Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவில் 44 ஏக்கர் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு - ரவிகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கில் கனியமணல் (இல்மனைட் ) தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்காக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 44 ஏக்கர் காணிகளை அரசவளங்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சின் கீழான, இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் கம்பிகளாலான வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளது. 

IMG_1235.jpg

இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் 22.06.2021 இன்றையதினம் கொக்கிளாய்ப் பகுதிக்கு நேரில் சென்று ஆராய்ந்தனர். 

இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

IMG_1234.jpg

கொக்கிளாய் கிழக்குப் பகுதியிலுள்ள எமது தமிழர்களுடைய பூர்வீக காணிகளை இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் அபகரித்துள்ளது. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின், புல்மோட்டைப் பகுதியில் அமைந்துள்ள அந்த இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினூடாக , முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் உள்ளிட்ட பகுதிகளிலும் கனியமணல் அகழ்வதற்கான ஆயத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இந்த கொக்கிளாய் உள்ளிட்ட பகுதிகளில் கனியமணல் அகழ்வதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுவதாக அப்பகுதிளிலுள்ள தமிழ் மக்களால் எமக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன. 

அதற்கு அமைவாக நான் மாகாணசபையில் இந்த விடயம் தொடர்பிலும் பேசியிருந்தேன். அதனடிப்படையில் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக மாகாணசபையினால் ஓர் குழு அமைக்கப்பட்டது. அவ்வாறு மாகாணசபையினால் அமைக்கப்பட்ட குழுவினர், இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினைச் சார்ந்தோரைப் பலதடவைகள் சந்திததுக் கலந்துரையாடியுமிருந்தனர். 

குறிப்பாக கடந்த 2018.06.01 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டைப் பகுதியில் அமைந்துள்ள கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்திற்குரிய, இல்மனைட் தொழிற்சாலையில் கடந்த 2018.09.01அன்றும் இவ்வாறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. 

அப்போதுகூடநாம் இந்த இடத்தை அபகரிக்கும் விடயத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இவை மக்களுடைய காணிகள், எனவே மக்களுக்கே வழங்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் நாம் கருத்துக்களைத் தெரிவித்துவந்தநிலையில் அவர்களுடைய இந்த ஆக்கிரமிப்பு மற்றும், கனியமணல் அகழும் முன்னெடுப்புக்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. 

இந் நிலையில் கடந்த 2018.10.24 அன்று வடமாகாணசபையின் முதலாவது ஆட்சிக்காலம் நிறைவிற்கு வந்த பின்னர், இது தொடர்பான கூட்டங்களுக்கு வடமாகாணசபையால் அமைக்கப்பட்ட குழுவினை அழைப்பதுமில்லை, இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அந்தக் குழுவினருடன் கலந்துரையாடுவதுமில்லை. 

இவ்வாறானதொருசூழலில் இதுவரைகாலமும் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த கனிப்பொருள் மணல்கூட்டுத்தாபனத்திற்குரிய இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்கான காணி அபகரிப்பு விடயம் மற்றும், கனியமணல் அகழ்விற்கான செயற்பாடுகள் என்பன தற்போது மீண்டும் முனைப்புப்பெறத் தொடங்கியுள்ளன. 

அந்தவகையில் இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்கென 18 தமிழ் மக்களுக்கு சொந்தமான, 44 ஏக்கர் அறுதி உறுதிக்காணிகளை கொக்கிளாய் கிழக்குப் பகுதியில், காணிகளுக்குரிய தமிழ் மக்களின் அனுமதியைப் பெறாது கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் வேலிகளை அமைந்து அபகரித்து தமது அடாவடித் தனமான செயற்பாட்டினைச் செய்துள்ளனர். கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தின் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. 

அத்தோடு அண்மையில் கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத் தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய ஆறு கிராம அலுவலர் பிரிவுகளிலுமுள்ள பொது அமைப்புகள், பொதுமக்கள் எனப் பலரும் கையொப்பமிட்டு, இந்த காணி அபகரிப்பைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், இந்தக் காணிகள் காணிகளுக்குரிய எமது தமிழ் மக்களுக்கே சேரவேண்டும் என்பதான மகஜர் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் வழங்கியதுடன், இன்னும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கும் அந்த மகஜரின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டதுடன், என்னிடமும் அந்த மகஜரின் பிரதியினை அப்பகுதி மக்கள் கையளித்திருந்தனர். 

