Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பல மில்லியன் மதிப்பு.. ஆப்கான் மண்ணுக்குள் இருக்கும் பொக்கிஷம்.. தாலிபானை வைத்து சீனா போடும் பிளான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பல மில்லியன் மதிப்பு.. ஆப்கான் மண்ணுக்குள் இருக்கும் பொக்கிஷம்.. தாலிபானை வைத்து சீனா போடும் பிளான்

ryyjkxf25fhcycng_1628827794.jpeg

காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் வெற்றிபெற்றதை முதல் நாடாக அங்கீகரித்தது சீனாதான். தாலிபானுக்கு எதிராக இருக்கும் நாடு என்று ஒரு காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட சீனா, தற்போது தாலிபான் வென்றதும் முதல் நாடாக புதிய அரசை அங்கீகரித்தது. தாலிபான்களுக்கு ஆதரவாக சீனா இப்படி திடீரென களமிறங்க இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கிறது.. அதில் ஒரு காரணம் ஆப்கானிஸ்தான் மண்ணுக்குள் இருக்கும் பொக்கிஷம்!

பொதுவாக உலக போர்கள், சர்வதேச ஆதிக்கங்கள் எல்லாமே பூமியின் வளங்களை குறி வைத்துதான் இத்தனை நாட்கள் நடத்தப்பட்டு வந்தது. உலகில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த, கைப்பற்ற விரும்பிய காரணத்தால்தான் அமெரிக்கா இஸ்லாமிய நாடுகள் பலவற்றை குறி வைத்து தாக்கியது. தற்போது அதே போன்றதொரு இயற்கை வளத்தை கைப்பற்றுவதாக சீனா ஆப்கானிஸ்தானில் தாலிபான் அமைப்புடன் நெருக்கமாகி வருகிறது.

ஆப்கான் மண்ணுக்குள் இருக்கும் rare earth material எனப்படும் அரிய தனிமங்கள், கனிமங்களை கைப்பற்றுவதற்கான திட்டத்தில் சீனா இறங்கி உள்ளது. உலகின் ஒரே சூப்பர் பவர் நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வேகமாக உழைத்து வரும் சீனாவிற்கு தாலிபானின் வெற்றி "அல்வா துண்டு" போல வந்து மாட்டி இருக்கிறது.

அமெரிக்கா

சர்வதேச மார்க்கெட் உலகில் கோலோச்சி வரும் நிறுவனங்களில் ஒன்றான AllianceBernstein நிறுவனத்தின் இயக்குனர் ஷமைலா கான்தான் சீனாவின் இந்த திட்டம் குறித்து சர்வதேச மீடியாக்களுக்கு புட்டு புட்டு வைத்து இருக்கிறார். உலக நாடுகளை, முக்கியமாக ஆசிய நாடுகளை எல்லாம் Belt and Road Initiative என்ற திட்டம் மூலம் இணைக்கும் முயற்சியில் மிக தீவிரமாக சீனா முயன்று வருகிறது. இதற்கு ஆசிய நாடுகள் பல ஒப்புக்கொண்டு சீனாவிற்கு வழிவிட்டு உள்ளது. இந்தியா இன்னும் இதை ஏற்கவில்லை. ஆப்கானிஸ்தான் இதை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இருந்தது. இப்படிபட்ட சூழ்நிலையில்தான் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தாலிபான்

ஆப்கானிஸ்தானின் உட்கட்டமைப்பு வசதியை மாற்றும் எண்ணத்தில் தாலிபான் இருப்பதால் கண்டிப்பாக சீனாவின் Belt and Road Initiative திட்டத்தை தாலிபான் அமைப்பு வரும் நாட்களில் அனுமதிக்கும். தாலிபான்கள் வெற்றியால் கண்டிப்பாக சீனாவின் Belt and Road Initiative ரூட் கிளியர் ஆகிவிட்டது. அதோடு அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளை விரும்பாத தாலிபான் கண்டிப்பாக தங்கள் நாட்டுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவை அனுமதிக்கும். பாகிஸ்தான், ரஷ்யா நட்பு உள்ளிட்ட பல காரணங்களால் சீனாவை தாலிபான்கள் கண்டிப்பாக தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கும் என்றே கூறப்படுகிறது.

