Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவங்களுக்கு இல்லாமல் போயிடப்போதே ........ என்ன ஒரு அழகான பதில் . ......!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஒரே தலைவலி... மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான். உனது ‘ஓனர்’ எங்கேப்பா என்று கேட்டேன். அவருக்குச் சரியான தலைவலி.. அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன். என் கையிலிருந்த தலைவலி மாத்திரை ஸ்டிரிப் என்னைப் பார்த்து ‘ஙே’ என்று விழித்தது..

அம்மாவுக்கு பிபியும் (BP) ஷுகரும் ஏறி விட்டது. ஆகவே அலறி அடித்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க காலையிலேயே அம்மாவுடன் கிளம்பினேன். டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம். அம்மாவை செக் பண்ணிப் பார்த்த டாக்டர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை பகன்றார். அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட சீட்டை வாங்கிக் கொண்டேன். ஒரு ஆவல் உந்த, “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன். 15 வருடமாகச் செய்து வருவதாகவும் அதனால் தான் பிபி, ஷுகர் இல்லாத ஆரோக்கிய வாழ்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். பிபி, ஷுகரைக் குறைக்க அவர் எழுதித் தந்த நீண்ட மாத்திரை சீட்டைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று என்னைப் பார்த்து விழித்தது.

மனைவியின் தலைமுடி கோரமாக ஆகிக் கொண்டிருப்பதாக அவளுக்கு ஒரு உணர்வு. "சரி, வா பியூட்டி பார்லர் போவோம்" என்றேன். நமது நலனைக் கருதி பல்வேறு பேக்கேஜ்கள் நமக்கு உகந்ததாக இருப்பதாக ரிஸப்ஷனிஸ்ட் அன்புடன் சொன்னாள். 1200 ரூபாயில் ஆரம்பம்.. 3000 ரூபாய் வரை போகிறது லிஸ்ட். பேரம் பேசி 3000 ரூபாய் பேக்கேஜை 2400'க்கு முடித்தேன். (அட, என்ன எனது சாமர்த்தியம் பார்த்தீர்களா?)

மனைவியின் கேசத்தைக் கோதி விட்டுக் கொண்டிருந்த பெண்மணியின் தலை முடி அழகாக இருந்ததோடு கம கமவென ஒரு நறுமணமும் அதிலிருந்து வந்தது. ‘அட, நல்ல வாசனையாக இருக்கிறதே’, என்று அவளைப் பாராட்டினேன். அவள் நன்றி தெரிவித்ததோடு, காலம் காலமாக அனைவரும் உபயோகித்து வரும் சம்பிரதாயமான எண்ணெயைத் தான் சூடத்தைக் கலந்து உபயோகித்து வருவதாகவும் அதனால் முடி நீண்டு அழகாக இருப்பதாகவும் தெரிவித்தாள். 2400 ரூபாய்க்கு பேரம் பேசிய என்னைப் பார்த்து என் மனைவி விழிக்க அவளைப் பார்த்து நான் விழித்தேன்.

நெருங்கிய உறவினருக்கு பெரிய பண்ணை ஒன்று உண்டு. அதில் அயல்நாட்டு கறவைப் பசுக்கள் 150 ஐ அவர் வளர்த்து வந்தார். அவை தரும் பாலைக் கறந்து எடுத்து மெஷின்களில் வைத்துப் பாதுகாத்து வெளிச் சந்தையில் நல்ல விலைக்கு அவர் விற்று வந்தார். அதே பண்ணையில் தொலைவில் இரண்டு நமது உள்ளூர் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ‘அது எதற்காக’, என்று கேட்டேன். அது குடும்பத்தினரின் உபயோகத்திற்குத் தேவைப்படும் நெய், பால் ஆகியவற்றிற்காக வளர்க்கப்படுவதாகவும் அதைத் தவிர வேறு எந்த நெய், பாலையும் தங்கள் குடும்பத்தினர் உபயோகிப்பதில்லை என்றும் அவர் சொன்னார். பிராண்டட் மில்க் சாப்பிடுவோரை நினைத்துக் கொண்டே நமது தேசீயப் பசுக்களைக் கையெடுத்துக் கும்பிட்டேன்.

