Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துப்பாக்கி முனையில்... தமிழ் அரசியல் கைதிகள் அச்சுறுத்தல் : அநுராதபுரம் சிறையில் அமைச்சர் அட்டகாசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கி முனையில் தமிழ் அரசியல் கைதிகள் அச்சுறுத்தல் : அநுராதபுரம் சிறையில் அமைச்சர் அட்டகாசம்

துப்பாக்கி முனையில்... தமிழ் அரசியல் கைதிகள் அச்சுறுத்தல் : அநுராதபுரம் சிறையில் அமைச்சர் அட்டகாசம்

அநுராதபுரம் சிறைகளுக்குச் சென்ற சிறைச்சாலைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை அச்சுறுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து இராஜாங்க அமைச்சர் அவர்களில் இருவரை தனக்கு முன்பாக மண்டியிடச் செய்தார் என்றும் அவர்களை நோக்கி துப்பாக்கியைக் காட்டி அந்த இடத்திலேயே கொன்றுவிடுவேன் என மிரட்டினார் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இராஜாங்க அமைச்சரின் இந்த மோசமான நடத்தையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கைதிகளின் விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய அமைச்சரே அவர்களைக் கொல்வதாக அச்சுறுத்துவது அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் பார்வை இலங்கை மீது இருக்கும்போதே இத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுகின்ற நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இதனை அவசரமாக எடுத்துச் செல்லாவிட்டால், தமிழர்களின் நிலை இன்னும் மோசமடையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2021/1239375

#############   #############    #############   ############

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும்  கூட்டமைப்புக்கும் இடையில் சந்திப்பு

லொஹான் ரத்வத்தவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் – கூட்டமைப்பு

தமிழ் அரசியல் கைதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் சிறைகளுக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் இரண்டு கைதிகளை மண்டியிடச் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிறைச்சாலைக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சரை உடன் பதவி நீக்க வேண்டும் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சிறையில் கைதிகளை கொலை செய்வதாக மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட்டு அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

https://athavannews.com/2021/1239381

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து, துப்பாக்கியால் மிரட்டினார் லொகான் ரத்வத்த!

September 14, 2021

spacer.png

அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து, அவர்களில் இருவரை மண்டியிடச் செய்து, துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தினார் என்பதனை தன்னால் உறுதிப்படுத்தமுடியும் என நாடாளுன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ருவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள கீச்சகப் பதிவில் உள்ளதாவது,

செப்டம்பர் 12ஆம் திகதி மாலை அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர், தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து, அவர்களில் இருவரை அவருக்கு முன்னால் மண்டியிட வைத்தார் என்பதை உறுதிப்படுத்த முடியும்.

இராஜாங்க அமைச்சர் அவர்களை நோக்கி தனது தனிப்பட்ட துப்பாக்கியைக் காட்டி அவர்களை அந்த இடத்திலேயே கொன்றுவிடுவதாக மிரட்டினார்.

இராஜாங்க அமைச்சரின் இந்த மோசமான நடத்தையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி மிகக் கடுமையான முறையில் கண்டிக்கிறது.

தமிழ் அரசியல் கைதிகள் ஏற்கனவே உலகிற்குத் தெரிந்த மிகக் கடுமையான சட்டங்களில் ஒன்றான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர். இன்னும் மோசமாக அவர்கள் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிலர் பத்தாண்டுக்கும் மேலாக அவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் மற்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படாமல் தடுப்பில் உள்ளனர்.

அவர்களின் விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய இராஜாங்க அமைச்சர் அவர்களைக் கொல்வதாக அச்சுறுத்துவது அவர்களின் அச்சத்தை மேலும் மோசமாக்க முடியாது.

அமைச்சரை உடனடியாக பதவி விலகச் செய்ய வேண்டும் மற்றும் அவரிடமிருந்து அனைத்து பதவிகளையும் பறிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்துகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் சபை பயனற்ற தன்மையைப் புரிந்துகொள்ளவும், பொறுப்புக்கூறலைத் தவிர்க்கும் கலையில் தேர்ச்சி பெற்ற ஒரு தயக்கமில்லாத அடங்காத அரசை ஒரு நிறுவனத்திற்குள் இலங்கையைக் கொண்டிருப்பதை அங்கத்துவ நாடுகளுக்கு
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டுகிறது.

ஐ.நா.மனித உரிமைகள் சபையின் பார்வை இலங்கை மீது இருக்கும் போது ஒரு அமைச்சர்
இப்படி நடந்து கொள்ள முடியும் என்பது, மனித உரிமைகள் சபையைப் பொறுத்தவரையில் அரசு எவ்வளவு கவலைப்படாமல் உள்ளது என்பதை மட்டுமே காட்டுகிறது.

