Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விவேக் மரணம் : தடுப்பூசி காரணமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் மரணம் : தடுப்பூசி காரணமா?

spacer.png

நடிகர் விவேக் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணமில்லை என்று தடுப்பூசி பாதிப்பு குறித்து ஆராய்ந்த தேசிய குழு கூறியுள்ளது.

கொரோனா பரவல் அதிகமாக இருந்த மார்ச், ஏப்ரல் காலகட்டத்தில், பொது மக்கள் மத்தியில் தடுப்பூசி மீதான அச்சமும் அதிகமாக இருந்தது. இதனால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகைச்சுவை நடிகர் விவேக் 2021 ஏப்ரல் 15ஆம் தேதி தடுப்பூசி போட்டுக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் காரணமாக ஓய்விலிருந்த அவர் 17ஆம் தேதி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

தடுப்பூசி போட்டதால் தான் அவர் உயிரிழந்தார் என்று வதந்திகள் பரவி மக்கள் மத்தியில் தடுப்பூசி மீதான அச்சம் அதிகரித்தது. இதனால் விவேக் மரணம் குறித்து மருத்துவ ரீதியாக நிரூபிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், விவேக் மரணம் தடுப்பூசி தொடர்பானதல்ல என்று ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நோய்த்தடுப்பு பிரிவு கண்டறிந்துள்ளது. விவேக்கின் மரணம் தற்செயலானது என்றும் அவரது மரணத்துக்கும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும் சம்மந்தமில்லை. உயர் ரத்த அழுத்தத்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்றும் இந்த நோய்த்தடுப்பு பிரிவு கூறியுள்ளது.

விவேக்கின் எக்மோ மற்றும் ஈசிஜி அறிக்கைகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் உள்ள மருந்துக்குப்பின் ஏற்படும் பாதக விளைவை ஆராயும் தேசியக் குழுக்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், இந்த இரு குழுக்களும் விவேக் மாரடைப்பால் தான் உயிரிழந்தார் என ஒரே மாதிரியான முடிவைத் தெரிவித்ததாகவும் தமிழக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://minnambalam.com/politics/2021/10/22/17/vivek-death-not-related-vaccine

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்பூசிகளின் விளவுகள் பற்றிய திரி என்பதால் இதை இணைக்கிறேன். 

தடுப்பூசிகள் பற்றிய பயமூட்டும் வதந்திகளை முதலில் ஆரம்பித்து வைத்தவர் அன்ட்ரூ வேக்பீல்ட் என்ற பிரிட்டன் மருத்துவர். போலியாக ஒரு ஆய்வுக் கட்டுரையை வக்சீன்களை விரும்பாத ஒரு தாயுடன் இணைந்து உருவாக்கி, அதன் மூலம் இன்று பொதுச்சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகத் திகழும் வக்சீன் எதிர்ப்புக் கும்பலை உருவாக்கிய "பெருமை" இவருடையது. இவரைப் பற்றிய குறுகிய காணொளி - இதன் முழு வடிவம் பிரிட்டனில் வாழ்வோர் மட்டும் பார்க்கக் கூடியதாக இருக்குமென நினைக்கிறேன். 

https://www.bbc.com/reel/video/p09zhlch/the-origins-of-one-of-the-biggest-frauds-in-the-world- 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

தடுப்பூசிகள் நூறில் ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதும் உண்மை தானே 
 
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தடுப்பூசிகள் நூறில் ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதும் உண்மை தானே 
 
நூறில் ஒருவருக்கு என்பது மிக அதிகமாக தெரிகிறது.

தடுப்பூசி மட்டும் அல்ல சகல மருத்துகளுமே, ஏன் கத்தரிகாய், இறால், கச்சான் போன்றவையும் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தடுப்பூசிகள் நூறில் ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதும் உண்மை தானே 
 
14 minutes ago, goshan_che said:

நூறில் ஒருவருக்கு என்பது மிக அதிகமாக தெரிகிறது.

தடுப்பூசி மட்டும் அல்ல சகல மருத்துகளுமே, ஏன் கத்தரிகாய், இறால், கச்சான் போன்றவையும் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

அலேர்ஜி என்பது சாதாரணமானது - பல வடிவங்களில் இருக்கலாம், எல்லாமே உயிருக்கு ஆபத்தானவையல்ல. உயிராபத்தை ஏற்படுத்தக் கூடிய anaphylaxis நிலை ஒரு லட்சத்தில் ஒருவருக்கு வரலாம் - இதனால் தான் எந்தத் தடுப்பூசியும் போட்ட பின்னர் 20 நிமிடம் அமரச் செய்து பார்த்து அனுப்புவர். வந்தால் உடனே மருந்து கொடுப்பர். 20 நிமிடம் கழித்து anaphylaxis வருவதில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்

Actor Vivek Sir. by Sivakumar S on Dribbble

விவேக் மரணத்தில்.... மருத்துவ சம்பந்தப் பட்ட,  காரணிகள் பல  இருக்கலாம்.