ஒருநாள் மதிய உணவிற்குப் புகழ் பெற்ற உணவு விடுதிக்குக் குடும்பத்தோடு சென்றேன்.

சாப்பிட்டு முடிந்தவுடன் பில்லை நீட்டிய மானேஜர், “சாப்பாடு எப்படி சார் இருந்தது? பசு நெய், சுத்தமான ஆயில், பாஸ்மதி அரிசி மட்டும் தான் நாங்கள் உபயோகிக்கிறோம். அடிக்கடி வாருங்கள்” என்று சொன்னார். அத்துடன் தன் கேபினுக்கு அழைத்து தனது விஸிடிங் கார்டையும் கொடுத்தார்.

அங்கிருந்த டிபன் கேரியரை நான் பார்த்தேன். அப்போது ஹோட்டல் பணியாளர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டதையும் கேட்டேன். "சுனில், சாரோட டிபன் பாக்ஸை எடுத்து தனியே வை. அவர் சாப்பிட வர இன்னும் பத்து நிமிடமாகும்” அவரைப் பார்த்து நான் கேட்டேன், “ஏன், உங்கள் சார் இந்த ஹோட்டலிலேயே சாப்பிட மாட்டாரா?”

“ஊஹூம்.. ஒருபோதும் சாப்பிட மாட்டார். அவருக்கு வீட்டு சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்”. என் கையில் இருந்த 1670 ரூபாய் பில்லைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று விழித்தது.

அடடா, இது மாதிரி எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன. சில சமயம் சிரிப்பாய் இருக்கிறது; சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறது.. இந்த மல்டி நேஷனல் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டு வாழ்கையை நடத்துபவர்களாக நாம் ஆகி விட்டோமா என்று தோன்றுகிறது. நம்மை ஏடிஎம் மெஷினாக அவர்கள் ஆக்கி விட்டார்கள். தேவைப்படும் போது நம்மிடமிருந்து பணத்தைப் பெருமளவில் கறக்கிறார்கள்.

இதில் ரகசியம் என்னவென்றால்...

அவர்கள் விற்கும் பொருள்களை அவர்கள் ஒரு நாளும் நுகர்வதில்லை; அவர்கள் குடும்பத்தினருக்கோ அதைக் காண்பிப்பது கூட இல்லை. நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தோமானால் நமக்கு செலவுக்குச் செலவும் மிச்சம்; ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் அற்புதமாக நிலைத்து நீடித்திருக்கும்..

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be an image of 2 people and text

யாரும் கண்டுபிடிக்கக் கூடாது என்று கஸ்ரமான "பாஸ்வேட்" போட்டு வைத்தேன்.
இப்ப அதை... என்னாலேயே, கண்டு பிடிக்க முடியாமல் இருக்கு. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏண்டி இவன் தான் உன் கள்ளக் காதலனா!

ஏண்டி என்ன தைரியம் இருந்தா உன் கள்ளக் காதலனை வீட்டுக்கே கூட்டி வந்து இருப்ப! பாக்க பிச்சைக்காரன் மாதிரி இருக்கான். என்னடி உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு!

மூ...வி மூ.வி! குடிச்சா உனக்கு கண்ணு மண்ணு தெரியாது ! கண்ணாடி முன்னாடி நின்று உளராமல் பேசாம தூங்கு சரியா?