இவ்வாறாக அந்தப் பகுதி மக்கள் பெரும்பாலானோர், அப்பகுதியில் அபகரிக்கப்பட்டுள்ள இந்தக் காணிகள், காணிகளுக்குரிய மக்களுக்கே வழங்கப்படவேண்டுமென கோரியிருக்கின்றனர். 

இந் நிலையில் தமிழ் மக்களுக்குரிய இந்த அறுதி உறுதிக்காணிகளை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் எவ்வாறு ஆக்கிரமிக்கமுடியும்? 

இவ்வாறு மக்களுக்குரிய காணிகளை அனுமதியின்றி அரச திணைக்களங்களும், கூட்டுத்தாபனங்களும் அபகரிப்பது பொருத்தமான செயற்பாடல்ல. 

எனவே கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் தாம் அபகரித்துள்ள இந்தக்காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும். 

அவ்வாறாக இந்தக் காணிகளை விடுவித்து மக்களுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை, உரிய பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் முன்னெடுக்கவேண்டும் - என்றார்.

முல்லைத்தீவில் 44 ஏக்கர் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு - ரவிகரன் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் இல்லாத தமிழர்கள் சிங்கள கொத்தடிமைகள் தான்:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இந்த கொக்கிளாய் உள்ளிட்ட பகுதிகளில் கனியமணல் அகழ்வதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுவதாக அப்பகுதிளிலுள்ள தமிழ் மக்களால் எமக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன

இதை தடுப்பதற்கான உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? இப்படியே காலத்துக்கு காலம் கூவிவிட்டு போவதா? இன்னும் இரண்டு வருடத்திற்கு பின் வந்து பார்ப்பதற்க்கு ஒன்றுமே இருக்காது. உருப்படியாய் எதுவும் செய்யாமல் கூடிக் கூப்பாடு போடுவதே வழமையாய்ப்போச்சு. இதற்கு மேல் எதுவும் நடவாது என்கிற தைரியத்தில் அவனும் ஏதோ ஒரு காரணத்தையிட்டு காணி பிடிக்கிறான். கூவுவதற்கு மட்டும்தான் நமது பிரதிநிதிகள் லாயக்கு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கில் கனியமணல் (இல்மனைட் ) தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்காக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 44 ஏக்கர் காணிகளை அரசவளங்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சின் கீழான, இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் கம்பிகளாலான வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளது. 

இங்கே....
சீமானும் இல்லை
ஆமைக்கறியும் இல்லை
விசயலச்சுமியும் இல்லை
நாம் தமிழரும் இல்லை

 எனவே தூண்டில் போடுவாரும் இல்லை... 😂

தோணாவில் மீன் பிடித்தல் | WWW.YOURKATTANKUDY.COM

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:

இதை தடுப்பதற்கான உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? இப்படியே காலத்துக்கு காலம் கூவிவிட்டு போவதா? இன்னும் இரண்டு வருடத்திற்கு பின் வந்து பார்ப்பதற்க்கு ஒன்றுமே இருக்காது. உருப்படியாய் எதுவும் செய்யாமல் கூடிக் கூப்பாடு போடுவதே வழமையாய்ப்போச்சு. இதற்கு மேல் எதுவும் நடவாது என்கிற தைரியத்தில் அவனும் ஏதோ ஒரு காரணத்தையிட்டு காணி பிடிக்கிறான். கூவுவதற்கு மட்டும்தான் நமது பிரதிநிதிகள் லாயக்கு!

இதை குறையாக சொல்லவில்லை சாத்தான்.

குருந்தூர் மலை திரியில் கூட நீங்களும், நானும், @putthan, @valavanஎழுதியதுதான் - எமது பிரதிநிதிகள் மட்டும் அல்ல - நாமும் கூட சும்மா கூவுவதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாத நிலையில் உள்ளோம் என்பது உண்மைதானே?

