Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பார்வையாளர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நந்தன் said:

எல்லாப்பக்கமும் கேட்ட போட்டா அப்பாவி ஜீவன் எங்க போகும்.😁

முன்னெரெல்லாம் சுமேரியரை யாழ்களத்தில் கலாய்த்த வண்ணமே திரிவீர்கள். ஆனால் கொஞ்சக்காலமாக எதுவுமேயில்லை. ஒட்ட நறுக்கி விட்டார்களோ? 😁
அது தான் இங்க வந்து....???? 😎

  • Replies 94
  • Views 18.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

பொதுப் பிரச்சினை பற்றி பேசும் போது நமக்கென்ன என்று இருப்பதும் அது நம்ம கதவை தட்டும் வரை அது சம்பந்தமாக குரல் கொடுப்பவர்களை நக்கல் நையாண்டி செய்வதும்

அது நம்ம கதவை தட்டிய பின் கத்தி கதறுவதும் எல்லோரும் செய்வது தான். 

இதில் பேச இனி எதுவும் இல்லை.

நன்றி. அனைவரதும் நேரத்திற்கு.

Edited by விசுகு

10 hours ago, குமாரசாமி said:

ஆனால் ஒரு கேள்வி?

யாழ் களத்திற்கு வருபவர்கள் எல்லோருக்கும் விருப்பு வாக்கு இடும் வசதி உள்ளதா?

பார்வையளார் என்ற குழுமம் உருவாக்கப்பட்டதே பச்சைப்புள்ளியினை சிலர் தவறாகப் பயன்படுத்தியமையினால் தான் என்பது பற்றி பல முறை விளக்கம் சொல்லியாகி விட்டாயிற்று.  பார்வையாளர் குழுமம் பற்றிக் கதைத்தால் அதில் பச்சைப்புள்ளி பற்றிக் கதைக்காது விட முடியாது. அப்படியிருக்கும் போது நீங்கள் பச்சைப்புள்ளி பற்றி வாயே திறக்கவில்லை என்று நழுவுகின்றீர்கள். அது ஒன்று.

இரண்டாவது போகின்ற போக்கில் உறுப்பினர் தரவிறக்கம் என்றும் அவமதிப்பு என்றும் சொல்லியுள்ளீர்கள். இதில் எதுவித அவமதிப்போ அல்லது தரவிறக்கம் என்பதோ கிடையாது. அதனால் எப்படி அவமதிப்பு என்றே கேட்டிருந்தேன்.

10 hours ago, குமாரசாமி said:

ஆனால் ஒரு கேள்வி?

யாழ் களத்திற்கு வருபவர்கள் எல்லோருக்கும் விருப்பு வாக்கு இடும் வசதி உள்ளதா?

Quote

கருத்துக்கள பார்வையாளர்கள்:
இக்குழுமத்தில் உள்ளவர்களுக்கு யாழ் கருத்துக்களத்தின் சகல பகுதிகளிலும் புதிய தலைப்புக்களைத் திறக்கவும், கருத்துக்களைப் பதியவும், திண்ணையில் உரையாடவும் அனுமதி உண்டு. எனினும் விருப்பப் புள்ளிகள் இடவும், மறைவாக (Anonymous) கருத்துக்களத்தினுள் உள்நுழையவும் முடியாது. கருத்துக்களத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் கருத்துக்கள் பதியாமல் இருப்பவர்கள் தானியங்கியால் இக்குழுமத்திற்கு நகர்த்தப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

குத்துபவர்களின் பெயர்கள் வெளிப்படையாக தெரிகின்றது தானே?  அவர்களை பற்றி நேரடியாக  நிர்வாகத்திடம்  முறையிடவேண்டியது  உங்கள் கடமை அல்லவா?

ஏன் நான் அவர்களுக்கு சொல்ல வேண்டும் ....அவர்களுக்கு தெரிந்த படியால் தான் யாழில் இப்படி இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இருக்கினம் 

என்னை பொறுத்த வரை பச்சை புள்ளி முறையினை நிப்பாட்டினால் ஒரு பிரச்சனையும் இருக்காது 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

பொதுப் பிரச்சினை பற்றி பேசும் போது நமக்கென்ன என்று இருப்பதும் அது நம்ம கதவை தட்டும் வரை அது சம்பந்தமாக குரல் கொடுப்பவர்களை நக்கல் நையாண்டி செய்வதும்

அது நம்ம கதவை தட்டிய பின் கத்தி கதறுவதும் எல்லோரும் செய்வது தான். 

