Jump to content

பாவற்கொடியும் நானும்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எனக்கு தாவரங்கள் மேல் அதீத நாட்டம் என்பது உங்கள் எல்லாருக்கும் தெரியும் தானே. 2019 இல் கனடாவிலிருக்கும் என் ஒன்றுவிட்ட அண்ணா பாவல், புடோல் பந்தலில் கீழே நின்று படம்  எடுத்துப் போட எனக்கும் என வளவில் இரண்டும் நட்டுக் கோடியில் படர விடவேணும் என்ற ஆசை எழுந்தது. ஊரில் உள்ள கணவனின் தங்கையிடம் உள்ள விதைகள் எல்லாம் அனுப்பும்படி கூற யாவரும் 1200 ரூபா கட்டி ஒரு சிறிய பார்சலை அனுப்பி வைக்க கோவிட் காலத்தில் என் கெடுகாலமும் சேர கஷ்டம்சில் எல்லாவற்றையும் எடுத்துவிட்டு அனுமதி இல்லை என்ற விபரத்துடன் கீரை விதைகள் மட்டும் வந்து சேர்ந்தது. உடனே கனடாவுக்கு தொலைபேசி எடுத்து எனக்குக் கொஞ்ச விதைகள் அனுப்புங்கோ என்றதுக்கு நான் எப்படி அனுப்புறது. விதைகள் அனுப்பக் கூடாதே  என்று அண்ணா பின்வாங்க, ஒரு வாழ்த்துமடலினுள் வைத்து அனுப்புமாறு ஆலோசனை கூறினேன்.  ஒரு வாரம் வரும் வரும் என்று பார்க்க இரு வாரங்களின் பின் வந்து சேர்ந்தது வாழ்த்துமடல். வாழ்த்து மடலை பார்த்தபோதே எனக்கு விளங்கீட்டுது அண்ணாவின் நப்பித்தனம். ஆறு பாகல் விதைகள், ஆறு புடோல். அதில் மூன்று கட்டைப் புடோல் மற்றையது நீளமானது என்றும் எழுதியிருக்க, சரி இதாவது வந்ததே என்று மகிழ்வோடு கடைக்காரரிடம் மரக்கறிகள் வரும் சிறிய regiform பெட்டிகளை வாங்கி வந்து அதற்குள் சிறிய சாடிக்களில் உரம் போட்டு விதைகளை நாட்டாச்சு.மேலே இன்னொரு மூடியால் மூடியும்  ஆச்சு.  ஒரு மாதமா ஒரு அசுமாத்தமும் இல்லை.  மே மாதம் முளைத்து நான்கு இலைகள் தெரிய அதை எங்கே நடுவது,  எப்பிடிப் பந்தல் போடுவது என்று ஒரே கற்பனை. வழமைபோல ஏற்கனவே தோட்டம் எல்லாம் காடாக்  கிடக்கு. உது எதுக்கு என்று மனிசன் தொடங்கியாச்சு. 

ஜெகதீஸ் அண்ணா என்று ஒருவர் வீட்டுத் தோட்டத்தில்  பாவல் நட்டு ஒரே காய்தாய். அந்த வீடியோ பார்த்த நான் அவருடன் தொடர்புகொண்டு அவரின் கொடிகளைப் பற்றி நலம் விசாரித்துவிட்டு என் பாவல் புடோல் பற்றி விபரம் சொன்னேன். இப்போதைக்கு வெளியே வையாதை பிள்ளை. ஜூன் மாதம் வெயில் வந்தால் தான் மரம் எழும்பும் என்றார். எனக்கோ கொடிகள் வளர வளர எப்படி வீட்டுக்குள் வைப்பது என்று எண்ணி எனது conservetry  உள் கொண்டுசென்று வைத்தேன். மே மாதக் கடைசியில் சாடையாய் வெயில் எறிக்க நல்ல பெரிய சாடிகளில் நல்ல உரம்போட்டு கன்றுகளை இடம் மாற்ற கிட்டத்தட்ட ஒரு மீற்றர் வரை கன்றுகள் வளர்ந்து புடோலிலும் பாகலிலும் பூக்களும் பூக்கத் தொடங்க எனக்கோ மட்டில்லா மகிழ்ச்சி. ஒரு வாரம் போக இழைகள் எல்லாம் சுருண்டு சுருண்டு என்ன என்று பார்த்தால் ஒரே எறும்புகள். இந்த ஆண்டுபோல் என தோட்டத்தில் எறும்புகள் வந்ததே இல்லை. பல இடங்களில் எறும்பு. எதற்கும் அந்த அண்ணாவிடமே கேட்போம் என்று போன் செய்ய அவர் ஒரு ஸ்பிறே ஒன்றைப் பரிந்துரைக்க கடைகளில் தேடினால் இல்லை.  ஒருவாறு  ஒன்லைனில் ஒன்றுக்கு மூன்றாய் எறும்புக்கு ஸ்பிறே ஓடர் செய்து அடுத்த நாள் வந்ததும் ஆசை தீர சாடிக்களின் மேலே கீழே இலைகளில் எல்லாம் நன்றாக அடித்து இனிமேல் இந்தப் பக்கம் எப்பிடித் தலை வைத்துப் படுக்கிறீர்கள் என்று எண்ணியபடி நல்ல நின்மதியான தூக்கம்.