நான் கோட்ட அபய வெல்ல கூடாது என எழுதியதற்கு பிரதான காரணமே - இந்த சிங்கள மயமாதல் சஜித்தின் கீழ் கொஞ்சமேனும் தாமமதப்படும் என எதிர்பார்த்ததே. (ஆனால் கோட்டா எப்படியும் வென்றிருப்பார்).

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, goshan_che said:

நான் கோட்ட அபய வெல்ல கூடாது என எழுதியதற்கு பிரதான காரணமே - இந்த சிங்கள மயமாதல் சஜித்தின் கீழ் கொஞ்சமேனும் தாமமதப்படும் என எதிர்பார்த்ததே

நல்லாட்சி கும்பல் சகலதையும் கிடப்பில் போட்டுவிட்டு அரைத்த மாவை அரைத்தார்களே தவிர வேறு எதையுமே செய்யவில்லை. உதாரணத்திற்கு ரோட்டுக்கு தார்கூட ஊத்தவில்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டுப் பிரதிநிதிகளை இரகசியமாக சந்தித்து பேசும் கூட்டம், ரணில் அரசை காப்பாற்ற நீதிமன்றம் அலைந்த மேதாவிகள் எங்கே போய்விட்டார்கள்? தேர்தல் காலங்களில் மட்டும் வருவார்கள்: வந்தபின் நாங்கள்  காப்போம் என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நல்லாட்சி கும்பல் சகலதையும் கிடப்பில் போட்டுவிட்டு அரைத்த மாவை அரைத்தார்களே தவிர வேறு எதையுமே செய்யவில்லை. உதாரணத்திற்கு ரோட்டுக்கு தார்கூட ஊத்தவில்லை.
 
இது உண்மைதான். 

ஆனால் நிச்சயமாக மைத்திரி ரணில் ஆட்சி காலத்தில் நில அபகரிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது என்பது வெளிப்படை.

இருதரப்புமே இனவாதிகள்தான் - ஆனால் நில அபகரிப்பு, சிங்கள மயமாக்கலில் கோட்ட-மகிந்த தரப்பு மிகவும் வினைதிறனானவர்கள்.

ஆனால் கோட்ட எப்படியும் வென்றிருப்பார். 

5 minutes ago, satan said:

சிங்களத்தை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டுப் பிரதிநிதிகளை இரகசியமாக சந்தித்து பேசும் கூட்டம், ரணில் அரசை காப்பாற்ற நீதிமன்றம் அலைந்த மேதாவிகள் எங்கே போய்விட்டார்கள்? தேர்தல் காலங்களில் மட்டும் வருவார்கள்: வந்தபின் நாங்கள்  காப்போம் என்று. 

அவர்களும், எங்களை போல் எதுவும் செய்ய முடியாதவர்கள்தான். 

ஆனால் நமக்கு இது தொழில் இல்லை ஆகவே நாம் எம்மால் எழுதுவதை, யாழில் வந்து புலம்புவதை தவிர வேறு வழியில்லை என நேர்மையாக ஒத்து கொள்கிறோம். 

அவர்களுக்கு அரசியல் தொழில், ஆகவே வழக்கு போடுவோம் என ஒரு சாராரும், எமக்கு அரசில் உள்ள பவரை பாவித்து இதை தடுப்போம் என மறு சாராராரும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

நமக்கும், ஊரில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் இது மட்டுமே வித்தியாசம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

இது உண்மைதான். 

ஆனால் நிச்சயமாக மைத்திரி ரணில் ஆட்சி காலத்தில் நில அபகரிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது என்பது வெளிப்படை.

இருதரப்புமே இனவாதிகள்தான் - ஆனால் நில அபகரிப்பு, சிங்கள மயமாக்கலில் கோட்ட-மகிந்த தரப்பு மிகவும் வினைதிறனானவர்கள்.

ஆனால் கோட்ட எப்படியும் வென்றிருப்பார். 

இப்படியும் கணிக்கலாம்....

கோத்தாவின் வெற்றி தேவாலய குண்டுவெடிப்புகளை வைத்து நிச்சயிக்கப்பட்டது

அல்லது...

