Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதலுக்கு எல்லை உண்டு(?)நட்புக்கில்லையாம்..

Featured Replies

இது நான் வெண்ணிலாவின் " தோழனே" என்ற நட்பின் ஆழத்தை எடுத்துச்சொல்லும் ஒரு கவியின் கீழ் பதிந்த கருத்து. கருத்தென்று சொல்ல முடியாது..என்னோட கேள்வியும் கூட...

ஆனால் அங்கு தலைப்பு வேற மாதிரி போகின்றது..தனியாக தலைப்பென்றால் பலரும் அவரவர் கருத்துக்களை கூறலாம் என்றுதனியா பதிகின்றேன்.... உங்கள் கவனத்திற்காக..

அந்த அழகான கவிதையை படிக்காவிட்டால்..படிக்க..

http://www.yarl.com/forum3/index.php?showt...=25593&st=0

............

" தோழனே" கவியின் கீழ இடம்பெற்ற கருத்துக்களை கவனித்தேன். வெண்ணிலாவின் கருத்துக்களின் போது அவர் குறிப்பிட்ட சில கவிதைகள் வாசித்தேன். நன்றாக இருந்தது.

பின்னால் நெடுக்ஸ் அண்ணாவின் அழகான கருத்துக்கள் சூப்பர்! விளங்காத வைக்கும் சட்டென்று விளங்க வைத்து விடும்... (சில சமயங்களில் விளங்கியவர்களையும் அவர் கருத்துக்கள் குழப்பும் அது வேறு விடயம் :P )

...........

இப்ப எனக்கு விளங்காத ஒரு விடயம் என்னவென்றால்..

வாழ்க்கையில் எல்லோருக்கும் நட்பும் இருக்கு...காதலும் இருக்கு! இரண்டும் முக்கியமானவை கூட.

இப்போ நட்பு, காதல் என்று இரண்டை பற்றி அடிக்கடி வாதங்கள் நடைபெறுவது சரி.

ஆனால் நட்பு என்று..நட்பை பற்றி கதைக்கும் போது நான் கூட கவனித்தது என்னவென்றால்.

காதலை கொச்சைப்படுத்துவது போல(அப்படியென்றால் மிகையாக்கி சொல்கிறேனா தெரியவில்லை) சரி காதலை குறைவாக..அதாவது நட்பை விட குறைவாக சொல்லியே சொல்லப்படுகின்றது.

அப்படி எந்த வகையில் காதல் நட்பை விட குறைந்து விட்டது என்று தான் புரியவில்லை. ஆனால் எங்கேயாவது காதலை பற்றி சொல்லும் போது நட்பை குறைவாக சொல்லப்பட்டிருக்கா? இல்லை..ஆனால் நட்பு என்ற போது மட்டும் காதலை கொச்சைப்படுத்துவது தப்பு! நட்பு உன்னதமானது. காதலும் உன்னதமானது. அப்படி இருக்க ஏன் ஒன்றை மிகையாக்க மற்றொன்றை கொச்சைப்படுத்துகிறார்கள். அதுவும் கூட உடல் உணர்ச்சிகளை காதலோடு இணைத்தே கொச்சைப்படுத்துகிறார்கள். சிலது இயற்கை. எல்லாரும் எழும்பி நின்று இல்லை என்று வாதிட்டாலும் எல்லோரும் மனிதர்..எல்லோருக்கும் இயற்கையான உணர்வுகள் இருக்கு. இது நான் தப்பா கதைக்க வரவில்லை.

ஆனால் கூட காதலை இப்படி உணர்ச்சிகளோடு சேர்த்து கொச்சை படுத்துவது எனக்கு பிடிக்கவில்லை.

நட்பை காதலோடு கொச்சைப்படுத்துவது பிழை என்றால்..காதலை வேறு உணர்ச்சிகளோடு கொச்சைப்படுத்துவது மிகப்பெரிய பிழை!!

காதல் தனது ஆட்சியை

பள்ளியறையில்

முடித்துக்கொண்டு

மூச்சடங்கிப்போகிறது.

நட்பு அப்படியல்ல

இதயத்தின் இதயத்துள்

உணர்வின் உணர்வுள்

புதுப்புது அர்த்தங்களை

வாழ்வின் எல்லை வரை

தருவதாய்.

இதில் முதல் வரிகள்..எந்த உண்மையான காதலர்,கணவன்,மனைவியாலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

இதில் முற்றாக நட்பை உயர்வாக்க எண்ணி வாழ்வில் முக்கியமான அதே உயர்வான காதலை கொச்சைப்படுத்தப்படுகின்றது.

