Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

றோ விரும்பிதை உங்களிடம் சொன்னார்களா? இல்லை எழுந்தமானத்துக்கு அடித்து விடுவதா?? (சீமானை எதிர்த்து ஏதாவது ஒரு  மறை கருத்தை நுழைக்க வேண்டும் என்பதற்காக)
 
றோ என்ன விரும்புகிறது என்பதை இந்திய பிரதமரிடமும் சொல்லுமா என்பது சந்தேகமே -ஆனால் எமது போராட்டத்தில் ரோ என்ன அணுகுமுறை எடுக்கிறது, எடுத்தது என்பதை  புரிந்து கொள்ளும் யாருக்கும் - ரோ எதை விரும்புகிறது என்பதை கண்டறிவது அவ்வளவு கஸ்டமாய் இராது.

சீமானை எதிர்த்து மறை அல்ல நேரடியாகவே எழுதுகிறேன் அவர் றோ ஏஜெண்ட் எண்டு.

  • Replies 63
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

றோ என்ன விரும்புகிறது என்பதை இந்திய பிரதமரிடமும் சொல்லுமா என்பது சந்தேகமே -ஆனால் எமது போராட்டத்தில் ரோ என்ன அணுகுமுறை எடுக்கிறது, எடுத்தது என்பதை  புரிந்து கொள்ளும் யாருக்கும் - ரோ எதை விரும்புகிறது என்பதை கண்டறிவது அவ்வளவு கஸ்டமாய் இராது.

அது தெரியும். சீமான் அவர்களின்(RAW)தாளத்துக்கு ஆடுகிறார் என்பதை உங்களை தவிரை யாரும் கண்டறிவது கஸ்டமானது. 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

இதை எப்படி எதிர் கொள்ளலாம்?

சீமானின் எதிர்பறிக்கையை உங்கள் பாணிபூரி வாய் நண்பர் வாசிப்பாரா?

வாசித்தாலும் நம்புவாரா?

நான் அப்பவே சொல்லலை ...எங்களை விட நீங்கள் சீமானிடம் ரொம்ப எதிர்பார்க்கிறீர்கள் என்று,
இன்று சீமானின் அறிக்கை ஒருபைசாவுக்கும் உதவாவிட்டாலும், ஒருகாலத்தில் பேமிலிமான் 2 வரலாற்று ஆவணம் பார்த்து ஈழ விடுதலை போராட்டத்தை பற்றி அறியப்போகும் திராவிடிய ஸ்டாக்குகளுக்காவது உதவும் அட அன்றே ஒரு தமிழன் இதனை எதிர்த்து அவனுடைய எதிப்பை பதிவுசெய்திருக்கிறான் என்று  

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

அது தெரியும். சீமான் அவர்களின்(RAW)தாளத்துக்கு ஆடுகிறார் என்பதை உங்களை தவிரை யாரும் கண்டறிவது கஸ்டமானது. 

இதையும் றோவினது வெப்சைட்டிலோ, நாம் தமிழர் வெப்சைட்டிலோ போடமாட்டார்கள்.

உதாரணத்துக்கு கேபி பக்கம் மாறிவிட்டார் என்பதை அவரோ இலங்கையோ அறிவிக்கவில்லைதானே? பின்னாளில்தான் அதை விளங்கிகொண்டோம்.

அதே போல சீமானின் நடவடிக்கைகள், அவருக்கு மட்டும் வழங்கபடும் இந்தியாவில் யாருக்கும் இல்லாத கருத்து சுதந்திரம், அவர் யாரால் இயக்க படுகிறார் என்பதை காட்டி நிக்கிறது. 

எல்லாவற்றிலும் விட முக்கியமாக அவர் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு ஆட்சியாளருடனும் சமரசமாகி போகும் போக்கு.

டெல்லி கைது பண்ணாமல் விட்டாலும், மாநில அரசு பாதுகாப்பு சட்டங்களை கையில் எடுக்கலாம். 

அதை தடுக்க, ரோ செய்த ஏற்பாட்டிலேயே சீமான் தொடர்சியாக ஜெயா, எடப்பாடி, ஸ்டாலினை சந்தித்து, அவர்கள் மீது ஆட்சிக்கு வந்த பின் மென்போக்கை எடுக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

மென் போக்கை வை.கோவும் எடுக்கிறார். ஆகவே அவரும் றோ  என  எடுக்க முடியுமா? 