இதில் பேச இனி எதுவும் இல்லை.

நன்றி. அனைவரதும் நேரத்திற்கு.

அண்ணா நான் கொஞ்ச காலம் வராமல் இருந்த விட்டு வந்த போது இதே பிரச்சனையை தாண்டி தான் வந்தேன் ...நெடுக்கருக்கும் இதே பிரச்சனை இருந்தது ...நிர்வாகத்திடம் சொன்ன போது உடனே மாத்தி விட்டார்கள் ...இதில் என்ன அவமானம் இருக்கு என்று விளங்கவில்லை 
ஒருவர் , பல பேர்களில் எழுதுவது ,குழுவாய் சேர்ந்து பச்சை குத்துவது, குழுவாய் சேர்ந்து ஒருவரை தாக்கி எழுதுவது  போன்றவற்றை தடுப்பது நல்லது இல்லையா 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, ரதி said:

என்னை பொறுத்த வரை பச்சை புள்ளி முறையினை நிப்பாட்டினால் ஒரு பிரச்சனையும் இருக்காது

பச்சை புள்ளி நடைமுறையும்,திண்ணையும் இல்லாத காலத்து யாழ்களத்தில் எவ்வித வாக்குவாதங்களும்,குழுவாதங்களும், தடைகளும் இல்லாமலா இருந்தது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 hours ago, மோகன் said:

பார்வையளார் என்ற குழுமம் உருவாக்கப்பட்டதே பச்சைப்புள்ளியினை சிலர் தவறாகப் பயன்படுத்தியமையினால் தான் என்பது பற்றி பல முறை விளக்கம் சொல்லியாகி விட்டாயிற்று.  பார்வையாளர் குழுமம் பற்றிக் கதைத்தால் அதில் பச்சைப்புள்ளி பற்றிக் கதைக்காது விட முடியாது. அப்படியிருக்கும் போது நீங்கள் பச்சைப்புள்ளி பற்றி வாயே திறக்கவில்லை என்று நழுவுகின்றீர்கள். அது ஒன்று.

இரண்டாவது போகின்ற போக்கில் உறுப்பினர் தரவிறக்கம் என்றும் அவமதிப்பு என்றும் சொல்லியுள்ளீர்கள். இதில் எதுவித அவமதிப்போ அல்லது தரவிறக்கம் என்பதோ கிடையாது. அதனால் எப்படி அவமதிப்பு என்றே கேட்டிருந்தேன்.

நான் இப்போது கருத்துக்கள உறவுகள் எனும் தரத்தில் உள்ளேன். சில தனிப்பட்ட பிரச்சனைகளால் பல நாட்கள் யாழ்களத்திற்கு வர முடியாமல் போய் விட்டது.
 கொஞ்ச நாட்களில் நான் திரும்பி வரும் போது புதிதாக வரும் உறவுகளுக்கு உள்ள உரிமை கூட எனக்கு இல்லாமல் இருக்கின்றது. இதை எப்படி எடுத்துக்கொள்வது?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாருக்கும் ஒரே மாதிரியான விதியென்று இருக்கும் போது, "எனக்கு ஸ்பெஷல் தகுதி" வேணுமென்று அடம்பிடிப்பது சரியல்ல! இந்தப் பகுதியில் ஒரு வேண்டுகோள் விடுத்தால் தானியங்கி மாற்ற முதலே உறுப்பினர் நிலைக்கு மாற்றி விடுகிறார்கள். இதில் பெரும்பாலானோருக்கு முறைப்பாடில்லை என நினைக்கிறேன்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
47 minutes ago, Justin said:

எல்லாருக்கும் ஒரே மாதிரியான விதியென்று இருக்கும் போது, "எனக்கு ஸ்பெஷல் தகுதி" வேணுமென்று அடம்பிடிப்பது சரியல்ல! இந்தப் பகுதியில் ஒரு வேண்டுகோள் விடுத்தால் தானியங்கி மாற்ற முதலே உறுப்பினர் நிலைக்கு மாற்றி விடுகிறார்கள். இதில் பெரும்பாலானோருக்கு முறைப்பாடில்லை என நினைக்கிறேன்.  

இங்கே யார் கேட்டார் எனக்கு மட்டும் என?

