Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்து கைத்தொலைபேசிகளிற்கும் ஒரே சார்ஜர்: ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐபோன் மற்றும் அண்ட்ரோய்ட் பயனர்கள் தங்கள் தொலைபேசிகளுக்கு வெவ்வேறு சார்ஜர்களைப் பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் இறங்கியுள்ளது.

அப்பிள் நிறுவனம் அதிருப்தி தெரிவித்த போதிலும் பொதுவான தொலைபேசி சார்ஜருக்கு சட்டம் இயற்ற ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து வகையான கைத்தொலைபேசிகள், டப்லட்கள், ஹெட்போன்களிற்கு  ஒரே வகை சார்ஜரை பயன்படுத்தும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கான சட்டப் பரிந்துரைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று (23) ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஒரே வகை சார்ஜர் நடைமுறையைக் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகமும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டு வருகின்றனர்.

அத்தகைய நடைமுறை, சுற்றுச்சூழலுக்குச் சிறந்தது. பயனீட்டாளர்களுக்கும் வசதி என்பது அவர்களின் கருத்து.

முன்மொழிவின் படி, யூ.எஸ்.பி-சி இணைப்பு அனைத்து ஸ்மார்ட்போன்கள், டப்லட்டுகள், கமராக்கள், ஹெட்ஃபோன்கள், கையடக்க ஸ்பீக்கர்கள் மற்றும் கையடக்க வீடியோ கேம் சாதனங்களிற்கான நிலையான சார்ஜராக மாறும்.

அதேவேளை, சார்ஜர்களும் மின்னணு சாதனங்களிலிருந்து தனித்தனியாக விற்கப்பட வேண்டும்.

ஆனால், ஒரே வகை சார்ஜர் திட்டம், புத்தாக்கத்திற்கு இடையூறாக இருக்கலாம் என்று அப்பிள் குறிப்பிட்டது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் 2019ஆம் ஆண்டு ஆய்வின்படி, 2018 இல் மொபைல் போன்களுடன் விற்கப்பட்ட பாதி சார்ஜர்களில் USB மைக்ரோ-பி இணைப்பு இருந்தது.
29 வீத போன்களுடன் USB-C கனெக்டர் மற்றும் 21% லைட்னிங் கனெக்டர் இருந்தது. சார்ஜர் வேறுபாடு பயனர்களை சிரமப்படுத்துவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துமென ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிடுகிறது.

இந்த திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய சட்டமியற்றுபவர்களின் ஒப்புதல் தேவை. அது கிடைத்தால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்குள் விற்பனை செய்வதற்கு நிறுவனங்கள் தங்கள் சாதனங்களை மாற்றியமைக்க வேண்டும்.

https://pagetamil.com/2021/09/23/அனைத்து-கைத்தொலைபேசிகளி/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு வீட்டுக்குள் இப்படியான சார்ச்சர்கள்  பத்து பதினைந்து க்கு மேல் குப்பையாய் இருக்கும் இப்படியான நடைமுறை மூலம்   போன் கொம்பனியை விட உலகம் முழுக்க  கொவிட் பரப்பிய நாட்டுக்காரன் சம்பாதிச்சது கூட .

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

ஒரு வீட்டுக்குள் இப்படியான சார்ச்சர்கள்  பத்து பதினைந்து க்கு மேல் குப்பையாய் இருக்கும் இப்படியான நடைமுறை மூலம்   போன் கொம்பனியை விட உலகம் முழுக்க  கொவிட் பரப்பிய நாட்டுக்காரன் சம்பாதிச்சது கூட .

உண்மைதான் பெருமாள். இது... வரவேற்க்கப் பட வேண்டிய விடயம். :)

கொரோனா பரப்பிய... நாட்டுக்காரனின், பெயர் சொல்லி குறிப்பிட பயப்பிடுகிறீர்களா? 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஒரு வீட்டுக்குள் இப்படியான சார்ச்சர்கள்  பத்து பதினைந்து க்கு மேல் குப்பையாய் இருக்கும் இப்படியான நடைமுறை மூலம்   போன் கொம்பனியை விட உலகம் முழுக்க  கொவிட் பரப்பிய நாட்டுக்காரன் சம்பாதிச்சது கூட .

நல்ல திட்டம். இப்படியான முற்போக்கு திட்டங்களால் தம் லாபத்தில் கைவைப்பதால்தான் பலருக்கு ஈயு மேல் கடுப்பு. 

