுத்துக் கொள்கிறார்கள் என்பதை வரலாறு நமக்கு நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

21. ஓடற்ற ஜெல்லி மீன் ஓடுள்ள நத்தையை விழுங்கும், நாளாவட்டத்தில் உள்ளிருந்து நத்தை ஜெல்லி மீனைத்தின்று, தின்று பருக்கும். ஒரு கட்டத்தில் ஜெல்லி மீனே இல்லாமற்போக நத்தை மட்டும் மிஞ்சும். இதுபோலத்தான் ஊழல் என்ற நத்தையை விழுங்கிய தேசம் ஒரு கட்டத்தில் ஜெல்லி மீனைப்போல இல்லாதொழிகிறது.

22. இளைஞர்களை நோக்கி, தலைமைதாங்க வாருங்கள் என்று போலிக் கோஷம் போடுவதைவிட அவர்களை நாளைய குற்றவாளிகள் ஆகாமல் தடுப்பதற்கான பணிகளைச் செய்வதே மேலானது.

23. சாராயம் காய்ச்சுவதும், சதி செய்வதும், போதைவஸ்த்து விற்பதும், கலப்படம் செய்வதும், வதந்தி பரப்புவதும் குழந்தைகள் அல்ல, பெரியவர்களே. இளைய தலைமுறையினரை தீயவர்களாக உருவாக்குவதும் பெரியவர்களே.

24. நம்மில் எவரும் குறைகள் இல்லாதவர்கள் இல்லை. குறை நிறைகளை பரஸ்பரம் பார்த்தே முடிவு செய்ய வேண்டும். நேசிக்கப்படும் ஒருவர் திசைமாறிப் போனால் அவரை திருத்த முயலவேண்டும், இல்லையேல் அந்த உறவை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

25. உங்கள் குழந்தைகளை நல்ல பண்புடன் வளர்த்தால் அந்தப் பழக்கம் உங்கள் பேரக்குழந்தைகளிடமும் போய்ச் சேரும்.

http://www.alaikal.com/news/?p=135393#more-135393

  • கருத்துக்கள உறவுகள்

1377414_517118925049545_2005299921_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

1234401_10151649664682478_1070343138_n.j

  • கருத்துக்கள உறவுகள்
தொடருங்கள் நுணா.இப்ப எல்லாம் யார் பொன் மொழிகள் எல்லாம் படிக்கிறார்கள் :unsure: படித்தாலும் யார் அதைக் கடைப் பிடிக்கிறார்கள்?
 
  • கருத்துக்கள உறவுகள்

 

தொடருங்கள் நுணா.இப்ப எல்லாம் யார் பொன் மொழிகள் எல்லாம் படிக்கிறார்கள் :unsure: படித்தாலும் யார் அதைக் கடைப் பிடிக்கிறார்கள்?

 

 

அதற்காகத்தான் நீங்கள்  நிறுத்திவிட்டீர்களா ரதி..........? :(

  • கருத்துக்கள உறவுகள்

1236625_220538701445172_1768439451_n.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

1394068_385187988280927_627153654_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பெயருக்கேற்றவாறு பொன்மொழிகள் பெறுமதியானவையாக இருக்கின்றது
தொடருங்கள் நுணா 

  • கருத்துக்கள உறவுகள்

1376435_583539095026707_836622526_n.jpg

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

பகவத்கீதை சொல்லும் வாழ்க்கை

 

1188.jpg

வாழ்க்கை ஒரு சவால் அதனைச் சாதியுங்கள்

வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு துயரம் அதனை தாங்கிக் கொள்ளுங்கள்

வாழ்க்கை ஒரு கடமை அதனை விளையாடுங்கள்

வாழ்க்கை ஒரு வினோதம் அதனை கண்டறியுங்கள்

வாழ்க்கை ஒரு பாடல் அதனைப் பாடுங்கள்

வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு பயணம் அதனை முடித்துவிடுங்கள்

வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவேற்றுங்கள்

வாழ்க்கை ஒரு காதல் அதனை அனுபவியுங்கள்

வாழ்க்கை ஒரு அழகு அதனை ஆராதியுங்கள்

வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர் கொள்ளுங்கள்.