2வது வரிகள்..ஏன் இதயத்தின் உணர்வுகளை காதல் தராதா? புது புது அர்த்தங்கள்?? அப்படி என்ன புது புது அர்த்தங்கள்? காதலில் அது இல்லையா?

ஒரு பெண்ணை, அல்லது ஆணை தாய்,தகப்பன் என்னும் மகத்தான உயர்வுக்கு இட்டு செல்வது காதல் தான். அது திருமணத்தால் இணைக்கப்பட்ட காதல் தான். நட்பால் முடியவே முடியாது. இப்படி புது புது உறவுகளை தந்து ஒருவரின் வாழ்வில் புது அர்த்தங்களை கொடுப்பது காதல் தானே...

(இது நான் இரண்டையும் குழப்பவில்லை, ஆனால் நட்பை விட காதல் குறைவில்லை என்று சொல்கிறேன்!)

அத்தோடு பல பாடல்கள் கவிகளிலும் இப்படியே.

காதலுக்கு எல்லை உண்டு..

நட்புக்கு இல்லை!

சரி நட்புக்கு இல்லை. ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் காதலுக்கு இருக்கா? எங்க என்று யாராவது காட்டினார்களா?

இன்னும் சொல்லப்போனால்

நட்புக்குள் காதல் இருக்காது! இருக்கவும் கூடாது!ஆனால்

காதலுக்குள் நட்பு இருக்கலாம்!

இப்படி பார்க்க போனால் நட்பு காதலுக்குள் அடக்கம்!

அப்போ எந்த வகையில் காதலை குறைவாக பேசலாம்???

..........

இதில் ஒன்று சொல்ல வேண்டும்...நான் சொல்வது உண்மையான நட்பு & காதலை பற்றி மட்டுமே!

இரண்டையும் கலந்து பால்ல தண்ணி கலந்தது போல எதென்றே புரியாமல் இருக்கும் அந்த அதை சொல்லவில்லை.

அங்கே நெடுக்ஸ் அண்ணா சொல்லி இருந்தார்..எல்லாவற்றையும் தாண்டிய காதல் உண்டு என்று.

உண்டு தானே உண்மை தானே..இங்கு யாரும் குழந்தை பெற்ற பின் கணவனோடு ஆயுள் வரை வாழவில்லையா?

அப்படி என்றால் ஏன் எல்லோரும் காதல் செய்பவர்கள்..

காதலி,காதலனோடு வாழ்பவர்கள்.. இல்லை கணவன்,மனைவியாக வாழ்பவர்கள்..

நட்பு என்று வந்ததும் காதலை குறைத்து கதைக்கிறார்கள்.அப்படி காதலில் என்ன குறையை கண்டார்கள் என்பது தான் விளங்கவில்லை.. :D:D :angry:

உங்களில் யாருக்கும் விளங்குதா? :D

  • கருத்துக்கள உறவுகள்

காதல் கல்யாணம் வரை சென்றாலும், அதற்கப்பாலும் தொடரும். அதன் பின்னர் காதல் முறிவடைந்து கல்யாணம் தொடரலாம்; அல்லது முறிவடையாமலேயே தொடரலாம். எனவே எல்லையை எங்கு வகுப்பது காதல் கொண்டோரில்தான் தங்கியுள்ளது.

பல அழியாக் காதல்கள் (உ.ம். ரோமியோ & ஜுலியட்) எல்லாம் மரணத்தில் முடிவடைந்ததால் மரணத்தைக் காதலின் எல்லையாகக் கொண்டிருக்கலாம்.

அப்புறம் ஏன் அழியாக் காதல் என்கிறார்களாம்?

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் ஏன் அழியாக் காதல் என்கிறார்களாம்?

உங்களை இன்று வரை அதைப் பற்றிக் கதைக்க வைக்கின்றதே, அது தான் அழியாக் காதல்!

  • தொடங்கியவர்

கிருபன்ஸ் அண்ணா, தெளிவா குழப்புறீங்க.......

