Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் லூசியம் பகுதியில் பிரபல தமிழ் வர்த்தகரின் வீட்டில் திருட்டு! வெளியானது வீடியோ காட்சிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் கோசான் குத்தி முறிஞ்சாலும் ரொமேனியன் கள்ளங்கள்😆 தான் ...அதுக்காக மற்ற நாட்டவர், தமிழரில் கள்ளன் இல்லை என்று இல்லை. 
 
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

சொன்னால் நம்பமாட்டியள் உந்த கிழக்கு ஐரோப்பா காரரை 2000 க்கு பிறகுதான் உள்ள விட்டது - அதுக்கு முதல் £50 பவுண் கட்டு கட்டா ரோட்டில கிடந்தாலும் சனம் எடுத்து கொண்டு போய் பொலிசில கொடுக்கும்🤣.

இப்பவும் எங்கட சிறிலங்கன் சனம்? மேலே கையால தாங்கள் இன்னொரு £50 தாளை சேர்த்துதான் பொலிசில கொடுப்பது வழமை🤣.

###############   #################

பழசெண்டாலும் கட்டலிக் கொன்வேட்டர் இருந்தா கழட்டி போடுவாங்கள். 

எனக்கு ஒரு உண்மையை யாரும் விளங்க படுத்த முடியுமே ?

பிரபலம் என்றால் எல்லாருக்கும் தெரிந்த என்று அர்த்தம்? உந்த வர்த்தகர் ஏப்படி “பிரபலம்” என்ற வரையறைக்குள் வாறார்? 

ரிச்சர் பிரான்சன், அலன் சுகர் அட்லீஸ்ட் லைக்கா ஓனர் பிரபலம் எண்டால் ஓகே, புண்ணாக்கு யாவாரி எல்லாம் பிரபலம் எண்டால் என்ன கதை🤣.

நாங்கள்... நம்பீட்டம். 🤣

###########  ###########  ##########

பாவம்... அந்த ஆள், கார் களவு போன கவலையிலை இருக்குது.
நீங்கள் அவரை... புண்ணாக்கு யாவாரி, தவிட்டு யாவாரி என்று...
வெந்த புண்ணிலை.... வேலை பாய்ச்சுகிறீர்கள்.   😂

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு ஐரோப்பிய கள்ளருக்கு ஒத்துக்கொடுக்கிறது நம்ம தமிழ் மற்றும் ஹிந்திய கள்ளர்கள். பின்னர் பாகம் பிரிச்சுக் கொள்வார்கள் போல.

இல்பேட் பகுதியில்.. ஒரு வீட்டில் நகைதிருடப் போன இடத்தில் கள்ளன் தவறவிட்ட போனில் காணப்பட்ட இலக்கங்களின் அடிப்படையில் அவ்வூர் பகுதியில் சுற்றி திரியும் தமிழ் நபர்கள் மற்றும் பிரபல்ய நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் இலக்கமும் பிடிப்பட்டது. பொலிஸ் சோதனையும் மேற்படி நகைக்கடையில் நிகழ்ந்தது.

இப்படி எங்கட ஆக்கள் கூட்டுக்களவாணி வேலை செய்வது லண்டனில் சர்வசாதாரணம். எல்லாம் தண்ணிக்கும்.. குடுவுக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

எனது இரண்டு ஹைபிரிட் காருக்கும் சென்ஸரோடு சேர்த்து வெட்டினவங்கள். முதலாவது ஜோன் லூயிஸ் கார்ப் பார்க்கில். கிறிஸ்மஸ் பிரசண்ட் வாங்கப்போன 15 நிமிஷத்தில நடந்தது.