அடுத்தநாள் காலை நல்ல வெயிலைக் கண்ட சந்தோசத்தில் தேனீரும் பருக்காமல் தோட்டத்துக்குப் போனால் நெஞ்செல்லாம் அடைச்சுப் போச்சு. அத்தனை கொடிகளும் எரிஞ்சுபோய்க் கிடக்கு. உடன அந்த அண்ணாவுக்கு போன் செய்தால், என்ன தங்கச்சி அடியில கொஞ்சம் அடிக்கிறதுக்கு இலைக்கு ஏன் அடிச்சியள் என்கிறார். அவரைத் திட்டவும் முடியாமல் மனிசனுக்கு போன் செய்து விடயத்தைச் சொல்ல, ஊரிலையே எரும்புக்கு பவுடர் தான் போடுறது. சரி இனி என்ன செய்யிறது. இண்டைக்கு வெயில் தானே தண்ணியை நல்லா விட்டுவிடு என்று சொல்ல..................... என்ன சொல்லி என்ன திரும்ப ஒரு குருத்துக் கூட வரேல்லை.  இனி என்ன செய்யிறது. அடுத்த ஆண்டு பார்ப்பம் என்று எண்ணியிருக்க, முளைக்காமல்  இருந்த ஒரு புடல் ஒரு சாடியில் இருந்து முளைத்துவர  இன்னொரு சாடியில் ஒரு பாகலும் முளைக்க என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் இப்ப சீசன் தப்பி முளைத்து என்ன பயன். பிஞ்சுகள் எல்லாம் பழுத்துப் பழுத்து கொட்ட எனது கண்ணாடி அறையுள் அவர்களைக் கொண்டு வந்தாச்சு. சந்தோஷமா அவை படர்ந்தாலும், பிஞ்சு  பெருக்குமா காய்க்குமா என்ற சந்தேகம் எனக்கு. LED lights வாங்கிப் போடலாமா என்று எண்ண, அது கூடாது. எமக்கு  பார்வைக் கோளாறை உண்டாக்கும் என்கிறாள் மகள். யாராவது அதுபற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் எனக்கு உதவுங்கள். 

Posted

சுமே,

LED grow lights for plants என்று amazon இல் தேடிப்பாருங்கள். என்னுடன் வேலை செய்கின்ற குஜராத்தை சேர்ந்தவர் இந்த லைட் வெளிச்சத்தில் துளசிச் செடிகள் வளர்க்கின்றார். அவையும் வளர்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

https://www.amazon.co.uk/Upgraded-Spectrum-360°Adjustable-Gooseneck-Seedling/dp/B085C5Q3NV/ref=sr_1_1?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632869584&sr=8-1

போனவருடம் கறி வேப்பிலை  இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ  ஒரு பிழை நடந்து இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 minutes ago, நிழலி said:

சுமே,

LED grow lights for plants என்று amazon இல் தேடிப்பாருங்கள். என்னுடன் வேலை செய்கின்ற குஜராத்தை சேர்ந்தவர் இந்த லைட் வெளிச்சத்தில் துளசிச் செடிகள் வளர்க்கின்றார். அவையும் வளர்கின்றன.

இந்த ஒளிகளால் மனிதருக்கு பின் விளைவுகள் ஏதாவது இருக்குமா? ஏனென்றால் பின் விளைவுகள் காரணமாக பல மின் விளக்குகளை ஐரோப்பாவில் தடை செய்து விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, பெருமாள் said:

https://www.amazon.co.uk/Upgraded-Spectrum-360°Adjustable-Gooseneck-Seedling/dp/B085C5Q3NV/ref=sr_1_1?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632869584&sr=8-1

போனவருடம் கறி வேப்பிலை  இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ  ஒரு பிழை நடந்து இருக்கு .

