Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சூம் (Zoom) கிளாஸ்

Featured Replies

சேர் ,
உங்கள் zoom அழைப்பு கிடைத்தது
ஆனால் passcode தான் கிடைக்கவில்லை.
பணம் கட்டினால் தான்
அது கிடைக்குமாமே,
 
பகலுணவுக்கு வழியில்லை
பாதை வியாபாரம் செய்யும்
அப்பா
பாதுகாவலனுக்கும்
பயந்து பயந்து
மறைந்து மறைந்து
செய்யும் வியாபாரம்
ஒரு வேளை உணவுக்கே
போதாதாம் சேர்.
 
ஆயிரம் ரூபா தேட
பாதையில் பல
பாயிரம் ஓத வேண்டுமாம்.
ஒரு நாளில் அதை
உங்களுக்கு வைப்பிலிட
ஒரு கிழமை எமது
அடுப்புக்கு ஓய்வு
கொடுக்க வேண்டுமே சேர்.
 
நான்கு சகோதரர்கள் நாம்
டேட்டா போடுவதற்கே எமது
அப்பாவின் பல
பாட்டாக்கள் தேய
வேண்டுமே சேர்.
 
சம்பாளுடன் தான் நாம்
சாப்பிடுகிறோம் என்பதை
சம்பளம் வீட்டுக்கு வரும்
உங்களால் புரிந்து கொள்ள
முடியாமல் தானிருக்கும் சேர்.
 
அறிவு தர்மம் செய்ய
ஆண்டவன் அளித்த
வாய்ப்பை எமக்காக கொஞ்சம்
வழங்குங்கள் சேர்.
 
நீங்கள் உழைப்பதற்காக
ஏழைகள் எங்களை உறிஞ்சி
குடிப்பது
ஞாயமில்லை சேர்.
 
எம்மிடம் இதுவரை
எத்தனை ரூபாய்களை
எண்ணி எடுத்து இருக்கிறீர்கள்.
மூச்சுக் காற்றையும்
பேச்சுக் கூற்றையும்
நீங்கள் வியாபாரம் செய்வது
வியப்பாயுள்ளது சேர்.
 
ஆசிரியர் சேவை
என்று தான் நாமறிகிறோம்.
ஆசாரம் இல்லாத
உங்களால்
அர்ப்பணிப்புடன் உள்ளோரும்
படும் அவதியும்
அவலமும் நீங்களறிந்தும்
அறியாமல் போலுள்ளது தான்
அவலம்.
 
வேண்டாம் சேர்
உங்களுக்கு விற்பனையாகாத
பண்டமாகவே நானிருந்து கொள்கிறேன்.
உங்களின்
நுகர்வோர் சேவையாளர்களில்
உணர்வுளால் வேஷம்
போடத் தெரியாத
கழிவுப் பண்டமாக
என்னைக் கருதிக்
கொள்ளுங்கள்.
 
ஒரு நாள்
வருத்தப் படுவீர்கள்
எனது பாடத்தில் A பெற்றவர்கள்
இவர்கள் தான்
என்ற உங்கள்
விளம்பரப் பதாகையில்
எனது இருப்பிடம்
இல்லையே என வருத்தப்படுவீர்கள்.
 
மன்னித்துக் கொள்ளுங்கள் சேர்.
உங்களுக்கு இடித்துரைப்பதற்காக
நான் எழுதவில்லை.
படித்தவர்கள் பண்புள்ளவர்களாய்
இருக்க வேண்டும் என்பதைப்
படித்தாவது உணரட்டுமே.
 
இப்படிக்கு
ஏழை மாணவி.
ஏழையின் மாணவி
 
Copied from FB
 
குறிப்பு: படித்தது பிடித்தது. அதனால் பகிர்கிறேன். இப்படியும் சில ஆசிரியர்கள் உண்டு.
 
  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Shanthan_S said:

பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍👍

  • தொடங்கியவர்

சில ஆசிரியர்கள் மிகவும் மோசம்.

உதாரணமாக, எனது அக்காவின் மக்கள் 7ம் ஆண்டு படிக்கிறாள். ஜூம் கிளாஸ்சுக்கு ஒரு பாடத்துக்கு மாதம் 500 ரூபா வாங்குகிறார்கள். எனவே முக்கியமான கணிதம் விஞ்ஞானம் இங்கிலீஸ் போன்ற பாடத்துக்கு ஜூம் கிளாஸ்சுக்கு காசுகட்டி படிக்கிறவள். ஆனால் அவளது பாடசாலை தமிழ் மற்றும் சைவசமய ஆசிரியர்களும் தங்களது ஜூம் வகுப்பில் அவளையும் இணையச்சொல்லி ஒரே ஆக்கினை. எனது அக்கா சொன்ன, தமிழ் மற்றும் சைவசமயம் போன்றவற்றை நாங்களே வீட்டில் சொல்லிகுடுபோம் என்று (எனது அக்கா ஒரு BA தமிழ் பட்டதாரி) . ஆனாலும் அவர்கள் தொடர்ந்தும் அக்காவுக்கு போன் பண்ணி ஒரே ஆக்கினை. ஆனாலும்  அக்கா முடியாதெண்டு சொல்லிப்போட்டா. பாடசாலை தொடங்கத்தான் பிரச்சினை இருக்கு.