அப்பிடி எண்டா நண்பர்களுக்குள் முறிவு வாறதில்லையா?அது எல்லை இல்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P தொடங்கிட்டினம்............ காதல் எண்டா புனிதம்........... நட்பு எண்டா புனிதம்............. எண்டுகொண்டு. எல்லாத்துக்கும் புனிதப்பட்டம் கட்டி மனுசன இயல்பா இருக்கா விடாமல் செய்யுங்கோ................ காதலுக்கு ஒரு போலியான புனித பிம்பத்தை உருவாக்கிட்டு அந்த உணர்வ இயல்பா அனுபவிக்க முடியாமல்..... செயற்கையா காதலெண்டால் இதானெண்டு உணர்ந்துகொண்டு இருக்கினம் நிறையபேர். ஆளாளுக்கு ஒரு காதலுக்கு ஒரு அர்த்தத்த கொடுங்க வெளிக்கிட்டினம்.................... காதலெண்டிறது ஒரு சாதாரண மனுச உணர்வு...... அது புனிதம் ............ அதுக்கு எல்லையில்ல.............. அது கடவுள் மாதிரி............... எண்டுகொண்டு சினிமா டயலக்குகள் விட்டுக்கொண்டு........... உங்கட இயற்கையான உணர்வுகள அடக்கி........... இயல்பா இருக்காமல்.................. மன அழுத்துங்களுக்கு உள்ளாகம இருங்கோ...................... :angry: :angry:

இங்கு ஏதோ தீவிரமா ஒரு பிரச்சனை நடக்கிது என்று விளங்கிது. ஆனா என்ன பிரச்சனை என்று விளங்கவில்லை...

பூனைக்குட்டி சொல்வது ஏதோ எனக்கு சரியாகப் படுகிறது...

பிறந்தோமா, வளர்ந்தோமா, மகிழ்ந்தோமா, செத்தோமா என்று போய்க்கொண்டே இருக்க வேண்டும். இடைவழியில் நின்று நட்புக்கும் காதலிற்கும் இடையிலான வித்தியாசங்கள் எவை? காதலிற்கும் கலியாணத்திற்கும் உள்ள தொடர்புகள் எவை? இப்படி தத்துவ ஆராய்ச்சிகள் செய்யவெளிக்கிட்டால் கடைசியில் வாழ்க்கையே வேஸ்ட் ஆகப் போய்விடும். அவரவர் வாழ்வில் நடப்பதை பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். நியூட்டனின் இயக்கவியல் விதிகள் போல் பொதுவான விதி என்று இங்கு ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரின் வாழ்வியல் அனுபவமும் வித்தியாசமானது.

காதலுக்கு எல்லை உண்டு(?)நட்புக்கில்லையாம்..

தலைப்பில் இப்படி சொல்லப்படுகிறது... :D

நான் இந்த ஆராய்ச்சிக்கு வரவில்லை... நமக்கு ஏற்கனவே மேல்வீடு கொஞ்சம் கழன்றுவிட்டது. இதற்கு மேற்பட்ட சுமையை 1500 கிராம் பாரமான நம்மட சிறிய மூளை தாக்குப்பிடிக்காது... :D

புசுக்குட்டி சொன்ன கருத்துக்கு என்னோட சேர்ந்து எல்லாரும் ஒரு ஓ போடுங்கோ பார்க்கலாம்...

எங்க..

ஓஓஓஓஓஓஓஓ...! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று தெரியுமா பிள்ளைகள்.

காதலிட்ட போய் எல்லா உண்மையையும் சொல்ல இயலாது. ஆனா நட்பிட்ட போய்ச் சொல்லாம். ஏன் அம்மா, அப்பாட்ட சொல்ல முடியாததைக் கூட நட்பிட்ட சொல்லாம்.

சரி. என்னத்தைப் பற்றிக் கதைக்கின்றியள்?

காதலிட்ட போய் எல்லா உண்மையையும் சொல்ல இயலாது. ஆனா நட்பிட்ட போய்ச் சொல்லாம். ஏன் அம்மா, அப்பாட்ட சொல்ல முடியாததைக் கூட நட்பிட்ட சொல்லாம்.

உண்மையைச் சொல்லி இருக்கின்றீங்க. :P :P :P நட்பு நட்பு தான். :P

  • கருத்துக்கள உறவுகள்

காதல், நட்பு என்பவை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்பது சினிமாப் படங்களால் உருவாக்கப்பட்டது. இரண்டுக்கும் புரிந்துணர்வு அவசியம்.. புரிந்துணர்வு இல்லாவிடில், இடையிடையே பிரச்சினைகள் வரும், பிரச்சினைகளைச் சீர் செய்யாமுடியாவிடில் இரண்டுமே முறிந்துவிடும்.. எனவே பூனைக்குட்டி சொன்ன மாதிரி இலக்கணங்களை வகுக்காமல் காதல் செய்வதும், நட்புக் கொண்டாடுவதும் நல்லது!