அடுத்தது இன்னும் மோசமானது.. கிறிஸ்மஸுக்கு முதல் ஒரு வெள்ளி பின்னேரம் வீட்டு டிரைவேயில் காரைப் பார்க் பண்ணிவிட்டு உள்ளே வந்து சில நிமிடங்களில் வெளியே வேஸ்ற்பின்னை யாரோ மூவ் பண்ணுவது மாதிரி இருக்க, வெளியே போய்ப் பார்த்தால் ஒருத்தரையும் காணவில்லை. காரையெல்லாம் சுத்திப் பார்த்துவிட்டு ரிலாக்ஸாக சனிக்கிழமை வெளியே போகாமல் இருந்துவிட்டு ஞாயிறு காரை ஸ்ரார்ட் பண்ணத்தான் கற்றலிக் கொன்வேட்டரை வெட்டினது தெரியும்.🤬

இரண்டுக்கும் சேர்த்து 1200 பவுண்ட்ஸ் தண்டம். இவைகளுக்கு சில வருடங்களுக்கு முதல் வீட்டில் பின்பக்கமாக ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து நகைகள்,  வேலை லாப்டப், பல ஃபோன்கள், எனது Gucci சன்கிளாஸ்,  Oxford Street Selfridges இல் வாங்கிய தொப்பி (அது ஒன்று மட்டும்தான் அங்கு வாங்கியது!) என்று கொள்ளைபோனது. பக்கத்து வீட்டுக்காரி கிழக்கு ஐரோப்பியன் வெளியேறியதைப் பார்த்தும் இருந்தார்! இவையும் நான் Brexit க்கு ஆதரவாக வாக்களிக்கக் காரணம்.

வாகனம் வாங்கியவுடன் உடனே செயின் வெல் பண்ணிவிட்டுதான் மறுவேலையே இலகுவில் அறுக்க முடியாது அறுக்க முன் உங்கள் கார்களை பற்றிய உளவுத்தகவல் அவர்களிடம் இருக்கும் குறைந்தது ஒருமுறையாவது நோட்டமிட்ட பின்பே அரிய வருவினம் .

வீடுகளுக்கு குறைந்தபட்சம் பாதுகாப்பு அலாரம் இருப்பது முக்கியம் அல்லது வாசலில் பெல் இருப்பது கூட என்னைப்பொறுத்தவரை முக்கியமற்றது வீட்டுக்கு வருபவர்கள் நம்மாட்கள் அனைவரிடமும் போன் உள்ளது வாசலில் நின்று ரிங் பண்ணினாள் திறக்கலாம் மற்றபடி கண்டவனும் சேர்வே என்றபடி மார்க்கெட்டிங் என்றபடி களவு நோட்டமிட அனுமதிப்பதில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, nedukkalapoovan said:

கிழக்கு ஐரோப்பிய கள்ளருக்கு ஒத்துக்கொடுக்கிறது நம்ம தமிழ் மற்றும் ஹிந்திய கள்ளர்கள். பின்னர் பாகம் பிரிச்சுக் கொள்வார்கள் போல.

இல்பேட் பகுதியில்.. ஒரு வீட்டில் நகைதிருடப் போன இடத்தில் கள்ளன் தவறவிட்ட போனில் காணப்பட்ட இலக்கங்களின் அடிப்படையில் அவ்வூர் பகுதியில் சுற்றி திரியும் தமிழ் நபர்கள் மற்றும் பிரபல்ய நகைக்கடை உரிமையாளர் ஒருவரின் இலக்கமும் பிடிப்பட்டது. பொலிஸ் சோதனையும் மேற்படி நகைக்கடையில் நிகழ்ந்தது.

இப்படி எங்கட ஆக்கள் கூட்டுக்களவாணி வேலை செய்வது லண்டனில் சர்வசாதாரணம். எல்லாம் தண்ணிக்கும்.. குடுவுக்கும். 

இது மிகச்சரி. முன்பும் ஒரு தரம் எழுதினேன்.  ஒரு தமிழ் மூதாட்டி களவு எடுக்க வந்த ரொமேனியனுக்கு மொழி தெரியாத மாரி நடிக்க, ரொமேனியனின் போனில் தமிழ் பாஸ் வந்து மூதாட்டியை தமிழில் மிரட்டிய விடயம்.

2 hours ago, ரதி said:

என்ன தான் கோசான் குத்தி முறிஞ்சாலும் ரொமேனியன் கள்ளங்கள்😆 தான் ...அதுக்காக மற்ற நாட்டவர், தமிழரில் கள்ளன் இல்லை என்று இல்லை. 
 
ஓம் எனக்கு ரொமேனியன் சம்பந்த குடி பாருங்கோ🤣. அதுதான் குத்தி முறியிறன்🤣.