இலங்கையை ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு அப்பால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு
அவசரமாக எடுத்துச் செல்லாவிட்டால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலை இன்னும் மோசமடையும் என்றுள்ளது.
 

https://globaltamilnews.net/2021/165995

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் கைதிகள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்-அருட்தந்தை மா.சத்திவேல்  கண்டனம்

September 15, 2021

Shakthivel அரசியல் கைதிகள் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல்-அருட்தந்தை மா.சத்திவேல்  கண்டனம்


 

 

“அரசியல் கைதிகளுக்கு துப்பாக்கி நீட்டி அச்சுறுத்தியது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகும்” என தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கும் செயலானது தமிழ் மக்களின் அரசியலுக்கு நேராக நீட்டப்பட்ட துப்பாக்கியாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுடைய தற்போதைய நிலவரம் குறித்து இன்று (15) அவரால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆரம்பிக்கும் சந்தர்ப்பத்தில் சிறைச்சாலைகளின் இராஜாங்க அமைச்சர் கடந்த 12 ஆம் திகதி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று அரசியல் கைதிகளை மண்டியிடச் செய்து தலையில் துப்பாக்கியை வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருக்கும் செயலானது தமிழ் மக்களின் அரசியலுக்கு நேராக நீட்டப்பட்ட துப்பாக்கியாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகவும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கருதுவதோடு இத்தகைய அனாகரிகமான செயலை மிகவும் வன்மையாகவும் கண்டிக்கின்றது.

இலங்கை மனித உரிமைக்கு மதிப்பு அளிக்கின்ற நாடு எனில் குறிப்பிட்ட அமைச்சரை அமைச்சுப் பதவியிலிருந்து உடனடியாக நீக்கி துரித விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை வழங்குவதோடு மனநல சிகிச்சையும் அளித்தல் வேண்டும். அதுவே இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு காட்டுகின்ற நல்லெண்ண சமிக்ஞையாக அமையும். இல்லையெனில் இது இலங்கை அரசும் ஐநா மனித உரிமைகள் பேரவைக்கெதிராக செயல்படுகின்றது என்பதை சுட்டி நிற்கும்.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பாகவும், இச்சட்டத்தால் நீண்ட காலம் சிறையில் வாடுவோரின் மனித உரிமை விடயமாகவும் ஆராய ஆட்சியாளர் குழு நியமித்து இருப்பதாக கூறுவது கேளிக்கூத்தாக அமையும். அது மட்டுமல்ல அரசின் பயங்கரவாத தடை சட்டம் தொடர்பான செயற்பாடு ஐ .நா மனித உரிமை பேரவையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே அமையும்.

குறிப்பிட்ட அமைச்சரின் செயல்பாடு நீண்டகாலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நம்பிக்கையற்ற நிலைக்கு தள்ளப்படுவதோடு வாழ்க்கையில் விரக்தி நிலையும் ஏற்பட்டு அத்தோடு உளவியல் ரீதியில் பாதிப்பையும் ஏற்படுத்தும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

சிறைச்சாலை கைதிகளை பாதுகாக்க வேண்டிய அமைச்சரே இவ்வாறான ஒரு செயலில் ஈடுபடுவதன் மூலம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெளிப்படுவதோடு அனைத்து அரசியல் கைதிகளையும் பாதுகாப்பு மிகுந்த தமிழர் பிரதேசங்களில் சிறைச்சாலைக்கு மாற்றி அவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதிகளை உடனடியாக பாதுகாப்பான தமிழர் பகுதிகளில் உள்ள சிறைச்சாலைக்கு மாற்றி பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும்.

இனவாத ஆட்சியாளர்கள் ஆசியாவின் அறிவாலயம் எரிந்து சாம்பலாக்கி இனப்படுகொலையுடனான இன அழிப்போடு நின்றுவிடாது அது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதற்கெல்லாம்

நீதி கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்நாட்டின் இனவாத அரசியல் தமிழ் மக்கள் இனிவரும் காலங்களிலும் அடக்கி ஒடுக்கும் என்பதற்கு இன்னுமொரு சாட்சி அரங்கேற்றப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒரே சக்தியாக நின்றால் மட்டுமே எமது எதிர்காலம் காக்கப்படும்.

இச் சம்பவத்தை கருத்திற்கொண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலையுடனான இன அழிப்பிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வழியேற்படுத்துமாறும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கொண்டு செல்லுமாறும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

https://www.ilakku.org/threats-at-gunpoint-to-political-prisoners/

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறைச்சாலைக்குள் புகுந்த அமைச்சரை கைது செய்க – சுமந்திரன் வலியுறுத்தல்

September 15, 2021

sumenthiran சிறைச்சாலைக்குள் புகுந்த அமைச்சரை கைது செய்க – சுமந்திரன் வலியுறுத்தல்

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் கைத் துப்பாக்கியுடன் உட்புகுந்த அமைச்சர் உடன் பதவி நீக்கப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

“விடுமுறை கொண்டாட்டம் ஒன்றிற்காக நண்பர்கள் சகிதம் சென்ற சிறைச்சாலைகள் நிர்வாகம் கைதிகள் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான, இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எமது தமிழ் அரசியல் கைதிகளை விளையாட்டு பொம்மைகளாக பயன்படுத்த அத்த சிறைச்சாலை அதிகாரி அனுமதி வழங்கியுள்ளார்.