பிரெக்சிற்றுக்கு ஆதரவாய் இருந்த பல முதலாளிகளை நோண்டினால் அவர்கள் செய்ய விரும்பிய ஏதோ ஒரு கெடுதலை ஈயு சட்டம் தடுக்கிறது என்ற கடுப்பு பின்ணனியாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, தமிழ் சிறி said:

உண்மைதான் பெருமாள். இது... வரவேற்க்கப் பட வேண்டிய விடயம். :)

கொரோனா பரப்பிய... நாட்டுக்காரனின், பெயர் சொல்லி குறிப்பிட பயப்பிடுகிறீர்களா? 🤣

நேற்றோ முந்தநாள்  லித்துவேனியன் அரசு  சைனா மொபைல்களை தூக்கி குப்பையில் போட  சொல்லியுள்ளார்கள் அப்படி சொன்னதுக்கு அரசியலில் பலகாரணம்  உள்ளதென்றாலும் முக்கியம் சைனா தமக்கு எதிரானவர்களை இந்த மொபைல்கள் மூலம்  இலகுவாக அடையாளப்படுத்த கூடிய வல்லமையில் உள்ளது அப்படி அடையாளப்படுத்த பட்டவர்களுக்கு அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளே ஆனாலும் பெயர் தெரியாத நோய்களுக்கு ஆட்படுகிறார்கள் நமக்கு பயம் கிடையாது one + மொபைல் தான் பயன்பாடு முழுக்க முழுக்க சைனா  தயாரிப்பு தன்னுடைய தயாரிப்பு நீண்டகாலம் பாவிக்கும் என்ற கொள்கையில் தயாரிக்கப்பட்டது ஐந்து வருடமாய் இருக்கு இதுவரைக்கும் ஆயிரம் தடவைக்கு மேல் விழுந்து இருக்கும் இரண்டுமுறை வான் சில்லு பதம் பார்த்தும் குடிகாரனிடம்  அடிவாங்கியும் எதுவுமே நடக்காதது போல் சாப்பாடு எடுத்துவைக்கும் பெண்டாட்டி போல் வேலை செய்யுது . அப்படி வேலை செய்யுற போனை வேலை செய்யாமல் பண்ணிடுவாங்களோ என்ற பயம் தான் .🤣

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பெருமாள் said:

---ஐந்து வருடமாய் இருக்கு இதுவரைக்கும் ஆயிரம் தடவைக்கு மேல் விழுந்து இருக்கும் இரண்டுமுறை வான் சில்லு பதம் பார்த்தும் குடிகாரனிடம்  அடிவாங்கியும் எதுவுமே நடக்காதது போல் சாப்பாடு எடுத்துவைக்கும் பெண்டாட்டி போல் வேலை செய்யுது . அப்படி வேலை செய்யுற போனை வேலை செய்யாமல் பண்ணிடுவாங்களோ என்ற பயம் தான் .🤣

பெருமாள், இவ்வளவு... அடிவாங்கிய, அந்த கைத் தொலைபேசியின் படத்தை
ஒருக்கால்... பார்க்க வேண்டும் போல் ஆவலாக உள்ளது. 
இயலுமென்றால்... இணைத்து விடுங்கள், சுவாரசியமாக இருக்கும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

பெருமாள், இவ்வளவு... அடிவாங்கிய, அந்த கைத் தொலைபேசியின் படத்தை
ஒருக்கால்... பார்க்க வேண்டும் போல் ஆவலாக உள்ளது. 
இயலுமென்றால்... இணைத்து விடுங்கள், சுவாரசியமாக இருக்கும். :grin:

அப்படியே உங்கள் vacation சுற்றுலா ஆக்கத்தையும் பார்க்க ஆவலாக உள்ளோம்😄👋

  • கருத்துக்கள உறவுகள்
Just now, யாயினி said:

அப்படியே உங்கள் vacation சுற்றுலா ஆக்கத்தையும் பார்க்க ஆவலாக உள்ளோம்😄👋

என்ரை... அருமை, தங்கச்சி.... யாயினி, :)
எல்லாரும்... அதை, மறந்து விட்டார்கள் என்று, நான் சந்தோசத்தில்... இருக்கும் போது,
திடீரென்று... ஒரு பெரிய குண்டை, அண்ணனுக்கு மேல் போடக்  கூடாது... ராசாத்தி. :grin:

வழக்கமாக... மாலை ஐந்து மணிக்கு முடிய வேண்டிய வேலை,
சில காரணங்களால்.... ஏழு மணி மட்டும், செய்ய வேண்டி வந்ததால்...
தலை... "கிர், கிர்.." என்று  இருக்கு. அம்மாச்சி. :)