main-qimg-744ddfbd0756dbba09820a33f08d8a78

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

srikka-sin.jpg

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • அசோக்க ரன்வலவின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை 11 DEC, 2024 | 05:39 PM (நமது நிருபர்)  பாராளுமன்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்தின் விபரத் திரட்டு கோவையில் சபாநாயகர் அசோக்க ரன்வலவின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டமை தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ளக மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. சபாநாயகர் அசோக்க ரன்வல தனது கலாநிதி பட்டத்தின் சான்றிதழை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும், அல்லது தவறை ஏற்றுக்கொண்டு கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும்.  நாட்டின் மூன்றாம் பிரஜையாக கருதப்படும் சபாநாயகர் ஒட்டுமொத்த மக்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது உத்தியோகபூர்வ முகப்பு புத்தகத்தில் கடந்த வாரம் ' சபாநாயகர் தனது கலாநிதி பட்டம் தொடர்பான விபரங்களை பகிரங்கப்படுத்த வேண்டும். இல்லையேல் பதவி விலக வேண்டும்' என பதிவேற்றம் செய்திருந்தார். அதேபோல் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன்னின்று செயற்பட்ட ஒருசில பேராசியிர்கள் மற்றும் சிவில் அமைப்பினர்கள் சபாநாயகரின் கலாநிதி பட்டத்தை சவாலுக்குட்படுத்தி தமது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் கேள்வியெழுப்பியிருந்தனர். இவ்வாறான பின்னணில் பொது நிகழ்வில் ஒன்றில் கலந்துக் கொண்டிருந்த சபாநாயகர் அசோக்க ரன்வலவிடம் இவ்விடயம் குறித்து ஊடகங்கள் வினவிய போது தன்னிடம் இரண்டு கலாநிதி பட்டங்கள் இருப்பதாகவும், முன்வைக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தற்போது பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.  சபாநாயகரின் கலாநிதி பட்டம் அரசியல் களத்தில் பிரதான பேசுபொருளானதன் பின்னர் பாராளுமன்ற உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் பாராளுமன்றத்தில் விபரகோவை பகுதியில் 'கலாநிதி கௌரவ அசோக்க ரன்வல' என்ற பதிவு நீக்கப்பட்டு 'கௌரவ சபாநாயகர் அசோக்க ரன்வல' என்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. சபாநாயகராக அசோக ரன்வல்ல தெரிவு செய்யப்பட்டமை குறித்து பாராளுமன்ற ஊடக பிரிவு 2024.11.21 ஆம் திகதியன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் 'அசோக்க ரன்வெல, மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தொடர்பில் இரசாயனவியல் தொடர்பான பொறியியல் பட்டத்தையும், ஜப்பானின் வஷேடா பல்கலைக்கழகத்தில் உயிரியல் தொடர்பில் கலாநிதி பட்டத்தை முழுமைப்படுத்தியுள்ளதாக' குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் கேள்வியெழுப்பியதை தொடர்ந்து ஒன்று சபாநாயகர் தனது கலாநிதி பட்டத்துக்கான சான்றிதழை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர். சபாநாயகர் அசோக்க ரன்வல ஜப்பான் பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்ததாக குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.நாட்டு மக்களுக்கு தவறான கல்வி தகைமையை குறிப்பிட்டுள்ளமை ஒழுக்கமற்றது. ஆகவே சபாநாயகர் உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்.  நாட்டின் மூன்றாம் பிரஜையாக கருதப்படும் சபாநாயகர் நாட்டு மக்களுக்கு உண்மையுடன் சிறந்த எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் சபாநாயகர் தொடர்பான விபர படிவத்தில் சபாநாயகரின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பாராளுமன்றத்தின் உள்ளக மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. கல்வி தகைமை குறித்து இன்னும் ஓரிரு தினங்களின் சபாநாயகர் அறிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201001
    • கனடாவுக்குள் என்ன செய்யவேண்டுமென்று அமெரிக்காவுடன் கனடிய அரசு போய் பேசுமா? இங்கிலாந்துக்குள் என்ன செய்ய வேண்டுமென்று ஜேர்மனியுடன் போய் பிரிட்டன் அரசு இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துமா? பிராந்திய வல்லரசுக்கு அடிபணிந்து வாழ்ந்தாலும் வாழ்வோமேயொழிய தமிழர்களுக்கு எந்த உரிமையும் கொடுக்கமாட்டோம் என்று வாழும் ஆணவ நிலை தொடரும்வரை உன்னுடைய வீட்டுக்குள் நீ எப்படி குடும்பம் நடத்த வேண்டுமென்று பக்கத்து வீட்டுக்காரன்    கட்டளை போடும் அவலநிலை தொடர்ந்தே தீரும்
    • கரிணி அம்மா எங்கை இடம்மென்று சொல்லவில்லைத்தானே...அதலை இந்தியா தப்பிச்சிடுத்து
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.