Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனியை தோற்கடித்து வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியை தோற்கடித்து வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

டோக்கியோ ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்கள் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜேர்மனிக்கு எதிராக இந்தியா 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

E7_8vQDVEAAQv5G.jpg

ஓய் ஹாக்கி மைதானத்தில் அரங்கேறிய இந்த ஆட்டத்தில், சிம்ரஞ்சீத் சிங் இந்தியாவுக்காக இரண்டு கோல்களை அடித்தார், ஹர்திக் சிங், ஹர்மன்பிரீத் சிங் மற்றும் ரூபிந்தர் பால் சிங் ஆகியோரும் தமது பங்கிற்கு கோல்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தனர்.

இந்த வெற்றி இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் 41 வருட பதக்க காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவர உதவியது.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் மூன்றாவது ஆக்கி வெண்கலப் பதக்கம் இதுவாகும். இந்திய தேசிய விளையாட்டான ஆக்கியில் 1980 ஆம் ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்று வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி. 

E7_2nZ0UUAEKeU4.jpg

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
 

 

https://www.virakesari.lk/article/110754

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

ஜேர்மனியை தோற்கடித்து வெண்கலம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணி

கிருபன் ஜீ… இந்தச் செய்தியை, நீக்கி விடுங்கள். 😁

இந்தியாவிடம், ஜேர்மனி தோற்றதை வாசிக்க… பெருத்த அவமானமாக உள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்

டோக்யோ ஒலிம்பிக் ஹாக்கி: இந்திய அணி வெண்கல பதக்கம் வென்று வரலாற்றுப் பெருமையை மீட்டது எப்படி?

5 மணி நேரங்களுக்கு முன்னர்
ஹாக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஜெர்மனி உடனான இந்திய அணியின் ஆட்டம் கடைசி நொடி வரை பரபரப்பாக இருந்தது

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு பதக்கத்தை வென்று இந்திய அணி தனது நீண்ட காலத் தாகத்தைத் தணித்திருக்கிறது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜெர்மனியை இந்தியா தோற்கடித்தது.

5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்ற இந்தப் போட்டியின் ஒவ்வொரு நொடியும் இதயத்துடிப்பை எகிற வைத்தன.

1980-களுக்குப் பிறகு பிறந்த இந்தியர்கள் முதல் முறையாக ஒலிம்பிக்கில் ஹாக்கி அணி பதக்கம் வென்ற செய்தியை இன்று செவிகுளிரக் கேட்டிருப்பார்கள்.

டோக்யோவில் ஆஸ்திரேலிய அணியுடனும் பெல்ஜியம் அணியுடன் ஏற்பட்ட தோல்விகளுக்குப் பிறகு மீண்டெழுந்து வந்து சாதனையைப் பதிவு செய்திருக்கிறது இந்தியா.

இந்த வெற்றியும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை. கடைசி நொடி வரை பெனால்ட்டி கார்னர்கள் மூலம் இந்திய அணியின் அரணைத் துளைத்துவிட ஜெர்மனி வீரர்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள். அத்தத் தாக்குதலைத் திறமையாக முறியடித்த பிறகே இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது.

டோக்யோவில் கிடைத்த "கடைசி வாய்ப்பு"

41- ஆண்டுகளுக்கு முன் மாஸ்கோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பிறகு இந்திய அணி ஒலிம்பிக்கில் ஒருமுறையேனும் அரையிறுதிப் போட்டிக்குக்கூடத் தகுதி பெறவில்லை.

டோக்யோவில் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றாலும் வலிமையான பெல்ஜியம் அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.

அதனால் பதக்கம் வெல்வதற்கான கடைசி வாய்ப்பு இது. எதிரே நிற்பது ஜெர்மனி. ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவைப் போலவே பெருமை கொண்ட அணி அது. வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் வேட்கையுடன் இந்திய வீரர்கள் களமிறங்கினர்.

ஹாக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

தொடக்கத்தில் ஜெர்மனி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்

போட்டி தொடங்கிய இரண்டாவது நிமிடத்திலேயே ஜெர்மனி முதல் கோலை அடித்து முன்னிலைக்குச் சென்றது. ஜெர்மனி அணியின் டிமுர் ஓரூஸ், இந்திய அணியின் பாதுகாப்பு அரணை மிக லாவகமாக உடைத்துச் சென்று கோல் வலைக்குள் பந்தை அடித்தார்.

அந்த நிமிடத்திலேயே இந்திய அணி வேகம் பிடித்தது. நான்காவது நிமிடத்தில் ஜெர்மனியின் கான்ஸ்டன்டைனுக்கு கிரீன் கார்டு வழங்கப்பட்டது. அதனால் இரண்டு நிமிடங்களுக்கு 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலை ஜெர்மனிக்கு ஏற்பட்டது.