யாழ்களத்திற்கு வருபவர்கள் நிர்வாகத்திற்கு எதிரானவர்கள் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இங்கே யார் கேட்டார் எனக்கு மட்டும் என?

யாழ்களத்திற்கு வருபவர்கள் நிர்வாகத்திற்கு எதிரானவர்கள் அல்ல.

திரியை ஆரம்பித்த சுமே கேட்டார் என்பது தமிழ் புரிந்தோருக்குப் புரியும்! எந்தத் தலைப்பில் உரையாடுகிறோம் என்று தெரியாமலா கருத்துப் பகிர்கிறீர்கள்?😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் இத்தனை பேர் வந்து கருத்து வைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. எனக்கு யாழ் இணையத்திடம்  கோபம் அல்ல.ஆனால் மிகுந்த மனவருத்தம் உண்டு.  தவறைத் தவறு என்று கூறுவதற்கு சிலருக்கு மட்டுமே துணிவு உண்டு என்பதும் தெரிகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் ஏதோ காரணத்தால் வெளியே சிலகாலம் செல்கிறார். அவர் திரும்பி வரும்போது உடனடியாக உள்ளே வர முடியவில்லை. வீட்டின் திறப்பு மாற்றப்பட்டிருக்கிறது. அழைப்பு மணியை விருந்தாளி போல அடித்து உள்ளே வந்தவருக்கு தாய் வரவேற்பறையின் ஓரத்தில் ஓர் இடத்தைக் காட்டுகிறார். சில நாட்கள் இங்கேயே தங்கியிரு. நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்று பார்த்துவிட்டே உன்னை மேலே உள்ள உன் அறையில் சென்று தங்கலாம்  என்று கூறுகிறார். எல்லோரும் உண்ணும் போது மற்றவர்கள் எல்லோரும் ஒரே நிறத் தட்டில் உண்ண, இவருக்கு வேறு நிறத் தட்டுக் கொடுக்கிறார் அம்மா. இவர் எப்படி அதைத் தான் வீடு என்று உணர முடியும் ????

இப்ப நீங்கள் செய்திருப்பதும் அதுதான் மோகன். சிங்களவர்கள் செய்வது போலத்தான் எனக்கு இருக்கிறது. விருப்பம் என்றால் யாழுக்கு வந்து எழுதலாம். ஓடி ஓடி எழுதுபவர்களுக்கே இங்கு முதல் வாங்கு. இல்லாதவர்களுக்கு பின்வாங்குதான் என்று அந்தக் காலத்து ஆசிரியர்கள் செய்வது போலவே இருக்கிறது. 

நீங்களே  எமக்குள் பிரிவினையை ஏன்  ஏற்படுத்துகிறீர்கள். இத்தனை காலம் பல பெயர்களில் வந்து எழுதுபவர்களை அடையாளம்  காணாமலா வைத்திருந்தீர்கள்???? ரதி கூறியதுபோல் பச்சை எதுக்கு????  அர்ப்ப பச்சைக்காகத்தான் வேறு பெயர்களில் வந்து லைக் செய்கின்றனர் என்றால் அவர்களைத் தடை செய்ய என்ன வழி என்று பார்க்காது இத்தனை காலம் எத்தனையை நேற காலம் பாராது எழுதிய எம்மை நிறப்பாகுபாடு, ராங்க் என்று ஏதேதோ செய்து வரவிடாமற் செய்கிறீர்கள். எல்லாமே உங்களால்  உருவாக்கப்பட்டதுதானே. பலருக்கு என்னைப் போன்ற மனநிலை இருந்தாலும் பயத்தினால் அவர்கள் பேசாமல் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. என வீட்டில் நான் சுதந்திரமாக முடிந்தால் மட்டுமே அது என் வீடாக முடியும்.

மிக்க நன்றி அனைவருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மோகனிடமும் நிர்வாகத்தினரிடமும் ஏன் உறுப்பினர்கள் பயங்கொள்ள வேண்டுமென்று விளங்கவில்லை! சுமே போல இந்த விடயத்தை இவ்வளவு ஆழமாக எடுத்துக் கொண்ட உறுப்பினர்களை நான் அறியவில்லை! 

