Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆர்யா சம்பந்தப்படவில்லை. போலீஸ் ஆணையர் தெரிவிப்பு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்யா சம்பந்தப்பட வில்லை. போலீஸ் ஆணையர் தெரிவிப்பு.

காவல் ஆணையர்

ஜேர்மன் தமிழ் பெண் விவகாரத்தில், இருவர் கைதாகிய நிலையில், முதலாவது, இரண்டாவது குற்றவாளிகளாக ஆர்யாவும் அவரது தாயாருமுள்ளனர்.

அவர்கள் விரைவில் கைதாவர்கள் என்று ஜேர்மன் பெண்ணின் சார்பில், அமைந்த வழக்கறிஞர் சொல்லி இருந்தமை குழப்பத்தினை உண்டாக்கி இருந்தது.

இந்த நிலையில் பத்திரிகையாளரை சந்தித்த சென்னை போலீஸ் ஆணையர், ஜேர்மன் பெண்ணின் புகார் அவர்கள் மேலே அளிக்கப்பட்டிருந்தது என்ற அடிப்படையில் அவர்கள் பெயர் ஆரம்பத்தில் இருந்தது உண்மை.

அந்த வழக்கறிஞர் அதே புகாரின் அடிப்படையிலேயே சென்னை உயர் நீதிமன்றத்தினையும், நாடி இருந்தனர். உயர் நீதிமன்றமும் விசாரிக்க உத்தரவு இட்டிருந்தது.

எமது விசாரிப்பின் முடிவில் அவர்களுக்கு சம்பந்தம் இல்லை என்று கண்டறிந்ததால், அவர்கள் பெயர் விலக்கப்பட்டு, கைதாகிய இருவரின் பெயர் முதலாம், இரண்டாம் பெயராக சேர்க்கப்பட்டுள்ளது.

இதனை விசாரித்து, தாம் சம்பந்தப்பவில்லை என உறுதி செய்த போலீசாரின் விசாரணை தொடர்பில் நன்றி தெரிவிக்கவே ஆர்யா தன்னை நேரில் சந்தித்தார் என்று விளக்கம் தந்தார் ஆணையர்.

இந்த விளக்கத்துடன், இந்த விவகாரம் முடிவுக்கு வருகிறது.

ஆக, ஜேர்மன் பெண், நன்றாக ஏமாத்த பட்டுள்ளார். அவர் அமைத்த வக்கீலும், விபரம் புரியாதவராக இருப்பார் போலுள்ளது.

தமிழ் சிறியர் ஜெனலியாவுக்காக 5 பைசா செலவழித்திருக்க மாட்டார். அதுபோல மருதரும் காஜலுக்காக செலவழித்து இருக்க மாட்டார்.

படம் பார்த்தமா, லொள்ளு விட்டமா, போய் கிட்டே இருக்கணும்....

கலியாணம் வேற கட்டுவேன் என்று, காசை கொடுத்து விட்டு, இந்திய ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடதாசி போட்டால் அவையள் வந்து, கலியாணத்தை பேசி, தாலியை எடுத்து கொடுத்து, ஆசீர்வாதம் செய்வார்கள் என்று நினைப்பது தவறு.

இது விஜய் டீவியே கதி என்று இருக்கும் நம் எல்லோருக்கும் பாடம்.

ஐஸ்வர்யா ராய் படத்துடன், அமெரிக்க வெள்ளை இளைஞர் ஒருவரை சுத்தி $125,000 முன்னர் யாரோ காசு அடித்து, அவரையும் பாம்பே விமான நிலையம் வரை, கலியாணத்துக்கு வர பண்ணி, தொங்க வைத்த நிகழ்வும் இந்தியாவில் நடந்தது. 

https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-commissioner-shankar-jiwal-explain-on-arya-case-432017.html

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

ஆக, ஜேர்மன் பெண், நன்றாக ஏமாத்த பட்டுள்ளார். 

நாதம்ஸ்…. இவர் இழந்த காசு எவ்வளவு.

