Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களுக்கு இல்லாமல் போயிடப்போதே ........ என்ன ஒரு அழகான பதில் . ......!  😂

  • Replies 917
  • Views 135.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே தலைவலி... மருந்துக் கடைக்குச் சென்றேன். மருந்துக் கடையில் இருந்த வேலைக்காரப் பையன் தலைவலிக்கான மாத்திரை ஸ்டிரிப் ஒன்றைத் தந்தான். உனது ‘ஓனர்’ எங்கேப்பா என்று கேட்டேன். அவருக்குச் சரியான தலைவலி.. அதோ அந்தக் காப்பிக் கடையில் காப்பி சாப்பிடப் போயிருக்கிறார் என்றான் அவன். என் கையிலிருந்த தலைவலி மாத்திரை ஸ்டிரிப் என்னைப் பார்த்து ‘ஙே’ என்று விழித்தது..

அம்மாவுக்கு பிபியும் (BP) ஷுகரும் ஏறி விட்டது. ஆகவே அலறி அடித்துக் கொண்டு டாக்டரைப் பார்க்க காலையிலேயே அம்மாவுடன் கிளம்பினேன். டாக்டர் யோகா செய்து கொண்டிருந்தார். முக்கால் மணி நேரம் காத்திருந்தோம். அம்மாவை செக் பண்ணிப் பார்த்த டாக்டர் மருந்துகளை இன்னும் கொஞ்சம் அதிகப் படுத்த வேண்டும் என்றும் வேளாவேளைக்குச் சரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை பகன்றார். அவர் எழுதித் தந்த அதிகப்படியான 5, 6 மாத்திரைகள் கொண்ட சீட்டை வாங்கிக் கொண்டேன். ஒரு ஆவல் உந்த, “டாக்டர், நீங்கள் யோகா செய்கிறீர்களா?” என்று கேட்டேன். 15 வருடமாகச் செய்து வருவதாகவும் அதனால் தான் பிபி, ஷுகர் இல்லாத ஆரோக்கிய வாழ்வைக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார். பிபி, ஷுகரைக் குறைக்க அவர் எழுதித் தந்த நீண்ட மாத்திரை சீட்டைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று என்னைப் பார்த்து விழித்தது.

மனைவியின் தலைமுடி கோரமாக ஆகிக் கொண்டிருப்பதாக அவளுக்கு ஒரு உணர்வு. "சரி, வா பியூட்டி பார்லர் போவோம்" என்றேன். நமது நலனைக் கருதி பல்வேறு பேக்கேஜ்கள் நமக்கு உகந்ததாக இருப்பதாக ரிஸப்ஷனிஸ்ட் அன்புடன் சொன்னாள். 1200 ரூபாயில் ஆரம்பம்.. 3000 ரூபாய் வரை போகிறது லிஸ்ட். பேரம் பேசி 3000 ரூபாய் பேக்கேஜை 2400'க்கு முடித்தேன். (அட, என்ன எனது சாமர்த்தியம் பார்த்தீர்களா?)

மனைவியின் கேசத்தைக் கோதி விட்டுக் கொண்டிருந்த பெண்மணியின் தலை முடி அழகாக இருந்ததோடு கம கமவென ஒரு நறுமணமும் அதிலிருந்து வந்தது. ‘அட, நல்ல வாசனையாக இருக்கிறதே’, என்று அவளைப் பாராட்டினேன். அவள் நன்றி தெரிவித்ததோடு, காலம் காலமாக அனைவரும் உபயோகித்து வரும் சம்பிரதாயமான எண்ணெயைத் தான் சூடத்தைக் கலந்து உபயோகித்து வருவதாகவும் அதனால் முடி நீண்டு அழகாக இருப்பதாகவும் தெரிவித்தாள். 2400 ரூபாய்க்கு பேரம் பேசிய என்னைப் பார்த்து என் மனைவி விழிக்க அவளைப் பார்த்து நான் விழித்தேன்.