8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இந்தத் திரியில் இத்தனை பேர் வந்து கருத்து வைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. எனக்கு யாழ் இணையத்திடம்  கோபம் அல்ல.ஆனால் மிகுந்த மனவருத்தம் உண்டு.  தவறைத் தவறு என்று கூறுவதற்கு சிலருக்கு மட்டுமே துணிவு உண்டு என்பதும் தெரிகிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் ஏதோ காரணத்தால் வெளியே சிலகாலம் செல்கிறார். அவர் திரும்பி வரும்போது உடனடியாக உள்ளே வர முடியவில்லை. வீட்டின் திறப்பு மாற்றப்பட்டிருக்கிறது. அழைப்பு மணியை விருந்தாளி போல அடித்து உள்ளே வந்தவருக்கு தாய் வரவேற்பறையின் ஓரத்தில் ஓர் இடத்தைக் காட்டுகிறார். சில நாட்கள் இங்கேயே தங்கியிரு. நீ எப்படி நடந்து கொள்கிறாய் என்று பார்த்துவிட்டே உன்னை மேலே உள்ள உன் அறையில் சென்று தங்கலாம்  என்று கூறுகிறார். எல்லோரும் உண்ணும் போது மற்றவர்கள் எல்லோரும் ஒரே நிறத் தட்டில் உண்ண, இவருக்கு வேறு நிறத் தட்டுக் கொடுக்கிறார் அம்மா. இவர் எப்படி அதைத் தான் வீடு என்று உணர முடியும் ????

இப்ப நீங்கள் செய்திருப்பதும் அதுதான் மோகன். சிங்களவர்கள் செய்வது போலத்தான் எனக்கு இருக்கிறது. விருப்பம் என்றால் யாழுக்கு வந்து எழுதலாம். ஓடி ஓடி எழுதுபவர்களுக்கே இங்கு முதல் வாங்கு. இல்லாதவர்களுக்கு பின்வாங்குதான் என்று அந்தக் காலத்து ஆசிரியர்கள் செய்வது போலவே இருக்கிறது. 

நீங்களே  எமக்குள் பிரிவினையை ஏன்  ஏற்படுத்துகிறீர்கள். இத்தனை காலம் பல பெயர்களில் வந்து எழுதுபவர்களை அடையாளம்  காணாமலா வைத்திருந்தீர்கள்???? ரதி கூறியதுபோல் பச்சை எதுக்கு????  அர்ப்ப பச்சைக்காகத்தான் வேறு பெயர்களில் வந்து லைக் செய்கின்றனர் என்றால் அவர்களைத் தடை செய்ய என்ன வழி என்று பார்க்காது இத்தனை காலம் எத்தனையை நேற காலம் பாராது எழுதிய எம்மை நிறப்பாகுபாடு, ராங்க் என்று ஏதேதோ செய்து வரவிடாமற் செய்கிறீர்கள். எல்லாமே உங்களால்  உருவாக்கப்பட்டதுதானே. பலருக்கு என்னைப் போன்ற மனநிலை இருந்தாலும் பயத்தினால் அவர்கள் பேசாமல் இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. என வீட்டில் நான் சுதந்திரமாக முடிந்தால் மட்டுமே அது என் வீடாக முடியும்.

மிக்க நன்றி அனைவருக்கும்

மெசொபொத்தேமியா சுமேரியர், விதிமுறைகளைப் படித்தீர்களா? உங்கள் கருத்தினைப் பார்க்கும் போது விதிமுறைகளைப் படிக்கவில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

பார்வையாளர்களுக்கும், பங்களிப்பவர்களுக்கும் (தொடர்ச்சியாக யாழில் எழுதுபவர்கள்) உள்ள வசதிகள் ஒன்றாக இருந்தால் பலர் கருத்தாடலில் ஈடுபடாமல் வெறும் “லைக்” போடும் முகநூல் கலாச்சாரத்திற்கு போய்விடுகின்றார்கள். இது யாழின் இருப்பையே பாதிக்கும்.

இடையில் பல மாதங்கள் காணாமல் போனவர்கள் (ரதி மாதிரி!) திரும்பவும் வந்து சகல வசதிகளையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் வசதி இருக்கின்றதுதானே. சுமே ஆன்ரி எப்பவும் மேடையில் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர் என்பது தெரியும்தானே😜

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, கிருபன் said:

இடையில் பல மாதங்கள் காணாமல் போனவர்கள் (ரதி மாதிரி!) திரும்பவும் வந்து சகல வசதிகளையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் வசதி இருக்கின்றதுதானே. சுமே ஆன்ரி எப்பவும் மேடையில் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர் என்பது தெரியும்தானே😜