Quote

உதாரணத்துக்கு கேபி பக்கம் மாறிவிட்டார் என்பதை அவரோ இலங்கையோ அறிவிக்கவில்லைதானே? பின்னாளில்தான் அதை விளங்கிகொண்டோம்.

ஆனாப்பட்ட வானொலிகள்  இருக்க (ரொரன்டோ) அவர் முதல் முதல் தன்னை வெளிப்படுத்தி பேட்டி கொடுத்த வானொலி பேட்டியிலேயே அவர் யார் என மக்கள் புரிந்து கொண்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நான் அப்பவே சொல்லலை ...எங்களை விட நீங்கள் சீமானிடம் ரொம்ப எதிர்பார்க்கிறீர்கள் என்று,
இன்று சீமானின் அறிக்கை ஒருபைசாவுக்கும் உதவாவிட்டாலும், ஒருகாலத்தில் பேமிலிமான் 2 வரலாற்று ஆவணம் பார்த்து ஈழ விடுதலை போராட்டத்தை பற்றி அறியப்போகும் திராவிடிய ஸ்டாக்குகளுக்காவது உதவும் அட அன்றே ஒரு தமிழன் இதனை எதிர்த்து அவனுடைய எதிப்பை பதிவுசெய்திருக்கிறான் என்று  

மேலேயே கூறி உள்ளேன் சீமான் இதில் காத்திரமான எதையும் செய்யமாட்டார் என்று. அதற்கு அவருக்கு அனுமதி இல்லை. ஆகவே அவரிடம் நயவஞ்சகத்தை தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

இந்த திராவிடியன் ஸ்டொக்குக்கு ஆதாரம் காட்டும் எதிர்பார்ப்பும் விரைவில் பொய்யாகும். சீமான் அதே திராவிடிய ஸ்டொக்குடன் மீள இணையும் போது.

4 minutes ago, nunavilan said:

மென் போக்கை வை.கோவும் எடுக்கிறார். ஆகவே அவரும் றோ  என  எடுக்க முடியுமா? 

வைகோவால் மென் போக்கை மட்டுமே எடுக்க முடியும். மீறினால் அவரால் சுதந்திரமாக செயல்பட முடியாது.

ஆனால் தேவைக்கு ஏற்பட வன் போக்கை எடுக்கும், ராஜீவை நாமே கொன்றோம் என பொது மேடையில் முழங்கும் அளவுக்கு வன் போக்கை எடுக்கும் சிறப்புரிமை சீமானுக்கு மட்டுமே வழங்கபட்டுள்ளது.

பாருக் அப்துல்லா என்றால் தூக்கி வீட்டுகாவலில் போட்டு இருப்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:
Quote

ஆனாப்பட்ட வானொலிகள்  இருக்க (ரொரன்டோ) அவர் முதல் முதல் தன்னை வெளிப்படுத்தி பேட்டி கொடுத்த வானொலி பேட்டியிலேயே அவர் யார் என மக்கள் புரிந்து கொண்டார்கள்

நான் சொன்னது அவர் பக்கம் மாறியதற்கும், பேட்டிக்கும் இடையான காலத்தை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

மேலேயே கூறி உள்ளேன் சீமான் இதில் காத்திரமான எதையும் செய்யமாட்டார் என்று. அதற்கு அவருக்கு அனுமதி இல்லை. ஆகவே அவரிடம் நயவஞ்சகத்தை தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

இந்த திராவிடியன் ஸ்டொக்குக்கு ஆதாரம் காட்டும் எதிர்பார்ப்பும் விரைவில் பொய்யாகும். சீமான் அதே திராவிடிய ஸ்டொக்குடன் மீள இணையும் போது.

கனவு காண்பது உங்கள் உரிமை, 
நேற்று எனக்கு கூட அமெரிக்க தலைமையில் நேட்டோபடைகள் இலங்கையில் இறங்கி சிங்கள இராணுவத்தை துவம்சம் பண்ணுவதாக கனவு  வந்தது, ஒருவேளை அமெரிக்கா காங்கிரஸ் எழுதிய அறிக்கையை வாசித்ததாலோ என்னவோ அதே நேரம்தான் தலீவர் சம்மு மறுத்தால் விளைவு விபரீதமாகும் என்று இலங்கை அரசாங்கத்தை கிலி கொள்ளச்செய்யுமளவுக்கு விட்ட மிரட்டலையும் வாசித்தேன் இரண்டில் ஒன்று/ அல்லது இரண்டுமே கனவுக்கு காரணமாக இருந்திருக்கலாம்    

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நான் சொன்னது அவர் பக்கம் மாறியதற்கும், பேட்டிக்கும் இடையான காலத்தை. 