ஆளின்ரை படம் இருந்தால்.. இணைச்சு  விடுங்க.  சும்மா…. மூஞ்சையை பாப்பம். 😎

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

நாதம்ஸ்…. இவர் இழந்த காசு எவ்வளவு.

ஆளின்ரை படம் இருந்தால்.. இணைச்சு  விடுங்க.  சும்மா…. மூஞ்சையை பாப்பம். 😎

ஆத்தை படுறபாட்டில குத்தியன் என்னத்துக்கோ அழுவுறான்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்யாவோடையும் அவரின் அம்மாவிடமும் video call கதைச்சிருக்காமே அந்த பிள்ளை! Video ஆதாரம் இல்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஏராளன் said:

ஆர்யாவோடையும் அவரின் அம்மாவிடமும் video call கதைச்சிருக்காமே அந்த பிள்ளை! Video ஆதாரம் இல்லையாம்.

ஆர்யாவோட அம்மா ஒரு தடவை வித்யா எனும் ஜேர்மனில் வசிக்கும் அந்த பெண்ணை உன்னால் என்ன முடியுமோ பண்ணிக்கோனு வீடியோ அழைப்பில் மிரட்டியதாகவும் பாதிக்கப்பட்டவரே சொல்லியிருக்கிறார்.

ஆர்யா திரையுலகில்  பல வருசமா பிக்கப் டிராப் நடிகர் என்றுதான் கூப்பிடுவார்கள், அதாவது பல பெண்கள் பழக்கம் உள்ளவர் காரில ஏத்தி இறக்குவாராம். இது மீடியா வளர்ந்த இக்காலத்தில் அனைவருக்குமே தெரியும்.

அதைவிட  தொலைகாட்சி நிகழ்ச்சியொன்றில் ஆர்யாவை கல்யாணம் கட்ட கனடாவிலிருந்தும் கல்யாணமாகி குழந்தைகூட இருக்கும் இலங்கை சிங்கிள் மதர் ஒருவர் ஆர்யாகூட யாழ்ப்பாணம்வரை சென்று படப்பிடிப்புக்கள் என்று சுற்றி திரிந்து அதுவும் இதுபோல்தான் கடைசியில் ஆனது.

அந்த பெண்ணும் படித்த வசதியானவர் என்றும் அவரும் குறிப்பிட்ட பணத்தை இழந்ததாகவும் ஒரு செய்தி வந்தது , இந்த ஜேர்மனி வித்யாவும் படித்த வசதியானவர் என்றும் அறியபடுகிறது அதனால்தான் ஆர்யாவுக்கு இலங்கை பணமதிப்பில் 2 கோடியும், இந்திய பண மதிப்பில் 70 லட்சமும் கொடுக்க கூடியதாக இருந்தது.

ஆர்யாமீது அவ புகார் கொடுத்தது மார்ச் மாதத்தில் பட வாய்ப்புகளில்லாமலும், பட தயாரிப்பு நட்டத்தினாலும்  இவ்வளவு காலமும் ஊடகங்களுக்கு எந்த மறுப்பும் சொல்லாமலிருந்த அவரு சார்பட்டா படம் மிக பெரிய வெற்றியடைந்த பின்னர் இருவருக்கு பணத்தை விசிறி  அப்புரூவரா மாற சொல்லி அவர்களை சிறைக்கு அனுப்பி தான் தப்பித்து கொண்டதாகவே வலைதளங்களில் பலர் பேசி கொள்கிறார்கள்.

ஆர்யா வயசு 40, நிச்சயமாக பல வயசு வித்தியாசமிருக்கும், ஆர்யா ஒரு இஸ்லாமியர் அவரை திருமணம் செய்தால் கண்டிப்பாக இஸ்லாமிய பெண்ணாக மதம்  மாற வேண்டும், ஆர்யா திரைதுறையில் உள்ளவர் நேரடியாக பழக்கமில்லாமலே லட்சங்களை அவருக்காக செலவழித்திருக்கிறார்கள்.

