Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய தூதரகங்களை சூறையாடிய தலிபான்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தூதரகங்களை சூறையாடிய தலிபான்கள்

 

ஆப்கானிஸ்தானில் கந்தகார் மற்றும் ஹெராட் நகரங்களில் உள்ள இந்திய தூதரகங்களைத் தலிபான்கள் சூறையாடியுள்ளதாக, இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூடப்பட்டிருந்த தூதரகங்களுக்குள் புகுந்த தலிபான் பயங்கரவாதிகள், ஆவணங்களை தேடியதுடன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களையும் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது எதிர்பார்க்கப்பட்டது தான் என்று தெரிவித்துள்ள இது இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், உலக நாடுகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறி தலிபான்கள் செயற்பட்டுள்ளது கவலை அளிக்கிறது எனவும், குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தூதரகம் மூடப்படுவதை விரும்பவில்லை என்றும், அங்கு பணியாற்றுவோருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என கட்டாரில் உள்ள தலிபான் அலுவலகத்தில் இருந்து இந்திய அரசுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தூதரகங்கள் சூறையாடப்பட்டமைக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. 

https://www.tamilmirror.lk/செய்திகள்/இந்திய-தூதரகங்களை-சூறையாடிய-தலிபான்கள்/175-279266

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு தலிபான்கள் தடை!

Tamil_News_large_2826467.jpg

காபூல்: தலிபான்கள் இந்தியாவுக்கு எதிரிகளாகவே இதுவரை இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அவர்கள் ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனால் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம் மூடப்பட்டது. தூதரை வாபஸ் பெறுவதாக இந்தியா அறிவித்தது. இதைத்தொடர்ந்து தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டனர். தூதரை வாபஸ் பெற்றதால் தலிபான்களுக்கு இந்தியா மீது கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் தடை விதித்துள்ளனர்..

இதுதொடர்பாக இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் அஜய் ஷகாய் கூறியதாவது: இந்தியாவில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு சர்க்கரை, தேயிலை, காபி, மசாலா பொருட்கள், துணி வகைகள், தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. ஆப்கானிஸ்தானில் இருந்து பழ வகை உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டது. குறிப்பாக உலர் பழங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்துதான் இந்தியாவுக்கு வந்தன. இப்போது தலிபான்கள் இந்தியாவுக்கான ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்து இருக்கிறார்கள்.

 

latest tamil news


 

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு சாலை மார்க்கமாக பொருட்கள் வருவது வழக்கம். கண்டெய்னர்களில் இவை அனுப்பப்படும். இந்தியாவுக்கு வரும் இந்த பொருட்களின் வாகனத்தை தலிபான்கள் தடுத்து விட்டனர். எனவே, அங்கிருந்து இனி பொருட்கள் வருவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. துபாய் வழியாகவும் இந்தியாவுக்கு பொருட்கள் வந்தன. அதுவும் தடுக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதே போல ரூ.3,800 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவை தடைப்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் உலர் பழங்களில் 80 சதவீதம் ஆப்கானிஸ்தானில் இருந்துதான் வந்தது. தலிபான்களின் தடையால் இனி அவை அங்கிருந்து வராது. எனவே, இவற்றின் விலை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தலிபான் களுக்கு பாரிய ஏமாற்றமே ஏற்பட்டிருக்கும்  பழைய பேப்பாரா இருக்கும்  உள்ளே இருந்தவை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தலிபான் களுக்கு பாரிய ஏமாற்றமே ஏற்பட்டிருக்கும்  பழைய பேப்பாரா இருக்கும்  உள்ளே இருந்தவை

உண்மை தான். ஏதோ தங்கபாளத்தை எடுத்து  விட்டார்கள் என்று புலம்பல்.

Quote

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அதே போல ரூ.3,800 கோடி அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.

ஆப்காந்தான் முதலில் தடை செய்துள்ளது. யாருக்கு நட்டம். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

தலிபானின் மீள் வருகை.. மிக வரைவில்.. காஷ்மீரிலும் இன்னும் பல ஹிந்திய நகரங்களிலும் எதிரொலிக்கும்.

முன்னைய தலிபான் ஆளுகையில்.. ஹிந்திய விமானத்தை கடத்தி வைச்சிருந்த தலிபான்கள்.. விடுத்த நிபந்தனை பாகிஸ்தான் ஆதரவு இஸ்லாமியப் பயங்கரவாதிகளை விடச் சொன்னது. அதுபோக.. தலிபான்.. சீனக் கூட்டாளிகள் வேறு ஆகிவிட்டனர்.

ஆக.. ஹிந்தியா வை கிட்டத்தட்ட முற்றிலுமாக சீனா சூழ்ந்துவிட்டது. எப்ப சீன ரகன் ஹிந்தியாவை நோக்கி.. நெருப்பை கக்கும் என்பது தான் இப்போ காத்திருப்பு. 

விடுதலைப் புலிகள் இல்லாத கடந்த 10 ஆண்டுகள் ஹிந்தியாவுக்கு சோதனைக் காலத்தின் உச்சி எனலாம். சோனியா குடும்பத்தின்.. மலையாளிகளின்.. பார்பர்னர்களின் புத்திபேதலித்தன வெளியுறவுக் கொள்கையால் வந்த வினை. இதன் விளைவு.. இது இன்னும் தொடரும். 