அதனால் இரு அரசியல் கைதிகளை தன் முன்நிலையில் முழங்காலிட வைத்த இராஜாங்க அமைச்சர் அவர்களது தலையில் கைத்துப்பாக்கியை வைத்துள்ளார்.

இந்த நாட்டில் சிறைச்சாலை அட்டூழியம் ஒன்றும் புதிதல்ல அதனை எந்த அரசும் காலம் காலமாக மேற்கொண்டே வந்துள்ளன. இதன் வெளிப்பாடாகவே அமைச்சர் மதுபோதையில் துப்பாக்கியுடன் சிறைச்சாலைக்குள் சென்று கைதிகள் மீது துப்பாக்கியை வைத்துள்ளார். எனவே  அமைச்சரையும் அவரது கூட்டத்தையும் கைது செய்வதற்கு பதிலாக  அதிகாரிகளும் காவலர்களும் அமைச்சருக்கு சாமரம் வீசுவதில் கவனம் செலுத்தினரா என்ற ஐயமும் எழுகின்றது.

ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வு ஆரம்பமாகியுள்ள நேரத்தில் திட்டமிட்ட வகையில் குழப்பத்தை ஏற்படுத்தி திசை திருப்பும் முயற்சியா இது என்ற சந்தேகமும் எழுவதனால் குறித்த அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு இதற்கு துணைபோன அதிகாரிகள், ஆயுதங்களுடன் உட் செல்ல அனுமதித்த காவலர்களும் கைது செய்யப்பட வேண்டும் என சுமந்திரன் அரசாங்கத்தைக் கோரினார்.
https://www.ilakku.org/arrest-the-minister-who-broke-into-the-prison-m-a-sumanthiran/

 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வு ஆரம்பமாகியுள்ள நேரத்தில் திட்டமிட்ட வகையில் குழப்பத்தை ஏற்படுத்தி திசை திருப்பும் முயற்சியா இது என்ற சந்தேகமும் எழுவதனால் குறித்த அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு இதற்கு துணைபோன அதிகாரிகள், ஆயுதங்களுடன் உட் செல்ல அனுமதித்த காவலர்களும் கைது செய்யப்பட வேண்டும் என சுமந்திரன் அரசாங்கத்தைக் கோரினார்.

சுமந்திரன் தெரிவித்துள்ள இந்தக் கூற்று அரசுக்குப் பாதகம் ஏற்படுவதை விரும்பாமல் அதனைத்  தடுக்கும்  முயற்சிபோலவே தென்படுகிறது.

ஒருவேளை இராசாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை எதிர்க்கட்சிக்கு மாறத் திட்டமிட்டு உள்ளாரோ....??

  • கருத்துக்கள உறவுகள்

சிறைக்குள் துப்பாக்கியை காட்டி இரு கைதிகளை மண்டியிடச் செய்து அச்சுறுத்திய விவகாரம் : பதவியை இராஜிநாமா செய்தார் லொஹான் ரத்வத்தை

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவரது இராஜிநாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபத ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

http://www.newswire.lk/wp-content/uploads/2021/09/FB_IMG_1631694130912.jpg

வெலிக்கடை மற்றும் அநுராதபுரம் ஆகிய சிறைச்சாலைகளில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு விவகார இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார். 

தனது இராஜினாமா பற்றி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம்  இன்றைய தினம் (15) அவர் அறிவித்த நிலையில், ஜனாதிபதியும் அவருடைய இராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

இதேவேளை முன்னதாக பிரதமர் ராஜாக்ஷ இத்தாலியிலிருந்து தொலைபேசி அழைப்பு மூலமாக இராஜாங்க அமைச்சரை தொடர்பு கொண்டு, தனது திணைக்களத்திலிருந்து உடனடியாக விலகுமாறு வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செப்டம்பர் 12 ஆம் திகதி மாலை அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து, அவர்களில் இருவரை அவருக்கு முன்னால் மண்டியிட வைத்து, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது.

சிறைக்குள் துப்பாக்கியை காட்டி இரு கைதிகளை மண்டியிடச் செய்து அச்சுறுத்திய விவகாரம் : பதவியை இராஜிநாமா செய்தார் லொஹான் ரத்வத்தை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய அமைச்சர் பதவி விலகல்

அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, எழுந்த கண்டனங்களினால் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார்.