பேட்டியிலேயே பக்கம் மாறி விட்டார் என நான் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, அக்னியஷ்த்ரா said:

கனவு காண்பது உங்கள் உரிமை, 
நேற்று எனக்கு கூட அமெரிக்க தலைமையில் நேட்டோபடைகள் இலங்கையில் இறங்கி சிங்கள இராணுவத்தை துவம்சம் பண்ணுவதாக கனவு  வந்தது, ஒருவேளை அமெரிக்கா காங்கிரஸ் எழுதிய அறிக்கையை வாசித்ததாலோ என்னவோ அதே நேரம்தான் தலீவர் சம்மு மறுத்தால் விளைவு விபரீதமாகும் என்று இலங்கை அரசாங்கத்தை கிலி கொள்ளச்செய்யுமளவுக்கு விட்ட மிரட்டலையும் வாசித்தேன் இரண்டில் ஒன்று/ அல்லது இரண்டுமே கனவுக்கு காரணமாக இருந்திருக்கலாம்    

கருத்து பஞ்சம் போல. தனி மனித தாக்குதலில் இறங்கி விட்டீர்கள்.

நன்றி. வணக்கம்.

1 minute ago, nunavilan said:

பேட்டியிலேயே பக்கம் மாறி விட்டார் என நான் சொல்கிறேன்.

அதற்கு முன்பே மாறிவிட்டார் என நான் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

மேலேயே கூறி உள்ளேன் சீமான் இதில் காத்திரமான எதையும் செய்யமாட்டார் என்று. அதற்கு அவருக்கு அனுமதி இல்லை. ஆகவே அவரிடம் நயவஞ்சகத்தை தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை.

இந்த திராவிடியன் ஸ்டொக்குக்கு ஆதாரம் காட்டும் எதிர்பார்ப்பும் விரைவில் பொய்யாகும். சீமான் அதே திராவிடிய ஸ்டொக்குடன் மீள இணையும் போது.

வைகோவால் மென் போக்கை மட்டுமே எடுக்க முடியும். மீறினால் அவரால் சுதந்திரமாக செயல்பட முடியாது.

ஆனால் தேவைக்கு ஏற்பட வன் போக்கை எடுக்கும், ராஜீவை நாமே கொன்றோம் என பொது மேடையில் முழங்கும் அளவுக்கு வன் போக்கை எடுக்கும் சிறப்புரிமை சீமானுக்கு மட்டுமே வழங்கபட்டுள்ளது.

பாருக் அப்துல்லா என்றால் தூக்கி வீட்டுகாவலில் போட்டு இருப்பார்கள். 

வன்போக்கு, மென் போக்கு என்பது  அவர் அவர்களின் ஆளுமையை பொறுத்தது. கருத்து(க்கள்) தான் முக்கியமானது. சீமான் திட்டாதவர்களை கூட  வை.கோ திட்டியுள்ளார். ஆகவே அவர் றோவின் ஆள் உங்களின் வாதப்படி என நான் அனுமானிக்கிறேன்.

இன்று இந்த Family man தொடருக்காக வருத்தப்படுகிறோம். 1990 களில் தாயகம் சென்ற அவுஸ்திரேலிய தொலைக்காட்சி குழுவிற்கு கரும்புலிகள் கறுப்பு துணியால் முகத்தை மூடிக்கொண்டு பேட்டியளித்த விவரண சித்திரம் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் வெளி வந்த போது அது உலகின் பார்வையில் எமது போராட்டம் பற்றிய மோசமான  எதிர் மறையான சிந்தனையை ஏற்படுத்திய போதும், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் விடியோ பிரதிகள் இங்கு வீடுவீடாக எம்மவரால் விநியோகிக்கப்பட்டு போராட்ட நிதி திரட்டப்பட்டது.  அப்போது தமிழர்களின் பெருமையாக அவ்விவரண சித்திரம் தமிழர்களிடம் பிரச்சாரப்படுத்தப்பட்டது.  அந்த விவரண சித்திரம் அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் வெளி வந்த‍து 1992 ல் என்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, nunavilan said:

வன்போக்கு, மென் போக்கு என்பது  அவர் அவர்களின் ஆளுமையை பொறுத்தது. கருத்து(க்கள்) தான் முக்கியமானது. சீமான் திட்டாதவர்களை கூட  வை.கோ திட்டியுள்ளார். ஆகவே அவர் றோவின் ஆள் உங்களின் வாதப்படி என நான் அனுமானிக்கிறேன்.