முதல் கால்பகுதியில் ஜெர்மனிக்கு அடுத்தடுத்து கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. 10-ஆவது நிமிடத்தில் கிராம்புஸ்க் அடித்த பந்து இந்தியவின் கோலை நோக்கிச் சீறிப் பாய்ந்தது. ஆனால் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அதை அற்புதமாகத் தடுத்தார். மறு நிமிடத்திலேயே தண்டனை முடிந்து உள்ளே வந்திருந்த கான்ஸ்டன்டைன் அடித்த பந்து சில சென்டி மீட்டர் இடைவெளியில் கோலில் இருந்து தவறிச் சென்றது.

முதல் காற்பகுதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஜெர்மனிக்கு மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் இந்தியாவின் பாதுகாப்பைத் தாண்டி அவர்களால் முன்னேற முடியவில்லை.

ஹாக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

ஜெர்மனி வீரர்களின் தாக்குதலைத் திறமையாகத் தடுத்து இந்திய அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்

இரண்டாவது கால் பகுதியில் கோல் மழை

இரண்டாவது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும் 17-ஆவது நிமிடத்தில் இந்திய அணி ஒரு கோல் அடித்து சமன் செய்தது. நீலகண்ட சர்மா அளித்த பந்தை சிம்ரஞ்சித் அருமையாக கோலாக்கினார்.

பின்னர் இரு தரப்பு வீரர்களுமே தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கினர். இரண்டாவது கால் பகுதி ஆட்டத்தில் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து வலுவான நிலைக்குச் சென்றது. இதே போல் இந்திய அணியும் இரண்டு கோல்களை அடித்தது. இதனால் இரு அணிகளும் 3-3 என்ற கோல்கணக்கில் சமநிலை பெற்றன. இரண்டாவது கால் பகுதியில் மட்டும் மொத்தம் ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன.

மூன்றாவது கால் பகுதி ஆட்டம் தொடங்கியதுமே இந்திய அணி பெனால்ட்டி கார்னர் மூலம் இன்னொரு கோலை அடித்தது. அடுத்த மூன்றாவது நிமிடத்தில் இந்திய வீரர் சிம்ரஞ்சித் சிங் மற்றொரு கோலை அடித்தார் இதனால் இந்தியா 5-3 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலை பெற்றது.

ஹாக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடைசி நொடி "பெனால்ட்டி கார்னர்"

பரபரப்பான கடைசி கால் பகுதி ஆட்டத்தில் ஜெர்மனி இந்திய பாதுகாப்பை உடைப்பதில் தீவிரம் காட்டினார். பல நேரங்களில் அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை. எனினும் 48-ஆவது நிமிடத்தில் லூகாஸ் வின்ட்ஃபெடர் பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோல் அடித்தார்.

இதனால் கடைசி 10 நிமிடங்களும் பரபரப்பாகவே சென்றன. இன்னும் ஒரு கோல் அடித்தால்கூட சமநிலைக்குச் சென்றுவிடலாம் என்ற முனைப்பில் ஜெர்மனி வீரர்கள் அதிரடியான தாக்குதல் ஆட்டத்தைத் தொடங்கினர்.

நான்கரை நிமிடங்கள் இருந்தபோது கோல்கீப்பரையும் களத்துக்குள் கொண்டு வந்து தாக்குதல் ஆட்டத்தைத் தீவிரப்படுத்தியது ஜெர்மனி. 11 ஜெர்மானிய வீரர்களும் இந்தியாவின் கோலை நோக்கியே இயங்கிக் கொண்டிருந்தனர்.

ஹாக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கடைசி கால்பகுதியில் ஜெர்மனி வீரர்களால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது

ஆறு விநாடிகளே இருந்தபோது ஜெர்மனிக்கு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பு கொடுக்கப்பட்டதால், பதற்றம் அதிகமானது. ஆயினும் கோலை நோக்கி அடிக்கப்பட்ட பந்தை இந்திய வீரர்கள் தடுத்தனர். இறுதியில் 5-4 என்ற கோல் கணக்கில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது.

ஒரு வெண்கலத்துக்கு இந்தியா கொண்டாடுவது ஏன்?

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெல்லும் 12 ஆவது பதக்கம் இது. இவற்றில் எட்டு தங்கம், ஒரு வெள்ளி, மூன்று வெண்கலம் ஆகியவை அடங்கும். ஜெர்மனி அணி இதுவரை 4 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றிருக்கிறது.

அந்த வகையில் ஒலிம்பிக் வரலாற்றில் மிகச் சிறந்த ஹாக்கி அணி என்ற பெருமையை இந்திய அணி தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. 1928 முதல் 1956 வரை இந்திய அணி தொடர்ச்சியாக ஆறு முறை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது.

ஹாக்கி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

போட்டியில் வென்ற மகிழ்ச்சியில் இந்திய வீரர் சுமித்

ஆனால் அந்தப் பெருமையெல்லாம் 1980-ஆம் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் வரைதான். பிறகு படிப்படியாக திறமையும் புகழும் மங்கத் தொடங்கியன. பலமுறை இழந்த பெருமையை மீட்பதற்கு இந்திய அணி முயற்சி செய்திருக்கிறது. ஆனால் வெற்றி கிடைக்கவில்லை.