தேவாலய குண்டு வெடிப்புகள் மூலம் ராஜபக்ஸ வம்சம் அரசாட்சிக்கு உள்ளே வர வைக்கப்பட்டது.
 
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இப்படியும் கணிக்கலாம்....

கோத்தாவின் வெற்றி தேவாலய குண்டுவெடிப்புகளை வைத்து நிச்சயிக்கப்பட்டது

அல்லது...

தேவாலய குண்டு வெடிப்புகள் மூலம் ராஜபக்ஸ வம்சம் அரசாட்சிக்கு உள்ளே வர வைக்கப்பட்டது.
 
நிச்சயமாக. அவர்கள் வரவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நடத்தபட்டவை அவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Just now, goshan_che said:

நிச்சயமாக. அவர்கள் வரவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நடத்தபட்டவை அவை.

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
இனி வரும் காலங்களில் எதற்காக தனி ஈழ போராட்டம் தொடங்கியது என தெரியாதவர்களுடன் தனி கூட்டு வைக்காமல் மக்களுடன் மக்களாக இணைந்திருங்கள்.😂

சிங்கள இனவாதம் செய்தவற்றை ஒரு கணமும் நினைவு கூராமல் தமிழினத்தை மட்டும் குறைகூறுபவர்களிடம் விலகியிருங்கள். 🤣

நான் தமிழன் நீங்கள் 😎

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
இனி வரும் காலங்களில் எதற்காக தனி ஈழ போராட்டம் தொடங்கியது என தெரியாதவர்களுடன் தனி கூட்டு வைக்காமல் மக்களுடன் மக்களாக இணைந்திருங்கள்.😂

சிங்கள இனவாதம் செய்தவற்றை ஒரு கணமும் நினைவு கூராமல் தமிழினத்தை மட்டும் குறைகூறுபவர்களிடம் விலகியிருங்கள். 🤣

நான் தமிழன் நீங்கள் 😎

உங்கள் கருத்துக்கும் நன்றி.

நான் இனவாதத்தின் நெருப்பை, போரின் அகோரத்தை நேரில் அனுபவித்தவன்.  

பலர் பத்திரிகையில் மட்டும் வாசிக்கும் கொக்கிளாயும், கொக்குதொடுவாயும், தென்னமரவாடியும் அந்த மண்ணின் கரு நிற கடற்கரையும் நான் ஓடி விளையாடிய மண். ஆகவே போராட்டத்தின் நியாப்பாடு பற்றி யாரிடமும் அறிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

யாழில் எல்லாருடனும் நான் ஒரே அளவு தூரத்தில்தான். சிலதில் ஒன்றியும், சிலதில் விலகியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

உங்கள் கருத்துக்கும் நன்றி.

நான் இனவாதத்தின் நெருப்பை, போரின் அகோரத்தை நேரில் அனுபவித்தவன்.  

பலர் பத்திரிகையில் மட்டும் வாசிக்கும் கொக்கிளாயும், கொக்குதொடுவாயும், தென்னமரவாடியும் அந்த மண்ணின் கரு நிற கடற்கரையும் நான் ஓடி விளையாடிய மண். ஆகவே போராட்டத்தின் நியாப்பாடு பற்றி யாரிடமும் அறிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

யாழில் எல்லாருடனும் நான் ஒரே அளவு தூரத்தில்தான். சிலதில் ஒன்றியும், சிலதில் விலகியும்.

பல ஊடகங்களிலும்,பல இணையத்தளங்களிலும் , பல போராட்ட இயக்களிலும் வந்த சொல் நான்
இது தான் இவ்வளவு அழிவிற்கும் காரணம். இதை தொடர்வீர்கள் என நம்புகின்றேன்.
அது வரைக்கும் நன்றி வணக்கம்.🙏🏽

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

பல ஊடகங்களிலும்,பல இணையத்தளங்களிலும் , பல போராட்ட இயக்களிலும் வந்த சொல் நான்
இது தான் இவ்வளவு அழிவிற்கும் காரணம். இதை தொடர்வீர்கள் என நம்புகின்றேன்.
அது வரைக்கும் நன்றி வணக்கம்.🙏🏽

உங்கள் நம்பிக்கை நின்று நிலைக்க வாழ்த்துக்கள் சாமியார்! 