நான் சரியாக எழுதவில்லை போலும்.

அடித்து பேசுகிறாரா இல்லையா என்பதல்ல மென் போக்கு. அரசியல்வாதிகள் பரஸ்பரம் திட்டிகொள்வததையும் நான் சொல்லவில்லை.

 கீழே சிலதை தருகிறேன் பாருங்கள்.

1. யூன் மாதம் 2002 இல் திருமங்கலத்தில் நடந்த கூட்டத்தில் “புலிகளை இன்றும், நேற்றும், நாளையும் ஆதரிப்பேன்” என் வைகோ பேசினார். போட்டா சட்டம் பாய்ந்தது. இருப்பு எம்பியாக இருந்தும், பெயிலில் வராதவாறு கைது செய்யபட்ட்டு 13 மாதம் சிறையில் இருந்தார். இந்த வழக்கில் மிக அண்மையில்தான் விடுதலையானார்.

2. இதுவரை சீமான் இதை விட எத்தனை மடங்கு புலிகளை ஆதரித்து பேசி உள்ளார். ராஜீவை நாம்தான் கொன்றோம் என்ற பேச்சு உட்பட. சாட்டைதுரை - ரஜீவின் சமாதியில் ஏறி நின்று சீமான் பேச்சை டிக்டாக் செய்தார். ஆனாலும் இந்திய சட்டம் ஒன்றும் செய்யவில்லை.

இதுதான் RAW ஏஜெண்டுக்கும் RAW ஏஜெண்ட் இல்லாதவருக்கும் உள்ள வித்தியாசம்

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற விடயங்களுக்கு உணர்ச்சி பொங்குவது வீண் என்றே நான் கருதுகிறேன். இது ஒரு விவரணப் படமாக இருந்தால் நிச்சயம் தடை செய்ய முயல வேண்டும்.

இது கற்பனைப் படைப்பு - இது போன்ற படைப்புச் சுதந்திரத்தை வெருட்டி, மிரட்டி தடை செய்யக் கோருவது எங்களுக்குக் கொஞ்சம் தீமை - நன்மைகள் ஒன்றுமில்லை. கற்பனைப் படைப்பில் இருந்து வரலாற்றை சீரியசான தேடல் உள்ளோர் படிக்க முயல்வதில்லை! அவர்களுக்கு நூல்களும், செய்தி ஆவணங்களும் தான் மூலமாக இருக்கும்.

இந்தியர்கள் பலருக்கு ஈழவர்கள் பயங்கரவாதிகள் தான் - மாற்ற வேண்டுமானால் நாம் தான் ஏதாவது செய்ய வேணும். மற்றவன் செலவில் எமக்கு குழல் ஊதுமாறு மிரட்ட முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Justin said:

அண்ணா,

1. இது கற்பனைதான். அதனால் இதை ஒன்றும் செய்ய முடியாது. நான் அறிந்தவரையில் புலிகள் என்று கூட சொல்லாமல் - ஆனால் அவர்கள் என்ற விம்பம் முற்றாக ஏற்படும்படி எடுத்துள்ளார்கள். இது திட்டமிட்ட வேலை. இந்த படத்தை ஒட்டி சில துணை வேலைகளும் அரங்கேறுகிறன.

2. உங்களுக்கு நூல்கள், ஆவணங்கள் வரலாறை தேட உதவும். ஆனால் யாழிலேயே பார்க்கிறோம் வரலாற்றை யூடியூப்பில், டேக் எவே டாட் கொம்மின் மெனு கார்ட்டில் தேடுவதை. உலகில் பலர் இப்படித்தான். இலங்கை பற்றி அவர்கள் கேள்விபடும் முதலும் கடைசி இடமாக இந்த படம் இருக்க கூடும். அவர்கள் மத்தியில் இந்த விம்பம்தான் தங்க போகிறது.

முதலாவது: பின்னணியில் சதி இருந்தால் அதை வெளிக்கொணர்வதும் பேசுவதும் கண்டிப்பதும் செய்யப் பட வேண்டியது. அது பகிஷ்கரிப்பு, மிரட்டல் போன்றவற்றை விட பயன் தரக் கூடியது.