ஆனால், கஞ்சா செடி நல்ல வாசத்தோட இஞ்ச வளர்க்கினமே?🤒

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, புங்கையூரன் said:

ஆனால், கஞ்சா செடி நல்ல வாசத்தோட இஞ்ச வளர்க்கினமே?🤒

அந்த விவசயிகளை தேடிக்கொண்டு இருக்கிறன்  பாஸ் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Posted
13 hours ago, குமாரசாமி said:

இந்த ஒளிகளால் மனிதருக்கு பின் விளைவுகள் ஏதாவது இருக்குமா? ஏனென்றால் பின் விளைவுகள் காரணமாக பல மின் விளக்குகளை ஐரோப்பாவில் தடை செய்து விட்டார்கள்.

தெரியவில்லை அண்ணா. ஆனால் என் வீட்டில் இருந்த சாதாரண மின்குமிழ்கள் அனைத்தையும் LED இற்கு மாற்றிக் கொண்டு வருகின்றேன். இதில் LED soft white இல் இருந்து வரும் வெளிச்சம் கண்ணுக்கு மிகவும் இதமாகவும் மனசுக்கு ஆறுதலாகவும் இருக்கின்றது. அத்துடன் மின்சார சக்தியை பெருமளவு சேமிக்க உதவுவதால் அரசும் இதை ஊக்குவிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
21 hours ago, நிழலி said:

சுமே,

LED grow lights for plants என்று amazon இல் தேடிப்பாருங்கள். என்னுடன் வேலை செய்கின்ற குஜராத்தை சேர்ந்தவர் இந்த லைட் வெளிச்சத்தில் துளசிச் செடிகள் வளர்க்கின்றார். அவையும் வளர்கின்றன.

வளர்க்கின்றதுதான். ஆனால் அவை மனிதர்களைப் பாதிப்பதாகவும் கூறுகிறார்கள்.

21 hours ago, பெருமாள் said:

https://www.amazon.co.uk/Upgraded-Spectrum-360°Adjustable-Gooseneck-Seedling/dp/B085C5Q3NV/ref=sr_1_1?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632869584&sr=8-1

போனவருடம் கறி வேப்பிலை  இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ  ஒரு பிழை நடந்து இருக்கு .

சிலவேளை நீங்கள் வாங்கியது கறிவேப்பிலை போல இருக்கும் மற்ற மரமோ ???

21 hours ago, குமாரசாமி said:

இந்த ஒளிகளால் மனிதருக்கு பின் விளைவுகள் ஏதாவது இருக்குமா? ஏனென்றால் பின் விளைவுகள் காரணமாக பல மின் விளக்குகளை ஐரோப்பாவில் தடை செய்து விட்டார்கள்.

கண்களுக்கும் தோலுக்கும் ஒவ்வாமை ஏற்படும் என்று இணையத்தில் இருக்கு.

15 hours ago, புங்கையூரன் said:

ஆனால், கஞ்சா செடி நல்ல வாசத்தோட இஞ்ச வளர்க்கினமே?🤒

அவை எந்த லைட் பாவிக்கினம் எண்டு கேட்டுப் பாருங்கோ😀

9 hours ago, Paanch said:

வெயில் நாடுகளில் வளர்ப்பது வேறு இங்கு வேறு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, நிழலி said:

தெரியவில்லை அண்ணா. ஆனால் என் வீட்டில் இருந்த சாதாரண மின்குமிழ்கள் அனைத்தையும் LED இற்கு மாற்றிக் கொண்டு வருகின்றேன். இதில் LED soft white இல் இருந்து வரும் வெளிச்சம் கண்ணுக்கு மிகவும் இதமாகவும் மனசுக்கு ஆறுதலாகவும் இருக்கின்றது. அத்துடன் மின்சார சக்தியை பெருமளவு சேமிக்க உதவுவதால் அரசும் இதை ஊக்குவிக்கின்றது.

நாங்களும் வீட்டில் எல்லாம் LED தான். அதன் வெப்பம் கன்றுகளுக்கு அதிகம். அதனால் பாதிப்பு இல்லை என்றே கூறுகின்றனர்.

21 hours ago, பெருமாள் said:

https://www.amazon.co.uk/Upgraded-Spectrum-360°Adjustable-Gooseneck-Seedling/dp/B085C5Q3NV/ref=sr_1_1?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632869584&sr=8-1

போனவருடம் கறி வேப்பிலை  இப்படி ஒரு சோதனை செய்து பூவரசம் குழை போல் வளர்ந்து தள்ளியது நினைவுக்கு வருது வாசமும் இல்லை ஏதோ  ஒரு பிழை நடந்து இருக்கு .