ஹிந்தியா தெற்காசியாவின் செல்லாக் காசு.. என்ற நிலையை சீனா உருவாக்கிவிட்டது. இது சீனாவுக்கு வெற்றியே. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, இணையவன் said:

ஆப்காந்தான் முதலில் தடை செய்துள்ளது. யாருக்கு நட்டம். 🙂

கிட்டதட்ட 2200 கோடி வருடாந்த import-export deficit ஐ ஆப்கானிஸ்தான் இழந்துள்ளது?

ஆனால் தாலிப்புகளுக்கு இதை பற்றி எல்லாம் கவலை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

கிட்டதட்ட 2200 கோடி வருடாந்த import-export deficit ஐ ஆப்கானிஸ்தான் இழந்துள்ளது?

ஆனால் தாலிப்புகளுக்கு இதை பற்றி எல்லாம் கவலை இல்லை. 

இல்லை, ஏனெனில், இது எல்லாம் உழைப்பில் வருவது.

அவர்களது தேசிய  சொத்து 9.5 பில்லியன் டாலர், ஆப்கன் மதியவங்கியின் வைப்பில் உள்ள சொத்து, US முடக்கி விட்டே வெளியேறியது.

இதுவே தாலிபானின் தலையாய பிரச்னை இப்பொது. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kadancha said:

இல்லை, ஏனெனில், இது எல்லாம் உழைப்பில் வருவது.

அவர்களது தேசிய  சொத்து 9.5 பில்லியன் டாலர், ஆப்கன் மதியவங்கியின் வைப்பில் உள்ள சொத்து, US முடக்கி விட்டே வெளியேறியது.

இதுவே தாலிபானின் தலையாய பிரச்னை இப்பொது. 

விளங்கவில்லை?

இந்தியாவிடம் இருந்து ஆப்கானிஸ்தான் 3800 கோடி வரையான பொருட்களை வாங்கி விட்டு, இந்தியாவுக்கு  6000 கோடி வரை வித்தால்,  ஆப்கானிஸ்தானுக்கு 2800 கோடி நிகர இழப்புத்தானே?

  • கருத்துக்கள உறவுகள்

 

26 minutes ago, goshan_che said:

இந்தியாவிடம் இருந்து ஆப்கானிஸ்தான் 3800 கோடி வரையான பொருட்களை வாங்கி விட்டு, இந்தியாவுக்கு  6000 கோடி வரை வித்தால்,  ஆப்கானிஸ்தானுக்கு 2800 கோடி நிகர இழப்புத்தானே?

நிச்சயமாக.

அனால் இது உழைப்பினால் வருவது (ஓர் வருடம் ஏற்றுமதி - இறக்குமதி உழைப்பின் வித்தியாசம் என்று நினைக்கிறன்).

அனால், ஆப்கான் மத்திய வங்கியின் சொத்தான 9.5 பில்லியன் டாலர் ஐ, US முடக்கி விட்டே வெளியேறியது.

ஆப்கானிஸ்தான் மத்திய வங்கி காரியாலயத்தில் இருந்தது  ஏறத்தாழ 18 மில்லியன் dollars. 
ஆனைப் பசிக்கு சோளத்திலும் சிறிய தொகை, ஏறத்தாழ 30 மில்லியன் சனத்தொகை கொண்ட ஆப்கானிதனுக்கு, அதாவது தலிபான் நிர்வாகத்திற்கு.   

தலிபான் இன் பிரச்சனை, இந்த 9.5 பில்லியன் டாலர் இல் எவ்வாறு கை  வைப்பது (அதாவது, access பண்ணுவது).

நிபந்தனைகள் ஏற்கனவே தலிபானிடம் US ம் மற்றும் மேற்கு நாடுகளும் வழங்கி இருக்கும் என்று நினைக்கிறன்.    

இதன் காரணமோ தெரியவில்லை, தலிபான் தாம்  இப்பொது செய்யும் (முன்பு செய்த) செயல்களை censor பண்ணுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

9.5 billion டாலர் US   முடக்கியது இது பகிரங்கமான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது, அபகனின் வருமான பண பரிவர்த்தனை சங்கிலி தொடங்கும் இடமும், முடியும் இடமும் US federal reserve ஆக இருக்கும் படியும் செய்து விட்டு அமெரிக்கா விலத்தியதாக, வெளியேறிய ஆப்கான் மத்திய வங்கி முக்கிய பருப்பில் உள்ளவர்கள் தெரிவித்ததாக ஓர் செய்தி இருக்கிறது.

மற்றது, தலிபானின் போதைப்பொருள் வியாபார பண பரிவர்தனையும் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் செய்தி உள்ளது.

தன்னாலேயே, அமெரிக்கா நம்பிக்கையுடன் வெளியேறியது என்ற செய்தியும். மற்றும், அமளி துமளி அடங்கும் போது தலிபான் சமதனப் பொறிக்குள் இழுத்து வரப்பட்டு (வஞ்சிக்கப்பட்டு) விட்டதாக உணர்வார்கள் என்றும்.      

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

கிட்டதட்ட 2200 கோடி வருடாந்த import-export deficit ஐ ஆப்கானிஸ்தான் இழந்துள்ளது?

ஆனால் தாலிப்புகளுக்கு இதை பற்றி எல்லாம் கவலை இல்லை. 

தலை முழுவதும் மதம் தான் எதை பற்றி கவலை 🤦‍♂️

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.