காதலிட்ட போய் எல்லா உண்மையையும் சொல்ல இயலாது. ஆனா நட்பிட்ட போய்ச் சொல்லாம். ஏன் அம்மா, அப்பாட்ட சொல்ல முடியாததைக் கூட நட்பிட்ட சொல்லாம்.
ரொம்பச் சரி.. முன்னாள் காதலகர்களைப் பற்றியும், முன்னர் செய்த சேட்டைகள், சுடுதாக்களைப் பற்றியும் சொல்லமுடியுமா, என்ன! :D :P

ரொம்பச் சரி.. முன்னாள் காதலகர்களைப் பற்றியும், முன்னர் செய்த சேட்டைகள், சுடுதாக்களைப் பற்றியும் சொல்லமுடியுமா, என்ன! :D :P

ஏன் முடியாது உண்மையா காதல் செய்தால் சொல்ல முடியும் B)

கவிதை அந்தாதியில் இருந்து

ஒரு மாலை வேளையில்

நடந்தேன் தெருச்சாலையில்

கண்டேன் ஓர் காளையை

விழுந்தேன் காதல் வலையில்

இணைந்தேன் திருமண சோலையில்

ஆண்டுகள் ஆறின் பின்.

பின் இரண்டு பிள்ளை

பெற்றெடுத்த பின்பு

கண் நிறைந்த காதல்

கந்தலாகி போக

காசு காசு என்று

இரண்டு பேரும் ஓட

தேசம் விட்டு தேசம் வந்து

வேசம் ரொம்ப போட்டோம்

இதுக்குப் பெயர் தான் காதலா?

Edited by வெண்ணிலா

  • தொடங்கியவர்

தொடங்கிட்டினம்............ காதல் எண்டா புனிதம்........... நட்பு எண்டா புனிதம்............. எண்டுகொண்டு. எல்லாத்துக்கும் புனிதப்பட்டம் கட்டி மனுசன இயல்பா இருக்கா விடாமல் செய்யுங்கோ................ காதலுக்கு ஒரு போலியான புனித பிம்பத்தை உருவாக்கிட்டு அந்த உணர்வ இயல்பா அனுபவிக்க முடியாமல்..... செயற்கையா காதலெண்டால் இதானெண்டு உணர்ந்துகொண்டு இருக்கினம் நிறையபேர். ஆளாளுக்கு ஒரு காதலுக்கு ஒரு அர்த்தத்த கொடுங்க வெளிக்கிட்டினம்.................... காதலெண்டிறது ஒரு சாதாரண மனுச உணர்வு...... அது புனிதம் ............ அதுக்கு எல்லையில்ல.............. அது கடவுள் மாதிரி............... எண்டுகொண்டு சினிமா டயலக்குகள் விட்டுக்கொண்டு........... உங்கட இயற்கையான உணர்வுகள அடக்கி........... இயல்பா இருக்காமல்.................. மன அழுத்துங்களுக்கு உள்ளாகம இருங்கோ......................

பூஜுக்குட்டி நலமா? :D

முந்தி அடிக்கடி வருவீர்கள்..தற்போது காண கிடைப்பதே இல்லை..

சரி இப்ப ஏன் டென்சன் ஆகுறீங்கள்..நான் வசனங்கள் பேசல..நமக்கு அது துண்டற வரவும் வராது.

இப்போ ஒரு செய்தியை எடுத்துப் போட்டு அதை பற்றி நாங்கள் கருத்துக்கள் சொல்வதில்லையா.. ( உலக நடப்பு பாருங்கோ) அது போல தான் இதுவும்..கவிதைகளில் எழுதுவதையும், நடைமுறையில் சொல்லப்படுவதையும் சொன்னேன். அம்புட்டுத்தான்..

கண் நிறைந்த காதல்

கந்தலாகி போக

இது ஒரு காதல் தானே அன்றி

எல்லா காதலும் இப்படியல்லவே..

எல்லா நட்பும் சந்தோசம் தான் தருமென்றில்லையே..இதுக்கு என்னோட நட்பே நல்ல உதாரணம்..நான் கூட ஒரு நண்பியோடு பழகினேன். நல்ல நட்பு. இடையில் அவர் வேறு எவரோ சொன்ன சில வதந்திகளை நம்பி என்னை விட்டு விலகி விட்டார். உண்மையை முழுதாக அறியாமல் விலகி விட்டார். விளக்க நான் முனைந்த போது அவர் தனக்கு கோவம் என்றால் கதைக்க மாட்டார் என்ற கொள்கையின் அடிப்படையில் இருந்தார். இருக்கிறார்!

இதுவும் என்னோட நிஜமான நட்பு எனக்கு கொடுத்த பரிசே...

அவள்..

ஆயிரம் தடவை

அரவணைப்பாய் பேசியவள்...

ஏதோ ஒரு விவாதத்தில்

அன்பை அறுத்து விட்டவள்..