நெருங்கிய உறவினருக்கு பெரிய பண்ணை ஒன்று உண்டு. அதில் அயல்நாட்டு கறவைப் பசுக்கள் 150 ஐ அவர் வளர்த்து வந்தார். அவை தரும் பாலைக் கறந்து எடுத்து மெஷின்களில் வைத்துப் பாதுகாத்து வெளிச் சந்தையில் நல்ல விலைக்கு அவர் விற்று வந்தார். அதே பண்ணையில் தொலைவில் இரண்டு நமது உள்ளூர் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ‘அது எதற்காக’, என்று கேட்டேன். அது குடும்பத்தினரின் உபயோகத்திற்குத் தேவைப்படும் நெய், பால் ஆகியவற்றிற்காக வளர்க்கப்படுவதாகவும் அதைத் தவிர வேறு எந்த நெய், பாலையும் தங்கள் குடும்பத்தினர் உபயோகிப்பதில்லை என்றும் அவர் சொன்னார். பிராண்டட் மில்க் சாப்பிடுவோரை நினைத்துக் கொண்டே நமது தேசீயப் பசுக்களைக் கையெடுத்துக் கும்பிட்டேன்.

ஒருநாள் மதிய உணவிற்குப் புகழ் பெற்ற உணவு விடுதிக்குக் குடும்பத்தோடு சென்றேன்.

சாப்பிட்டு முடிந்தவுடன் பில்லை நீட்டிய மானேஜர், “சாப்பாடு எப்படி சார் இருந்தது? பசு நெய், சுத்தமான ஆயில், பாஸ்மதி அரிசி மட்டும் தான் நாங்கள் உபயோகிக்கிறோம். அடிக்கடி வாருங்கள்” என்று சொன்னார். அத்துடன் தன் கேபினுக்கு அழைத்து தனது விஸிடிங் கார்டையும் கொடுத்தார்.

அங்கிருந்த டிபன் கேரியரை நான் பார்த்தேன். அப்போது ஹோட்டல் பணியாளர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டதையும் கேட்டேன். "சுனில், சாரோட டிபன் பாக்ஸை எடுத்து தனியே வை. அவர் சாப்பிட வர இன்னும் பத்து நிமிடமாகும்” அவரைப் பார்த்து நான் கேட்டேன், “ஏன், உங்கள் சார் இந்த ஹோட்டலிலேயே சாப்பிட மாட்டாரா?”

“ஊஹூம்.. ஒருபோதும் சாப்பிட மாட்டார். அவருக்கு வீட்டு சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும்”. என் கையில் இருந்த 1670 ரூபாய் பில்லைப் பார்த்தேன். அது ‘ஙே’ என்று விழித்தது.

அடடா, இது மாதிரி எனக்குப் பல அனுபவங்கள் ஏற்பட்டு விட்டன. சில சமயம் சிரிப்பாய் இருக்கிறது; சில சமயம் சிந்திக்கவும் வைக்கிறது.. இந்த மல்டி நேஷனல் கம்பெனிகளால் உருவாக்கப்பட்டு வாழ்கையை நடத்துபவர்களாக நாம் ஆகி விட்டோமா என்று தோன்றுகிறது. நம்மை ஏடிஎம் மெஷினாக அவர்கள் ஆக்கி விட்டார்கள். தேவைப்படும் போது நம்மிடமிருந்து பணத்தைப் பெருமளவில் கறக்கிறார்கள்.

இதில் ரகசியம் என்னவென்றால்...

அவர்கள் விற்கும் பொருள்களை அவர்கள் ஒரு நாளும் நுகர்வதில்லை; அவர்கள் குடும்பத்தினருக்கோ அதைக் காண்பிப்பது கூட இல்லை. நமது பாரம்பரிய பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தோமானால் நமக்கு செலவுக்குச் செலவும் மிச்சம்; ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும் அற்புதமாக நிலைத்து நீடித்திருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

யாரும் கண்டுபிடிக்கக் கூடாது என்று கஸ்ரமான "பாஸ்வேட்" போட்டு வைத்தேன்.
இப்ப அதை... என்னாலேயே, கண்டு பிடிக்க முடியாமல் இருக்கு. 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஏண்டி இவன் தான் உன் கள்ளக் காதலனா!

ஏண்டி என்ன தைரியம் இருந்தா உன் கள்ளக் காதலனை வீட்டுக்கே கூட்டி வந்து இருப்ப! பாக்க பிச்சைக்காரன் மாதிரி இருக்கான். என்னடி உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு!