7ம் ஆண்டு பிள்ளைக்கு 8 பாடத்துக்கு ஜூம் கிளாஸ்சுக்கு போறதெண்டால் மாதம் 4000 ரூபா முடியும். இது பெரும்பாலான பெற்றோரால் முடியாத காரியம்.

இவர்களை என்ன செய்வது????

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றும் செய்ய முடியாது .......இது வியாபார உலகம்.....நாணயத்தின் ஒலி மட்டும்தான் அங்கு கேட்கும்....நாணயமும் நா நயமும் வாசலில் தங்கிவிடும்.....!  🤔

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது அக்காவை தனது பிள்ளையுடன் ஏனையோருக்கும் சேர்த்து இலவச சூம் வகுப்பை தமிழுக்கும் சைவநெறிக்கும் ஆரம்பிக்க சொல்லுங்கள்.

லிங்கை மற்ற ஆசிரியருக்கும் தட்டி விட்டு - அவர்களுக்கு தெரிந்த காசு கட்ட முடியாத பிள்ளையள் இருந்தால் இங்கே அனுப்ப சொல்லலாம் (சேவை செய்த மாரியும் இருக்கும் செருப்பால் அடித்த மாரியும் இருக்கும் 🤣).

கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், ஆண்டு 9க்கு மேல் தமிழ் இலக்கணம், இலக்கியம் டியூசன் தேவைபடலாம். அதுவும் அக்கா தமிழ் பட்டதாரி என்பதால் அவசியமில்லை.

சைவநெறிக்கெல்லாம் காசு கட்டி படிப்பது - பக்கா கொள்ளை😡

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் சூம் லெசன் தொடங்க முன் வடிவா யோசிக்கிறது நல்லம் 👇🤣

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, goshan_che said:

உங்களது அக்காவை தனது பிள்ளையுடன் ஏனையோருக்கும் சேர்த்து இலவச சூம் வகுப்பை தமிழுக்கும் சைவநெறிக்கும் ஆரம்பிக்க சொல்லுங்கள்.

லிங்கை மற்ற ஆசிரியருக்கும் தட்டி விட்டு - அவர்களுக்கு தெரிந்த காசு கட்ட முடியாத பிள்ளையள் இருந்தால் இங்கே அனுப்ப சொல்லலாம் (சேவை செய்த மாரியும் இருக்கும் செருப்பால் அடித்த மாரியும் இருக்கும் 🤣).

கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், ஆண்டு 9க்கு மேல் தமிழ் இலக்கணம், இலக்கியம் டியூசன் தேவைபடலாம். அதுவும் அக்கா தமிழ் பட்டதாரி என்பதால் அவசியமில்லை.

சைவநெறிக்கெல்லாம் காசு கட்டி படிப்பது - பக்கா கொள்ளை😡

ப்ரோ,

வாத்தி சோதனையில பெயில் ஆக்கிக் போடும்.

சூம் க்கு முன்னமே, இந்த கோதாரி பிடிச்ச, எண்ட டியூஷன் வகுப்புக்கு வா எண்டு வகுப்பில் வதைக்கும் வாத்திகளை பார்த்திருக்கிறோம்.

சோதனையில் புள்ளிகளை அள்ளிப்போட்டு, தன்னிடம் டியூஷன் வகுப்புக்கு வந்த படியாளை நல்லா படிக்கிறார்கள் என்று மார்க்கெட்டிங் செய்கிற வாத்திகளும் இருக்கினம்.

இந்த அரிகண்டதாலை தான், இலங்கை அரசு டியூஷன் வகுப்புக்கு தடை போடுது. தனது பாடசாலை வகுப்பு மாணவர்களுக்கு (அதாவது வேறு பாடசாலை அல்லது, வேறு வகுப்பு மாணவர்கள் மட்டுமே) டியூஷன் கொடுக்க முடியாது என்று சட்டம் கொண்டு வர ஆலோசனை நடப்பதாக கேள்விப்பட்டேன். 

***

இங்கை சூமில 500. ஒருவாத்தி, கொழும்பில் சனியும், யாழ்ப்பாணத்தில் ஞாயிறுமாக 4000 வாங்கியதாமே.