இரண்டு: "உன் குழாய்"🤣, கோரா, விக்கி இவற்றில் மட்டும் இருந்து வரலாறு படிக்கும் யாழ் உறவுகள் மனக்கண்ணில் வந்து போனார்கள் அதை நான் எழுதிய போது. ஆனால், படைப்புச் சுதந்திரத்தைக் கட்டிப் போட இது வலுவான காரணம் இல்லையென நினைக்கிறேன். என்னுடைய இந்த படைப்புச் சுதந்திரம் பற்றிய எண்ணம் வெறும் lofty ideal அல்ல! என்னுடைய கரிசனை இப்படிப் படைப்புலகை நாம் மிரட்டிக் கொண்டே வந்தால் , எங்கே எல்லை? ஒரு கட்டத்தில் சினிமாவை முற்றாகத் தடை செய்த தலிபான்கள் போல ஆகி விடுவோம். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

கற்பனைப் படைப்பில் இருந்து வரலாற்றை சீரியசான தேடல் உள்ளோர் படிக்க முயல்வதில்லை! அவர்களுக்கு நூல்களும், செய்தி ஆவணங்களும் தான் மூலமாக இருக்கும்.

என்னுடைய கரிசனை இப்படிப் படைப்புலகை நாம் மிரட்டிக் கொண்டே வந்தால் , எங்கே எல்லை? ஒரு கட்டத்தில் சினிமாவை முற்றாகத் தடை செய்த தலிபான்கள் போல ஆகி விடுவோம். 

💯

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரத்தில் ஒருவன்படத்தில் பாண்டிய அரச பெண் மோகம் காட்டி சோழ அரசனை  பழிவாங்குவது போலவும்,  Familyman2   தொடரில் ஈழப்பெண் பழிவாங்க எந்த நிலைக்கும் செல்வாள் என்பது போலவும் காட்டி தமிழச்சிகள் என்றால் இப்படித்தான் என்ற நச்சு எண்ணத்தை விதைக்கின்றனர் தெலுங்கு வடுகர்கள்.

தமிழ் பெண்களின் அறத்தையும் கற்பையும் போற்றும் படியான படங்களும் தொடர்களும் உருவாக்க வேண்டும் அது நமக்கான கடமை.  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

முதலாவது: பின்னணியில் சதி இருந்தால் அதை வெளிக்கொணர்வதும் பேசுவதும் கண்டிப்பதும் செய்யப் பட வேண்டியது. அது பகிஷ்கரிப்பு, மிரட்டல் போன்றவற்றை விட பயன் தரக் கூடியது.

இரண்டு: "உன் குழாய்"🤣, கோரா, விக்கி இவற்றில் மட்டும் இருந்து வரலாறு படிக்கும் யாழ் உறவுகள் மனக்கண்ணில் வந்து போனார்கள் அதை நான் எழுதிய போது. ஆனால், படைப்புச் சுதந்திரத்தைக் கட்டிப் போட இது வலுவான காரணம் இல்லையென நினைக்கிறேன். என்னுடைய இந்த படைப்புச் சுதந்திரம் பற்றிய எண்ணம் வெறும் lofty ideal அல்ல! என்னுடைய கரிசனை இப்படிப் படைப்புலகை நாம் மிரட்டிக் கொண்டே வந்தால் , எங்கே எல்லை? ஒரு கட்டத்தில் சினிமாவை முற்றாகத் தடை செய்த தலிபான்கள் போல ஆகி விடுவோம். 

தடை செய்யுமாறு கோராமல் நாம் இதை பொய் என மறுத்திருக்க வேண்டும். 

@அக்னியஷ்த்ராசொன்னபலதில் முரண்பட்டாலும், அவர் சொன்னதை போல் இதை ஒரு record ற்காவது நாம் எதிர்க வேண்டும் என்பது சரிதான்.

எமது அமைப்புகள் எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை விட்டிருக்கலாம்.  இது வெறும் உள்நோக்கம் கொண்ட, உண்மைக்கு புறம்பான படம் என்பதை பதிவு செய்திருக்கலாம்.

இதன் பின்னால் உள்ள சதி பற்றி தனியாக எழுதலாமா? என்று யோசிக்கிறேன். பார்ப்போம்.

1 hour ago, குமாரசாமி said:

தமிழ் பெண்களின் அறத்தையும் கற்பையும் போற்றும் படியான படங்களும் தொடர்களும் உருவாக்க வேண்டும் அது நமக்கான கடமை.  