என் உள்ளத்து நட்பை

கொஞ்சமும் சிந்திக்காதவள்..

பிறர் சொன்ன வார்த்தைக்கு

கட்டுப்பட்டவள்..

என் பக்க விவாதத்தை

கேட்க மறுப்பவள்..

தன் கோவமொன்றே

பெரிதென்று வாழ்பவள்..

என் நெஞ்சத்து குமுறலை

அணைத்து ஆற்றாதவள்..

உருண்டு விழும் கண்ணீரை

தட்டி விட வராதவள்..

நான்..

அவள் மற்றோருடன் பேச

உள்ளுக்குள் அழுபவள்..!

பேசிடும் சந்தர்ப்பங்களை

தேடி தேடி அலைபவள்..!

அவள் வெறுக்க வெறுக்க

உள்ளுக்குள் கொதிப்பவள்..!

மொத்தத்தில்

முட்டாள் தனமாக

அவள் ஒரு பக்கம் பார்த்தே

பழகியவள்..!

மறுபக்கம் என்றொன்று

இருப்பதை மறந்தவள்..!

இப்படியும் நட்பு இருக்கின்றது! ஓம் என்றதற்கு என் நட்பே ஒரு உதாரணம்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை என்பதை மனசுக்கு பிடிச்சது போல வடிவமைத்து வாழும் மனிதனும் இருக்கிறான்..! பிறந்தம் என்றதுக்காக எப்படியயோ வாழ்ந்திட்டுப் போவம் என்று வாழுற மனிதனும் இருக்கிறான்..!

முன்னையவன் ரசிக்கத் தெரிந்தவன். பின்னையவன் ருசிக்கத் தெரிந்தவன்..!

ரசிக்கத் தெரிந்தவனுக்கு தன்னை எல்லையிடத் தெரியும்..! ருசிக்கத் தெரிந்தவனுக்கு அனுபவம் தான் வழிகாட்டி..! கெட்டு குட்டிச்சுவராகித்தான் தெளியனும் என்றால் அதுக்கு என்ன செய்ய முடியும்..!

காதல்.. நட்பு.. காமம்.. இதெல்லாம் ஆட்களின் சிந்தனைகளுக்கு ஏற்ப மாறுபடும்..!

சிலருக்கு காதல்.. ஒரு கலை..! - காதலை காதலிப்பவரை எட்ட வைத்தே ரசிப்பவர்கள்.

சிலருக்கு காதல்.. ஒரு கண்ணாடி..! - காதலில் புனிதத்தை பிரதிபலிக்க என்பவர்கள். ஒரே காதல் ஒன்றே உறவு என்று காப்பவர்கள்.

சிலருக்கு காதல் படுக்கை..! - காதலை ருசிக்கத் தெரிந்தவர். படுத்தமா நித்திரை கொண்டமா போனமா என்று எண்ணும் கூட்டம். காதலிப்பவரையும் அடிக்கடி மாற்றிக் கொள்பவர்கள்.

சிலருக்கு காதல் நோய்..! - இவர்கள் பாவங்கள். காதல் ஒரு தடவைதான் உண்மையாப் பூக்கும் என்று காத்திருந்து பூத்த பொழுதே.. அடுத்த கணம் வாடி உதிரப் போகிறது என்று அறியாமல்.. பற்று வைத்து பறிகொடுத்து காதலுக்காய் தம்மையே அழித்துக் கொள்பவர்கள்..! ( இலகுவாக ஏமாற்றப்படக் கூடியவர்கள்)

சிலருக்கு காதல் தீனி...! - காதலே கதியென்று கட்டுண்டு கிடப்பவர்கள். காதலே வாழ்க்கை என்று வாழ்பவர்கள்.. காதலையே முதலீடாக்கி வாழ்ப்பவர்கள்.

இப்படி காதலில் பிரதானமான பஞ்ச ( 5) முகம் உள்ளவர்களை சாதாரண உலகில காணக் கூடியதா இருக்குது. அவரவருக்கு அது அது அப்படித்தான் தெரியும்..!

நமக்கு காதல்.. ஒரு கண்ணாடின்னா.. சிலருக்கு அது படுக்கை.. சிலருக்கு அது நோய்.. சிலருக்கு... அதுவே தீனி..! மனித மனங்களும் சிந்தனைகளும் ஒருமிக்காத நிலையில் மனிதனின் திருப்திப்படும் அளவு மாறுபடும் நிலையில் காதல்.. நட்பு.. காமம் இவற்றிற்கு இதுதான் விதி என்று வரையறுக்க முடியாது. அவரவர் தமது திருப்திக் கேற்ப இவற்றை கண்டு உணர்ந்து வாழ்வதே சிறப்பு..தேவை..! :)

Edited by nedukkalapoovan

ஏனுங்க சகி உங்களுக்கு நட்பைப்பார்த்தால் கிண்டலா இருக்கா?