அதிகபட்ச சோதனையாக 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு இந்திய அணி தகுதி பெறவில்லை. லண்டன் ஒலிம்பிக்கில் 12-ஆவது இடம் ரியோ ஒலிம்பிக்கில் 8-ஆவது இடம் என சமீப காலமாக பதக்கத்துக்கு அருகே கூட இந்திய அணி செல்லவில்லை.

டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வலிமையான அணியாகக் கருதப்பட்டாலும் ஆஸ்திரேலிய அணியுடனான லீக் போட்டியில் 1-7 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இது அணியின் மீதான நம்பிக்கையைக் கேள்விக்குள்ளாக்கியது.

ஆனால் அதன் பிறகு விடா முயற்சியுடன் ஸ்பெயின், அர்ஜென்டினா, பிரிட்டன் என ஏ பிரிவில் உள்ள மற்ற அனைத்து அணிகளையும் தோற்கடித்து அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.

கடந்த 40 ஆண்டுகளில் பிறந்த இந்தியர்களுக்கு ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியா பதக்கம் வென்றது என்ற செய்தியைக் கேட்கவே வாய்ப்புக் கிடைத்திருக்காது.

1983-இல் கபில்தேவ் தலைமையிலான அணி உலகக் கோப்பையை வென்ற பிறகு கிரிக்கெட்டே அவர்களுக்கு நினைவில் இருந்திருக்கும். இனி அவர்கள் கிரிக்கெட்டைப் போலவே ஹாக்கியையும் கொண்டாடத் தொடங்கக்கூடும்.

https://www.bbc.com/tamil/sport-58096106

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

கிருபன் ஜீ… இந்தச் செய்தியை, நீக்கி விடுங்கள். 😁

இந்தியாவிடம், ஜேர்மனி தோற்றதை வாசிக்க… பெருத்த அவமானமாக உள்ளது. 🤣

விடுங்க சிறித்தம்பி......7ம் இடத்திலை நிக்கிற ஜேர்மனி எங்கை.........
52ம் இடத்திலை நிக்கிற கிந்தியா எங்கை........ பாவம்... பொழைச்சு போகட்டும் எண்டு விடுங்க 😂

இஞ்சை பாருங்கோ இந்த செய்தியை.......😎

Bild

  • கருத்துக்கள உறவுகள்

டோக்யோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கியின் 41 ஆண்டு கால பதக்க தாகம் தணிந்தது எப்படி? முன்னாள் கேப்டன் பாஸ்கரன் பேட்டி

  • விஷ்ணுப்ரியா ராஜசேகர்
  • பிபிசி தமிழ்
26 நிமிடங்களுக்கு முன்னர்
இந்திய ஹாக்கி அணி

பட மூலாதாரம்,ALEXANDER HASSENSTEIN/GETTY IMAGES)

டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வரலாற்றை மீண்டும் மாற்றி எழுதியுள்ளது. ஆம் 41 வருடங்கள் கழித்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி.

"ஒரு விளையாட்டு வீரராகவும், ஒரு பயிற்சியாளராகவும் இது ஒரு நீண்ட காத்திருப்பு என்றுதான் சொல்லுவேன்." என்கிறார் இதற்கு முன் கடைசியாக பதக்கம் வென்ற ஹாக்கி அணியின் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன்.

இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப் பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம், தற்போதைய பதக்கம் தவிர்த்து, மேலும் இரு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது இந்திய ஹாக்கி அணி.

ஹாக்கி ஜாம்பவானான இந்திய அணி

இந்த பதக்கங்கள் என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாய் பெற்றதில்லை, 1928ஆம் ஆண்டிலிருந்து 1956ஆம் ஆண்டு வரை தொடச்சியாக ஆறு பதக்கங்களை வென்றது இந்திய அணி.

 

அதன்பின்னும் பதக்கங்களை பெறுவதை நிறுத்தவில்லை. ஆனால் கடைசியாக 1980ஆம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் வென்ற தங்கப் பதக்கத்துடன் ஹாக்கி அணியின் பதக்க வேட்டை நின்று போனது.

பதக்க வரலாற்றை தற்போது டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் மீண்டும் நிகழ்த்தி காட்டியிருக்கிறது மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி.

இந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் வீரர்களின் மன உறுதிதான் என்கிறார் முன்னாள் ஹாக்கி கேப்டனும் பயிற்சியாளருமான பாஸ்கரன்.