எமது சகோதரிகளின் பெருமையை போற்றக் கூடத்தேவையில்லை. அவர்கள் வாழ்ந்த வாழ்வை உள்ளபடி எடுத்தாலே அது போற்றுதலுக்குரியதாய்தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் நாம் மட்டும அநியாயத்திற்கு ஜனநாயகவாதிகள்ப்பா திலீபனையும், மேதகுவையும் வெளிவராமல் தடுக்க இந்திய மத்தியத்திற்கும் தெரியும், மாநிலத்திற்கும் தெரியும் அவர்களுக்கு தெரியும் ,MGR கையிலிருந்து கத்தி விழுந்ததும் பக்கத்திலிருந்த அரிவாளை எடுத்து இந்தா வாத்தியாரே பிடிச்சுக்கோ என்று திரையை நோக்கி எறிந்தவனுக்கு எது மனதில் ஆழமாய் பதியும் என்பது, இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பாவம் இப்படியான வரலாற்றில் நடந்த ஒரு சம்பவத்தை தழுவியோ அல்லது மையமாக வைத்தோ எடுக்கும் படத்தை பார்ப்பவர்கள் எல்லோரும் எப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்று Fact checkers ஆகமாறி நான்கைந்து நம்பத்தகுந்த இணையத்தளங்களுக்கு சென்று அனைத்தையும் வாசித்தறிந்துவிட்டுத்தான் இந்த படங்களை பார்க்கிறார்கள் என்பது தெரியாமல் போய்விட்டது, நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் நேற்றுடன் தான் தெரிந்தது பானி பூரி வாயனுகள் எல்லாம் நம்ம ரேஞ்சுக்கு இல்லை , முக்கால் வாசி பேமலி மான் பார்த்துத்தான் சிலோன் மேட்டரை அறியப்போகுது என்று, ஆனால் மக்களே எந்நிலை வரினும் எலைட்ஸ்அறிவுரைகளை மட்டும் மறந்துவிடாதீர்கள்  படத்தை படமாய் மட்டும் பார்க்க வேணும்....விளையாட்டை விளையாட்டாய் மட்டும் பார்க்க வேணும்... அரசியலை அரசியாலாக மட்டும் பார்க்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

உலக விஞ்ஞானிகள் சமூகத்துக்காக எந்த புல்லையும் புடுங்குவதில்லை 
விட்டால் தாம் எழும்பி கூவுதால்தான் சூரியன் உதிக்கிறது என்ற லெவலுக்கு 
கதை அளக்கமட்டும் தெரியும்.

இந்த எதிர்ப்பானது நல்ல பலனை கொடுத்து இருக்கிறது 
இப்போ  ஓ டி டி OTT இப்படியான கான்ட்ராவர்சிகளை உருவாக்கி 
படைப்பு சுதந்திரத்துக்கு தாம் கொடுத்த வலுவை இவர்கள் வீணாக்கி 
தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்குகிரார்கள் என்று அறிக்கை விட்டிருக்கிறது.

இவ்வாறான கான்ட்ராவர்சி தொடர்களை தாம் தடை செய்ய போவதாகவும் தெரிவித்து இருக்கிறார்கள் 
முற்று முழுதாக அவர்கள் விளம்பரத்தை நம்பியே இதில் முதலீடு செய்கிறார்கள் 

இவாறான குளறுபடிகள் படைப்பு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி 
அதற்கு உள்ள வலுவுக்கு பங்கம் விளைவிக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, அக்னியஷ்த்ரா said:

என்ன இருந்தாலும் நாம் மட்டும அநியாயத்திற்கு ஜனநாயகவாதிகள்ப்பா திலீபனையும், மேதகுவையும் வெளிவராமல் தடுக்க இந்திய மத்தியத்திற்கும் தெரியும், மாநிலத்திற்கும் தெரியும் அவர்களுக்கு தெரியும் ,MGR கையிலிருந்து கத்தி விழுந்ததும் பக்கத்திலிருந்த அரிவாளை எடுத்து இந்தா வாத்தியாரே பிடிச்சுக்கோ என்று திரையை நோக்கி எறிந்தவனுக்கு எது மனதில் ஆழமாய் பதியும் என்பது, இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பாவம் இப்படியான வரலாற்றில் நடந்த ஒரு சம்பவத்தை தழுவியோ அல்லது மையமாக வைத்தோ எடுக்கும் படத்தை பார்ப்பவர்கள் எல்லோரும் எப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு என்று Fact checkers ஆகமாறி நான்கைந்து நம்பத்தகுந்த இணையத்தளங்களுக்கு சென்று அனைத்தையும் வாசித்தறிந்துவிட்டுத்தான் இந்த படங்களை பார்க்கிறார்கள் என்பது தெரியாமல் போய்விட்டது, நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன் நேற்றுடன் தான் தெரிந்தது பானி பூரி வாயனுகள் எல்லாம் நம்ம ரேஞ்சுக்கு இல்லை , முக்கால் வாசி பேமலி மான் பார்த்துத்தான் சிலோன் மேட்டரை அறியப்போகுது என்று, ஆனால் மக்களே எந்நிலை வரினும் எலைட்ஸ்அறிவுரைகளை மட்டும் மறந்துவிடாதீர்கள்  படத்தை படமாய் மட்டும் பார்க்க வேணும்....விளையாட்டை விளையாட்டாய் மட்டும் பார்க்க வேணும்... அரசியலை அரசியாலாக மட்டும் பார்க்க வேணும்.

எனக்கும் வாசிச்சு சிரிப்பை அடக்கமுடியவில்லை 
காரணம் கதைகள் பார்த்ததால் உலக விஞ்ஞானிகள் ரேஞ்சு 
கடைசியில் உலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது 

ஹொலிவூட் 80 கடைசிகளில் ஒசாமா பின்லாடன் முகஜுத்தீன்களை 
கீரோக்களாக காட்டிஏ ராம்போ படங்கள் தயாரித்து ஆயுத விற்பனை 
தமது அரபு நாடுகள் அபகரிப்புக்களை அமெரிக்க மக்கள் மத்தியில் நியாயம் கற்பித்து 
மூளை சலவை செய்தது. சும்மா இருந்த முஸ்லிம்களை உலகம்பூரா உசுப்பேத்தி 
அல்கெய்த்தவை உருவாக்கி .. தமக்கு தாமே செய்வினை செய்தார்கள். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: தமிழர்களின் உணர்வுகளை தொட்டால் என்ன நடக்கும் என்பதை காட்ட வேண்டும் என்கிற முடிவில் ஏகப்பட்ட தமிழர்களும் தமிழ் உணர்வாளர்களும் அமேசான் பிரைம் அக்கவுண்ட்டையே அன்சப்ஸ்கிரைப் செய்து வருகின்றனர். மேலும், ஈழ தமிழர்களின் சுதந்திர போரையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் தி ஃபேமிலி மேன் 2 தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கண்டனக் குரல்களை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஹாஷ்டேக்கில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ட்வீட்கள் குவிந்து அமேசான் பிரைமுக்கு கடும் நெருக்கடி நிலையை உருவாக்கி உள்ளது.

அமேசானே இருக்காது தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்திய தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரை வெளியிட்ட அமேசான் பிரைமின் அனைத்து விதமான தொடர்புகளையும் ஒட்டுமொத்த தமிழர்களும் துண்டிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி தனது வலுவான கண்டனத்தை பதிவு செய்தார்.

அமேசானுக்கு தடை சீமான், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குநர் சேரன் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த வெப் தொடருக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது #BoycottAmazon என்ற ஹாஷ்டேக்கை 70 ஆயிரத்திற்கும் அதிகமான ட்வீட்களை போட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கேன்சல் பண்ணிட்டேன் அமேசான் பிரைமில் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரை வெளியிடக் கூடாது என கண்டனங்கள் எழுந்ததை மீறியும் அந்த வெப் தொடரை கடந்த ஜூன் 4ம் தேதி அமேசான் பிரைம் வெளியிட்டது. சந்தேகித்ததை போலவே அந்த வெப் தொடரில் சர்ச்சைகுரிய பல காட்சிகள் இடம்பெற்ற நிலையில் பலரும் தற்போது அமேசான் தொடர்பையே துண்டித்து வருகின்றனர்.

வாங்க மாட்டேன் அடுத்த வாரம் 30 ஆயிரம் மதிப்பிலான டிவி ஒன்றை அமேசானில் வாங்க இருந்தேன். ஆனால், தி ஃபேமிலி மேன் 2 தொடர் எங்கள் இன உணர்வுகளை காயப்படுத்தியதை தொடர்ந்து அமேசானை அன் இன்ஸ்டால் செய்து விட்டேன். இனிமேல் அமேசான் நிறுவனத்தில் எதையும் வாங்க போவதில்லை என இவரை போல ஏகப்பட்ட தமிழ் உணர்வாளர்கள் பதிவிட்டுள்ளனர்.