இந்த நிலையில்... சுற்றுலா பற்றி எழுத,  மனமே வருகுது இல்லை.
சொன்ன வாக்கை... காப்பாற்றாமைக்காக, தயவு செய்து என்னை மன்னிக்கவும்.  🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

பிரெக்சிற்றுக்கு ஆதரவாய் இருந்த பல முதலாளிகளை நோண்டினால் அவர்கள் செய்ய விரும்பிய ஏதோ ஒரு கெடுதலை ஈயு சட்டம் தடுக்கிறது என்ற கடுப்பு பின்ணனியாக இருக்கும்.

இது இப்பதான் உங்களுக்கு தெரியுதாக்கும்...😁

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

இது இப்பதான் உங்களுக்கு தெரியுதாக்கும்...😁

அப்பவே தெரியும்….சொல்லி யார் கேட்டா🤣

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா தொடக்கி வைச்சால் உலகம் முழுக்க மாறுமோ?! மாறினால் நன்றாக இருக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

பெருமாள், இவ்வளவு... அடிவாங்கிய, அந்த கைத் தொலைபேசியின் படத்தை
ஒருக்கால்... பார்க்க வேண்டும் போல் ஆவலாக உள்ளது. 
இயலுமென்றால்... இணைத்து விடுங்கள், சுவாரசியமாக இருக்கும். :grin:

சும்மாயிருங்க  பாஸ் ஒரு பேச்சுக்கு பெண்டாட்டி அது இது என்று சொல்லி விட்டேன் ஆனாலும் கீழ் உள்ள காட்சியை பார்த்தபின் 🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

என்ரை... அருமை, தங்கச்சி.... யாயினி, :)
எல்லாரும்... அதை, மறந்து விட்டார்கள் என்று, நான் சந்தோசத்தில்... இருக்கும் போது,
திடீரென்று... ஒரு பெரிய குண்டை, அண்ணனுக்கு மேல் போடக்  கூடாது... ராசாத்தி. :grin:

வழக்கமாக... மாலை ஐந்து மணிக்கு முடிய வேண்டிய வேலை,
சில காரணங்களால்.... ஏழு மணி மட்டும், செய்ய வேண்டி வந்ததால்...
தலை... "கிர், கிர்.." என்று  இருக்கு. அம்மாச்சி. :)

இந்த நிலையில்... சுற்றுலா பற்றி எழுத,  மனமே வருகுது இல்லை.
சொன்ன வாக்கை... காப்பாற்றாமைக்காக, தயவு செய்து என்னை மன்னிக்கவும்.  🙏

மறப்பதா? அஜித்தின் வலிமை அப்டேட்டை விட அண்ணாவின் குரோசியா அப்டேட்டுக்காக காத்திருப்போர்தான் அதிகம்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

சும்மாயிருங்க  பாஸ் ஒரு பேச்சுக்கு பெண்டாட்டி அது இது என்று சொல்லி விட்டேன் ஆனாலும் கீழ் உள்ள காட்சியை பார்த்தபின் 🤣

இந்த வீடியோ பாக்கும் பொடியள் யாரும் இனிமேல் கல்யாணம் செய்வாங்கள் என்று நினைக்கிறீங்களா?!🤪

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

ஐரோப்பா தொடக்கி வைச்சால் உலகம் முழுக்க மாறுமோ?! மாறினால் நன்றாக இருக்கும்.

அது உங்களுக்கு

எனக்கு???😢

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அது உங்களுக்கு

எனக்கு???😢

ஏனண்ணை உங்கள் வியாபாரம் அதனோடு தொடர்பா?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

ஏனண்ணை உங்கள் வியாபாரம் அதனோடு தொடர்பா?

ஓம்

ஆனால் ஊரோடு ஒத்து  வாழ்

பலருக்கும் நன்மை  தருமெனெில்???

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, விசுகு said:

ஓம்

ஆனால் ஊரோடு ஒத்து  வாழ்

பலருக்கும் நன்மை  தருமெனெில்???