வாழ்க்கை ஒரு குழப்பம் அதனை விடைகாணுங்கள்.

வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப் பிடியுங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

154476_10151229714727669_1063246201_n.jp

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
உணர்வுகள் மாறலாம், நினைவுகள் மாறுவதில்லை - ஜோயல் அலெக்சாண்டர்.
சிந்திக்காதவன் முட்டாள்
சிந்திக்கத் துணியாதவன் கோழை
சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்
நம்மால் எதிலும் தனித்து செயல்பட முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது வலிமை அற்ற மனம் தான்
 
அறிவாளிகள் சிறந்த எண்ணங்களை விவாதிக்கின்றனர், நடுத்தரமானோர் நிகழ்ச்சிகளை விவாதிக்கின்றனர், சாதாரணமானோர் மக்களை விவாதிக்கின்றனர்.
உன‌க்கு ஒரே ந‌ண்ப‌ன் ‌நீயே, ஒரே பகைவனு‌ம் ‌நீயே, உ‌ன்னை‌த் த‌விர பகைவனு‌ம் இ‌ல்லை, ந‌ண்பனு‌ம் இ‌ல்லை
 
இரவின் மடியில் சாய்ந்து கொண்டு விடியலுக்காக காத்திருப்பதை விட இரவின் கைபிடித்து நடைப்பயணம்-செய்த்து பார் விடியல் உனக்காக வரவேற்பு கம்பளம் விரித்து காத்திருக்கும் 
சொற்ப இரண்டு நாட்களிலேயே, நாளை என்பது நேற்று என்றாகி விடுகிறது.
 
அனைத்துமே பூர்த்தியாகியிருக்க வேண்டும் முடிவில். அவ்வாறு இல்லையெனில் அது முடிவல்ல.
 
நட்பு என்பது ஈரமான சிமெண்ட் கலவையில் கால் பதிப்பது போன்றது. சிறிது நேரம் நின்றால் (காலடிச்) சுவடுகளை விட்டுச் செல்வோம், அதிக நேரம் இருந்தால் விட்டுச் செல்ல இயலாது.
 
சிந்தனை செய்யா மூளை, தேங்கிய சாக்கடை - யாரோ.
 
உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்; ஆனால் யாராவது ஒருவருக்கு. நீங்களே உலகமாக இருக்கலாம்.
 
நீ வாழ்க்கையில் முன்னேற வேண்டுமானால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் ஏறிப் போக விரும்பாதே.
பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்
நம்பிக்கைக்குரிய நண்பருக்கு ஈடு இணையான செல்வம் ஏதுமில்லை.
 
இளமை என்பது வயதால் அல்ல, எண்ணங்களாலே அறியப்படுகிறது.
  • கருத்துக்கள உறவுகள்

1452183_235010666667708_2106991120_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

1475950_234876553347786_2091490825_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

558675_555739211186497_1607787699_n.jpg

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

யானையின் எடையை எப்படி அறிவது?

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ‘நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்’ என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ”அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை” என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

Courtesy: Facebook

 

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

10252063_300781780069753_787564165272976

  • கருத்துக்கள உறவுகள்

2007ன் கருத்துக்கு, 20014ல் ஒரு பின்னூட்டம்..... :D  :D  

 

இனி பொன்மொழி எல்லாம் நல்லா இருக்கு பேஷ் பேஷ்............

பெண்ணிண் இதயம் மட்டுமா முதுமை அடைவதில்லை..............அவர்களின் சிந்தனை கூட முதுமை அடைவதில்லை..............அப்பாடா எல்லா பெண்களுக்காவும் நாம கதைத்திருகிறோம்.....

அப்ப நான் வரட்டா.............. :P

 

இதற்குள் சோனியா மடமும் அடங்குகிறாரா ?  உறவே ??  <_<:D :lol:  

 

  • கருத்துக்கள உறவுகள்

10255420_777527468939155_829558265583681

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.