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் முன்பு வேலை பார்த்த ஒருவர் முல்லைதீவு பகுதியை சேர்ந்தவர்  அவர் சொன்னார் முல்லை மாவட்டத்தில் பலநூறு ஏக்கர் காணிகள் பெயருக்குத்தான் தமிழருக்கு சொந்தமானவை என்று இருக்கின்றதேயொழிய யாரும் அந்த பக்கம் போய் எட்டியும் பார்ப்பதில்லை,வெறும் கட்டாந்தரையாக கவனிப்பாரற்று விட்டிருக்கிறார்கள், காலபோக்கில் அவை அரச காணிகளாகும் என்று.

புலம்பெயர்ந்த நாட்டில் இருப்பவர்கள் அவற்றை விற்க முனைப்பும் காட்டுவதில்லை ஏனெனில் யாழ்நகர பகுதிபோன்று அதிகவிலை போவதுமில்லை வாங்குவதற்கு பலர் முன்வருவதும் இல்லை என்று.

எல்லோரும் வாழ்ந்தால் ஜப்னா டவுனுக்குள் இல்லையென்றால் வாழ்க்கையே வேண்டாம் என்பதுபோல் சுத்தி சுத்தி சுப்பரின் கொல்லைக்குள் நிற்பதனால் எல்லைகள் விழுங்கபடுகின்றன என்று நினைக்கிறேன்.

கவனிப்பாரற்ற காணிகளை காணிகளே இல்லாத தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம் இல்லையென்றால் மலையக பகுதியை சேர்ந்த மக்களுக்காவது குடியமர வழங்கலாம்  ஆனால் அதற்கு யாருக்கும் மனசு வருவதில்லை அரசாங்கத்திடமும் சிங்களவன் முஸ்லீம்களிடமும் பறி கொடுத்தபின் குய்யோ முறையோ என்று புலம்புவினம்.

வீட்டுக்குள் ஆக்கள் இருந்தால் பாம்பு புற்று எடுக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, valavan said:

வீட்டுக்குள் ஆக்கள் இருந்தால் பாம்பு புற்று எடுக்காது.

வீட்டுக்குள்ள இருந்தவர்களையே அடிச்சு விரட்டிவிட்டு ஆட்சி நடத்துது அரசு. புற்று எடுத்த வீடுகளை துப்பரவாக்கி குடியிருந்தவர்களை வெளிநாட்டு உறவுகளும் உண்டு. ஆனால் பாதிக்கப்படுவதும், பாதிக்கப்பட்டதும் ஏழைகளும், ஏதிலிகளுமே.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

பல ஊடகங்களிலும்,பல இணையத்தளங்களிலும் , பல போராட்ட இயக்களிலும் வந்த சொல் நான்
இது தான் இவ்வளவு அழிவிற்கும் காரணம். இதை தொடர்வீர்கள் என நம்புகின்றேன்.
அது வரைக்கும் நன்றி வணக்கம்.🙏🏽

நீங்கள், “நீங்கள்” என என்னை விளித்து எழுதினால் நான், என்னை பற்றி இல்லாமல் பக்கத்து வீட்டுகாரனின் நிலைப்பாடு பற்றியா எழுத முடியும்?

35 minutes ago, valavan said:

என்னுடன் முன்பு வேலை பார்த்த ஒருவர் முல்லைதீவு பகுதியை சேர்ந்தவர்  அவர் சொன்னார் முல்லை மாவட்டத்தில் பலநூறு ஏக்கர் காணிகள் பெயருக்குத்தான் தமிழருக்கு சொந்தமானவை என்று இருக்கின்றதேயொழிய யாரும் அந்த பக்கம் போய் எட்டியும் பார்ப்பதில்லை,வெறும் கட்டாந்தரையாக கவனிப்பாரற்று விட்டிருக்கிறார்கள், காலபோக்கில் அவை அரச காணிகளாகும் என்று.

புலம்பெயர்ந்த நாட்டில் இருப்பவர்கள் அவற்றை விற்க முனைப்பும் காட்டுவதில்லை ஏனெனில் யாழ்நகர பகுதிபோன்று அதிகவிலை போவதுமில்லை வாங்குவதற்கு பலர் முன்வருவதும் இல்லை என்று.