Read more at: https://tamil.filmibeat.com/news/tamil-people-trending-boycottamazon-for-streaming-the-family-man-2/articlecontent-pf207174-083648.html?utm_medium=Mobile&utm_source=OI-TA&utm_campaign=Homeclicks-News

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

ணர்வாளர்களும் அமேசான் பிரைம் அக்கவுண்ட்டையே அன்சப்ஸ்கிரைப் செய்து வருகின்றனர். மேலும், ஈழ தமிழர்களின் சுதந்திர போரையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் தி ஃபேமிலி மேன் 2 தொடர் உருவாக்கப்பட்டுள்ளதாக சினிமா பிரபலங்களும் அரசியல் தலைவர்களும் கண்டனக் குரல்களை கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

ஹாஷ்டேக்கில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ட்வீட்கள் குவிந்து அமேசான் பிரைமுக்கு கடும் நெருக்கடி நிலையை உருவாக்கி உள்ளது.

 எதோ நம்மால் முடிந்தது, இரண்டாவது பாகம் பார்க்கும் போதே கைத்தொலைபேசியில் அமேசான் பிரைம் தளத்திற்குள் நுழைந்து subscription ஐ தூக்கிவிட்டேன், கேட்பவர்களுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டுவரலாம் 
பெரும் எலைட்ஸிற்கு காமெடியாக இருக்கும், பில்லியன் கணக்கில் காசு பார்க்கும் அமேசனுக்கு உங்களது மாதாந்த  ரெண்டு டாலர் தான் பெரிய பணமா என்று, ஆனால் அமேசனோ சிரித்துக்கொண்டு போகவில்லை 
ஏன் கேன்சல் பண்ணுகிறீர்கள்.? எதற்கு கேன்சல் பண்ணுகிறீர்கள்.? வேறு எதாவது தளம் பாவிக்கிறீர்களா.?  என்று ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு தகவல்களை உள்வாங்கிக்கொண்டுதான் கேன்சல் பண்ணுகிறது, என்னால்  இப்போதைக்கு முடிந்தது இவ்வளவுதான்   

  • கருத்துக்கள உறவுகள்

பேமலி மானை விட சிறப்பான செய்கைகள் முகப்புத்தகத்திலும், உன் குழாயிலும்  எமது புலம்பெயர் டிடெக்ட்டிவ்களுக்கு நடக்கிறது, இவர்கள் சீமானுக்கெதிராக சோறு தண்ணியில்லாமல் திராவிடிய உத்தியோகபூர்வமற்ற  கோ ப சே க்கள் போன்று கமெண்ட்டுகளில் தேர்தலுக்கு முன்  திட்டி தள்ள திருட்டு திராவிடியன்ஸ் லைக்குகளை அள்ளி வழங்கியதோடு ,சூப்பர் சகோ, வெறித்தனம் நண்பா, மரண பங்கம் பங்கு என்று உசுப்பேத்த இவர்களும் சும்மா விட்டு விளையாடினார்கள், லைக்குகள் தந்த தைரியத்தில் என்னப்பா போராளிகளை இப்படி காட்டிவிட்டீர்கள் என்று போய் திராவிடியன்ஸ் கிட்ட புலம்பவும் அவிங்களோ செருப்பை Pee யில் தோச்சு அடிப்பதுபோல தீவிரவாதிகளை தீவிரவாதியாகதானே காட்டவேண்டும், விபச்சாரிகளை விபச்சாரிகளாக தானே காட்டவேண்டும், உங்களுடைய பெண்களுக்கு எத்தனை அப்பன் பெயர் தெரியாத சிங்களக்குழந்தைகள் பிறந்திருக்கிறது என்று இலங்கைக்கு போய் பார், இங்கிருந்து ஓடி போ அகதி டாக்ஏ என்று நம்மடை டிடெக்ட்டிவ்களை தெறிக்க விடுறினம், மூஞ்சி மீது விழுந்த குத்துக்களை வாங்கிக்கொண்டும்  மண்ணள்ளியெறிந்து சாபம் விட்டுக்கொண்டும்  ஓடுறினம் நம்மடை டிடெக்ட்டிவ்ஸ்      

Edited by அக்னியஷ்த்ரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.