ஆனால்... அன்றைய நாளில், விவேக் ஒரு படப் பிடிப்பில் கலந்து கொண்டிருந்தவரை,
தமிழக அன்றைய அரசு... தனது  "கொரோனா" தடுப்பூசி விளம்பரத்துக்காக...
அவரை... அழைத்துச்  சென்று.. ஊசி, போட்டது....  மிகப் பெரிய தவறு. 😡

அந்த நேரங்களில்... அல்ல, இப்பவும் கூட...
ஒரு ஊசியை... போடுவதா இல்லையா.... என்பதனை,
சம்பந்தப் பட்டவர் மட்டுமே... தீர்மானிக்க முடியும்.

அப்படி இருக்கும் போது... விவேக்கை,
அன்றைய  தமிழக அரசு... தனது,    சுயலாபத்திற்காக  கொலை செய்து விட்டது என்றே கருதுகின்றேன்.

சரி... இறந்தவன், திரும்பி வரப் போவதில்லை என்று தெரிந்தாலும்,
நாலு பெண் பிள்ளைகளின் ஒரு, தகப்பனுக்கு...
இந்த  முட்டாள்  அரசியல் வாதிகள்... வழி காட்டி, விட வேண்டும் என்பதே...
என் பிரார்த்தனை.  😢

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அந்த நேரங்களில்... அல்ல, இப்பவும் கூட...
ஒரு ஊசியை... போடுவதா இல்லையா.... என்பதனை,
சம்பந்தப் பட்டவர் மட்டுமே... தீர்மானிக்க முடியும்.

தடுப்பூசி போடுவதை தனி நபர்கள் தீர்மானிக்க வேண்டும் -உண்மை!

உரிய மருத்துவ காரணமின்றி தடுப்பூசி போடாமல் இருப்போர் சமூகத்தின் ஏனையோரோடு கலக்காமல் எங்காவது போய் வனவாசம் வாழும் படி சொல்ல சமூகத்தில் இருக்கும் ஏனையோருக்கும் மக்களைக் காக்க வேண்டிய அரசுக்கும் உரிமையிருக்கிறது! -ஏனெனில் இது ஒரு தொற்று நோய், பொதுச்சுகாதாரப் பிரச்சினை.

இதுவே தனி நபர் நோயான நீரிழிவாக இருந்தால் "கட்டாயம் இன்சுலின் எடு" என்று யாரும் சட்டம் போடப் போவதில்லை - விரும்பினால் எடுங்கள் இல்லா விட்டால் கையைக் காலைக் கழட்டி விட்டு செத்துப் போங்கள் என்று பேசாமல் இருப்பர்!😎

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

நீங்கள்.... ஜனநாயக நாட்டில்  வாழ்ந்து கொண்டு,
"வனவாசம்"  பற்றி கதைப்பது... வேடிக்கையாக உள்ளது. 🤠 

****

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

நீங்கள்.... ஜனநாயக நாட்டில்  வாழ்ந்து கொண்டு,
"வனவாசம்"  பற்றி கதைப்பது... வேடிக்கையாக உள்ளது. 🤠 

****

நான் மட்டுமல்ல, நீங்களும் உலகின் சிறந்த ஜனநாயகம், சுதந்திரம் கொண்ட நாட்டில் தானே சிறியர்? ஜனநாயகம் இயங்க எல்லாரும் வடம் பிடிக்க வேண்டுமென்பது தான் சிறி லங்காவில் வாழ்ந்து பின்னர் மேற்கில் வாழ்ந்து எங்கள் அனுபவத்தில் கண்டது?

"தடுப்பூசி எடுக்காமல் நோய் பெறுவேன், ஏனையோருக்குப் பரப்புவேன், அவர்களுள் சிலரை சாகடிப்பேன், ஏனென்றால் ஜனநாயக உரிமை எனக்கிருக்கிறது" என்பது ஜனநாயகம் அல்ல - தனிமனித அராஜகம்!

சில அரசுகளும், கம்பனிகளும் இவர்களை வேலையை விட்டுத் தூக்கி வீட்டில் முடக்குவது பொது நன்மை கருதிய ஜனநாயக ரீதியான செயல் என்பது என் கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்
On ‎23‎-‎10‎-‎2021 at 00:49, Justin said:

தடுப்பூசி போடுவதை தனி நபர்கள் தீர்மானிக்க வேண்டும் -உண்மை!

உரிய மருத்துவ காரணமின்றி தடுப்பூசி போடாமல் இருப்போர் சமூகத்தின் ஏனையோரோடு கலக்காமல் எங்காவது போய் வனவாசம் வாழும் படி சொல்ல சமூகத்தில் இருக்கும் ஏனையோருக்கும் மக்களைக் காக்க வேண்டிய அரசுக்கும் உரிமையிருக்கிறது! -ஏனெனில் இது ஒரு தொற்று நோய், பொதுச்சுகாதாரப் பிரச்சினை.