மூ...வி மூ.வி! குடிச்சா உனக்கு கண்ணு மண்ணு தெரியாது ! கண்ணாடி முன்னாடி நின்று உளராமல் பேசாம தூங்கு சரியா?

main-qimg-744ddfbd0756dbba09820a33f08d8a78

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

srikka-sin.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையை நன்கு துவங்கிட வேண்டிய கதைகள்:

1. நோக்கியா ஆண்ட்ராய்டை நிராகரித்தது

2. yahoo Google ஐ நிராகரித்தது

3. கோடாக் டிஜிட்டல் கேமராக்களை நிராகரித்தது

வாழ்க்கை பாடங்கள்:

1. வாய்ப்புகளை தவற விடாதீர்கள்

2. மாற்றத்தைத் தழுவுங்கள்

3. கால ஓட்டத்திற்கு ஏற்ப நீங்கள் மாற மறுத்தால், நீங்கள் காலாவதியாகிவிடுவீர்கள்

மேலும் இரண்டு கதைகள்:

1. Facebook whatsapp மற்றும் instagram ஐ கைப்பற்றுகிறது

2. தென்கிழக்கு ஆசியாவில் உபெர் நிறுவனத்தை கிராப் கைப்பற்றுகிறது

மேலும் பாடங்கள்:

1. உங்கள் போட்டியாளர்கள் உங்கள் கூட்டாளிகளாக மாறும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக மாறுங்கள்

2. முன்னேறி சென்று போட்டியை அகற்றுங்கள்.

3. புதுமைகளைத் தொடருங்கள்

மேலும் இரண்டு கதைகள்:

1. கர்னல் சாண்டர்ஸ் 65 இல் KFC ஐ நிறுவினார்

2. கேஎஃப்சியில் வேலை கிடைக்காத ஜாக் மா, அலிபாபாவை நிறுவி 55 வயதில் ஓய்வு பெற்றார்.

மேலும் பாடங்கள்:

1. வயது என்பது வெறும் எண்

2. தொடர்ந்து முயற்சி செய்பவர்களே வெற்றி பெறுவார்கள்

இறுதியாக:

ஃபெராரி நிறுவனர் என்சோ ஃபெராரியால் அவமதிக்கப்பட்ட டிராக்டர் உற்பத்தியாளரின் பழிவாங்கலின் விளைவாக லம்போர்கினி நிறுவப்பட்டது.

பாடங்கள்:

யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், எப்போதும்!

✔️ கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள்

✔️ உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்

✔️ தோல்விக்கு பயப்பட வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

469839423_968176298680134_48962971261181

சாப்பிட்ட தட்டை கழுவுங்கள் (நீங்கள்)
சாப்பிட்ட தட்டை கழுவ கற்றுக் கொடுங்கள்....
(உங்கள் உங்கள் பிள்ளைக்கு)
இது எனது அப்பாவின் பழக்கம். அவர் சாப்பிட தட்டை அவரே எடுத்து கழுவி வைத்து விடுவார்.
"அப்பா இருக்கட்டும் நானே கழுவுறேன்"
என்று சொல்லியும் கேட்பதில்லை.
"ஏன் அப்பா ஒரு தட்டு தானே நான் கழுவ மாட்டானா " என்று கேட்டேன்.
"இல்ல... இது என் தந்தை எனக்கு சொல்லி கொடுத்தது".
மூன்று வேலை சாப்பிடுறோம்னு வச்சுக்குவோம் அப்போ ஒரு நாளைக்கு 3 தட்டு அப்போ ஒரு மாசத்துக்கு 90 தட்டு ஒருத்தருக்காக எங்க அம்மா கழுவ வேண்டிருக்கு. நாங்களோ எங்க அப்பாவுக்கு 4 குழந்தை அப்போ எங்க அம்மா எங்க நாலு பேருக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு 4 * 90 = 360 தட்டு கழுவனும்.
நம்ம சாப்பிட தட்ட நாமே கழுவுனா எவ்ளோ வேலை சுமை அம்மாவுக்கு குறையும்னு எங்க அப்பா கேட்டதுல இருந்து தட்ட நானே கழுவ ஆரம்பிச்சுட்டேன் என்றார்...
சில வீடுகளில் ஆண்கள் சாப்பிட தட்டை அப்படியே வைத்து விட்டு எழுந்து விடுவார்கள்....
மனைவிதான் கழுவி வைப்பாள். அதில ஒரு பெருமை. இதுல என்ன இருக்கோ தெரியாது...
முடிந்தவரை தான் சாப்பிட தட்டை தானே கழுவுங்கள். நேரம் கிடைக்கையில் உதவி செய்யுங்கள்.
பாத்திரம் கழுவுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை இது என்னுடைய அனுபவம்,...
(வீட்டைக் கட்டிப் பார்..
கல்யாணம் முடித்து பார்)
என்பது ஒரு பழமொழி..
. இந்த பழமொழியோட உன் வீட்டில் பாத்திரத்தை கழுவிப் பார்.
என்றும் சேர்த்து கொள்ளலாம்.
சமையல் கூட ஈசியாக செய்து முடித்துவிடலாம் ஆனால் பாத்திரங்கள் கழுவது என்றால் அது ஒரு பெரிய சுமை..
ஆண்கள் உங்கள் வீட்டில் ஒரு நாள் பாத்திரத்தை கழுவி பாருங்கள்....
பெண்களின் நிலை உங்களுக்கு நன்றாகவே புரியும்...
படித்த பதிவு சற்று எனது கருத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளேன்.
..ஆம் !மனிதநேயம் மற்றும் சமத்துவம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது........!  👍
 