சீனா

இதனால் மிகப்பெரிய லாபம் அடைய போவது சீனாதான் என்கிறார் ஷமைலா கான். ஆப்கானிஸ்தான் மண்ணில் புதைந்து கிடைக்கும் பொக்கிஷமான பல்வேறு கனிமங்கள், தனிமங்களை தாலிபான்கள் உதவியோடு சீனா எடுக்கும். இந்த மார்க்கெட்டை சீனாதான் பிடிக்க போகிறது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். Belt and Road Initiative புரொஜெக்ட்டை விட இந்த கனிம திட்டத்தில்தான் சீனா அதிகம் கவனம் செலுத்தும் என்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் இருக்கும் அரிதான தனிமங்கள் மற்றும் கனிமங்களின் மொத்த மதிப்பு மட்டும் 2020 மதிப்பீட்டின்படி 3 டிரில்லியன் டாலர் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அரிதான கனிமங்களை கைப்பற்றவே சீனா முயன்று வருவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கனிம வளம்கள்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போர் செய்ய செலவிட்ட மொத்த தொகை 3 டிரில்லியன் டாலர். அந்த மொத்த தொகைக்கும் அதிகமான பொக்கிஷம் ஆப்கானிஸ்தான் நாட்டு மண்ணுக்கு உள்ளே இருக்கிறது. இத்தனை நாட்கள் ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்கா இதை எடுத்து பிஸ்னஸ் பார்க்க தவறிய நிலையில் சீனா இதை கைப்பற்ற களமிறங்கி உள்ளது. அலுமினியம், லாண்டம், செரியம், நியோடைமியம், தங்கம், சில்வர், சிங்க், மெர்குரி, லித்தியம் என்று பல அரிதான கனிமங்கள் உள்ளே இருக்கின்றன. போன் தயாரிப்பு, வாகன தயாரிப்பு தொடங்கி விமானம், சாட்டிலைட் தயாரிப்பு வரை அனைத்திற்கும் பயன்படும் அரிதான கனிமங்கள் ஆப்கான் உள்ளே புதைந்து கிடைக்கிறது.

பொக்கிசம்

இந்த பொக்கிஷத்தை எடுக்கும் திட்டத்தில்தான் தாலிபான்களுக்கு சீனா ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. தாலிபான்களுக்கும், புதிய ஆப்கான் அரசுக்கும் பொருளாதார ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் உதவ வேண்டும் என்றால் எங்களுக்கு இந்த கனிம திட்டங்களை கொடுக்க வேண்டும். எங்களை உங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று தாலிபான்களுக்கு வரும் நாட்களில் சீனா செக் வைக்கும் என்கிறார்கள்.

இலங்கை

பாகிஸ்தான், இலங்கையில் கட்டுமான வசதியை ஏற்படுத்துவதாக உள்ளே சென்று இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த நாட்டை சீனா கட்டுப்படுத்துவது போல ஆப்கானிஸ்தானும் சீனா வசம் செல்ல வாய்ப்புள்ளது என்று உலக அரசியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உய்குர் இஸ்லாமியர்

உய்குர் இஸ்லாமியர்களை எதிர்த்த சீனா இப்படி திடீரென தாலிபான்களை ஆதரிக்க காரணம் இந்த கனிமங்கள்தான் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே அரிதான கனிமங்களை விற்பனை செய்யும் மார்க்கெட்டில் சீனாதான் டாப்பில் உள்ளது. உலகின் 35 சதவிகித அரிதான கனிம மார்க்கெட்டை சீனாதான் கட்டுப்படுகிறது.

இதன் அர்த்தம் நீங்கள் இந்த கட்டுரையை படிக்கும் போனோ கணினியோ பெரும்பாலும் சீனா தயாரித்ததாக இருக்கும் அல்லது சீனாவின் ஏற்றுமதி செய்யப்பட்ட கனிமத்தில் உருவாக்கப்பதாக இருக்கும்.