  • தொடங்கியவர்

நமக்கு காதல்.. ஒரு கண்ணாடின்னா.. சிலருக்கு அது படுக்கை.. சிலருக்கு அது நோய்.. சிலருக்கு... அதுவே தீனி..! மனித மனங்களும் சிந்தனைகளும் ஒருமிக்காத நிலையில் மனிதனின் திருப்திப்படும் அளவு மாறுபடும் நிலையில் காதல்.. நட்பு.. காமம் இவற்றிற்கு இதுதான் விதி என்று வரையறுக்க முடியாது. அவரவர் தமது திருப்திக் கேற்ப இவற்றை கண்டு உணர்ந்து வாழ்வதே சிறப்பு..தேவை..! :D

நெடுக்ஸ் அண்ணா அழகான விளக்கம். :D

நட்புக்கும் இப்படி பல முகங்கள் இருக்கு.

ஏற்று வாழும் நட்பும் இருக்கு!

ஏமாற்றி வாட வைக்கும் நட்பும் இருக்கு!

அதனால் தான் நான் சொன்னேன்..காதலை விட நட்பு எந்த விதத்திலும் பெட்டர் இல்லை, நட்பை உயர்த்தி கதைப்பதில் பிரியோசனம் இல்லை என்று. வேறில்லை :D

ஏனுங்க சகி உங்களுக்கு நட்பைப்பார்த்தால் கிண்டலா இருக்கா?

:rolleyes: என்ன நக்கலா வானவில்?

சொன்னதை வடிவாய் வாசித்தீர்களா? :)

அவள்..

ஆயிரம் தடவை

அரவணைப்பாய் பேசியவள்...

ஏதோ ஒரு விவாதத்தில்

அன்பை அறுத்து விட்டவள்..

என் உள்ளத்து நட்பை

கொஞ்சமும் சிந்திக்காதவள்..

பிறர் சொன்ன வார்த்தைக்கு

கட்டுப்பட்டவள்..

என் பக்க விவாதத்தை

கேட்க மறுப்பவள்..

தன் கோவமொன்றே

பெரிதென்று வாழ்பவள்..

என் நெஞ்சத்து குமுறலை

அணைத்து ஆற்றாதவள்..

உருண்டு விழும் கண்ணீரை

தட்டி விட வராதவள்..

நான்..

அவள் மற்றோருடன் பேச

உள்ளுக்குள் அழுபவள்..!

பேசிடும் சந்தர்ப்பங்களை

தேடி தேடி அலைபவள்..!

அவள் வெறுக்க வெறுக்க

உள்ளுக்குள் கொதிப்பவள்..!

மொத்தத்தில்

முட்டாள் தனமாக

அவள் ஒரு பக்கம் பார்த்தே

பழகியவள்..!

மறுபக்கம் என்றொன்று

இருப்பதை மறந்தவள்..!

இப்படியும் நட்பு இருக்கின்றது! ஓம் என்றதற்கு என் நட்பே ஒரு உதாரணம்!

ம்ம் எனக்கும் உப்படி நடந்திருக்கப்பா............ :rolleyes: நீங்கள் எழுதின வரிகள் எல்லாமே உண்மை!

எல்லாத்துக்க்கும் காரணம் இந்தக் கோவம் ! :)

Edited by அனிதா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சகி நட்பையும் காதலையும் போட்டு நல்லா குழப்புறீங்க :):rolleyes:

சகி அக்கா பிடிகல பிடிகல பிடிகல (*எங்கையோ கேட்டிருப்பீங்க கண்டுகாதையுங்கோ)........... :P

காதலை பற்றி நான் சின்ன பிள்ளை கதைக்கவில்லை பிறகு அக்காவிட்ட அடி விழும் ஆகவே நான் சொல்ல வந்த விசயத்தை ஒரு பாட்டில சொல்லிட்டு போயிடுறன் கவனமா அந்த பாட்டை கேளுங்கோ முக்கியமாக சகிஅக்காவும்.நிலா அக்காவும் அதற்கு பிறகு வந்து உங்க கருத்துகளை சொல்லுங்கோ..................................

பாடல் பாண்டவர்பூமியில இருந்து

தோழா தோழா

http://www.raaga.com/channels/tamil/movie/T0000376.html

அப்ப நான் வரட்டா..................... :P

நட்புக்கும் இப்படி பல முகங்கள் இருக்கு.