கந்த கணேசதாஸக் குருக்கள்
  • கருத்துக்கள உறவுகள்

470220179_1004269215051798_7851195191144

இலங்கையில் தற்போது வடக்கிலும் தெற்கிலும் உச்சரிக்கப்படும் ஒரே சொல் !
  • கருத்துக்கள உறவுகள்

main-qimg-ba41541bc9e1f8948c900fad6e811b59

 

நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !

ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள். வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும், அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தார்.

போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள். சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய். சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன். இப்படியாக அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறார். இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்..

அவர் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது "அது மட்டுமில்லை.. கூடவே ஒரு 10 கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன். அப்பொழுது தானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும்.

சரி.. உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள், என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்" என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார். சொல்லி முடித்தவுடன் மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது அந்தப் பணக்காரரின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து, டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது.

அவ்வளவுதான்.. அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர். இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம் எவன் இதில் ஜெயிக்கிறான்னு? நிச்சயமா எவனாலும், முடியாது என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர்.

அப்பொழுது திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம் அத்தனை பேரும் மூச்சுக்கூட விட மறந்து உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர்.

அந்த இளைஞன்.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி.. விலகி.. மிக வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறி

வெடவெடவென நின்றான்.

பணக்காரரால், தன் கண்களை நம்பமுடியவில்லை. "பிரமாதம்.. நான் தருவதாக சொன்ன விஷயங்களுக்கும் மேல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நான் தருகிறேன் எதுவாக இருந்தாலும்". அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை. வாய் தந்தியடித்தது, மிரட்சியில்

கண்கள் அரண்டு போய் இருந்தது. பின், ஒருவித வெறியுடன் "அதெல்லாம் இருக்கட்டும்.. என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்.." என்றான்.

சரி இப்ப நல்ல கருத்துக்களை பார்ப்போம்!

1 :முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை.. உன் திறமை என்னவென்று,உனக்கே தெரியாது.. (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான் என்பதும் புரியவரும்.)

2 :உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள் உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே.. (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே..)

3 :சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும்.

4 :சிலருக்கு.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே, அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது. (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும், பெற்றோரை நம்புங்கள்..)

 
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of wedding cake and text

"கேக்"கில் உள்ள ஆண்டுகளை கவனிக்கவும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

only-sin.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நாள் பார்த்து வாடகை வீட்டை காலி செய்து விட்டு சொந்த வீட்டுக்கு குடி போகலாம் என்று நாள் குறித்தான்!

சொந்தங்கள், பந்தங்கள் , நட்புகள் எல்லாவற்றையும் குறித்த நாளில் வர சொல்லி இருந்தான்!

அவன் கெட்ட நேரம் அவன் வீடு கட்டி இருந்த இடத்தில் நிலை நடுக்கம் வந்து வீடு தரைமட்டம் ஆனது!

புது மனை வீட்டுக்கு வந்திருந்த அனைவரும் இடிந்த வீட்டிற்கு முன் அதிர்ச்சியில் சோகமாக நிற்க!

அவனோ! வாங்கி வந்து இருந்த இனிப்புகளை மகிழ்ச்சியுடன் அனைவருக்கும் கொடுக்க!

வந்து இருந்தவர்கள் ! அவனை பார்த்து உனக்கு என்ன பைத்தியமா 25 வருட உழைப்பு இப்படி மண்ணாக போய் விட்டது! எல்லாருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டு இருக்க என்று கேட்க!

அதற்கு அவன் சொன்னான்! ஐயா வீடு குடி புகும் முன் இடிந்து போனது நல்லது தான்!