எல்லோரும் வாழ்ந்தால் ஜப்னா டவுனுக்குள் இல்லையென்றால் வாழ்க்கையே வேண்டாம் என்பதுபோல் சுத்தி சுத்தி சுப்பரின் கொல்லைக்குள் நிற்பதனால் எல்லைகள் விழுங்கபடுகின்றன என்று நினைக்கிறேன்.

கவனிப்பாரற்ற காணிகளை காணிகளே இல்லாத தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம் இல்லையென்றால் மலையக பகுதியை சேர்ந்த மக்களுக்காவது குடியமர வழங்கலாம்  ஆனால் அதற்கு யாருக்கும் மனசு வருவதில்லை அரசாங்கத்திடமும் சிங்களவன் முஸ்லீம்களிடமும் பறி கொடுத்தபின் குய்யோ முறையோ என்று புலம்புவினம்.

வீட்டுக்குள் ஆக்கள் இருந்தால் பாம்பு புற்று எடுக்காது.

முல்லை தீவு பக்கம் கூட போகத்தேவையில்லை - வேலணைக்கும் ஊறாத்துறைக்கும் இடைபட்ட ஊர்களில் நல்ல காப்பெட் ரோடு உண்டு, 25 நிமிசத்தில் யாழ் போகலாம் ஆனாலும் சனம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

குறைகூறுபவர்களிடம் விலகியிருங்கள். 🤣

உசுப்பேத்திவிட்டு கைதட்டுறதும் இருக்கக்கூடாது என்றும் சொல்லி வையுங்கள்.

1 hour ago, goshan_che said:

சிலதில் ஒன்றியும், சிலதில் விலகியும்.

எங்கள் சட்டாம்பி மாதிரி: சிங்களவருடன் இருப்பது மகிழ்ச்சி, ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று சொன்னால் சிங்களவர் சமஷ்டியை கையில தந்துவிடுவார்கள் என்று புலுடா விடுகிற மாதிரியில்லைதானே? 

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, valavan said:

வீட்டுக்குள் ஆக்கள் இருந்தால் பாம்பு புற்று எடுக்காது.

ஆனால் இதில் இன்னொரு கோணமும் உள்ளது வல்லவன்.

நீங்கள் சொல்லும் இந்த காணிகள் காட்டு பகுதியை அண்டி, மலேரியா போன்ற ஆபத்துகள், பள்ளி மருத்துவ, வீதி வசதி இல்லாமல்தான் இருக்கும். ஆகவே அங்கே போய் வாழ ஆட்களை பிடிப்பது சுலபமல்ல. அவர்களுக்கும் அங்கே வாழ்வாதாரம் இராது.

ஆனால் இந்த வசதிகள் எல்லாம் ஒரு 10 குடியேற்ற வீடுகளை கட்டியவுடன் மளமளவென்று வந்துவிடும். 

அலம்பில், நாயாறு பக்க தமிழ் கிராமங்களையும், மணலாற்றின் குடியேற்ற கிராமங்களையும் (பட்டினங்களையும்) பார்த்தால் இது புரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

எங்கள் சட்டாம்பி மாதிரி: சிங்களவருடன் இருப்பது மகிழ்ச்சி, ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று சொன்னால் சிங்களவர் சமஷ்டியை கையில தந்துவிடுவார்கள் என்று புலுடா விடுகிற மாதிரியில்லைதானே? 

இதை நீங்கள் அவரிடம் கேட்க வேண்டும். இனவாதம், போராட்டம், பிழைகள், குறைகள், நிறைகள், தனிநாடு, சமாஸ்டி இவை பற்றிய எனது நிலைப்பாடு என்னது. 

நான் எனக்கு பிடித்த கருத்துகள் வரும் போது கருத்துக்கு கைதட்டுவேன்.

திருக்கேதீஸ்வர வளைவு, யாழில் போதகர் தாக்கபட்டது போன்ற திரிகளில் உங்களை எல்லாரும் சேர்ந்து கும்மிய போது, உங்கள் கருத்து எனக்கு ஏற்புடையதால இருந்தபடியால் அதை வரவேற்றேன்.