தான் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடுத்து, அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாத நோக்கில், இன்று முதல் தனது சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சு பொறுப்பை ராஜினாமா செய்வதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள பதவி விலகல் கடிதத்தில் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் நடந்தது என்ன?

அநுராதபுரம் சிறைச்சாலையில் தனது சகாக்களுடன் சென்ற சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதியை முழந்தாளிடச் செய்து, அவரது தலையில் துப்பாக்கி வைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த சம்பவம் கடந்த 12ம் தேதி இரவு வேளையில் இடம்பெற்றதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

தனது தனிப்பட்ட துப்பாக்கியை காண்பித்து, தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்வதாக அச்சுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் கூறியிருந்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மிக நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால், அவர்கள் பெரும் அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

மஹிந்த ராஜபக்ஷ

சில தமிழ் அரசியல் கைதிகள் பல தசாப்தங்களாக எந்தவித ஆதாரங்களும் இல்லாமலும், குற்றச்சாட்டுக்கள் இல்லாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினால் வெளியிடப்பட்ட இந்த பதிவை அடுத்து, பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பை வெளியிட ஆரம்பித்திருந்தனர்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமை செயற்பட்டாளர்கள் என பலரும் தமது எதிர்ப்பை வெளியிட ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில், அதிகாரபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இத்தாலி சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தொலைபேசியூடாக லொஹான் ரத்வத்தவை தொடர்புக் கொண்டு, பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளார்.

சிறை கம்பி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த நிலையில், லொஹான் ரத்வத்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு, தனது பதவி விலகல் கடிதத்தை இன்று அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை

வெலிகடை மற்றும் அநுராதபுரம் சிறைச்சாலை வளாகத்தில் தன்னால் நடத்தப்பட்ட சம்பவத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றின் ஊடாக இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள நிலையில், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

இலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய அமைச்சர் பதவி விலகல் - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது சிங்களவர்களை நம்ப முடியாது அமைச்சர்களையும் நம்ப முடியாது ஆட்டுவித்தான் யாரொருவர் 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பவ இடத்தில் புஷ்பிகா டி சில்வாவும் கூடவே இருந்தவ என்கிறார்கள் சொறிலங்கா அழகிக்கு அங்கு என்ன வேலை ?

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

சம்பவ இடத்தில் புஷ்பிகா டி சில்வாவும் கூடவே இருந்தவ என்கிறார்கள் சொறிலங்கா அழகிக்கு அங்கு என்ன வேலை ?

என்ன பெருமாள் ஐயா செல் அழகிகள் என்று கேள்விப்பட்டதில்லையா  செல்லுக்கும் போய் வருவார்கள் இலங்கை நாடே அதிசயமான நாடு ஐயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா கண்டனம்

கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் குறித்து ஐ.நா. அதிருப்தி!

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி வௌியிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கம் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சிறைக்கைதிகள் தவறான முறையில் நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள அவர், தேசத்தின் கடமை கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பது என்றும் அவர் தனது ருவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2021/1239508

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

சம்பவ இடத்தில் புஷ்பிகா டி சில்வாவும் கூடவே இருந்தவ என்கிறார்கள் சொறிலங்கா அழகிக்கு அங்கு என்ன வேலை ?

லொஹானுடன் தொடர்பு; புஷ்பிகா மறுப்பு

வெலிக்கடை சிறை வளாகத்தில் லொஹான் ரத்வத்தே உடன் தான் இருந்தாக வெளியான செய்தியை திருமதி இலங்கை அழகி புஷ்பிகா டி சில்வா மறுத்துள்ளார்.

"என் பெயர் தேவையில்லாமல் இதில் இழுக்கப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இராஜாங்க அமைச்சருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, அவரை எனக்கு தெரியாது" என்று புஷ்பிகா, டெய்லி மிரரிடம் கூறினார்.


  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

என்ன பெருமாள் ஐயா செல் அழகிகள் என்று கேள்விப்பட்டதில்லையா  செல்லுக்கும் போய் வருவார்கள் இலங்கை நாடே அதிசயமான நாடு ஐயா

செல் அழகியா? செல்வாக்கான அழகியா?!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

செல் அழகியா? செல்வாக்கான அழகியா?!

செல்வாக்கான அழகி சில நேரங்களில் செல் அழகியாகவும் மாறுவதுண்டு ஐயா😊😊

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, பிழம்பு said:

இராஜாங்க அமைச்சருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, அவரை எனக்கு தெரியாது"

நம்புறோம். இலங்கையின் மிகப்பெரிய நகைச்சுவை. எதையோ மறைக்க முயற்சிக்கிறா பெரிய பொய்யைச்சொல்லி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.