மார்க்கெட்

அப்படி ஒரு மார்க்கெட்

சாம்ராஜ்யத்தை சீனா கொண்டு இருக்கிறது. தங்கள் நாட்டில் இருந்து மட்டும் 120,000 மெட்ரிக் டன் கனிமங்களை சீனா எடுத்து வருகிறது. இரண்டாம் இடத்தில் உள்ள அமெரிக்கா இதில் எடுக்கும் மொத்த கனிமங்கள் அளவு வெறும் 15,000 மெட்ரிக் டன்தான். எவ்வளவு வேறுபாடு என்று பாருங்கள். இப்படிப்பட்ட சீனாவிற்கு கிடைத்த பொன் முட்டையிடும் வாத்துதான் ஆப்கானிஸ்தானும் அங்கு ஆட்சியை பிடித்து இருக்கும் தாலிபானும்.. தாலிபானை இனி 'please' செய்வதற்காக சீனா எதுவும் செய்யும்.. எவ்வளவு கோடிகளை வேண்டுமானாலும் அள்ளிக்கொடுக்கும்!

https://tamil.oneindia.com/news/international/rare-earth-metals-wolf-china-comes-in-goat-costume-to-please-taliban-in-afghanistan-430269.html

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆப்கானிஸ்தானில் இருக்கும் அரிதான தனிமங்கள் மற்றும் கனிமங்களின் மொத்த மதிப்பு மட்டும் 2020 மதிப்பீட்டின்படி 3 டிரில்லியன் டாலர் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அரிதான கனிமங்களை கைப்பற்றவே சீனா முயன்று வருவதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சாடிக்குள் மூடிவைத்த பூதங்களைத் திறந்துவிட்டதால் அவை வெளியேவந்து செய்த பல அட்டூழியங்கள் பற்றிய பாப்பாக் கதைகளும் பல உண்டு. இந்தக் கனிமங்களைப் பூட்டி வைத்திருக்கும் பூமியைத் திறந்துவிட்டு,  அவை வெளியே வந்தபின் அவற்றை முறையாகப் பாதுகாக்கத் தெரியாததோ  அன்றித் தவறியதே, அவை இன்று இயற்கையின் இயல்பான செயற்பாடுகளை மாற்றிப் பூமியையும் அழிவுக்கு உள்ளாக்கி வருகிறது. இது இப்படியே போனால் இந்தப் பூமிக்கோளில் உயிர்கள் உருவம் பெறும் நிகழ்வுகள் வெகுவிரைவில் இல்லாது போய்விடும்போல் தெரிகிறது.     

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

பல மில்லியன் மதிப்பு.. ஆப்கான் மண்ணுக்குள் இருக்கும் பொக்கிஷம்.. தாலிபானை வைத்து சீனா போடும் பிளான்

 உலகத்திலை இப்ப நடக்கிற சண்டையளே கனிமங்களை நோக்கித்தான்.....இப்பிடியிருக்க அமெரிக்கா மோட்டுத்தனமாய் விட்டுட்டு போகுது எண்டோ????? :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் US மற்றும் மேற்ககிற்கு  தெரியாதது அல்ல.

2010 இல் US army general ஆப்கானிஸ்தானில் கனிம வளம் நிலத்துக்கடியில் கொட்டிக் கிடக்கிறது என்றும், US department of defence இன் உள்ளக சுற்றறிக்கையில்,  ஆப்கானிஸ்தானை,  லித்தியத்தின் (lithium) சவூதி அரேபியா (அதாவது மசகு என்னைக்கு உவமானமாக, லித்தியதை ஒப்பிட்டு) என்று சொல்லியும்.

US மற்றும் மேற்கின் பல்வேறு சரி பிழைகளுக்கு அப்பால், ஆப்கானிஸ்தானுக்கு US, மேற்கு சென்றது, செய்தது அனைத்தும், தமது, உலக பாதுகாப்புக்கும், ஆப்கானிஸ்தானை நவீன  உலகுக்கு கொண்டு வருவதற்கும்.     