ஏற்று வாழும் நட்பும் இருக்கு!

ஏமாற்றி வாட வைக்கும் நட்பும் இருக்கு!

இந்த விசயம் உண்மை தானங்க.

"நட்புக்கு விட்டுக்கொடுத்தலும், புரிந்துணர்வும் இரண்டு கண்கள்" இது என்னுடைய கருத்தங்க. :)

சகி உங்க நட்பு இப்படி போயிட்டுதே என்றால் நட்பே கூடாது நட்பு தாழ்ந்தது என்று சொல்லுவீங்களா? ஏன் பொதுவாக நோக்கிப் பாருங்கோ எல்லாம் சரியெனத் தென்படும்.

இன்றைய காதல்

real_love.med.jpg

Edited by வெண்ணிலா

  • தொடங்கியவர்

சகி அக்கா பிடிகல பிடிகல பிடிகல (*எங்கையோ கேட்டிருப்பீங்க கண்டுகாதையுங்கோ)........... :P

காதலை பற்றி நான் சின்ன பிள்ளை கதைக்கவில்லை பிறகு அக்காவிட்ட அடி விழும் ஆகவே நான் சொல்ல வந்த விசயத்தை ஒரு பாட்டில சொல்லிட்டு போயிடுறன் கவனமா அந்த பாட்டை கேளுங்கோ முக்கியமாக சகிஅக்காவும்.நிலா அக்காவும் அதற்கு பிறகு வந்து உங்க கருத்துகளை சொல்லுங்கோ..

ஜம்மு தங்கா நெடுக்ஸ் அண்ணா அண்ட் பூனைக்குட்டி சொன்னது நிஜம்!

எனக்கும் தெரியும் ஒரு நட்பால எல்லா நட்பும் நல்லதென்று சொல்ல ஏலாது!

ஒரு காதலால எல்லா காதலையும் குறை சொல்லவும் கூடாது என்று!

நான் யதார்த்தத்தையே நேசிக்கிறேன்! அதில தான் வாழ்கிறேன்!

பலர் யதார்த்தத்தை மீறி வசனங்களை அள்ளி வீசுவார்கள்!

சிலர் நடந்தே காட்டுவர்!

சரி அதெல்லாம் நமக்கெதுக்கு..

இத் தலைப்பு என்னோடு கதைக்காத என் நண்பி என்னை புரிய கடைசியா நான் எடுத்த முயற்சி! இதை பார்த்து விட்டு நட்பை நேசித்த நான் எப்படி நட்பை இப்படி சொல்கிறேன் ..அப்படி என்றால் என் மனதில் எவ்வளவு கஷ்டம் இருக்கும் என்று அறிந்து..ஒரு தடவையாவது என்னோட வந்து கதைக்கலாம் என்ற நப்பாசையிலேயே! ஆசை எல்லாம் நிறைவேறுமென்றில்லையே..அதுவும

?? நப்பாசை.. ஊஹூம்.. :rolleyes:

ஆனாலும் போங்க ஜம்மு..இப்படி ஜோக் எல்லாம் அடிக்க கூடாது :D

அதுதான் நீங்கள் தந்த பாட்டை சொல்றேன்..சிரிப்பா வந்திச்சு கேட்க..

கவலையை மறந்து சிரிக்க வைத்ததுக்கு நன்றி தங்கா. அதுக்காக ஒரு அல்வா பாசல் வந்துக்கிட்டே இருக்கு ஓகேயா :P

இன்றைய காதல்

real_love.med.jpg

இதை காதல் என்று எப்படி சொல்லுறீங்க வெண்ணிலா? :D

தோளில் சாய்ந்திருந்தால் காதலென்றில்லையே?

தோளில் சாய்ந்தவர் நண்பனாகவும்..பின்னால் கை கொடுப்பவர் காதலனாகவும் இல்லை இன்னொரு நண்பனாகவும் இருக்கலாம் தானே.. :)

Edited by பிரியசகி

மூவரும் காதலர்கள் போல இருக்கிறது..

என்ன கொடுமை சகி இது.. :)

அட உண்மையான நட்பெனில் முன்னால் கையைப் பிடிச்சிருக்கலாமே. என்னமோ ஒழிச்சு கையைப் பிடிச்சிருக்கிற போலல்லவா இருக்கு. இல்லை வானவில் தான் இப்படத்தைப் படம் போடும் போட்டிக்குள் நம்பிக்கைக் காதலுக்கு போடிருந்தார்.. அதைத்தான் நான் கொணர்ந்தேன். வானவில் சகி கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்கோ.