"2012 மற்றும் 2016ஆம் ஆண்டின் ஒலிம்பிக் அணிகள் சிறப்பாகவே இருந்தன. இருப்பினும் தற்போதைய அணி ஒரு வித்தியாசமான அணிதான். ஏனென்றால் இந்த அணியில் நிறைய பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். எந்த ஒரு அணியும் ஒரு வருடம் பபுளில் இல்லை." என்கிறார் வாசுதேவன் பாஸ்கரன்

இந்திய ஹாக்கி அணி

பட மூலாதாரம்,ALEXANDER HASSENSTEIN/GETTY IMAGES

10க்கும் மேற்பட்ட ஜூனியர் வீரர்கள்

"இந்திய அணி இந்த ஒலிம்பிக்கில் எல்லா போட்டிகளிலும் சிறப்பாகவே விளையாடியது. இன்றைக்கும் ஜெர்மனியுடனான ஆட்டத்தை பார்த்தால் முதல் பாதியில் 1-3 என்ற கணக்கில் ஆட்டம் இருந்தது. இருப்பினும் மிக விரைவில் இந்திய அணி இரு கோல்களை அடித்துவிட்டது. ஹாக்கியை பொருத்தவரை அதுதான் பெரிய திருப்பம். முதல் பாதியில் ஜெர்மனி அணி இந்திய அணிக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்தது ஆனால் இந்திய அணி அந்த அழுத்தத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளது."

"இந்திய அணியைப் பொருத்தவரை கிட்டதட்ட அனைவரும் சிறப்பாக விளையாட்டினர். அது தற்காப்பாக இருந்தாலும் சரி, கோல் கீப்பிங்காக இருந்தாலும் சரி இந்த அணியை பொறுத்தவரை 10 ஜூனியர் வீரர்கள் முதன்முறையாக ஒலிம்பிக் போட்டியில் விளையாடுகின்றனர். அவர்கள் அனைவருமே 100 சதவீதம் தங்கள் உழைப்பை கொடுத்து நன்றாக விளையாடினர். எனவேதான் இந்த வெற்றி சாத்தியமானது" என்கிறார் பாஸ்கரன்.

பின்னடைவுக்கு என்ன காரணம்?

தியான் சந்த் காலத்தில் தொடங்கி 1980 வரை அசைக்க முடியாத அணியாக இருந்த இந்திய ஹாக்கி அணி 2008 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பைகூட இழந்துவிட்டிருந்தது.

"ஒலிம்பிக் போட்டிகள் போன்ற பெரிய விளையாட்டு போட்டிகளில் வாய்ப்பு என்பது அடிக்கடி வருவதில்லை. உங்களுக்கு வாய்ப்பு வரும்போது அதை நீங்கள் கோலாக மாற்ற வேண்டும். ஏனென்றால் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் மற்றொரு வாய்ப்பு என்பது அடுத்த நான்கு வருடங்களுக்கு பிறகுதான் கிடைக்கும்."

"2016 அணி தற்போதைய அணியை காட்டிலும் வலுவான ஒரு அணியாக இருந்தது ஆனால் காலிறுதி போட்டியில் கடைசி நிமிடங்களில் ஜெர்மனி அணிக்கு எதிராக நாம் சிறப்பாக விளையாட முடியவில்லை. இருப்பினும் இந்த 2016 போட்டியை பொறுத்தவரை, 2012ஆம் ஆண்டு தொடங்கி பயிற்சியாளர்கள் அடிக்கடி மாற்றப்பட்டது அணியின் பின்னடைவுக்கு ஒரு காரணமாக அமைந்தது." என்கிறார் பாஸ்கரன்.

கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்

பட மூலாதாரம்,ALEXANDER HASSENSTEIN/GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ்

அதேபோன்று ஒரு வீரர் தோல்வியடைந்தால் அவரை உடனடியாக மாற்றுவது சரியான அணுகுமுறை இல்லை என்கிறார் அவர்.

ஒரு வீரரின் தவறை கண்டறிந்து அந்த வீரரை எவ்வாறு நாம் சாம்பியனாக்கலாம் என்பதைதான் பார்க்க வேண்டும். அவ்வாறுதான் இப்போதைய பயிற்சியாளர் கிரஹாம் ரெய்ட் செய்திருக்கிறார் என்கிறார் அவர்.

மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டிய வெற்றி

இந்திய ஹாக்கி அணியின் வெற்றி இரண்டு நாள் கொண்டாட்டமாக மட்டும் அமையாமல், எதிர்காலத்தில் ஹாக்கி விளையாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு கிடைக்க, ஹாக்கியில் சிறப்பாக செயலாற்ற இந்த வெற்றியை மாணவர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் பாஸ்கரன்.

"இந்த வெற்றியை நாம் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் எடுத்து செல்ல வேண்டும். ஹாக்கி மட்டுமல்ல இந்தியாவின் பி.வி. சிந்து, சானு போன்றோரின் ஒலிம்பிக் சாதனைகள் அனைத்தையும் டிஜிட்டல் வீடியோக்களாக செய்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்ப வேண்டும். இந்த முறையில் ஒலிம்பிக் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமின்றி நீங்களும் விளையாட்டில் சாதிக்கலாம் என மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கு பின்னேயும் ஒரு உத்வேகம் அளிக்க கூடிய கதை உண்டு. எனவே இந்த வெற்றியை ஒரிரு நாட்களுக்கு மட்டும் பேசி விட்டுவிடக் கூடாது. இது கல்லூரி மற்றும் பள்ளிகளில் வார நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். இவ்வாறுதான் ஹாக்கி உட்பட அனைத்து விளையாட்டுமே பிரபலமடையும்.