இப்பொது, மேற்கின் பாதுகாப்பிற்கு குந்தகமனா செயற்றப்பாட்டை தலிபான் இனிமேல் திரும்பியும் பார்க்காது, அப்படி நடந்தாலும் எச்சரிக்கை மூலம் தலபான்  வழிக்கு வரும். அப்படி இல்லா விட்டாலும், Space ஆயுதங்கள் மற்றும் போர்முறையை அமெரிக்கா வளர்த்து எடுத்து விட்டது. தலபான் ஏதாவது இசைக்கு பிசகினால், தெரியும் அமெரிக்காவின் நடவடிக்கைகள்.

அனல், அப்கனிஸ்தான் மக்களுக்கு, உண்மையில் சுதந்திரம் பறி போகிறது.     

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, Kadancha said:

அப்கனிஸ்தான் மக்களுக்கு, உண்மையில் சுதந்திரம் பறி போகிறது.     

 நான் அச்சவாரமாய் இந்த காணொளியை இணைக்கிறன்...🤣

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்த பொக்கிஷத்தை எடுக்கும் திட்டத்தில்தான் தாலிபான்களுக்கு சீனா ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. தாலிபான்களுக்கும், புதிய ஆப்கான் அரசுக்கும் பொருளாதார ரீதியாகவும், கட்டமைப்பு ரீதியாகவும் உதவ வேண்டும் என்றால் எங்களுக்கு இந்த கனிம திட்டங்களை கொடுக்க வேண்டும். எங்களை உங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று தாலிபான்களுக்கு வரும் நாட்களில் சீனா செக் வைக்கும் என்கிறார்கள்.

யாருக்கு யாரு செக் வைக்கிறது? உலக சட்ட திட்டங்களுக்கோ , மனித நாகரிகங்களுக்கோ, உலக அரசியல்ராணுவ பலத்திற்கோ எதுக்குமே மதிப்பளிக்காது கற்கால மனிதர்கள்போல் வாழும் தலீபான்களுக்கு ரஷ்யா,அமெரிக்கா எல்லாம் முடிஞ்சு இனிமே சீனா செக் வைக்குமா, வைச்சிட்டு போகதான் அவர்கள் விடுவார்களா?

உண்மையில் உய்குர் முஸ்லீம்கள் மீதான அடக்குமுறையில் இந்தியாவைவிட சீனாவின்மேல்தான் தலீபான்களுக்கு உலக இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் கோபம் அதிகம்.

தமது அரசியல் பொருளாதார ராணுவ எதிரியான அமெரிக்கா தமது அண்டைநாடான ஆப்கானிலிருந்து வெளியேறியதில் சீனாவுக்கு மகிழ்ச்சி அதுவே இந்த அதிவேக ஆதரவுக்கு காரணமாயிருக்கலாம்.

ஆய்வு ரொம்ப சீரியசா போகுதே யார் இந்த ஊடகம் என்று கடைசியில போய் பார்த்தால் அட நம்ம tamil.oneindia.

ஒருகாலத்தில் இறுதி யுத்ததின் கடைசிநாளில்கூட புலிகள் பதுங்கி  பாயபோகிறார்கள் என்று இரண்டு பியர் அடிச்சுபோட்டு வீட்டுக்குள்ள இருந்து பல ஆய்வுகளை தட்டிவிட்ட எமது புலம்பெயர் ஆய்வாளர்களுக்கெல்லாம் மானசீககுரு மரியாதைக்குரிய  ஆசான் இந்த தமிழ் ஒன் லைன்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடங்கிட்டினம் 

ஆய்வும்

பொக்கிஷமும் 

புண்ணாக்கும் என்று??

போதுமடா விடுங்கடா 

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விசுகு said:

தொடங்கிட்டினம் 

ஆய்வும்

பொக்கிஷமும் 

புண்ணாக்கும் என்று??

போதுமடா விடுங்கடா 

ஏன் சலிப்பு இன்னும் நிறைய வரும் இன்னும் இலங்கையில் இருந்து ஆராயவில்லை ஆனால் புலம் பெயர்ந்த நம்ம தளபதிகள் ஆராய வெளிக்கிட்டாங்கள் என்றால் பாருங்கோவன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.