இதுவே தனி நபர் நோயான நீரிழிவாக இருந்தால் "கட்டாயம் இன்சுலின் எடு" என்று யாரும் சட்டம் போடப் போவதில்லை - விரும்பினால் எடுங்கள் இல்லா விட்டால் கையைக் காலைக் கழட்டி விட்டு செத்துப் போங்கள் என்று பேசாமல் இருப்பர்!😎

நீங்கள் சொல்வது சரி ...இரண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வருவதற்கு சான்ஸ் இருக்குதல்லவா?...என்னைப் பொறுத்த வரை அவர்களாலும் கொரோனா பரவும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

நீங்கள் சொல்வது சரி ...இரண்டு தடுப்பூசி போட்டவர்களுக்கும் கொரோனா வருவதற்கு சான்ஸ் இருக்குதல்லவா?...என்னைப் பொறுத்த வரை அவர்களாலும் கொரோனா பரவும் 

அமெரிக்க கணக்கெடுப்பின் படி, தடுப்பூசி எடுத்தோரில் 5% பேருக்கு கோவிட் வந்திருக்கிறது, எடுக்காதோரில் 95% பேருக்கு கோவிட் வந்திருக்கிறது. எனவே, யார் அதிகம் சமூகப் பரவலுக்கு காரணமாக இருப்பர் என்று ஊகிக்க றொக்கட் விஞ்ஞானம் அவசியமில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்

விவேக் குடும்பம் கூட தடுப்பூசியினால் அவர் இறந்ததாக சொல்லவில்லை.
ஸ்ரான்லின் சீமான் கோவிட் தடுப்பூசி வந்த போது அதற்கு எதிராக சந்தேகங்கள் வரும்படி பேசியவர்கள். அதன் பாதிப்புக்கள் எம்மவர்களில் வந்துள்ளது.

On 23/10/2021 at 16:25, Justin said:

"தடுப்பூசி எடுக்காமல் நோய் பெறுவேன், ஏனையோருக்குப் பரப்புவேன், அவர்களுள் சிலரை சாகடிப்பேன், ஏனென்றால் ஜனநாயக உரிமை எனக்கிருக்கிறது" என்பது ஜனநாயகம் அல்ல - தனிமனித அராஜகம்!

இப்படியான அராஜகம் தான் யேர்மனியில் நடைபெற்றது. தடுப்பூசிக்கு எதிரான ஒரு நேஸ் appointment  எடுத்து சென்ற பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசிக்கு பதிலாக உப்பு தண்ணீரை குத்தி அனுப்பினார்.

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சீமான் கோவிட் தடுப்பூசி வந்த போது அதற்கு எதிராக சந்தேகங்கள் வரும்படி பேசியவர்கள்

எங்கே ஆதாரம் ?

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

எங்கே ஆதாரம் ?

ஸ்ரான்லின் சீமான் கோவிட் தடுப்பூசிக்கு எதிராக சந்தேகங்கள் வரும்படி பேசியவை தமிழில் தான் வந்தது நீங்களும் வாசித்து இருப்பீர்கள். விவேக் தடுப்பூசி போட்டதும் எப்படி இறந்தார் என்ற சீமான் பேசிய பேச்சு யாழ்களத்தில் முதலில் வந்து பின்பு அதை அகற்றிவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஸ்ரான்லின் சீமான் கோவிட் தடுப்பூசிக்கு எதிராக சந்தேகங்கள் வரும்படி பேசியவை தமிழில் தான் வந்தது நீங்களும் வாசித்து இருப்பீர்கள். விவேக் தடுப்பூசி போட்டதும் எப்படி இறந்தார் என்ற சீமான் பேசிய பேச்சு யாழ்களத்தில் முதலில் வந்து பின்பு அதை அகற்றிவிட்டனர்.

ஏன் அகற்றினார்கள் ?

39 minutes ago, விளங்க நினைப்பவன் said:

ஸ்ரான்லின் சீமான் கோவிட் தடுப்பூசிக்கு எதிராக சந்தேகங்கள் வரும்படி பேசியவை தமிழில் தான் வந்தது நீங்களும் வாசித்து இருப்பீர்கள்.

சீமான் சொல்லாத விடயங்களை சீமான் சொன்னது போல் சமூக ஊடகங்களில் யாராலும் சொல்ல முடியும் என்பதாவது உங்களுக்கு தெரியுமா ?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, பெருமாள் said:

ஏன் அகற்றினார்கள் ?

கோவிட்  தடுப்பூசிக்கு எதிராக தவறான தகவல்களை சொல்லி பீதியை உருவாக்கும் சீமானினின் பேச்சை அகற்ற வேண்டிய பொறுப்புணர்வு அவர்களுக்கு உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.