ஒரு வேளை நாங்க குடும்பத்துடன் குடி வந்த பின் வீடு இடிந்து போய் இருந்தால்! எண்ணவாகி இருக்கும் !

அதான் என்றான் அமைதியாக!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் முயற்சித்து பாருங்களேன்..

mki.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2024 at 02:13, தமிழ் சிறி said:

May be an image of 2 people and text

யாரும் கண்டுபிடிக்கக் கூடாது என்று கஸ்ரமான "பாஸ்வேட்" போட்டு வைத்தேன்.
இப்ப அதை... என்னாலேயே, கண்டு பிடிக்க முடியாமல் இருக்கு. 😂 🤣

இதைத்தான் சொல்லுறது, ஒருவருக்காவது தெரிவித்து வைத்திருக்க வேண்டுமென்று!

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

இதைத்தான் சொல்லுறது, ஒருவருக்காவது தெரிவித்து வைத்திருக்க வேண்டுமென்று!

ஒரு திருத்தம் :   மனைவியைத் தவிர . ........!  😴

  • கருத்துக்கள உறவுகள்

470224950_122201335034227241_34085598133

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text

  • கருத்துக்கள உறவுகள்

471229892_1128646912215988_7132681664786

இது நவீன சோசியல் கவிதப்பா 👶👶👶
நட்பு உடைந்து முகநூலானது ...
சுற்றம் உடைந்து வாட்சப் ஆனது ...
வாழ்த்துக்கள் உடைந்து ஸ்டேட்டஸ் ஆனது ...
உணர்வுகள் உடைந்து ஸ்மைலியாய் ஆனது ...
குளக்கரை உடைந்து குளியலறை ஆனது ...
நெற்களம் உடைந்து கட்டடமானது ...
காலநிலை உடைந்து வெப்ப மயமானது ...
வளநிலம் உடைந்து தரிசாய் ஆனது ...
துணிப்பை உடைந்து நெகிழியானது ...
அங்காடி உடைந்து அமேசான் ஆனது ...
விளைநிலம் உடைந்து மனைநிலம் ஆனது ...
ஒத்தையடி உடைந்து எட்டு வழியானது ...
கடிதம் உடைந்து இமெயிலானது ...
விளையாட்டு உடைந்து வீடியோ கேம் ஆனது ...
புத்தகம் உடைந்து இ-புக் ஆனது ...
சோறு உடைந்து 'ஓட்ஸ்'சாய்ப் போனது...
இட்லி உடைந்து
பர்கர் ஆனது ...
தோசை உடைந்து பிட்சாவானது ...
குடிநீர் உடைந்து குப்பியில் ஆனது ...
பசும்பால் உடைந்து பாக்கெட் ஆனது ...
வெற்றிலை உடைந்து பீடாவானது ...
தொலைபேசி உடைந்து கைபேசியானது ...
வங்கி உடைந்து
பே டி எம் ஆனது ...
நூலகம் உடைந்து கூகுளாய்ப் போனது ...
புகைப்படம் உடைந்து செல்ஃபியாய் ஆனது ...
மனிதம் உடைந்து மதவெறியானது ...
அரசியல் உடைந்து அருவெறுப்பானது ...
பொதுநலம் உடைந்து சுயநலமானது ...
பொறுமை உடைந்து அவசரமானது ...
ஊடல் உடைந்து விவாகரத்தானது ...
நிரந்தரம் உடைவது நிதர்சனம் ஆகையால் உடைவது உலகினில் நிரந்தரமானது.......!
  • கருத்துக்கள உறவுகள்

471345813_122183758556152683_15625851307

  • கருத்துக்கள உறவுகள்

Talking Dog on BGT Is Everything Simon Cowell EVER Wanted!

 

  • கருத்துக்கள உறவுகள்
On 21/12/2024 at 20:59, suvy said:

ஒரு திருத்தம் :   மனைவியைத் தவிர . ........!  😴

அவ்வளவு நம்பிக்கையா மனைவிமேல்? ரொம்ப அப்பாவி ஐயா நீங்கள்! 

  • கருத்துக்கள உறவுகள்

472268971_905790358392918_28692506299053

  • கருத்துக்கள உறவுகள்

2K கிட்ஸ் - கேர்ள்ஸ்..!

2k-girls.jpg

  • கருத்துக்கள உறவுகள்

472036715_1114568063705458_9091222335228

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.