நீங்கள் வாங்கியது பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. நான் கீழே உள்ளதை ஓடர் செய்து இன்றுதான் வந்திருக்கு.

https://www.amazon.co.uk/Indoor-Plants-Spectrum-Inches-Greenhouse/dp/B07PKSG12N/ref=sr_1_54?dchild=1&keywords=Lights+for+Growing&qid=1632948195&sr=8-54

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சூரிய வெளிச்சத்தில் இருந்து தாவரங்களுக்கு தேவையான ஒளியின் பகுதி மனித கண்ணுக்கு தெரியும் ஒளியின் பகுதிக்குள் தான் அடங்குகிறது. ஆனால் பல தாவரங்களுக்கு சூரிய வெளிச்சத்தில் உள்ள பச்சை நிறம் மட்டும்  தேவையில்லை என்பதால் அதை வந்தவழியே(?) விட்டு விடுகிறது. அதனால்தான் தாவரங்கள் பார்வைக்கு பச்சையாக தெரிகின்றன.

கண்ணாடி வீட்டுக்குள் செல்லும்போது அதிக வெளிச்சத்தினால் கண்கள் கூசினால் குளுகுளு கண்ணாடி அணிந்து கொள்ளவும். வீட்டு பாவனைக்கு தயாரிக்கப்பட்ட LED lights பயன்படுத்துவதால் மனிதருக்கு தாக்கமில்லை. கண்ணுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு புற ஊதாக்கதிர்களை வெளிப்படுத்தும் மின்விளக்குகளை வீட்டு பாவனைக்கு என விற்பனை செய்யப்படுவதில்லை.

தாவரங்கள் வளர்ப்பதற்கு மின் விளக்குகள் வாங்கும்போது சூரியவெளிச்சத்துக்கு ஒப்பானதான வெளிச்சம் அதிலிருந்து வருமா என்பதை நிச்சயப்படுத்திகொள்ளவும். பொதுவாக நிற வெப்பநிலை 6500K (கெல்வின்) கொண்ட குழாய் விளக்குகளை (tube lights) பயன்படுத்தி மரங்களை வளர்ந்த பின் அவை பூக்கும் பருவத்தில் 2000 K - 3000 K வெளிச்சம் தரும் வேறு குழாய் விளக்குகளுக்கு மாற்றிவிடலாம்.

கண்ணாடி வீட்டின் நிலப்பரப்பில் ஒவ்வொரு  சதுர மீற்றருக்கும் ஒரு விளக்கு என்ற எண்ணிக்கையில் 36W வலுவுள்ள 6500 K  குழாய் விளக்குகளை பயன்படுத்தவும். உதவிக்கு வேண்டுமானால் grow lights (LED tube lights) பயன்படுத்தவும். இவை தாவரங்களுக்கு முக்கிய தேவையான சிவப்பு (அலைநீளம் 650-670 nanometer ) மற்றும் நீலம் (அலைநீளம் 430-450 nanometer ) ஆகிய இரு நிறங்களை மட்டும் வெளிப்படுத்தும்.

பொதுவாக தோட்டத் தாவரங்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகளில் ஆலோசனையும் உதவியும்  பெற்றுக் கொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பனி நிறைந்த நாட்டில் வீட்டுத்தோட்டம் செய்து அசத்தும் புலம்பெயர் தம்பதியினர் !

IMG-20210928-WA0406-1140x620.jpg

புலம்பெயர் தமிழ் மக்கள் நாட்டை ஏனைய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து   சென்றாலும் தமது அடையாங்களையும்  தமது பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுக்காது என்றும்  வாழ்ந்து  வருகின்றனர்

IMG-20210928-WA0405-225x300.jpg

அவ்வாறே பனிமலை கொண்ட கனடா நாட்டில்  ரொறன்டோ  நகரில் வாழும் குறித்த தம்பதியினர்  அங்கு  நமது  ஊரைப்போன்றே வீட்டு தோட்டத்தில்  பாகற்காய்  செய்கையை செய்து பலரின்  கவனித்தினை ஈர்த்ததுள்ளதுடன்  இவர்களின் இந்த முயற்சி  சமூக வலைதளங்களில் தற்போது  பெரிதும் பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது

https://tamonews.com/news/46519/

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 29/9/2021 at 03:51, ஈழப்பிரியன் said:

அடுத்த வருடம் வரை பொறுக்க மாட்டியளோ?

அந்தப் பொறுமை இருந்தால் எங்கேயோ போயிருப்பனே.