இப்ப அந்தாள், சூமில பின்னிப் பெடெல் எடுப்பார்.

எனது கசினின், தகப்பன் வழி கசின் கொழும்பில் கெமிஸ்ட்ரி open யூனியில் முடித்தார். கொழும்பில் வேலை. இப்பதான் கலியாணம் முடித்தார். யாழ்ப்பாணம் போய், இரண்டு தனியார்  பாடசாலைகள் அவரை படிப்பிக்க வைத்துக்கொண்டு, இரண்டு சம்பளம் வாங்குகிறார். சனம் டியூஷனுக்கு திரத்தி, இப்ப 2000 ரூபாயில் நிக்குது. ஏறுமாம். 

அவோவும் சூமில பாய்வார் என்று நினைக்கிறேன்.
 
Edited by Nathamuni

  • தொடங்கியவர்
36 minutes ago, goshan_che said:

உங்களது அக்காவை தனது பிள்ளையுடன் ஏனையோருக்கும் சேர்த்து இலவச சூம் வகுப்பை தமிழுக்கும் சைவநெறிக்கும் ஆரம்பிக்க சொல்லுங்கள்.

லிங்கை மற்ற ஆசிரியருக்கும் தட்டி விட்டு - அவர்களுக்கு தெரிந்த காசு கட்ட முடியாத பிள்ளையள் இருந்தால் இங்கே அனுப்ப சொல்லலாம் (சேவை செய்த மாரியும் இருக்கும் செருப்பால் அடித்த மாரியும் இருக்கும் 🤣).

கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், ஆண்டு 9க்கு மேல் தமிழ் இலக்கணம், இலக்கியம் டியூசன் தேவைபடலாம். அதுவும் அக்கா தமிழ் பட்டதாரி என்பதால் அவசியமில்லை.

சைவநெறிக்கெல்லாம் காசு கட்டி படிப்பது - பக்கா கொள்ளை😡

அக்கா அவரோட ஸ்கூல் பிள்ளைகளுக்கு ஸ்கூல் மூடியிருந்த காலப்பகுதியில்  ஜூம் ல கிளாஸ் எடுக்கிறவ.  ஸ்கூல் சிலபஸ்ஐ கவர் பண்ண. மற்றும்படி தொடர்ச்சியாக்க ஜூம் கிளாஸ் எடுக்க அவவுக்கு நேரம் இல்லை. 3 பிள்ளைகள் மற்றும் அத்தான் முழுநேர விவசாயி என்பதால் வீட்டுவேலை மற்றும் தோட்டவேலை என்பவற்றுடன் டைம் போய்விடும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

ப்ரோ,

வாத்தி சோதனையில பெயில் ஆக்கிக் போடும்.

சூம் க்கு முன்னமே, இந்த கோதாரி பிடிச்ச, எண்ட டியூஷன் வகுப்புக்கு வா எண்டு வகுப்பில் வதைக்கும் வாத்திகளை பார்த்திருக்கிறோம்.

சோதனையில் புள்ளிகளை அள்ளிப்போட்டு, தன்னிடம் டியூஷன் வகுப்புக்கு வந்த படியாளை நல்லா படிக்கிறார்கள் என்று மார்க்கெட்டிங் செய்கிற வாத்திகளும் இருக்கினம்.

இந்த அரிகண்டதாலை தான், இலங்கை அரசு டியூஷன் வகுப்புக்கு தடை போடுது. தனது பாடசாலை வகுப்பு மாணவர்களுக்கு (அதாவது வேறு பாடசாலை அல்லது, வேறு வகுப்பு மாணவர்கள் மட்டுமே) டியூஷன் கொடுக்க முடியாது என்று சட்டம் கொண்டு வர ஆலோசனை நடப்பதாக கேள்விப்பட்டேன். 

இப்படியான வாத்தியை நானே கடந்துதான் வந்தேன்.

பெற்றார்-ஆசிரியோர் சங்கம், கோட்ட, வட்ட, வலய, மாகாண கல்விபணிப்பாளர்  வரை கம்பளைண்ட் எகிறும் என்ற “பயத்தை கண்ணில் காட்டினால்” வாத்தி அடங்கிடுவார்/அடங்கினார்.

(நாங்கள் அப்பவே அப்படி🤣).

மிஞ்சி மிஞ்சி போனால் டேர்ம் டெஸ்ட் வரைக்கும்தான் இவர்களது செல்வாக்கு. ஓஎல் பரிட்சையில் எதுவும் செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

இங்கே, பணம் இல்லை என்று தானே முறைப்பாடு - கவிதை.

சனம் காசு வைத்துக்கொண்டு வாத்திமாரை திரத்திக் கொண்டெல்லே திரியுது.