1983 உலகக் கோப்பையை கிரிக்கெட் வென்ற பிறகுதான் கிரிக்கெட் அதிக பிரபலமடைந்தது. அதேபோன்று ஹாக்கியை கொண்டு செல்ல வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு போட்டியில் தோற்றால் உடனே நிறைய விமர்சனங்கள் எழுந்துவிடும். அதற்கே ஒரு நான்கு வருடங்கள் சென்று விடும். பிற ஐரோப்பிய நாடுகளை போன்று நாம் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி சென்றுவிடுவோம். விளையாட்டைப் பொறுத்தவரை வெற்றி தோல்வி என்பதை கடந்து அடுத்து என்ன என்பதை யோசிக்க வேண்டும். ஒரு போட்டியில் தோற்றுவிட்டால் உடனே ஒரு வீரரை குறை சொல்வது, விமர்சிப்பதை தவிர்த்துவிட்டு அடுத்தகட்ட திட்டத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்கிறார் பாஸ்கரன்.

https://www.bbc.com/tamil/sport-58104279

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாவே கிந்தியனை கையில் பிடிக்க ஏலாது இது வேறயா.☺️

  • கருத்துக்கள உறவுகள்

நான் கேள்விபட்டது ( உண்மை நிலை தெரியாது) முன்னர் எல்லாரும் புல்லில் விளையாடும் போது இந்திய, பாகிஸ்தான் அணிகள் டாப்பில் இருந்தததாம். 

இதை உடைக்க பணக்கார நாடுகள் செயற்கை டேர்ப் பிச்சுக்குமாறினவாம்.

காசு இல்லாத இந்தியா பாகிஸ்தானில் டேர்ப் பிச் இல்லை. புல்லில் விளையாடி விட்டு சர்வதேச போட்டிகளில் டெர்பில் விளையாடி அவர்களால் சாதிக்க முடியவில்லையாம்.

இப்போ இந்தியாவில் காசு புரள்வதால் அவர்களும் டேர்பில் விளையாடி மீண்டு(ம்) வந்துள்ளார்களோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

நான் கேள்விபட்டது ( உண்மை நிலை தெரியாது) முன்னர் எல்லாரும் புல்லில் விளையாடும் போது இந்திய, பாகிஸ்தான் அணிகள் டாப்பில் இருந்தததாம். 

இதை உடைக்க பணக்கார நாடுகள் செயற்கை டேர்ப் பிச்சுக்குமாறினவாம்.

காசு இல்லாத இந்தியா பாகிஸ்தானில் டேர்ப் பிச் இல்லை. புல்லில் விளையாடி விட்டு சர்வதேச போட்டிகளில் டெர்பில் விளையாடி அவர்களால் சாதிக்க முடியவில்லையாம்.

இப்போ இந்தியாவில் காசு புரள்வதால் அவர்களும் டேர்பில் விளையாடி மீண்டு(ம்) வந்துள்ளார்களோ?

உழுற மாடு எல்லா வயல்லையும் உழுமாம்...😎

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

நான் கேள்விபட்டது ( உண்மை நிலை தெரியாது) முன்னர் எல்லாரும் புல்லில் விளையாடும் போது இந்திய, பாகிஸ்தான் அணிகள் டாப்பில் இருந்தததாம். 

இதை உடைக்க பணக்கார நாடுகள் செயற்கை டேர்ப் பிச்சுக்குமாறினவாம்.

காசு இல்லாத இந்தியா பாகிஸ்தானில் டேர்ப் பிச் இல்லை. புல்லில் விளையாடி விட்டு சர்வதேச போட்டிகளில் டெர்பில் விளையாடி அவர்களால் சாதிக்க முடியவில்லையாம்.

இப்போ இந்தியாவில் காசு புரள்வதால் அவர்களும் டேர்பில் விளையாடி மீண்டு(ம்) வந்துள்ளார்களோ?

 

59 minutes ago, குமாரசாமி said:

உழுற மாடு எல்லா வயல்லையும் உழுமாம்...😎

சீனா பதக்கங்களை குவிப்பது பொய் களவு ஆள்மாறாட்டம் என்று இந்தியா சொல்கிறது.

காந்திய வழியில் வந்த இந்தியாவால் இவைகளை செய்ய முடியாமையால் பதக்கங்களை குவிக்க முடியவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள்.

உண்மையாக இருக்குமோ?

3 hours ago, goshan_che said:

நான் கேள்விபட்டது ( உண்மை நிலை தெரியாது) முன்னர் எல்லாரும் புல்லில் விளையாடும் போது இந்திய, பாகிஸ்தான் அணிகள் டாப்பில் இருந்தததாம். 