இப்படி வயசு மதம் பணம் எதுவுமே பார்க்காமல் ஒரு நடிகனோட மனைவி என்று பெருமையாக சொல்லவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக  ஒரு பெண் பித்தனை கட்டிக்க அலைஞ்ச இவர்களுக்கு இவர்கள் இழந்த பணம் ஒரு அபராத தொகையாக இருக்கட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

பொதுவான சட்ட நிலைப்பாட்டுடன் பார்ப்போம்.

நீஙகள் சொல்வது இணையத்தள செய்தி.

ஆர்யா வீடியோ காலில் மிரட்டியிருந்தால், பொறி வைத்துப் பிடிக்க, ஸகிறீன் காஸ்டிங், மென்பொருள் உள்ளன. அது ஆரியாவிக்கும் தெரியும்.

அவ்வாறு ஒரு ஆவனமே இல்லாமல் எப்படி வழக்கு தொடுத்தார் என்ற கேள்வி வருகிறது.

சரி, பொலீசாருக்கு தேவை சான்று. அது விடயமாக பெண்ணை வீடியோ காலில் பேசி இருக்கிறார்கள்.

திகதி, நேரம், பேசிய மென்பொருள் கொடுத்திருந்தால், போலீசார், எங்கிருந்து போன் வந்தது என்றாவது கிண்டி இருப்பார்கள்.

அந்த விபரம் கூட இல்லை.

பணம் அனுப்பிய கணக்கை வைத்து, இருவரை பிடித்து இருக்கிறார்கள்.

ஆரியா சம்பந்த பட்டிருந்தாலும், தனது வங்கி விபரம் கொடுத்திரார்.

ஆக, பெண் ஒரு இஸ்லாமிய கும்பலால் ஏமாற்றப்பட்டுள்ளார். இந்த கும்பல், பின்னனி, நோக்கம் விசாரிக்கப்பட்டிருக்கும்.

அதே வேளை, இந்திய பிரதமர், ஜனாதிபதி, உயர்நீதிமன்றம், யேர்மன் வெளிவிவகார அமைச்சு, அதன் தூதரகம் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் என்பதாலே, போலீஸ் ஆணையர் கவனம் எடுத்தார்.

ஆகவே இணையத்தில் சொல்வது போல நடந்திருக்க சந்தர்ப்பம் குறைவு என நிணைக்கிறேன்.

ஆரியா பேசியிருககலாம்..... விபரத்தை எடுத்து வேறு யாரும் மிமிக்கிரி செய்திருக்கலாம்.....

சட்டம் தன் கடமையை முடித்தது என்பதை தவிர சொல்ல எதுவும் இல்லை.

ஆனாலும் இது நம்மவர்களுக்கு பாடம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை கனடாப் பொண்ணுவின் அம்மம்மாவும்  வாழையிலை சோறு குடுத்து..கட்டிப்பிடித்து கொஞ்சி ...எத்தினை ஆர்ப்பாட்டம் செய்தவ.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, ஏராளன் said:

ஆர்யாவோடையும் அவரின் அம்மாவிடமும் video call கதைச்சிருக்காமே அந்த பிள்ளை! Video ஆதாரம் இல்லையாம்.

கேடி ராகவன்  சம்பவம் போன்று தான் தோன்றித்தனமான சம்பவங்கள் ஏதாவது நடந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளதா சார்? 😎

  • கருத்துக்கள உறவுகள்
On 6/9/2021 at 04:01, குமாரசாமி said:

கேடி ராகவன்  சம்பவம் போன்று தான் தோன்றித்தனமான சம்பவங்கள் ஏதாவது நடந்திருக்க வாய்ப்புக்கள் உள்ளதா சார்? 😎

தீவிரமாக தேடுகிறோம், கிடைத்தால் முதலில் உங்களுக்குத்தான் அனுப்புவன்.😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஏராளன் said:

தீவிரமாக தேடுகிறோம், கிடைத்தால் முதலில் உங்களுக்குத்தான் அனுப்புவன்.😜

உங்கள் தாராள மனப்பான்மைக்கு மிக்க நன்றி. 😂

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.