2019ல் யாழ்ப்பாணம் போனபோது ஒரு வீட்டின் முன்னால் பெரும் கூட்டம். தாய், தகப்பன் மார் மோட்டார் சைக்கிள் வைத்துக்கொண்டு வெளியாலை நிக்கினம். கொஞ்சம் தள்ளி கார்களும், ஆட்டோக்களும்....

என்ன என்று விசாரித்த போது, டியூஷன் முடியப்போகுது, பிக் அப் பண்ண நிக்கினமாம். 

ஆகவே, 80 - 90 % அந்த போக்கிலை இருக்கும் போது... இந்த மிகுதி மக்கள் என்ன செய்வது? 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Shanthan_S said:

அக்கா அவரோட ஸ்கூல் பிள்ளைகளுக்கு ஸ்கூல் மூடியிருந்த காலப்பகுதியில்  ஜூம் ல கிளாஸ் எடுக்கிறவ.  ஸ்கூல் சிலபஸ்ஐ கவர் பண்ண. மற்றும்படி தொடர்ச்சியாக்க ஜூம் கிளாஸ் எடுக்க அவவுக்கு நேரம் இல்லை. 3 பிள்ளைகள் மற்றும் அத்தான் முழுநேர விவசாயி என்பதால் வீட்டுவேலை மற்றும் தோட்டவேலை என்பவற்றுடன் டைம் போய்விடும்.

கஸ்டம்தான். 

Just now, Nathamuni said:

இங்கே, பணம் இல்லை என்று தானே முறைப்பாடு - கவிதை.

சனம் காசு வைத்துக்கொண்டு வாத்திமாரை திரத்திக் கொண்டெல்லே திரியுது.

2019ல் யாழ்ப்பாணம் போனபோது ஒரு வீட்டின் முன்னால் பெரும் கூட்டம். தாய், தகப்பன் மார் மோட்டார் சைக்கிள் வைத்துக்கொண்டு வெளியாலை நிக்கினம். கொஞ்சம் தள்ளி கார்களும், ஆட்டோக்களும்....

என்ன என்று விசாரித்த போது, டியூஷன் முடியப்போகுது, பிக் அப் பண்ண நிக்கினமாம். 

ஆகவே, 80 - 90 % அந்த போக்கிலை இருக்கும் போது... இந்த மிகுதி மக்கள் என்ன செய்வது? 

தல டியூசன் போறது தப்பில்லை. வீட்டுக்கு வெளில கூட்டம் இல்லை - செல்வவடிவேல், நாகநாதன், விக்டர், மணியம், என்று ஒரு கிளாசில் நூற்று கணக்கில் மாணவர்கள் படிக்கும் நிலை 80களிலேயே வந்து விட்டது.

கொழும்பில் வெள்ளவத்தை மொட் இல் பிரேம்நாத் ஒரு நாளைக்கு 600-800 பேருக்கு டியூசன் எடுத்தார். அதில் ஒருவர் ரிசாத் பதியுதீன் என்று ரஞ்சித் எழுதினார்.

நுகேகொட பக்கம் தியேட்டர் மாரி மைக் வைத்து நடக்கும் சிங்கள டியூசன்.

ஆனால் சைவெநெறிக்கு டியூசன் போய் நான் இன்னும் கேள்விபடேல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

பணம் வாங்காமல் படிப்பித்த பல நல்ல ஆசிரியர்களுண்டு ஊரில், என்னையும் படிப்பித்தார்கள், நானும் இலவசமாக படிப்பித்தேன், நல்லவர்கள் பலர் ஊரில் உண்டு தேடி படியுங்கள், பகண்டுக்கு இப்படி பணம் கறக்கும் ஆசிரியர்களை விட்டுவிட்டு. A/L எடுத்துவிட்டு ஊரில் இருக்கும் மாணவர்களிடம் கேட்டு படியுங்கள், ஆசையுடன் படிப்பிப்பார்கள் சும்மா

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

ஆனால் சைவெநெறிக்கு டியூசன் போய் நான் இன்னும் கேள்விபடேல்ல.

யாரால், யாருக்கு, எங்கே சொல்லப்பட்டது:

மந்திரியாரே, தண்டோரா போட்டு, மதுரை மக்களை, வைகை ஆற்றின் கரையோரம் உடனடியாக கூடும் படி அறிவித்து விடுங்கள். கூடாது விடில், கடும் தண்டனை என்றும் தெரிவியுங்கள்.

விடை தெரியாவிடில்..... டியூஷன் என்னிடம் புக் பண்ணுங்கோ... சோதனை பாஸ் பண்ணாமல் எண்ட முகத்தில எப்படி முழிக்கப்போறீங்கோ? 😜

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.