இதை உடைக்க பணக்கார நாடுகள் செயற்கை டேர்ப் பிச்சுக்குமாறினவாம்.

காசு இல்லாத இந்தியா பாகிஸ்தானில் டேர்ப் பிச் இல்லை. புல்லில் விளையாடி விட்டு சர்வதேச போட்டிகளில் டெர்பில் விளையாடி அவர்களால் சாதிக்க முடியவில்லையாம்.

இப்போ இந்தியாவில் காசு புரள்வதால் அவர்களும் டேர்பில் விளையாடி மீண்டு(ம்) வந்துள்ளார்களோ?

இந்தியா பாகிஸ்தான் கூடுதலாக தோற்றது சூதாட்டத்தாலேயே என்கிறார்களே?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உழுற மாடு எல்லா வயல்லையும் உழுமாம்...😎

நீங்கள் சொல்வது தர்க ரீதியாக சரிதான் என்றாலும் எனக்கு தெரிந்த விளையாட்டான கிரிகெட்டை இதனுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இதில் ஒரு விசயம் இருப்பது போலவும் படுகிறது.

கிரிகெட்டை எமது ஊரில் மெட்டின் எனும் பாய்விரித்து விளையாடுவது வழமை. அண்மையில் சென்பற்றிக்ஸில் புல்லு பிட்ச் போட்டார்கள்.

கொழும்பில் 13 கீழ் மட்டும்தான் மட்டின். மிகுதி எல்லாம் புல். 

19 வயது வரை ஊரில் பெரும் ஆட்டகாரராக இருந்த சிலர் கொழும்பில் வந்து மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் போனதை கண்டுள்ளேன்.

எனக்கு ஹொக்கி பற்றி அறிவு சுத்தம் ஆனால் இதை எனக்கு சொன்னவர் இலங்கையில் தேசியமட்டத்தில் விளையாடிய ஆள்.

1 hour ago, ஈழப்பிரியன் said:

சீனா பதக்கங்களை குவிப்பது பொய் களவு ஆள்மாறாட்டம் என்று இந்தியா சொல்கிறது.

இந்தியா மட்டும் அல்ல சிறு வயதில் இருந்து கொடுமை படுத்துகிறார்கள் என்று மேற்குநாடுகள் எல்லாம் காலம் காலமாக கூறுகிறதே?

அதே போல் மருந்து பாவித்த விசயத்தில் ரஸ்யாவை தடை செய்து, ரஸ்ய ஒலிம்பிக் கமிட்டி என்ற பெயரில் விட்டுள்ளார்கள்.

1980 மாஸ்கோ ஒலிம்பிக்கையே அமெரிக்கா புறக்கணித்தது. 

ஆகவே இந்தியாகாரன் அரங்கு சொத்தி என்று சொல்வது உண்மை ஆனாலும், இது எல்லாரும் எப்போதும் பாவிக்கும் ஆயுதம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:
5 hours ago, goshan_che said:

இந்தியா பாகிஸ்தான் கூடுதலாக தோற்றது சூதாட்டத்தாலேயே என்கிறார்களே?

இப்படி இருக்கலாம். கிரிகெட்டை நாசம் பண்ண பார்த்தது போல.

தன்ராஜ்பிள்ளையோ யாரோ ஒருவர் (நியாபகமில்லை) பெரும் இந்திய வீரர் மூட்டை தூக்கி காலம் ஓட்டியதாக விகடனில் 20 வருடம் முதல் ஒரு கட்டுரை வந்தது. அப்படி ஏழ்மை இருக்கும் விளையாட்டில், திறமை பணத்துக்கு பலியாக கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

ஒலிம்பிக்கில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் தோல்வியை தழுவியது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில், மல்யுத்தத்தில் ரவிகுமார் தாஹியா இறுதிப்போட்டிக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தது இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

80 க்கு முதல் 8 தங்கம் எடுத்த இந்தியா 50 வருடங்களுக்கு பின் வெண்கலம் எடுப்பதற்கு Astrotruf ம் ஒரு காரணம். இந்தியாவில் சாதாரண மக்களால் விளையாட முடியாத விளையாட்டு  கொக்கி. செலவு கூடியது. 5 ரூபா கிறிக்கட் மட்டையுடன் 3 விக்கட்டும் ஒரு சிறிய இடமும் இருந்தால் யாராலும் விளையாட முடியும். அத்தோடு 70 நிமிடத்தில் முடியும் கொக்கியில் விளம்பரங்கள் மூலம் வியாபார ரீதியாக செய்வது  கிறிக்கட்டுடன் ஒப்பிடும் போது கடினமானது. இதனால்  கிறிக்கட் பிரபல்யமாகி ஒரு சமயமாக கூட மாறி விட்டது.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிட்ச், கோர்ட் தன்மை , வானிலை, வெப்ப நிலை, ஏன் போட்டியாளரை உற்சாகப்படுதும் கரகோசம் (இதற்கு மனதை திடப்படுத்தும் அல்லது அந்நேரத்தில் அதை தவிர்க்க, கட்டுப்படுத்தும் பயிற்றசிகளும் இருக்கிறது, ஆனால்  அவற்றை நோக்கிய போட்டியாளரின் இயற்கை சாய்வை மற்ற முடியது. )    போன்றவை முட்டிக்கு, முட்டி மீற (taking edge over) இருக்கும் இயல்தகவை பாதிக்கும்.