1 hour ago, தமிழ் சிறி said:

பாவம்... அந்த ஆள், கார் களவு போன கவலையிலை இருக்குது.
நீங்கள் அவரை... புண்ணாக்கு யாவாரி, தவிட்டு யாவாரி என்று...
வெந்த புண்ணிலை.... வேலை பாய்ச்சுகிறீர்கள்.   😂

இல்லை அண்ணை சும்மா ஒரு பெற்றோல் ஸ்டேசன், ரெண்டு மூலை கடையை வச்சு கொண்டு பிரபல வர்த்தகர் எண்டால் கடுப்பாகும்தானே?

இனி நான் எல்லாரையும் பிரபல ஆசிரியர், பிரபல வண்டி ஓட்டுனர், பிரபல அரச உத்தியோகத்தர், பிரபல வேலைக்கு போகாத சோம்பேறி எண்டுதான் கூப்பிடப்போறன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நல்ல காலம்  எமக்கு இப்படியான அனுபவங்கள் இல்லை. நண்பர்கள் மட்டத்திலும் இப்படியெல்லாம் கேள்விப்படவில்லை. அதற்காக அறவே இல்லை என்று கூறமுடியாது. 

நீங்கள் இருக்கும் நாடு ஒரே போரிங் 🤣. இப்படி மயிர்கூச்செறியும் அனுபவம் வேணும் எண்டால் யூஎஸ், யூகே, பிரான்ஸ்சில் வாழ வேண்டும்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

எனது பக்கத்து வீட்டுக்காரர் பட்டப்பகலில் காரைப் பார்க் பண்ணி விட்டுப் போட்டு வந்து அரமைணித்தியாலத்தில் திரும்பி வந்து கார் எடுக்க கார் பயங்கர சத்தம்.சீசீரிவியில் பார்த்த பொழுது ஒரு கார் வீட்டைக் கடந்து போனது உடனே றிவேசில் வந்து  2 பேர் ஒராள் நோட்டம் விட மற்றாள் குனிஞசு பார்த்து விட்டு திரும்பப் போய் கார் றிவேசில் வந்து 3 நிமிடத்தில் கழட்டிக் கொண்டு போய் விட்டார்கள். இன்னொரு சம்பவம் எனது நண்பரின் நண்பரின் வீட்டில் இரவு நேரம் சத்தம் கேட்டு  வெளியே வர ஒருத்தன் கதைக்கிற மாதிரி வந்து கண்ணுக்கு ஸ்பிறே ஒன்சை அடித்து விட்ட பக்கத்தில் நிற்க மற்றவன் கழட்டிக் கொண்டு போய்விட்டான் சீசீரிவியில் ஆட்களை சரியாக அடையாளம் காண மடியவில்லை. மற்றம் எனது 2 நண்பர்களின் பெற்றோல்ராங்கில் ஓட்டை போட்டு பெற்றோல்களவெடுத்த (பெற்றோல் தட்டுப்பாடு இல்லாத காலத்திலேயே) சம்பவமும் நடந்திருக்கு. இதெல்லாம் லண்டனில் சாதரணமப்பா!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

இனி நான் எல்லாரையும் பிரபல ஆசிரியர், பிரபல வண்டி ஓட்டுனர், பிரபல அரச உத்தியோகத்தர், பிரபல வேலைக்கு போகாத சோம்பேறி எண்டுதான் கூப்பிடப்போறன்🤣.

மீ👉பிரபல குடும்பஸ்த்தர்..😀

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, goshan_che said:

இல்லை அண்ணை சும்மா ஒரு பெற்றோல் ஸ்டேசன், ரெண்டு மூலை கடையை வச்சு கொண்டு பிரபல வர்த்தகர் எண்டால் கடுப்பாகும்தானே?

பால் நழுவி பழத்திலை விழுந்தது போல இப்பதான் சரியான பொயின்ட்டுக்கு 🟢  வந்திருக்கிறியள்...😂

4 hours ago, goshan_che said:

நீங்கள் இருக்கும் நாடு ஒரே போரிங் 🤣. இப்படி மயிர்கூச்செறியும் அனுபவம் வேணும் எண்டால் யூஎஸ், யூகே, பிரான்ஸ்சில் வாழ வேண்டும்🤣.

சிலோனுக்கு போய் ஒரு கிழமை நிண்டுட்டு வந்தாலும் அனுபவம் புதுமையாய் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.