20 hours ago, பெருமாள் said:

பனி நிறைந்த நாட்டில் வீட்டுத்தோட்டம் செய்து அசத்தும் புலம்பெயர் தம்பதியினர் !

புலம்பெயர் தமிழ் மக்கள் நாட்டை ஏனைய நாடுகளுக்கு புலம் பெயர்ந்து   சென்றாலும் தமது அடையாங்களையும்  தமது பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுக்காது என்றும்  வாழ்ந்து  வருகின்றனர்

அவ்வாறே பனிமலை கொண்ட கனடா நாட்டில்  ரொறன்டோ  நகரில் வாழும் குறித்த தம்பதியினர்  அங்கு  நமது  ஊரைப்போன்றே வீட்டு தோட்டத்தில்  பாகற்காய்  செய்கையை செய்து பலரின்  கவனித்தினை ஈர்த்ததுள்ளதுடன்  இவர்களின் இந்த முயற்சி  சமூக வலைதளங்களில் தற்போது  பெரிதும் பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது

https://tamonews.com/news/46519/

கனடாவில் நிலமை வேறு. அங்கு குளிர் போன்றே வெப்பமும் அதிகம். எனவே எல்லாம் செழிப்பாக வருகின்றன. லண்டனில் இரண்டும் கெட்டான் நிலை.

22 hours ago, vanangaamudi said:

சூரிய வெளிச்சத்தில் இருந்து தாவரங்களுக்கு தேவையான ஒளியின் பகுதி மனித கண்ணுக்கு தெரியும் ஒளியின் பகுதிக்குள் தான் அடங்குகிறது. ஆனால் பல தாவரங்களுக்கு சூரிய வெளிச்சத்தில் உள்ள பச்சை நிறம் மட்டும்  தேவையில்லை என்பதால் அதை வந்தவழியே(?) விட்டு விடுகிறது. அதனால்தான் தாவரங்கள் பார்வைக்கு பச்சையாக தெரிகின்றன.

கண்ணாடி வீட்டுக்குள் செல்லும்போது அதிக வெளிச்சத்தினால் கண்கள் கூசினால் குளுகுளு கண்ணாடி அணிந்து கொள்ளவும். வீட்டு பாவனைக்கு தயாரிக்கப்பட்ட LED lights பயன்படுத்துவதால் மனிதருக்கு தாக்கமில்லை. கண்ணுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் அளவு புற ஊதாக்கதிர்களை வெளிப்படுத்தும் மின்விளக்குகளை வீட்டு பாவனைக்கு என விற்பனை செய்யப்படுவதில்லை.

தாவரங்கள் வளர்ப்பதற்கு மின் விளக்குகள் வாங்கும்போது சூரியவெளிச்சத்துக்கு ஒப்பானதான வெளிச்சம் அதிலிருந்து வருமா என்பதை நிச்சயப்படுத்திகொள்ளவும். பொதுவாக நிற வெப்பநிலை 6500K (கெல்வின்) கொண்ட குழாய் விளக்குகளை (tube lights) பயன்படுத்தி மரங்களை வளர்ந்த பின் அவை பூக்கும் பருவத்தில் 2000 K - 3000 K வெளிச்சம் தரும் வேறு குழாய் விளக்குகளுக்கு மாற்றிவிடலாம்.

கண்ணாடி வீட்டின் நிலப்பரப்பில் ஒவ்வொரு  சதுர மீற்றருக்கும் ஒரு விளக்கு என்ற எண்ணிக்கையில் 36W வலுவுள்ள 6500 K  குழாய் விளக்குகளை பயன்படுத்தவும். உதவிக்கு வேண்டுமானால் grow lights (LED tube lights) பயன்படுத்தவும். இவை தாவரங்களுக்கு முக்கிய தேவையான சிவப்பு (அலைநீளம் 650-670 nanometer ) மற்றும் நீலம் (அலைநீளம் 430-450 nanometer ) ஆகிய இரு நிறங்களை மட்டும் வெளிப்படுத்தும்.

பொதுவாக தோட்டத் தாவரங்களை விற்பனை செய்யும் உள்ளூர் கடைகளில் ஆலோசனையும் உதவியும்  பெற்றுக் கொள்ள முடியும்.

மிக்க நன்றி வணங்கா முடி. நான் வாங்கிய மின் விளக்குகள் சூரிய ஒளிக்கு ஒப்பானவை என்றுதான் போட்டிருந்தது. ஆனால் review வில் காண்பார்வைக்குச் சேதம் வரலாம் என்று போட்டிருந்தனர். அதுதான் .. .. ஒரே குழப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Thanks
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.