7 hours ago, goshan_che said:

நீங்கள் சொல்வது தர்க ரீதியாக சரிதான் என்றாலும் எனக்கு தெரிந்த விளையாட்டான கிரிகெட்டை இதனுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இதில் ஒரு விசயம் இருப்பது போலவும் படுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

நீங்கள் சொல்வது தர்க ரீதியாக சரிதான் என்றாலும் எனக்கு தெரிந்த விளையாட்டான கிரிகெட்டை இதனுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இதில் ஒரு விசயம் இருப்பது போலவும் படுகிறது.

இதன் காரணம் மற்றும் விளக்கம், விஞ்ஞான அடிப்படையில், quantum biology இல் மற்றும் அதன் வழியாக இருக்கும் என்று நினைக்கிறன். 

quantum biology யும், அது கொடுக்கும் விளக்கம், பரிசோதனை சான்றுகள், ஆதாரங்கள், இப்பொது பரவலாக ஏற்புடையதாகி கொண்டு வருகிறது.

உ.ம். photosynthesis (தாவரங்கள் சூரிய ஒளியை கொண்டு உணவு தயாரிப்பது). 

சூரிய ஒளி தாவரத்தின் உணவு தயாரிக்கும் பகுதியில் (பொதுவாக இலைகளில்) படும் போதுள்ள முதல் (1 / 3, 000, 0000 செக்கன்களில்,எண்ணில் துல்லியம் இல்லாமல் இருக்கலாம் ), சூரிய ஒளியில் (அல்லது எந்த ஒளியுமானாலும்) ஆக்கும் photon துணிக்கைகள்,   தாவரத்தின் உணவு தயாரிக்கும் பகுதியில் இருக்கும் கலங்களுக்கு சென்றடைந்திட வேண்டும், இல்லையேல் தாவரம் உணவு உருவாக்குவதற்கு வேண்டிய தமையை அந்த போட்டான் இழந்து விடும். 

ஒளியின் Quantum தன்மையான, wave-particle duality , ஒரே நேரத்தில் உள்ள இருநிலை தன்மை இல்லாமல் (எமது சமய சிந்தனையான, நீக்கமற நிறைந்துள இறைவன், தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்ற கதைதான், ஏறத்தாழ) ,  இது சாத்தியம் இல்லை. 
 

quantum biology  சிறு விளக்கம்,, இவரின் விழா வாரியான quantum biology வீடியோ உம் youtube இல் இருக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

பிட்ச், கோர்ட் தன்மை , வானிலை, வெப்ப நிலை, ஏன் போட்டியாளரை உற்சாகப்படுதும் கரகோசம் (இதற்கு மனதை திடப்படுத்தும் அல்லது அந்நேரத்தில் அதை தவிர்க்க, கட்டுப்படுத்தும் பயிற்றசிகளும் இருக்கிறது, ஆனால்  அவற்றை நோக்கிய போட்டியாளரின் இயற்கை சாய்வை மற்ற முடியது. )    போன்றவை முட்டிக்கு, முட்டி மீற (taking edge over) இருக்கும் இயல்தகவை பாதிக்கும்.

 

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அது ஒரே மாதிரியான டேர்ப் பிட்ச் (புல்) நாட்டுக்கு நாடு அல்லது மைதானத்துக்கு, மைதானம் வேறுபடுவது.

உதாரணமாக இங்கிலாந்தில் மே மாதம் ஒரு பிட்சில் பந்து வழுக்கி கொண்டு வேகமாக வரும். ஆனால் அதே பிட்சில் ஜூலை ஆகஸ்டில் அதே பந்து, அதே விதமாக வீசினாலும் அதே மாதிரி வராது.

ஆனால் மெட்டின்னில் விளையாடுவதும், புல்லில் (டேர்ப், அஸ்டிரா டேர்ப் அல்ல) இரு முற்றிலும் வேறு பட்ட அனுபவம்.

குறிப்பாக பந்து வீச்சின் சில அடிப்படை நுணுக்கங்களை மெட்டினில் சிறப்பாக செய்ய முடியாது.

அதே பந்துவீச்சை எதிர்கொள்ளும் பட்ஸ்மனும், புல்லில் வந்து பந்து வித்தியாசமாக வீசப்படும் போது தடுமாறுவார்கள்.

இங்கிலாந்தில் பல வருடமாக அடிமட்ட கிரிகெட்டில் (grassroots level) பங்கெடுத்து, அவதானித்து வருகிறேன். Under 9 ஈறாக இன்னும் ஒரு இடத்தில் கூட மெட்டினில் விளையாடி காணவில்லை.