அதற்கக்க நான் உங்களை உசுபேத்த்தி விட்டதாக கருதக்கூடாது.

எப்போதும் யாரிடனும் 100% ஒத்தும் இருக்க முடியாது விலகியும் இருக்க முடியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

கருத்து எனக்கு ஏற்புடையதால இருந்தபடியால் அதை வரவேற்றேன்

வரவேற்புக்கும், உசுப்பேத்தலுக்கும் இடையில் நிறைய வித்தியாசமுண்டு. உங்களுடைய முன்னைய பதிவுகளை பார்த்தல் அது உங்களுக்கு விளங்கும்.

50 minutes ago, goshan_che said:

அதற்கக்க நான் உங்களை உசுபேத்த்தி விட்டதாக கருதக்கூடாது.

ஒரு போதும் நான் அப்படி நினைக்கவில்லை. என்னை யாரும் வரவேற்கவேண்டும் என்றோ, பாராட்ட வேண்டுமென்றோ எழுதுவதில்லை. நானும் எனது இனமும் பட்ட வேதனைகள், இழப்புகள், அழிவுகள் ஈடு செய்ய முடியாதவை. அதை விலத்தி கடந்து போக என்னால் முடிவதில்லை. அதை என்னால் மறந்து எமது இருப்பை அழித்தவன் நல்லது செய்வான் என்றோ, அல்லது அவனது மாயையில் நாம் இழந்ததை மீட்டு விடலாம் என்றோ நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

வரவேற்புக்கும், உசுப்பேத்தலுக்கும் இடையில் நிறைய வித்தியாசமுண்டு. உங்களுடைய முன்னைய பதிவுகளை பார்த்தல் அது உங்களுக்கு விளங்கும்.

ஒரு போதும் நான் அப்படி நினைக்கவில்லை. என்னை யாரும் வரவேற்கவேண்டும் என்றோ, பாராட்ட வேண்டுமென்றோ எழுதுவதில்லை. நானும் எனது இனமும் பட்ட வேதனைகள், இழப்புகள், அழிவுகள் ஈடு செய்ய முடியாதவை. அதை விலத்தி கடந்து போக என்னால் முடிவதில்லை. அதை என்னால் மறந்து எமது இருப்பை அழித்தவன் நல்லது செய்வான் என்றோ, அல்லது அவனது மாயையில் நாம் இழந்ததை மீட்டு விடலாம் என்றோ நினைக்கவில்லை.

நீங்கள் வரவேற்புக்கா எழுதுவதாக நான் சொல்லவில்லை. அப்படி தொனித்தால் மன்னிகவும். நானும் அப்படி எழுதுவதில்லை. இல்லை என்றால் யாழில் மிக பெரும்பான்மை ஆதரிக்கும் கருத்துக்களை எதிர்து எழுதி கொண்டிருக்க மாட்டேன்.

உங்களது மேலே உள்ள நிலைப்பாட்டுக்கும் எனது நிலைப்பாட்டுக்கும் அதிக தூரம் இல்லை.

ஆனால் ஊரில் இருப்பவர்களின் அன்றாட யாதார்தங்களின் அடிப்படையில் அவர்கள் சில கருத்துக்களை சொல்லும் போது, குறிப்பாக அவர்களின் முந்திய கொள்கை பற்றான நிலைப்பாடு தெரியும் பட்சத்தில் அந்த கருத்தின் நியாத்தையும் புரிந்து கொள்கிறேன். அதை எடுத்து சொல்லும் நெஞ்சுரத்தை வரவேற்கிறேன்.

யாரையும் உசுப்பேத்தும் எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

அவர்களின் முந்திய கொள்கை பற்றான நிலைப்பாடு தெரியும் பட்சத்தில் அந்த கருத்தின் நியாத்தையும் புரிந்து கொள்கிறேன்

ஏது... ஏது....? போகிற போக்கைப்பார்த்தால் நாளைக்கு வி. முரளிதரனுக்கும் வரவேற்பு நடக்கும் போலத் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

ஏது... ஏது....? போகிற போக்கைப்பார்த்தால் நாளைக்கு வி. முரளிதரனுக்கும் வரவேற்பு நடக்கும் போலத் தெரிகிறது.