வியாபாரத்தில் ஒரு தடங்கல் வருகின்றது என்றால் வியாபாரம் பெருக லாபத்தை கொண்டுவர சந்தர்ப்பங்கள் ஒளித்து இருக்கும் தேடுதல் என்பது வாழ்க்கை முழுதும் இருக்கணும் அண்ணன் உங்களுக்கு அறிவுரை தேவையில்லை ஆனாலும் மனதில் பட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெருமாள் said:

வியாபாரத்தில் ஒரு தடங்கல் வருகின்றது என்றால் வியாபாரம் பெருக லாபத்தை கொண்டுவர சந்தர்ப்பங்கள் ஒளித்து இருக்கும் தேடுதல் என்பது வாழ்க்கை முழுதும் இருக்கணும் அண்ணன் உங்களுக்கு அறிவுரை தேவையில்லை ஆனாலும் மனதில் பட்டது .

அதே...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஓம்

ஆனால் ஊரோடு ஒத்து  வாழ்

பலருக்கும் நன்மை  தருமெனெில்???

இதனால் சார்ஜர் வியாபரத்தில் பெரிய மாற்றம் வருமா?

எல்லாரும் பாவிக்கும் சார்ஜரின் முனை ஒரே விதமாக இருக்க வேண்டும் என்பதுதான் உத்தேசிக்கும் விதி என நினைக்கிறேன்.

ஆனால் சாஜரின் தன்மை, எவ்வளவு விரைவாக சார்ஜ் ஆகிறது, பாதுகாப்பு, நீடித்த உழைப்பு ஆகியவற்றில் ஒவ்வொரு பிராண்டுக்கும் மாறுபாடுகள் இருக்கும். 

கூடவே டெக்னோலிஜி மாறும் போது எல்லா சார்ஜரும் ஒண்டாக மாறும்?

அவசரத்துக்கு மாத்தி பாவிக்ககலாம் ஆனால் தாயும் சேயும் என்றாலும் போனும் சார்ஜரும் வேறு வேறு என்பது புது மொழி 🤣.

ஆகவே அதிக பாதிப்பு இராது என்றே நினைக்கிறேன்.

தவிரவும் இது உத்தேச திட்டம்தானே? இது “கண்டுபிடிக்கும் ஊக்கத்துக்கு எதிரானது” என அப்பிள் போன்றவர்கள் கோர்ட்டுக்கு போகலாம் என நினைக்கிறேன்.

தவிரவும் @பெருமாள் சொன்னது போல every challenge has an opportunity என்று பார்ப்பவர் நீங்கள். இப்போதே இதில் ஒரு சந்தர்ப்பத்தை கண்டு பிடிக்க தொடங்கி இருப்பீர்கள் என நம்புகிறேன் 😎.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இந்த  கண்டு  பிடிப்பு பலரது  பலகால விருப்பமும்

பச்சை  நிறத்தவரின் பலகால முயற்சியும்  கூட

நடக்குமா  என்றால்  தற்போதைக்கு சாத்தியமில்லை

நடந்தால்  நன்று

அதற்கிடையில் நான் பென்சனுக்கு  போய் விடுவேன்...🤪

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, விசுகு said:

அதற்கிடையில் நான் பென்சனுக்கு  போய் விடுவேன்...🤪

கொடுத்து வைத்த கோமான்.

நான் ரிடையர் ஆகும் போது 75 வயசு ஆக்கி போடுவாங்கள் எண்டு நினைக்கிறன்.  அதுக்கு பிறகு ரிட்டையர் ஆனா என்ன, ஆகாட்டில் என்ன🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

கொடுத்து வைத்த கோமான்.

நான் ரிடையர் ஆகும் போது 75 வயசு ஆக்கி போடுவாங்கள் எண்டு நினைக்கிறன்.  அதுக்கு பிறகு ரிட்டையர் ஆனா என்ன, ஆகாட்டில் என்ன🤣.

அதை  நீங்க தான் தீர்மானிக்கணும்??

கொழுத்த  கொழுக்கட்டை தான் வேண்டுமென்றால் .....???🤣

எனக்கு  மோதகம்  போதும்😜

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

கொடுத்து வைத்த கோமான்.

நான் ரிடையர் ஆகும் போது 75 வயசு ஆக்கி போடுவாங்கள் எண்டு நினைக்கிறன்.  அதுக்கு பிறகு ரிட்டையர் ஆனா என்ன, ஆகாட்டில் என்ன🤣.

இப்ப 75இல்லையா🤤🤤

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

அதை  நீங்க தான் தீர்மானிக்கணும்??

கொழுத்த  கொழுக்கட்டை தான் வேண்டுமென்றால் .....???🤣

எனக்கு  மோதகம்  போதும்😜

🤣 நான் பாதி மோதகத்தோட ஊரப்பக்கம் எஸ் ஆகிற பிளான் 🤣

13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப 75இல்லையா🤤🤤

🤣 68. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.