ஆனால் வடக்கு கிழக்கில் u19 கூட இதில்தான். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அது ஒரே மாதிரியான டேர்ப் பிட்ச் (புல்) நாட்டுக்கு நாடு அல்லது மைதானத்துக்கு, மைதானம் வேறுபடுவது.

உதாரணமாக இங்கிலாந்தில் மே மாதம் ஒரு பிட்சில் பந்து வழுக்கி கொண்டு வேகமாக வரும். ஆனால் அதே பிட்சில் ஜூலை ஆகஸ்டில் அதே பந்து, அதே விதமாக வீசினாலும் அதே மாதிரி வராது.

ஆனால் மெட்டின்னில் விளையாடுவதும், புல்லில் (டேர்ப், அஸ்டிரா டேர்ப் அல்ல) இரு முற்றிலும் வேறு பட்ட அனுபவம்.

(பௌதிக) விஞ்ஞான அடிப்படையில் இது உண்மையில் இருக்க வேண்டும், எனவே இப்படி இருப்பதில் எந்த வித தடுமாற்றமும் இல்லை.

அடிப்படையாக இடம், நேர  (மற்றவையை கருத்தில் எடுக்க விட்டாலும்) மாறுகிறது, எனவே மற்ற எல்லாத்திலும் மாற்றங்கள் இருப்பது  இயல்பு. 

ஒரே pitch இல் கூட மாற்றங்கள் இருக்கும் (உ.ம். ஆக அடுத்தடுத்த இரு பாத்து வீச்சுகளை எடுத்தால்), அனால், அது விளைவை இல் உள்ள tolerance அளவை பாதிப்பது இல்லை, உ.ம். off spin எண்ணி பந்து வீச, leg spin ஆக விளைவு போல வருவதில்லை.

மாறாக, ஒரே pitch இல் கூட, ஓரளவு மெல்லிய காற்றை உணரும் போது அல்லது வெவ்வேறு நேரங்களில் , உ.ம். ஆக off spin landing ஐ பந்து வீசுவார் தன்னை அறியாமலே மாற்றுவார்கள்.  

குறிப்பாக, வேறு உணரக் கூடிய வேறு மாற்றங்கள் இல்லாத (தெரியாத) போதும், நேரம் வேறுபடும் போது (நீங்கள் சொன்னது போல ஒரே pitch, மே, ஜூலை), pitch இல் ball இன் இயக்கம் மாறுவது உங்களுக்கு தெரியும்.

வேறு விதமாக சொல்வதாக இருந்தால், நேர மாற்றத்தால் வேறு பௌதிக மாற்றத்துக்கு உள்ள tipping point ஐ மனிதர்கள் உணரக்  கூடியதாக உள்ளது. இதை (உணரக் கூடிய) அனுபவம் என்கிறோம். ஆனால், விஞ்ஞான விளக்கம் என்ன?  

Quantum biology இல் விளக்கம்  இருக்க கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/8/2021 at 14:08, குமாரசாமி said:

விடுங்க சிறித்தம்பி......7ம் இடத்திலை நிக்கிற ஜேர்மனி எங்கை.........
52ம் இடத்திலை நிக்கிற கிந்தியா எங்கை........ பாவம்... பொழைச்சு போகட்டும் எண்டு விடுங்க 😂

இஞ்சை பாருங்கோ இந்த செய்தியை.......😎

Bild

இப்படியான... வக்கிர எண்ணம் கொண்ட, ஹிந்திய  நாடு,
எத்தனை  யுகம் கழிந்தாலும்...  முன்னேறப் போவதில்லை.
ஒலிம்பிக்  வீராங்கனை வீட்டின் முன், வெடி கொளுத்தியவர்கள்...  வெட்கம் கெட்டவர்கள்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
40 minutes ago, தமிழ் சிறி said:

இப்படியான... வக்கிர எண்ணம் கொண்ட, ஹிந்திய  நாடு,
எத்தனை  யுகம் கழிந்தாலும்...  முன்னேறப் போவதில்லை.
ஒலிம்பிக்  வீராங்கனை வீட்டின் முன், வெடி கொளுத்தியவர்கள்...  வெட்கம் கெட்டவர்கள்.  

சீனாவை பாத்தும் ரோசம் மானம் வரேல்லை எண்டால் என்ன செய்யிறது சிறித்தம்பி? 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

சீனாவை பாத்தும் ரோசம் மானம் வரேல்லை எண்டால் என்ன செய்யிறது சிறித்தம்பி? 😂

ஹிந்தியனுக்கு.... ஸ்ரீலங்காவுக்கு, கடன் கொடுத்த  வங்காள தேசத்தை பார்த்தும்...
ரோசம் வராத, எருமைத் தோல்... தடிப்பு பிடிச்ச ஆக்களுடன்,
சீனாவை ஒப்பிடாதேங்கோ... குமாரசாமி அண்ணை. 😂

இவங்கள்...  ### மணி, ஆட்டத் தான் லாயக்கு.   🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.