முரளிதரனுக்கும், வேறு வழி இன்றி ஊரில் ஒருவகை அரசியலை ஆதரிக்கும் யாழ்கள உறுப்பினர்களுக்கும்மான வேறுபாட்டை நான் புரிந்து கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, valavan said:

என்னுடன் முன்பு வேலை பார்த்த ஒருவர் முல்லைதீவு பகுதியை சேர்ந்தவர்  அவர் சொன்னார் முல்லை மாவட்டத்தில் பலநூறு ஏக்கர் காணிகள் பெயருக்குத்தான் தமிழருக்கு சொந்தமானவை என்று இருக்கின்றதேயொழிய யாரும் அந்த பக்கம் போய் எட்டியும் பார்ப்பதில்லை,வெறும் கட்டாந்தரையாக கவனிப்பாரற்று விட்டிருக்கிறார்கள், காலபோக்கில் அவை அரச காணிகளாகும் என்று.

புலம்பெயர்ந்த நாட்டில் இருப்பவர்கள் அவற்றை விற்க முனைப்பும் காட்டுவதில்லை ஏனெனில் யாழ்நகர பகுதிபோன்று அதிகவிலை போவதுமில்லை வாங்குவதற்கு பலர் முன்வருவதும் இல்லை என்று.

எல்லோரும் வாழ்ந்தால் ஜப்னா டவுனுக்குள் இல்லையென்றால் வாழ்க்கையே வேண்டாம் என்பதுபோல் சுத்தி சுத்தி சுப்பரின் கொல்லைக்குள் நிற்பதனால் எல்லைகள் விழுங்கபடுகின்றன என்று நினைக்கிறேன்.

கவனிப்பாரற்ற காணிகளை காணிகளே இல்லாத தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம் இல்லையென்றால் மலையக பகுதியை சேர்ந்த மக்களுக்காவது குடியமர வழங்கலாம்  ஆனால் அதற்கு யாருக்கும் மனசு வருவதில்லை அரசாங்கத்திடமும் சிங்களவன் முஸ்லீம்களிடமும் பறி கொடுத்தபின் குய்யோ முறையோ என்று புலம்புவினம்.

வீட்டுக்குள் ஆக்கள் இருந்தால் பாம்பு புற்று எடுக்காது.

நானும் கன இடங்களில் இதையே எழுதி வருகிறேன் தமிழர்கள் குடியிருக்க சகல வசதிகளும் வேண்டும் ஆனால் மற்ற இனத்தவர்கள் குடியேறிய பின்னர் சகலதையும் அமைத்துக்கொள்கிறார்கள் 

கிழக்கில் வெளிநாட்டிலுள்ளவர்களே காணிகளை வாங்கி அதிக விலைக்கும் விற்கிறார்கள்  (அம்பாறை பக்கம்)

16 hours ago, goshan_che said:

ஆனால் இதில் இன்னொரு கோணமும் உள்ளது வல்லவன்.

நீங்கள் சொல்லும் இந்த காணிகள் காட்டு பகுதியை அண்டி, மலேரியா போன்ற ஆபத்துகள், பள்ளி மருத்துவ, வீதி வசதி இல்லாமல்தான் இருக்கும். ஆகவே அங்கே போய் வாழ ஆட்களை பிடிப்பது சுலபமல்ல. அவர்களுக்கும் அங்கே வாழ்வாதாரம் இராது.

பல சிங்கள குடும்பங்கள் காடுகளுக்குள் குடியேறி பல் நூறுகிலோமீற்றர் ரவுணுக்கும் , பள்ளிக்கும் , நடந்தே , காட்டு விலங்குகளுக்கும் வாழ்ந்துவருகிறது . வாழ்வாதாரம் அடைக்கப்பட்ட பகுதிகளில் விவசாயம் ( மரக்கறி , பழங்கள்)  ஆனால் தமிழர்கள் யாழ்ப்பாணத்தை தவிர்ந்த பிரட்கேசங்களில் உள்ளவர்கள் நெற்பயிர் செய்கைவிட வேறேதும் செய்ய முன்வருவதும் இல்லை . விவசாயம் செய்ய தயாரும் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.