இல்லை சகி இப்ப எல்லாம் காதலர்கள் என ஒரு குடையின் கீழ் இருந்துகொண்டே இன்னொருத்தியைப் பார்த்து நாக்கு நீட்டுறவன் கண்ணடிக்கிறவன் எல்லாம் இப்ப இருக்கிறாங்க பா. காதலிப்பது தப்பே இல்லை. நட்பைவிட குறைச்சலும் இல்லை. ஆனால் பார்த்து காதலியுங்கோ.

வந்துட்டோமல....................

சகி அக்கா நான் கஷ்டபட்டு போட்ட பாட்லை காமெடி என்று சொல்லிவிட்டீங்கள் எனக்கு அழுகை அழுகையா வருது பாருங்கோ................அது சரி அல்வா அனுப்புறது என்று சொல்லி இருக்கிறீங்க அப்ப அடுத்த வீட் உகட்ட நான் தயார் பாருங்கோ................... :angry:

பூஸ் குட்டி சொன்னார் என்றா அதில ஆழ்ந்த கருத்து இருக்கும்............ஆனாலும் அவரின்ட கருத்தை என்னால எடுக்க முடியாது அது வேற விசயம்..........சரி இப்ப பொயிண்டுக்கு வாரேன் காதலுக்கு எல்ல உண்டு நட்பிற்கில்லை............உண்மை தான் சகி அக்கா காதலில் எல்லை உண்டு............ :P

இப்ப நான் உதாரணதிற்கு வான்வில்லை எடுகிறேன் அவர் காதலிகிறார் ஒருவாவை என்று வைத்து கொண்டா கட்டாயம் திருமணம் செய்ய வேண்டும் தானே(சிலர் பேர் செய்யிறதில்லை அது வேற கதை) இத்துடன் காதலுக்கு எல்லை முடிகிறது என்றே சொல்லுவன்............நீங்கள் சொல்லால் திருமணத்தின் பின் காதல் என்று எல்லாம் அதை பற்றி நமக்கு தெறியாது...............ஆனால் நட்பை எடுத்து கொண்டால் அதற்கு திருமணம் அபப்டி என்று ஒன்றும் வாறதில்லையே தொடர்ந்து நட்பாக மதிக்கபடுகிறது............அதற்காக சிட்னி கேள்சே நான் காதல் பிழை என்று சொல்ல வரவில்லை..........(நம்மளை காப்பாற்றியாச்சு)................. :P

இப்ப உதாரணதிற்கு நீங்க உங்கள் நண்பியை தேடும் இறுதி முயற்ச்சி என்று சொல்லி இருக்கிறீங்க ஆமாம் உங்களின் நண்பி மிகவும் கொடுத்து வைத்தவா............கோபம் வந்தாலும் நட்பை தேடும் நீங்களே நட்புக்க்கு எல்லை என்று சொல்லி விட்டீங்கள்...............இதையே உதாரணதிற்கு புத்து வந்து திருமணம் ஆகின பின் தன் பழைய காதலியை தேடினா எப்படி இருக்கும்..........அவ்வளவு நல்லா இருக்காது தானே............நீங்கள் சொல்லாம் ஏன் தேட கூடாது என்று(அக்கா ஜாதர்த்ததுடன் வாழ வேண்டும் பாருங்கோ)................

;)

நான் தெளிவா எல்லாரையும் குழப்பி விட்டேன் என்பது மட்டும் எனக்கு விளங்குது.................ஆனால் காதல் பிழை என்று சொல்லவில்லை அதை பற்றி பிழை என்று கதைக்கவும் இல்லை வெண்ணிலா அக்காவே சொல்லி போட்டா காதல் சரி என்று இது எனக்கு காணும் நாளைக்கு போய் யாரையும் தேட.........................

ஆனாலும் யார் என்ன சொன்னாலும் நட்புக்கு எல்லை இல்லை மற்றஎல்லாவற்றிற்கும் எல்லை உண்டு என்பதே என் கருத்து...............

சகி அக்கா ஓவரா கதைத்து போட்டனோ.................கொஞ்சம் உணர்ச்சி வசபட்டிட்டன் போல அப்ப வரட்டா................. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகி உங்க நட்பு இப்படி போயிட்டுதே என்றால் நட்பே கூடாது நட்பு தாழ்ந்தது என்று சொல்லுவீங்களா? ஏன் பொதுவாக நோக்கிப் பாருங்கோ எல்லாம் சரியெனத் தென்படும்.

இன்றைய காதல்

real_love.med.jpg

நட்பை உயர்த்தணும் என்றதுக்காக காதலை இப்படி கொச்சை படுத்திறீங்களே...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.