அப்பிடியெண்டால் நான் ஆரம்பத்திலை போட்ட படம் கணக்காய் பொருந்தி வரும் எண்டுறியள். ஐமீன் நீலாம்பரி...🤣

Neelambari Ramya Krishnan Ramyakrishnan GIF - Neelambari Ramya Krishnan Ramyakrishnan Ramya GIFs

Nayan Thara Nilambari GIF - Nayan Thara Nilambari Dk1404 - Discover & Share  GIFs

Edited by குமாரசாமி
படங்களை நடு சென்ரருக்கு மாற்றியது😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மோகன் said:

மெசொபொத்தேமியா சுமேரியர், விதிமுறைகளைப் படித்தீர்களா? உங்கள் கருத்தினைப் பார்க்கும் போது விதிமுறைகளைப் படிக்கவில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.

விதி முறைகள் மாற்றக்கூடியதுதானே???? 

11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

விதி முறைகள் மாற்றக்கூடியதுதானே???? 

கள நிபந்தனைகள் புதுப்பிக்கும் போது அதுபற்றிய அறிவித்தல் தரப்பட்டிருந்தது. நிபந்தனைகளை நீங்கள் அங்கீகரித்த பின்னர் தான் நீங்கள் களத்தில் உள்நுழைந்துள்ளீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

வரவர யாழ் அரிவரி பாடசாலை மாதிரி வந்திட்டுது.😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 14/9/2021 at 20:25, மோகன் said:

Rank  ஆனது நிபந்தனைகள் பதிப்பு 4 வெளியிட்ட காலப்பகுதியில் இருக்கவில்லை. இது இவ்வருட நடுப்பகுதி அளவிலேயே இந்தக் களத்திற்குரிய Script உருவாக்கியவர்களால் இணைக்கப்பட்டது. அடுத்த விதிமுறைகள் பற்றிய விடயத்தில் இது பற்றிய விடயங்களைக் குறிப்பிடுகின்றோம்.

நீங்கள் நடைமுறையில் கொண்டுவந்த விடயம் பற்றி உங்களாலேயே தெளிவான பதிலைக் கூற முடியவில்லையா????? Script உருபாக்குபவர்கள் உங்கள் அனுமதியின்றி ஒன்றை உருவாக்குவார்களா???? இந்த  ராங்க் விடயம் பற்றி தெளிவாகக் கூறினால் நன்று மோகன்.

11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் நடைமுறையில் கொண்டுவந்த விடயம் பற்றி உங்களாலேயே தெளிவான பதிலைக் கூற முடியவில்லையா????? Script உருபாக்குபவர்கள் உங்கள் அனுமதியின்றி ஒன்றை உருவாக்குவார்களா???? இந்த  ராங்க் விடயம் பற்றி தெளிவாகக் கூறினால் நன்று மோகன்.

யாழுக்காக  என்று மட்டும் இந்த script உருவாக்கப்படவில்லை. பொதுவாக உருவாக்கப்பட்ட ஒரு script இனையே யாழில் நாம் பாவிக்கின்றோம்.

நீங்கள் புதிய  விதிமுறைகளை November 11, 2020 அன்று அங்கீகரித்த பின்னரே உள்நுழைந்துள்ளீர்கள். விதிமுறைகளை தெளிவாகப்படித்திருந்தால் இந்தத் திரி திறந்திருக்க வேண்டிய தேவையிருந்திருக்காது.

புதிய விதிமுறைகள் 01 நவம்பர் 2020 ஞாயிறு (01.11.2020 - 00:00 மணி)  முதல் அமுலுக்கு வந்தது. புதிய script update ஆனது 24/06/2021 அன்று புதுப்பிக்கப்ட்டது. அதிலேயே Achievements & Ranks புதிய விடயமாக இணைக்கப்பட்டிருந்ததால் அது இன்னமும் விதிமுறைகளில் உள்ளடக்கப்படவில்லை.

Achievements & Ranks பற்றி விளக்கத்தினை இங்கு சென்று வாசித்து அறிந்து கொள்ள முடியும். அது என்னமாதிரி இயங்கிக் கொள்ள வேண்டுமோ அதன்படியே இங்கும் இயங்குகின்றது. அதாவது default setting இலேயே தற்போது இயங்குகின்றது.

போதுமாள விளக்கங்கள் இதுவரை தந்ததால் இனி இது பற்றிய கேள்விக்கு பதிலளிக்கப் போவதில்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.